<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,38,493,1126" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 00:37:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260406T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06042026-CHN-12" position.sequence="12" ex-ref="06042026-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">ஊழல் வழக்குகளில்  சிக்கி அமித்ஷாவின் பாதுகாப்பில் வலம் வரும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">எடப்பாடி பழனிசாமி, முதல்வர் குறித்து பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309458_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Selvaperundhaga_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">சென்னை, ஏப். 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">ஊழல் வழக்குகளில்  சிக்கி அமித்ஷாவின் பாதுகாப்பில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் குறித்து பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? என கேட்டு காங்­கி­ரஸ் கமிட்டி தமிழ் மாநி­லத் தலை­வர் கு,செல்­வப் பெருந்­தகை விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">நடை­பெ­ற­வுள்ள 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லை­யொட்டி அ.தி.மு.க. பங்­கேற்­கிற தேசிய ஜன­நா­யக கூட்­டணி அமித்­ஷா­வின் நிர்ப்­பந்­தத்­தால் அமைந்­தி­ருக்­கி­றது. 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பா.ஜ.க.வுடன் கூட்­டணி அமைத்த அ.தி.மு.க., 2024 மக்­க­ளவை தேர்­த­லில் கூட்­டணி இல்­லா­மல் போட்­டி­யிட்­டது. அப்­போது தமி­ழக பா.ஜ.க. தலை­வ­ராக இருந்த அண்­ணா­மலை, எடப்­பா­டியை பகி­ரங்­க­மாக அர­சி­யல் தற்­குறி, ஊழல் பேர்­வழி என குற்­றம் சாட்டி பேசி­னார். இத்­த­கைய பின்­ன­ணி­யில் இன்­றைக்கு கூட்­ட­ணி­யின் தலை­வ­ராக இருக்­கிற எடப்­பாடி பழ­னிச்­சாமி, தேர்­தல் பிரச்­சார கூட்­டங்­க­ளில் ஆத்­தி­ரம் பொங்க, தொண்டை கிழிய உரத்த குர­லில் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் மீது ஆதா­ர­மற்ற அவ­தூறு குற்­றச்­சாட்­டுக்­களை நாள்­தோ­றும் கூறி வரு­கி­றார். தமிழ்­நாட்­டில் சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து வரு­வ­தாக கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">2018 மே மாதம் தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை எதிர்ப்பு போராட்­டங்­க­ளில் பங்­கேற்ற அப்­பாவி மக்­கள் மீது தமிழ்­நாடு காவல்­துறை வாக­னத்­தின் மீது ஏறி நின்று கொண்டு கண்­மூ­டித்­த­ன­மாக நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்த கொடிய சம்­ப­வம் நடை­பெற்­றது. இப்­படி ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­ததே எனக்கு தெரி­யாது, தொலைக்­காட்­சியை பார்த்து தான் தெரிந்து கொண்­டேன் என்று பகி­ரங்­க­மாக பொறுப்­பற்ற முறை­யில் உள்­து­றையை வகித்த அன்­றைய முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி கூறி­யதை எவ­ரும் மறக்­க­வும் மாட்­டார்­கள், மன்­னிக்­க­வும் மாட்­டார்­கள். இதை­விட தமிழ்­நாட்­டிற்கு ஒரு அவ­மா­னம் இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">அரசியல் பேராண்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">மேலும், ஊழ­லைப் பற்றி எடப்­பாடி பேசு­வது சாத்­தான் வேதம் ஓது­வ­தைப் போல இருக்­கி­றது. தனது உற­வி­னர்­க­ளுக்கு ரூபாய் 3500 கோடி மதிப்­பி­லான நெடுஞ்­சா­லைத்­துறை ஒப்­பந்­தங்­களை வழங்­கி­ய­தற்­காக அவர்­மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு சென்னை உயர்­நீ­தி­மன்­றம் சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு 2018 இல் உத்­த­ர­விட்­டது. அதை எதிர்த்து நான்கு ஆண்­டு­கள் கழித்து 2022 இல் உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­டம் தடை­யாணை பெறப்­பட்­டது. அந்த தடை­யா­ணையை நீக்­கு­வ­தற்கு கடந்த 4 ஆண்­டு­க­ளாக  மத்­திய புல­னாய்­வுத் துறை முயற்சி செய்­ய­வில்லை. இந்த வழக்கை காட்­டித் தான், ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வால் மிரட்­டப்­பட்டு கூட்­ட­ணிக்கு எடப்­பாடி பணிய வைக்­கப்­பட்­டார். அதே­போல, தேர்­தல் பிர­மாண பத்­தி­ரத்­தில் சொத்து மற்­றும் படிப்பு குறித்து தவ­றான தக­வல்­களை வழங்­கி­ய­தற்­காக அவர்­மீது வழக்கு தொடுக்­கப்­பட்­டது. அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் ஒன்­றிய அர­சின் 60 சத­வி­கித நிதி­யு­த­வி­யில் 11 மாவட்­டங்­க­ளில் மருத்­து­வக் கல்­லூரி கட்­டி­டங்­கள் தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் விதி­மு­றை­க­ளுக்கு எதி­ராக கட்­டப்­பட்­ட­தால் அதன்­மீது சி.பி.ஐ. விசா­ரிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டது. இத்­த­கைய 
சி.பி.ஐ. விசா­ரிக்­கிற ஊழல் வழக்­கு­க­ளில் சிக்கி, அமித்­ஷா­வின் பாது­காப்­பில் வலம் வந்து கொண்­டி­ருக்­கிற எடப்­பாடி பழ­னிச்­சாமி, அர­சி­யல் பேராண்­மை­யோடு பா.ஜ.க.வை எதிர்த்து வரு­கிற முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளைப் பற்றி பேசு­வ­தற்கு என்ன அரு­கதை இருக்­கி­றது ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">தமி­ழ­கத்­தில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பில்லை, பாலி­யல் குற்ற வழக்­கு­கள் அதி­க­ரித்து விட்­டது என அபாண்­ட­மாக குறை கூறு­கி­றார். ஆனால், இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாட்­டில் தான் அதிக எண்­ணிக்­கை­யி­லான பெண்­கள் வேலைக்கு செல்­வ­தாக புள்ளி விவ­ரங்­கள் கூறு­கி­றது. பெண்­க­ளுக்கு எதி­ராக எந்த குற்­றம் நிகழ்ந்­தா­லும் உட­ன­டி­யாக காவல்­துறை நட­வ­டிக்கை எடுத்து தண்­டனை பெற்­றுத் தரு­வ­தில் இந்­தி­யா­வி­லேயே முதல் மாநி­ல­மாக தமிழ்­நாடு இருப்­பதை தேசிய குற்ற ஆவண காப்­பக புள்ளி விவ­ரங்­கள் உறுதி செய்­கின்­றன. எடப்­பாடி ஆட்­சி­யில், ஜீர­ணிக்க முடி­யாத பெரும் குற்­ற­மாக பொள்­ளாச்­சி­யில் பாலி­யல் குற்­றம் நிகழ்ந்­தது. பெண்­களை ஏமாற்றி, பாலி­யல் வன்­கொ­டுமை செய்து அதை வீடியோ எடுத்து பணம் மற்­றும் பாலி­யல் ரீதி­யாக மிரட்டி வந்த நிலை­யில், அந்த குற்­ற­வா­ளி ­க­ளுக்கு பாது­காப்பு கொடுத்த ஆட்சி தான் எடப்­பா­டி­யின் அ.தி.மு.க. ஆட்­சி­யா­கும். மேலும், சென்­னை­யில் 5 வயது சிறுமி கடத்­தப்­பட்­ட­தும், கோயம்­புத்­தூ­ரில் பள்ளி மாணவி கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டது உள்­ளிட்ட கடத்­தல் மற்­றும் கொலை வழக்­கு­கள் நிகழ்ந்து மாநி­லத்­தையே கொந்­த­ளிக்க வைத்­ததை எடப்­பா­டி­யால் மூடி மறைக்க முடி­யாது. கல்­லூரி பேரா­சி­ரியை நிர்­மலா தேவி வழக்கு 2018 ஆம் ஆண்டு எடப்­பாடி பழ­னிச்­சாமி தலை­மை­யி­லான அ.தி.மு.க. ஆட்­சிக் காலத்­தில் தமி­ழ­கத்­தையே உலுக்­கிய ஒரு முக்­கிய பாலி­யல் வழக்­கா­கும். இந்­தப் பின்­ன­ணி­யில் தமி­ழ­கத்­தில் பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்­லை­யென்று எடப்­பாடி கூறு­வதுஜமுக்­கா­ளத்­தில் வடி­கட்­டிய பொய்­யா­கும். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">தமிழ்­நாட்­டில் 2013 இல் குட்கா மற்­றும் புகை­யி­லைப் பொருட்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், அமைச்­சர்­கள் மற்­றும் உயர் போலீஸ் அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்­சம் வழங்­கப்­பட்டு சட்ட விரோ­த­மாக குட்கா விற்­பனை செய்­யப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டு­கள் அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் எழுந்­தன. இந்த வழக்­கில் நவம்­பர் 2023 இல் முன்­னாள் அ.தி.மு.க. அமைச்­சர்­க­ளான சி. விஜ­ய­பாஸ்­கர் மற்­றும் பி.வி. ரமணா ஆகி­யோரை விசா­ரிக்க தமிழ்­நாடு ஆளு­நர் ஆர்.என். ரவி அனு­மதி அளித்­தார். இவ்­வ­ழக்­கில் சி. விஜ­ய­பாஸ்­கர் மற்­றும் முன்­னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்­தி­ரன் உள்­ளிட்­டோர் வீடு­க­ளில் சி.பி.ஐ. விசா­ரணை நடத்தி, குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஒரு குட்கா வியா­பா­ரி­யின் டைரி­யில், அமைச்­சர் ஒரு­வ­ரு­டன் நடத்­தப்­பட்ட பேரங்­க­ளின் விவ­ரங்­கள் கைப்­பற்­றப்­பட்­டது குறித்து பர­ப­ரப்­பாக செய்­தி­கள் வெளி­வந்­தன. ஆனால், இந்த வழக்கை தற்­போது சி.ஐ.பி. மற்­றும் அம­லாக்­கத்­துறை ஆகி­யவை ஜவ்வு போல இழுத்து விசா­ரித்து வரு­வது அர­சி­யல் பேர சந்­தே­கங்­களை உறுதி செய்­கி­றது. இந்த வழக்கை விரை­வாக விசா­ரித்து குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தில் ஏற்­ப­டு­கிற கால­தா­ம­தத்­திற்கு எடப்­பாடி, அமித்ஷா பேரம் தான் கார­ணம் என்­பதை மறுக்க முடி­யுமா ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">சசிகலா காலில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">விழுந்தவர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா மறை­விற்­குப் பிறகு சட்­டப்­பே­ர­வை­யில், அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த ஒ. பன்­னீர்­செல்­வம், அன்று எதிர்­கட்­சித் தலை­வ­ராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்­க­ளைப் பார்த்து சிரித்­த­தற்­காக சசி­க­லா­வி­னால் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார். அந்த வாய்ப்பை பயன் ப­டுத்தி சசி­க­லா­வின் காலில் விழுந்து அவ­ரது தய­வில் முத­ல­மைச்­ச­ரா­ன­வர் தான் எடப்­பாடி பழ­னிச்­சாமி. முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளைப் போல மக்­கள் வாக்­கு­களை பெற்று ஆட்­சி­யில் அமர்ந்­த­வ­ரல்ல. எடப்­பாடி வகித்த முத­ல­மைச்­சர் பதவி சசி­கலா போட்ட பிச்­சை­யா­கும். இத்­த­கைய அர­சி­யல் பின்­னணி கொண்ட எடப்­பாடி பழ­னிச்­சாமி பேச்சை ஒரு­போ­தும் தமிழ்­நாட்டு மக்­கள் ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">எனவே, தி.மு.க. தலை­மை­யி­லான, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி தமிழ்­நாட்டு நலன் சார்ந்து செயல்­பட்டு வரு­கி­றது. 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. கொடுத்த 505 வாக்­கு­று­தி­க­ளில் 405 நிறை­வேற்­றப்­பட்­டி­ ருக்­கி­றது. இந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­ய­தால் தமி­ழ­கத்­தின் அனைத்து தரப்பு மக்­க­ளும் பய­ன­டைந்து மகிழ்ச்­சி­யோடு வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். அவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரம் உயர்ந்­தி­ருக்­கி­றது. இந்­தி­யா­வி­லேயே மாநில மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­திற்கு அடுத்து இரண்­டா­வது மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்ந்து சாத­னை­களை படைத்து வரு­கி­றது. இத்­த­கைய சாத­னை­களை படைத்து தமிழ்­நாட்டை வளர்ச்­சிப் பாதை­யில் அழைத்­துச் செல்­கிற முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யில் மீண்­டும் நல்­லாட்சி அமை­வதை ஆயி­ரம் அமித்ஷா, எடப்­பா­டி­கள் ஒன்று சேர்ந்து எத்­த­கைய கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டா­லும் தடுக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">இவ்­வாறு அவர் தனது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>