<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,434,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 05 2026 04:07:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260405T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05042026-VLR-07" position.sequence="07" ex-ref="05042026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">சென்­னை­யில், சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கே­ணிக்­குட்­பட்ட சிறு­பான்­மை­யின அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டனான கலந்­து­ரை­யா­டல்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">பாசிச பா.ஜ.க.–வைத் துணிச்­ச­லோடு எதிர்த்து நிற்­கும் கழ­கத் தலை­வ­ரின் கரங்­களை நீங்­கள் பலப்­ப­டுத்த வேண்­டும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">திரு­வல்­லிக்­கே­ணி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup300126_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">சென்னை,ஏப்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">சென்­னை­யில், சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக் கேணிக்­குட்­பட்ட சிறு­­பான்­மை­ யின அமைப்­பு­கள், கல்வி நிறு­வ­னங்­கள், தொழில் நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டான கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும், தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் கலந்­து­கொண்டு பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">அப்­போது அவர், ``சிறு­பான்மை மக்­க­ளுக்கு எப்­போ­தும் பாது­காப்­பாக இருக்­கக்­கூ­டிய தி.மு.க–வை நீங்­கள் தொடர்ந்து ஆத­ரிக்க வேண்­டும். பா.ஜ.க–வைத் துணிச்­ச­லோடு எதிர்த்து நிற்­கின்ற நம் தலை­வ­ரின் கரத்தை நீங்­கள் அத்­தனை பேரும் பலப்­ப­டுத்த வேண்­டும் என்றும், நான் உங்­க­ளை­யெல்­லாம் அன்­போ­டும், உரி­மை­யோ­டும் கேட்­டுக்­கொள்­கி­றேன்’’ என்றும் குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும், தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் ராயப்­பேட்­டை­யில் நடை­பெற்ற சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட சிறு­பான்மை மக்­கள், சிறு­பான்­மை­யின கல்வி நிறு­வ­னங்­கள், தொழில் நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று ஆற்றிய உரைவருமாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">நம் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யைச் சேர்ந்த, தமிழ்­நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளில் இருந்து சிறு­பான்­மைச் சொந்­தங்­கள் நீங்­க­ளெல்­லாம் வந்­தி­ருக்­கி­றீர்­கள், உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­பது மிகுந்த மகிழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">உங்­க­ளி­டத்­தில் முத­லில் நான் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கின்­றேன். ஏனென்­றால், இந்த நிகழ்ச்சி ஏற்­க­னவே இரண்டு முறை நடை­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்டு, அந்த இரண்டு முறை­யும் என்­னால் வர முடி­யா­மல், இன்­றைக்கு மூன்­றா­வது முறை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. அந்த இரண்டு முறை­யும் கழ­கத்­தின் வேட்­பா­ளர்­கள் தேர்வு நிகழ்ச்சி நடந்­து­கொண்­டி­ருந்­தது. அத­னால், நான் தலை­வர் முத­ல­மைச்­ச­ரு­டன் இருக்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இருந்­தா­லும் இன்­றைக்கு என் அழைப்பை ஏற்று இவ்­வ­ளவு சிரித்த முகத்­து­டன் நீங்­க­ளெல்­லாம் வந்­தி­ருக்­கி­றீர்­கள். இஸ்­லா­மி­யச் சகோ­த­ரி­கள் அனை­வ­ருக்­கும் இந்த நேரத்­தில் என் நன்­றியை நான் மீண்­டும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அறி­மு­கம் தேவை­யில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">உங்­க­ளுக்கு நானும், எனக்கு நீங்­க­ளும் அறி­மு­கம் தேவை­யில்லை. உங்­க­ளில் பலரை நான் பல முறை தனித்­த­னி­யா­கச் சந்­தித்­தி­ருக்­கி­றேன். ஆனால், இன்­றைக்கு எல்­லா­ரும் ஒரே இடத்­தில் சந்­திப்­ப­தற்­கான வாய்ப்பு நமக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது. இந்த நிகழ்ச்­சியை முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பாக ஒருங்­கி­ணைத்­தி­ருக்­கக்­கூ­டிய மாவட்­டச் செய­லா­ளர் அவர்­க­ளுக்­கும், அண்­ணன் ரஹ்­ம­துல்லா அவர்­க­ளுக்­கும் என் நன்­றியை மீண்­டும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கும் சிறு­பான்மை மக்­க­ளுக்­கு­மான உறவை பற்றி நான் உங்­க­ளுக்­குச் சொல்­லத் தேவை­யில்லை. அது இன்­றைக்கு நேற்று தொடங்­கிய உறவு கிடை­யாது. கண்­ணி­யத்­துக்­கு­ரிய காயிதே மில்­லத் அவர்­கள் மீது பேர­றி­ஞர் அண்­ணா­வாக இருக்­கட்­டும், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ராக இருக்­கட்­டும், மிகுந்த மதிப்பு உடை­ய­வர்­கள். அதே மாதிரி கண்­ணி­ய­மிகு காயிதே மில்­லத் அவர்­க­ளும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது மிகுந்த மரி­யா­தை­யும், நம்­பிக்­கை­யும் வைத்­தி­ருந்­தார். ஆகவே, அந்த உரி­மை­யோ­டும் பாசத்­தோ­டும் நான் உங்­க­ளை­யெல்­லாம் இங்கே சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">உங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இன்­னும் சொல்­லப்­போ­னால் நானும் உங்­க­ளில் ஒரு­வன், உங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வன், நாம் எல்­லாம் ஒரே குடும்­பம் என்­கிற உணர்­வோ­டு­தான் நான் இன்­றைக்கு இங்கே வந்­தி­ருக்­கி­றேன். மிக முக்­கி­ய­மான ஒரு கால­கட்­டத்­தில் நாம் இன்று சந்­தித்­தி­ருக்­கி­றோம். சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு இன்­னும் சரி­யாக 20 நாட்­கள் இருக்­கின்­றன. இன்­றைக்கு மூன்­றாம் தேதி, 23–ஆம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­தல். இந்­தத் தேர்­தலை ஒட்டி ஒரு முக்­கி­ய­மான பணி­யாக இன்­றைக்­குக் காலை என்­னு­டைய தொகுதி மக்­க­ளை­யெல்­லாம் சந்­தித்­து­விட்டு, உங்­க­ளைச் சந்­திப்­பதை என் கட­மை­யாக எண்ணி இங்கே வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யா­வுக்கே ஒரு முன்­மா­திரி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">சிறு­பான்­மை­யின மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காக்­கின்ற நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் மீண்­டும் ஆட்­சிக்கு வரும், மீண்­டும் ஆட்­சிக்கு வர வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் நாம் இங்கே சந்­தித்­தி­ருக்­கி­றோம். அது­வும் எனக்கு என்ன பெருமை என்­றால், நம் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி சட்­ட­மன்­றத் தொகுதி என்­ப­தும் மத­நல்­லி­ணக்­கத்­துக்கு இந்­தி­யா­வுக்கே ஒரு முன்­மா­திரி தொகுதி என்று சொன்­னால் அது மிகை­யா­காது. அவ்­வ­ளவு ஒற்­று­மை­யு­டன் இங்கே அத்­தனை பேரும் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">ஏற்­க­னவே முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­களை நீங்­கள் இந்­தத் தொகு­தி­யில் வெற்றி பெற வைத்­தி­ருக்­கி­றீர்­கள். அவர் வழி­யில், எனக்­கும் அந்த வாய்ப்­பைச் சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது கொடுத்­துப் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தந்­தீர்­கள். அந்த வகை­யில் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பணி­யாற்­று­வ­தில் நான் மிகுந்த பெருமை அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">சேப்­பாக்­கம் செல்­லப்­பிள்ளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்­டின் எந்த மாவட்­டத்­துக்­குப் போனா­லும், ஏன் இன்­னும் சொல்­லப்­போ­னால், பல வெளி மாநி­லங்­க­ளுக்­குப் போனா­லும் என்னை அவர்­கள் ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக மட்­டும் பார்ப்­ப­தில்லை. விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ராக மட்­டும் பார்ப்­ப­தில்லை. துணை முத­ல­மைச்­ச­ராக மட்­டும் பார்ப்­ப­தில்லை. அவர்­கள் என்­னைச் செல்­ல­மாக அழைப்­பதே `சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கே­ணி­யின் செல்­லப் பிள்ளை நீங்­கள்’ என்­று­தான் இந்­தத் தொகு­திப் பெய­ரைச் சொல்லி என்னை அழைப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">உங்­கள் எல்­லா­ருக்­குமே நன்­றா­கத் தெரி­யும். நான் என்­றைக்­குமே களத்­தில் மக்­க­ளோடு மக்­க­ளாக உங்­க­ளோடு நிற்­ப­வன். கடந்த ஐந்து வரு­டங்­க­ளா­க­வும் எந்­தப் பிரச்­சினை எது­வா­னா­லும் உங்­க­ளோடு நின்­றி­ருக்­கி­றேன். அது ரம்­ஜா­னாக இருந்­தா­லும் சரி, கிறிஸ்­து­ம­ஸாக இருந்­தா­லும் சரி, பொங்­க­லாக இருந்­தா­லும் சரி, கோவிட் கால­மாக இருந்­தா­லும் சரி, எல்லா நாட்­க­ளும் உங்­க­ளில் ஒரு­வ­னாக என் அர­சி­யல் பய­ணத்­தைத் நான் பய­ணித்­தி­ருக்­கி­றேன். இன்­னும் அதி­க­மாக உங்­க­ளுக்­காக உழைப்­ப­தற்­கும் நான் தயா­ராக இருக்­கி­றேன். அதற்கு உங்­க­ளின் ஆத­ரவு மிக மிக முக்­கி­யம். அந்த ஆத­ர­வைத் தேடி இன்­றைக்கு உங்­க­ளி­டம் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">கலை­ஞ­ரின் வழி­யில் நம் தலை­வர், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றைக்­குச் சிறு­பான்­மை­யின மக்­க­ளின் பாது­கா­வ­ல­னா­கத் திகழ்ந்­து­கொண்டு இருக்­கி­றார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைப் பொறுத்­த­வ­ரைக்­கும் என்­றைக்­குமே சிறு­பான்மை மக்­க­ளின் காவல் அர­ணாக, அவர்­க­ளின் நல­னுக்­காக அடுக்­க­டுக்­கான திட்­டங்­க­ளை­யும் நம் அரசு நிறை­வேற்றி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">கலை­ஞர் அவர்­கள்­தான் சிறு­பான்மை மக்­க­ளுக்கு இட ஒதுக்­கீட்­டில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு 3.5% இட ஒதுக்­கீடு கொடுத்­த­வர். அதே மாதிரி உல­மாக்­கள் நல வாரி­யத்தை உரு­வாக்­கி­ய­தும் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்­தான். கண்­ணி­யத்­துக்­கு­ரிய காயிதே மில்­லத் அவர்­க­ளின் பெயரை அரசு கல்­லூ­ரிக்கு பெய­ரைச் சூட்­டி­ய­வ­ரும் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">வக்ஃப் நிறு­வ­னங்­கள் புன­ர­மைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இன்­றைக்கு நம் கலை­ஞர் வழி­யில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார். ஹஜ் யாத்­தி­ரைக்­குப் செல்­கின்ற இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கான மானி­யத் தொகையை 6 கோடி ரூபா­யி­லி­ருந்து நம் திரா­விட மாடல் அரசு, நம் முத­ல­மைச்­சர்­தான் 10 கோடி ரூபா­யாக உயர்த்­திக் கொடுத்­தி­ருக்­கி­றார். சமீ­பத்­தில் ஹஜ் பய­ணி­க­ளுக்கு உத­வு­கின்ற வகை­யில், நம் சென்னை விமான நிலை­யத்­துக்­குப் பக்­கத்­தில் 40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் `ஹஜ் இல்­லம்’ கட்­டப்­பட்டு வரு­கி­றது. நிச்­ச­ய­மாக நம் முத­ல­மைச்­சர்­தான் மீண்­டும் ஆட்சி அமைத்து  விரை­வில் அத­னைத் திறப்­பார்­கள். அது­மட்­டு­மல்­லா­மல், ஆண்­டு­தோ­றும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் 100 வக்ஃப் நிறு­வ­னங்­கள் இன்­றைக்­குப் புன­ர­மைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">உல­மாக்­கள் ஓய்­வூ­தி­யம் 3,000 ரூபா­யி­லி­ருந்து இன்­றைக்கு நம் முத­ல­மைச்­சர்­தான் 5,000 ரூபா­யாக அதனை உயர்த்­திக் கொடுத்­தி­ருக்­கி­றார். இப்­படி இன்­னும் பல திட்­டங்­களை நான் வரி­சைப்­ப­டுத்­திச் சொல்ல முடி­யும். சிறு­பான்­மை­யி­னர் தொழில் முத­லீட்­டுக் கழ­கம் மூல­மா­கச் சுமார் 280 கோடி ரூபாய் கடன் இணைப்­பு­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு­பு­றம் சிறு­பான்மை மக்­க­ளுக்­கான திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்டு இருக்­கின்­றன.  இன்­னொ­ரு­பு­றம் மதச்­சார்­பின்­மை­யைப் பாது­காக்­கின்ற அர­சி­யல் கட­மை­யை­யும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு என்­றைக்­குமே அமை­திப் பூங்கா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் வெறுப்­புப் பிரச்­சா­ரங்­கள் நடந்­தா­லும், மத­வா­தம் தலை­தூக்கி ஆடி­னா­லும், தமிழ்­நாடு மட்­டும் என்­றைக்­குமே ஓர் அமை­திப் பூங்­கா­வாக இருந்­தி­ருக்­கி­றது. அதற்கு கார­ணம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இன்­றைக்கு வட இந்­தி­யா­வில் பாசிச சக்­தி­கள் தலை­வி­ரித்து ஆடிக்­கொண்­டி­ருக்­கின்­றன என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்­தில் புகுந்து தாக்­கு­கி­றார்­கள். இஸ்­லா­மி­யர்­க­ளைத் தாக்­கு­கி­றார்­கள். வீடு­க­ளைப் புல்­டோ­சர் கொண்டு இடிக்­கி­றார்­கள். அஸ்­ஸாம் மாநி­லத்­தின் பா.ஜ.க முத­ல­மைச்­சர் இஸ்­லா­மி­யர்­களை அச்­சு­றுத்­து­வது போலத் தன்­னு­டைய சமூக வலை­த­ளத்­தில் அவரே பதி­வு­கள் போடு­கி­றார். அதன் பிறகு, நாடு முழு­வ­தும் மிகுந்த எதிர்ப்பு கிளம்­பி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">ஒரு வாரத்­துக்கு முன்பு உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் ஒரு பட­கில் ரம்­ஜான் விருந்து சாப்­பிட்ட இஸ்­லா­மிய இளை­ஞர்­கள் 14 பேரை போலீஸ் கைது செய்­தி­ருக்­கி­றது. இப்­போது அவர்­க­ளுக்கு நீதி­மன்­றத்­தில் பிணை இல்லை என்று மறுத்­து­விட்­டார்­கள். இப்­ப­டித்­தான் வட மாநி­லங்­க­ளில் சிறு­பான்­மை­யின சமூ­கங்­களை அச்­சு­றுத்தி, பய­மு­றுத்தி வைத்­தி­ருக்­கி­றார்­கள். அதே போன்­ற­தொரு நிலை­மை­யைத் தமிழ்­நாட்­டுக்­குள்­ளும் ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­ப­து­தான் பாசிச சக்­தி­க­ளின் ஒரே எண்­ணம். நிச்­ச­யம் தி.மு.க இருக்­கின்ற வரைக்­கும், எங்­க­ளின் தலை­வர் இருக்­கின்ற வரைக்­கும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இருக்­கின்ற வரைக்­கும் தமிழ்­நாட்­டில் அதனை நாங்­கள் நடக்க விடவே மாட்­டோம். தமிழ்­நாட்­டில் இது எடு­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சிறு­பான்மை மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காப்­ப­தில் மிக­வும் உறு­தி­யாக இருக்­கி­றார்­கள். உதா­ர­ண­மாக, ஒன்­றிய பாசிச பா.ஜ.க அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரி­யத் திருத்த மசோ­தா­வுக்கு எதி­ரா­கச் சட்­ட­மன்­றத்­தில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான் முதன்­மு­த­லில் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­னார்­கள். அத்­து­டன் நிறுத்­த­வில்லை. இன்­றைக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­லும் தி.மு.க சார்­பாக அதற்­கா­கப் போரா­டிக்­கொண்டு இருக்­கி­றோம், வழக்­குத் தொடர்ந்­தி­ருக்­கி­றோம். ஆனால் யோசித்­துப் பாருங்­கள், அந்த வக்ஃப் வாரி­யத் திருத்த மசோ­தாவை பாசிச பா.ஜ.க. கொண்டு வந்த சம­யத்­தில்­தான் இங்கே இருக்­கக்­கூ­டிய அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் அமித்­ஷா­வு­டன் கூட்­டணி பேச்­சு­வார்த்­தையை நடத்­திக்­கொண்டு இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">என்­னு­டைய முதல் போராட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இங்கே ஏற்­க­னவே சொன்­னது போல, என் பொது­வாழ்க்­கை­யில் நான் பல­முறை கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றேன். ஆனால் நான் என்­றைக்­குமே பெரு­மை­யா­கச் சொல்­வ­துண்டு. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்­டத்­தைக் கொண்டு வந்­த­போது அதனை எதிர்த்து, அதைக் கிழித்­தெ­றிந்­த­து­தான் என்­னு­டைய முதல் போராட்­டம், நான் கைது செய்­யப்­பட்ட முதல் போராட்­டம். அதனை என்­றைக்­குமே நான் பெரு­மை­யா­கச் சொல்­வ­துண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்­டுக்கு என்று என்­றைக்­குமே ஒரு தனி அடை­யா­ளம் உண்டு, தனித்­தன்மை உண்டு. மத­நல்­லி­ணக்­கத்­தைப் பேசு­ப­வர்­கள் நாம். தமிழ்­நாட்டு மக்­கள்­தான் என்­றைக்­குமே நம்மை ஆத­ரிப்­பார்­கள். வெறுப்பு அர­சி­ய­லைப் பரப்­பு­கின்ற பா.ஜ.க.–வைத் தமிழ்­நாட்டு மக்­கள் என்­றைக்­குமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய முடி­யா­மல் இருக்­கக்­கூ­டிய சிறு­பான்­மை­யி­னர் விரோத பா.ஜ.க–வை இன்­றைக்கு அ.தி.மு.க எப்­ப­டி­யா­வது தன் தோள் மீது வைத்து, தமிழ்­நாட்­டுக்­குள் அழைத்து வர முயற்சி செய்­கி­றது. நாம் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">சிறு­பான்மை மக்­க­ளுக்கு எப்­போ­தும் பாது­காப்­பாக இருக்­கக்­கூ­டிய தி.மு.க–வை நீங்­கள் தொடர்ந்து ஆத­ரிக்க வேண்­டும். பா.ஜ.க–வைத் துணிச்­ச­லோடு எதிர்த்து நிற்­கின்ற நம் தலை­வ­ரின் கரத்தை நீங்­கள் அத்­தனை பேரும் பலப்­ப­டுத்த வேண்­டும் என்று நான் உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு, உரி­மை­யோடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">நம் ராய­பு­ரம் சட்­ட­மன்ற வேட்­பா­ளர் சகோ­த­ரர் சுபேர்­கான் அவர்­க­ளும் வந்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் நம் தலை­வர் அடிக்­கடி சொல்­வது போல, இது ஒரு சாதா­ரண சட்­ட­மன்­றத் தேர்­தல் கிடை­யாது. இது டெல்­லிக்­கும் அணிக்­கும், தமிழ்­நாடு அணிக்­கு­மான போட்டி. மத­நல்­லி­ணக்­கத்­துக்­கும் பாசி­சத்­துக்­கும் இடையே நடக்­கின்ற போட்டி. இதில் நம் தமிழ்­நாடு அணி நிச்­ச­யம் வெற்­றிப்­பெற்­றுக் காட்ட வேண்­டும். அதில் நாம் உறு­தி­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">ஆகவே, கழ­கம் ஏழா­வது முறை­யாக ஆட்சி அமைக்க வேண்­டும், நம் தலை­வர் மீண்­டும் இரண்­டா­வது முறை­யாக முத­ல­மைச்­சர் பொறுப்­பில் அமர வேண்­டும், திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­தாக வேண்­டும். அதற்கு மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி ஆட்­சிக்கு வர­வேண்­டும். குறிப்­பாக நம் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி, ராய­பு­ரம், அண்ணா நகர், ஆயி­ரம்­வி­ளக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் மட்­டு­மல்­லா­மல்,234 தொகு­தி­க­ளி­லும் நம் சிறு­பான்மை மக்­கள் நம் அர­சுக்­கும் கழ­கத்­துக்­கும் துணை நிற்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இங்கே சில கோரிக்­கை­க­ளை­யும் நீங்­கள் வைத்­தி­ருக்­கி­றீர்­கள். நிச்­ச­ய­மாக உங்­க­ளின் கோரிக்­கை­களை நம் முத­ல­மைச்­ச­ரின் கவ­னத்­துக்கு எடுத்­துச்­சென்று, ஆட்சி அமைந்த உடனே ஒவ்­வொன்­றாக, படிப்­ப­டி­யா­கச் செய்து தரப்­ப­டும் என்­கிறவாக்­கு­று­தி­யை­யும் உங்­க­ளுக்­குக் கொடுத்து, இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.8">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதி மாறன், மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும், அண்ணா நகர் சட்­ட­மன்ற வேட்­பா­ள­ரு­மான நே.சிற்­ற­ரசு, பகு­திச் செய­லா­ளர் மதன்­மோ­கன், நிகழ்ச்­சியை ஒருங்­கி­ணைப்­பா­ளர் ரஹ்­மத்­துல்லா, மற்­றும் கழ­கத்­தின் வட்ட செய­லா­ளர்­கள், சிறு­பான்மை சமூ­கப் பிர­தி­நி­தி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>