<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 04:01:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260404T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04042026-TRY-07" position.sequence="07" ex-ref="04042026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="55">திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு தாரீர்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">கோவையில் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை... </lang>
	<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="47">6–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">தமிழ்நாடு அணியா! டெல்லி அணியா? தமிழ்நாட்டைக் காக்க </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!   ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மொத்தமாகப் புறக்கணித்தனர்!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup293138_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="11_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை விளாங்­கு­றிச்­சி­யில் எல்­காட் தக­வல் தொழில்­நுட்ப மையம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நவீ­ன­ம­ய­மாக்­க­பட்­டுத் தக­த­க­வென்று ஜொலிக்­கும் உக்­க­டம் பேருந்து நிலை­யம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விசைத்­தறி மற்­றும் சிறு தொழில்­க­ளுக்கு மின் கட்­ட­ணம் குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விசைத்­த­றிக்கு ஆயி­ரம் யூனிட் இல­வச மின்­சா­ரம் வழங்­கப்­ப­டு­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை வெள்­ள­லூர் பகு­தி­க­ளில் தொல்­லி­யல் ஆய்­வு­கள் நடக்க இருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை குறிச்சி தொழிற்­பேட்­டை­யில் தங்க நகைப் பூங்கா அமைக்க அடிக்­கல் நாட்­டப்­பட்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரூ.300 கோடி­யில் பெரி­யார் அறி­வு­ல­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது எல்­லா­வற்­றிற்­கும் மேல், கோவை காந்­தி­பு­ரத்­தில், 300 கோடி ரூபா­யில் “பெரி­யார் அறி­வு­ல­கம்” கட்­டு­மா­னப் பணி­கள் முடிந்து, தேர்­தல் முடி­வு­கள் வந்­த­தற்­குப் பிறகு உங்­க­ளால் நான் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று விரை­வில் திறந்து வைப்­பேன். முதல் நிகழ்ச்­சி­யாக அந்த நிகழ்ச்­சி­தான் இருக்­கும் என்று பெரு­மை­யோடு தெரி­விக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை­யில் திரா­விட மாட­லின் இந்­தச் சாத­னைச் சரித்­தி­ரம் தொடர, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு உங்­கள் வாக்­கு­களை நீங்­கள் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021 தேர்­த­லின்­போது கொடுத்த வாக்­கு­று­தி­களை மட்­டு­மல்ல, கொடுக்­காத பல திட்­டங்­க­ளை­யும் நிறை­வேற்­றிக் காட்­டி­விட்டு உங்­கள் முன்­னால் இன்­றைக்கு நான் கம்­பீ­ர­மான நின்று கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­க­ளின் ஆட்­சி­யில் செய்த சாத­னை­களை நான் சொன்­ன­து­போன்று பட்­டி­ய­லிட்­டுச் சொல்ல முடி­யுமா? பத்­தாண்டு கால ஆட்­சி­யில், மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­னார்­களா? அது­வும் இல்லை. 2016 தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­னது எதை­யும் அவர் செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த லட்­ச­ணத்­தில் அ.தி.மு.க.வைப் பார்த்து நாம் தேர்­தல் அறிக்­கையை காப்பி அடித்­து­விட்­டோம் என்று வாய்­கூ­சா­மல் சொல்­கி­றார்  பழ­னி­சாமி அவர்­கள். தி.மு.க. செயல்­ப­டுத்தி வரும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம், கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணம் என்று பழ­னி­சா­மி­தான் நம்­மு­டைய திட்­டங்­களை ஒன்று விடா­மல் காப்பி அடித்து அறிக்­கை­யாக வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மி­யும் அவ­ரது ஓனர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மோடி­யும் செய்த சாத­னை­கள் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத்­தாண்டு ஆட்­சி­யில் இருந்­தும், அ.தி.மு.க. ஆட்­சி­யின் சாத­னை­கள், திட்­டங்­கள் என்று பட்­டி­யல் போட அவ­ரி­டம் எது­வும் இல்லை. இந்­தக் கஷ்­டம் பழ­னி­சா­மியை விட, அவ­ரது ஓன­ரான பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்கு இன்­னும் அதி­கம்! அவ­ரா­லும் தமிழ்­நாட்­டிற்­குச் செய்த சிறப்­புத் திட்­டம் என்று எதை­யும் சொல்ல முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெரும்­பா­லும் வெளி­நா­டு­க­ளி­லேயே வாழும் நம்­மு­டைய பிர­த­மர் மோடி அவர்­கள், தேர்­தல் சீசன் கார­ணத்­தி­னால் இப்­போது அடிக்­கடி தமிழ்­நாடு வரு­கி­றார். இப்­போது கூட நான்­காம் தேதி சென்­னை­யில் ரோடு ஷோ பண்­ணப் போகி­றா­ராம். இத­னால் யார் மகிழ்ச்சி அடை­கி­றார்­களோ இல்­லையோ, நாங்­கள் மகிழ்ச்சி அடை­வோம். தி.மு.க.காரர்­க­ளுக்கு மிக­வும் குஷி! ஏன் என்று கேட்­கி­றீர்­களா? சென்ற முறை 2024 தேர்­த­லின்­போது இப்­ப­டி­தான் சென்­னை­யில் அவர் ரோடு ஷோ பண்­ணார்! நாம் நாற்­ப­துக்கு நாற்­பது என்று முழு­வெற்றி பெற்­றோம்! இப்­போ­தும் அடித்து சொல்­கி­றேன்... அவர் வந்­தால் நம்­மு­டைய 200 தொகுதி இலக்கை அடை­வது உறு­தி­யா­கி­வி­டும். மோடி அவர்­க­ளும், அமித்ஷா அவர்­க­ளும் எத்­தனை முறை இங்கு வரு­கி­றார்­களோ, நம்­மு­டைய வெற்­றி­யின் மார்­ஜி­னும் கூடிக்­கொண்டே போகும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய பிர­சா­ரப் பீரங்­கி­யாக இருந்த ஆளு­நர் ரவி அவர்­களை திடீ­ரென்று வெளியே அனுப்­பி­விட்­டார்­கள். இவர்­க­ளா­வது வந்து நமக்கு உத­வு­கி­றார்­களே... அது­வரை நமக்கு மகிழ்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வைத் தமிழ்­நாடு ஏன் இந்த அள­விற்கு எதிர்க்­கி­றது என்­றால், தமிழை, தமி­ழரை, தமிழ்­நாட்டை பா.ஜ.க. வஞ்­சிக்­கி­றது, இன்­னும் வெளிப்­ப­டை­யா­கச் சொன்­னால் அவ­மா­னப்­ப­டுத்­து­கி­றது. தமிழ்­நாட்­டிற்கு வந்­தால் தமிழ் பாசத்­தில் நம்­மையே மிஞ்­சு­வது போன்று நடிக்­கி­றார்­கள் இல்­லையா? இதுவே பீகார் மாநி­லத்­தில் தேர்­தல் நடந்­த­போது பிர­த­மர் மோடி என்ன பேசி­னார்? ‘‘தமிழ்­நாட்­டில் பீகார் மக்­க­ளைத் தொடர்ந்து துன்­பு­றுத்­து­கி­றார்­கள்” என்று பொய்­யைப் பேசி­னார். அவர் வகிக்­கும் உயர்ந்த பத­விக்­குத் தகு­தி­யான பேச்சா இது? இப்­போது தமிழ்­நாட்­டிற்கு நீங்­கள் வாக்கு கேட்டு வரப்­போ­கி­றீர்­கள். பீகா­ரில் பேசிய அந்த வார்த்­தையை தமிழ்­நாட்­டில் தைரி­யம் இருந்­தால் பிர­த­மர் மோடி அவர்­கள் சொல்­வாரா? இதைத்­தான் நான் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பல மொழி­பே­சும் மக்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் அமை­தி­யாக வாழ்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் பல்­வேறு இனம், மொழி, மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் அமை­தி­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். நிம்­ம­தி­யாக இருக்­கி­றார்­கள். இப்­படி வந்­தாரை வாழ வைக்­கும் நம்­மைப் பார்த்து அபாண்­ட­மா­கப் பழி போட்­ட­வர்­தான் பிர­த­மர் மோடி அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றி­யத்­தில் ஒரு கல்வி அமைச்­சர் இருக்­கி­றார்! யார்? மிஸ்­டர் தர்­மேந்­திர பிர­தான் அவர்­கள்! அவர் இதை­விட மோசம்! நாடா­ளு­மன்­றத்­தி­லேயே பேசி­னார். ‘தமி­ழர்­கள் நாக­ரி­க­மற்­ற­வர்­கள்’ என்று பேசி­னார். நாம் எதிர்த்து குரல் கொடுத்த பிற­கு­தான், பணிந்து மன்­னிப்பு கேட்­டார். ஒடிசா மாநி­லத்­தி­லும் தமி­ழர்­களை எப்­ப­டி­யெல்­லாம் அசிங்­கப்­ப­டுத்­தி­னார்­கள்! மறக்க முடி­யுமா? நம்மை கேவ­லப்­ப­டுத்தி விளம்­ப­ரங்­கள் எல்­லாம் எடுத்து வெளி­யிட்­டார்­கள். அதை­விட கொடுமை என்ன தெரி­யுமா? “பூரி ஜெகந்­நா­தர் கோயி­லில் இருக்க வேண்­டிய கரு­வூ­லச் சாவி தமிழ்­நாட்­டிற்­குப் போய்­விட்­டது’’ என்று சொல்லி தமி­ழர்­க­ளைத் திரு­டர்­க­ளா­கச் சித்­த­ரித்­துப் பேசி­னார். குடி­ய­ரசு தின அணி­வ­குப்­பில் மருது சகோ­த­ரர்­கள், வேலு­நாச்­சி­யார், வ.உ.சி., பார­தி­யார் ஆகி­யோ­ரின் உரு­வங்­கள் இடம்­பெற்ற தமிழ்­நாடு அர­சின் அலங்­கார ஊர்­திக்கு இட­மில்லை என்று மறுத்­தார்­கள். இத­னால்­தான் தமிழ்­நாட்­டி­லும் உங்­க­ளுக்கு இட­மில்லை என்று எங்­கள் மக்­கள் சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் இருக்­கி­றது... கர்­நா­ட­கத்­தைச் சேர்ந்த ஒன்­றிய அமைச்­சர் ஷோபா அவர்­கள், “தமிழ்­நாட்­டில் இருந்து வந்து கர்­நா­ட­கா­வில் வெடி­குண்டு வைக்­கி­றார்­கள்” என்று பேசி, பிரச்­சினை ஆன­பி­றகு மன்­னிப்பு கேட்­டாரா, இல்­லையா? இதெல்­லாம்­தான் பா.ஜ.க.வின் உண்­மை­யான குணம்! தமிழ் வெறுப்­பில் ஊறிப் போன குணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கோவைக்­கும் – மது­ரைக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மெட்ரோ ரயில் திட்­டம் முடக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை, மது­ரைக்­கான மெட்ரோ ரயில் திட்­டங்­க­ளைக் கூட நிரா­க­ரித்­தி­ருக்­கும் அர­சு­தான், இன்­றைய ஒன்­றிய பாஜக அரசு! 20 இலட்­சம் மக்­கள் தொகை இல்லை என்று சொல்லி இருக்­கி­றார்­கள். 2011–ஆம் ஆண்டு மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்பை வைத்து, அப்­படி சொல்­கி­றார்­கள். இப்­போது நடப்­பது 2026. மக்­கள் தொகை இப்­போது வெகு­வாக கூடி இருக்­கும். இன்­னும் சொன்­னால், இந்­தத் திட்­டத்­திற்­குப் பணம் ஒதுக்கி, அதை நிறை­வேற்றி முடிக்­கும்­போது 2035–ஆம் ஆண்டே ஆகி­யி­ருக்­கும். அப்­போது கோவை, மது­ரை­யின் மக்­கள் தொகை இவர்­கள் சொல்­லும் 20 இலட்­சத்தை எல்­லாம் தாண்டி இருக்­கும். இதெல்­லாம் அவர்­க­ளுக்­குத் தெரி­யாது என்று நினைக்­கா­தீர்­கள். நன்­றா­கத் தெரி­யும்! தெரிந்­தே­தான் கோவைக்­கும், மது­ரைக்­கும் மெட்ரோ ரயில் திட்­டம் கிடை­யாது என்று பா.ஜ.க. மறுக்­கி­றது. ஆளே இல்­லாத கடை­யில் ’டீ’ ஆற்­று­வது மாதிரி ஆக்­ரா­வில் மெட்ரோ விட்­டி­ருக்­கி­றது பா.ஜ.க.! ஆக்ரா மக்­கள் தொகை 16 இலட்­சம்­தான். ஆனால், அங்கு மெட்­ரோ­வுக்கு அனு­ம­திக்­கி­றார்­கள். இதே­போன்­று­தான் பாட்னா, போபால் ஆகிய நக­ரங்­க­ளி­லும் அனு­மதி தந்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால், கோவைக்­கும், மது­ரைக்­கும் மறுக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன? கார­ணம் என்ன? இந்த இரண்டு நக­ர­மும் தமிழ்­நாட்­டில் இருக்­கிற கார­ணத்­தி­னால்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைப் பார்த்­தால் பா.ஜ.க.வுக்கு எப்­படி தெரி­கி­றது? பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளிக்­கா­தது என்ன பாவச் செயலா? கோவை­யைக் கைப்­பற்ற வேண்­டும் என்று பா.ஜ.க. துடிக்­கி­றதே! கோவை மக்­க­ளுக்கு இப்­படி அநீதி இழைத்­து­விட்டு, எந்த முகத்­தோடு நீங்­கள் கோவைக்கு வரு­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் நேரத்­தில் மட்­டும் இவர்­க­ளுக்­குத் தமிழ்­நாடு நினை­விற்கு வரும். ஒன்­றிய பட்­ஜெட் தயா­ரிக்­கும்­போது தமிழ்­நாட்டை மொத்­த­மாக மறந்­து­வி­டு­வார்­கள். இயற்­கைப் பேரி­ட­ருக்கு நிவா­ரண நிதி தரும்­போது தமிழ்­நாடு நினை­விற்கு வராது. இப்­ப­டி­யெல்­லாம் நீங்­கள் தமிழ்­நாட்­டைப் பழி­வாங்­கும் கார­ணத்­தி­னால்­தான் எங்­கள் மக்­க­ளுக்­கும் வாக்­குச் சாவ­டிக்­குச் போகும்­போது, பா.ஜ.க. நினை­விற்கு வராது. இனி­யும் வரக் கூடாது! நீங்­கள் என்­ன­தான் திட்­டம்­போட்டு எங்­கள் வளர்ச்­சி­யைத் தடுத்­தா­லும், என் மக்­க­ளுக்­கான திட்­டங்­களை இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் கொடுத்­துக் கொண்டே இருப்­பேன் என்று நம்­மு­டைய திரா­விட மாடல் சாத­னை­களை படைத்­துக் கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் அர­சின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">செயல் திட்­டங்­கள் இதோ!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவற்­றின் தொடர்ச்­சி­யாக, அடுத்த 5 ஆண்­டு­க­ளில், திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் என்­னென்ன செய்­யப் போகி­றோம் என்று தேர்­தல் அறிக்கை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். இந்­தத் தேர்­த­லின் சூப்­பர் ஸ்டார் தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­தான்! அந்த அறி­விப்­பு­களை நீங்­கள் எல்­லாம் பாத்­தீர்­களா? 2030–ஆம் ஆண்­டுக்­குள் தமிழ்­நாட்டை மொத்­த­மாக எப்­படி மாற்­றி­ய­மைக்­கப் போகி­றோம் என்­ப­தற்­கான, தெளி­வான செயல்­திட்ட அறிக்­கை­யாக தி.மு.க.வின் தேர்­தல் அறிக்கை அமைந்­தி­ருக்­கி­றது. நாம் கவர் பண்­ணாத செக்­டாரே இல்லை! ஹைலைட்­டா­கப் பெரும் வர­வேற்பை பெற்­றி­ருக்­கும் சில வாக்­கு­று­தி­களை மட்­டும் நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­விற்கே மாட­லாக இருக்­கும் மக­ளிர் உரி­மைத்­தொகை இனி மாதம் ஆயி­ரம் ரூபாய் இல்லை, மாதம் 2 ஆயி­ரம் ரூபாய்! எல்­லோ­ருக்­கும் மகிழ்ச்­சி­தானே? அதற்­கான டிரெ­யி­லர்­தான் கோடைக்­கால சிறப்பு நிதி சேர்த்து, அண்­மை­யில் கொடுத்த 5 ஆயி­ரம் ரூபாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, புது­மைப்­பெண், தமிழ்ப் புதல்­வன் திட்­டத்­தில் கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு இப்­போது மாதம்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்கி வரு­கி­றோம். இனி அதை ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, காலை உண­வுத் திட்­டத்தை 8–ஆம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப் போகி­றோம்! ஏற்­கெ­னவே 19 லட்­சம் குழந்­தை­கள் சாப்­பி­டு­கி­றார்­கள். இன்­னும் கூடு­த­லாக, 15 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு சூடான சுவை­யான உணவு பள்­ளிக்­கூ­டத்­தி­லேயே கிடைக்­கப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றிற்­கும் மேல், இல்­லத்­த­ர­சி­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் மகிழ்ச்சி அடை­வது போன்று ஒரு அல்­டி­மேட் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். அது என்ன? எட்­டா­யி­ரம் ரூபாய் கூப்­பன்! எதற்­கான கூப்­பன்? இல்­லத்­த­ர­சி­க­ளான நீங்­கள் உங்­க­ளுக்­குத் தேவை­யான வீட்டு உப­யோக பொருளை, உங்­கள் ஊரில், உங்­க­ளுக்கு விருப்­ப­மான கடை­யில், உங்­க­ளுக்கு பிடித்த மாதிரி வாங்­கிக் கொள்­வ­தற்­கான கூப்­பன்! புது பொருளா? பழைய பொருளை கொடுத்­து­விட்டு எக்ஸ்­சேஞ்சா? எல்­லாமே உங்­கள் சாய்ஸ்­தான்! ஒரு புடவை கடைக்­குச் சென்­றால், கலர் நன்­றாக இருக்­கி­றதா? இந்த கலர் நமக்கு செட் ஆகுமா? இது சாயம் போகுமா? இதன் கலர் மங்­கி­டுமா? இதெல்­லாம் பார்ப்­பீர்­கள். ஏன், கடைக்­கா­ரர் போட்டு வைத்­தி­ருக்­கும் மெர்­குரி லைட் முன் பார்த்து, தொட்­டுப் பார்த்து, தட­விப் பார்த்து, இது சில்க்–ஆ? நைலக்சா? என்று கேள்­வி­யெல்­லாம் கேட்டு வாங்­கு­வீர்­கள். இதெல்­லாம் எப்­படி உனக்கு அனு­ப­வம் என்று கேட்­டு­வி­டா­தீர்­கள்! இயல்­பைச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இல்­லத்­த­ரசி திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மியை புலம்ப வைக்­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, அவ்­வாறு ஒரு புடவை வாங்­கு­வது போன்று இது உங்­கள் சாய்ஸ்­தான். வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­­வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்­தப் பொரு­ளை­யும் நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம். இன்­றைக்­குத் தமிழ்­நாடு முழு­வ­தும் இந்­தத் திட்­டத்­தைப் பற்­றி­தான் அனை­வ­ரும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாம் ஏற்­கெ­னவே செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­க­ளுக்­குப் பெயரை மட்­டும் மாற்றி, இன்­றைக்கு அ.தி.மு.க.வின் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்ட எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி அவர்­கள் கூட, “இன்­னும் சில நாள் பொறுத்­தி­ருந்து பார்த்து அறி­வித்­தி­ருக்­க­லாமே” என்று இப்­போது புலம்­பிக் கொண்­டி­ருப்­பார். அந்த அள­விற்கு நம்­மு­டைய ‘இல்­லத்­த­ரசி’ திட்­டம் அனைத்து இல்­லத்­திற்­கும் சென்று சேர்ந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, உல­கிற்கே உணவு அளிக்­கும் உழ­வர்­களை மகிழ்­விக்க ஒரு மாபெ­ரும் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். இல­வச மின்­சா­ரம் பெறும் 20 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு, எந்த வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன மின்­சா­ரப் பம்பு செட்­டு­கள் வழங்­கப்­ப­டும். எல்­லோ­ரும் பழைய பம்பு செட்டு வைத்­தி­ருப்­பீர்­கள். அவை அடிக்­கடி ரிப்­பேர் ஆகும். அத­னால் அவற்றை நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் அரசே இனி வாங்­கித் தரும். இத­னால் விவ­சா­யி­கள் மட்­டு­மல்ல, கோவை­யில் நலிந்­தி­ருக்­கும் மோட்­டார் பம்ப் தயா­ரிக்­கும் தொழி­லும் சிறக்­கப் போகி­றது. இந்­தக் கூட்­டத்­திற்கு வரு­வ­தற்கு முன்பே, இந்­திய பம்பு உற்­பத்­தி­யா­ளர் சங்­கத்­தி­லி­ருந்து எனக்கு நன்றி சொல்­லி­விட்­டுச் சென்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 
5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை இனி மாதம் 
2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி 
வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக்­குழு சகோ­த­ரி­கள் நிறைய பேர் இங்கு வந்­தி­ருப்­பீர்­கள். உங்­களை எல்­லாம் பிசி­னஸ்–­­வு­ம­னாக முன்­னேற்­றும் வகை­யில் ஷ்யூரிட்டி எது­வும் இல்­லா­ம­லேயே, 5 இலட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் வங்­கிக் கட­னு­தவி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி படிக்­கும் 35 இலட்­சம் மாண­வர்­க­ளுக்­கும் அடுத்த 5 ஆண்­டு­க­ளுக்­குள் லேப்­டாப் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனைத்­துச் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் முதல்­வர் படைப்­ப­கங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாவட்ட மற்­றும் வட்ட அள­வி­லான அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் டயா­லி­சிஸ் சிகிச்­சைக்­கான கரு­வி­கள் இரண்டு மடங்­காக்­கப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆயி­ரம் குழந்­தை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">காப்­ப­கங்­கள் உரு­வாக்­கப்­ப­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் முதல்­வன் 2.0 திட்­டத்­தை­யும் அறி­வித்­தி­ருக்­கி­றேன். இதன் மூலம், உயர்­கல்வி முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு, ஆயி­ரத்து 500 ரூபாய் மாத உத­வித்­தொ­கை­யும் கொடுத்து, வேலை­வாய்ப்­பிற்­காக 6 மாதம் திறன் பயிற்­சி­யும் கொடுக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில், பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்­கும் வகை­யில், ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­களை நாங்­கள் உரு­வாக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழில் வளர்ச்­சி­யில் சிறந்து விளங்­கும் மேற்கு மாவட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்சி திட்­டம் உரு­வாக்­கப்­ப­டும். இதை மிகப்­பெ­ரிய புரட்­சி­க­ரத் திட்­ட­மாக நான் பார்க்­கி­றேன். இது செயல்­பாட்டு வரும்­போது நீங்­க­ளும் அதை நன்­றாக உணர்­வீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, உங்க கனவ சொல்­லுங்க திட்­டம் தொடக்க விழா நிகழ்ச்­சி­யில், ஒரு சகோ­தரி மேடை ஏறி வந்து என்­னி­டம் மிக உரி­மை­யாக ஒரு கோரிக்கை வைத்­தார்­கள். “BC, MBC வகுப்­பு­க­ளைச் சேர்ந்த மக­ளி­ருக்கு கட­னு­தவி வழங்­கும் திட்­டம் வேண்­டும்” என்று கோரிக்கை வைத்­தார்­கள். அதற்­காக, TABCEDCO அமைப்பு ஏற்­க­னவே செயல்­பட்டு வந்­தா­லும், திரா­விட மாடல் 2.0–வில் அதை இன்­னும் உயர்த்தி, பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர் ஆகி­யோர், தொழில் தொடங்க கடன் பெறும் உச்­ச­வ­ரம்பு 30 இலட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும் என்று வாக்­கு­றுதி தந்­தி­ருக்­கி­றேன். TAMCO மூலம் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் இதே போன்ற திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­க­ளின் பாது­காப்­பிற்­காக அனைத்து நக­ரங்­க­ளுக்­கும் ‘பிங்க் பேட்­ரால்’ வாக­னங்­கள் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அடுத்த ஐந்து ஆண்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">10 லட்­சம் வீடு­கள் ஒதுக்­கீடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழு பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்­கிக் கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக, வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முக்­கி­ய­மான அனைத்து அரசு சேவை­க­ளை­யும் ஒரே செய­லி­யில், அதா­வது ஒரு ‘Super App’–இல் பெற வழி­வகை செய்­யப்­ப­டும். இப்­படி இன்­னும் பல வாக்­கு­று­தி­களை கொண்ட தேர்­தல் அறிக்­கையை நான் வெளி­யிட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஏற்­கெ­னவே சொன்­னது போன்று இந்த அறிக்­கை­தான் 2026 தேர்­தல் களத்­தின் சூப்­பர் ஸ்டார்! நாங்­கள் சொன்­னால் செய்­வோம். செய்­வ­தைத்­தான் சொல்­வோம். கலை­ஞ­ரின் மக­னான நான் சொன்ன வாக்­கு­று­தி­களை மறக்­க­வும் மாட்­டேன், மறுக்­க­வும் மாட்­டேன். நாங்­கள் ஒரு பிரா­மிஸ் பண்­ணால், கண்­டிப்­பாக அதை டெலி­வர் செய்­தி­டு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை மக்­க­ளான நீங்­கள் இந்த முறை பத்­துக்­குப் பத்து வெற்­றியை தி.மு.க.வுக்­கும் – மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளுக்­கும் வழங்க வேண்­டும்! நீங்­கள் வழங்­கும் வாக்கு என்­பது, ஒரு கூட்­ட­ணிக்­காக வழங்­கும் வாக்கு மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­காக வழங்­கும் வாக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் நம்­பர் ஒன்! ஆடை­கள், கால­ணி­கள், மின்­ன­ணுப் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில் நம்­பர் ஒன்! இப்­படி இந்­திய அள­வில் சாதித்­து­விட்டு நாங்­கள் வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், கல­வ­ரம் செய்­தாலே வென்­று­வி­ட­லாம் என்று நினைக்­கும் கட்­சிக்கு தமிழ்­நாடு தக்க பதி­ல­டியை தந்­தாக வேண்­டும்! தரு­வீர்­கள்­தானே? உறு­தி­யாக? நிச்­ச­ய­மாக? சத்­தி­ய­மாக? நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தாய்த் தமிழ்­நாட்டைக் காக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கோவை மக்­கள் தயா­ராக வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீண்­டும் சொல்­கி­றேன்... தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, நம்­மு­டைய தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, கோவை­யில் உள்ள எல்­லோ­ரும் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்குk கூட்­ட­ணி­யைத்­தான் ஆத­ரிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு, கோவை தெற்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் சகோ­த­ரர் செந்­தில்­பா­லா­ஜிக்­கும், கோவை வடக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் செந்­த­மிழ்ச் செல்­வ­னுக்­கும், சூலூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் வெற்றி வேட்­பா­ளர் தள­பதி முரு­கே­ச­னுக்­கும், கிணத்­துக்­க­டவு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் சபரி கார்த்­தி­கே­ய­னுக்­கும், பொள்­ளாச்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் கொங்­கு­நாடு மக்­கள் தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் நித்­தி­யா­னந்­தம் அவர்­க­ளுக்­கும், வால்­பாறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் சுதா­க­ருக்­கும், தொண்­டா­முத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் என்.ஆர். கார்த்­தி­கே­ய­னுக்­கும், மேட்­டுப்­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி வேட்­பா­ளர் கவிதா கல்­யா­ண­சுந்­த­ரம் உள்­ளிட்ட 8 வேட்­பா­ளர்­க­ளுக்­கும், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, சிங்­கா­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும், கவுண்­டம்­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் அறி­விக்க இருக்­கும் வேட்­பா­ளர்­க­ளுக்கு கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு வளம்­பெற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கழக ஆட்சி தொடர வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­பிற்­கும், பண்­பிற்­கும், பாசத்­திற்­கும், உழைப்­பிற்­கும், புது­மைக்­கும் புகழ்­பெற்ற கோவை மக்­கள் நீங்­கள். உங்­க­ளின் பேரா­த­ர­வு­டன் திரா­விட மாடல் ஆட்­சி­தான் தொடர வேண்­டும்! கோவையே தயாரா? கோவை மென்­மே­லும் வளர நீங்­கள் துணை நிற்க வேண்­டும். தமிழ்­நா­டும் மென்­மே­லும் வள­ரும்! அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை நாங்­கள் நடத்­தப் போகி­றோம். நாடு வளம் பெற, இந்த நல்­லாட்சி தொடர்ந்­திட ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>