<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 00:01:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05042026-VLR-02" position.sequence="02" ex-ref="05042026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">நெல்லையில் எல்லையில்லா உற்சாகத்துடன் கழகத் தலைவர்  – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைகேட்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை திரண்டிருந்த மக்கள்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">தலை­வர் கலை­ஞர் பற்றிப் பேச எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு யோக்­கி­யதை கிடை­யாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">தமிழ்நாடு தலை­நி­மிர மலை­ய­ளவு சாத­னை­கள் செய்­துள்­ளோம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">நெல்­லை­யில் எல்­லை­யில்லா உற்­சா­கத்­து­டன் கூடிய மக்­கள் கூட்­டத்­தில் </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் உணர்ச்­சி­மிகு விளக்­க­வுரை!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">தொடர்ச்சி 4   ஆம் பக்கம்</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="2_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="1_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="cmtwitter_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெல்லை, ஏப். 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிங்­கம் போன்று வாழ்ந்த தலை­வர்    கலை­ஞர் பற்றிப் பேச எடப்­பாடி பழ­னி­சாமிக்கு தகு­தி­யும் இல்லை; யோக்­கி­ய­தை­யும் கிடை­யாது என்­றும்; தமிழ்­நாடு தலை­நி­மிர        மலை­ய­ளவு சாத­னை­கள் செய்­துள்­ளோம் என்றும் நெல்­லை­யில் எல்­லை­யில்லா         உற்­சா­கத்­து­டன்  திரண்­டி­ருந்த மக்­க­ளி­டையே மதச்­சார்­பற்ற  முற்போக்குக்  கூட்­டணி  வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து உரை­யாற்­று­கை­யில் கழ­கத்தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாளை­யங்­கோட்டை எப்­போ­துமே தி.மு.க. கோட்டை. எங்­கள் தலை­வ­ரைப் பற்­றிப்       பேச பழ­னி­சா­மிக்கு எந்த யோக்­கி­ய­தை­யும்
கிடை­யாது. அடித்­துச்சொல்­கி­றேன், உங்­க­ளால் எந்­தக் காலத்­தி­லும் ஆட்­சி­யைப்  பிடிக்­கவே முடி­யாது என்றும் கழ­கத் தலை­வர்   அவர்­கள் குறிப்­பிட்­டார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ரும்,  முத­ல­மைச்­ச­ரு­மான  மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (3.4.2026) மாலை, திரு­நெல்­வேலி   மாவட்­டம்,    பாளை­யங்­கோட்­டை­யில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­கூட்­டத்­தில் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­து ஆற்றிய உரை­ வருமாறு: –
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எப்­ப­டிப்­பட்ட நெல்­லைச் சீமைக்கு நான்இன்­றைக்கு வந்­தி­ருக்­கி­றேன் என்­றால், இந்­தியவிடு­த­லைப் போராட்­டத்­தில் தனி முத்­தி­ரை­ யை­யும், தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் மாபெ­ரும் வீரத்­தை­யும், தமிழ் காக்­கும் போராட்­டத்­தில் தலை­வர் கலை­ஞர் அஞ்­சா­மல் தனி­மைச் சிறை­யில் இருந்த தியா­கத்­தை­யும் பெற்­றி­ருக்­கும் பாளை­யங்­கோட்டை இருக்­கும் நெல்­லைச்சீமைக்குநான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடிமை அ.தி.மு.க–வின் முது­கில் ஏறி, மத­வாத பா.ஜ.க. நிகழ்த்­தும் அர­சி­யல் பண்­பாட்­டுப் படை­யெ­டுப்­பி­லி­ருந்து தமிழ்­நாட்­டைக் காக்க உங்­கள் ஆத­ர­வைக் கேட்டு நான்       வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டைக் காக்க நான் ரெடி? நீங்­கள் ரெடியா? திரா­விட மாடல் 2.0 ஆட்­சிக்கு நான் ரெடி? நீங்­கள் ரெடியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு, இந்த மேடை­யில் இருக்­கும் எல்லாவேட்­பா­ளர்­க­ளும் வெற்றி பெற வேண்­டும்! வெற்றி பெற வைப்­பீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­டணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வேட்­பா­ளர்­களை வெற்றி பெறச் செய்­வீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில், இரா­தா­பு­ரம் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அப்­பாவு அவர்­கள். மிக உயர்ந்த மனி­தர். பார்ப்­ப­தற்கு மட்­டும் உய­ர­மல்ல, தமிழ்­நாட்டு சட்­ட­மன்­றத்தை நடத்­தி­யும் உயர்ந்­த­வர். அவர் ஆசி­ரி­ய­ராக இருந்த கார­ணத்­தால், மாண­வர்­களை எப்­படி வழி­ந­டத்­தி­னாரோ, அப்­படி நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சில், சட்­ட­மன்­றத்­தை­யும் திற­மை­யாக வழி­ந­டத்­தி­ய­வர். நான்கு முறை உங்­க­ளின் எம்.எல்.ஏ.வாக இருந்து, ராதா­பு­ரம் தொகுதி மக்­கள் அவ­ரைப் பாராட்­டிப் போற்றி, இன்­றைக்கு  அவர்  வேட்­பா­ள­ராக  நிறுத்­தப்­    பட்­டி­ருக்­கி­றார். அவ­ருக்கு, ராதா­பு­ரம் தொகு­தி­யில் இருக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில்உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகுதி, வெற்றி வேட்­பா­ளர் மாவட்­டச் செய­லா­ளர் அப்­துல் வகாப் அவர்­கள். பாளை­யங்­கோட்டை எப்­போ­துமே தி.மு.க. கோட்டை. கடந்த முறை போன்றே, இந்த முறை­யும் உங்­க­ளுக்கு பணி­யாற்றி ஆத­ரவு கோரி நிற்­கி­றார். அப்­துல் வகாப் அவர்­க­ளுக்கு, உத­ய­ சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை மீண்­டும் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, திரு­நெல்­வேலி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெற்றி வேட்­பா­ளர் மாந­க­ரச் செய­லா­ளர் தம்பி சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­கள். அமை­தி­யாக தன்­னு­டைய பணி­யைச் சிறப்­பா­கச் செய்­யக்­கூ­டிய ஓர் இளை­ஞர். திரு­நெல்­வேலி தொகுதி மக்­கள் சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளின்பொன்­னான வாக்­கு­களை வழங்கி அவரை வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, நாங்­கு­நேரி சட்­ட­மன்­றத் தொகுதி. காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் பெரு­ம­திப்­பிற்­கு­ரிய அரு­மைச் சகோ­த­ரர்  ராகுல் காந்தி மீண்­டும் நம்­மி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கும் வெற்றி வேட்­பா­ளர் ரூபிமனோ­க­ரன் அவர்­கள் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார். ஏற்­கெ­னவே நாங்­கு­நேரி மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மாகி, இரண்டு முறை உங்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றி­ய­வர். அவ­ருக்­குக் கை சின்­னத்­தில் சிறப்­பான வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி. காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் V.P. துரை அவர்­கள். அவ­ரும்  ராகுல் காந்தி அவர்­க­ளால் அடை­யா­ளம் காணப்­பட்டு இன்­றைக்கு வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார். வழக்­க­றி­ஞ­ரான இவர், தனது தந்தை முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வேல்­துரை போன்று மக்­க­ளுக்­குப் பணி­யாற்ற ஆத­ரவு கேட்டு நிற்­கி­றார். அவ­ருக்­கும் கை சின்­னத்­தில் நீங்­கள் ஆத­ரவு தந்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் இந்த 5 பேருக்­கும் நீங்­கள் சிறப்­பான ஆத­ர­வைத் தந்து, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும். வெற்றி உறு­தியா? (உறுதி). வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது வேட்­பா­ளர்­கள் இப்­போது உட்­கா­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அ.தி.மு.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">படு­பா­தா­ளத்­தில் தமிழ்­நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத்­தாண்­டு­கால அ.தி.மு.க. ஆட்­சி­யில், தமிழ்­நாட்­டின் நிர்­வா­கம் சீர­ழிந்து, வளர்ச்சி முடக்­கப்­பட்டு, நம்­மு­டைய மாநி­லமே படு­பா­தா­ளத்­திற்­குத் தள்­ளப்­பட்­டதை நீங்­கள் எல்­லாம் நன்கு அறி­வீர்­கள், மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள்! அது­வும், அ.தி.மு.க.வின் கடைசி நான்­காண்டு காலத்­தில், நடந்த சில­வற்றை மட்­டும் சுருக்­க­மாக உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்­மை­யார் ஜெய­ல­லிதா வாழ்ந்த கோட­நாட்­டி­லேயே கொலை, கொள்­ளை­கள் – சாத்­தான்­கு­ளம் காவல் மர­ணம் – தமி­ழர்­க­ளின் மன­தைப் பதற வைத்த நீட் தற்­கொ­லை­கள் – இளம்­பெண்­கள் கதறி அழுத பொள்­ளாச்சி பாலி­யல் வன்­கொ­டுமை – அமை­தி­யான ஸ்டெர்­லைட் போராட்­டத்­தில் அப்­பாவி பொது­மக்­கள் மேலேயே துப்­பாக்­கிச்­சூடு– இவை அனைத்­திற்­கும் மேல், டெல்­லிக்கு காவடி தூக்கி, C.A.A., மூன்று வேளாண் சட்­டங்­கள் போன்ற மக்­கள் விரோத சட்­டங்­களை, சிறு­பான்மை விரோ­தச் சட்­டங்­களை ஆத­ரித்­தது; நீட்­டிய இடத்­தில் எல்­லாம் கையெ­ழுத்து போட்­டது என தமிழ்­நாட்­டின் நிதி உரிமை, மாநில உரிமை என்று அனைத்­தை­யும் அடகு வைத்த ஃபிளாஷ்­பேக்–ஐ நினைத்­தாலே, இன்­றைக்கு மக்­கள் பீதி அடை­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டிப்­பட்ட கேவ­ல­மான ஆட்­சி­யில் இருந்து, உங்­கள் ஆத­ர­வு­டன் தமிழ்­நாட்டை மீட்­டெ­டுத்து, புதிய விடி­ய­லைத் தந்து, கடந்த 5 ஆண்­டு­க­ளில், இந்­தி­யா­வில் நம்­பர் ஒன் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை இன்­றைக்கு நாம் உயர்த்­தி­யி­ருக்­கி­றோம். ஏன், இந்­தி­யா­விற்கே வழி­காட்­டும் ஆட்­சி­யாக நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். நம்­மு­டைய ஆட்­சிக்கு என்ன பெயர் வைத்­தோம் சொல்­லுங்­கள்? திரா­விட மாடல். நெஞ்சை நிமிர்த்தி சொல்­கி­றேன்... இந்­தி­யாவே தெற்­கைத் திரும்­பிப் பார்க்­கும் அள­விற்கு, திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டைத் தலை­நி­மிர வைத்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் நாள் – முதல் கையெ­ழுத்­தி­லேயே மக­ளிர் எல்­லோ­ரும் கட்­ட­ண­மில்­லா­மல் விடி­யல் பய­ணம் செய்­ய­லாம் என்று உத்­த­ர­விட்ட கைதான், இந்த ஸ்டாலின் கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைத் தொடர்ந்து, தமிழ்­நாட்­டின் அடுத்­த­கட்ட வளர்ச்சி வர­லாற்றை எழுத வேண்­டும் என்று தீர்­மா­னித்து, தொடர்ச்­சி­யா­கப் பல முன்­னோ­டித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தத் தொடங்­கி­னேன். அதை­யெல்­லாம் பட்­டி­யல் போட்­டால், இந்­தப் பொதுக் கூட்­டத்­தையே ஒரு சாதனை விளக்­கப் பொதுக் கூட்­ட­மா­கத்­தான் நடத்த வேண்­டும்! அந்­த­ள­விற்கு மலை­ய­ளவு சாத­னை­களை நாம் செய்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நெல்லை மாவட்­டத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பல்­வேறு முன்­னோ­டித் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், இந்­தத் திரு­நெல்­வேலி மாவட்­டத்­திற்­குச் செய்­தி­ருக்­கும் திட்­டங்­களை மட்­டுமே, ஒரு தனி புத்­த­க­மாக போட­லாம்! அத­னால், மிக மிக முக்­கி­ய­மான முத்­தாய்ப்­பான சாத­னை­களை மட்­டும் தலைப்­புச் செய்­தி­களாக– ஹைலைட்­டாக நான் சொல்ல விரும்­பு ­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய வர­லாறு தமிழ் நிலத்­தி­லி­ருந்­து­தான் எழு­தப்­பட வேண்­டும் என்ற நம்­மு­டைய முழக்­கத்­திற்கு அடித்­த­ள­மாக நிற்­கும், பொருநை 
அருங்­காட்­சி­ய­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­யில் இத­யம், நரம்பு, சிறு­நீ­ர­கம், கல்­லீ­ரல் குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்கு சிகிச்சை வழங்க, நவீன கட்­ட­மைப்­பு­க­ளு­டன் கூடிய மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல ஆண்டு கன­வுத் திட்­ட­மான, தாமி­ர­ப­ரணி – கரு­மே­னி­யாறு மற்­றும் நம்­பி­யாறு நதி­நீர் வெள்ள உபரி நீர்த் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மானூ­ரில் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் 
கல்­லூரி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">93 திருக்­கோ­யில்­க­ளில் சீர­மைப்­புப் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆயி­ரம் ஆண்டு பழ­மை­யான திருக்­கோ­யில் கள் திருப்­ப­ணி­கள் திட்­டத்­தின்­கீழ் 33 திருக்­கோ­யில் க­ளில் சீர­மைப்­புப் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்­பா­ச­முத்­தி­ரத்­தில் புற­வ­ழிச்­சாலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் பணி­க­ளைச் சொல்ல வேண்­டும் என்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">6 ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளைச் சார்ந்த 831 குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான கூட்­டுக் குடி­நீர்த் திட்­டப் பணி­களும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">களக்­காடு நக­ராட்சி மற்­றும் 7 பேரூ­ராட்­சி­க­ளுக்­கான கூட்­டுக் குடி­நீர்த் திட்­டப் பணி­க­ளும் முடி­வு­றும் நிலை­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மணி­முத்­தாறு அணைப்­ப­கு­தி­யில், சாக­சச் சுற்­றுலா வச­தி­கள், பல்­லு­யிர்ப் பூங்கா மற்­றும் இதர வச­தி­க­ளு­டன் சுற்­றுச்­சூ­ழல் சுற்­று­லாத் தல­மாக மேம்­ப­டுத்­தும் பணி­கள் தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, கூட்­டப்­புளி மற்­றும் கூடு­தாழை மீன­வக் கிரா­மங்­க­ளில் தூண்­டில் வளைவு அமைக்­கும் பணி­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரா­தா­பு­ரம் வட்­டம், விஜ­யா­ப­தி­யில், புதிய விளை­யாட்­ட­ரங்­கம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாழை­யூத்து முதல் கொங்­கந்­தான்­பாறை விலக்கு வரை மேற்­குப் புற­வ­ழிச்­சாலை அமைக்­கும் பணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவல்­கி­ணறு – இரா­தா­பு­ரம் சாலை­யில் இர­யில்வே மேம்­பா­லம் அமைப்­ப­தற்­கும், குல­வ­ணி­கர்­பு­ரம் பகு­தி­யில் Y வடிவ மேம்­பா­லம் அமைப்­ப­தற்­கும் விரை­வில் பணி­கள் தொடங்­கப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரா­தா­பு­ரம் வட்­டம், ஆலந்­து­ரை­யாற்­றின் குறுக்கே அமைந்­தி­ருக்­கும் கஞ்­சிப்­பாறை அணைக்­கட்டை மேம்­ப­டுத்தி, அதன் மேல்­மட்ட மற்­றும் கீழ்­மட்­டக் கால்­வாய்­களை அனு­மா­நதி வரை அக­லப்­ப­டுத்­தும் பணி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்­பா­ச­முத்­தி­ரம் வட்­டம், விக்­கி­ர­ம­சிங்­க­பு­ரம்கிரா­மத்­தில், கோரை­யாற்­றின் குறுக்கே நீர்த்­தேக்­கம்அமைக்­க­வும், சேரன்­ம­கா­தேவி வட்­டம், தெற்கு வீர­வ­நல்­லூர் கிரா­மத்­தில் வள்­ளி­மலை ஓடை­யின் குறுக்கே நீர்த்­தேக்­கம் அமைக்­க­வும், திசை­யன் விளை வட்­டத்­தில் இருக்­கும் குட்­டம் மற்­றும் அதைச்­சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளுக்கு வெள்ள நீரைத் திருப்பி விடு­வ­தற்­காக நம்­பி­யாற்­றின் குறுக்கே தடுப்­பணை அமைக்­க­வும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்­லத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பெய­ரில் மாபெ­ரும் நூல­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றிற்­கும் மேல், பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்­லத் அவர்­கள் பெய­ரில் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், மாபெ­ரும் நூல­கம் அமைய இருக்­கி­றது. இப்­படி சாத­னை­களை சொல்­லிக் கொண்டே போக­லாம்! இவ்­வ­ள­வும் செய்­தி­ருக்­கும் துணி­வோ­டு­தான்,உங்­க­ளி­டம் நான் உரி­மை­யு­டன் வாக்கு கேட்டுவந்­தி­ருக்­கி­றேன். ஆனா­லும், பழ­னி­சாமி அவர்­க­ளும்வாக்கு கேட்டு வரு­கி­றார்... எப்­படி வரு­கி­றார்? சுய­சிந்­தனை 
இல்­லா­மல் தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்­திய அவர்,</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>