<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,958,1337" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 04 2026 23:12:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="05042026-MDU-03" position.sequence="03" ex-ref="05042026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="33">மதத்திற்கு மட்டுமல்ல; மனிதகுலத்திற்கே எதிரான சட்டத்தைக் கொண்டுவந்து</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="129">கிறிஸ்தவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குவதா?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">நாகர்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை... </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">முதல் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup308068_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CMPhoto5_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏற்­கெ­னவே சகோ­த­ரர் மனோ தங்­க­ராஜ் அவர்­க­ளுக்கு எவ்­வாறு ஆத­ரவு அளித்­தீர்­களோ, அதே­போன்றே செல்­வ­சு­வாமி அவர்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளித்து அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அடுத்த, விள­வங்­கோடு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த இளந்­த­லை­வர் ராகுல் காந்தி அவர்­க­ளால் அறி­மு­கப்­ப­டுத்தி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் டி.டி.பிர­வீன் அவர்­கள். பிர­வீன் கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் நலிந்த பிரி­வி­ன­ருக்­கா­கப் பல்­வேறு உத­வி­களை செய்­யக் கூடி­ய­வர். தென்­னிந்­தி­யத் திருச்­சபை தெற்கு கேர­ளத் திரு­மண்­ட­லத்­தின் செய­லா­ளர் உள்­ளிட்ட முக்­கிய பொறுப்­பு­களை வகிக்­கக் கூடி­ய­வர். பிர­வீன் அவர்­க­ளுக்கு நீங்­கள் எல்­லாம் கை சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன். இந்த 6 வேட்­பா­ளர்­க­ளை­யும் வெற்றி பெற வைப்­பீர்­களா? வைப்­போம். வெற்றி உறு­தி­யா­கி­விட்ட கார­ணத்­தால் இங்­கி­ருக்­கும் வேட்­பா­ளர்­களை அனை­வ­ரும் இப்­போது உட்­கா­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குமரி மாவட்­டத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பல்­வேறு சாத­னை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தக் குமரி மாவட்­டத்­திற்கு நாம் பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்கி, பல்­வேறு சாத­னை­களை நாம் செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம். எல்­லா­வற்­றை­யும் சொல்­லிக் கொண்­டி­ருந்­தால் எனக்கு இந்த ஒரு நாள் போதாது! அத­னால், சில­வற்றை மட்­டும் நான் சுருக்­க­மாக குறிப்­பிட்­டுச் சொல்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கும­ரிக்­குச் சுற்­று­லாப் பய­ணி­க­ளைச் சுண்டி இழுக்­கும் வகை­யில், வள்­ளு­வர் சிலை­யை­யும் விவே­கா­னந்­தர் பாறை­யை­யும் இணைக்க அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் கண்­ணா­டிப் பாலம். பல்­லா­யி­ரம் பேர் தின­மும் வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கன்­னி­யா­கு­மரி பேரூ­ராட்சி என்­பது, நக­ராட்­சி­யாக தரம் உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மார்த்­தாண்­டத்­தில் தின­சரி சந்தை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குளச்­சல், பத்­ம­நா­ப­பு­ரத்­தில் புதிய பேருந்து நிலை­யங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">283.69 கிலோ­மீட்­டர் நீள­முள்ள சாலை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">7	பாலங்­கள் கட்டி முடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பள்­ளம்­துறை, எடப்­பாடு மீனவ கிரா­மங்­க­ளில் கட­ல­ரிப்பு தடுப்­புச் சுவர்­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கோட்­டார் புனித சவே­ரி­யார் தேவா­ல­யம் சீர­மைக்க நிதி உதவி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரு­வட்­டாறு ஆதி­கே­சவ பெரு­மாள் கோயி­லுக்கு 400 ஆண்­டு­கள் கழித்து, குட­மு­ழுக்கு நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாகர்­கோ­யில் மாந­க­ராட்­சி­யில் 55 ஆயி­ரத்து 709 வீடு­க­ளுக்­குக் குடி­நீர் இணைப்­பு­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தோவாளை மலர் சந்தை வளா­கம் முழு­வ­தும் உயர்­மட்ட மேற்­கூரை அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பத்­ம­நா­ப­பு­ரத்­தில் மத்­திய ஆய்­வ­கம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது­போக,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வட­சே­ரி­யில் நவீன ஒருங்­கி­ணைந்த பேருந்து முனை­யம் அமைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தக்­க­லை­யில் புதிய பேருந்து நிலை­யம் கட்­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அகஸ்­தீஸ்­வ­ரம் வட்­டத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா விரை­வில் அமைய இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வாணி­யக்­கு­டி­யில் புதிய மீன்­பிடி துறை­மு­கம் மற்­றும் குளச்­சல் துறை­முக விரி­வாக்­கத்­திற்கு அடிக்­கல்லை நான் நாட்­டி­யி­ருக்­கி­றேன். இதற்­காக மகிழ்ச்சி அடைந்த வாணி­யக்­குடி விசைப்­ப­டகு உரி­மை­யா­ளர் நலச்­சங்க நிர்­வா­கி­கள் எல்­லோ­ரும் எனக்கு நன்றி சொன்­னது கூட இன்­ன­மும் எனக்கு நினை­வி­ருக்­கி­ றது. அவர்­கள் நன்­றி­யின் அடை­யா­ள­மாக ஒரு விசைப்­ப­டகு மாதி­ரியை எனக்­குப் பரி­சாக வழங்­கி­னார்­கள். இப்­படி எவ்­வ­ளவோ சொல்­லிக் கொண்டே போக­லாம். முக்­கி­ய­மான திட்­டங்­களே இன்­னும் முப்­பது இருக்­கி­றது. நான்­தான் நேர­மில்­லாத கார­ணத்­தி­னால் மிக­வும் சுருக்­க­மா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உங்­க­ளுக்­காக இவ்­வ­ள­வும் செய்து கொடுத்த உரி­மை­யோடு, உற­வோடு வாக்­குக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன். உங்­க­ளி­டம் எனக்கு அந்த உரிமை இருக்­கி­ற­து­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மீனவர்களுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏராளமான திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குமரி மாவட்­டம் என்­பது மீனவ நண்­பர்­கள் நிறைந்த மாவட்­டம். மீன் பிடித்­தல் என்­பது வெறும் தொழில் இல்லை; அது ஒரு வாழ்க்கை முறை! நம் பண்­பாட்­டின் அடை­யா­ளம்! நெய்­தல் திணை­யா­கத் தமிழ் இலக்­கி­யத்­தில் போற்­றப்­ப­டும் சிறப்­புக்­கு­ரி­யது. அப்­ப­டிப்­பட்ட மீன­வர்­க­ளுக்கு நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஏரா­ள­மான திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அதில் சில­வற்றை மட்­டும் நான் கோடிட்­டுக் காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 5 ஆண்­டு­க­ளில் 121 மீன்­வள உட்­கட்­ட­மைப்பு பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">46 புதிய மீன் இறங்­கு­த­ளங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">29 மீன் இறங்­கு­தளமேம்­பாட்­டுப் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மானிய டீசல் அதி­க­ரிப்பு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீனவ மக­ளி­ருக்கு மானி­யங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீன­வக் குடும்­பத்தை சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு UPSC தேர்­வுக்­கான பயிற்சி - இவ்­வாறு பல­வற்­றைச் செய்­தி­ருக்­கும் ஆட்­சி­தான், நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­மட்­டு­மல்ல, கடந்த 2004--ஆம் ஆண்டு சுனா­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசு நிலத்­தில் வீடு கட்­டித் தரப்­பட்­டது. அந்த வீடு­க­ளுக்கு நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான், அவர்­கள் பெய­ரி­லேயே கணி­னிப் பட்டா வழங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேங்­காய்­பட்­ட­ணம் மீன்­பிடி துறை­முக விரி­வாக்­கப் பணி 253 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பாரம்­ப­ரிய மீன­வர்­க­ளுக்கு 40 விழுக்­காடு மானி­யத்­தில் வெளிப்­பொ­ருத்­தும் இயந்­தி­ரம் வழங்­கும் திட்­டத்­தின்­கீழ் 483 வெளிப்­பொ­ருத்­தும் இயந்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீன்­பி­டித் தடைக்­கால நிவா­ர­ணம் மற்­றும் மீன்­பிடி குறை­வுக் கால நிவா­ர­ணம் முறை­யாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது. அது­மட்­டு­மல்ல, 5 ஆயி­ரம் ரூபாய் என்று வழங்­கப்­பட்டு வந்த மீன்­பி­டித் தடைக்­கால நிவா­ர­ணத்தை, 8 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீன்­பிடி குறை­வுக் கால­மான ஜன­வரி, பிப்­ர­வரி மற்­றும் மார்ச் மாதங்­க­ளில் வழங்­கப்­பட்டு வந்த நிவா­ரண தொகையை 6 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தி­னோம். இப்­போது தேர்­தல் அறிக்­கை­யில், இது­தொ­டர்­பாக அடுத்த அதி­ரடி வாக்­கு­று­தி­களை உங்­க­ளுக்­காக வழங்­கி­யி­ருக்­கி­றோம். நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள். இனி, மீன்­பி­டித் தடைக்­கா­லச் சிறப்பு நிவா­ர­ணத் தொகை மாதம் 8 ஆயி­ரம் இல்லை, 12 ஆயி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டும்! இனி, மீன்­பிடி குறை­வுக்­கால நிவா­ர­ணத்­தொகை மாதம் 6 ஆயி­ரம் இல்லை, 9 ஆயி­ரம் ரூபா­யாக வழங்­கப்­ப­டும்! நீங்­கள் எல்­லோ­ரும் மகிழ்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், மீனவ மக்­க­ளி­டையே சேமிக்­கும் பழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வித­மாக, தமிழ்­நாடு மீன­வர்/மீனவ மக­ளிர் சேமிப்பு நிவா­ர­ணத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் 117 கோடியே 94 இலட்­சம் ரூபாய் சேமிப்பு நிவா­ர­ணம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்­குக் காலை­யில் மீனவ கிரா­மங்­க­ளுக்­குச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­த­போது, என்­னி­டம் சில கோரிக்­கை­களை உரி­மை­யோடு வைத்­தார்­கள். கழக மீன­வ­ர­ணிச் செய­லா­ளர் சகோ­த­ரர் ஜோசப் ஸ்டாலி­னும் என்­னி­டம் சில கோரிக்­கை­க­ளைச் சொன்­னார். அதன் அடிப்­ப­டை­யில் சில புதிய வாக்­கு­று­தி­க­ளை­யும், மீன­வர்­கள் நிறைந்த குமரி மாவட்­டத்­தில் இருந்து உங்­க­ளுக்கு நான் வழங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீன­வர் நல வாரி­யத்­தில் உறுப்­பி­னர் சேர்க்­கைக்­கான வயது வரம்பு 65-இல் இருந்து 70 வய­தாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீன­வர் நல வாரி­யத்­தில் உறுப்­பி­ன­ராக இருப்­ப­வர்­க­ளுக்கு, இப்­போது வழங்­கப்­பட்டு வரும் நலத்­திட்­டங்­க­ளோடு, கூடு­த­லாக அவர்­க­ளின் 70 வயது முதல் 75 வயது வரை மாதம்­தோ­றும் ஓய்­வூ­தி­யம் வழங்­கப்­ப­டும் என்று மகிழ்ச்­சி­யோடு நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­படி மீன­வர்­க­ளின் உண்­மை­யான நண்­ப­னாக - உற்ற தோழ­னா­கச் செயல்­பட்டு வரு­கி­றது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், வெளி­யு­ற­வுக் கொள்­கை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, கடல் கடந்து மீன்­பி­டிக்­கச் செல்­லும் நம்­மு­டைய மீன­வர்­க­ளைக் காக்­கத் தவ­றி­விட்­டது! தவ­றி­யது மட்­டு­மல்ல; வெளி­யு­ற­வுக் கொள்­கை­யில் தோல்வி அடைந்­தி­ருக்­கி­றது! சிறிய அண்டை நாடு­க­ளி­டம்­கூட இந்­தி­யா­விற்­குச் செல்­வாக்கு இல்­லாத நிலை­யைப் பிர­த­மர் மோடி அவர்­கள் உரு­வாக்கி இருக்­கி­றார்! தமிழ்­நாட்­டைச் சேர்ந்த மீன­வர்­களை இந்­திய மீன­வர்­க­ளாக நினைத்து பா.ஜ.க. அரசு அக்­கறை செலுத்­த­வில்லை என்­ப­து­தான் வருத்­தத்­திற்­கு­ரி­யது. அதன் விளை­வு­தான் நம்­மு­டைய மீன­வர்­கள் மேல் இலங்­கைக் கடற்­படை நடத்­தும் தொடர் தாக்­கு­தல்­கள். காங்­கி­ரஸ் ஆட்­சிக் காலத்­தில் பிர­த­மர் மோடி என்ன சொன்­னார், ‘’மன்­மோ­கன் சிங் என்ற பல­வீ­ன­மான பிர­த­மர் ஆள்­வ­தால்­தான் நம் மீன­வர்­கள் மீது தாக்­கு­தல் நடக்­கி­றது. பல­மான பிர­த­மர் நான் வந்­தால் நடக்­காது” என்று பேசி­னார். இப்­போது நடக்­கி­றதா? இல்­லையா? நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இப்­போது, தான் ஒரு பல­வீ­ன­மான பிர­த­மர் என்­பதை மாண்­பு­மிகு மோடி அவர்­கள் ஏற்­றுக்­கொள்­வாரா? ஏற்­றுக்­கொள்ள மாட்­டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மோடியிடம் கேட்க,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏராளமான கேள்விகள் இருக்கிறது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தக் கேள்வி மட்­டுமா இருக்­கி­றது. இன்­னும் கேள்­வி­கள் அடுக்­க­டுக்­காக இருக்­கி­றது.மதுரை எய்ம்ஸ் என்ன என்று தெரி­யும் உங்­க­ளுக்கு...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கோவை, மதுரை மெட்ரோ இர­யில், ஓசூர் விமான நிலை­யம், பேரி­டர் நிவா­ரண நிதி, பள்­ளிக் கல்வி நிதி, கீழடி ஆய்­வ­றிக்கை, தொகுதி மறு­வ­ரை­ய­றை­யில் உரிய நியா­யம், நிதிப் பகிர்­வில் தமிழ்­நாட்­டிற்­கு­ரிய பங்கு, தமிழ்­நாட்­டிற்கு மறுக்­கப்­ப­டும் புதிய இர­யில்வே திட்­டங்­கள். இப்­படி, தமிழ்­நாட்­டின் சார்­பில் பிர­த­மர் மோடி அவர்­க­ளைக் கேட்க ஏரா­ள­மான கேள்­வி­கள் இருக்­கி­றது. இதெல்­லாம், நான் தொடர்ச்­சி­யா­கக் கேட்­கும் கேள்­வி­கள். இதெற்­கெல்­லாம் பதில் இருக்­கி­றதா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது, புதி­தாக ஒரு பிரச்­சினை கிளம்­பி­ 
யி­ருக்­கி­றது! என்ன தெரி­யுமா? சிறு­பான்­மை­யின மக்­களை, குறிப்­பாக கிறிஸ்­த­வத் தொண்டு நிறு­வ­னங்­ களைக் குறி­வைத்­துக் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கும் வெளி­நாட்டு நிதி பங்­க­ளிப்பு சட்­டத் திருத்­தம்! அதா­வது, FCRA மசோதா! இதற்­கா­க­வும் தமிழ்­நாட்­டில் இந்த ஸ்டாலின்­தான் முதல் குரல் கொடுத்­தி­ருக்­கி­றேன். இரண்டு நாள் முன்பே, இதைக் கண்­டித்து அறிக்கை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். முழு­மை­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும் என்று வலி­யு­றுத்­திச் சொல்­லி­யி­ருக்­கி­றேன். நேற்று, மீண்­டும் பிர­த­மர் அவர்­க­ளுக்கு அர­சின் சார்­பில் விளக்­க­மாக நான் கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தச் சட்­டத் திருத்­தத்­தால் இந்­தியா முழு­வ­தும் கிறிஸ்­த­வச் சமு­தாய மக்­கள் கொதித்­துப் போயி­ருக்­கி­றார்­கள். சான்­று­க­ளைச் சமர்ப்­பிப்­ப­தில் சிறிய தாம­தம் உள்­ளிட்ட பிற கார­ணங்­க­ளைச் சுட்­டிக் காட்டி, ஒரு அமைப்­பின் அங்­கீ­கா­ரத்தை இரத்து செய்து, அவர்­க­ளி­டம் இருக்­கும் நிதி­யை­யும், சொத்­தை­யும் பறித்­துக் கொள்ள இந்த கொடுங்­கோல் சட்­டம் வழி­வ­குக்­கி­றது. சொத்து என்­றால், மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும் மருத்­து­வ­ம­னை­கள், பள்­ளிக்­கூ­டங்­கள், விடு­தி­கள் இவை­தான். இன்­னும் கொடுமை என்­ன­வென்­றால், பாதி நிதியை வெளி­நாட்­டில் இருந்து பெற்று, மீதியை உள்­நாட்­டில் இருந்து பெற்று உரு­வாக்­கிய சொத்­து­க­ளைக் கூட, இந்­தச் சட்­டம் வந்­தால் முடக்­கி­விட முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பிரதமர் மோடியின் கண்துடைப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பிர­த­மர் மோடி அவர்­கள் கண்­து­டைப்­புக்­காக, பல கிறிஸ்­தவ அமைப்­பு­க­ளின் நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்டு, ஏழை­க­ளின் கல்­விக்­கா­க­வும் - மருத்­து­வத்­துக்­கா­க­வும் அவர்­கள் செய்­யும் செயல்­களை எல்­லாம் பாராட்­டிப் பேசி­யி­ருக்­கி­றார். ஆனால், இப்­போது என்ன செய்­கி­றார்? இது­தான், அவ­ரது உண்­மை­யான முகம். இப்­போது திடீர் என்று இப்­படி ஒரு தன்­னிச்­சை­யான கொடுங்­கோல் சட்­டத்தை கொண்டு வந்­தால், குறிப்­பாக, பட்­டி­ய­லின மக்­கள், பழங்­கு­டி­யின மக்­கள், கிரா­மப்­புற ஏழை­கள்­தான் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வார்­கள். நிதி தரு­வ­தற்கு முன்­வ­ரு­ப­வர்­க­ளை­யும் அச்­சு­றுத்­து­வது மாதி­ரி­யான பிரி­வு­கள் இந்­தச் சட்­டத் திருத்­தத்­தில் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தியா முழு­வ­தும் ஆயி­ரக்­க­ணக்­கான கிறிஸ்­தவ கல்வி, மருத்­துவ அமைப்­பு­கள் இயங்கி வரு­கி­றது. அவை­யெல்­லாம் இல்­லா­மல் போனால், அர­சால் அவர்­கள் செய்து வரும் சேவையை, உடனே இட்டு நிரப்ப முடி­யாது என்­ப­தை­யும் என்­னு­டைய கடி­தத்­தில் நான் சுட்­டிக் காட்­டி­யி­ருக்­கி­றேன். மொத்­தத்­தில், இந்­தச் சட்­டத் திருத்­தம், மத சுதந்­தி­ரம் மற்­றும் சமூக சேவை செய்ய விரும்­பும் மக்­கள் மீதான கடு­மை­யான தாக்­கு­தல்! அர­சி­ய­ல­மைப்பு வழங்­கும் உரி­மை­க­ளைப் பறிக்­கும் செயல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கிறிஸ்­தவ மக்­கள் அதி­கம் வாழும் - தேவா­ல­யங்­கள் அதி­கம் இருக்­கும், கேர­ளம், அசாம் மாநி­லங்­க­ளில் தேர்­தல் நடக்க இருக்­கும் கார­ணத்­தி­னால், இப்­போ­தைக்கு பயந்து போய் பா.ஜ.க. அரசு சற்று பின்­வாங்கி இருக்­கி­றது. ஆனால், கூடிய விரை­வில் சிறப்­புக் கூட்­டத்­தொ­டர் கூட்டி, இந்த மசோ­தாவை நிறை­வேற்­றிச் சட்­டம் ஆக்­கு­வ­து­தான் பா.ஜ.க. அர­சின் சதித் திட்­டம்! கிறிஸ்­த­வத் தொண்டு நிறு­வ­னங்­க­ளால் இந்­துக்­க­ளும்­தான் அதி­கம் பய­ன­டை­கி­றார்­கள். மத­வெ­றிப் பார்­வை­யு­டன் மனி­த­நே­யச் செயல்­பா­டு­கள் மேல் தொடுக்­கும் இந்­தத் தாக்­கு­தல், ஒரு மதத்­திற்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல, இது மனி­த­கு­லத்­திற்கே எதி­ரா­னது! இந்­தியா மேல் உலக அள­வில் அழிக்க முடி­யாத களங்­கத்தை இந்­தச் சட்­டம் ஏற்­ப­டுத்­தும் ஆபத்து இருக்­கி­றது. நாடா­ளு­மன்­றமே முடங்­கும் அள­விற்கு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் இதை எதிர்த்­துப் பேசி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதில் அ.தி.மு.க.வின் நிலைப்­பாடு என்ன? மக்­கள் தெரிந்து கொள்ள வேண்­டாமா? சொல்­லுங்­கள் பழ­னி­சாமி அவர்­களே... இந்த F.C.R.A. சட்­டத் திருத்­தத்தை நீங்­கள் ஆத­ரிக்­கி­றீர்­களா? இல்லை, குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டம், வக்பு சட்­டத் திருத்­தத்­தில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு துரோ­கம் செய்­தது போன்றே, அடுத்து கிறிஸ்­தவ மக்­க­ளுக்­கும் துரோ­கம் செய்­யத் தயார் ஆகி­விட்­டீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நேற்று ஒரு கூட்­டத்­தில் பழ­னி­சாமி பேசி­யி­ருக்­கி­றார். சிறு­பான்­மை­யி­ன­ரைக் கண்ணை இமை காப்­பது போன்று, அ.தி.மு.க. காக்­கும் என்று சொல்­கி­றார். இப்­போது FCRA-வுக்கு என்ன சொல்­லப் போகி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அ.தி.மு.க. என்ற கட்சி பா.ஜ.க.வின் கொத்­த­டி­மைக் கூட்­ட­மாக மாறிப் போயி­ருக்­கி­றது. அடிப்­படை மன­சாட்சி இருக்­கும் அ.தி.மு.க. தொண்­டர்­க­ளும், சில நிர்­வா­கி­க­ளுமே வெளிப்­ப­டை­யா­கப் புலம்­பு­கி­றார்­கள். தன்­னு­டைய சுய­ந­லத்­திற்­காக, தன்­னு­டைய பத­வி­யைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக, இப்­படி ஒரு நிலை­மை­யில் அ.தி.மு.க.வைக் கொண்­டு­வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி! இன்­னும் ஷார்ப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் என்ற ‘நேம் போர்டை’ காப்­பாற்­றிக்­கொள்ள, டெல்­லிக்கு அவர் காவடி தூக்­கு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பழனிசாமியின்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தரம் கெட்ட பேச்சு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நேற்று நெல்­லைப் பொதுக் கூட்­டத்­தில், தலை­வர் கலை­ஞர் குறித்த பழ­னி­சாமி அவர்­க­ளின் தரம்­கெட்ட பேச்­சைக் கண்­டித்து நான் பேசி­யி­ருந்­தேன். அதைக் கேட்டு, தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கும் கட்­சிக்­கா­ரர்­கள் ஃபோனி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் தங்­க­ளு­டைய ஆதங்­கத்தை என்­னி­டம் கொட்­டித் தீர்த்­து­விட்­டார்­கள். “எங்­கள் மன­தில் என்­னென்ன இருந்­ததோ, அதை­யெல்­லாம் பேசி­விட்­டீர்­கள் தலை­வரே” என்று சொன்­னார்­கள். மறைந்த தலை­வ­ரைப் பற்றி இவ்­வாறு தவ­றா­கப் பேசு­வது, அர­சி­யல் மாண்பு கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் உயி­ரோடு இருந்­த­போது, அவரை எதிர்த்து, அவ­ரின் ஆட்­சி­யின் குறை­களை எதிர்த்து, நாம் நேர­டி­யாக அர­சி­யல் செய்­தி­ருக்­கி­றோம். ஆனால், அவர் மறைந்த பிறகு, உச்­ச­பட்ச அர­சி­யல் நாக­ரி­கத்தை நாம் இன்­றைக்­கும் கடை­பி­டித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘திண்­ணை­யில் கிடந்­த­வ­னுக்கு, திடுக்­குனு யோகம் அடித்த மாதிரி’ முத­ல­மைச்­ச­ரான பழ­னி­சா­மி­யி­டம் அந்த நாக­ரி­கத்தை எதிர்­பாக்க முடி­யுமா? அவர் இவ்­வாறு பேசு­வது முதல் முறை­யும் கிடை­யாது. 2019 தேர்­த­லின்­போதே கலை­ஞரை வீட்­டுச் சிறை­யில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். அது­பற்றி அரசே விசா­ரிப்­போம் என்று வாய்க் கொழுப்­போடு பேசி­னார். அதற்­குப் பிறகு என்ன ஆனது? மக்­க­ளால் தோற்­க­டிக்­கப்­பட்­டார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பழனிசாமியின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">துரோக நஞ்சு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதன்­பி­றகு, மேலும் மேலும் தோல்­வி­கள் பெற்­றா­லும், அதி­லி­ருந்து அவர் எந்­தப் பாட­மும் கற்­றுக் கொள்­ளா­மல், 2021, 2024, 2026 அது­வரை பழைய ரெக்­கார்டு போன்று சொன்­ன­தையே சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். தமிழ்­நாட்டு மக்­கள் கொள்­கை­யைப் பேசு­வ­தைத்­தான் ஆத­ரிப்­பார்­களே தவிர, வாய்க்­கொ­ழுப்­போடு பேசி­னால் அதை வர­வேற்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பழ­னி­சாமி அவர்­க­ளி­டம் சொல்­வ­தற்­குச் சாத­னை­கள் இல்லை! மக்­கள் பட்ட வேத­னை­கள்­தான் இருக்­கி­றது. பா.ஜ.க.வுக்கு எதி­ராக குரல் கொடுக்க துணிச்­ச­லும் இல்லை! உத­வி­ய­வர்­க­ளுக்கு நன்­றி­யும் இல்லை! மனம் முழு­வ­தும் துரோக நஞ்­சு­தான் இருக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட இவர் கொடுக்­கும் வாக்­கு­று­தி­க­ளை­யும் தமிழ்­நாட்டு மக்­கள் நம்­பத் தயா­ராக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏன்? 2011, 2016 ஆகிய இரண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் கொடுத்த வாக்­கு­று­தி­களை அ.தி.மு.க. நிறை­வேற்­ற­வில்லை. அந்த வாக்­கு­று­தி­களை நான் வாசித்­தால் அது பழ­னி­சா­மிக்கே நினை­விற்கு வராது. ஆனால், தி.மு.க. வாக்கு கொடுத்­தால் அதை எப்­ப­டி­யா­வது செய்து முடிப்­போம்! அப்­படி, இந்­தத் தேர்­தல் களத்­தில் இறங்­கி­யி­ருக்­கும் ’சூப்­பர்ஸ்­டார்’­தான் தி.மு.க. தேர்­தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மெகா ஹிட் அறிவிப்புகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நேற்­று­கூட திரு­நெல்­வே­லி­யில் பாடிக் காண்­பித்­தேன். நீங்­கள் கேட்­டி­ருப்­பீர்­கள். மறு­ப­டி­யும் பாட வேண்­டுமா? “சூப்­பர்ஸ்­டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்­தை­யும் சொல்­லும்”. எனவே, அதில் சொல்­லி­யி­ருக்­கும் சில மெகா ஹிட் அறி­விப்­பு­களை மட்­டும் இப்­போது தலைப்­புச் செய்­தி­யாக ஒரு லிஸ்ட் போட்­டுச் சொல்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு கோடியே 31 லட்­சம் சகோ­த­ரி­கள் பெற்று வரும், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து, இனி மாதம் 2 ஆயி­ரம் ரூபா­யாக வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தில் மாண­வர்­க­ளுக்கு உத­வித்­தொகை, இனி, மாதத்­திற்கு ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முதி­யோர், மாற்­றுத் திற­னா­ளி­கள், ஆத­ர­வற்ற பெண்­கள் என எல்லா உத­வித்­தொ­கை­க­ளும் டபுள் மடங்­காக உயர்த்தி வழங்­கப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மக­ளிர் சுய உத­விக்­குழு சகோ­த­ரி­க­ளுக்கு, இனி, எந்த சூரிட்­டி­யும் இல்­லா­ம­லேயே, 5 இலட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் கட­னு­தவி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குமரி மாவட்­டம் இயற்கை பேரி­டர்­க­ளால் அதி­கம் பாதிக்­கப்­ப­டும் மாவட்­டம். இனி, பேரி­டர் கால இழப்­பீ­டு­க­ளாக, இற­வைப் பாசன பயிர்­கள் மற்­றும் நெல் பயிர்­க­ளுக்கு, ஹெக்­டேர் ஒன்­றுக்கு 25 ஆயி­ரம் ரூபாய் நீண்­ட­கா­லப் பயிர்­க­ளுக்கு 27 ஆயி­ரம் ரூபாய், மானா­வா­ரிப் பயிர்­க­ளுக்கு 12 ஆயி­ரம் ரூபாய் என உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கல்­லூரி, பாலி­டெக்­னிக் என உயர்­கல்வி படிக்­கும் 35 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளுக்­குள் லேப்­டாப் முழு­மை­யாக வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தென் மாவட்­டங்­கள் கல்வி மற்­றும் சுகா­தா­ரக் குறி­யீ­டு­க­ளில் உரிய வளர்ச்­சியை பெற­வும், தொழில்­ம­ய­மா­வதை உறு­தி­செய்­ய­வும் இந்­தத் தென்­மா­வட்­டங்­க­ளுக்­கா­கச் சிறப்பு வளர்ச்­சித் திட்­டம் நிறை­வேற்­றப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘இல்லத்தரசி’ திட்டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது எல்­லா­வற்­றிற்­கும் மேல், ஒரு அல்­டி­மேட் அறி­விப்பு இருக்­கி­றது. அது என்ன? இல்­லத்­த­ரசி திட்­டம்! அதில் என்ன கொடுக்­கப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்­கான கூப்­பன்! அது எதற்­கான கூப்­பன்? இல்­லத்­த­ர­சி­க­ளான நீங்­கள், உங்­க­ளுக்­குத் தேவை­யான வீட்டு உப­யோ­கப் பொருளை, உங்­கள் ஊரில், உங்­க­ளுக்கு விருப்­ப­மான கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த மாதிரி வாங்­கிக் கொள்­வ­தற்­கான கூப்­பன்! புது பொருளா அல்­லது பழைய பொரு­ளைக் கொடுத்­து­விட்டு எக்ஸ்­சேஞ்சா? எல்­லாமே உங்­கள் சாய்ஸ்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது புட­வைக் கடைக்­குச் செல்­கி­றீர்­கள். 300, 400, 500, இப்­போ­தெல்­லாம் ஆயி­ரம் ரூபாய் வரை புடவை வந்­து­விட்­டது. ஒரு புடவை எடுக்க, எவ்­வ­ளவு நேரம் செலவு செய்­கி­றீர்­கள்? இது நல்ல கலரா? நம்­மி­டம் இந்­தக் கலர் இருக்­கி­றதா? நமக்கு மேட்ச் ஆகுமா? இதை எடுத்­துச் சென்­றால் நம்­மு­டைய வீட்­டுக்­கா­ரர் சந்­தோ­ஷப்­ப­டு­வாரா? இப்­ப­டி­யெல்­லாம் யோசிப்­பீர்­கள். சாயம் போகுமா? போகாதா? அல்­லது சுருங்­கி­வி­டுமா? அல்­லது சுருங்­காதா? இப்­ப­டி­யெல்­லாம் யோசித்து, தொட்­டுப் பார்த்து, தட­விப் பார்த்து, சில்க்கா? நைலக்சா? காட்­டனா? இதெல்­லாம் பார்த்து வாங்­கு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இன்­றைக்கு உங்­கள் வீட்­டில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ-­வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்­தப் பொரு­ளை­யும் நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம். இன்­றைக்­குத் தமிழ்­நாடு முழு­வ­தும் இந்த திட்­டத்­தைப் பற்­றி­தான் எல்­லோ­ரும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தி.மு.க.வின் நட்­சத்­திர பரப்­பு­ரை­யா­ள­ராக இந்த இல்­லத்­த­ர­சித் திட்ட வாக்­கு­றுதி இன்­றைக்கு மாறி­யி­ருக்­கி­றது! இப்­படி ஏரா­ள­மான வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நான் கலைஞரின் மகன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சொன்னதைச் செய்வேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் சொன்­னால், சொன்­ன­தைச் செய்­வோம். ஏன், செய்­வ­தைத்­தான் சொல்­வோம். நான் கலை­ஞ­ரின் மகன். சொன்ன வாக்­கு­று­தி­களை மறக்­க­வும் மாட்­டேன், மறுக்­க­வும் மாட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்டை எப்­ப­டிப்­பட்ட ஆபத்து சூழ்ந்­தி­ருக்­கி­றது என்று நான் சொல்­லி­யி­ருக்­கி­றேன். இதி­லி­ருந்து தமிழ்­நாட்டை காப்­பாற்ற வேண்­டும் என்­றால், திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி தொடர்ந்­தாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யத் துணைக்­கண்­டமே கும­ரி­யில் இருந்­து­தான் தொடங்­கு­கி­றது! இங்­கி­ருந்தே திரா­விட மாடல் 2.0-வின் வெற்­றி­யும் தொடங்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதற்கு, கன்­னி­யா­கு­மரி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வேட்­பா­ளர் மகே­ஷுக்­கும், நாகர்­கோ­யில் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வேட்­பா­ளர் ஆஸ்­டின் அவர்­க­ளுக்­கும், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும். வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, கிள்­ளி­யூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம்­மு­டைய வேட்­பா­ளர் ராஜேஷ் குமார் அவர்­க­ளுக்­கும், குளச்­சல் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம்­மு­டைய வேட்­பா­ளர் தாரகை கத்­பர்ட் அவர்­க­ளுக்­கும், விள­வங்­கோடு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வேட்­பா­ளர் பிர­வீன் அவர்­க­ளுக்­கும் நீங்­கள் எல்­லாம் கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, பத்­ம­நா­ப­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வேட்­பா­ளர் செல்­வ­சு­வா­மிக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஒரு ஆட்­சியை வழங்­கு­வோம். நாடு வளம் பெற - நல்­லாட்சி தொடர்ந்­திட ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>