<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 04:15:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260406T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06042026-VLR-12" position.sequence="12" ex-ref="06042026-VLR-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை    </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">06.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">மோடி அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கிறது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">பத்து தோல்வி பழனிசாமியை இந்தத் தேர்தலோடு மொத்தத் தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">முது­கு­ளத்­தூர்  தேர்­தல் பிர­ச்சா­ரக் கூட்­டத்­தில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">ஆதரிப்பீர்  </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="64">உதயசூரியன்! </lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup307205_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup307842_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="4.4.2026dmkyo_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="dmklogo_12_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரா­ம­நா­த­பு­ரம்,ஏப்.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரும்  துணை முத­ல­மைச்­ச­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் நேற்று  முன்தினம் (4.4.2026) இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம் முது­கு­ளத்­தூர் சட்­ட­மன்ற தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் ஆர்.எஸ்.ராஜ­கண்­ணப்­பன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­ட­போது ஆற்­றிய உரை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு சிறப்­பான, எழுச்­சி­யான, அன்­பான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும் முத­லில் என் நன்­றியை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் தமிழ்­நாடு முழு­வ­தும் நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வெற்றி பெற்று, நம் தலை­வர் தான் மீண்­டும் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அம­ரப்­போ­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தலை­வர் அவர்­கள் இந்த முது­கு­ளத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் அவர்­களை வெற்றி வேட்­பா­ள­ராக உங்­க­ளி­டத்­தில் மீண்­டும் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்.  நான் உங்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்கு கேட்­க­லாம் என்று வந்­தேன்.  ஆனால் இங்கு உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது, நீங்­க­ளெல்­லாம் ஏற்­க­னவே உத­ய­சூ­ரி­யனை வெற்­றிப்­பெற செய்ய முடிவு செய்­து­விட்­டீர்­கள் என்­பது தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வெற்­றிச் சின்­னம் உதய சூரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வரும் ஏப்­ரல் 23–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று, வாக்­குப்­பெட்­டி­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் அண்­ணன் ராஜ­கண்­ணப்­ப­னின் பெயர் இருக்­கும். அதில் அழுத்தி வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணனை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் கடந்த ஐந்து நாட்­க­ளாக தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரம் செய்­து­கொண்டு இருக்­கி­றேன். ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தொகு­தி­யா­கச் சென்று அங்கு இருக்­கக்­கூ­டிய நம் நிர்­வா­கி­கள், கட்­சி­யி­ன­ரை­யெல்­லாம் சந்­தித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று வாக்­குக் கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றேன். நம் கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். எந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­தித்து வாக்­குக் கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றோம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது நாம் செய்­தி­ருக்­கக்­கூ­டிய சாத­னை­கள், அந்­தத் தேர்­த­லில் நாம் கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய வாக்­கு­றுதி, அவற்­றை­யெல்­லாம் செய்து முடித்­து­விட்­டோம் என்­கிற நம்­பிக்­கை­யில் மக்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சில திட்­டங்­களை மட்­டும் இங்கே உங்­க­ளுக்கு நினை­வூட்ட விரும்­பு­கி­றேன். கடந்த முறை சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது நம் தலை­வர் கொடுத்த முக்­கி­ய­மான வாக்­கு­றுதி – மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம், விடி­யல் பய­ணத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்று தலை­வர் சொன்­னார்­கள். ஆட்­சிப் பொறுப்­பேற்று நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம், கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம். இந்­தத் திட்­டத்­தி­னால் இன்று ஒவ்­வொரு மக­ளி­ரும் ஒவ்­வொரு மாத­மும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சொல்­லாத திட்­டங்­க­ளை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நிறை­வேற்­றி­யுள்­ளோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அது தேர்­தல் அறிக்­கை­யில் சொன்ன திட்­டம்; தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லாத திட்­டத்­தை­யும் நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றோம். குழந்­தை­கள் அனை­வ­ரும் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்து படிக்க வேண்­டும் என்று அர­சுப் பள்­ளி­யில் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை பயி­லும் அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும், காலை­யில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தால் பசி­யோடு படிக்­கக் கூடாது என்று ‘முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம்’ கொண்டு வரப்­பட்­டது. பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தார்­கள் என்­றால் முத­லில் தர­மான காலை உணவு, அதன் பிறகு தர­மான கல்வி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்­லூரி செல்­லும் மாணவ, மாண­வி­க­ளுக்கு தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்­டங்­க­ளின் மூலம் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்­கத்­தொ­கையை நம் அரசு வழங்­கி­யி­ருக்­கி­றது. 13 லட்­சம் மாணவ மாண­வி­கள் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.  3 லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்பு வழங்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு நம் தலை­வர் கல்­லூரி மாணவ மாண­வி­கள் 10 லட்­சம் பேருக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி, ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அ.தி.மு.க நம் மீது விமர்­ச­னம் செய்­கி­றார்­கள், பொய்க் குற்­றச்­சாட்டு – என்ன? அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்­டம் மடிக்­க­ணினி திட்­டம் என்­கி­றார்­கள். ஆம், அந்­தத் திட்­டத்தை அ.தி.மு.க அர­சு­தான் கொண்டு வந்­தது. அ.தி.மு.க ஆட்­சி­யில் இருந்­த­போது பள்­ளி­யில் பயி­லும் குழந்­தை­க­ளுக்கு மட்­டும்­தான் மடிக்­க­ணினி கொடுத்­தார்­கள். 2019–இல் அ.தி.மு.க அரசு இருக்­கும்­போதே அந்­தத் திட்­டத்­தைக் கைவிட்­டு­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">10 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மடிக்­கணினி வழங்­கி­னோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதன்­பி­றகு நம் முத­ல­மைச்­சர் என்ன செய்­தார்? பள்­ளி­யில் பயி­லும் குழந்­தை­களை விடக் கல்­லூரி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுத்­தால் அவர்­க­ளுக்கு இன்­னும் பய­னுள்­ள­தாக இருக்­கும், ஒரு இடத்­துக்கு வேலைக்­குச் செல்­வ­தற்­காக இருக்­கட்­டும், மேற்­ப­டிப்­புப் படிக்க, ஒரு திட்­டம்  தயார் செய்­யப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று இன்று 10 லட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணி­னியை நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம்’. சென்ற முறை சொன்ன வாக்­கு­றுதி, கடந்த மூன்று வரு­ட­மாக ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதந்­தோ­றும் 1,000 ரூபாய் நம் தலை­வர் உரி­மைத் தொகை­யா­கக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும், தேர்­தல் வரைக்­கு­மா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் முயற்சி செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால் நம் தலை­வர் என்ன செய்­தார்? ‘நான் 1,000 ரூபாய் கொடுக்­கி­றதை நீ நிறுத்­து­கி­றாயா? நான் கொடுக்­கி­றேன் 5,000 ரூபாய்’ என்று சொல்லி பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதத்­துக்கு சேர்த்து 3,000, கோடை கால சிறப்பு நிதி 2,000 என்று மொத்­தம் 5,000 ரூபாயை நம் தலை­வர் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு, ஒரு கோடியே 31 லட்­சம் குடும்­பங்­க­ளுக்கு நம் தலை­வர் ஒரே தவ­ணை­யில் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மோடி அரசு மீது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்கு அவ­நம்­பிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் காலை­யில் 6:30 மணிக்­குக் கொடுத்­தார், ஆனால் மக­ளிர் காலை 9:00 மணிக்­கெல்­லாம் வங்­கி­யில் இருந்து பணத்தை எடுத்­து­விட்­டார்­கள். ஏன், என்ன கார­ணம்? ஏனென்­றால் மோடி அரசு மினி­மம் பேலன்ஸ் என்று சொல்லி அந்­தப் பணத்தை எடுத்­து­வி­டப் போகி­றார்­கள் என்று அந்த அள­வுக்கு ஒன்­றிய அரசு மேல், மோடி அரசு மேலே மக்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய நம்­பிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது மக­ளிர் உரி­மைத் தொகை குறித்து நம் முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். இந்­தத் தேர்­த­லில் வெற்றி பெற்ற உடனே திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன் மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்­பி­லி­ருந்து எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப்­ப­டும் என்­றும், கல்வி ஊக்­கத்­தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,500 ஆக உயர்த்­தப்­ப­டும் என்­றும் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். ‘கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டம்’ மூலம் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் இல்­லங்­கள் கட்டி, வீடில்­லா­த­வர்­க­ளுக்­கெல்­லாம் வீடு வழங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் சுய உத­விக்­கு­ழுக்­க­ளுக்கு எந்­த­வி­தப் பிணை­யும் இல்­லா­மல் 5 லட்­சம் ரூபாய் வரை கடன் வழங்­கப்­ப­டும் என்­றும், அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 50 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உறுதி செய்­யப்­ப­டும் என்­றும் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். இதெல்­லா­வற்­றை­யும் விட மிகப்­பெ­ரிய ஒரு வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அது­தான் ஆட்சி அமைந்த உடனே அனைத்து மக­ளி­ருக்­கும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன் வழங்­கு­கி­றோம். நீங்­கள் அதை உங்­கள் வீட்­டிற்கு அரு­கி­லுள்ள எந்­தக் கடைக்கு வேண்­டு­மா­னா­லும் எடுத்­துச் சென்று, உங்­கள் வீட்­டிற்­குத் தேவை­யான மின்­சா­த­னப் பொருட்­கள் – அது தொலைக்­காட்­சி­யாக இருக்­க­லாம், குளிர்­சா­த­னப் பெட்­டி­யாக இருக்­க­லாம், துணி துவைக்­கும் இயந்­தி­ர­மாக இருக்­க­லாம், குக்­கர் அல்­லது மிக்­ஸி­யாக இருக்­க­லாம் – உங்­கள் விருப்­பப்­படி நீங்­களே முடிவு செய்­து­கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நீண்ட நெடிய அனுபவம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கொண்­ட­வர் ராஜ­கண்­ணப்­பன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவை­யெல்­லாம் நடை­பெற வேண்­டும் என்­றால் வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் நம் அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் அவர்­க­ளுக்­குப் பெற்­றுத் தர வேண்­டும். எப்­பொ­ழு­துமே ராம­நா­த­பு­ரம் கழ­கத்­தின் கோட்டை. அது­மட்­டு­மல்ல, மத நல்­லி­ணக்­கத்­துக்கு, எந்­த­வி­தச் சாதி மத வேறு­பா­டும் பார்க்­கக் கூடாது என்­ப­தற்கு இன்று தமிழ்­நாட்­டிற்கே ஒரு முன்­மா­தி­ரி­யான மாவட்­டம் நம் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2021–ஆம் சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது இந்த மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய நான்கு தொகு­தி­க­ளி­லும் 100 சத­வி­கித வெற்றி பெற்­றது. இந்த வெற்­றியை வழங்­கி­யது ராம­நா­த­பு­ரம் மாவட்­டம். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் லட்­சக்­க­ணக்­கான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்­தீர்­கள். இப்­போது சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதை­வி­டக் கூடு­தல் வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் அவர்­களை நீங்­கள் வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது முறை­யாக இங்கே முது­கு­ளத்­தூர் தொகு­தி­யின் சட்­ட­மன்ற வேட்­பா­ள­ரா­கத் தலை­வர் அறி­வித்­தி­ருக்­கி­றார். மக்­கள் பணி, கழ­கப் பணி இரண்­டி­லும் இரண்டு முறை அமைச்­சர், நான்கு முறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என நீண்ட நெடிய அனு­ப­வம் உள்­ள­வர் அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன். குறிப்­பாக இந்­தப் பகுதி மக்­க­ளுக்­குப் பல்­வேறு திட்­டங்­களை ஏற்­க­னவே கொண்டு வந்து சேர்த்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முது­கு­ளத்­தூர் உள்­ளிட்ட ராம­நா­த­பு­ரம் மாவட்ட மக்­க­ளுக்­குப் பயன்­த­ரு­கின்ற வகை­யில் சுமார் 2,800 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காவிரி கூட்­டுக் குடி­நீர் திட்­டம் புதிய பணி­கள் முடி­யும் நிலை­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் அவர்­க­ளால் கொண்டு வரப்­பட்ட காவிரி கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­தில் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பழுது நீக்­கும் பணி இன்று நடை­பெற்று வரு­கி­றது. 16 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ரகு­நாத காவேரி சுமார் 41 கிலோ மீட்­ட­ருக்­குத் தூர்­வா­ரப்­பட்டு மதகு மற்­றும் தடுப்­பணை அமைக்­கின்ற பணி நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">42 கோடி ரூபாய் செல­வில் கமுதி சுற்­றுச்­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. 18 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் முது­கு­ளத்­தூர் சுற்­றுச்­சாலை முதற்­கட்ட பணி­கள் முடிந்­து­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ரோச் மாந­க­ரில் 20 கோடி மதிப்­பீட்­டில் தூண்­டில் வளைவு அமைக்­கப்­பட்­டுள்­ளது.  ஏர்­வா­டி­யில் புதிய தூண்­டில் வளைவு அமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  நரிப்­பை­யூ­ரில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பனைப் பூங்கா அமைக்­கின்ற பணி­கள், பசும்­பொன் கிரா­மத்­தில் தெய்­வீ­கத் திரு­ம­க­னார் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் பெய­ரில் ஒரு அரங்­கம், 124 புதிய மின்­மாற்­றி­கள் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. தேரி­ரு­வே­லி­யில் 15 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் துணை மின்­நி­லை­யம், ஏர்­வா­டி­யைப் பேரூ­ராட்­சி­யா­கத் தரம் உயர்த்த அனைத்து வித­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">33 ஊராட்­சி­க­ளைக் கொண்ட சாயல்­குடி புதிய ஊராட்சி ஒன்­றி­யம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதெல்­லாம் செய்து முடித்­தி­ருக்­கக்­கூ­டிய பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வரும்­போதே கோரிக்­கை­யும் வைத்­தார், என் கையில் கோரிக்­கை­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கன்­னி­கா­புரி கிரா­மத்­தில் ஒரு கிலோ­மீட்­டர் தூரத்­துக்­குச் சாலை அமைத்­துத் தர வேண்­டும். டி.வி.எஸ் புரத்­தி­லி­ருந்து கந்­த­சா­மி­பு­ரம் வரைக்­கும் தார் சாலை அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விளாத்­திக்­கு­ளம் பிரி­வி­லி­ருந்து குமா­ர­பா­ளை­யம் வரைக்­கும் தார் சாலை. ஆரோக்­கி­ய­பு­ரம் செல்­லும் சாலை­யைச் சீர­மைத்­துத் தர வேண்­டும். இளஞ்­செம்­பூர் கம்­மாய் இரண்டு புற­மும் தடுப்­புச் சுவர் கட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நக­ரத்­தார்­கு­றிச்­சி­யில் புதிய ரேஷன் கடையை அமைக்க வேண்­டும். பம்­ம­னேந்­தல் கல்­லாற்று நிலை­யில் சிறு ஆற்­றுப்­பா­லம் அமைக்க வேண்­டும். தேரி­ரு­வேலி ஊராட்சி மற்­றும் முஸ்­லிம் தெரு­வில் அங்­கன்­வாடி மையம் அமைக்க வேண்­டும். அபி­ரா­மத்­தி­லி­ருந்து நக­ரத்­தார்­கு­றிச்­சிக்­குப் புதிய பேருந்து வழித்­த­டம் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­டிப் பல்­வேறு கோரிக்­கை­களை அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் வைத்­தி­ருக்­கி­றார். நீங்­கள் எனக்கு ஒரு வாக்­கு­றுதி கொடுங்­கள். வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க–வின் வெற்றி, உத­ய­சூ­ரி­யன் வெற்றி உறுதி செய்­யப்­பட்­டதா? இந்த முது­கு­ளத்­தூர் சட்­ட­மன்­றத்­தில் அண்­ணன் ராஜ­கண்­ணப்­ப­னின் வெற்றி உறுதி செய்­யப்­பட்­டதா? நிச்­ச­ய­மாக நீங்­கள் இந்த வாக்­கு­று­தி­யைச் சரி செய்­தீர்­கள் என்­றால், நீங்­கள் உங்­கள் வாக்­கு­று­தி­யைக் காப்­பாற்­றி­னீர்­கள் என்­றால் நான் உங்­க­ளுக்கு ஒரு வாக்­கு­றுதி கொடுக்­கி­றேன். நீங்­கள் வைத்­தி­ருக்­கக்­கூ­டிய அனைத்து கோரிக்­கை­க­ளை­யும் அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் அவர்­கள் வெற்றி பெற்­ற­வு­டனே சட்­ட­மன்­றத்­துக்கு சென்று முத­ல­மைச்­ச­ரி­டம் சொல்லி நிச்­ச­யம் அந்த வாக்­கு­று­தி­களை நாங்­கள் செய்து கொடுப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு திட்­டங்­கள் இந்­தத் தொகு­திக்­குச் செய்து இருக்­கி­றோம். தமிழ்­நாட்­டுக்கு இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து இருக்­கி­றோம். வெற்றி பெற்­றால் இவ்­வ­ளவு செய்­வோம் என்­பதை இங்கே சொல்லி இருக்­கி­றேன். இந்த ஐந்து வரு­டம் திமுக என்­னென்ன திட்­டங்­கள் கொண்டு வந்­தது என்று சொல்லி இருக்­கி­றேன். இவ்­வ­ளவு திட்­டங்­கள் கொண்டு வந்­த­தால்­தான் இன்­றைக்­குத் தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே முதன்­மை­யான மாநி­லம். வளர்­கின்ற மாநி­லங்­க­ளில் 11.19% வளர்ச்­சி­யோடு இன்­றைக்கு தமிழ்­நாடு முத­லி­டத்­தில் உள்­ளது. நாம் இவ்­வ­ளவு சாத­னை­கள் செய்து இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால் இதற்கு ஒன்­றிய பா.ஜ.க அரசு நம் தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது துணை­யாக நிற்­கி­றதா? நாம் கேட்­கிற நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? எது­வுமே கொடுக்­க­வில்லை. கல்வி நிதி 2,500 கோடி கொடுக்­க­வில்லை. எந்த நிதி­யும் கொடுக்­கி­றது இல்லை, எந்­தத் திட்­ட­மும் ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டுக்­குக் கொடுக்­கி­றது இல்லை. வரவு பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­ட­மும் இல்லை. வரவு பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு என்­கிற பெயரே இல்லை. அப்­ப­டிப்­பட்ட பா.ஜ.க–வைத் தமிழ்­நாட்டு மக்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்று இன்­றைக்கு அ.தி.மு.க என்­கிற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் வரப் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அத­னால்­தான் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தலை­வர் தொடர்ந்து சொல்­கி­றார், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் ‘தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா?’ அப்­ப­டிங்­கிற தேர்­தல். இதில் டெல்லி அணியை வீழ்த்­தித் தமிழ்­நாடு அணி நாம் வெற்­றி­பெற்று காட்ட வேண்­டும். பத்து தோல்வி பழ­னிச்­சா­மியை இந்­தத் தேர்­த­லோடு மொத்த தோல்வி பழ­னிச்­சா­மி­யாக்கி வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வெகு­வா­ரி­யான வாக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வித்­தி­யா­சத்­தில் வெற்றி தாரீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பாக சொல்ல வேண்­டும் என்­றால் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து, தலை­வ­ரின் மக­னாக இருந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் அவர்­களை மிகப்­பெ­ரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறவைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள். உங்­க­ளின் முது­கு­ளத்­தூர் தொகு­திக்கு தேவை­யான எல்­லாத் திட்­டங்­க­ளை­யும் அண்­ணன் ராஜ­கண்­ணப்­பன் அவர்­கள் கொண்டு வரு­வார். உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு துணை முதல்வர் – இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதில் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் காதர் பாட்சா முத்­து­ரா­ம­லிங்­கம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நவாஸ்­கனி, முன்­னாள் அமைச்­சர் சத்­தி­ய­மூர்த்தி, விவ­சாய அணி துணைச் செய­லா­ளர் முரு­க­வேல், செயற்­குழு உறுப்­பி­னர் லட்­சுமி முத்­து­ரா­ம­லிங்­கம், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் அருள்­பால்­ராஜ், முரு­கன், தனிக்­கோடி, இலக்­கிய அணி துணைச் செய­லா­ளர் பெரு­நாழி போஸ், வர்த்­த­கர் அணி துணைச் செய­லா­ளர் ராமர், தொகு­திப் பார்­வை­யா­ளர் வேல்­மு­ரு­கன், ஒன்­றிய – நகர – பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் ஷாஜ­ஹான், பூப­தி­மணி, கோவிந்­த­ராஜ், சண்­மு­கம், ஹரி முத்­து­ரா­ம­லிங்­கம், வாசு­தே­வன், சண்­மு­க­நா­தன், மனோ­க­ரன், ஜெய­பா­லன், குலாம் மொகி­தீன், ஆறு­மு­க­வேல், மாய­கி­ருஷ்­ணன், பால­மு­ரு­கன், வெங்­க­டேஷ், இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் சம்­பத்­ராஜா, துணை அமைப்­பா­ளர்­கள் சத்­தி­யேந்­தி­ரன், தௌஃபிக் ரஹ்­மான், இளை­ஞ­ரணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், மனி­த­நேய மக்­கள் கட்சி, மக்­கள் நீதி மய்­யம், தமிழ்ப் புலி­கள் கட்சி, முக்­கு­லத்­தோர் புலிப்­படை, சமத்­துவ மக்­கள் கழ­கம், ஆதித்­த­மி­ழர் கட்சி, தமி­ழர் தேசம் கட்சி, புலித்­தே­வர் மக்­கள் முன்­னேற்­றக் உள்­ளிட்ட அனைத்­துத் தோழ­மைக் கட்­சி­களை சேர்ந்த நிர்­வா­கி­கள் கலந்துகொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>