<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 05 2026 04:06:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05042026-VLR-04" position.sequence="04" ex-ref="05042026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை    </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="55">துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி  பழனிசாமியால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43"> நெல்லையில் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...</lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="43">2–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="14">சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்  - 2026 தி.மு.க. தலைமையிலான    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து</lang>
	<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="14"> </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">போஸ் வெங்கட் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">தலைமைக் கழக அறிவிப்பு</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">"அண்ணா அறிவாலயம்"</lang>
	<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="12"> </lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="11">சென்னை – 18 நாள்– 02–04–2026.</lang>
	</hl9>
<hl10 id="Headline1" class="1" style="Headline10">
		<lang class="3" style="Headline10"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தலைமைக் கழகம்,</lang>
	</hl10>
<hl11 id="Headline1" class="1" style="Headline11">
		<lang class="3" style="Headline11"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="10">தி.மு.க.</lang>
	</hl11>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame296710_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup293125_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup298038_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="3_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="cmphoto_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="MarudhuAzhagur_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="Venkatc_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="8" source="maruthu_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துரோ­கத்­தின் மொத்த உரு­வ­மான தன்னை, மக்­கள் புறக்­க­ணித்­து­வி­டு­வார்­கள் என்று முடிவு செய்­து­விட்­டார். அத­னால்­தான், பத்து தோல்வி பழ­னி­சாமி, நம்­மு­டைய திட்­டங்­க­ளை­யெல்­லாம் காப்பி அடித்து, புதி­தாக ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், மக­ளிர் உரி­மைத்­திட்­டம்! கடந்த தேர்­த­லின்­போது, இந்­தத் திட்­டத்தை நாம் அறி­வித்­த­போது, இதைச் செயல்­ப­டுத்­தவே முடி­யாது என்று பழ­னி­சாமி சொன்­னார். மக்­க­ளி­டம் அந்த அறி­விப்­பிற்­குக் கிடைத்த வர­வேற்பை பார்த்து, கடந்த தேர்­த­லி­லேயே, அவ­ரும் மக­ளிர்க்­கான உத­வித்­தொ­கையை வழங்­கு­வோம் என்று, நம்மை விட அதி­க­மான தொகையை சொன்­னார். ஆனால், மக்­க­ளான நீங்­கள் என்ன முடி­வெ­டுத்­தீர்­கள்? கூசா­மல் பொய்­களை மட்­டுமே பேசும் பழ­னி­சா­மியை நம்ப மாட்­டோம் – துரோ­கங்­களை மட்­டுமே விரும்பி செய்­யும் பழ­னி­சா­மியை ஏற்­றுக் கொள்ள மாட்­டோம் என்ற, புதிய விடி­ய­லுக்­காக உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் வாக்­க­ளிப்­போம் என்று சொல்லி வாக்­க­ளித்­தீர்­கள். நாங்­க­ளும் சொன்­னது போன்றே, உரி­மைத்­தொகை கொடுக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">11வது தோல்­வியை பழ­னி­சா­மிக்­குத்­தர</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­கள் தயா­ராகி விட்­டார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது, அ.தி.மு.க. பா.ஜ.க போட்ட சதித்­திட்­டத்தை முறி­ய­டித்து ஐந்­தா­யி­ரம் ரூபா­யும் வழங்­கி­விட்­டோம்! அடுத்து திரா­விட மாடல் 2.0–வில் ஆயி­ரத்தை இரண்­டா­யி­ர­மாக உயர்த்­தித் தரப் போகி­றோம் என்று அறி­வித்­து­விட்­டோம்! அதே­போன்று, விடி­யல் பய­ணத்­தி­லும் பெண்­கள் சுதந்­தி­ர­மா­கப் பய­ணிக்க ஆரம்­பித்­து­விட்­டீர்­கள்! ஆனால், இந்­தத் திட்­டங்­களை எல்­லாம், கொச்­சைப்­ப­டுத்­திப் பேசி­னார் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது நம்­மு­டைய திட்­டங்­களை முடக்­கு­வோம்; தவிர்ப்­போம் என்று சொல்­லிக்­கொண்டு பிரச்­சா­ரத்­திற்­குச் சென்­றால் மக்­கள் விரட்­டி­ய­டிப்­பார்­கள் என்று தெரிந்து கொண்டு, மக­ளிர் உரி­மைத்­திட்­டத்­திற்­குக் குல­வி­ளக்கு என ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றார். இதைப் பார்த்து, மக்­கள் என்ன பேசிக்­கொள்­கி­றார்­கள் என்­றால், “ஸ்டாலின் சொன்­னதை மட்­டு­மல்ல – சொல்­லா­த­தை­யும் செய்­வார்! ஆனால், பழ­னி­சாமி சொன்­ன­தை­யும் செய்­ய­மாட்­டார்; சொந்­த­மா­க­வும் செய்­ய­மாட்­டார்” என்று கமெண்ட் அடிக்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள்! பழ­னி­சா­மிக்கு, பதி­னோ­ரா­வது தோல்வி ஸ்டிக்­கரை ஒட்ட மக்­க­ளும் தயா­ரா­கி­விட்­டீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் என்­றால், களத்­தில் இருப்­பது யார்? சூப்­பர்ஸ்­டார்! “சூப்­பர்ஸ்­டார் யாருனு கேட்­டால் தி.மு.க. தேர்­தல் அறிக்­கைனு சின்ன குழந்­தை­யும் சொல்­லும்!”. ஒரு பாட்டே இருக்­கி­றது. இப்­போது I.P.L. நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது, நிறைய சிக்­ஸர்­களை எல்­லாம் பார்த்­தி­ருப்­பீர்­கள். தேர்­தல் அறிக்கை மூல­மாக நாம் அடித்த சிக்­ஸர்­க­ளில் சில­வற்றை மட்­டும் இப்­போது ஹைலைட்­டாக சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சிக்­ஸர்­கள் எத்­தனை  சிக்­ஸர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் சிக்­ஸர் – இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு கூப்­பன் வழங்­கும் திட்­டம்... எவ்­வ­ள­விற்­குக் கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்­குக் கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டுஉப­யோ­கப் பொருளை, புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புது பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்டை வாங்­கிக் கொள்­ள­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு இனி­மேல், உரி­மைத்­தொகை இரண்­டா­யி­ரம் ரூபா­யாக கிடைக்­கப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­டுத்த சிக்­ஸர்­களை வரி­சை­யாக சொல்­கி­றேன்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை உண­வுத்­திட்­டம் – குழந்­தை­க­ளின் பசி­யைப் போக்­கும் திட்­டம் மட்­டு­மல்ல, இல்­லத்­த­ர­சி­க­ளின் பணிச்­சு­மை­யைக் குறைக்­கும் திட்­டம்! முத­லில் ஐந்­தாம் வகுப்பு வரை இருந்து காலை உண­வுத்­திட்­டத்தை, இனி­மேல் எட்­டாம் வகுப்பு வரைக்­கும் விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, 20 இலட்­சத்­திற்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், எவ்­வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புது­மைப்­பெண் திட்­டத்­தி­லும், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தி­லும் இனி­மேல் மாதம் ஆயி­ரம் அல்ல; ஆயி­ரத்து 500 ரூபாய் வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில், நான் முதல்­வன் திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யு­டன் 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை ஆயி­ரத்து 500 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன்­பி­டித் தடைக்­கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 12 ஆயி­ரம் ரூபா­யா­க­வும், மீன்­பி­டிக் குறை­வுக் காலச் சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 9 ஆயி­ரம் ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2030–ஆம் ஆண்­டுக்­குள் மாவட்ட மற்­றும் வட்ட அள­வி­லான அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் டயா­லி­சிஸ் சிகிச்­சைக்­கான கரு­வி­கள் இரண்டு மடங்­காக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில், பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்­கும் பொருட்டு, ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­கள் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­க­ளின் பாது­காப்­பிற்­காக அனைத்து நக­ரங்­க­ளுக்­கும் ‘பிங்க் பேட்­ரால்’ வாக­னங்­கள் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய­உ­த­விக் குழுப் பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்­கிக் கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக, வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தென் மாவட்­டங்­கள் கல்வி மற்­றும் சுகா­தா­ரக் குறி­யீ­டு­க­ளில் உரிய வளர்ச்­சியை பெற­வும், தொழில்­ம­ய­மா­வதை உறு­தி­செய்­ய­வும் இந்­தத் தென்­மா­வட்­டங்­க­ளுக்­காக ஒரு சிறப்பு வளர்ச்­சித் திட்­டம் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் சொன்­னால், சொன்­ன­தைச் செய்­வோம்! நான் கலை­ஞ­ரின் மகன்! சொன்­னதை மறக்­க­வும் மாட்­டேன்; மறுக்­க­வும் மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­தனை சாத­னை­க­ளைச் செய்­து­விட்டு, எதிர்­கா­லத்­திற்­கான தொலை­நோக்­குத் திட்­டங்­களை உரு­வாக்­கி­விட்டு, நான் உங்­க­ளி­டம் வாக்கு கேட்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், டபுள் எஞ்­சின் – டப்பா எஞ்­சின் என்று வரும், அமித்ஷா ஆட்­டு­விக்­கும் பழ­னி­சாமி அங்­கம் வகிக்­கும் N.D.A. கூட்­ட­ணி­யின் இலட்­ச­ணம் என்ன? மக்­க­ளுக்­காக அவர்­கள் செய்­த­தெல்­லாம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2014–இல் பிர­த­மர் மோடி ஆட்­சிக்கு வந்­தார். 2016–இல் பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்கை என்று சொல்லி, நாட்டு மக்­கள் எல்­லோ­ரை­யும் பேங்க் வாச­லி­லும், ஏ.டி.எம். வாச­லி­லும் இரவு பக­லா­கக் கால்­க­டுக்க நிற்க வைத்­தார்? எத்­தனை பேர் இறந்­தார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, கொரோனா வந்­தது. எல்­லோ­ரும், வீட்­டில் இருக்­கும் தட்­டைத் தட்­டுங்­கள் – மணி­ய­டிங்­கள் என்று ஒரு காமெடி ஷோவே நடத்­தி­னார். கோடிக்­க­ணக்­கான மக்­களை, நடுத்­தெ­ரு­வில் நடக்க வைத்­தார். ஆக்­சி­ஜன் சிலிண்­ட­ருக்­காக மக்­களை அல்­லல்­பட வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது மேற்­கா­சி­யப் போர் நடக்­கி­றது. பொறுப்­பான மாநில அர­சாக, நாங்­கள் முத­லி­லேயே சலு­கைத் திட்­டங்­களை அறி­வித்­து­விட்­டோம். ஆனால், பிர­த­மர், கொரோனா காலம் மாதிரி ரெடி­யாக இருங்­கள் என்று சொல்­லி­விட்டு, மக்­களை கேஸ் சிலிண்­ட­ருக்­கா­கக் காத்­தி­ருக்க வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதெல்­லாம் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­விற்கு என்­றால், தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வ­ரைக்­கும் பா.ஜ.க. ஆட்­சி­யில், தமிழ்­நாட்­டிற்­குக் கல்வி நிதி இல்லை. ஜி.எஸ்.டி இழப்­பீடு இல்லை. நீட் தேர்வு விலக்கு இல்லை. தமிழ்­மொழி வளர்ச்­சிக்கு நிதி கிடை­யாது. இர­யில்வே திட்­டங்­கள் கிடை­யவே கிடை­யாது. மெட்ரோ ரயில் திட்­டம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அத்­தி­பூத்த மாதிரி ஒன்னே ஒன்னு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கண்ணே கண்ணு மதுரை, எய்ம்ஸ்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத்­தி­பூத்த மாதிரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையை அறி­வித்­தார்­களே... அதன் நிலைமை என்ன? அந்த ஆர்­டரை யாரா­வது ஒரு­வர் எடுத்­துக்­கொண்டு, டெல்­லி­யி­லி­ருந்து பொடி­ந­டை­யாக மது­ரைக்கு வந்­தி­ருந்­தால் கூட, இந்­நே­ரம் எய்ம்­ஸைக் கட்­டி­மு­டித்­தி­ருக்­க­லாம். ஆனால், தமிழ்­நாட்­டிற்கு இன்­றைக்கு வரைக்­கும் எய்ம்ஸ் கட்­ட­டம் வர­வில்லை! தமிழ்­நாட்­டிற்கு ஒன்­றுமே இல்லை என்­ப­து­தான் மோடி மாடல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிலை­யில், தமிழ்­நாட்­டில் பா.ஜ.க. என்று சொன்­னாலே விரட்­டி­ய­டிக்­கி­றார்­களே, எப்­படி தமிழ்­நாட்­டில் கால் பதிப்­பது என்று நினைத்­தார்­கள். தமி­ழர்­க­ளுக்கு துரோ­கம் செய்ய யாரா­வது கிடைப்­பார்­களா என்று வலை­வீ­சித் தேடி­னார்­கள். அப்­படி கிடைத்­த­வர்­தான் துரோ­கத்­தில் டாக்­ட­ரேட் வாங்­கிய பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ருக்கு N.D.A.–வில் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும் ரோல் என்ன தெரி­யுமா? சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்­பது! தமி­ழுக்கு விரோ­த­மான பா.ஜ.க.வுக்கு வக்­கா­லத்து வாங்­கு­வது! இந்­தி­யைத் திணிக்­கும் பா.ஜ.க.வுக்­குத் துணை போவது! அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தையே கேலிக்­கூத்­தாக்­கும் பா.ஜ.க.வுக்கு சாம­ரம் வீசு­வது! ‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ என்று ஜன­நா­ய­கத்­தைச் சிதைக்­கும் பா.ஜ.க.வுக்கு, ஜால்ரா போடு­வது! இட­ஒ­துக்­கீட்­டை­யும் சமூ­க­நீ­தி­யை­யும் அழிக்­கும் பா.ஜ.க.வுக்கு சிவப்­புக் கம்­ப­ளம் விரிப்­பது! இறு­தி­யாக, அ.தி.மு.க.–வை, அமித்­ஷா­வி­டம் தாரை­வார்ப்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட பழ­னி­சாமி, நேற்று ஒரு பொதுக்­கூட்­டத்­தில் என்ன பேசி­யி­ருக்­கி­றார் தெரி­யுமா? எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்­கிய தலை­வர் கலை­ஞர். கலை­ஞ­ரை­நான் வீட்­டுச் சிறை­யில் வைத்­தி­ருந்­தேன் என்று நாக்­கில் நரம்­பில்­லா­மல் பேசி­யி­ருக்­கி­றார்.  எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களே... தோல்வி பயத்­தில் எல்லை மீறிப் பேசத் தொடங்­கி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ராக என்­னு­டைய செயல்­பா­டு­களை விமர்­சிக்க எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான உங்­க­ளுக்கு எல்லா உரி­மை­யும் இருக்­கி­றது. தேர்­த­லில் அதை மக்­கள் எடை­போட்­டுப் பார்ப்­பார்­கள். உங்­க­ளுக்­குத் தக்க பதி­ல­டி­யைக் கொடுக்­கத்­தான் போகி­றார்­கள். ஆனால், தலை­வர் கலை­ஞ­ரு­டன் ஒரு மக­னாக என்­னு­டைய உற­வைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்­க­ளுக்கு எந்த உரி­மை­யும் கிடை­யாது. எந்­தத் தகு­தி­யும் கிடை­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­வர் கலை­ஞ­ரைப் பற்றி உங்­க­ளுக்கு என்ன தெரி­யும்? தலை­வர் கலை­ஞர் ஒரு சிங்­கம்! வாழ்ந்த காலம் வரை, கோடிக்­க­ணக்­கான தொண்­டர்­களை என் உயி­ரி­னும் மேலான ‘உடன்­பி­றப்­பு­களே’ என்ற ஒற்றை மந்­தி­ரத்­தில் கட்­டிப் போட்­டி­ருந்­த­வர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள். முது­மை­யால் உடல்­நிலை சரி­யில்­லா­மல் வீட்­டில் ஓய்­வெ­டுத்­தார். நினை­வாற்­றலை இழந்­த­போ­து­கூட, மருத்­து­வர்­கள் உங்­க­ளுக்கு யாரைப் பிடிக்­கும் என்று கேட்­டால், “அண்ணா... அண்ணா...” என்று சொன்ன பேர­றி­ஞர் அண்­ணா­வின் அன்­புத் தம்பி அவர். முடி­யாத நிலை­யில்­கூட, அறி­வா­ல­யம் செல்ல வேண்­டும், முர­சொ­லிக்கு செல்ல வேண்­டும் என்று துடித்­த­வர். அவரை யாரும் சிறை வைக்க முடி­யாது. அவ­ரு­டைய இத­யச்­சி­றை­யில்­தான் நான் உட்­பட உடன்­பி­றப்­பு­கள் அத்­தனை பேரும் குடி­யி­ருந்­தோம். எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களே... தலை­வர் கலை­ஞர் பெய­ரைச் சொல்­லக்­கூட உங்­க­ளுக்­குத் தகு­தி­யும் கிடை­யாது; எந்­த­வித யோக்­கி­ய­தை­யும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5 முறை மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ராக இருந்து, இந்­தத் தமிழ்­நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரே முத­ல­மைச்­சர், தலை­வர் கலை­ஞர். அவ­ரு­டைய கடைசி ஆசை என்ன? அவ­ரு­டைய தலை­வ­ரா­கப் பேர­றி­ஞர் அண்­ணா­விற்கு அருகே அடக்­கம் செய்ய வேண்­டும். அப்­பா­வுக்­காக அல்ல, தலை­வ­ருக்­காக. நானே உங்­கள் வீட்­டுப் படி­யேறி வந்து, கையெ­டுத்­துக் கும்­பிட்­டுக் கேட்­டேனே... என்­னு­டைய தந்­தைக்­காக அல்ல, தமி­ழி­னத்­தின் தலை­வர் அவர். கடற்­க­ரை­யில் இடம் கொடுங்­கள் என்று அந்­தச் சோக சூழ்­நி­லை­யில்­கூட உங்­கள் முன்­னால் வந்து நின்­றேனே... கொடுத்­தீர்­களா? இரக்­கம் இல்­லா­மல் மறுத்­த­வர்­தானே நீங்­கள்! அப்­ப­டிப்­பட்ட உங்­க­ளுக்கு, எங்­கள் தலை­வ­ரைப் பற்றி பேச எந்த யோக்­கி­ய­தை­யும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­கள் யோக்­கி­யதை என்ன தெரி­யுமா? உங்­களை நம்­பிப் பதவி கொடுத்த சசி­க­லா­வின் காலையே வாரி­விட்­ட­வர் நீங்­கள். நம்­பிய டி.டி.வி. தின­க­ர­னை­யும், சகோ­த­ரர் O.P.S. அவர்­க­ளை­யும் முகு­கில் குத்­தி­ய­வர் நீங்­கள். உங்­க­ளுக்கு நினை­வி­ருக்­கி­றதா? அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் உடல் நலக்­கு­றை­வால் சட்­ட­மன்ற அவைக்கு வரா­மல் இருக்க ஒரு தீர்­மா­னம் கொண்டு வந்­தார்­கள். அதை ஆத­ரித்த இயக்­கம் தி.மு.க. இது­தான் உங்­க­ளுக்­கும் – எங்­க­ளுக்­கும் இருக்­கும் வித்­தி­யா­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எந்­தக் காலத்­தி­லும் அ.தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆட்­சிக்கு வரவே முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடித்­துச் சொல்­கி­றேன்... உங்­க­ளால் எந்­தக் காலத்­தி­லும் ஆட்­சியை பிடிக்­கவே முடி­யாது. உறு­தி­யாக சொல்­கி­றேன்... கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் இருக்­கும் வரை உங்­க­ளால் ஆட்­சி­யின் பக்­கமே வர முடி­யாது. இது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைக் காக்க, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் மீண்­டும் ஆட்­சிக்கு வர வேண்­டும் என்று மக்­கள் முடிவு செய்­து­விட்­டார்­கள்! இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கும் வளர்ச்சி நீடிக்க வேண்­டும் என்­றால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் ஆள வேண்­டும்! தமிழ்­நாடு தலை­நி­மிர்ந்தே இருக்க வேண்­டும் என்­றால், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­தான், வெற்றி பெற வேண்­டும்! அந்த வெற்றி, இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கும் மாபெ­ரும் வெற்­றி­யாக இருக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் எல்­லோ­ரும் ஒரு விஷ­யத்தை நன்­றா­கப் புரிந்து கொள்ள வேண்­டும்... நாம் போரா­டு­வது தி.மு.க.வின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல; நம்­மு­டைய கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக! மறந்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, நம்­மு­டைய தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரும், தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு, ராதா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் அப்­பாவு அவர்­க­ளுக்­கும், பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் அப்­துல் வகாப் அவர்­க­ளுக்­கும், திரு­நெல்­வேலி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை ஆத­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, நாங்­கு­நேரி சட்­ட­மன்­றத் தொகு­திக்கு காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் ரூபி மனோ­க­ரன் அவர்­க­ளுக்­கும், அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் V.P. துரை அவர்­க­ளுக்­கும், கை சின்­னத்­தில் உங்­க­ளின் பொன்­னான வாக்­கு­களை அளித்து, வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், எங்­க­ளின் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் அள­விற்கு சிறப்­பான ஆட்­சியை, தமிழ்­நாட்­டைப் புதிய உய­ரங்­க­ளுக்கு கொண்டு செல்­லும் ஆட்­சியை, நாங்­கள் வழங்­கு­வோம்! உங்­கள் எல்­லோ­ரு­டைய ஆத­ர­வு­டன் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி தமிழ்­நாட்­டைக் காக்­கும்! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>