<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,763,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 06 2026 16:28:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07042026-TRY-15" position.sequence="15" ex-ref="07042026-TRY-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">மற்றவர்கள் நடுவில் நிறைய பேர் வரலாம்; அதெல்லாம் வீணாகப் போகிற ஓட்டு: </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">அ.தி.மு.க. இன்று அமித்ஷா தி.மு.க.வாக மாறிய காலகட்டத்தில் உள்ளது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35"> காங்கேயம் சட்டமன்றத் தொகுதி பரப்புரையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kani1_15_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காங்கேயம், ஏப். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின்சார்பில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  தி.மு.க. வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளு மன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, திருப்பூர் மாவட் டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, வெள்ளகோவில் – ஈரோடு சாலை சந்திப்புசாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு,பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத் தில் வாக்குச் சேகரித்தார்.  கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு தி.மு.க.வினர் செங்கோல் கொடுத்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த உச்சி வெயில் நேரத்திலேயும் உதய சூரியனுக்காக இங்கே குழுமி இருக்கக்கூடிய உங்களை எல்லாம் பார்க்கும் போது, வெற்றி நிச்சயம்; வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தேர்தல் என்பது, நம்முடைய முதலமைச்சர் சொல்லுவது போல, தமிழ்நாட்டிற்கும் என்.டி.ஏ.வுக்குமான தேர்தல்; தமிழ்நாட்டிற்கும் டெல்லியில் இருக்கக்கூடிய இந்துத்துவவாதிகளுக்கு மான தேர்தல்; கீழடியில் விளங்கும் தமிழ் நாகரிகத்திற்கும் நாக்பூரில் இருந்து ஹிந்தி  திணிக்க  முயலும்  அந்த                  ஆர்.எஸ்.எஸ். அடிப்படைவாதிகளுக்கு மான தேர்தல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டின் சுயமரியாதை, உரிமைகள், நம் வீட்டு பிள்ளைகளின் எதிர்கா லத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என்ற எண்ணத்தோடு பணியாற்றவும், வாக்களிக்கவும் வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் மக்களைச் சந்தித்து உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கும் போது, மக்களுக்கு கொடுத்தி ருந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டு தான் சந்திக்கிறோம்.அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தன்னு டைய தொகுதியில் உள்ள மக்களுக்காக ஒவ்வொரு முறையும் போராடி, வாதாடி பணியாற்றி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உங்களின் வேட்பாளராக மறுபடியும் அமைச்சர் நிறுத்தி இருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">துரோகம் செய்யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எடப்பாடி பழனிசாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள வேட்பாளர்களை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கவே முடியாது. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடிய கூட்டணிதான் அது. எடப்பாடி பழனிசாமியை எடுத்துக்  கொண்டால், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்வார்; தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் செய்யக்கூடியவர். யாருடையகாலில் விழுந்து பதவி பெற்றாரோ, இன்றுஅ.தி.மு.க.வில் அந்த அம்மையாருக்கே இடம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். தமிழ்நாட்டை காப்பாற்றும் நோக்கில் தி.மு.க.வுடன் தன்னை இணைத்துக்  கொண்டுள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கும், நம்முடையமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகபா.ஜ.க. கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து வாய் திறக்காதவராக இருந் துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்க வில்லை. கிராமப்புறங்களில் உள்ள சாதாரண, சாமானிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை உறுதியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று யாருக்கா வது 100 நாள் வேலை கிடைக்கிறதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 100 நாள் வேலை கிடைக்காமல் போகும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம் அது. டெல்லியில் உட்கார்ந்தபடியே, உங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கலாம், என்ன வேலை வழங்கலாம் என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வளவு வேலை வழங்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்கிய நிதியையே குறைத்துவிட்டார் கள். இதனால், 100 நாள் வேலை வழங்கும் அந்தத் திட்டத்தையே முடக்க முயற்சி செய்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">100 நாள் வேலை திட்டத்தை ஊத்தி மூடிட்டு,  இப்போது ஏன் எங்களிடம் ஓட்டு கேட்கிறீர்கள் என்று தேர்தலுக்காக வரும் பாஜகவினரிடம் கேளுங்கள். அப்படிப் பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வந்த போது, வாய் திறக்காமல் அதை ஏற்றுக்  கொண்டவர் தான் எடப்பாடி பழனிசாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">100 நாள் வேலைக்கு எதிரான அந்தச் சட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார் கள். மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டார்கள். அதற்கு ‘விபி ஸ்ரீராம்ஜி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த ‘விபி ஸ்ரீராம்ஜி’ என்ற பெயரைப் பற்றி முழுவதும் கேட்காதீர்கள். எனக்கு ஹிந்தி தெரியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டில் நம்ம பிள்ளைகள் எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று திணித்தார்கள். ஆனால் இன்று, நம்ம பிள்ளைகள் ஹிந்தி படிக்காமலேயே பல நாடுகளுக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தபோது வாய் திறக்காமல் ஏற்றுக்கொண்டவர்கள், இன்று தேர்தல் வந்ததும் ஆட்சிக்கு வந்தால்150 நாள் வேலை கொடுப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">100 நாள் வேலைக்கே குரல் கொடுத்துகாப்பாற்ற முடியாத நீங்கள், 150 நாள் வேலை கொடுக்கப் போகிறீர்களா?       அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையாரும் நம்புவதில்லை. 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் செல்போன் வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் யாருக்காவது செல்போன் கிடைத்ததா? ஒருவருக்கும் கொடுக்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்று வரை வேலை செய்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 வருஷமா உலகத்திலேயே கெடாமல் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி பெட்டியை வழங்கியது தலைவர் கலைஞர். இன்றும் பல வீடுகளில் மக்கள் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலைஞர் எப்படி தமிழ்நாட்டின் மக்கள்மனங்களில் நிலைத்து நிற்க்கிறோரோ, அதேபோல அவர் வழங்கிய தொலைக்     காட்சி பெட்டியும் அந்த வீடுகளில் இன்னும் நிலைத்து நிற்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதலமைச்சர் அவர்கள் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குவோம் என்று கூறி, அதை நிறைவேற்றி காட்டியுள்ளார். அதேபோல், இந்த தேர்தல் முடிந்து மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே, அந்தத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரூ.8,000 கூப்பன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வேண்டியதை வாங்கலாம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவசாயிகளுக்கான இலவச மின்சா ரத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். அடுத்த முறை நாம் ஆட்சிக்குவந்தவுடன், எந்தவித கட்டணமும் இல்லாமல் இயங்கக்கூடிய மின் மோட்டர்களை 20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கு வோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்லூரி மாணவ, மாணவிகளுக் கான உதவித்தொகை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அடுத்த முறை ஆட்சிக்கு வந்த உடனே, 35 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்முடைய முதலமைச்சர் ₹8000 ரூபாய்க்கு கூப்பன் கொடுக்கிறேன். உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நமக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த பகுதியில் பல சாதனைகளை அமைச்சர் நிறைவேற்றி வழங்கியுள்  ளார். வட்டமலை காரையோடை திட்டம் 1970-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த ஐந்து ஆண்டுக் கால ஆட்சியில் மட்டும் மூன்று முறை பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்த்தேக்கத்தி லிருந்து அதற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதற்கான நிரந்தரத் தீர்வை காணும் வகையில் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்க ளின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், அமராவதி ஆற்றிலிருந்து 3 எம்.எல்.டி. தண்ணீர் கொண்டு வர 13 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன; இது அமைச்சர் உங்களுக்காக பெற்றுத் தந்த முக்கியமான திட்டமாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான் அருந்ததிய ருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போது நம்முடைய அண்ணன்தளபதி அவர்கள், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் தொடங்குவதற்காக மூலதன மானியத்துடன் கடன் உதவி வழங்கி வருகிறார். அதன் மூலம் பலர் பயன்  பெற்று வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த பகுதியில் உள்ள நெசவாளர்கள், இந்த தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்காக நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கைகளை முன்வைத்தீர்கள். முதியோருக்கான உதவித்தொகையை ₹1200-இலிருந்து ₹2000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வழங்கியுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது மட்டும் அல்ல, கைத்தறிகளைநவீனமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக இருந்து வந்தது. அதற்காக 90% மானியத்துடன் ₹10,000 வழங்கி கைத்தறிகளை நவீனமாக்க நம்முடைய அரசு நடவடிக்கை எடுத் துள்ளது. அடுத்ததாக வரும் திராவிட மாடல் அரசு உங்களுடன் உறுதுணை யாக நிற்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதேபோல், ஜவுளி தொழிலில் கோவை, திருப்பூரில் பல தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கும் வசதிக்காக தொழிலாளர்கள் தங்கக்கூடிய விடுதிகள் கட்டித் தரப்படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு பல திட்டங்களை நிறை வேற்றி, அந்த உரிமையோடு தான் இன்று உங்கள் முன் வந்து, உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>