<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 00:36:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260404T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="04042026-CBE-06" position.sequence="06" ex-ref="04042026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">‘திராவிட மாடல்’ நாயகரின் சூறாவளிப் பிரச்சாரம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">‘கொங்கு மண்டலமே தி.மு.க.வின் கோட்டை’ என நிரூபித்து கோவையில் குவிந்த கொள்கை மறவர்கள் கூட்டம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">தமிழ்நாட்டை வஞ்சிப்பதுடன், அவமானப்படுத்துவதால் பா.ஜ.க.வை தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">அ.தி.மு.க. ஆட்சியில் பழனிசாமி செய்த சாதனைகளைப் பட்டியலிட முடியுமா? </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">கோவை – தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">தலைவர், முதல்வர்  மு.க.ஸ்டாலின் முழக்கம்! </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">தொடர்ச்சி 7 – ஆம் பக்கம்</lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup293156_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="9_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை,ஏப்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் அதிக முறை வந்த மாவட்­டம் கோவை. கோவை­யோடு நான் ஒன்­றிப் போயி­ருக்­கி­றேன். பழ­னி­சாமி தமது ஆட்­சி­யில் செய்த சாத­னை­க­ளைப் பட்­டி­ய­லிட முடி­யுமா? தமிழை, தமி­ழரை, தமிழ்­நாட்டை வஞ்­சிப்­ப­து­டன், வெளிப்­ப­டை­யாக அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தால்­தான் பா.ஜ.க.வைத் தமிழ்­நாடு வெறுக்­கி­றது! என கோவை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ரும், முத­ல­மைச்­ச­ரு­மான  மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (02–04–2026) மாலை, கோயம்­புத்­தூ­ரில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­கூட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து ஆற்­றிய உரை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021–ஆம் ஆண்டு திரா­விட மாடல் ஆட்சி அமைந்­த­தில் இருந்து, நான் அதிக முறை வந்த மாவட்­டம் எது தெரி­யுமா? இந்­தக் கோவை மாவட்­டம்­தான். இன்­னும் சொல்­லப்­போ­னால், ஆட்­சிக்கு வந்­த­போது கொரோனா என்ற கொடிய நோய் உச்­சத்­தில் இருந்­தது. முத­ல­மைச்­ச­ரான அடுத்த மாதமே PPE கிட் அணிந்­து­கொண்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா தடுப்­புப் பணி­களை ஆய்வு செய்­த­வன்­தான் இந்த ஸ்டாலின் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். அதி­லி­ருந்து, தொடர்ந்து பல முறை அரசு நலத்­திட்ட நிகழ்ச்­சி­கள், கள ஆய்­வில் முத­ல­மைச்­சர் ஆய்­வுக்­கூட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்ட தொடக்க விழா, உலக புத்­தொ­ழில் மாநாடு, பல்­வேறு திறப்பு விழாக்­கள், பல்­வேறு அடிக்­கல் நாட்டு நிகழ்ச்­சி­கள் என்று ஏதா­வது ஒரு விழா­விற்கு வந்து கொண்­டு­தான் இருப்­பேன். கோவை­யும் என்­னு­டைய ஊர்­தான் என்று சொல்­லத்­தக்க அள­விற்கு, கோவை­யோடு நான் ஒன்­றிப் போயி­ருக்­கி­றேன். அத­னால்­தான், இப்­போது நடை­பெற உள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான முதற்­கட்ட பரப்­பு­ரை­யி­லேயே கோவைக்கு வந்­து­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">செந்­தில் பாலாஜி என்­றாலே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">செயல்­வீ­ரர்! ஆற்ற­லா­ளர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இப்­போது வேட்­பா­ளர்­களை உங்­க­ளுக்கு நான் அறி­மு­கப்­ப­டுத்­தப் போகி­றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில் கோவை தெற்கு சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் வி. செந்­தில்­பா­லாஜி அவர்­கள்! முன்­னாள் அமைச்­சர், கழத்­தின் மேற்கு மண்­ட­லப் பொறுப்­பா­ளர். அவ­ரைப் பற்றி உங்­க­ளுக்கு நான் அறி­மு­கம் செய்­யத் தேவை­யில்லை. செந்­தில்­பா­லாஜி என்­றாலே செயல்­வீ­ரர். செயல்­வீ­ரர் என்­றாலே செந்­தில்­பா­லாஜி. நினைத்­த­தைச் சாதித்­துக் காட்­டு­ப­வர் செந்­தில்­பா­லாஜி. அத­னால்­தான் கோவை­யில் நிற்­கி­றார். எந்த வேலையை ஒப்­ப­டைத்­தா­லும் அதைச் சிறப்­பா­க­வும், எதிர்­பார்த்­த­தற்கு மேலே­யும் செய்­யக் கூடிய ஆற்­றல் பெற்­ற­வர்! அவ­ருக்கு நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளு­டைய பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, கோவை வடக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் துரை செந்­த­மிழ்ச் செல்­வன் அவர்­கள். பாரம்­ப­ரிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். ஐ.டி. ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார். பகு­திக் கழ­கத்­தின் செய­லா­ள­ராக இருந்து, இப்­போது கோவை மாந­க­ரக் கழ­கத்­தின் செய­லா­ளர் பொறுப்பை ஏற்­றி­ருப்­ப­வர். இவ­ரது தந்தை துரை மேவ­ரா­ஜன் அடி­மட்ட தொண்­ட­ராக இருந்து, கோவை மாந­கர் பீள­மேடு பகு­திக் கழ­கச் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். துரை. செந்­த­மிழ் செல்­வ­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் எல்­லாம் பொன்­னான வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, சூலூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் தள­பதி முரு­கே­சன் அவர்­கள். விவ­சா­யத்­தைத் தொழி­லா­கக் கொண்­டுள்­ள­வர், கண்­ணம்­பா­ளை­யம் பேரூ­ராட்­சித் தலை­வ­ரா­க­வும் கடந்த 2011–16–இல் பணி­யாற்றி இருக்­கி­றார். சூலூர் – திருச்சி சாலை விரி­வாக்க குழுத் தலை­வர் உள்­ளிட்ட பல்­வேறு பொறுப்­பு­களை வகித்த அனு­ப­வ­மிக்­க­வர். அவ­ருக்கு நீங்­கள் எல்­லாம்	உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஆத­ரித்து வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, கிணத்­துக்­க­டவு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கே.வி.கே. சபரி கார்த்­தி­கே­யன். மறைந்த முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கே.வி.கே. என்று அழைக்­கப்­ப­டும் கே.வி. கந்­த­சாமி அவர்­க­ளின் பேரன். கே.வி.கே. அவர்­கள் 3 முறை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­வர். அவ­ரது பேர­னானசபரி கார்த்­தி­கே­யன் அவர்­கள், 1998 முதல் கழக உறுப்­பி­ன­ரா­க­வும், பெரிய நெக­மம் பேரூ­ராட்­சித் தலை­வ­ரா­க­வும் பணி­யாற்றி, இப்­போது, கோவை தெற்கு மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ள­ராக இருக்­கி­றார். அவ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் ஆத­ரித்து வாக்­க­ளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உங்­கள் வாக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உத­ய­சூ­ரி­ய­னுக்கு மட்­டுமே!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொள்­ளாச்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் கொங்­கு­நாடு மக்­கள் தேசிய கட்­சி­யைச் சேர்ந்த வெல்­லும் வேட்­பா­ளர்  நித்­தி­யா­னந்­தம் அவர்­கள். இங்கு நம்­மு­டைய மேடை­யில்இருக்­கும் சகோ­த­ரர் ஈஸ்­வ­ரன் அவர்­க­ளின் ஆத­ரவு பெற்ற வேட்­பா­ளர். அவ­ரால் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் வேட்­பா­ளர். கூட்­ட­ணிக் கட்­சி­யாக இருந்­தா­லும், நமது வெற்­றிச் சின்­ன­மான உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அவர் நிற்­கி­றார். பொள்­ளாச்சி கழக உடன்­பி­றப்­பு­கள் கடு­மை­யாக களப்­பணி ஆற்றி, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, வால்­பாறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் குட்டி என்­கிற ஆ. சுதா­கர் அவர்­கள்! இவ­ரது தந்தை ஆரோக்­கி­யம் அவர்­கள் வால்­பாறை நகர அவைத் தலை­வ­ராக இருந்­த­வர். சுதா­கர் மளி­கைக் கடை நடத்தி வரு­கி­றார். கழ­கத்­தின் மாண­வ­ர­ணி­யில் இருந்­த­வர், கிளைச் செய­லா­ளர், வார்டு செய­லா­ளர், நக­ராட்­சி­யில் 2 முறை நக­ராட்­சித் தலை­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார். 2022–ஆம் ஆண்­டி­லி­ருந்து வால்­பாறை நகர தி.மு.கழ­கத்­தின் செய­லா­ள­ராக இருக்­கி­றார். அவரை நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஆத­ரித்து வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கூட்­டணி கட்சி வேட்­பா­ளர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வெற்­றியை உறுதி செய்­வீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, தொண்­டா­முத்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி, நமது வெல்­லும் வேட்­பா­ளர் என்.ஆர். கார்த்­தி­கே­யன் அவர்­கள். கழ­கத்­தில் மாவட்­டப் பிர­தி­நி­தி­யாக இருக்­கி­றார். நர­சி­பு­ரம் ஊராட்­சி­யின் தலை­வ­ராக பணி­யாற்றி இருக்­கி­றார், 2010–ஆம் ஆண்டு தமிழ்­நாடு அர­சின் சிறந்த ஊராட்­சிக்­கான உத்­த­மர் காந்தி விருது பெற்­ற­வர். அவ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் பொன்­னான வாக்­கு­களை நீங்­கள் வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, மேட்­டுப்­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கவிதா கல்­யா­ண­சுந்­த­ரம். இவர் கோவை­யின் காவல்­தெய்­வ­மாக போற்­றப்­ப­டும் அருள்­மிகு கோணி­யம்­மன் திருக்­கோ­வி­லின் அறங்­கா­வல் குழு உறுப்­பி­ன­ராக இருந்­த­வர். இவ­ரது கண­வர் எஸ்.எம்.டி. கல்­யாண சுந்­த­ரம், கார­மடை வடக்கு ஒன்­றி­யச் செய­லா­ள­ராக இருக்­கி­றார். கவிதா கல்­யா­ண­சுந்­த­ரம் அவர்­க­ளுக்கு மேட்­டுப்­பா­ளை­யத்­தில் இருக்­கும் மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கினை வழங்கி வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, சிங்­கா­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகுதி, கவுண்­டம்­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகுதி. இந்த இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் சார்­பில் வேட்­பா­ளர்­கள் விரை­வில் அறி­விக்­கப்­பட இருக்­கி­றார்­கள். சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட இருக்­கும் வேட்­பா­ளர்­க­ளுக்கு கை சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அளிப்­பீர்­களா? உங்­கள் வாக்கு உத­ய­சூ­ரி­ய­னுக்­கு­தானே? உங்­கள் வாக்கு நம்­மு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­குத்­தானே? வெற்றி உறு­தியா? உறுதி (மக்­கள்). நன்றி! வேட்­பா­ளர்­கள் இப்­போது அம­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும், நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லி­லும் தி.மு.க. கூட்­ட­ணிக்கு மிகப் பெரிய வெற்­றியை, கோவை மக்­க­ளான நீங்­கள் தந்­தீர்­கள். அது 2026 தேர்­த­லி­லும் முழு வெற்­றி­யாக தொடர வேண்­டும்! இதை அன்­போடு மட்­டு­மல்ல, முழு உரி­மை­யோ­டும் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கோவைக்கு செய்த திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏன் தெரி­யுமா? திரா­விட மாடல் ஆட்­சி­யில் கடந்த ஐந்­தாண்டு காலத்­தில் அந்­த­ள­விற்கு இந்த மேற்கு மண்­ட­லத்­திற்கு, குறிப்­பாக கோவைக்கு பல்­வேறு சாத­னைத் திட்­டங்­களை நாங்­கள் செய்­தி­ருக்­கி­றோம். உண்டா? இல்­லையா? அந்த உரி­மை­யில்­தான் உங்­க­ளி­டம் முழு வெற்­றியை கொடுங்­கள் என்று கேட்­கி­றேன். எல்­லா­வற்­றை­யும் சொல்ல நேர­மில்லை. அத­னால், சில பெரிய திட்­டங்­களை மட்­டும், ஹைலைட்­ஸாக சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை­யில் தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கில் மக்­கள் கூடி மகி­ழும் செம்­மொழி பூங்கா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, தமிழ்­நாட்­டி­லேயே நீள­மான ஜி.டி. நாயுடு மேம்­பா­லம். இந்­தப் பாலத்தை சின்­னி­யம்­பா­ளை­யம் முதல் நீலாம்­பூர் வரை இன்­னும் 5 கிலோ­மீட்­ட­ருக்கு நாம் ஆட்­சிக்கு வந்­த­தற்­குப் பின்­னால் நீட்­டிக்­கப் போகி­றோம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆர்.எஸ். புரம் மாந­க­ராட்சி மேல்­நி­லைப்­பள்­ளி­யில் உல­கத்­த­ரத்­தில் ஹாக்கி மைதா­னம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே­போன்று, ஆத்­துப்­பா­லம் முதல் உக்­க­டம் சந்­திப்பு ஒப்­ப­ணக்­கார வீதி வரை உயர்­மட்ட மேம்­பா­லம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரு­கூர் – பீள­மேடு இர­யில் நிலை­
­யங்­க­ளுக்கு இடையே சாலை மேம்­பா­லம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பில்­லூர் 3–ஆம் குடி­நீர் திட்­டப் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (2.4.2026) கோவையில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சூலூர் தொகுதி கழக வேட்பாளருமான தளபதி முருகேசன், கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும், கோயம்புத்தூர் வடக்கு கழக வேட்பாளருமான  செந்தமிழ்ச் செல்வன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி கழக வேட்பாளர் 
வி. செந்தில்பாலாஜி, கிணத்துக்கடவு தொகுதி கழக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதி கழக வேட்பாளர்  ஆ. சுதாகர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்  கே.நித்தியானந்தன், காங்கிரஸ் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளரையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மேற்கு மண்டல கழக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர்  
வி. செந்தில்பாலாஜி, தோழமை கட்சித் தலைவர்கள்  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர்  ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர்  நாகை திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சித் தலைவர்  வெண்மணி, ஆதித்தமிழர் கட்சித் தலைவர்  ஜக்கையன், ஆதித்தமிழர் பேரவை தலைவர்  அதியமான், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்  ராமகிருஷ்ணன், கழகத்தின் மூத்த முன்னோடிகள் முன்னாள் அமைச்சர்கள்  பொங்கலூர் பழனிசாமி மற்றும்  மு. கண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்  கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்  
தொ.அ. ரவி, தோழமைக் கட்சிகளின் மாவட்ட கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>