<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,1336" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 03:30:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07042026-CBE-03" position.sequence="03" ex-ref="07042026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="67">அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி ! எல்லோர்க்கும் பிடிக்கும் கழக தேர்தல் அறிக்கை!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="32">காமராஜர் பற்றி வரலாறு தெரியாமல் பழனிசாமி பேசுவதா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="36">அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்த பழனிசாமி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">தொடர்ச்சி 4   ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame309895_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="15col_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தம்பி விஜ­ய­பி­ர­பா­க­ர­னுக்கு வாக்கு கேட்­கும்­போது, என்­னு­டைய நினை­வு­கள் எல்­லாம் எங்கே செல்­கி­றது தெரி­யுமா? அவ­ரு­டைய தந்தை என்­னு­டைய இனிய நண்­பர் ஆரு­யிர் நண்­பர் கேப்­டன் விஜ­ய­காந்த் அவர்­கள், ‘மக்­கள் ஆணை­யிட்­டால்’ என்ற ஒரு திரைப்­ப­டத்­தில் வேட்­பா­ள­ராக நடித்­தார். அதில் நான் ஒரு கவு­ரவ வேட­மாக ஒரு பாட்டு பாடி வரு­வேன். அது எதற்­காக என்­றால், வேட்­பா­ள­ராக நிற்­கும் விஜ­ய­காந்தை ஆத­ரித்து நான் பாடும் பாட்டு. அந்­தப் பாட்­டு­கூட என் மன­தில் ஆழ­மாக இருக்­கி­றது. கலை­ஞர் எழு­திய பாட்­டு­தான். “ஆற அமர கொஞ்­சம் யோசிச்சு பாரு. நீ அடுத்து வரும் தலை­மு­றையை சிந்­திச்சு பாரு” என்று ஒரு பாட்டு வரும். அவ்­வாறு, இவ­ரு­டைய அப்­பா­விற்கு ஓட்டு கேட்டு திரைப்­ப­டத்­தில் நடித்­தேன். இன்று அவ­ரின் அருமை மக­னுக்­கும் முத­ல­மைச்­ச­ராக இன்­றைக்கு நேர­டி­யாக வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். தம்பி விஜ­ய­பி­ர­பா­க­ரனை பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் நான் அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, சிவ­காசி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது அன்­புச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்ட நமது வெல்­லும் வேட்­பா­ளர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த அசோ­கன் அவர்­கள். சிவ­காசி நகர்­மன்ற துணைத் தலை­வ­ராக செயல்­பட்­ட­வர். கடந்த முறை அதே தொகு­தி­யில் உங்­க­ளுக்­காக பணி­யாற்­றி­ய­வர். மீண்­டும் அசோ­க­னுக்கு கை சின்­னத்­தில் நீங்­கள் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிறை­வாக, திரு­வில்­லிப்­புத்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த திரு. மகா­லிங்­கம் அவர்­கள்! வத்­தி­ரா­யி­ருப்பு தாலுகா இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றிக் கொண்­டி­ருப்­ப­வர். இந்த வட்­டா­ரத்து மக்­க­ளுக்­காக தொடர்ந்து செய­லாற்றி வரு­ப­வர். களத்­தில் தொடர்ந்து உங்­க­ளுக்­காக போரா­டும் அவர் குரல் சட்­ட­மன்­றத்­தில் ஒலிக்க, தோழர் மகா­லிங்­கம் அவர்­க­ளுக்கு நீங்­கள் எல்­லாம் கதிர் அரி­வாள் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளி­டம் உரி­மை­யாக, உங்­க­ளில் ஒரு­வ­னாக இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் இந்த 7 மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு நான் ஆத­ரவு கேட்­கி­றேன். அது­மட்­டு­மல்ல, மருது சகோ­த­ரர்­கள் மாதிரி இரண்டு வெயிட்­டான அமைச்­சர்­களை உங்­கள் மாவட்­டத்­திற்கு தந்து, பல்­வேறு வளர்ச்­சிப் பணி­களை செய்து தந்­தி­ருக்­கும் பெரு­மித உணர்­வு­டன் உங்­கள் ஆத­ரவை நான் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">கடந்த 5 ஆண்­டு­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">விரு­து­ந­க­ருக்கு செய்த சாத­னை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் ஆட்­சி­யின் கடந்த 5 ஆண்­டு­க­ளில் விரு­து­ந­க­ருக்கு செய்த சாத­னை­களை சொல்ல நிச்­ச­ய­மான ஒரு நாள் போதாது. அத­னால் சில­வற்றை மட்­டும் நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்­சுழி மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கையை நிறை­வேற்றி புதிய பேருந்து நிலை­யம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிவ­காசி – திரு­வில்­லிப்­புத்­தூர் சாலை­யில் இருக்­கும் சாட்­சி­யா­பு­ரத்­தில் புதிய ரயில் மேம்­பா­லம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அருப்­புக்­கோட்டை மற்­றும் ராஜ­பா­ளை­யம் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் புதிய கூடு­தல் கட்­ட­டங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முடுக்­கன்­கு­ளம் துணை­மின் நிலை­யம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காரி­யா­பட்டி மற்­றும் திருச்­சுழி வட்­டங்­க­ளில் கண்­மாய்­கள், அணைக்­கட்­டு­கள் மேம்­பாடு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காரி­யாப்­பட்டி வட்­டத்­தில் தெற்­காற்­றின் குறுக்கே புதிய அணை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிள­வக்­கல் அணைப் பகு­தி­யில் பூங்கா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேற்­குத் தொடர்ச்சி மலை­யின் அடி­வா­ரத்­தில்இருக்­கும் சுற்­று­லாத் தல­மான சாஸ்தா கோயில் அரு­விப் பகு­தி­யில் மேம்­பாட்டு பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை அனைத்­திற்­கும் மேலாக 40 ஆயி­ரம் பேருக்கு விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் பட்டா வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, ஆயி­ரத்து 286 ஊரக குடி­யி­ருப்­பு­க­ளுக்கு தாமி­ர­ப­ர­ணியை நீரா­தா­ர­மாக கொண்டு கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டப் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இருக்­கன்­குடி மாரி­யம்­மன் திருக்­கோ­யி­லில் 66 கோடி ரூபாய் மதிப்­பீட்­டி­லான திருப்­ப­ணி­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விரு­து­ந­க­ரில் ஒருங்­கி­ணைந்த ஆயத்த ஆடை­கள் பூங்கா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்­சு­ழி­யில் புதிய சிப்­காட் தொழிற்­பூங்கா மற்­றும் உண­வுப் பூங்கா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அருப்­புக்­கோட்டை மருத்­து­வ­மனை மாவட்ட தலை­மை­யிட மருத்­து­வ­ம­னை­யாக மேம்­ப­டுத்­தும் பணி­கள், இரா­ஜ­பா­ளை­யம் வட்­டம் அயன்கொல்­லன் கொண்­டா­னில் 25 ஏக்­க­ரில் 15 கோடி ரூபாய் திட்ட மதிப்­பீட்­டில் புதிய தொழிற்­பேட்டை, திரு­வில்­லிப்­புத்­தூ­ரில் புதிய பேருந்து நிலை­யம், திருத்­தங்­கல் பகு­தி­யில் போக்­கு­வ­ரத்து நெரி­சலை தவிர்க்க புதிய ரயில்வே மேம்­பா­லம் ஆகிய பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பழ­னி­சாமி என்­றால் பொய் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பித்­த­லாட்­டம் என்று பொருள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்­சு­ழி­யில் அரசு கல்­லூரி வேண்­டும் என்று கேட்­டீர்­கள். அந்­தப் பணி­யும் தொடங்­கி­விட்­டது. இன்­னும் உங்­க­ளுக்கு என்ன வேண்­டும் என்­றா­லும் சொல்­லுங்­கள். விரு­து­ந­க­ருக்கு நிச்­ச­யம் நான் செய்து தரு­வேன் என்ற உறு­தியை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போல், சாத­னை­கள் எதை­யும் சொல்ல முடி­யா­மல் அவ­தூ­று­க­ளை­யும், தரம் தாழ்ந்த பேச்­சு­க­ளை­யும் நம்பி பரப்­புரை செய்­கி­றார் பழ­னி­சாமி! பழ­னி­சாமி என்று சொன்­னால் அது பொய், பித்­த­லாட்­டம் என்­று­தான் பொரு­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி சொன்ன பொய்­கள் என்று, ஒரு புத்­த­கமே போட­லாம்! அந்த அள­வுக்கு பொய்­களை சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார். 5 முறை முத­ல­மைச்­ச­ராக இருந்த நம்­மு­டைய தலை­வர் கலை­ஞரை பற்றி, பச்சை பொய்யை பேசிய பழ­னி­சா­மிக்கு, நான் நெல்­லை­யில் பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றேன். தான் சொன்ன ஒரு பொய்­யில் இருந்து தப்­பிக்க, அடுத்­த­டுத்த பொய்­களை கூச்­சமே இல்­லா­மல் சொல்ல தொடங்­கி­யி­ருக்­கி­றார். என்ன சொல்­கி­றார் என்­றால்… பெருந்­த­லை­வர் காம­ரா­ச­ருக்கு இடம் தர மறுத்­தோம், அம்­மை­யார் ஜானகி MGR–அவர்­க­ளுக்கு இடம்­தர மறுத்­தோம் என்று உளறி கொட்­டி­யி­ருக்­கி­றார். சங்கி கூட்­ட­ணி­யில் சேர்ந்­த­தால் அவர்­களை போலவே வாட்­சாப் வதந்­தி­களை வாந்தி எடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">சொந்த மகனை போல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">இறுதி நிகழ்­வு­களை செய்தவர் கலைஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெருந்­த­லை­வர் காம­ரா­சர் மறை­வுற்ற போது, சொந்த மகனை போல் உட­னி­ருந்து இறுதி நிகழ்­வு­களை செய்­த­வர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள்! காம­ரா­ச­ரின் திரு­வு­டலை தேனாம்­பேட்டை காங்­கி­ரஸ் மைதா­னத்­தில் பொது­மக்­க­ளின் அஞ்­ச­லிக்­காக வைக்­க­லாம் என்று சொன்­ன­போது, “அவர் ஒரு கட்­சிக்கு மட்­டும் தலை­வர் இல்லை, எல்­லோ­ருக்­கு­மான தலை­வர்! முன்­னாள் முத­ல­மைச்­சர் என்­ப­தால் ராஜாஜி மண்­ட­பத்­தில்­தான் வைக்க வேண்­டும்” என்று சொன்­ன­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அவரை கிண்டி காந்தி மண்­ட­பத்­தில் தக­னம் செய்ய முடி­வெ­டுத்து, நள்­ளி­ர­வில் மழை­யில் நனைந்­த­படி அதற்­கான இடத்தை தேர்வு செய்­தார். முப்­படை வீரர்­கள் தூக்­கிக்­கொண்டு வந்த பெருந்­த­லை­வர் காம­ரா­ச­ரின் உடலை வாங்கி, பீரங்கி வண்டி மேல் வைத்­தது யார் தெரி­யுமா? தலை­வர் கலை­ஞ­ரும், அன்­றைய கர்­நா­டக முத­ல­மைச்­சர் தேவ­ராஜ் அர்ஸ் மற்­றும் திமுக அமைச்­சர் ராசா­ராம் ஆகி­யோர்­தான்! தகன மேடைக்கு அருகே இந்­திரா காந்தி அம்­மை­யா­ரு­டன் கலை­ஞ­ரும் இருந்­தார். இது எல்­லாமே வர­லாறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">இன்­னும் அசிங்­கப்­ப­டு­வார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பொய்­யர் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­கள் சொன்ன பொய் உண்மை என்­றால், அந்த காலத்­தி­லேயே இவை சர்ச்­சை­யாகி இருக்­கும். பத்­தி­ரி­கை­க­ளில் செய்­தி­யாகி இருக்­கும். ஆனால், அப்­படி எது­வுமே இல்லை. தமிழ்­நாட்டு காங்­கி­ரஸ் தலை­வர்­கள் எழு­திய புத்­த­கங்­க­ளி­லேயே கலை­ஞரை புகழ்ந்­து­தான் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். அதே­போல், ஜானகி MGR அவர்­கள் மறைந்த சில நாட்­க­ளி­லேயே, ராமா­வ­ரம் தோட்­டத்­தில் இருக்­கும் MGR இல்­லத்­தில் ஜானகி MGR அவர்­க­ளின் படத்தை திறந்து வைத்­த­வர் தலை­வர் கலை­ஞர்! 
ஆர்.எம்.வீரப்­பன், ராம­சாமி உடை­யார்,  வழக்­க­றி­ஞர் N.C. ராக­வா­சாரி ஆகி­யோ­ரும் உட­னி­ருந்த நிகழ்வு அது. சில காலம் மட்­டுமே முத­ல­மைச்­ச­ராக இருந்த ஜானகி MGR அவர்­க­ளின் படத்தை, அதி­முக தலை­வர்­களே கோட்­டை­யில் மாட்­ட­வில்லை. தலை­வர் கலை­ஞர்­தான் 1996–ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த பிறகு கோட்­டை­யில் அவர்­கள் படத்தை மாட்ட சொன்­னார். அந்த அள­விற்கு அவரை மதித்­தார். முந்­தா­நாள் அடித்த காற்­றில் முத­ல­மைச்­ச­ராகி, மக்­க­ளால் தூக்­கி­யெ­றி­யப்­பட்ட பழ­னி­சா­மிக்கு இதெல்­லாம் தெரி­யுமா? தப்பு செய்­தால் வருத்­தம் தெரி­விப்­ப­து­தான் நல்ல மனி­த­ருக்­கான இலக்­க­ணம். அதை­விட்­டு­விட்டு, மேலும் மேலும் பொய்­களை சொன்­னால், பழ­னி­சாமி இன்­னும் அசிங்­கப்­பட்­டுத்­தான் போவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது புதி­தாக இன்­னொரு பொய்யை சேர்த்­தி­ருக்­கி­றார்! ”அரசு ஊழி­யர்­களை ஆசை வார்த்தை காட்டி, திமுக அரசு ஏமாற்­றி­விட்­டது!”என பழ­னி­சாமி பேசி­யி­ருக்­கி­றார். அப்­படி ஏமாற்றி இருந்­தால், அரசு ஊழி­யர் சங்க நிர்­வா­கி­கள் என்னை கோட்­டை­யில் சந்­தித்து, நன்றி சொல்லி எனக்கு இனிப்பு ஊட்­டு­வார்­களா? சொல்­லுங்­கள்! நிறை­வேற்­றவே முடி­யாது என்று சொன்­னதை நாம் செய்­து­விட்­டோம் என்­பதை தாங்­கிக்­கொள்ள முடி­யா­மல்,  கடுப்­பில்,  பழ­னி­சாமி இப்­படி எல்­லாம் பேசிக் கொண்டு திரி­கி­றார். இலட்­சக்­க­ணக்­கான அரசு ஊழி­யர்­களை நாங்­கள் மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தி­யி­ருக்­கி­றோம். அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­களை கொடு­மைப்­ப­டுத்தி, கொச்­சைப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்கு தரும் ஊதி­யத்­தை­யும் இழி­வு­ப­டுத்தி பேசிய பழ­னி­சா­மிக்கு அவர்­க­ளி­டம் இருந்து, ஸ்வீட்­டும் கிடைக்­காது! அவர்­க­ளின் ஓட்­டும் கிடைக்­காது! இது­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு நிதி­ய­மைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அமர்ந்­தி­ருக்­கி­றார். இதை எப்­ப­டி­யா­வது நிறை­வேற்ற வேண்­டும் என்று எவ்­வ­ளவு முயற்­சி­கள் எடுத்­தோம் என்று அவ­ருக்கு முழு விவ­ரம் தெரி­யும். நம்­மு­டைய வரிப்­ப­ணம் மொத்­தத்­தை­யும் வாங்கி, பா.ஜ.க. ஆளும் வட­மா­நி­லங்­க­ளுக்கு ஒன்­றிய அரசு கொடுக்­கி­றார்­கள். இத­னால் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் செயற்­கை­யான நிதி நெருக்­க­டியை மீறி, இந்த ஓய்­வூ­திய திட்­டம் உள்­ளிட்ட எல்­லா­வற்­றை­யும் நாம் நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">எடப்பாடி துரோ­கம் பண்­ணாத தரப்பே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு ஊழி­யர்­க­ளுக்கு மட்­டுமா துரோ­கம் செய்­தார்! பழ­னி­சாமி துரோ­கம் பண்­ணாத தரப்பே தமிழ்­நாட்­டில் இருக்க முடி­யாது! மூன்று வேளாண் சட்­டங்­களை ஆத­ரித்து உழ­வர்­க­ளுக்கு துரோ­கம்! பொள்­ளாச்­சி­யில் பாலி­யல் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்ற முயற்சி செய்து, பெண்­க­ளுக்கு துரோ­கம்! குடி­யு­ரிமை திருத்த சட்­டம், வக்பு திருத்த சட்­டம் என்று பா.ஜ.க.வின் எல்லா சட்­டத்­திற்­கும் ஆத­ரவு கொடுத்து சிறு­பான்மை சமூ­கத்­திற்கு துரோ­கம். கட்­சி­யில் உங்­களை வளர்த்­து­விட்ட, செங்­கோட்­டை­ய­னுக்கு துரோ­கம், பதவி கொடுத்த அம்­மை­யார் சசி­கலா, தின­க­ர­னுக்­கும் துரோ­கம், சகோ­த­ரர் ஓ.பி.எஸ். அவர்­க­ளுக்கு துரோ­கம், உங்­கள் ஆட்­சியை காப்­பாற்­றிய முன்­னாள் சட்­டப் பேர­வை­யின் தலை­வர் தன­பால் அவர்­க­ளுக்கே சீட்டு கொடுக்­கா­மல் துரோ­கம், எல்­லா­வற்­றிற்­கும் மேல், மாநில உரி­மை­க­ளுக்கு எதி­ராக செயல்­பட்ட பா.ஜ.க.வை எதிர்த்த அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­க­ளுக்கு, அதே பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்து துரோ­கம். இப்­போது நான் சொன்ன துரோ­கத்தை உங்­க­ளால் எண்ண முடிந்­ததா? ஆனால், பழ­னி­சா­மி­யின் தேர்­தல் தோல்­வி­களை கூட நீங்­கள் எண்­ணி­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­கெ­னவே “பத்து, அடுத்­தது 11”! பாகு­பலி படத்­தில் சத்­தி­ய­ராஜை பார்த்து சொல்­வது மாதிரி ஒரு டய­லாக் வரும். “விசு­வா­சத்­திற்கு ஒரு உரு­வம் இருந்­தால் அது நீதான் கட்­டப்பா” அப்­படி ஒரு வச­னம் இருக்­கும். அது­போல், துரோ­கத்­திற்கு ஒரு உரு­வம் கொடுத்­தால் அது பழ­னி­சா­மி­தான்! இப்­படி, தன்னை நம்­பிய அத்­தனை பேருக்­கும் அல்வா கொடுத்த பழ­னி­சாமி பேசு­வதை மக்­கள் எப்­படி நம்­பு­வார்­கள்? அது­வும், நீங்­கள் ஆட்சி செய்த இலட்­ச­ணத்­தைத்­தான் தமிழ்­நாடு 4 ஆண்­டு­கள் பார்த்­ததே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தொலைநோக்கு கொண்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தேர்தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், 2021–இல் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு சொன்ன வாக்­கு­று­தி­களை எல்­லாம், படிப்­ப­டி­யாக நிறை­வேற்றி மக்­க­ளின் நம்­பிக்­கையை பெற்ற அரசு நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு! வெற்றி பெற்ற தொகுதி, வெற்றி பெறாத தொகுதி, வெற்றி பெற்ற மாவட்­டம், வெற்றி பெறாத மாவட்­டம் என்று எந்த பாகு­பா­டும் காட்­டா­மல், எல்லா பகு­தி­க­ளை­யும் சம­மாக வளர்த்­தெ­டுத்து இருக்­கி­றோம். அத­னால்­தான், நகர்ப்­புற உள்­ளாட்சி தேர்­தல், 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளில், தமிழ்­நாடு முழு­வ­தும் முழு வெற்­றியை மக்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இப்­போது, 2030–ஆம் ஆண்­டுக்­குள் தமிழ்­நாட்டை எப்­ப­டி­யெல்­லாம் வளர்த்­தெ­டுக்­கப்­போ­கி­றோம் என்று, தொலை­நோக்கு கொண்ட செயல்­திட்ட அறிக்­கை­யாக, தி.மு.க.வின் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். அதா­வது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டாரை களத்­தில் இறக்­கி­விட்டு, நான் பிரச்­சா­ரத்­தில் இறங்­கி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு பாட்டு வரும்… “சூப்­பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்­தை­யும் சொல்­லும்” அது­போன்று… இது­தான் தற்­போது சூப்­பர் ஸ்டார். எல்­லோ­ரும் இதைப்­பற்­றித்­தான் பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">திட்­டங்­க­ளால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பயன் பெற்­ற­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது என்­ன­வென்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளி­ருக்கு மாதம் ஆயி­ரம் உரி­மைத்­தொகை என்று சொன்­னோம். இன்­றைக்கு இந்­தி­யா­விற்கே மாட­லாக நம்­மு­டைய கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம் மாறி­விட்­டது. இந்த திட்­டத்­தால் பல­ரது வாழ்க்­கை­யும் மாறி­விட்­டது. புதுக்­கோட்­டையை சேர்ந்த செல்வி என்ற சகோ­தரி கொடுத்த பேட்­டியை நீங்­க­ளும் பார்த்­தி­ருப்­பீர்­கள். நானும் பார்த்­தேன். கண­வரை இழந்­து­விட்­டார். இரண்டு பெண் பிள்­ளை­கள். வீட்டு வேலைக்கு சென்று குடும்­பத்தை காப்­பாற்­று­கி­றார்­கள். தினம் ஒரு வீட்டை சுத்­தம் செய்து, பாத்­தி­ரங்­க­ளை­யெல்­லாம் கழுவி வைக்க வேண்­டும் என்­றால் அதற்கே ஒரு மணி நேரம் ஆகி­வி­டும். இப்­படி நிறைய வீடு­க­ளுக்கு சென்று வேலை பார்க்க வேண்­டும். உடம்­பெல்­லாம் வலிக்­கும். ஆனால், இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உரி­மைத்­தொகை கிடைப்­ப­தால், ஒரு வீட்டை குறைத்­து­விட்­டேன் என்று அவர்­கள் சொல்­கி­றார்­கள். “வெறும் ஆயி­ரம் ரூபாய், இதை வைத்து என்ன செய்ய முடி­யும்” என்று சிலர் கேட்­டார்­களே! செல்வி போன்ற சகோ­த­ரி­க­ளுக்கு தின­மும் ஒரு மணி நேரம் ஓய்வை இந்த திட்­டம் வழங்­கி­யி­ருக்­கி­றது. இனி அந்த மக­ளிர் உரி­மைத் தொகை மாதம் ஆயி­ரம் ரூபாய் இல்லை, மாதம் ரூ.2 ஆயி­ரம் ரூபாய் என்று உயர்த்தி அறி­வித்­தி­ருக்­கி­றோம்! தாய்­மார்­கள் எல்­லோ­ருக்­கும் மகிழ்ச்­சியா? சொன்­ன­ப­டியே 2 ஆயி­ரம் தரு­வோம் என்­ப­தற்­கான டிரெ­யி­லர்­தான் கோடைக்­கால சிறப்பு நிதி சேர்த்து, அண்­மை­யில் கொடுத்த 5 ஆயி­ரம் ரூபாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, மது­ரையை சேர்ந்த அர்ச்­சனா என்­கிற சகோ­தரி, காலை உண­வுத் திட்­டத்­தால் பய­ன­டை­யும் கதையை சொன்­னார்­கள். வசதி இல்­லாத கார­ணத்­தால், ஒரு நாளைக்கு ஒரு வேளை­தான் சமைப்­போம். காலை­யில் சமைக்க மாட்­டோம். முன்­பெல்­லாம் சாப்­பி­டா­மல் பள்­ளிக்­கூ­டத்­திற்கு சென்ற என் மக­ளுக்கு, இப்­போது காலை உணவு திட்­டத்­தால் நேரத்­திற்கு, சூடான உணவு கிடைக்­கி­றது. அது­வும், சாம்­பா­ரில் போடும் காய்­க­றிக்­கா­கவே விரும்பி சாப்­பி­டு­கி­றார். சிலம்­பம் போட்­டி­யில் கலந்­து­கொண்டு நிறைய பரி­சு­கள் எல்­லாம் பெறு­கி­றாள்.நான் படித்த காலத்­தில் இப்­படி ஒரு திட்­டம் இருந்­தி­ருந்­தால், நானும் காலே­ஜுக்கு சென்று படித்து பெரிய ஆளா­கி­யி­ருப்­பேன் என்று நெகிழ்ச்­சி­யு­டன் சொல்­கி­றார்­கள். அந்­தக் காலை உணவு திட்­டத்­தை­யும் அடுத்து அமை­ய­வுள்ள நம்­மு­டைய ஆட்­சி­யில், ஐந்­தாம் வகுப்பு வரை இருக்­கும் திட்­டத்தை எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்த போகி­றோம். இப்­படி நம்­மு­டைய ஒவ்­வொரு திட்­டத்­திற்கு பின்­னும் ஒரு குடும்­பம், ஒரு தலை­முறை, ஒரு ஊரே வளர்ச்சி அடைந்த கதை­கள் நிறை­யவே இருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவரும் -– முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (5.4.2026) விருதுநகரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், சாத்தூர் தொகுதி கழக வேட்பாளர் அ. கடற்கரை ராஜ், ராஜபாளையம் தொகுதி கழக வேட்பாளர்  சௌ. தங்கப்பாண்டியன், விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், திருச்சுழி தொகுதி கழக வேட்பாளருமான அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அருப்புக்கோட்டை தொகுதி கழக வேட்பாளருமான அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் விருதுநகர் தொகுதி வேட்பாளர் வி. விஜய பிரபாகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர்   மகாலிங்கம், காங்கிரஸ் கட்சியின் சிவகாசி தொகுதி வேட்பாளர்  கணேசன் அசோகன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்   சீனிவாசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்   தனுஷ் குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>