<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1335" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 03 2026 04:01:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260403T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="03042026-VLR-03" position.sequence="03" ex-ref="03042026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="52">பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி.யை பாதுகாத்தது யார்?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup300435_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup300255_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="CM10bw_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த 5 ஆண்­டு­க­ளாக நான் நடத்­திய ஆட்­சியை நீங்­கள் எல்­லாம் நன்­றாக கவ­னித்­தி­ருப்­பீர்­கள். திரா­விட மாடல் என்று சொன்­னோம். அது, டெவ­லப்­மெண்ட் மாடல்! அது­வும், வளர்ச்சி என்­பது, அனைத்­துத் துறை வளர்ச்­சி­யாக – அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்கு மான வளர்ச்­சி­யாக – அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கான வளர்ச்­சி­யாக இருக்க வேண்­டும் என்று திட்­ட­மிட்டு, ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் நாங்­கள் செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். அந்த வகை­யில், நம்­மு­டைய ஈரோடு மாவட்­டத்­திற்­குச் செய்­யப்­பட்­டி­ருக்­கும் திட்­டங்­க­ளில் சில­வற்றை மட்­டும் உங்­க­ளுக்கு நான் தலைப்­புச் செய்­தி­க­ளாக நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. ஆட்­சி­யில், விவ­சா­யி­க­ளின் பல்­வேறு போராட்­டங்­க­ளால் கொண்டு வந்த மேற்கு மண்­டல மக்­க­ளின் கன­வுத் திட்­ட­மான, அத்­திக்­க­டவு – அவி­னாசி திட்­டத்தை முழுமை யாக நிறை­வேற்­றிக் காட்­டிய ஆட்­சி­தான், நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்­சிக்கு வந்த அடுத்த ஆண்டே ஈரோட்­டில் மஞ்­சள் ஆராய்ச்சி மையத்­தைத் திறந்து வைத்­தேன். ஈரோடு மக்­க­ளின் இரு­பது ஆண்­டு­கா­லக் கோரிக்­கையை நிறை­வேற்ற சிக்­கய்ய நாயக்­கர் தனி­யார் கல்­லூ­ரியை அர­சுக் கல்­லூ­ரி­யாக இன்­றைக்கு மாற்­றி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோடு மாந­க­ராட்சி பேருந்து நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, பவா­னி­சா­கர் மற்­றும் அந்­தி­யூர் பகு­தி­யில் அணை கட்­டு­வ­தற்­காக நிலம் கொடுத்­த­வர்­க­ளின் எஞ்­சி­யுள்ள நிலங்­கள் நிபந்­த­னைப் பட்­டாக்­களை அயன் பட்­டாக்­க­ளாக மாற்றி, நீண்­ட­நாள் கோரிக்­கையை நிறை­வேற்­றித் தந்­த­து­தான், திரா­விட மாடல் ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாட்­டிற்­கா­க­வும், நாட்டு மக்­க­ளுக்­கா­க­வும் உழைத்த தலை­வர்­களை போற்றி, நினை­வுச் சின்­னங்­கள் அமைத்து மரி­யாதை செலுத்­து­வ­தில் தி.மு.க. அர­சுக்கு இணை­யாக, எந்த அர­சை­யும் சொல்ல முடி­யாது. அதற்கு எடுத்­துக்­காட்­டா­க­தான், ஜெய­ரா­ம­பு­ரத்­தில் விடு­த­லைப் போராட்ட வீரர் பொல்­லான் அவர்­க­ளுக்கு முழு உரு­வச் சிலை­யு­டன் அரங்­கம் கட்­டி­யி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, அரச்­ச­லூர் ஓடா­நி­லை­யில் விடு­த­லைப் போராட்ட மாவீ­ரர் தீரன் சின்­ன­மலை அவர்­க­ளுக்கு, குதிரை மேல் அமர்ந்­துள்ள வெண்­க­லச் சிலை அமைத்தி ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தி­யூ­ரில் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லுரி தொடங்­கி­யி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முடுக்­கந்­து­றை­யில் உத்­தம தியாகி ஐயா எம்.ஏ. ஈஸ்­வ­ரன் அவர்­க­ளுக்கு முழு உரு­வச் சிலை­யு­டன் கூடிய அரங்­கத்­தைத் திறந்து வைத்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சித்­தோடு ஆவின் வளா­கத்­தில் பால்­வ­ளத்­தந்­தை­யாக விளங்­கிய எஸ்.கே. பர­ம­சி­வம் அவர்­க­ளுக்கு முழு உரு­வச் சிலை திறந்து வைத்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அட்­ட­வ­ணைப்­பி­டா­ரி­யூ­ரில் விடு­த­லைப் போராட்ட வீரர் கொடி­காத்த கும­ரன் அவர்­க­ளுக்கு முழு உரு­வச் சிலை­யு­டன் அரங்­கம் அமைத்­துக்­கொண்டு இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தி­யூ­ரில் அரசு மற்­றும் கலை கல்­லூரி தொடங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாள­வா­டி­யில் அரசு மற்­றும் கலை கல்­லூரி தொடங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோடு, சத்­தி­ய­மங்­க­லம், மற்­றும் கோபி­செட்­டி­பா­ளை­யத்­தில் அறி­வு­சார் மையங்­களை அமைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரூ­ராட்­சி­கள் சார்­பில் 70 பூங்­காக்­கள் அமைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோட்­டில் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கக் கூடு­தல் கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மத்­திய பேருந்து நிலை­யத்­தில் வணிக வளா­கம், கனி மார்க்­கெட், காலை­மாடு சிலை வணிக வளா­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கால்­நடை மருத்­து­வ­மனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வ.உ.சி பூங்கா மைதா­னத்­தில் செயற்கை இழை ஓடு­த­ளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சி­னர் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யில் உள்­வி­ளை­யாட்டு அரங்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சித்­தோடு ஒழுங்­கு­முறை விற்­ப­னைக் கூடம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொடக்­கு­றிச்சி கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெருந்­துறை கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னி­மலை கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னி­மலை சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யில் மலைப் பாதை­யைத் தார் சாலை­யாக ஆக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடி­வா­ரத்­தில் பேருந்து காத்­தி­ருப்­புக் கூடம் – இப்­படி பல­வற்றை அமைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்ல, பவானி ஆற்­றின் குறுக்கே 8 தடுப்­ப­ணை­களை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தி­யூர் தேனி­ம­டுவு பள்­ளத்­தின் குறுக்கே தடுப்­பணை கட்­டப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கங்­கா­பு­ரத்­தில் நியோ டைடல் பார்க் வர இருக்­கி­றது. இன்­னும் லிஸ்ட் என்­னி­டத்­தில் பெரி­தாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உரி­மை­யோடு பெரு­மை­யோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வாக்கு கேட்க வந்­துள்­ளேன்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, வேளாண்மை, உட்­கட்­ட­மைப்பு, தக­வல் தொழில்­நுட்­பம், கல்வி என்று எல்லா துறை­க­ளி­லும் உங்­க­ளுக்­கான வளர்ச்­சித் திட்­டங்­களை நிறை­வேற்­றிக் கொடுத்­தி­ருக்­கும் உரி­மை­யோ­டும் பெரு­மை­யோ­டும்­தான் உங்­க­ளி­டத்­தில் கம்­பீ­ர­மாக வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றேன். நம்மை எதிர்த்து வாக்கு கேட்­ப­வர்­கள், நாம் மக்­க­ளுக்கு என்ன செய்­தோம் என்று கேட்­கி­றார்­கள்? அதைப் பார்க்­கும்­போது, கேட்­கும்­போது நமக்­குச் சிரிப்­பா­கத்­தான் இருக்­கி­றது. கேள்வி கேட்­ப­வர்­க­ளுக்கு, நான் தெம்­போடு சொல்­கி­றேன்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முழு­வ­தும் எங்­க­ளு­டைய திட்­டங்­க­ளால் பய­ன­டை­யும் பய­னா­ளி­கள் வீட்­டிற்கு ஒரு­வ­ரா­வது நிச்­ச­யம் இருக்­கி­றார்­கள். அவர்­கள் சொல்­வார்­கள் உங்­க­ளுக்கு, இந்த திரா­விட மாடல் அரசு என்ன செய்­தது என்று. அந்­த­ள­விற்கு ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் உன்­னிப்­பாக கவ­னித்து எல்­லோ­ருக்­கும் திட்­டங்­களை நிறை­வேற்­றிக் கொண்­டி­ருக்­கி­றோம்! சுருக்­க­மா­கச் சில­வற்றை மட்­டும் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் உரி­மைத் தொகை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணம் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்­லூரி மாண­வி­ய­ருக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, மாண­வர்­க­ளுக்­குத் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் பாது­காப்­பா­கத் தங்­கு­வ­தற்­குத் தோழி விடு­தி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு வர­லாற்­றி­லேயே இல்­லாத அள­விற்கு சுழல்­நிதி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாய்­சேய் நலப் பரி­சுப் பெட்­ட­கத் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்­கான தடுப்­பூ­சித் 
திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை ­யி­னப் பெண்­க­ளுக்­கான நுண் கடன் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னப் பெண்­க­ளுக்­கான தொழில் முனை­வோர் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மலை­வாழ் மக்­க­ளுக்­கான மருத்­துவ சேவைத் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கைக்­கு­ழந்­தை­கள் மற்­றும் இளங்­கு­ழந்­தை­க­ளுக்­கான ஊட்­டச்­சத்­துத் திட்­டம் என்று இந்­தத் திட்­டங்­க­ளைப் பற்றி நான் நாள் முழு­வ­தும் இங்கே சொல்­லிக் கொண்­டி­ருக்க முடி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நம் திட்­டங்­கள் – பல்­வேறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மாநி­லங்­க­ளுக்கு எடுத்­துக்­காட்டு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால்­தான், நான் செல்­லும் இடங்­க­ளில் எல்­லாம் தாய்­மார்­கள், சகோ­த­ரி­கள், மாண­வி­கள், இளை­ஞர்­கள் என்று எல்­லோ­ரும் கூடி, அள­வில்லா அன்­பு­டன் வர­வேற்­கி­றார்­கள்! குடும்­பத்­தில் ஒரு­வ­ராக நினைத்­துப் பாசத்­தைப் பொழி­கி­றார்­கள். மக­ளிர் சிறந்து விளங்­கி­னால் அவர்­க­ளின் குடும்­பம் மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்­தச் சமூ­க­மும் சிறந்து விளங்­கும் என்று, மக­ளி­ரின் உயர்­வுக்­கும், பொரு­ளா­தார சுதந்­தி­ரத்­திற்­கும் நாம் எடுத்­தி­ருக்­கும் முன்­னெ­டுப்­பு­கள், பல மாநி­லங்­க­ளுக்கு வழி­காட்­டி­யாக இருக்­கப்­போ­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உரி­மைத்­தொகை – விடி­யல் பய­ணம் – புது­மைப்­பெண் – தோழி விடுதி மட்­டு­மல்ல, பெண்­கள் பெய­ரில் பதி­யப்­ப­டும் சொத்­து­க­ளுக்கு பதி­வுக் கட்­ட­ணத்­தில் ஒரு விழுக்­காடு குறைத்­தி­ருக்­கி ­றோம்!  அதே­போன்று, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் சார்­பில் புதி­தாக வீடு ஒதுக்­கும்­போது, அந்­தக் குடும்­பத்­தின் பெண்­கள் பெய­ரில்­தான் வீடு­களை இன்­றைக்கு ஒதுக்­கீடு செய்து கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, குழந்­தைத் திரு­ம­ணம், குழந்தை பாலி­யல் வன்­கொ­டுமை, குடும்ப வன்­முறை உள்­ளிட்ட பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வு காண, பாலின வள மையங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம். சிறு­மி­கள் மீதான பாலி­யல் வன்­கொ­டுமை குற்­றங்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கும் அள­விற்­குச் சட்­டத்­தைக்கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். டிஜிட்­டல் குற்­றங்­க­ளுக்­கும் கடு­மை­யான தண்­ட­னை­கள் கொடுக்­கும் சட்­டங்­களை நிறை­வேற்­றி ­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு குற்­றம் நடந்­தால் எவ்­வ­ளவு துரி­த­மாக நட­வ­டிக்கை எடுத்து, குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக்­கி­றோம் என்­ப­தில்­தான், ஒரு அர­சின் செயல்­பாடு மதிப்­பி­டப்­ப­டும். அப்­ப­டிப் பார்த்­தால், 86 விழுக்­காட்­டிற்கு மேலான வழக்­கு­க­ளில் 60 நாட்­க­ளுக்­குள் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது இந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான். இந்­தி­யா­வி­லேயே பெண்­கள் அதி­க­மாக வேலைக்­குச் செல்­வது, நம்­மு­டைய தமிழ்­நாட்­டில்­தான்! இங்கு சட்­டம் – ஒழுங்கு சரி­யாக இருக்­கி­றது; பெண்­கள் பாது­காப்­பாக இருக்­கி­றார்­கள்! அத­னால்­தான், தைரி­ய­மாக வேலைக்­குச் செல்­கி­றார்­கள்! ஏரா­ள­மான தொழிற்­சா­லை­க­ளும் தமிழ்­நாட்டை நோக்கி வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பொய்­யை­யும் புர­ளி­யை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பரப்­பு­கி­றார் பழ­னி­சாமி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் இந்த வளர்ச்சி, பா.ஜ.க.வின் கிளைச் செய­லா­ள­ரான பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு எரிச்­ச­லைத் தரு­கி­றது; வயிறு எரி­கி­றது. அவ­ரின் எண்­ண­வோட்­டம் என்ன தெரி­யுமா? “என்­னடா, கால்­க­ளில் தவழ்ந்து, கால்­களை வாரி­விட்டு ஆட்­சிக்கு வந்­தோம். இந்த தி.மு.க.வும் – ஸ்டாலி­னும் ஒரு தேர்­த­லில்­கூட வெற்­றி­பெற விட­மாட்­டேன் என்­கி­றார்­கள் என்ற பொறா­மை­யில், பொய்­யை­யும் – புர­ளி­யை­யும் பரப்­பு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் பாது­காப்­பைப் பற்றி பேசு­வ­தற்­குப் பழ­னி­சா­மிக்கு அரு­கதை இருக்­கி­றதா? அ.தி.மு.க.வின் பொல்­லாத ஆட்­சிக்கு ‘பொள்­ளாச்­சியே சாட்சி’ என்று ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நா­டும் சொல்­லி­யதே! “அண்ணா அடிக்­கா­தீர்­கள் அண்ணா – வலிக்­கி­றது” என்று அப்­பா­விப் பெண்­கள் கண்­ணீ­ரு­டன் கத­றி­யது இப்­போ­தும் நம்­மு­டைய காது­க­ளில் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. அந்­தக் கத­றல்­கூட பழ­னி­சா­மி­யின் மனச்­சாட்­சியை உலுக்­க­வில்­லையா...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொள்­ளாச்சி வழக்­கில் எப்­ப­டிப்­பட்ட நாட­கங்­க­ளை­யெல்­லாம் நடத்­தி­னார் பழ­னி­சாமி. முத­லில் வழக்கு போடா­மல் இழுத்­த­டித்­தார்... பிறகு, சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளி­யைத் தப்­பிக்க விட்­டார்­கள். பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளின் பெயர்­க­ளைப் பொது­வெ­ளி­யில் சொல்லி, மிரட்­டல் விடுத்­தார்­கள். ஆனால், அந்த வழக்­கை­யும் முறை­யாக நடத்தி, குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆயுள் தண்­டனை வாங்­கித் தந்து, 85 லட்­சம் ரூபாய் இழப்­பீட்­டை­யும் இன்­றைக்கு வாங்­கித் தந்த ஆட்­சி­தான், திரா­விட மாடல் ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொள்­ளாச்சி வழக்கு மட்­டுமா? ஒரு பெண் எஸ்.பி.–க்கே பாலி­யல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி.யைப் பாது­காத்­தது, அன்­றைக்கு முத­ல­மைச்­ச­ராக – இன்­றைக்கு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கும் பழ­னி­சா­மி­தானே? அந்­தப் பெண் எஸ்.பி.யை வழி­ம­றித்து, ஒரு டி.ஜி.பி.யே மிரட்­டி­யது பழ­னி­சாமி ஆட்­சி­யில்­தானே? இந்த வழக்­கில்­கூட தண்­டனை வாங்­கிக் கொடுத்­தது நம்­மு­டைய ஆட்­சி­யில்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதெல்­லாம் மட்­டு­மல்ல, பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கும் – அ.தி.மு.க. ஆட்­சி­க­ளுக்­கும் பெரிய ஹிஸ்­ட­ரியே இருக்­கி­றது. தரு­ம­பு­ரி­யில் பேருந்­தில் மூன்று மாண­வி­கள் எரிக்­கப்­பட்­டார்­களே... பெண் ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு என்று பெண்­க­ளுக்கு எதி­ராக அ.தி.மு.க.வினர் செய்த படு­பா­த­கங்­க­ளைப் பெரிய லிஸ்ட்டே போட­லாம். ஆனால், பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்கு மரண தண்­ட­னையே கொடுக்­கும் அள­விற்கு சட்­டங்­களை நிறை­வேற்­றி­யி­ருப்­பது நம்­மு­டைய ஆட்­சி­தான், திரா­விட மாடல்அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பழ­னி­சாமி ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கேள்­விக்­கு­றி­யான பெண்­கள் பாது­காப்பு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­க­ளின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­னது பழ­னி­சாமி ஆட்­சி­யில்! பெண்­க­ளைப் பாது­காத்து கல்­லூ­ரி­க­ளுக்­கும் – வேலை­க­ளுக்­கும் அனுப்பி தலை­நி­மிர வைத்து, உற்ற தோழ­னாக இருப்­பது திரா­விட மாடல் ஆட்­சி­தான்! இந்த உண்­மை­களை எல்­லாம், பொய்ச் செய்­தி­க­ளை­யும் – அவ­தூ­று­க­ளை­யும் பரப்பி மறைக்­க­லாம், திசை­தி­ருப்­ப­லாம் என்று கருதி, பா.ஜ.க.வின் என்.டி.ஏ. ஆட்­சியை கொண்­டு­வந்து தமிழ்­நாட்டை கப­ளீ­க­ரம் செய்­து­வி­ட­லாம் என்று கற்­ப­னைக் கோட்­டை­யில் இன்­றைக் அவர் உலா வந்து கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தன்­னு­டைய அர­சின் சாத­னை­கள் என்று சொல்­லப் பழ­னி­சா­மி­யி­டம் எது­வும் இல்லை; தமிழ்­நாட்­டிற்கு எலக்‌ஷன் டூர் வரும் பிர­த­ம­ரி­ட­மும் எது­வும் இல்லை! சாதனை என்று சொல்­லிக் கொள்­ள­லாம் என்று நினைத்­தால், மதுரை எய்ம்ஸை செங்­கல் செங்­கல்­லா­கக் கட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அது­தான் சாதனை... அவர்­க­ளி­டம் சாதனை லிஸ்ட்டே இல்லை. ஆனால், நம்­மி­டம் அவர்­க­ளின் துரோக லிஸ்ட் இருக்­கி­றது. சொல்­லட்­டுமா...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் துரோ­கம்! மெட்ரோ ரயில் திட்­டங்­க­ளைத் தரா­மல் துரோ­கம்! நூறு நாள் வேலைத்­திட்­டத்தை ஒழித்த துரோ­கம்! சிறு­பான்­மை ­யி­ன­ருக்கு சி.ஏ.ஏ. துரோ­கம்! விவ­சா­யி­க­ளுக்கு வேளாண் சட்ட துரோ­கம்! அமெ­ரிக்க வரி­வி­திப்­பில் நெச­வா­ளர்­க­ளைக் காப்­பாற்­றத் தவ­றிய துரோ­கம்! மேற்­கா­சி­யப் போரில் சிறு, குறு நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­களை முடங்க வைத்­தி­ருக்­கும் துரோ­கம்! இந்தி மொழி­யைத் திணிக்க, நம்­மு­டைய குழந்­தை­க­ளுக்­குச் சேர வேண்­டிய கல்வி நிதி­யைத் தராத துரோ­கம்! ஜி.எஸ்.டி இழப்­பீடு தராத துரோ­கம்! மாநில உரி­மை­களை பறிக்­கும் துரோ­கம்! இவ்­வாறு துரோ­கங்­க­ளின் முழு உரு­வ­மாக இருப்­ப­து­தான், பழ­னி­சா­மி­யும் – அவ­ரின் கூட்­டாளி பா.ஜ.க.வும்! குற்­றங்­க­ளுக்கு மேல் குற்­றங்­கள் செய்து, தமிழ்­நாட்டு மக்­கள் முன்பு குற்­ற­வாளி கூண்­டில் நிற்­பது என்.டி.ஏ. கூட்­டா­ளி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி அமைத்­தோம். இங்கே அண்­ணன் முத்­த­ர­சன் வந்­தி­ருக்­கி­றார். கொள்கை மாறா­மல் இன்­றைக்கு நாங்­கள் பய­ணம் செய்து கொண்­டி­ருக்­கி­றோம். எப்­ப­டிப்­பட்ட பய­ணம், மாநில உரி­மை­க­ளைக் காக்க – தமிழை உயர்த்த – இன­மான உணர்­வைப் போற்ற – தமிழ்­நாட்­டின் தனித்­து­வத்­தைக் காக்க – கொள்­கை­க­ளால் நாங்­கள் ஒன்று சேர்ந்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அமித்­ஷா­வு­டன் இருக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஒட்­டு­மொத்த ஊழல் கூட்­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், என்.டி.ஏ. கூட்­ட­ணி­யைப் பாருங்­கள். 2016–இல் அமித் ஷா என்ன சொன்­னார். அ.தி.மு.க. அமைச்­ச­ர­வை­தான் ஊழல்­வா­தி­கள் நிறைந்த அமைச்­ச­ரவை என்று சொன்­னார். ஆனால், அந்த ஊழல்­கூட்­டம் மொத்­த­மும் இப்­போது அதே அமித்­ஷா­வு­டன் நிற்­கி­றது. சம்­பந்­திக்கு டெண்­டர் கொடுத்த பழ­னி­சாமி தொடங்கி, அவ­ரு­டன்இருந்த ஒவ்­வொரு அமைச்­ச­ரும் ஊழல் குற்­ற­வா­ளி­கள் என்­ப­தற்கு உதா­ர­ணம் ஒன்றா? இரண்டா? குட்கா குற்­ற­வாளி – உள்­ளாட்சி டெண்­டர் குற்­ற­வாளி – இப்­படி ஒரு டஜன் அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர்­க­ளைச் சொல்­ல­லாம். அவர்­கள் மட்­டு­மல்ல... அவர்­க­ளு­டன் கூட்­டணி வைத்­தி­ருப்­ப­வர்­க­ளைப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு­வர் தேர்­தல் ஆணை­யத்­திற்கே இலஞ்­சம் கொடுக்­கும் வழக்­கில் சிக்­கி­ய­வர். இன்­னொ­ரு­வர் மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு அனு­மதி கொடுப்­ப­தில் மாட்­டி­ய­வர். உதி­ரி­க­ளைப் பற்­றி­யெல்­லாம் நான் சொல்ல வேண்­டுமா? இப்­படி குற்­ற­வாளி கூண்­டில் நிற்க வேண்­டி­ய­வர்­கள் கூட்­ட­ணி­யாக வந்து, இன்­றைக்­குத் தமிழ்­நாட்டு மக்­களை ஏமாற்­றப் பார்க்­கி­றார்­கள். ஆனால், தமிழ்­நாட்டு மக்­கள்­தான், அவர்­க­ளுக்கு ஏமாற்­றத்­தைத் தரப் போகி­றார்­கள். இந்த மேடை­யில் இருந்து சொல்­கி­றேன். என்.டி.ஏ எனும் துரோ­கக் கூட்­ட­ணியை தமிழ்­நாட்டு மக்­கள் ஏப்­ரல் 23–ஆம் நாள் நிச்­ச­யம் தூக்கி எறி­வார்­கள். அது, உறுதி! உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டபுள் எஞ்­சி­னா­வது, டப்பா எஞ்­சி­னா­வது! தமிழ்­நாட்டை வீழ்த்த வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் நுழைய நினைத்­தால், தடம் புர­ளு­வது மாதிரி விரட்ட வேண்­டும்! நம்­மு­டைய போராட்­டம்; தி.மு.க.வின் வெற்­றிக்கு மட்­டு­மல்ல; கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக! மறந்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தி.மு.க. கூட்­டணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வேட்­பா­ளர்­களை ஆத­ரிப்­பீர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, அனை­வ­ரும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை நீங்­கள் ஆத­ரிக்க வேண்­டும் என்று அன்­போடு கேட்­கி­றேன்; உரி­மை­யோடு கேட்­கி­றேன்; ஏன் கலை­ஞ­ரின் மக­னா­கக் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோடு மேற்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம்­மு­டைய சு. முத்­து­சாமி அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, பவா­னி­சா­கர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த பி.எல். சுந்­த­ரம் அவர்­க­ளுக்­குக் கதிர் அரி­வாள் சின்­னத்­தி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொடக்­கு­றிச்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த செந்­தில்­நா­தன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெருந்­துறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் தோப்பு வெங்­க­டா­ச­லம் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தி­யூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் எம். சிவ­பா­லன் அவர்­க­ளுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோபி­செட்­டி­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் என். நல்­ல­சி­வம் அவர்­க­ளுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பவானி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கே.ஏ. சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் எல்­லாம் ஆத­ர­வ­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, காங்­கே­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், வேட்­பா­ள­ராக நிற்­கும் சாமி­நா­தன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோடு கிழக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் இன்று இர­வுக்­குள் நம்­மு­டைய ராகுல் காந்தி அவர்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யின் வேட்­பா­ளரை அறி­விக்க இருக்­கி­றார். காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த அந்த வேட்­பா­ள­ருக்கு, கை சின்­னத்­தி­லும் உங்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு தொடர்ந்து வளர்ச்­சிப் பாதை­யில் நடை­போட நீங்­கள் ஆத­ர­வைத் தந்­திட வேண்­டும்! அமை­ய­வுள்ள திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் தன்­னி­க­ரில்­லாத தமிழ்­நாட்டை உரு­வாக்­கு­வோம்! உல­கமே திரும்­பிப் பார்க்­கும் அள­விற்கு உயர்த்­து­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (2.4.2026) ஈரோட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், ஈரோடு மேற்கு தொகுதி கழக வேட்பாளர், அமைச்சர் சு. முத்துசாமி, பெருந்துறை தொகுதி கழக வேட்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், அந்தியூர் தொகுதி கழக வேட்பாளர் எம். சிவபாலன், ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி கழக வேட்பாளருமான என். நல்லசிவம், பவானி தொகுதி கழக வேட்பாளர் கே.ஏ. சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் தொகுதி வேட்பாளர் சுந்தரம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன், காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு வேட்பாளரையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள், புதிய திராவிடர் கழகத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">கழக வழக்கறிஞர் அணி செயலாளர்
</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">மூத்த வழக்கறிஞர்</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">என்.ஆர்.இளங்கோ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">அலைபேசி எண் மாற்றம்</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">புதிய எண் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">96956 79567</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>