<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 00:35:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260406T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06042026-CHN-09" position.sequence="09" ex-ref="06042026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">06.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">`ஜாடிக்­கேற்ற மூடி’ மாதிரி, மோடிக்­கேற்ற முரட்டு அடி­மை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி இருக்­கி­றார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">எடப்­பாடி பழ­னி­சா­மி­யை­யும் – அவ­ரது அடி­மைக் கூட்­டத்­தை­யும்  வீட்­டுக்கு அனுப்ப வேண்­டிய தேர்­தல், 2026 சட்­ட­மன்­றத் தேர்­தல்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">விரா­லி­ம­லை­யில் நடை­பெற்ற தேர்­தல் பிர­சா­ரக் கூட்­டத்­தில் – துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிகு உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup302267_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Mdspeech542_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Mdspeech5421_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விரா­லி­மலை,ஏப்.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை மாவட்­டம், விரா­லி­ம­லை­ யில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், விரா­லி­மலை சட்­ட­மன்ற தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் கே.கே.செல்­ல­பாண்­டி­யன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­கள் சேக­ரித்து நேற்று பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``ஜாடிக்­கேற்ற மூடி என்று ஊரில் ஒரு பழ­மொழி சொல்­வார்­கள். அது மாதிரி இன்­றைக்கு மோடிக்­கேற்ற ஒரு அடி­மை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி இருக்­கி­றார். எடப்­பாடி பழ­னி­சாமியையும் அவ­ரோடு கூட இருக்­கக்­கூ­டிய அடி­மைக் கூட்­டத்­தை­யும் இந்­தத் தேர்­த­லோடு வீட்­டுக்கு அனுப்ப வேண்­டிய தேர்­தல் வரப்­போ­கும் சட்­ட­மன்­றத் 
தேர்­தல்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும், துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, எழுச்­சி­யான, அன்­பான வர­வேற்பு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வரு­கின்ற 23–ஆம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­தல். நான் கடந்த ஒரு வார­மாக தமிழ்­நாடு முழு­தும் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தொகு­தி­யா­கச் சென்று, அங்கு மக்­க­ளைச் சந்­தித்து, நம் கட்சி நிர்­வா­கி­கள், கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­கள், இளை­ஞர்­கள், தாய்­மார்­கள் எல்­லா­ரை­யும் சந்­தித்து வாக்கு கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றேன். மீண்­டும் தி.மு.க ஆட்சி அமைக்­கப்­போ­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தி.மு.க–வின் கோட்டை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த புதுக்­கோட்டை மாவட்­டம் என்­றைக்­குமே தி.மு.க–வின் கோட்டை என்­பதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் இருக்­கின்ற ஆறு தொகு­தி­க­ளில் ஐந்து தொகு­தி­க­ளில் நாம் வெற்றி பெற்­று­விட்­டோம். இந்த விரா­லி­மலை மட்­டும் கடந்த முறை நாம் தவ­ற­விட்­டு­விட்­டோம். இந்த முறை தவ­ற­வி­டா­மல் வெற்­றி­பெற்­றுக் காட்டி, புதுக்­கோட்டை மாவட்­டம் 100 சத­வி­கித வெற்றி என்­பதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் வெற்றி வேட்­பா­ளர், தலை­வர் அவர்­க­ளால் உங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அண்­ணன் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெற வையுங்­கள் என்று உங்­க­ளி­டம் கேட்­க­லாம் என்று வந்­தேன். ஆனால், உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது நீங்­க­ளெல்­லாம் ஏற்­க­னவே முடிவு செய்­து­விட்­டீர்­கள், வெற்­றியை உறுதி செய்­து­விட்­டீர்­கள் என்­பது தெரி­கி­றது. உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து அவரை சட்­டப்­பே­ர­வைக்கு நீங்­கள் அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மிக முக்­கி­ய­மான தொகுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த விரா­லி­மலை தொகுதி மிக மிக முக்­கி­ய­மான தொகுதி. அத­னால்­தான் இந்த முறை எந்த விதத்­தி­லும் நாம் தவ­ற­விட்­டு­வி­டக் கூடாது, வெற்றி வாய்ப்பை இழந்­து­வி­டக் கூடாது என்று ஒரு நல்ல வேட்­பா­ளரை, நம் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­களை, தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். மாவட்­டக் கழ­கச் செய­லா­ளரை இங்கே நிறுத்­தி­யி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டில் 234 தொகு­தி­கள் இருந்­தா­லும், இந்த விரா­லி­ம­லைத் தொகு­தி­யின் வெற்றி மிக, மிக முக்­கி­ய­மான வெற்றி என்­ப­தைப் புரிந்­து­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நானும் ஒரு வேட்­பா­ளர். சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் வேட்­பா­ள­ராக நிற்­கி­றேன். தலை­வர் அவர்­கள் எனக்­கும் ஒரு வாய்ப்பு கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் என் தொகு­திக்கு நான் இது­வ­ரைக்­கும் ஒரு நாள்­தான் வாக்கு கேட்­டுப் போயி­ருக்­கி­றேன். ஏன்? என் வெற்­றியை விட அண்­ணன் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­க­ளின் வெற்றி, இந்த விரா­லி­ம­லைத் தொகு­தி­யின் வெற்றி மிக, மிக முக்­கி­ய­மான வெற்றி என்­ப­தற்­கா­கத்­தான் உங்­க­ளை­யெல்­லாம் தேடி வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">யார் அண்­ணனை எதிர்த்து நிற்­கி­றார் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். `குட்கா’ புகழ் விஜ­ய­பாஸ்­கர் நிற்­கி­றார். இங்கே தேர்­தல் அறி­வித்த நாளி­லி­ருந்து ஒரு நாட­கக் கம்­பெனி போலத் தின­மும் ஏதா­வது ஒரு காட்­சியை காட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார். அவரை நம்­பா­தீர்­கள், தேர்­தல் முடிந்­த­வு­டன் காணா­மல் போய்­வி­டு­வார். உங்­களை ஏறிட்­டுப் பார்க்க மாட்­டார். அதற்­குப் பிறகு அவ­ருக்கு இருக்­கின்ற குவாரி தொழி­லைப் பார்க்­கப் போய்­வி­டு­வார். குட்கா விற்­ப­னைக்­குத் துணை போய் இன்று சி.பி.ஐ வரைக்­கும் அலைந்­து­கொண்­டி­ருக்­கி­றார். இந்­தக் கூட்­ட­ணியை அவர்­கள் அமைத்­ததே, அதி.மு.க. கூட்­டணி அமைத்­ததே சி.பி.ஐ, அம­லாக்­கத்­துறை இவர்­க­ளை­யெல்­லாம் வைத்து மிரட்­டித்­தான், விஜ­ய­பாஸ்­கர் போன்ற அடி­மைக் கூட்­டத்தை மிரட்­டித்­தான் இன்று பா.ஜ.க. மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழை­யப் பார்க்­கி­றது. அத­னால்­தான் மீண்­டும் சொல்­கி­றேன். அண்­ணன் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­க­ளைப் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் திரா­விட மாடல் அரசு கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் எத்­த­னையோ திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். இன்று நான் கடந்த ஒரு வார­மா­கப் பல்­வேறு தொகு­தி­க­ளுக்­குச் செல்­கி­றேன். இன்று நம் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு தொகு­தி­க­ளுக்கு சென்று மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார். எந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றோம்.  ஒவ்­வொரு தொகு­திக்­கும் தேவை­யான திட்­டங்­களை நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது என்­கின்ற நம்­பிக்­கை­யில் செல்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">விரா­லி­மலை திட்­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த விரா­லி­ம­லைத் தொகு­திக்கு பல்­வேறு திட்­டங்­களை நம் திரா­விட மாடல் அரசு செய்­தி­ருக்­கி­றது. 25 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 30 கிலோ மீட்­ட­ருக்­குத் தர­மான சாலைப் பணி­களை நம் அரசு செய்து கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">17 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் விரா­லி­மலை மற்­றும் அன்­ன­வா­சல் ஒன்­றி­யங்­க­ளில் குடி­நீர் இணைப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. சுமார் 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இலுப்­பூர் பேரூ­ராட்­சி­யில் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சுமார் 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சித்­தன்­ன­வா­சல் பகு­தியை, சுற்­று­லாத் தல­மாக மாற்­றும் முதற்­கட்­டப் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன. அரசு தொழில்­ப­யிற்சி நிலை­யத்­தில் புதிய விடுதி கட்­ட­டங்­கள் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சுமார் 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பெரு­மா­நாடு மற்­றும் புல்­வ­யல் ஊராட்­சி­யில் உள்ள பள்­ளி­க­ளுக்கு இன்று புதிய வகுப்­ப­றைக் கட்­ட­டங்­கள் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம். விரா­லி­மலை சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கத்­துக்­குப் புதிய கட்­ட­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கொடும்­பா­லூர், பரம்­பூர், பூதக்­குடி, பொங்­கா­லப்­பட்டி உள்­ளிட்ட ஊர்­க­ளில் துணை சுகா­தார நிலை­யங்­க­ளுக்­குப் புதிய கட்­ட­டங்­களை நம் திரா­விட மாடல் அரசு முத­ல­மைச்­சர் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விரா­லி­மலை, தென்­னம்­பாடி, நீர்ப்­ப­ழனி, மாது­ராப்­பட்டி உள்ள ஊர்­க­ளில் பள்­ளி­க­ளுக்­குப் புதிய கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இல்­லா­த­போதே பல சாத­னை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இல்­லா­த­போதே நம் திரா­விட மாடல் அரசு இந்த விரா­லி­ம­லைக்கு இவ்­வ­ளவு பணி­களை நாம் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். நம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால், இன்­னும் பல்­வேறு திட்­டங்­களை, இன்­னும் பல்­வேறு பணி­களை இந்த விரா­லி­மலை சட்­ட­மன்­றத் தொகு­திக்கு, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நிச்­ச­யம் செய்து கொடுப்­பார். அந்த வாக்­கு­று­தியை, நான் கொடுக்­கி­றேன். நீங்­கள் ஒரு வாக்­கு­றுதி கொடுங்­கள், அண்­ணன் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பு­வோம் என்ற வாக்­கு­று­தியை நீங்­கள் கொடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">புதிய கோரிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் செல்­லப்­பாண்­டி­யன் அண்­ணன் வரும்­போது சொன்­னார், நிச்­ச­யம் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப்­போ­வது உறுதி. மீண்­டும் நம் தலை­வர்­தான் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அம­ரப்­போ­கி­றார். அப்­படி உட்­கா­ரும்­போது எனக்கு இன்­னும் சில கோரிக்­கை­களை நான் வைக்­கி­றேன், இதெல்­லாம் நம் ஆட்சி வந்­த­வு­டன் நீங்­கள் செய்து கொடுக்க வேண்­டும் என்று சில கோரிக்­கை­களை வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விரா­லி­ம­லை­யில் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி அமைக்­கப்­பட வேண்­டும்.  திரு­நல்­லூர், கட்­டாக்­குடி உள்­ளிட்ட ஊர்­க­ளில் புதிய சமு­தாய நலக்­கூ­டங்­கள் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விரா­லூர் ஊராட்­சி­யில் திருச்சி தேசிய நெடுஞ்­சா­லை­யி­லி­ருந்து சிவன் கோயில் வரைக்­கும் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அன்­ன­வா­சல், இலுப்­பூர், விரா­லி­ம­லை­யில் மருத்­து­வ­ம­னை­களை மேம்­ப­டுத்த வேண்­டும். தென்­ன­லூ­ரில் ஜல்­லிக்­கட்டு மைதா­னம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விட்­ட­மாப்­பட்­டி­யி­லி­ருந்து தொப்­பட்­டி­யா­த­பு­ரம் வரைக்­கும் 15 கிலோ­மீட்­ட­ருக்­குத் தார்ச்­சாலை அமைத்­துக் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தேரா­வூ­ரில் உள்ள தெருக்­க­ளில் சிமெண்ட் சாலை போட வேண்­டும். நார்த்­தா­மலை, சித்­தன்­ன­வா­சல், அன்­ன­வா­சல் வழி­யா­கக் கீர­னூர், இலுப்­பூ­ருக்­குப் புதிய பேருந்து வழித்­த­டம் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விளத்­துப்­பட்டி ஊராட்­சி­யில் ஊரு­ணி­யைத் தூர்­வாரி பரா­ம­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மிக முக்­கி­ய­மான கோரிக்கை, புதுக்­கோட்டை மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பெரும்­பி­டுகு முத்­த­ரை­யர், மாமன்­னன் மரு­து­பாண்­டி­யர், வீரன் அழ­கு­முத்­துக்­கோன், வ.உ.சிதம்­ப­ர­னார் ஆகி­யோ­ருக்கு உரிய மரி­யாதை கொடுத்து மணி­மண்­ட­பம் அமைத்­துக் கொடுக்க வேண்­டும் என்ற கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­ய­மாக நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன் இந்த கோரிக்­கை­க­ளை­யெல்­லாம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த விரா­லி­மலை சட்­ட­மன்­றத் தொகு­திக்கு நிச்­ச­யம் செய்து கொடுப்­பார் என்ற உறு­தி­மொ­ழியை, வாக்­கு­று­தியை நான் உங்­க­ளுக்­குக் கொடுக்­கி­றேன். இன்றுநாம் சொன்­ன­தை­யெல்­லாம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்து காட்டி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">விடி­யல் பய­ணத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தோமோ அதை­யெல்­லாம் இன்று நிறை­வேற்றி இருக்­கி­றார்.  உதா­ர­ணத்­துக்கு கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது நாம் சொன்ன மிக மிக முக்­கி­ய­மான வாக்­கு­றுதி, பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம், விடி­யல் பய­ணத் திட்­டம் கொடுப்­போம் என்று சொன்­னோம். நாம் ஆட்­சிப் பொறுப்­பேற்று, முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம்­தான். அந்­தத் திட்­டத்­தின் மூலம் ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதந்­தோ­றும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரைக்­கும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வர வேண்­டும். பள்­ளிக்­கூ­டத்­துக்கு வரும்­போது காலை­யில் பசி­யோடு இருக்­கக் கூடாது என்று நம் முத­ல­மைச்­சர் கொண்டு வந்­த­து­தான் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை அர­சுப் பள்­ளி­யில் பயி­லும் அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் இன்று காலை­யில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தால் முத­லில் தர­மான காலை உணவு, அதன் பிறகு தர­மான கல்­வி­யைக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்­லூ­ரிக்கு வர வேண்­டும், மேற்­ப­டிப்பு படிக்க வேண்­டும் என்று கல்வி உத­வித் தொகை கொடுத்­தி­ருக்­கி­றோம். அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்­தா­லும், தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும் அவர்­க­ளுக்கு தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்­டங்­க­ளின் மூலம் கல்வி ஊக்­கத் தொகை 1000 ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது. 13 லட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத் தொகை­யைக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">10 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி திட்­டத்தை அறி­வித்து ஒரே மாதத்­தில் 10 லட்­சம் மடிக்­க­ணி­னி­களை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று அதி.மு.க ஒரு பொய்ப் பிரச்­சா­ரத்தை நடத்தி வரு­கி­றார்­கள். இந்த மடிக்­க­ணினி திட்­டம் அவர்­கள் கொண்டு வந்த திட்­டம், அதை நாம் முடக்­கி­விட்­டோம் என்று சொல்­கி­றார்­கள், தேர்­த­லுக்­கா­கக் கொடுக்­கி­றோம் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உண்­மை­தான், அ.தி.மு.க–தான் இந்த திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். ஆனால், அவர்­கள் பள்­ளிக்­கூ­டம் படிக்­கிற குழந்­தை­க­ளுக்­குக் கொடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். 2019–ஆம் ஆண்டு அந்­தத் திட்­டத்தை அ.தி.மு.க அரசு கைவிட்­டு­விட்­டது. ஆனால், நம் முத­ல­மைச்­சர் பார்த்­தார், இந்த மடிக்­க­ணினி கல்­லூரி படிக்­கிற மாண­வர்­க­ளுக்கு இன்­னும் பய­னுள்­ள­தாக இருக்­கும்; மேற்­ப­டிப்பு படிக்க, ஒரு இடத்­தில் வேலை­யில் சேர, திட்­டப்­ப­ணி­க­ளைத் தயார் செய்ய என்று கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு கொடுத்­தால் அதி­க­மா­கப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று 10 லட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு இன்று மடிக்­க­ணி­னியை நாம் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக­ளிர் உரி­மைத் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது நாம் சொன்ன முக்­கி­ய­மான வாக்­கு­றுதி. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதந்­தோ­றும் 1,000 ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டத்­தில் கொடுத்­தி­ருக்­கி­றார் நம் முத­ல­மைச்­சர். இன்று அந்த உரி­மைத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது தேர்­த­லைக் கார­ணம் காட்டி நிறுத்­தி­விட வேண்­டும் என்று அ.தி.மு.கவும் பா.ஜ.க–வும் ஒரு சதித் திட்­டம் போட்­டார்­கள். நீதி­மன்­றத்­துக்கு சென்று மூன்று மாதத்­துக்கு நிறுத்த வேண்­டும் என்று முயற்சி செய்­தார்­கள். ஆனால் நம் தலை­வர் அந்­தச் சூழ்ச்­சி­யை­யெல்­லாம் முறி­ய­டித்து, பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் என மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000 ரூபாய், கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாய் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தார். நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் முத­ல­மைச்­சர் காலை­யில் 6:30 மணிக்கே அனை­வ­ரு­டைய வங்­கிக் கணக்­கி­லும் செலுத்­தி­விட்­டார். ஆனால் நம் மக­ளிர் என்ன செய்­தார்­கள்? காலை­யில் 9 மணிக்­கெல்­லாம் வங்­கிக்கு சென்று பணத்தை எடுத்­து­விட்­டார்­கள். என்ன கார­ணம்? மோடி அர­சின் மீது அவ்­வ­ளவு நம்­பிக்கை! எங்கே மோடி வங்­கி­யில் மினி­மம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி முத­ல­மைச்­சர் கொடுத்த 5,000 ரூபா­யை­யும் அவர் எடுத்­து­வி­டு­வாரோ என்­கின்ற பயத்­தில் மக­ளிர் அப்­ப­டிச் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">புதிய வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று நம் தலை­வர் முத­ல­மைச்­சர் ஒரு வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன் மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபாயை அதி­கப்­ப­டுத்தி 2,000 ரூபாய் கொடுப்­பேன் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்­பி­லி­ருந்து எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப்­ப­டும் என்று உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம். கல்வி ஊக்­கத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,500–ஆக உயர்த்­தப்­ப­டும் என்று உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம். முதி­யோர் உத­வித்­தொகை 1,200–லிருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வோம் என்று உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் அனைத்­துக் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்­கும் 35 லட்­சம் இல­வசமடிக்­க­ணி­னி­கள் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் கலை­ஞர் கனவு இல்­லம், 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு யார், யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அனை­வ­ருக்­கும் வீடு கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி அமைந்­த­வு­டன் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒவ்­வொரு மக­ளி­ரி­ட­மும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வார். அந்­தக் கூப்­பனை வைத்து மக­ளிர் அவர்­கள் வீட்­டிக்கு என்ன தேவையோ, என்ன மின்­சார சாத­னம் தேவையோ, பிரிட்ஜ் வேண்­டும் என்­றால் பிரிட்ஜ், டிவி வேண்­டும் என்­றால் டிவி, ஏசி வேண்­டும் என்­றால் ஏசி, குக்­கர் வேண்­டும் என்­றால் குக்­கர் – உங்­க­ளுக்கு என்ன தேவையோ முத­ல­மைச்­சர் சொல்­லி­விட்­டார், மக­ளிர் அவர்­கள் வீட்­டுக்கு என்ன தேவையோ அவர்­களே முடி­வெ­டுத்­துக் கொள்­ள­லாம் என்று முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளும் நிறை­வேற வேண்­டும் என்­றால் மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்­டும். அதற்கு அண்­ணன் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­களை இந்த விரா­லி­மலை சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லி­ருந்து நீங்­கள் தேர்ந்­தெ­டுத்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் இவ்­வ­ளவு நேரம் பேசி­ய­போது, என்­னென்ன திட்­டங்­க­ளைக் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் செய்­தி­ருக்­கி­றோம் என்­ப­தைச் சொன்­னேன். ஆட்­சிக்கு வந்­தால், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­னென்ன செய்­வார் என்­ப­தை­யும் சொன்­னேன். இந்­தத் தொகு­திக்கு என்­னென்ன பண்­ணி­யி­ருக்­கி­றோம் என்­ப­தைச் சொன்­னேன், ஆட்­சிக்கு வந்­தால் என்­னென்ன பண்­ணு­வோம் என்­பதை உங்­க­ளி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முதன்மை மாநி­லம் தமிழ்­நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்­த­தால்­தான் இன்று தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே, வளர்­கின்ற மாநி­லங்­க­ளில் முதன்மை மாநி­லம் தமிழ்­நாடு. 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யோடு இன்று தமிழ்­நாடு முத­லி­டத்­தைப் பிடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாம் இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோமே, ஒன்­றிய பா.ஜ.க அரசு இதற்கு ஏதா­வது தமிழ்­நாட்­டுக்கு, நம் தமிழ் மக்­க­ளுக்­குத் துணை­யாகநின்­றி­ருக்­கி­றார்­களா? நமக்கு ஏதா­வது புதி­தா­கத் திட்­டம் கொடுக்­கி­றார்­களா? எந்­தத் திட்­ட­மும் கொடுப்­ப­தும் இல்லை, நாம் கேட்­கின்ற நிதி உத­வி­யும் கொடுப்­ப­தும் இல்லை. ஆனால் என்ன செய்­கி­றார்­கள்? மும்­மொ­ழிக் கொள்கை என்று சொல்லி, மீண்­டும் இந்­தியை தமிழ்­நாட்­டுக்­குள் திணிக்க முயற்­சிக்­கி­றார்­கள். எந்­தத் திட்­ட­மும் வரு­வது இல்லை. கடந்த பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு என்று எந்­தப் புதிய திட்­ட­மும் இல்லை, தமிழ்­நாடு என்­கின்ற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. அப்­ப­டிப்­பட்ட பா.ஜ.க–விற்கு நாம் சரி­யான பாடத்­தைக் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நம்­பர் ஒன் முரட்டு அடிமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பா.ஜ.க–வை தமிழ்­நாட்­டிற்­குள் நாம் நுழைய விட­மாட்­டோம் என்று தெரிந்­து­தான் அ.தி.மு.க என்­கின்ற போர்­வைக்­குள் ஒளிந்­து­கொண்டு இன்று பா.ஜ.க வரு­வ­தற்கு முயற்சி செய்­கி­றது. நம் தலை­வர் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணிக்­கும்  தமிழ்­நாடு அணிக்­கும்­தான். நாம் தமிழ்­நாடு அணி. டெல்லி அணியை இந்த முறை மீண்­டும் தோற்­க­டித்து வீட்­டுக்கு அனுப்­பு­வோம். ஏன் டெல்லி அணி என்று சொல்­கி­றோம்? டெல்லி அணி­யில் யார் யார் இருக்­கி­றார்­கள்? மோடி, அவ­ருக்­குத் துணை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு இப்­போது நான் ஒரு செல்­லப் பெயர் வைத்­தி­ருக்­கி­றேன். முரட்­டுப் பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுத் தொண்­டர்­கள் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள், எங்­கே­யா­வது முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே மோடி­யின் நம்­பர் ஒன் முரட்டு அடிமை. மோடி என்ன சொன்­னா­லும் கேட்­பார். ஆம், மோடி, `இங்கே வா’ என்­றால், இங்­கி­ருந்து டெல்­லிக்கு ஓடியே போவார். அப்­ப­டிப்­பட்ட ஒரு முரட்டு அடி­மையை வைத்­தி­ருக்­கி­றார். அந்த அடி­மைக் கூட்­டத்­துக்கு இந்­தத் தேர்­த­லோடு ஒரு முடிவு கட்­டு­வோம். ஏற்­க­னவே 10 தோல்­வி­க­ளைப் பழ­னி­சா­மிக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இந்த முறை மொத்­தத் தோல்வி பழ­னி­சா­மி­யாக்கி அவரை வீட்­டுக்கு அனுப்­பு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வீட்­டுக்கு அனுப்ப வேண்­டிய தேர்­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">`ஜாடிக்­கேற்ற மூடி ’ என்று ஊரில் ஒரு பழ­மொழி சொல்­வார்­கள். அது மாதிரி இன்­றைக்கு மோடிக்­கேற்ற ஒரு அடி­மை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் இருக்­கி­றார். எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளை­யும் அவ­ரோடு கூட இருக்­கக்­கூ­டிய அடி­மைக் கூட்­டத்­தை­யும் இந்­தத் தேர்­த­லோடு வீட்­டுக்கு அனுப்ப வேண்­டிய தேர்­தல் வரப்­போ­கும் சட்­ட­மன்­றத் தேர்­தல். நம் தலை­வர் சொன்­னது போல தமிழ்­நாட்டை எப்­ப­டி­யா­வது எடப்­பாடி பழ­னி­சாமி என்­கின்ற இந்த ரிமோட் கண்ட்­ரோல் மூல­மாக டெல்­லி­யி­லி­ருந்து கட்­டுப்­ப­டுத்த நினைக்­கி­றார்­கள். அந்த ரிமோட் கண்ட்­ரோலை உரு­வி­விட்டு, பியூஸை பிடுங்கி விட்­டு­விட வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">செய்­வோமா? நாம் இந்த முறை மீண்­டும் நிரூ­பித்­துக் காட்­டு­வோம். தமிழ்­நாடு என்­றைக்­குமே டெல்­லிக்­குக் அவுட் ஆப் கண்ட்­ரோல் என்­பதை இந்­தத் தேர்­த­லில் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். செய்­வோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று தேதி 5, 23–ஆம் தேதி தேர்­தல். இன்­னும் 18 நாட்­கள் இருக்­கின்­றன. உத­ய­நிதி வந்­தார், பேசி­னார், திட்­டங்­க­ளைப் பற்­றிச் சொன்­னார், வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றார், கலைந்து போய்­விட்­டோம் என்று நாம் யாரும் போய்­வி­டக் கூடாது. நீங்­கள் அனை­வ­ரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள், உத­ய­சூ­ரி­யன் சின்­னம்­தான் வெற்­றிச் சின்­னம், இந்­தத் தேர்­த­லில் விரா­லி­ம­லை­யில் வெற்­றிப்­பெ­ற­போ­வது உத­ய­சூ­ரி­யன் சின்­னம் என்று நீங்­கள் முடிவு செய்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டம் கேட்­ப­தெல்­லாம் அடுத்த 18 நாட்­கள் இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் இருக்­கக்­கூ­டிய பகு­தி­க­ளில் கொண்டு சேர்க்க வேண்­டும். ஒவ்­வொரு பகு­தி­யா­கப் செல்ல வேண்­டும், ஒவ்­வொரு தெரு­வாக செல்ல வேண்­டும், ஒவ்­வொரு வீடாக செல்­லுங்­கள், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தி­யுங்­கள். அவர்­க­ளி­டம் சொல்­லுங்­கள், நம் தி.மு.க ஆட்சி இந்த ஐந்து ஆண்­டு­க­ளில் என்­னென்ன திட்­டங்­க­ளைப் செய்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம், வந்­தால் என்ன செய்­வோம், மீண்­டும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்­டணி தமிழ்­நாட்­டுக்­குள் வந்­து­விட்­டது என்­றால் என்­னென்ன தீங்­கு­கள் தமிழ்­நாட்­டுக்கு வரும், என்­னென்ன உரி­மை­க­ளை­யெல்­லாம் விட்­டுக்­கொ­டுப்­பார்­கள் என்­கின்ற இந்­தப் பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் நீங்­கள் கொண்டு சேர்த்­தீர்­கள் என்­றால், கடந்த முறை கிட்­டத்­தட்ட 20,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். இந்த முறை 25,000 அல்ல, 50,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் அந்த வெற்­றியை நாம் பிடிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், நம் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து அண்­ணன் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­களை விரா­லி­மலை சட்­ட­மன்­றத் தொகுதி உறுப்­பி­ன­ராக நீங்­கள் தேர்ந்­தெ­டுத்­தீர்­கள் என்­றால், நம் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்இந்­தத் தொகு­திக்கு, இந்­தப் பகு­திக்கு என்­னென்ன தேவையோ, நிச்­ச­யம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்து காட்­டு­வார். அடி­மைக் கூட்­டத்தை ஓட ஓட விரட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன் என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>