<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,957,1054" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 03:34:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07042026-CBE-10" position.sequence="10" ex-ref="07042026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை    </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="38">20 வருடம் கழித்தும் இன்றும் வேலை செய்கிறது ‘கலைஞர் கலர் டிவி’! </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="38"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய உரிமையோடு உதயசூரியனுக்கு வாக்கு கேட்கிறோம்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="47">வெள்ளக்கோவிலில் - அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. பரப்புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309598_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Kanimozhispeec_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வெள்­ளக்­கோ­வில், ஏப். 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">காங்­கே­யம் சட்­ட­மன்­றத் தொகு­திக்கு உட்­பட்ட வெள்­ளக்­கோ­வில் பகு­தி­யில் திமுக வேட்­பா­ள­ரும் திமுக துணை பொதுச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான வெள்­ளக்­கோ­வில் சாமி­நா­த­னுக்கு திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும் கழக நாடா­ளு­மன்ற குழுத் தலை­வருமான  கனி­மொழி 
கரு­ணா­நிதி அவர்கள் வாக்கு கேட்டு 
பரப்­புரை செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­ரப்­பு­ரை­யில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“உங்­க­ளு­டைய அன்­பான ஆர­வா­ர­மான வர­வேற்­புக்கு மன­மார்ந்த நன்றி. இந்த தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் பங்­கேற்­றுள்ள வெற்றி வேட்­பா­ளர் அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் அவர்­களே... அமைச்­சர் கயல்­விழி அவர்­களே, மாவட்­டச் செய­லா­ளர் இல. பத்­ம­நா­பன் அவர்­களே... கழக நிர்­வா­கி­களே... முன்­னணி செயல்­வீ­ரர்­களே...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உச்சி வெயில் நேரத்­தி­லும் உத­ய­சூ­ரி­ய­னுக்­காக நீங்­கள் திரண்டு நிற்­பதை பார்க்­கும்­போது நமது வெற்றி நிச்­ச­யம், நமது வெற்றி உறுதி செய்­யப்­பட்ட ஒன்று என்­பது மிகத் தெளி­வா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி சொல்­வ­தைப் போல இந்­தத் தேர்­தல் என்­பது தமிழ்­நாட்­டுக்­கும் என்.டி.ஏ.வுக்­கு­மான தேர்­தல், தமிழ்­நாட்­டுக்­கும் டெல்­லி­யில் இருக்­கும் இந்­துத்வ வாதி­க­ளுக்­கு­மான தேர்­தல். கீழ­டி­யில் இருக்­கக் கூடிய தமிழ்­நா­க­ரி­கத்­துக்­கும் நாக்­பூ­ரில் நம் மீது­தி­ணிக்­கப்­ப­டக் கூடிய ஆர்.எஸ்.எஸ். அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்­கு­மான தேர்­தல் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டு­டைய சுய­ம­ரி­யா­தையை, உரி­மை­களை தமிழ்­நாட்டு பிள்­ளை­க­ளின் கல்­வியை பாது­காக்க வேண்­டும் என்ற உணர்­வோடு இந்­தத் தேர்­த­லில் நாம் பணி­யாற்ற வேண்­டும், வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் மக்­களை சந்­தித்து, உத­ய­சூ­ரி­ய­னுக்கு ஓட்­டுப் போடுங்­கள் என்று கேட்­கும்­போது, மக்­க­ளுக்கு நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை எல்­லாம் நிறை­வேற்­றி­விட்டு மக்­களை நாம் சந்­திக்­கி­றோம். நமது அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் அவர்­கள் தனது தொகு­திக்­காக எத்­த­னையோ திட்­டங்­களை தலை­வர் கலை­ஞர் முதல்­வ­ராக இருந்­த­போது ஆகட்­டும், தள­பதி முதல்­வ­ராக இருக்­கும்­போ­தா­கட்­டும் உங்­க­ளுக்­காக போராடி பெற்­று­வ­ரக் கூடி­ய­வ­ரை­தான் உங்­க­ளுக்­காக நிற்­ப­வ­ரைத்­தான் அண்­ணன் தள­பதி அவர்­கள் மறு­ப­டி­யும் வேட்­பா­ள­ராக இங்கே நிறுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் எதிர்க்­கட்­சி­யிலே இருக்­கக் கூடிய எந்த வேட்­பா­ள­ராக இருக்­கட்­டும், தேர்­தல் முடிந்­தால் திரும்­பிப் பார்க்க மாட்­டார்­கள். ஏனென்­றால் அந்த கூட்­டணி அப்­ப­டிப்­பட்ட கூட்­டணி. தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம் செய்­யும் கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடப்­பா­டியை எடுத்­துக்­கொண்­டீர்­கள் என்­றால் தமிழ்­நாட்­டுக்­கும் துரோ­கம் செய்­த­வர், தன்னை வளர்த்த கட்­சிக்­கும் துரோ­கம் செய்­த­வர். யாரின் காலில் விழுந்து பதவி வாங்­கி­னாரோ அந்த அம்­மை­யா­ருக்கே கட்­சி­யில் இடம் இல்லை. அவர் கூட இருந்த முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓபி­எஸ் இப்­போது எங்கே இருக்­கி­றார்? தமிழ்­நாட்­டைக் காப்­பாற்ற தள­ப­தி­யால்­தான் முடி­யும் என்று நம்­மோடு இணைந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தன்னை வளர்த்த கட்­சிக்கு துரோ­கம், தமிழ்­நாட்­டுக்­கும் துரோ­கம் செய்­ப­வர் எடப்­பாடி. விவ­சா­யி­க­ளுக்கு எதி­ராக பிஜேபி கொண்­டு­வந்த சட்­டங்­க­ளுக்கு எதி­ராக எடப்­பாடி வாய் திறக்­க­வில்லை.சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு எதி­ராக எடப்­பாடி வாய் திறக்­கலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாதா­ரண சாமா­னிய மக்­க­ளுக்­காக திமுக காங்­கி­ரஸ் கூட்­டணி ஆட்­சி­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட து 100 நாள் வேலைத் திட்­டம். இன்று யாருக்­கா­வது 100 நாள் வேலை கிடைக்­குதா? பிஜேபி நாடா­ளு­மன்­றத்­தில் 100 நாள் வேலை கிடைக்­கா­மல் போவ­தற்­கான எல்லா வேலை­க­ளை­யும் செய்­யக் கூட சட்­டத்­தைக் கொண்­டு­வந்­தாங்க. உங்க கிரா­மத்­துல இருக்­கு­ற­வங்­க­ளுகு எத்­தனை பேருக்கு வேலை கொடுக்­க­லாம், என்ன வேலை கொடுக்­க­லாம்னு அவங்க முடிவு பண்­ணு­வாங்­க­ளாம், எவ்­வ­ளவு வேலை கொடுக்­க­லாம்­னும் அவங்­க­தான் முடிவு பண்­ணு­வாங்க. 100 நாள் வேலை திட்­டத்­துக்­காக மாநி­லங்­க­ளுக்கு கொடுத்த நிதியை ஒன்­றிய அரசு குறைச்­சுட்­டாங்க. இப்­படி அந்த திட்­டத்­தையேமூடக் கூடிய அள­வுக்கு சட்­டத்தை மோடி கொண்­டு­வர்­றாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டி­யெல்­லாம் பண்­ணிட்டு தேர்­தல் வரும்­போது ஓட்­டுக் கேட்க வரு­வாங்க. அப்­போது அவ­ரி­டம் கேளுங்க, ‘100 நாள் வேலைத் திட்­டத்தை மூடி­விட்டு இப்ப ஏன் ஓட்டு கேட்க வர்­றீங்­க’னு கேளுங்க. அப்­படி ஒரு சட்­டத்தை மோடி கொண்­டு­வந்­த­போது வாய் திறக்­காம அதை ஏற்­றுக்­கொண்­ட­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிரா­மங்­க­ளில் இருக்­கக் கூடிய மக்­க­ளின் வாழ்க்­கை­யைக் கேள்­விக்­கு­றி­யாக்­கும் சட்­டம் 100 நாள் வேலைக்கு எதி­ரான சட்­டம். அந்த சட்­டத்­தின் பேர்ல இருந்த காந்தி பேரைக் கூட எடுத்­துட்டு, ஜி ராம் ஜி அப்­ப­டினு பேர் வச்­சி­ருக்­காங்க. அதோட பேரு முழுசா தெரி­யாது, ஏன்னா அது இந்­தி­யில இருக்கு. அதை படிச்சு பய­னு­மில்லை. இந்தி படிக்­காம நம்ம பிள்­ளை­கள் பல நாடு­கள்லபோய் வேலை பாத்­துக்­கிட்­டி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த சட்­டம் வரும்­போது வாய் திறக்­காம ஏற்­றுக் கொண்டு, இன்­னிக்கு அதி­முக தேர்­தல் அறிக்­கை­யில வெளி­யிட்­டி­ருக்­காங்க. ‘நாங்க ஆட்­சிக்கு வந்தா 150 நாள் வேலை கொடுப்­போம்’னு சொல்­லி­யி­ருக்­காங்க. 100 நாள் வேலை­யையே காப்­பாத்த குரல் கொடுக்க முடி­யாத நீங்க 150 நாள் வேலை கொடுக்­கப் போறீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவங்­க­ளுக்­குத் தெரி­யும். அதி­மு­க­வோட தேர்­தல் அறிக்­கையை யாரும் படிக்க மாட்­டாங்­கனு அவங்­க­ளுக்கே நல்லா தெரி­யும். ஏன்னா 2016இல செல்­போன் கொடுக்­கு­றேன்னு சொன்­னாங்க. யாருக்­கா­வது கொடுத்­தாங்­களா? ஒருத்­த­ருக்­கா­வது கிடைச்­சுதா? ஒருத்­த­ருக்­கும் கொடுக்­கலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் நம்­மைப் பார்த்து தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­வ­தை­யெல்­லாம் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் நிறை­வேற்ற மாட்­டார்னு சொல்­றாரு. மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­றுதி எல்­லா­வற்­றை­யும் நிறை­வேற்­றி­ய­வர் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வண்­ணத் தொலைக்­காட்சி பெட்டி தரு­கி­றேன் என கலை­ஞர் சொன்­னாரு. அப்­போது தர முடி­யா­துனு எதிர்க்­கட்­சிக்­கா­ரங்க சொன்­னாங்க. ஆனா தலை­வர் கலை­ஞர் கொடுத்­தாரு. அது இன்­று­வரை வேலை செய்­யுது. கிட்­டத்­தட்ட இரு­பது வரு­சமா கெட்­டுப்­போ­காத டிவி உல­கத்­து­லயே இருக்­குன்னா அது கலை­ஞர் கொடுத்த டிவி­தான். இப்ப வாங்­குற டிவி­யெல்­லாம் 3 வரு­ஷம் கூட வர­மாட்­டேங்­குது. ஆனா தலை­வர் கலை­ஞர் எப்­படி தமிழ்­நாட்டு மக்­க­ளின் மன­தி­லெல்­லாம் இடம் பிடித்­தி­ருக்­கி­றாரோ, அதே­போல அவர் கொடுத்த டிவி அந்த வீடு­க­ளில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாதம் ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகை தரு­வேன் என தள­பதி சொன்­னார். அதை நிறை­வேற்­றிக் காட்­டி­ய­வர்­தான் முதல்­வர் ஸ்டாலின். இந்த தேர்­தல் முடிந்து மீண்­டும் நாம் ஆட்­சிக்கு வந்­த­தும், மக­ளிர் உரி­மைத் தொகை மாதம் 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். அடுத்து, இங்கே இருக்­கக் கூடிய விவ­சா­யி­க­ளுகு இல­வச மின்­சா­ரத்தை கொண்­டு­வந்­தது தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது எவ்­வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத மோட்­டார்­கள் நம்­மு­டைய அடுத்த ஆட்­சி­யில் எவ்­வித கட்­ட­ண­மும் இல்­லாத மோட்­டார்­களை 20 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­வேன் என உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்­லூ­ரி­யில் போய் படிக்­கக் கூடிய நம் வீட்­டுப் பிள்­ளை­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கிக் கொண்­டி­ருந்­தோம். அடுத்து நாம் மீண்­டும் ஆட்சி அமைத்­த­வு­டன் அது 1500 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும். மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள் ஒரு காலத்­தில். அதை நிறுத்­தி­யது எடப்­பாடி பழ­னி­சாமி. அதை மறு­ப­டி­யும் நம் இளை­ஞர்­க­ளுக்கு இளம்­பெண்­க­ளுக்கு கொடுத்­தது நம்­மு­டைய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின். அடுத்த முறை ஆட்­சிக்கு வந்­த­தும் 35 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு லேப்­டாப் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை உண­வுத் திட்­டம் இப்­போது 5 ஆம் வகுப்பு வரை­தான். அடுத்து ஆட்­சிக்கு வந்­த­தும் 8 ஆம் வகுப்­பு­வரை உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து முக்­கி­ய­மா­னது... என்­னது? எட்­டா­யி­ரம் இல்­லத்­த­ரசி கூப்­பன். மத்­த­வங்க சொல்­றாங்க, உங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கா பர­வால்ல, நானும் ஃபிர்ஜ்ட் கொடுப்­பேன் வாங்கி வச்­சுக்­கோனு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ஆனால், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தேர்­தல்அறிக்­கை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். உங்­க­ளு­டைய வீட்­டில் ஃபிரிட்ஜ் இருந்­தால் வாஷிங் மெஷின் வாங்­கிக்­கோங்க. வாஷிங் மெஷின் இருந்­தால் கிரைண்­டர் வேணுமா வாங்­கிக்­கோங்க. நான் எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு வவுச்­சர் கொடுக்­கு­றேன். உங்­க­ளுக்கு என்ன வேணுமோ என்ன தேவையோ அதை வாங்­கிக் கொள்­ளுங்­கள், என தேர்ந்­தெ­டுக்­கக் கூடிய வாய்ப்பை உங்­க­ளுக்கு தந்­தி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த பகு­தி­யிலே நிறைய சாத­னை­களை செய்­தி­ருக்­கி­றோம். நம்­மு­டைய அமைச்­சர் அவர்­கள் உங்­க­ளுக்­காக நிறை­வேற்­றிய சாதனை பெரிய பட்­டி­ய­லாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வட்­ட­மலை காரை­யோடை திட்­டம் 1975 இல் தலை­வர் கலை­ஞ­ரால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த ஐந்து வரு­டத்­தில் மூன்று முறை அதற்கு பரம்­பி­குள ஆழி­யாறு நீர் தேக்­கத்­தில் இருந்து அதற்கு தண்­ணீர் கொண்­டு­வ­ரப்­பட்­டது. வரும் காலங்­க­ளில் இதற்கு நிரந்த தீர்வு காணும் வகை­யில் விவ­சா­யி­கள் பயன்­பெ­றும் வகை­யில் வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவிரி கூட்­டுக் குடி­நீர் திட்­டம் 1996 இல் தலை­வர் கலை­ஞர் ஆட்­சி­யில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. மேலும் அம­ரா­வதி ஆற்­றில் இருந்து 3 MLD தண்­ணீர் கொண்­டு­வர 13 கோடி ரூபாய் செல­வில் பணி­கள் முடி­யும் தரு­வா­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் ஆட்­சி­யி­லே­தான் அருந்­த­தி­ய­ருக்கு 3% இட ஒதுக்­கீட்­டைக் கொண்­டு­வந்­தார். இப்­போது நம்­மு­டைய தள­பதி அண்­ணன் அவர்­கள் அம்­பேத்­கர் தொழில் முன்­னோடி திட்­டத்­தின் வழி­யாக ஆதி திரா­வி­டர் பழங்­கு­டி­யி­ன­ருக்கு திரா­விட மாடல் அரசு தொழில் தொடங்­கிட மூல தன மானி­யத்­து­டன் கடன் உதவி வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. இத­னால் பலர் பயன்­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­கு­தி­யிலே நெச­வா­ளர்­கள் இருக்­கி­றீர்­கள். கைத்­தறி நெச­வா­ளர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்கை முதி­யோ­ருக்கு 1,200 ரூபா­யில் இருந்து 2 ஆயி­ர­மாக நெச­வா­ளர்­க­ளுக்கு உத­வித் தொகையை அதி­க­மாக்­கி­யி­ரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கைத்­த­றியை நவீ­ன­மாக்க வேண்­டும் என்­பது நீண்ட நாள் கோரிக்கை. அத­னால் 90% மானி­யத்­தோடு கைத்­த­றி­களை நவீ­ன­மாக்க அடுத்து வரு­கிற திரா­விட மாடல் அரசு உங்­க­ளோடு உறு­து­ணை­யாக நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜவு­ளித் தொழி­லில் கோவை, திருப்­பூ­ரில் நிறைய தொழி­லா­ளர்­கள் வேலை பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் தங்­கு­வ­தற்­காக 25 ஆயி­ரம் தொழி­லா­ளர்­கள் தங்­கும் வகை­யிலே விடு­தி­கள் கட்­டித் தரப்­ப­டும். இப்­படி எத்­த­னையோ திட்­டங்­களை செய்து முடித்து அந்த உரி­மை­யோடு உங்­க­ளி­டம் வந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மற்­ற­வர்­கள் நடு­வில் நிறைய பேர் வர­லாம். அதெல்­லாம் வீணாய் போகிற ஓட்டு. உங்­க­ளுக்கே தெரி­யும். உங்­கள் வாக்­கு­களை விர­ய­மாக்­கா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உங்­கள் பிள்­ளை­க­ளு­டைய எதிர்­கா­லத்தை பாது­காக்க வேண்­டும். யார் பாது­காப்­பார்­கள்என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். நம்­மு­டைய முதல்­வர் அறி­வித்­தி­ருக்­கி­றார்... படித்­துக்­கொண்­டி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்கு மட்­டு­மல்ல... படித்துமுடித்து வேலை தேடக் கூடிய பிள்­ளை­க­ளுக்கு வேலை கிடைப்­ப­தற்­கான பயிற்சி அளிப்­போம். அந்த பயிற்சி அளிக்­கக் கூடிய ஆறு மாதங்­க­ளில் அவர்­க­ளுக்­கும் மாதம் 1,500 ரூபாய் வழங்­கு­வோம் என்று தாயுள்­ளத்­தோடு வழங்­கும் ஆட்சி திரா­விட மாடல் ஆட்சி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால் உங்­க­ளுக்­காக பாடு­ப­டக் கூடிய ஆட்சி. தமிழ்­நாட்­டின் உரி­மை­களை பாது­காக்­கும் இயக்­கம் திமுக. தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் வழி­யிலே அண்­ணன் தள­பதி அவர்­கள் தொடர்ந்து தமிழ்­நாட்­டுக்­காக பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.­மு.க. என்­பது அண்ணா தி.மு.க. ஆக­வும் இல்லை, அம்மா தி.மு.க. ஆக­வும் இல்லை. அது அமித் ஷா தி.மு.­க.­வாக மாறி­யி­ருக்­கி­றது. அவர்­கள் யார் என்று அடை­யா­ளம் கண்­டு­கொண்டு,. நம்­மு­டைய உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து நம்­மு­டைய அமைச்­சரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு – கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.  உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>