<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 03:45:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07042026-CHN-11" position.sequence="11" ex-ref="07042026-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">பதவிக்காக யார் காலிலும் விழுகிற அனுபவம் எனக்குக் கிடையாது:</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">கலைஞர் கற்றுக்கொடுத்த திராவிட இயக்கக் கொள்கை, சுயமரியாதை மட்டும்தான் எனக்குத் தெரிந்த அனுபவம்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">திருவையாறு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">எடப்பாடி பழனிசாமியின் வரம்பு மீறிய பேச்சுக்கு சூடு!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup310763_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Mdspeech642_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Mdspeech6421_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">தஞ்சை,ஏப்.7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">தஞ்­சா­வூர் மாவட்­டம், திரு­வை­யா­றில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் திரு­வை­யாறு சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் துரை.சந்­தி­ர­சே­க­ரன் அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அப்­போது அவர், ``பத­விக்­காக யார் காலி­லும் விழு­கிற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. எனக்கு இருக்­கிற அனு­ப­வம் எல்­லாம் சுய­ம­ரி­யாதை அனு­ப­வம்­தான். கலை­ஞர் கற்­றுக்­கொ­டுத்த திரா­விட இயக்­கக் கொள்கை, சுய­ம­ரி­யாதை மட்­டும்­தான் எனக்­குத் தெரிந்த அனு­ப­வம்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, எழுச்­சி­யான, அன்­பான வர­வேற்பை அளித்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் முத­லில் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திரு­வை­யாறு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், தலை­வர் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கக்­கூ­டிய வெற்றி வேட்­பா­ளர் அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ரன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற செய்து சட்­ட­பே­ர­வைக்கு அனுப்ப வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். நான் உங்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு கேட்டு வந்­தேன்.  ஆனால், திரு­வை­யா­றில் நீங்­கள் ஏற்­க­னவே முடிவு செய்து வைத்­து­விட்­டீர்­கள் என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தனி­ம­கிழ்ச்சி, தனிப்­பெ­ருமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், சிவ­கங்கை மாவட்­டம், நேற்று புதுக்­கோட்டை மாவட்­டம் எல்­லாம் முடித்­து­விட்டு நேற்று இர­வு­தான் தஞ்­சா­வூர் மாவட்­டத்­துக்­குள் நுழைந்­தேன். எத்­தனை மாவட்­டத்­துக்­குச் சென்­றா­லும், தஞ்­சா­வூர் மாவட்­டத்­துக்­குப் வரும்­போது எனக்­குத் தனி­ம­கிழ்ச்சி, தனிப்­பெ­ருமை. ஏன்? இது என் மாவட்­டம். இது நம் மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">தஞ்­சா­வூர் மாவட்­டம், என்­றைக்­குமே தி.மு.க–வின் கோட்டை. சென்று முறை எட்­டுத் தொகு­தி­க­ளில் ஏழு வெற்றி பெற்­றோம். ஒரே ஒரு தொகு­தி­யில் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். இந்த முறை அதற்­கான வேலையை நம் தலை­வர் பார்த்­துச் செய்­து­விட்­டார். எந்­தத் தொகுதி என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். அத­னால் இந்த முறை எட்­டுக்கு எட்டு வெற்­றி­பெ­று­வோம். தஞ்­சா­வூர் மாவட்­டம், 100 சத­வி­கித வெற்றி என்­பதை இந்­தத் தேர்­த­லில் நிரூ­பித்­துக் காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்த ஒருங்­கி­ணைந்த தஞ்­சா­வூர் மாவட்­டம்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளைக் கொடுத்த மாவட்­டம், இந்­தத் தஞ்­சா­வூர் மாவட்­டம். கலை­ஞ­ரின் காலடி படாத இடம் கிடை­யாது என்­பது இந்­தத் தஞ்­சா­வூர் மாவட்­டத்­தின் பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மாதம் ஒரு முறை தஞ்­சா­வூர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">1962–இல் கலை­ஞர் அவர்­கள் வெற்­றி­பெற்ற மண் இந்த தஞ்­சா­வூர் மண். அதே மாதிரி கலை­ஞர் அவர்­கள் எப்­போ­துமே நான் டெல்­டா­கா­ரன் என்­ப­தைப் பெரு­மை­யா­கச் சொல்­வார். அதே மாதிரி நம் தலை­வ­ரும் பெரு­மை­யா­கச் சொல்­வார், நானும் ஒரு டெல்­டா­கா­ரன் என்­பார். நான் இன்று பெரு­மை­யா­கச் சொல்லி அந்த உரி­மை­யோடு வந்­தி­ருக்­கி­றேன், நானும் ஒரு டெல்­டா­கா­ரன்­தான், நானும் உங்­க­ளில் ஒரு­வன்­தான் என்ற உரி­மை­யோடு உங்­க­ளி­டம் இன்று வாக்­குக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்த எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது வெற்றி உறுதி என்று தெரி­கி­றது. நான் உங்­க­ளி­டம் கேட்­ப­தெல்­லாம், சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ரன் அவர்­களை நீங்­கள் கிட்­டத்­தட்ட 54,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­தி­ருக்­கி­றீர்­கள். இந்த முறை இன்­னும் கொஞ்­சம் கூடு­த­லாக 60,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும். நீங்­கள் மட்­டும் ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ரன் அவர்­களை வெற்­றி­பெற வைத்­து­விட்­டீர்­கள் என்­றால், நான் சத்­தி­ய­மா­கச் சொல்­கி­றேன், உறு­தி­யா­கச் சொல்­கி­றேன், மாதத்­துக்கு ஒரு முறை தஞ்­சா­வூ­ருக்கு வந்து உங்­கள் அத்­தனை பேரை­யும் நான் பார்த்­து­விட்­டுப் போவேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அண்­ணன் துரை சந்­தி­ர­சே­க­ரன் அவர்­களை உங்­க­ளி­டம் நான் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யமே கிடை­யாது. உங்­கள் ஒவ்­வொ­ரு­வர் முகம் மட்­டும் இல்லை, ஒவ்­வொ­ரு­வர் பெய­ரும் அவ­ருக்­குத் தெரி­யும். அந்த அள­வுக்கு உங்­க­ளோடு இருக்­கக்­கூ­டி­ய­வர், மக்­க­ளோடு மக்­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர் அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ரன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நான் சொன்­னது மாதிரி ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­து­வி­டுங்­கள். நான் தலை­வ­ரி­டம் பேசி அவரை அமைச்­ச­ராக்­கு­கி­றேன். அவர் என்னை அமைச்­ச­ராக்­கு­வ­தற்கு அவர் பரிந்­துரை செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எல்­லா­ருக்­கும் முக்­கி­ய­மான வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நானும் ஒரு வேட்­பா­ளர். நானும் இந்­தத் தேர்­த­லில் போட்டி போடு­கி­றேன். நானே அடிக்­கடி அதை மறந்­து­வி­டு­கி­றேன். என் தொகுதி சென்­னை­யில் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகுதி. இரண்­டா­வது முறை தலை­வர் அவர்­கள் வாய்ப்­புக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். என் தொகு­திக்கே நான் ஒரே ஒரு நாள்­தான் வாக்கு கேட்டு சென்­றேன். என் தொகு­தியை விட்­டு­விட்டு இன்று திரு­வை­யாறு தொகு­திக்கு வந்து அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ர­னுக்கு வாக்­குக் கேட்­கி­றேன் என்­றால், என் வெற்­றி­யை­விட அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ர­னின் வெற்றி நம் எல்­லா­ருக்­கும் முக்­கி­ய­மான வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இது­வ­ரைக்­கும் ஐந்து முறை உங்­க­ளின் அன்­பைப் பெற்று, வாக்­கு­க­ளைப் பெற்று, அவர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆகி­விட்­டார். இந்த முறை சிக்­ஸர் அடிக்க வேண்­டும். திரு­வை­யாறு சட்­ட­மன்­றத் தொகுதி இந்த முறை சிக்­ஸர் அடித்து ஆறா­வது முறை­யாக அண்­ணன் அவர்­களை வெற்­றி­பெற வைக்க வேண்­டும். இந்­தப் பகு­திக்கு இவ்­வ­ளவு தைரி­ய­மாக வந்து உரி­மை­யோடு நீங்­க­ளும் ஐந்து முறை வெற்றி பெற வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்த ஐந்து வரு­டத்­தில் என்­னென்ன திட்­டங்­களை அண்­ணன் சந்­தி­ர­சே­க­ரன் அவர்­கள் இந்­தத் தொகு­திக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார் என்­ப­தற்கு ஒரு சிறிய எடுத்­துக்­காட்டை, உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திரு­வை­யாறு திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">பூத­லூர், திரு­வை­யாறு ஒன்­றி­யத்­தில் 220 குடி­யி­ருப்பு பகு­தி­க­ளில், 234 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் கொண்டு வந்­தது உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணன் சந்­தி­ர­சே­க­ரன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அர­சூர், மணக்­க­ரம்பை, காட்­டுக்­கோட்டை, கண்­டி­யூர், கீழத் திருப்­பூந்­து­ருத்தி, கல்­யா­ண­பு­ரம், பெரும்­பு­லி­யூர், திரு­வை­யாறு, வில்­லங்­குடி ஆகிய ஊர்­க­ளில் 192 கோடி ரூபாய் செல­வில் புதிய புற­வ­ழிச்­சாலை அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திருக்­காட்­டுப்­பள்­ளி­யில் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைப்­ப­தற்கு இன்று 53 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுப் புதிய புற­வ­ழிச்­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">வெண்­ணாற்­றின் குறுக்கே உயர்­மட்­டப் பாலம் அமைக்­கின்ற பணி­கள் இன்று நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதைக் கொண்டு வந்­தது அண்­ணன் துரை சந்­தி­ர­சே­க­ரன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">செங்­கிப்­பட்­டி­யில் 300 ஏக்­க­ரில் 120 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய சிப்­காட் அமைக்­கப்­பட உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">பூத­லூர் ஒன்­றி­யம் பூதக்­குடி ஊராட்­சி­யில் புதிய கால்­ந­டைத் தீவ­னத் தொழிற்­சாலை கொண்டு வந்­தி­ருக்­கி­றார் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திரு­வை­யாறு பேரூ­ராட்சி இன்று நக­ராட்­சி­யா­கத் தரம் உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. 42 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தென் பெரம்­பூர் பாலம் அமைக்­கின்ற பணி­கள், திருக்­காட்­டுப்­பள்ளி அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரிக்கு 25 கோடி ரூபாய் நிதி­யில் நிரந்­த­ரக் கட்­ட­டம் கட்­டு­கின்ற பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">திருச்சி மற்­றும் தஞ்­சா­வூர் மாவட்­டங்­களை இணைக்­கும் வகை­யில், 90 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு கல்­லணை கொள்­ளி­டம் ஆற்­றின் குறுக்கே புதிய உயர்­மட்ட பாலம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திரு­வை­யா­றில் உள் விளை­யாட்டு அரங்­கம் அமைக்­கின்ற பணி; திருக்­காட்­டுப்­பள்ளி பேரூ­ராட்­சி­யில் நேதாஜி மார்க்­கெட்; 50 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுத் திட்டை ஊராட்­சி­யில் ரயில்வே மேம்­பா­லம் அமைக்­கின்ற பணி­கள் என இப்­படி எத்­த­னையோ பணி­களை இந்­தத் திரு­வை­யாறு தொகு­திக்கு அண்­ணன் அவர்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய கோரிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இவை தவிர ஒரு பெரிய பட்­டி­யலே கொடுத்­து­விட்­டார், கோரிக்கை. அவர் சொல்­லி­விட்­டார், மீண்­டும் நம் தலை­வர்­தான் முத­ல­மைச்­சர் ஆகப்­போ­கி­றார், மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப்­போ­வது உறுதி. கோரிக்­கை­கள் எல்­லாம் கொடுத்­தி­ருக்­கி­றேன், இந்­தக் கோரிக்­கை­கள் எல்­லாம் செய்­து­கொ­டுக்க வேண்­டும் என்று அவர் சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நான் கடந்த ஒரு வார­மாக மக்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கி­றேன். ஒவ்­வொரு தொகு­தி­யா­கச் செல்ல தலை­வர் என்னை அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார்­கள். உத­ய­நிதி வந்­தார், வந்து பேசி­னார், திட்­டங்­க­ளைப் பற்­றிச் சொன்­னார், அண்­ணன் துரை.சந்­தி­ர­சே­க­ரன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு கேட்­டார், சென்­று­விட்­டார்.  நாமும் கலைந்து போக­லாம் என்று போய்­வி­டக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">23–ஆம் தேதி தேர்­தல். இன்­னும் தேர்­த­லுக்கு 17 நாட்­கள் இருக்­கின்­றன. நம் கைக­ளில் 17 நாட்­கள் இருக்­கின்­றன. இந்த 17 நாட்­க­ளும் நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வீடாக சென்று ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்து வாக்கு கேட்க வேண்­டும். நம் திட்­டங்­க­ளைச் சொல்ல வேண்­டும். கடந்த ஐந்து வரு­டத்­தில் நம் முத­ல­மைச்­சர் என்­னென்ன திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார் என்­பதை மக்­க­ளி­டம் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நாம் சொன்ன வாக்­கு­றுதி, ஆட்­சிப் பொறுப்­பேற்ற உடனே நம் தலை­வர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­கான விடி­யல் பய­ணத் திட்­டம், மக­ளி­ருக்­கான கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம். இன்று ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதந்­தோ­றும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரைக்­கும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">எல்­லா­ரும் படிக்க வேண்­டும், எல்­லா­ரும் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்து படிக்க வேண்­டும் என்று, குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தால் பசி­யோடு இருக்­கக் கூடாது என்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்தை நம் தலை­வர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இன்று ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் காலை­யில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தார்­கள் என்­றால், முத­லில் தர­மான காலை உணவு, அதன்­பி­றகு தர­மான கல்­வி­யைக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கல்­லூரி படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்­டம் வாயி­லாக கல்வி ஊக்­கத்­தொ­கைத் திட்­டம். அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்து படித்­தா­லும், தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும் சரி, அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் கல்வி ஊக்­கத்­தொகை மாதம் 1,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார். 13 லட்­சம் மாணவ மாண­வி­கள் இந்­தத் திட்­டத்­தில் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஒரே மாதத்­தில் கொடுத்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இரண்டு மாதத்­துக்கு முன்பு நம் முத­ல­மைச்­சர் 10 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றோம். அ.தி.மு.க ஆட்­சி­யில் பள்­ளிக்­கூ­டக் குழந்­தை­க­ளுக்­குக் கொடுத்­தார்­கள், 2019–இல் நிறுத்­தி­விட்­டார்­கள். ஆனால் நம் முத­ல­மைச்­சர் பள்­ளிக்­கூ­டக் குழந்­தை­க­ளுக்­குக் கொடுப்­பதை விடக் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்­குக் கொடுத்­தால் மடிக்­க­ணினி பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று முடிவு செய்து இன்று 10 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்­குக் கடந்த மூன்று வரு­ட­மாக மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் நம் தலை­வர் வங்கி கணக்­கில் செலுத்தி வரு­கி­றார். அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்­டணி முயற்சி செய்­தது. தேர்­த­லைக் கார­ணங்­காட்டி நிறுத்­தி­வி­ட­லாம், `மூன்று மாதத்­துக்கு நிறுத்­து­வோம்’ என்று முயற்சி எடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நம் தலை­வர் என்ன செய்­தார், அந்­தச் சூழ்ச்­சி­யை­யெல்­லாம் முறி­ய­டிக்­கிற மாதிரி பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் என மூன்று மாதத்­துக்­கும் சேர்த்து 3,000 ரூபா­யு­டன், கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என மொத்­தம் 5,000 ரூபாயை ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு ஒரே தவ­ணை­யில் நம் தலை­வர் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">2,000 ரூபாய் கொடுப்­போம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.  மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன் மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். காலை உண­வுத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு எட்­டாம் வகுப்பு வரை காலை உண­வுத் திட்­டம் வழங்­கப்­ப­டும். முதி­யோர் உத­வித்­தொகை 1,200–லிருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வோம் என்று உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம். 50 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உறுதி செய்­யப்­ப­டும்.  கல்வி ஊக்­கத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,500–ஆக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு எந்­த­வித பிணை­யு­மில்­லா­மல் 5 லட்­சம் ரூபாய் வரைக்­கும் கடன் வழங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அதே மாதிரி அடுத்த ஐந்து வரு­டத்­தில் 10 லட்­சம் ‘கலை­ஞர் கனவு இல்­லம்’ கட்­டப்­பட்டு, யார் யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அனை­வ­ருக்­கும் ‘கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டம்’ மூலம் வீடு கட்­டிக் கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ரூ.8,000 மதிப்­புள்ள கூப்­பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னொரு முக்­கி­ய­மான வாக்­கு­றுதி உங்­கள் எல்­லா­ருக்­கும் தெரிந்­தி­ருக்­கும். ஆட்சி அமைந்த உடனே நம் தலை­வர் முத­ல­மைச்­சர் ஒவ்­வொரு மக­ளி­ருக்­கும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வோம். அந்த கூப்­பனை வைத்து வீட்­டுக்கு என்ன தேவையோ, மக­ளிர் நீங்­களே உங்­கள் வீட்­டுக்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவையோ அதை நீங்­களே முடிவு செய்து நீங்­களே வாங்­கிக்­கொள்­ள­லாம். இந்­தத் திட்­டங்­கள் எல்­லாம் நடை­பெற வேண்­டும் என்­றால், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இவ்­வ­ளவு திட்­டங்­கள் செய்­த­த­னால்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே நம் தமிழ்­நாடு நம்­பர் ஒன் மாநி­லம். வள­ரு­கின்ற மாநி­லங்­க­ளில் முதல் இடத்­தைப் பிடித்­தி­ருக்­கி­றோம். 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யோடு இன்று தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­லம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நாம் இவ்­வ­ளவு சாத­னை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். இது எதற்­கா­வது ஒன்­றிய பா.ஜ.க அரசு நமக்­குத் துணை­யாக நின்­றி­ருக்­கி­றதா? நமக்கு ஏதா­வது திட்­டங்­கள் கொடுக்­கி­றார்­களா? நமக்கு வர­வேண்­டிய நிதிப் பகிர்வு வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நம் தலை­வர் அடிக்­கடி சொல்­கி­றார், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் ‘தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா?’ என்ற தேர்­தல். இதில் தமிழ்­நாடு அணி நாம் மீண்­டும் வெற்­றிப்­பெற்­றுக் காட்ட வேண்­டும், டெல்லி அணியை வீழ்த்­திக் காட்ட வேண்­டும். யார் டெல்லி அணி? மோடி, அவர் கூட யார்? அவ­ரின் நம்­பர் ஒன் அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">என் மீது அவ­ருக்கு ஒரு பயங்­கர பாசம். என்­னைப் பற்­றியே நினைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கூட்­டத்­தி­னர் – ``ஜாடிக்கு ஏத்த மூடி’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">ஜாடிக்கு ஏற்ற மூடி மாதிரி இன்று மோடிக்கு ஏற்ற ஒரு அடி­மை­தான் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கூட்­டத்­தி­னர் – ``போட்டோ, போட்டோ காட்­டுங்க’’.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">``போட்டோ காட்­ட­ணுமா?’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">உத­ய­நி­திக்கு அனு­ப­வமே இல்லை என்று அவர் சொல்­கி­றார். என் அர­சி­யல் அனு­ப­வம் அவ­ரு­டைய வயது என்று சொல்­லி­விட்­டார். ஆம், நான் அவரை விடச் சிறிய பையன்­தான். கண்­டிப்­பாக அவ­ருக்கு இருக்­கிற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">போட்டோ காட்­டு­கின்­றார். தெரி­யுதா? யார் என்று ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">ஞாப­கம் இருக்­கி­றதா? கொஞ்­சம் ரீவைண்ட் செய்து பாருங்­கள். தெரி­கி­றதா என்­ன­வென்று. கீழே ஒரு­வர் படுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கரப்­பான் பூச்சி, மண்­புழு…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">என்­னைப்­பற்றி பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இந்த அனு­ப­வம் எனக்கு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">பத­விக்­காக யார் காலி­லும் விழு­கிற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. எனக்கு இருக்­கிற அனு­ப­வம் எல்­லாம் சுய­ம­ரி­யாதை அனு­ப­வம்­தான். கலை­ஞர் கற்­றுக்­கொ­டுத்த திரா­விட இயக்­கக் கொள்கை, சுய­ம­ரி­யா­தை­மட்­டும்­தான் எனக்­குத் தெரிந்த அனு­ப­வம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">முத­லில் ஜெய­ல­லிதா அம்மா காலில் விழுந்து கிடந்­தார். பிறகு அந்த அம்மா இறந்த பிறகு சசி­கலா அம்மா காலைப் பிடித்­தார். பிறகு இந்த அம்மா சிறைக்­குப் போய்­விட்­டார்­கள்.  பிறகு டி.டி.வி. தின­க­ரன் காலில் விழுந்­தார். அவரை விலக்­கி­விட்டு, ஓ.பி.எஸ். அண்­ணன் காலில் விழுந்­தார். இப்­போது அவர் நம்­மி­டம் வந்­து­விட்­டார், அவர் போன உடனே எல்­லா­ரை­யும் விலக்­கி­விட்டு, இப்­போது என்ன செய்­து­விட்­டார்? நேரா டெல்­லிக்­குப் போய் மோடி காலைப் பிடித்­துத் தொங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார் இந்த எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நம்­பர் ஒன் முரட்டு அடிமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">முரட்டு பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்டு தொண்­டர்­கள் கேள்­வி­பட்­டி­ருப்­பீர்­கள். எங்­கே­யா­வது ஒரு முரட்டு அடி­மையை பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? இன்று இந்­தி­யா­வி­லேயே நம்­பர் ஒன் முரட்டு அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் தான். மோடி­யின் முரட்டு அடிமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அந்த அடி­மைக் கூட்­டத்தை, டெல்­லி­யி­லி­ருந்து தமிழ்­நாட்டை எப்­ப­டி­யா­வது ரிமோட் கண்ட்­ரோல் மூலம் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள். அந்த ரிமோட் கண்ட்­ரோல்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள். நாம் மீண்­டும், மீண்­டும் சொல்­வோம் தமிழ்­நாடு என்­றைக்­குமே டெல்­லிக்­குக் அவுட் ஆஃப் கண்ட்­ரோ­லா­கத்­தான் இருப்­போம். இது சுய­ம­ரி­யாதை மண். அதற்கு இந்­தத் தேர்­த­லில் மிகப்­பெ­ரிய வெற்­றியை நாம் அடைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், உங்­க­ளில் ஒரு­வ­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அண்­ணன் துரை சந்­தி­ர­சே­க­ரன் அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்து அவ­ரைச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள். உங்­கள் தொகு­திக்கு என்­னென்ன தேவையோ நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நிச்­ச­யம் செய்து கொடுப்­பார் என்ற வாக்­கு­று­தியை உங்­க­ளுக்­குக் கொடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன். உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி! என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அமைச்­சர் கோவி.செழி­யன், கும்­ப­கோ­ணம் வேட்­பா­ளர் அன்­ப­ழ­கன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முர­சொலி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்  செல்­வம், மாந­க­ரச் செய­லா­ளர் தஞ்­சா­வூர் சட்­ட­மன்ற வேட்­பா­ளர் சண்.ராம­நா­தன், மாவட்­டத் துணைச் செய­லா­ளர் புண்­ணி­ய­மூர்த்தி, பொதுக்­குழு உறுப்­பி­னர் இள­வ­ரசி கருப்­பையா, ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் உல­க­நா­தன், சிவ­சங்­க­ரன், கல்­லணை செல்­லக்­கண்ணு, முரு­கா­னந்­தம், கௌத­மன், அர­ச­ப­க­ரன், அசோக்­கு­மார், நாக­ரா­ஜன், ஜெய­ரா­மன், அக­மது மைதீன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் முகில்­வேந்­தன், துணை அமைப்­பா­ளர்­கள் சுரேஷ், கார்த்­திக், ஹரி­த­ரன், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த    இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டக் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள், மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­யக கட்சி, மக்­கள் நீதி மய்­யம், தமி­ழர் தேசம் கட்சி, தமிழ்ப் புலி­கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்­கு­லத்­தோர் புலிப்­படை, சமத்­துவ மக்­கள் கழ­கம், மக்­கள் விடு­த­லைக் கட்­சி­யி­னர் மற்­றும்பொது­மக்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>