<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 03 2026 03:34:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260403T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="03042026-CBE-09" position.sequence="09" ex-ref="03042026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">03.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="47">ஐந்தாண்டு சாதனைகள் வெறும் ‘டிரெய்லர்’தான்!    </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="55">அடுத்து மாபெரும் ‘ஹிட்’டான திட்டங்களைக் கொண்டு வருவோம்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">கரூரில் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை... </lang>
	<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="47">8–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பழனிசாமியின் தூக்கத்தைக் கெடுத்து விட்டது! வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தோம்; பழனிசாமியைப் போல் கட்சியை அடகு வைக்கவில்லை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup298074_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="ThalaivarPho_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது அனைத்­தும் சொன்­னது... இது­மட்­டு­மல்ல, சொல்­லா­த­தை­யும் செய்­த­வன்­தான், இந்த ஸ்டாலின்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­கள் – மாண­வர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நாம் வழங்­கும் நல உத­வி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய தமிழ்­நாட்­டுப் பிள்­ளை­கள் எல்­லாம், நம்­மு­டைய எதிர்­கா­லம் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லம்! நாட்­டின் எதிர்­கா­லம்! அதற்­கா­கத்­தான் பள்ளி மாண­வர்­க­ளுக்கு சூடான – சுவை­யான உணவை கொடுக்க காலை உண­வுத் திட்­டத்தை கொண்டு வந்­தேன். நம்­மு­டைய குழந்­தை­கள் இப்­போது வயி­றார சாப்­பிட்டு நன்­றாக படிக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய தமிழ்­நாட்டு இளை­ஞர்­கள், எந்­தப் போட்­டித் தேர்வு என்­றா­லும் உய­ரத்­திற்கு வர வேண்­டும்; எந்த இண்­டர்­வி­யூ­விற்­குச் சென்­றா­லும் உடனே தேர்­வாக வேண்­டும் என்று நினைத்­தேன். அதற்­கான திட்­டம்­தான், நான் முதல்­வன் திட்­டம்! இத­னால், இன்­றைக்கு ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் தேர்­வா­கின்­ற­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­மா­யி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, கல்­லூரி கன­வுக்கு காசு தடை­யாக இருக்­கக் கூடாது என்று நினைத்­தேன். அதற்­கா­கக் கொண்­டு­வந்­த­து­தான் மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் திட்­ட­மும், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­ட­மும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய ஊரில் தை பிறந்­தால் வழி பிறக்­கும் என்று சொல்­வார்­கள். அத­னால்­தான், தமி­ழர் திரு­நா­ளான பொங்­க­லுக்கு, மூன்­றா­யி­ரம் ரூபாய் கொடுத்­தோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­கெல்­லாம் முத்­தாய்ப்­பாக ஒரு திட்­டத்தை அதி­ர­டி­யாக செய்­தேன்... அதி­லும் குறிப்­பாக, அ.தி.மு.க. – பா.ஜ.க போட்ட சூழ்ச்­சி­களை முறி­ய­டிக்க, அதை செய்­தேன். அது­தான், கடந்த பிப்­ர­வரி மாதம் மக­ளிர் உரி­மைத்­தொ­கை­யா­க­வும், கோடைக்­கால சிறப்பு நிதி­யா­க­வும், உங்­கள் வங்­கிக் கணக்­கிற்கு வந்த ஐந்­தா­யி­ரம் ரூபாய்! ஐந்­தா­யி­ரம் வந்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அரசு ஊழி­யர்­க­ளின் 22 ஆண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கோரிக்­கையை நிறை­வேற்­றி­னேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத்­தாண்­டு­கால அ.தி.மு.க. ஆட்­சி­யில் அரசு ஊழி­யர்­க­ளுக்கு வஞ்­சனை செய்­தார்­கள். அவர்­கள் சம்­ப­ளம் வாங்­கு­வ­தைக்­கூட கிண்­டல் செய்து பழ­னி­சா­மியே பேசி­னார். ஆனால், நான் முத­ல­மைச்­ச­ரா­ன­வு­டனே முறை­யாக கமிட்டி போட்டு, அரசு ஊழி­யர்­கள் 22 ஆண்­டு­க­ளாக கேட்­டுக் கொண்­டி­ருந்த கோரிக்­கையை, ஒரே கையெ­ழுத்­தில் நிறை­வேற்­றி­ய­வன்­தான் இந்த ஸ்டாலின். அன்­றைக்கு அரசு ஊழி­யர்­கள் என்­னைக் கோட்­டை­யில் சந்­தித்து, தங்­க­ளின் மகிழ்ச்­சி­யைத் தெரி­வித்த காட்சி, தமிழ்­நாட்டு வர­லாற்­றில் யாரும் பார்த்­தி­டாத காட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, ஒரு­பக்­கம் சாத­னை­கள், இன்­னொரு பக்­கம் புதிய புதிய மக்­கள்­ந­லத் திட்­டங்­கள், இது­தான் திரா­விட மாடல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில், சாதிக் கல­வ­ரம் இல்லை! மதக் கல­வ­ரம் இல்லை! கும்­பல் வன்­முறை இல்லை! தொடர் வன்­மு­றை­கள் இல்லை! தமிழ்­நாடு அமை­தி­யாக இருக்­கி­றது! மக்­கள் நிம்­ம­தி­யாக இருக்­கி­றார்­கள்! இதைப் பார்த்து அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும்­தான் டென்­ஷ­னாக இருக்­கி­றார்­கள்! ஏன் என்­றால், இந்த அமை­தியை கெடுக்க அவர்­கள் பரப்­பும் பொய்ச் செய்­தி­கள் அனைத்­தும் புஸ்­வா­ண­மாக ஆகி­விட்­டது! அவர்­க­ளின் சதித் திட்­டங்­கள் அனைத்­தும் சந்தி சிரித்­து­விட்­டது! அவர்­க­ளின் அவ­தூறு பிரச்­சா­ரங்­கள் அனைத்­தும் தவி­டு­பொ­டி­யா­கி­விட்­டது! அனைத்­திற்­கும் கார­ணம் இந்த தனிப்­பட்ட ஸ்டாலின் அல்ல; இந்த ஸ்டாலி­னுக்­குப் பக்­க­ப­ல­மாக இருக்­கும் நீங்­கள்­தான் அதற்­குக் கார­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­கள் என்­னு­டன் இருக்­கும்­வரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை சீர­ழிக்க விட­மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­க­ளான நீங்­கள் என்­னு­டன் இருக்­கும் வரைக்­கும், டபுள் எஞ்­சின் – டப்பா எஞ்­சின் என்று யாரும் தமிழ்­நாட்­டைச் சீர­ழிக்க உள்ளே வர முடி­யாது! அதைத் தடுத்து நிறுத்தி, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிப் பய­ணத்தை சூப்­பர் ஃபாஸ்­டா­கத் தொட­ரத்­தான், திரா­விட மாடல் 2.0–வுக்­கான சூப்­பர் ஸ்டார் களத்­திற்கு வந்­தி­ருக்­கி­றார். அது­தான், என்.டி.ஏ.வின் தூக்­கத்தை கெடுத்து பழ­னி­சா­மிக்கு பதட்­டத்தை கொடுத்­தி­ருக்­கும் தி.மு.க. தேர்­தல் அறிக்கை! அதில் நான் சொல்­லி­யி­ருக்­கும் அறி­விப்­பு­களை எல்­லாம் நீங்­கள் செய்­தி­க­ளில் பாத்­தி­ருப்­பீர்­கள். ஹைலைட்­டாக, பெரும் வர­வேற்பை பெற்­றி­ருக்­கும் சில முத்­தான வாக்­கு­று­தி­களை மட்­டும் நான் சொல்­லப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாதம்­தோ­றும் 1,000 ரூபாய் மக­ளிர் உரி­மைத்­தொகை என்­பதை டபுள் மடங்­காக இனி 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப் போகி­றோம்! என்ன மகிழ்ச்­சி­தானே? மகிழ்ச்சி (மக்­கள்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புது­மைப்­பெண், தமிழ்ப் புதல்­வன் திட்­டத்­தில் கல்­லூ­ரிக்கு செல்­லும் மாண­வர்­க­ளுக்கு இப்­போது மாதம்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்கி வரு­கி­றோம். இனி அது ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, ஏற்­கெ­னவே 5–ஆம் வகுப்பு வரை இருந்து காலை உண­வுத் திட்­டத்தை 8–ஆம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப் போகி­றோம்! மேலும், 15 இலட்­சம் மாண­வர்­கள் பயன்­பெ­றப் போகி­றார்­கள். இன்­னும் அதி­க­மான தாய்­மார்­கள் காலை­யில் சீக்­கி­ரம் எழுந்து சமை­யல் செய்­யும் சுமை குறை­யப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இல்­லத்­த­ர­சி­கள் மகி­ழும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரூ.8 ஆயி­ரம் மதிப்­பில் கூப்­பன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு மகிழ்ச்சி தரும் இன்­னொரு சூப்­பர் டூப்­பர் வாக்­கு­று­தி­யை­யும் கொடுத்­தி­ருக்­கி­றோம். இல்­லத்­த­ர­சி­கள் தங்­க­ளின் வீட்­டிற்­குத் தேவை­யான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­­­வேவ் அவன், மின் அடுப்பு போன்ற வீட்டு உப­யோ­கப் பொருட்­களை புதி­தாக வாங்­க­வும் அல்­லது ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்தி வரும் இத்­த­கைய பொருட்­க­ளைக் கொடுத்­து­விட்டு அதற்கு பதி­லாக வேறு வாங்­கிக் கொள்­ள­வும், ‘இல்­லத்­த­ரசி’ என்ற புதிய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும். அது­வும் நீங்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளில் உள்ள உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­க­ளி­லேயே உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெனி, உங்­க­ளுக்கு பிடித்த மாட­லாக பார்த்து, இந்­தப் பொருட்­களை நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­காக ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் தலா 8 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பி­லான கூப்­பன் கொடுத்­து­வி­டு­வோம். இன்­றைக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் இந்­தத் திட்­டத்­தைப் பற்­றி­தான் ஒரே பேச்­சாக இருக்­கி­றது. நம்­மு­டைய பெண்­கள் ஒரு சேலை வாங்­கி­னால் கூட, அவர்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், அவர்­க­ளுக்­குப் பிடித்த டிசை­னில், அவர்­க­ளுக்­குப் பிடித்த கல­ரில் வாங்க வேண்­டும் என்று நினைப்­பார்­கள். அதை மன­தில் வைத்­து­தான் இந்­தத் திட்­டத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம். இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் என்ன வாங்க வேண்­டும், எப்­படி வாங்க வேண்­டும், எல்­லாமே ‘உங்­கள் சாய்ஸ்’!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, உல­கிற்கே உணவு அளிக்­கும் உழ­வர்­களை மகிழ்­விக்க ஒரு மாபெ­ரும் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். இல­வச மின்­சா­ரம் பெறும் 20 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு, எந்த வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன மின்­சா­ரப் பம்பு செட்­டு­கள் வழங்­கப்­ப­டும். அனை­வ­ரும் பழைய பம்பு செட்டு வைத்­தி­ருப்­பீர்­கள். சில பம்­பு­செட்­டு­கள் அடிக்­கடி ரிப்­பேர் ஆகும். அதிக விலை கொடுத்து வாங்க முடி­யாத நிலை­யில் இருப்­பீர்­கள். அதை நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் அரசே இனி வாங்­கித் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 
4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி 
வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 
5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை இனி மாதம் 
2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி 
வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் இருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மீன­வர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சிறப்பு நிவா­ர­ண­ நிதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன்­பி­டித் தடைக்­கா­லச் சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து 12 ஆயி­ரம் ரூபா­யாக, மீன்­பி­டிக் குறை­வுக்­கா­லச் சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து 9 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக்­கு­ழு­வைச் சார்ந்த சகோ­த­ரி­கள் நிறைய பேர் இங்கு வந்­தி­ருப்­பீர்­கள். உங்­களை எல்­லாம் பிசி­னஸ்–­­­வு­ம­னாக முன்­னேற்­றும் வகை­யில் பிணை எது­வும் இல்­லா­ம­லேயே, 5 இலட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் வங்­கிக் கட­னு­தவி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரி­டர் கால இழப்­பீ­டு­க­ளாக இற­வைப் பாசன பயிர்­கள் மற்­றும் நெல் பயிர்­க­ளுக்கு ஹெக்­டேர் ஒன்­றுக்கு 25 ஆயி­ரம் ரூபா­யும் நீண்­ட­கா­லப் பயிர்­க­ளுக்கு 27 ஆயி­ரம் ரூபா­யும், மானா­வா­ரிப் பயிர்­க­ளுக்கு 12 ஆயி­ரம் ரூபா­யும் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி படிக்­கும் 35 இலட்­சம் மாண­வர்­க­ளுக்­கும் அடுத்த 5 ஆண்­டு­க­ளுக்­குள் லேப்­டாப் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனைத்­துச் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் முதல்­வர் படைப்­ப­கங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு மண்­ட­லத்­திற்­கும் தனித்­த­னி­யாக சிறப்பு வளர்ச்சி திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சொன்­ன­தைச் செய்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">செய்­வ­தைத்­தான் சொல்­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி ஏரா­ள­மான வாக்­கு­று­தி­களை இந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றோம். நாங்­கள் சொன்­னால் செய்­வோம். செய்­வ­தைத்­தான் சொல்­வோம்.நான் கலை­ஞ­ரின் மகன். சொன்ன வாக்­கு­று­தி­களை மறக்­க­வும் மாட்­டேன், மறுக்­க­வும் மாட்­டேன். கடந்த 5 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் நிதி நிலை­யைச் சீராக்கி, ஒவ்­வொன்­றாக நாங்­கள் நிறை­வேற்றி வரும் திட்­டங்­களே அதற்கு சாட்சி! அந்­தச் சாத­னை­கள்­தான் திரா­விட மாடல் ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், மக்­க­ளுக்கு வேத­னை­க­ளும் சோத­னை­க­ளும் தந்­த­து­தான், அ.தி.மு.க. ஆட்சி! அ.தி.மு.க.விற்­குப் போட்டி போட்டு கொண்டு தமிழ்­நாட்டை வஞ்­சிப்­ப­து­தான் இன்­றைக்கு இருக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. ஆட்சி! எம்.பி. தேர்­த­லில் ஒரு சீட் கூட வெற்­றி­பெற வைக்­க­வில்­லையே என்ற விரக்­தி­யில், இன்­றைக்கு வரைக்­கும் தமிழ்­நாட்­டைப் பழி­வாங்கி கொண்­டி­ருப்­ப­து­தான் பா.ஜ.க. ஆட்சி! இப்­ப­டிப்­பட்ட தமிழ்­நாட்­டிற்கு விரோ­த­மான கூட்­ட­ணிக்கு, தக்­கப்­பா­டம் புகட்­டு­வ­தற்­கான நாள்­தான், ஏப்­ரல் 23.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த கரூர் மாவட்­டத்­திற்­குட்­பட்ட வாக்­கா­ளர்­கள் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்டு வாக்­கா­ளர்­க­ளும், அடிமை அ.தி.மு.க.விற்­கும் ஆணவ பா.ஜ.க.விற்­கும் பதி­லடி கொடுக்­கும் நாள்­தான், ஏப்­ரல் 23. அன்­றைக்கு, பழ­னி­சா­மி­யின் ‘அமித்ஷா அ.தி.மு.க’–வை மட்­டு­மல்ல; ஆர்.எஸ்.எஸ் இயக்­கும் பா.ஜ.க.வையும் சேர்த்து விரட்­டி­ய­டிக்க முடிவு செய்­து­விட்­டார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.விடம் கட்­சியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அடகு வைத்த பழ­னி­சாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ரிசல்ட்டை இப்­போதே தெரிந்­து­கொண்ட கார­ணத்­தி­னால்­தான் அதி­க­மா­கப் புலம்ப ஆரம்­பித்­து­விட்­டார் பழ­னி­சாமி! அதி­லும் தன்­னைத் தானே பெரிய புல­னாய்­வுப் புலி என்று நினைத்­துக் கொண்டு, இப்­போது காமெடி செய்து கொண்­டி­ருக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரும் – வாஜ்­பா­யும் இருக்­கும் புகைப்­ப­டத்­தைக் காண்­பித்து, நீங்­கள் கூட்­டணி வைக்­க­வில்­லையா என்று கேட்­கி­றார். நாங்­கள் கூட்­டணி வைத்­தோமே தவிர; பழ­னி­சாமி மாதிரி அடகு வைக்­க­வில்லை! அதைப் புரிந்து கொள்­ளுங்­கள். நாங்­கள் கூட்­டணி வைத்­த­போது, தி.மு.க., தலை­வர் கலை­ஞ­ரி­டம்­தான் இருந்­தது. ஆனால், இப்­போது அ.தி.மு.க. அமித்­ஷா­வி­டம்­தானே இருக்­கி­றது? நாங்­கள் குறைந்­த­பட்ச செயல்­திட்­டம் வகுத்து, வாஜ்­பாய் தலை­மை­யி­லான பா.ஜ.க. அர­சின் கடி­வா­ளத்­தைக் கலை­ஞர் கையில் வைத்­தி­ருந்­தோம். ஆனால், இப்­போது, அ.தி.மு.க. மட்­டு­மல்ல, என்.டி.ஏ.வில் இணைந்­தி­ருக்­கும் அத்­தனை ஊழல் கட்­சி­க­ளின் குடு­மிப்­பி­டி­யும் அமித்­ஷா­வி­டம்­தான் இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் கூட்­டணி வைத்­த­போது தமிழ்­நாட்­டிற்­கான வளர்ச்­சித் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தோம். ஆனால், பழ­னி­சாமி கூட்­டணி வைத்து, நீட்­டிய இடத்­தில் எல்­லாம் கையெ­ழுத்து போட்டு, தமிழ்­நாட்டு உரி­மை­களை அடகு வைத்­த­து­தான் மிச்­சம்! இந்த லட்­ச­ணத்­தில், ஊருக்கே தெரிந்த செய்­தியை, அதைப் புகைப்­ப­ட­மா­கக் கொண்­டு­வந்து, இம்சை அர­சன் 23–ஆம் புலி­கேசி படத்­தில் சொல்­வது போன்று, மணிக்­கொரு முறை தான் ஒரு மங்­குனி என்­பதை நிரூ­பித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க.வுக்கு கிடைத்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அழிவு சக்தி பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, பெய­ர­ள­விற்­கா­வது திரா­விட கட்­சி­யாக இருந்த அ.தி.மு.க.வை மொத்த அழி­வுப்­பா­தை­யில் அழைத்­துச் செல்­லும் பழ­னி­சாமி, நம்­மைப் பார்த்து, இது­தான் நமக்கு கடைசி தேர்­தல் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். வழக்­க­மாக அமா­வா­சையை பார்த்து ஆரு­டம் சொல்­லும் பழ­னி­சாமி, இந்த முறை­யும் தவ­றான ஆரு­டத்­தையே சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சகோ­த­ரர் முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓ.பி.எஸ் தொடங்கி, அம்­மை­யார் சசி­கலா வரைக்­கும் துரோ­கங்­களை செய்து, முது­கில் குத்தி கைப்­பற்­றிய அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு வாட­கைக்கு விட்­டு­விட்டு எகத்­தா­ள­மாக பேசிக் கொண்­டி­ருக்­கி­றார். தன்­னிலை உண­ரா­மல் ஆண­வத்­தில் ஆடி­னால் என்ன நிலைமை என்று பழ­னி­சாமி இன்­னும் உண­ரவே இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க.வை நான் உடைக்க நினைத்­தேன் என்று அபாண்­ட­மா­கப் பேசி­யி­ருக்­கி­றார், அ.தி.மு.க.விற்கு வாய்த்த அழி­வு­சக்­தி­யான பழ­னி­சாமி! தலை­மைப் பண்­பும், அடக்­க­மும் இல்­லா­மல் சொந்­தக் கட்­சி­யி­ன­ரையே துரத்­தி­விட்­டு­விட்டு, சந்­தர்ப்­ப­வா­தத்­திற்­கா­கக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­குக்­கூட துரோ­கங்­கள் செய்த பழ­னி­சாமி, இப்­படி பேச­வில்லை என்­றால்­தான் ஆச்­ச­ரி­யப்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க.வில் இருந்து வில­கி­ய­வர்­கள், இன்­றைக்­குத் தாய்க்­க­ழ­க­மான தி.மு.க.விற்கு வரு­வ­தைப் பார்த்து வயி­றெ­ரிந்து இப்­படி பேசி­யி­ருக்­கி­றார். தி.மு.க.வில் இருந்து பிரிந்­த­து­தான் அ.தி.மு.க.! திரா­விட இயக்க உணர்­வில் இருந்து விலகி, அந்த இயக்­கத்­தைத் தவ­றான பாதை­யில் பழ­னி­சாமி கொண்­டு­போ­கும்­போது, பல­ரும் வில­கு­கி­றார்­கள்; நம்­மு­டைய தாய்க்­க­ழ­கத்­திற்­குத் திரும்­பு­கி­றார்­கள்! இதில் தவ­றில்­லையே! வழி­த­வ­றிச் சென்று, நாட்­டிற்­கும் – நாட்டு மக்­க­ளுக்­கும் துரோ­கம் செய்­வ­து­தான், ஏற்­றுக் கொள்ள முடி­யா­தது! இதெல்­லாம், பா.ஜ.க.வின் பாதமே சர­ணா­கதி என்று இருக்­கும் பழ­னி­சா­மிக்கு புரி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">குடி­யு­ரி­மைச் சட்­டதை ஆத­ரித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மி­ய­ருக்கு துரோ­கம் செய்­தது யார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தடம் மாறிக் கூட்­டணி வைத்­தி­ருக்­கும் பழ­னி­சாமி, செய்த துரோ­கங்­களை சிறிது எண்­ணிப் பாருங்­கள். குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தது யார்? இந்­தியா முழு­வ­தும் அதற்கு எதி­ராக இஸ்­லா­மிய பெரு­மக்­கள் போரா­டி­ய­போது “எந்த முஸ்­லிம் பாதிக்­கப்­பட்­டார்” என்று எகத்­தா­ள­மா­கக் கேட்­டது யார்? வெயில், மழை, குளிர் இதெல்­லாம் பார்க்­கா­மல் தலை­ந­கர் தில்­லி­யில் விவ­சா­யி­கள்மாதக்­க­ணக்­கில் போரா­டி­ய­போது மூன்று வேளாண் சட்­டங்­க­ளைப் பற்றி எந்த அடிப்­ப­டைப் புரி­த­லும் இல்­லா­மல் அவர்­களை எல்­லாம் ‘புரோக்­கர்­கள்’ என்று கொச்­சைப்­ப­டுத்தி வாய்­கூ­சா­மல் பேசி­யது யார்? துரோ­கம் செய்ய வேண்­டும். அதை­யும் டிசைன் டிசை­னாக செய்ய வேண்­டும் என்று நினைக்­கும் பழ­னி­சாமி அவர்­கள், ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டிற்­கும் மிகப்­பெ­ரிய துரோ­கம் செய்ய அமைத்­தி­ருப்­ப­து­தான், டப்பா எஞ்­சின் NDA கூட்­டணி! துரோ­கத்­திற்­குத் துரோ­கமே துணை என்­பது போன்று அமைத்­தி­ருப்­ப­து­தான், NDA கூட்­டணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">NDA கூட்­ட­ணிக்கு ஒரே ஒரு நோக்­கம்­தான். அது என்ன என்­றால், தமிழ்­நாட்டு வளர்ச்­சியைதடுக்க வேண்­டும். திரா­விட மாடல் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் இந்த வளர்ச்­சியை தடுக்க வேண்­டும், அழிக்க வேண்­டும். இது­தான், NDA கூட்­ட­ணி­யின் நோக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டிற்கு செய்­தது என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">NDA–வின் தலை­மை­யாக இருக்­கும் பா.ஜ.க.விற்கு, தமிழ்­நாட்­டில் நம்மை எதிர்ப்­ப­தற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்­கி­யி­ருக்­கி­றது! பொது­வாக, பா.ஜ.க–வைப் பொறுத்­த­வ­ரைக்­கும் மக்­க­ளுக்கு நல்­லது செய்­யாது; ஆனால், தேர்­தல் வந்­து­விட்­டது என்­றால், கண்­து­டைப்­பிற்­காக பட்­ஜெட்­டில் சில மெகா அறி­விப்­பு­களை கொடுப்­பார்­கள். ஆனால், தமிழ்­நாட்­டிற்கு அதைக்­கூட செய்ய மன­மில்­லாத, வஞ்­சக எண்­ணத்­தின் முழு உரு­வம்­தான் NDA.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. ஒன்­றி­யத்­தில் ஆட்­சிக்கு வந்­த­தற்­குப் பிறகு, தமிழ்­நாட்­டிற்கு எந்த நன்­மை­யும் செய்­த­தில்லை. எந்­தச் சிறப்­புத் திட்­டத்­தை­யும் செய்­த­தில்லை; நாம் வைத்த எந்­தக் கோரிக்­கை­யை­யும் நிறை­வேற்­ற­வில்லை! மது­ரை­யில் ஒரு எய்ம்ஸ் அறி­வித்­தார்­கள்; அதன் நிலை­மையை நான் சொல்­லித்­தான் நீங்­கள் தெரிந்து கொள்ள வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை! சென்னை மெட்ரோ திட்­டத்­திற்கு நிதி தர­வில்லை! ஓசூர் விமான நிலை­யத்­திற்கு அனு­மதி கேட்­டி­ருக்­கி­றோம்; தர­வில்லை! குடி­நீர் திட்­டத்­திற்­கான நிதியை தர­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இந்­தியை ஏற்­கா­த­தால் நமக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தர­வேண்­டிய கல்வி நிதியை மறுக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சரி இதெல்­லாம்­கூட பர­வா­யில்லை, எப்­ப­டி­யா­வது போராடி, திற­மை­யான நிர்­வா­கத்­தால் நாம் சிறப்­பாக செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம். இருப்­ப­தி­லேயே கொடுமை என்­ன­வென்­றால்? அவர்­கள் செய்­யும் இந்­தித் திணிப்பை ஏற்­றுக் கொள்­ளுங்­கள் என்று கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றார்­கள். அதை நாம் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. அதற்­காக என்ன செய்­தார்­கள்... நம்­மு­டைய வீட்­டுக் குழந்­தை­கள் படிப்­ப­தற்­கான கல்வி நிதி­யைக்­கூட கொடுக்­கா­மல் மறுக்­கி­றார்­கள்! இது­வ­ரை­யில் கொடுக்­க­வில்லை. இப்­படி வஞ்­சக எண்­ணம் கொண்ட கூட்­டத்­தி­டம் தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத்தை ஒப்­ப­டைக்க முடி­யுமா? சொல்­லுங்­கள், ஒப்­ப­டைக்க முடி­யுமா? எனவே, NDA–வைத் தமிழ்­நாடு புறக்­க­ணிக்க வேண்­டும்! அது­தான், தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத்­திற்கு நல்­லது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">NDA கூட்­டணி என்­பது, எப்­ப­டிப்­பட்ட சந்­தர்ப்­ப­வாத கூட்­டணி என்று நீங்­களே பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். கரப்­ஷன் – கமி­ஷன் – கலெக்‌ஷன் என்று ஆட்சி நடத்­திய பழ­னி­சாமி அவர்­களை மிரட்­டிக் கூட்­டணி அமைத்து, தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளைப் பறித்து, வரி­சை­யாக பல துரோ­கங்­களை செய்து, பிரிந்த மாதிரி நாட­கங்­களை நடத்தி, கடை­சி­யாக இப்­போது, டெல்­லி­யில் தீர்­மா­னித்து, தோற்­ப­தற்­காக தமிழ்­நாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றது NDA! அத­னால்­தான் சொன்­னேன்… இந்த தேர்­தல் என்­பது, தமிழ்­நாடு அணி வெர்­சஸ் டெல்லி அணி! தமிழ்­நாடு வெர்­சஸ் என்.டி.ஏ.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்­ட­ணியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வேரோடு வீழ்த்த வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைக் காக்க வேண்­டும் என்­றால், தி.மு.க.தான் மீண்­டும் ஆட்­சிக்கு வர வேண்­டும்! தமிழ்­நாடு வளர்ச்­சிப் பாதை­யில் தொடர்ந்து நடை­போட வேண்­டும் என்­றால், தி.மு.க. ஆட்­சி­யில் தொடர வேண்­டும்! தமிழ்­நாடு கல­வர பூமி­யாக மாறா­மல் இருக்க வேண்­டும் என்­றால், பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்­ட­ணியை வேரோடு வீழ்த்த வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் எல்­லோ­ரும் ஒரு விஷ­யத்தை நன்­றா­கப் புரிந்­துக் கொள்ள வேண்­டும், நாம் போரா­டு­வது தி.மு.க.வின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல; நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக! எனவே, அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, நம்­மு­டைய தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரும், தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்­ணா­வின் தம்­பி­யாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரின் மக­னாக வாக்­குக் கேட்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்­ணா­வின் தம்­பி­யாக – கலை­ஞ­ரின் மக­னா­கக் கேட்­கி­றேன், உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை, திரா­விட முன்­னேற்­றக் கழ­கக் கூட்­ட­ணிக்­குத் தாருங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உறு­தி­யா­கச் சொல்­கி­றேன்... அமை­ய­வுள்ள திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இப்­போது நாம் செய்து கொண்­டி­ருக்­கும் சாத­னை­கள் எல்­லாம் வெறும் டிரெய்­லர்­தான் என்று சொல்­லும் அள­விற்கு, அடுத்த மாபெ­ரும் ஹிட்­டான திட்­டங்­களை எல்­லாம் கொண்டு வரு­வோம். இனி­மேல் நாம்­தான். இனி­மேல் எப்­போ­துமே நாம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு, அர­வக்­கு­றிச்சி தொகு­தி­யில் மொஞ்­ச­னூர் இளங்கோ அவர்­க­ளுக்­கும், கரூர் தொகு­தி­யில் ஆசி.எம். தியா­க­ரா­ஜன்அவர்­க­ளுக்­கும், கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் தொகு­தி­யில், சி.கே. ராஜா அவர்­க­ளுக்­கும், குளித்­தலை தொகு­தி­யில் சூரி­ய­னூர் சந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை வெற்­றிச் சின்­ன­மான உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வழங்­குங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உத­ய­சூ­ரி­யன் – தமி­ழர்­க­ளின்இதய சூரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உத­ய­சூ­ரி­யன் – அது உங்­கள் சூரி­யன்! உத­ய­சூ­ரி­யன் – தமி­ழர்­க­ளின் இதய சூரி­யன்! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>