<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,379,958,1224" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 03:34:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260404T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="04042026-CBE-08" position.sequence="08" ex-ref="04042026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">பீகாரில் நிதிஷ்குமார் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">இந்தத் தேர்தல் ஆர்.எஸ்.எஸ். நாக்பூருக்கும் – கீழடி தமிழருக்கும் இடையிலான போர்!    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="35">மானாமதுரை தேர்தல் பரப்புரையில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhiphoto_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">வ­கங்கை, ஏப்.4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">சிவ­கங்கை மாவட்­டம் மானா­ம­துரை தேவர் சிலை அருகே மானா­ம­துரை சட்­ட­மன்ற தொகு­தி­யில் தி.மு.க. சார்­பில் போட்­டி­யி­டும் முன்­னாள் அமைச்­சர் தமி­ழ­ரசி ரவிக்­கு­மாரை ஆத­ரித்து, தி.மு.க.  துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி பரப்­புரை செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத்­தேர்­தல் பரப்­பு­ரை­யில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ரும், திமுக தலை­வ­ரு­மான மு.க.ஸ்டாலின் தேர்ந்­தெ­டுத்து, உங்­கள் கைக­ளில் இரண்­டா­வது முறை­யாக மானா­ம­துரை தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ள­ராக தமி­ழ­ர­சியை ஒப்­ப­டைத்­துள்­ளார். நீங்­கள் கூப்­பிட்ட குர­லுக்கு ஓடோடி வந்து, இந்த பகு­தி­யில் உள்ள பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்­கக்­கூ­டிய ஒரு வேட்­பா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எந்­தத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டா­லும் என்­னு­டைய தொகு­திக்கு வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பெற்­றுத் தந்து, அதை நிறை­வேற்­றித் தரக்­கூ­டிய ஒரு­வர் தான் தமி­ழ­ரசி. மிகச் சிறப்­பாக மக­ளிர் அணி­யில் பணி­யாற்­றும் ஒரு சகோ­தரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே நேரத்­தில், தேர்­தல் அறிக்கை குழு­வில் அவ­ரு­டைய பங்­க­ளிப்பு இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக, அவரை உறுப்­பி­ன­ராக முத­ல­மைச்­சர் நிய­மித்­தார். தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் போதும் கூட, ‘மானா­ம­து­ரைக்கு இது வேண்­டும், அது வேண்­டும்’ என்று முத­லில் தனது தொகு­தி­யைப் பற்­றிய அக்­க­றை­யு­டன் போராடி, பின்­னர் தமிழ்­நாட்­டைப் பற்றி சிந்­திக்­கும் அள­வுக்­கான ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னரை நீங்­கள் பெற்­றி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமி­ழர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தாய்­மடி கீழடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­ப­டிப்­பட்ட நம்­மு­டைய தமி­ழ­ர­சிக்கு, தமிழ்­நாடு வியந்து பார்க்­கக்­கூ­டிய அள­விற்கு ஒரு மிகச் சிறப்­பான வெற்­றியை நீங்­கள் உரு­வாக்கி காட்­டு­வீர்­கள் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். ‘என்­னு­டைய பிரச்­சா­ரத்தை எங்கு தொடங்­கப் போகி­றாய்?’ என்று முத­ல­மைச்­சர் என்­னி­டம் கேட்­ட­போது, ‘அதை நான் தமி­ழர்­க­ளின் தாய்­ம­டி­யில் தொடங்க விரும்­பு­கி­றேன்’ என்று தெரி­வித்­தேன். கீழ­டி­தான் தமி­ழர்­க­ளின் தாய்­மடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த கீழ­டி­யில் மக்­கள் பிர­தி­நி­தி­யாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பணி­யாற்­றும் வாய்ப்­பைப் பெற்­ற­வர் சகோ­தரி தமி­ழ­ரசி. நம்­மு­டைய கீழ­டி­யைப் எடுத்­துக் கொண்­டால், இந்த உல­கத்­திற்கே தமிழ்­நாட்­டின் தமி­ழர்­க­ளின் பெரு­மையை எடுத்­துச் சொல்­லக்­கூ­டிய ஒரு பகு­தி­தான் கீழடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அங்கே நடை­பெற்ற அகழ்­வா­ராய்ச்­சி­கள், உல­கின் மூத்த குடி­க­ளில் ஒன்­றாக தமிழ்க்­குடி இருப்­பதை தெளி­வாக அறி­வி­யல் பூர்­வ­மாக நிரூ­பித்­துள்­ளன. அமெ­ரிக்­கா­வில் உள்ள ‘பீட்டா அன­லி­டிக்ஸ்’ நிறு­வ­னத்­தின் கார்­பன் டேட்­டிங் ஆய்­வு­க­ளின் மூலம் இந்­தத் தர­வு­கள் அதி­கா­ரப்­பூர்­வ­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டன. அந்த ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் அறிக்­கையை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தயா­ரித்து ஒன்­றிய அர­சாங்­கத்­தி­டம் வழங்கி, அதை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­ட­போ­தும், அதை ஏற்க முடி­யாது என்று தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதை ஏற்­றுக்­கொண்­டால், தமி­ழர்­க­ளின் பெரு­மை­யும் தமிழ் இனத்­தின் பெரு­மை­யும் உல­கத்­துக்­குத் தெரிய வரும். அதைத் தேர்­த­லுக்­குத் தேர்­தல் தமிழ்­நாட்­டுக்கு வரக்­கூ­டிய பா.ஜ.க.வால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தொடர்ந்து, இந்தி மொழியை தமிழ்­நாட்டு மக்­கள் மீது திணித்து வரும் பா.ஜ.க.வாலும் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆய்­வ­றிக்­கையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மாற்­றச் சொன்ன பா.ஜ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆயி­ரக்­க­ணக்­கான கோடி­களை சமஸ்­கி­ருத வளர்ச்­சிக்­காக தந்­து­விட்டு, தமி­ழுக்­காக தரு­கி­றேன் என்று கூறும் பா.ஜ.க.வால் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமி­ழின் பெரு­மையை உல­கம் அறிந்து கொள்­வ­தை­யும் அவர்­கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ‘உங்­க­ளு­டைய ஆய்­வ­றிக்­கையை மாற்­றிக் கொடுங்­கள்; அப்­போ­து­தான் பா.ஜ.க. ஏற்­றுக்­கொள்­வோம்’ என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளு­டைய பெரு­மையை குறைச்சு சொல்­லித் தமி­ழின் பெரு­மையை உல­கத்­துக்­குச் சொல்­லும் இந்த ஆராய்ச்­சி­யின் உண்­மையை ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று கூறி­ய­வர்­க­ளு­டன் கூட்­டணி வைத்­தி­ருக்­கும் இயக்­கமே அதி­முக. அந்த அதி­மு­க­வில் இருக்­கும் ஒரு தமி­ழ­னாக எடப்­பாடி பழ­னி­சாமி என்ன சொல்­லி­யி­ருக்க வேண்­டும்? ‘இந்த ஆய்­வ­றிக்­கையை ஒன்­றிய அர­சாங்­க­மும், பாஜ­க­வும், மோடி­யும் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்’ என்று பெரு­மை­யு­டன் கூறி­யி­ருக்க வேண்­டும். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் சொன்­னது போலவே அவர் கூறி­யி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், ‘தமிழ்­நாடு அரசு ஆய்­வ­றிக்­கையை மாற்றி, ஒன்­றிய அர­சாங்­கம் கூறு­வது போலவே மாற்றி எழு­தி­யுள்­ளது’ என்று கூறிய அந்த வெட்­கக்­கே­டான கருத்­துக்கு சொந்­தக்­கா­ரர் எடப்­பாடி பழ­னி­சாமி. அவர் நினைக்­கி­றார் இந்­தத் தேர்­தல்ல பாஜக சொல்­ற­ப­டி­யெல்­லாம் கேட்­டுத் தேர்­தலை நடத்­தி­னால் ஏதோ பத­விக்கு கொண்டு வந்து உட்­கார வச்­சி­ரு­வாங்­கன்னு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பீகா­ரின் முத­ல­மைச்­ச­ராக இருந்த நிதீஷ் குமார் அவர்­க­ளின் நிலை என்ன என்­பதை நினைத்­துப் பாருங்­கள். முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டி­ய­வரை ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக மாற்­றி­யுள்­ள­னர். எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் நிலை என்­ன­வா­கும் என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. உங்­க­ளுக்கு பிடித்த நல்ல ஊர் ஏதே­னும் இருந்­தால், அமித் ஷா அவர்­க­ளி­டம் தெரி­வித்து வைத்­துக் கொள்­ளுங்­கள். உங்­களை அதி­க­பட்­சம் அங்கு ஆளு­நர் ஆகத்­தான் அனுப்­பு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏனெ­னில், பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இருந்த கட்­சி­க­ளின் நிலைமை என்ன ஆனது என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். நான் இதை கவ­லை­யு­டன் சொல்­கி­றேன். தமிழ்­நாட்­டுக்கு ஒரு எதிர்க்­கட்சி வேணும் இல்­லையா? நமக்கு ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்கை இருக்­கி­றது. எதிர்க்­கட்சி அவ­சி­யம் வேண்­டும். குறைந்­த­பட்­சம் எதிர்க்­கட்­சி­யா­க­வா­வது நீங்­கள் இருக்க வேண்­டும் என்ற அந்த அக்­க­றை­யோடு கரி­ச­னத்­தோடு சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தயவு செய்து பத்­தி­ரமா பார்த்­துக் கொள்­ளுங்­கள். நம்­மு­டைய வெற்றி உறுதி செய்­யப்­பட்­டு­விட்­டது. நம்­ம­ளு­டைய முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னு­டைய வெற்றி, திரா­விட மாடல் ஆட்­சி­யின் வெற்றி உறுதி செய்­யப்­பட்ட வெற்றி. மக்­கள் ஏற்­றுக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய வெற்றி. அதில் எந்த மாற்­ற­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தச் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் பாஜக தான் எதி­ர­ணி­யாக நிற்­கி­றது. இன்­னும் வேட்­பா­ளர் யார் என்­பது தெரி­ய­வில்லை. ஒன்றை நினை­வில் வைத்­துக் கொள்­ளுங்­கள். இங்கே தேர்­த­லைத் தாண்டி ஒரு போர் நடை­பெற இருக்­கி­றது. ஆர்­எஸ்­எஸ்-­யின் தலை­ந­க­ர­மா­கக் கரு­தப்­ப­டும் நாக்­பூ­ருக்­கும், கீழடி தமி­ழர்­க­ளுக்­கும் இடை­யி­லான போர்.  இந்­தத் தொகு­தி­யில் கீழ­டிக்­கும் நாக்­பூ­ருக்­கும் இடை­யி­லான போராட்­டம் என்ற போர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த ஒரு நிலை­தான் இந்­தத் தேர்­தல் களத்­தில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வ­ரின் வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட இயக்­கத்­தின் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றேன்.  நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ரின் வெற்றி, திரா­விட இயக்­கத்­தின் வெற்றி, நம்­மு­டைய கூட்­ட­ணி­யின் வெற்றி என்­பது தமிழ்­நாட்­டுக்­கான வெற்றி மட்­டு­மல்ல. நாம் பெறும் அந்த வெற்றி, இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மக்­க­ளுக்­கும் ஆன வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளா­லும் இந்­தப் பிரி­வினை சக்­தி­களை, மத நல்­லி­ணக்­கத்­திற்கு எதி­ரான சக்­தி­களை, இந்த நாட்­டின் வளர்ச்­சிக்கு எதி­ரான சக்­தி­களை வென்று காட்ட முடி­யும் என்ற நம்­பிக்­கையை ஒவ்­வொரு இந்­தி­ய­னின் மன­தி­லும் விதைக்­கும் ஒரு வெற்­றி­யாக இந்த வெற்றி இருக்­கும் என்ற நம்­பிக்கை நாம் அத்­தனை பேருக்­கும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எடப்­பாடி பழ­னி­சாமி அடிக்­கடி சொல்­கி­றார். ஏதோ அவ­ரு­டைய தேர்­தல் அறிக்­கை­யைப் பார்த்து நம்ம காப்பி அடிச்­சுட்­டோம்னு. அவர்­க­ளின் தேர்­தல் அறிக்­கையை மக்­கள் படிப்­பதே இல்லை. பாஜக ஏதா­வது ஒரு வழி கண்­டு­பி­டித்து, உங்­க­ளுக்­குத் தரக்­கூ­டிய ஆயி­ரம் ரூபாய் நிறுத்­தப் போறாங்க. கோடை காலத்­திற்­காக இரண்டு ஆயி­ரம் ரூபாய் என்று சேர்த்து உங்­க­ளுக்கு ஐயா­யி­ரம் ரூபாயை திமுக உங்­கள் வங்கி கணக்­கு­க­ளில் தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதைப் பார்த்­த­வு­டனே எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்­குப் பயம் வந்­து­விட்­டது. இப்­ப­டியே போனால் என்ன ஆகும்?’ என்று. அத­னால், நம்மை பாத்து காப்பி அடிச்சு பத்­தா­யி­ரம் ரூபாய் நான் கொடுக்­கி­றேன். அந்­தப்பத்­தா­யி­ரம் ரூபாய் நீங்க ஆட்­சிக்கு வரப்­போ­ற­துல குடுக்க போற­தில்ல. அது மட்­டும் இல்ல. நீங்க ஆட்­சிக்கு வந்­த­போ­தெல்­லாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்­த­வர் என்­பதை மக்­கள் மறந்­து­வி­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளுக்­கெல்­லாம் எமர்­ஜென்சி கால­கட்­டம் நினை­வி­ருக்­கும். அது முடிந்து, ஆட்சி மாற்­றங்­கள் நடந்த பின்­னர் நாட்­டிற்கு ஒரு நிலை­யான ஆட்சி வர வேண்­டும் என்று நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் முடிவு செய்­த­போது, ‘நேரு­வின் மகளே வருக, நிலை­யான ஆட்­சியை தருக’ என்று அன்னை இந்­திரா காந்தி அம்­மை­யாரை தமிழ்­நாட்­டுக்கு அழைத்து, ‘உற­வுக்கு கை கொடுப்­போம், உரி­மைக்கு குரல் கொடுப்­போம்’ என்று சொன்ன அந்த வாக்­கி­யத்தை, அந்த வாச­கத்தை தன்­னு­டைய தேர்­தல் அறிக்­கை­யிலே காப்பி அடிச்சு போட்­டு­ருக்­கக்­கூ­டிய அதி­முக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவர்­க­ளின் தேர்­தல் அறிக்­கை­யின் பத்­தா­வது பக்­கத்­தில் அதை இடம்­பெ­றச் செய்­துள்­ள­னர். யாரு­டைய வாச­கங்­கள்? நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் வாச­கங்­க­ளையே  காப்பி அடிச்சு தேர்­தல் அறிக்கை தயா­ரித்து வைத்து, இன்று நம்­மைப் பார்த்து அவர்­கள் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆயி­ரம் ரூபாயை வழங்­கி­ய­து­டன், அதை இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கு­வேன் என்று அறி­வித்­த­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காப்பி அடிக்­க­லாம், ஆனால் யாரைப் பார்த்து காப்பி அடிப்­பார்­கள்? நல்ல மதிப்­பெண்­கள் பெறும் மாண­வர்­க­ளையே பார்த்து காப்பி அடிப்­பார்­கள். தோல்­வி­ய­டை­யப் போகும் மாண­வ­ரைப் பார்த்து யாரா­வது காப்பி அடிப்­பார்­களா?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கலை­ஞர் மக­ளிர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உரி­மைத் தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் பாஸ் ஆகப்­போ­றது இல்ல. அத­னால், உங்­களை பார்த்து காப்பி அடிக்க வேண்­டிய அவ­சி­யம் யாருக்­குமே இல்லை. நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ரின் திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­க­ளாக ஒரு கோடி 31 லட்­சம் பெண்­க­ளுக்கு ‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை’ வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த முறை ஆட்சி அமைந்­த­வு­டன், அது இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக­ளிர் விடி­யல் பய­ணம், புது­மைப் பெண் திட்­டம், காலை உணவு திட்­டம் போன்ற பல திட்­டங்­களை வழங்­கி­யுள்­ளார். அடுத்த முறை ஆட்சி அமைந்­த­வு­டன், எட்­டாம் வகுப்பு வரை படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு காலை உணவு திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மானா­ம­து­ரை­யில்நிறை­வேற்­றித் தந்து இருக்­கக்­கூ­டிய திட்­டங்­கள். அரசு கலைக் கல்­லூரி, கண்­மாய்­கள் சீர­மைத்து தரப்­பட்­டி­ருக்­கி­றது. வைகை ஆற்­றின் குறுக்கே ரூ. 47 கோடி செல­வில் இரண்டு அணைக்­கட்­டு­கள் கட்­டப்­பட்டு கட்­டிக்­கு­ளம், மிள­க­னூர் மானா­ம­துரை கிரா­மம், கீழப்­ப­சளை மற்­றும் பிற கண்­மாய்­க­ளுக்கு தண்­ணீர் வழங்க வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மானா­ம­துரை நாட்­டார் கால்­வாய் திட்­டத்­திற்கு 12 கோடியே 30 இலட்­சம் ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு அந்­தத் திட்­ட­மும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. வேட்­பா­ளர் தமி­ழச்சி அவர்­க­ளுக்கு உதய சூரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் பணி­வோடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>