<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 00:29:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260404T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04042026-TRY-05" position.sequence="05" ex-ref="04042026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­தால்­தான் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு நம்­பர் – ஒன்!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">ஏன், மீண்­டும் தி.மு.கழ­கம் ஆட்சி அமைக்க வேண்­டும் எனும்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="78">பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டுசேர்க்க வேண்­டும்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">   காட்­பா­டி­யில் – கழ­கப் பொதுச் செய­லா­ளர் துரை­மு­ரு­கனை ஆத­ரித்து – </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் தேர்­தல் பரப்­புரை! </lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup297896_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காட்­பாடி,ஏப். 4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காட்­பா­டி­யில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில், துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின், மூத்த திரா­விட இயக்­கத் தலை­வர், கழ­கப் பொதுச் செய­லா­ளர் துரை­மு­ரு­கன் அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்­கும்­படி பெரும் திர­ளா­கக் கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில், வாக்­கு­கள் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``ஏன், மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி அமைக்க வேண்­டும்? மீண்­டும் நம் தலை­வர் ஏன் முத­ல­மைச்­ச­ராக உட்­கார வேண்­டும்? மீண்­டும் உங்­க­ளின் அமைச்­சர் ஏன் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வேண்­டும்? என்­கிற பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் நீங்­கள் கொண்டு சேர்க்க வேண்­டும்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­லில் இந்­தச் சிறப்­பான, அன்­பான, எழுச்­சி­யான வர­வேற்­புக்கு என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இன்­றைக்கு உங்­க­ளின் காட்­பாடி தொகு­திக்கு வருகை தந்து, நம் கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு கேட்க நம் கழ­கத் தலை­வர் அவர்­கள் என்னை அனுப்­பி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­க­ளெல்­லாம் வரு­கிற 23–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நம் கழ­கப் பொதுச் செய­லா­ளர் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று உங்­க­ளி­டம் கேட்­க­லாம் என்று வந்­தேன். ஆனால், இங்கே வந்­த­தற்­குப் பிற­கு­தான் தெரி­கி­றது, நீங்­க­ளெல்­லாம் ஏற்­க­னவே முடிவு செய்து வைத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப் பெரிய வெற்­றியை நீங்­கள் தேடித் தர வேண்­டும். இப்­ப­டித்­தான் சென்ற முறை 2021–லேயும் வந்து கேட்­டேன். 2021–ல் வெறும் 700 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­தீர்­கள். இந்த முறை குறைந்­தது 70,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­களை நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உங்­க­ளைப் பார்க்க வந்­தி­ருக்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நானும் ஒரு வேட்­பா­ளர். தலை­வர் அவர்­க­ளும், பொதுச் செய­லா­ளர் அவர்­க­ளும் எனக்­கும் ஒரு வாய்ப்பு கொடுத்­தி­ருக்­கி­றார்­கள், இந்த முறை இரண்­டா­வது வாய்ப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். மூன்று நாட்­க­ளா­கப் பிரச்­சா­ரம் செய்­து­கொண்டு இருக்­கி­றேன். என் தொகு­திக்கு நான் இன்­னும் போகவே இல்லை. என் தொகு­தி­யில் நான் ஓட்டு கேட்­கவே இல்லை. என் தொகு­திக்­குச் செல்­வ­தற்கு முன்­னால் நம் காட்­பா­டிக்கு வந்து உங்­க­ளை­யெல்­லாம் பார்த்­து­விட்­டுத்­தான் என் தொகு­திக்­குச் செல்ல வேண்­டும் என்று உங்­க­ளைப் பார்க்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏன் தெரி­யுமா? எனக்கு சீட்டு கொடுத்­த­தும், எனக்கு வாய்ப்பு கொடுத்­த­தும் பொதுச் செய­லா­ளர்­தான். கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ருக்கு இளை­ஞர் அணிச் செய­லா­ள­ராக நான் வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். உங்­களை நம்பி நான் வாக்கு கொடுத்­தி­ருக்­கி­றேன், செய்­து­மு­டிப்­பீர்­கள் அல்­லவா? குறைந்­தது 70,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் மூன்று நாட்­க­ளாக, கிட்­டத்­தட்ட 15 தொகு­தி­க­ளுக்­குச் சென்று மக்­க­ளைச் சந்­தித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு, நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த அனைத்து வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்­கும் வாக்கு சேக­ரித்­துக்­கொண்டு இருக்­கி­றேன். எங்கு போனா­லும் மிகப் பெரிய எழுச்சி. நிச்­ச­யம் இந்த முறை 200 அல்ல, 200–க்கும் அதி­க­மான தொகு­தி­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், நம் கூட்­ட­ணி­யின் வெற்றி உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. நம் தலை­வர் அவர்­க­ளும் கடந்த இரண்டு நாட்­க­ளா­கத் தமிழ்­நாடு முழுக்­கப் பிரச்­சா­ரக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்று மக்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">காட்­பாடி தொகு­திக்­குத்  திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தப் பகு­தி­யில் பல்­வேறு திட்­டங்­களை, உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், நம் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் கொண்டு வந்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சுமார் 12 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சேர்க்­காடு ஊராட்­சி­யில், அரசு கலைக்­கல்­லூரி உங்­க­ளின் அமைச்­சர் கொடுத்­தது. 14 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சேர்க்­காட்­டில் பல்­நோக்கு மருத்­து­வ­மனை உங்­க­ளின் அமைச்­சர் கொடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழிஞ்­சூர் மற்­றும் தாரா­ப­ட­வேடு ஏரி 28 கோடி ரூபாய் செல­வில் மேம்­ப­டுத்­தப்­பட்டு, சுற்­று­லாத்­த­ல­மாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">13 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சேனம்­பாக்­கத்­தில் ஒரு தடுப்­பணை. அரும்­ப­ரு­தி­யில் ஒரு தடுப்­பணை; குகை­ய­நல்­லூ­ரில் மீண்­டும் ஒரு தடுப்­பணை; பொன்னை அணைக்­கட்­டுப் புன­ர­மைப்பு, மேல்­பா­டி­யில் ஒரு தரைப்­பா­லம், 18 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பர­ம­சாத்­தில் ஒரு தடுப்­பணை. 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காட்­பாடி பிரம்­ம­பு­ரத்­தி­லி­ருந்து ரங்­கா­வ­ரம் வரைக்­கும் ஒரு புதிய புற­வ­ழிச்­சாலை. மகி­மண்­ட­லம் ஊராட்­சி­யில் தொழிற்­பேட்டை அமைக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்டு, இன்­றைக்கு அதற்கு நிலம் தேர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. மீண்­டும் நம் ஆட்சி அமைந்த உடனே அந்­தப் பணி­க­ளைத் தொடங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">காலணி உற்­பத்­தித் தொழிற்­சாலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மேட்­டுக்­கு­ளம் ஊராட்­சி­யில் உள்ள சிப்­காட்­டில் காலணி உற்­பத்­தித் தொழிற்­சாலை அமைக்­கப்­பட்டு, வேலை­வாய்ப்பு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதை­யெல்­லாம் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இது­போல பல திட்­டங்­கள் உங்­க­ளின் காட்­பாடி தொகு­திக்கு வர வேண்­டும் என்­றால், நீங்­கள் மீண்­டும் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சில கோரிக்­கை­கள் வைத்­தி­ருக்­கி­றீர்­கள். கழிஞ்­சூர் பகு­தி­யில் ஒரு சமூக நலக்­கூ­டம், மேல்­பாடி, சீக­ரா­ஜ­பு­ரம், திரு­வல்­லம் உள்­ளிட்ட ஊர்­க­ளுக்­குச் சமூக நலக்­கூ­டம், ஆரி­முத்­து­மோட்டு ஊராட்­சி­யில் கால்­நடை மருத்­து­வ­மனை,  லாலாப்­பேட்­டை­யில் மயான வசதி, கர்­ணம்­பட்டு அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு, புதிய கட்­ட­டம், சேவூர், தேன்­பள்ளி மற்­றும் கீரை­சாத்து ஊராட்­சி­யில் கால்­நடை மருத்­து­வ­மனை என்று பல கோரிக்­கை­களை வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கோரிக்­கை­கள் எல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றால் மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­தாக வேண்­டும். இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய நீங்­கள் உத­ய­நிதி வந்­தார், பேசி­னார், கூடி­னோம், கூட்­டத்தை முடித்­து­விட்டு சென்­று­விட்­டோம் என்று இருக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள், தாய்­மார்­கள், மாற்­றுக்­கட்சி, கூட்­ட­ணிக்­கட்­சித் தோழர்­க­ளென உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் இந்­தப் பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் எடுத்­துக்­கொண்டு சேர்க்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஏன், வேண்­டும் கழ­க ஆட்சி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏன், மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைக்க வேண்­டும்? மீண்­டும் நம் தலை­வர் ஏன் முத­ல­மைச்­ச­ராக உட்­கார வேண்­டும்? மீண்­டும் உங்­க­ளின் அமைச்­சர் ஏன் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வேண்­டும்? என்­கிற பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் நீங்­கள் கொண்டு சேர்க்க வேண்­டும். ஒவ்­வொரு தெரு­வா­கச் செல்ல வேண்­டும், ஒவ்­வொரு வீடா­கச் செல்ல வேண்­டும், ஒவ்­வொரு வாக்­கா­ள­ராக நீங்­கள் சந்­தித்து இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் மேற்­கொள்ள வேண்­டும். அப்­ப­டிப் பார்க்­கும்­போது நம் திட்­டங்­களை எடுத்­துச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் என்­னென்ன திட்­டங்­கள் கொடுத்­தோம்? எவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றோம்? என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்து நிறை­வேற்­றி­ யி­ருக்­கி­றோம்? நம் தேர்­தல் அறிக்­கை­யில் சொன்ன முதல் வாக்­கு­றுதி – மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம் செயல்­ப­டுத்­து­வோம் என்று சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றுப் போட்ட முதல் கையெ­ழுத்தே மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம். ஒவ்­வொரு மக­ளி­ரும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரைக்­கும் மாதம் மாதம் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்து படிக்க வேண்­டும் என்­ப­தால் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அர­சுப் பள்­ளி­யில் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் காலை­யில் பள்­ளிக்கு வந்­தார்­கள் என்­றால் முத­லில் தர­மான காலை உணவு, அதன் பிறகு தர­மான கல்வி கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அர­சுப் பள்­ளி­யில் படித்த அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் மாண­வி­க­ளுக்­கும் உயர்­கல்வி படிக்­கச் சென்­றால், அவர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் கல்வி ஊக்­கத்­தொகை 1,000 ரூபாய் நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது. 13 இலட்­சம் மாணவ, மாண­வி­கள் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">10 இலட்­சம் மடிக்­க­ணி­னி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரண்டு மாதத்­துக்கு முன்­னால் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் 10 இலட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி, ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­து­விட்­டோம். இன்­றைக்கு அ.தி.மு.க ஒரு பொய்ப் பிரச்­சா­ரத்­தைக் கையில் எடுத்­தி­ருக்­கி­றார்­கள், இந்த மடிக்­க­ணினி திட்­டம் அ.தி.மு.க. ஆட்­சி­யில் கொண்டு வரப்­பட்ட திட்­டம், அதை நாம் இன்­றைக்­குச் செயல்­ப­டுத்­து­கி­றோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். ஆமாம், அ.தி.மு.க. ஆட்­சி­யில் பள்­ளிக்­கூ­டம் படிக்­கிற குழந்­தை­க­ளுக்­குக் கொடுத்­தார்­கள். 2019–ஆண்டு, அ.தி.மு.க. ஆட்­சி­யி­லேயே அந்­தத் திட்­டத்­தைக் கைவிட்­டு­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பள்­ளிக்­கூ­டம் படிக்­கிற குழந்­தை­யை­வி­டக் கல்­லூரி படிக்­கிற பிள்­ளை­க­ளுக்கு மடிக்­க­ணினி பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று இன்­றைக்கு 10 இலட்­சம் மடிக்­க­ணி­னி­களை ஒரே மாதத்­தில் தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய அனைத்து மாணவ, மாண­வி­க­ளுக்­கும் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது நாம் சொன்ன வாக்­கு­றுதி. கடும் நிதி நெருக்­கடி இருந்­தா­லும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் சேர்ந்து தேர்­த­லைக் கார­ணங்­காட்டி எப்­ப­டி­யா­வது மூன்று மாதம் இந்­தத் திட்­டத்தை நிறுத்த வேண்­டும் என்று முயற்சி செய்­தார்­கள். நம் தலை­வர் விடு­வாரா? அந்­தச் சூழ்ச்­சியை முறி­ய­டித்து 1,000 ரூபாய் கொடுத்­ததை நிறுத்­து­கி­றீர்­கள், நான் கொடுக்­கி­றேன் என்று பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000, கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாய், ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றோம். ஒரு கோடியே 31 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்கு ஒரே தவ­ணை­யில் 5,000 ரூபாய் நம் தலை­வர் கொடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்­குத் தலை­வர் ஒரு வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். மக­ளிர் உரி­மைத் தொகை இப்­போது 1,000 ரூபாய் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம். மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வேன் என்று நம் தலை­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பல்­வேறு கட்­சி­யி­னர் தேர்­தல் வாக்­கு­றுதி கொடுப்­பார்­கள், தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­வார்­கள். தி.மு.க. மட்­டும்­தான் நம் தலை­வர்­தான் நிச்­ச­யம் சொன்­ன­தைச் செய்து காட்­டக்­கூ­டிய அரசு நம் திரா­விட மாடல் அரசு என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டம் இப்­போது ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம். மீண்­டும் நம் தி.மு.க. ஆட்சி அமைந்­தது என்­றால், எட்­டாம் வகுப்பு வரைக்­கும் காலை உண­வுத் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­ப­டும். புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் கல்வி ஊக்­கத் தொகை இன்­றைக்கு 13 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம். அது 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,500 ஆக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முதி­யோர் உத­வித் தொகை 1,200 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் ஆக்­கு­கி­றோம் என்று நம் முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். கலை­ஞர் கனவு இல்­லம் அடுத்த ஐந்து வரு­டத்­தில் 10 இலட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் வீடு­கள் கட்­டப்­பட்டு வீடு இல்­லா­த­வர்­க­ளுக்கு வீடு கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பிணை­யும் இல்­லா­மல் 5 இலட்­சம் வரைக்­கும் கடன் கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">8,000 ரூபாய் கூப்­பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி அமைந்த உடனே ஒவ்­வொரு மக­ளி­ரின் கைக­ளி­லும் நம் முத­ல­மைச்­சர் 8,000 ரூபாய் மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வார். அந்­தக் கூப்­பனை வைத்­துக்­கொண்டு, நீங்­கள் வீட்­டுக்­குத் தேவை­யான மின்­சா­தன பொருட்­களை வாங்­கிக்­கொள்­ள­லாம். டிவி, பிரிட்ஜ், குக்­கர், மைக்­ரோ­வேவ் ஓவன், மிக்ஸி, கிரைண்­டர் உங்­க­ளுக்கு எது வேண்­டுமோ அதை நீங்­களே வாங்­கிக்­கொள்­ள­லாம், உங்­க­ளின் இஷ்­டம். இதெல்­லாம் நடக்க வேண்­டும் என்­றால் வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் நம் திரா­விட மாடல் அரசு அமைய வேண்­டும். அதற்கு நாம் அடுத்த 22 நாட்­கள் இந்­தப் பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி அமைந்­தால் என்­னென்ன செய்­யப்­போ­கி­றோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம். இந்த ஐந்து வரு­டத்­தில் என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்­ப­தை­யும் சொன்­னேன். இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்­த­தால்­தான் இன்­றைக்கு இந்­தி­யா­வி­லேயே நம் தமிழ்­நாடு, இரட்டை இலக்க வளர்ச்­சி­யில் 11.1% வளர்ச்­சி­யு­டன் இன்­றைக்கு நம்­பர் ஒன் மாநி­ல­மாக நம் தமிழ்­நாடு இடம் பிடித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு சாத­னை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். இதற்­கெல்­லாம் ஒன்­றிய அரசு நமக்கு ஏதா­வது துணை­யாக நின்­றி­ருக்­கி­றதா? மோடி  தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது திட்­டம் கொடுத்­தி­ருக்­கி­றாரா? சென்ற பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­ட­மும் இல்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால் தமிழ்­நாடு என்­கிற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. ஆனால், அவர்­க­ளு­டன் இன்­றைக்கு அடிமை அ.தி.மு.க கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பயப்­ப­டாத அனு­ப­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி நேற்று என்­னைப்­பற்றி பேசி­யி­ருக்­கி­றார். நான் அவரை ரொம்­பத் தகாத வார்த்­தை­யில் பேசி­விட்­டேன் என்­கி­றார். நான் என்ன சொன்­னேன்? அப்­படி ஒன்­றும் தகாத வார்த்தை கிடை­யாது. உண்­மை­யைத்­தான் சொன்­னேன். நாமெல்­லாம் முரட்டு பக்­தர்­க­ளைப் பார்த்­தி­ருப்­போம், முரட்­டுத் தொண்­டர்­க­ளைப் பார்த்­தி­ருப்­போம். இன்­றைக்கு இந்­தி­யாவே ஒரு முரட்டு அடி­மை­யைப் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றது என்று சொன்­னேன். இது தகாத வார்த்­தையா அம்மா? முரட்டு அடிமை என்­பது கெட்ட வார்த்­தையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவர் சொல்­கி­றார் உத­ய­நி­தி­யின் வயது என் அர­சி­யல் அனு­ப­வம் என்­கி­றார். ஆமாம், அர­சி­ய­லில் உங்­க­ளை­விட எனக்­குக் குறை­வான அனு­ப­வம்­தான். ஆனால், என்ன அனு­ப­வம் இருக்­கி­றது? எனக்கு எந்த உருட்­டல் மிரட்­ட­லுக்­கும் பயப்­ப­டாத அனு­ப­வம் இருக்­கி­றது. யாரி­ட­மும் குறிப்­பாக, சங்­கி­க­ளி­டம் பயப்­ப­டாத அனு­ப­வம் இருக்­கி­றது. என்­றைக்­குமே சுய­ம­ரி­யா­தை­யோடு இருக்­கக்­கூ­டிய அனு­ப­வம் இருக்­கி­றது. தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளைக் காப்­ப­தற்கு என்­றைக்­குமே மக்­க­ளு­டன் நின்று போராட்­டம் செய்­கிற அந்த அனு­ப­வம் இருக்­கி­றது. எனக்கு இந்த அனு­ப­வம் எல்­லாம் இருக்­கி­றது. நான் இன்­றைக்கு எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளைப் பார்த்­துக் கேட்­கி­றேன். உங்­க­ளுக்கு என்­னென்ன அனு­ப­வம் இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மறைந்த முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா அம்மா இருக்­கிற வரைக்­கும் அந்த அம்­மா­வின் கால். அந்த அம்மா இறந்த பிறகு, சசி­கலா அம்மா கால். சசி­கலா அம்மா சிறைக்­குச் சென்­ற­வு­டன் ஓ.பி.எஸ் கால். ஓ.பி.எஸ். அவர்­களை அனுப்பி வைத்­து­விட்டு பிறகு, டி.டி.வி. கால். இன்­றைக்­குக் கடை­சி­யாக டெல்­லிக்­குச் சென்று மோடி மற்­றும் அமித்ஷா காலை­யும் பிடித்­துக்­கொண்டு இருக்­கிற அனு­ப­வம்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு இருக்­கி­றது. யார் காலில் எல்­லாம் விழுந்­தாரோ அவர்­கள் அத்­தனை பேர் காலை­யும் வாரி விட்­டி­ருக்­கிற அனு­ப­வம் அவ­ருக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">டெல்­லிக்கு நான்கு கார் மாறி மாறிச் சென்று திருட்­டுத்­த­ன­மாக அமித்­ஷா­வைப் பார்த்­து­விட்டு வந்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. அமித்ஷா வீட்­டுக்­குள் சென்­று­விட்டு வெளியே வந்து முகத்தை மூடிக்­கொண்டு திருட்­டுத்­த­ன­மாக ஓடிப்­போன அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் அனைத்­தை­யும் டெல்­லிக்கு அடகு வைத்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. இந்த அனு­ப­வம் எல்­லாம் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு இருக்­கி­றது. பல தோல்­வி­களை அவர் பார்த்­து­விட்­டார், தமிழ்­நாட்டு மக்­கள் பல தோல்­வி­க­ளைக் அவ­ருக்கு கொடுத்­து­விட்­டீர்­கள். இந்த முறை 10 தோல்வி பழ­னி­சா­மியை மொத்­தத் தோல்வி பழ­னி­சா­மி­யாக்கி, வீட்­டுக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார் இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் தமிழ்­நாடு அணிக்­கும் டெல்லி அணிக்­கு­மான தேர்­தல். ஏன், டெல்லி அணி என்று சொல்­கி­றோம்? மோடி­யும் அமித்­ஷா­வும் அந்­தக் கூட்­ட­ணி­யில் இருக்­கி­றார்­கள். மீண்­டும் பி.ஜே.பி–யை தமிழ்­நாட்­டுக்­குள் அனு­ம­திக்­கக் கூடாது. அ.தி.மு.க–வுக்கு விழு­கிற ஒவ்­வொரு வாக்­கும் பி.ஜே.பி–க்கு விழு­கிற வாக்கு என்­பதை நீங்­கள் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லுங்­கள். இன்­றைக்கு பி.ஜே.பி ஏ டீம், பி டீம், சி டீம் என்று பல டீம்­களை இறக்­கி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால், எத்­தனை டீம் வந்­தா­லும் தமிழ்­நாட்­டில் வெற்­றி­பெ­றப்­போ­வது நம் தி.மு.க டீம்­தான். நாம்­தான் மீண்­டும் சாம்­பி­யன் ஆகப்­போ­கி­றோம். அதைச் செய்து காட்ட வேண்­டிய கடமை இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் கழ­கத்­தின் பொதுச் செய­லா­ள­ருக்கு வாக்­க­ளித்து குறைந்­தது 70,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு, இந்­தச் சிறப்­பான வர­வேற்­ப­ளித்த உங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைச் சொல்லி, ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்கேற்றவர்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கதிர் ஆனந்த், தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் நந்­த­கு­மார், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜெகத்­ரட்­ச­கன், மாவட்­டப் பொரு­ளா­ளர் நர­சிம்­மன், மாந­க­ரச் செய­லா­ளர் கார்த்­தி­கே­யன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் தயா­நிதி, லோக­நா­தன், ஒன்­றிய, பகுதி, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் தணி­கா­ச­லம், சர­வ­ணன், ரவி, கரு­ணா­க­ரன், ஏ.கே.முரு­கன், வன்­னி­ய­ராஜா, சுனில்­கு­மார், பர­ம­சி­வம், முரு­கப்­பெ­ரு­மான், நேரு, பர­ம­சி­வம், ஒன்­றிய குழுத் தலை­வர் வேல்­மு­ரு­கன், மண்­டல குழுத் தலை­வர் புஷ்­ப­லதா வன்­னி­ய­ராஜா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் டிட்டோ சர­வ­ணன், மாண­வர் அணி அமைப்­பா­ளர் சீனி­வா­சன், மாந­கர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ரவி­கு­மார்,துணை அமைப்­பா­ளர்­கள் சத்­தி­ய­மூர்த்தி, ராஜ்­க­மல், பிரபு, எழில்­கு­மார், சர­வ­ணன், மருத்­து­வர் தூய­வன், கே.சி.சுரேஷ், பன்­னீர், இளை­ஞ­ரணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள்,           மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யைச் சேர்ந்த திரா­வி­டர் கழ­கம், இந்­திய தேசிய காங்­கி­ரஸ், இந்­திய கம்­யூ­னிஸ்ட், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட், தேசிய முற்­போக்கு திரா­வி­டர் கழ­கம், மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி, இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, கொங்­கு­நாடு மக்­கள் தேசிய கட்சி,மக்­கள் நீதி மய்­யம், மனி­த­நேய ஜன­நா­யக கட்சி, எஸ்.டி.பி.ஐ, ஆதி தமி­ழர் பேரவை மற்­றும் அனைத்து தோழமை கட்­சி­யைச் சேர்ந்த பெரி­யோர்­கள், தாய்­மார்­கள், இளை­ஞர்­கள், நெச­வா­ளர்­கள், விவ­சா­யப் பெரு­மக்­கள், வர்த்­த­கப் பெரு­மக்­கள் மற்­றும் பலர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 1.4.2026 அன்று வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியின்</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர், கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>