<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 04:13:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260407T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07042026-VLR-11" position.sequence="11" ex-ref="07042026-VLR-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">கடந்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டமும் கிடையாது. ‘தமிழ்நாடு’ என்கிற பெயரே பட்ஜெட்டில் இல்லை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிற பா.ஜ.க – அடிமை அ.தி.மு.க.வை தமிழ்நாட்டு  மக்கள் புறக்கணிக்க வேண்டும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ஆலங்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறைகூவல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup310322_11_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_11_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="udayasirspeec_11_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="udayasirspeec1_11_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆலங்­குடி, ஏப்.7  –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை மாவட்­டம் ஆலங்­கு­டி­யில்  கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆலங்­குடி  சட்­ட­மன்­றத் தொகுதி திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் அமைச்­சர் சிவ.வீ.
மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து, பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``தமிழ்­நாட்­டுக்கு என்று ஏதா­வது திட்­டங்­கள் கொடுக்­கி­றார்­களா? கிடை­யாது. கடந்த பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டிற்கு என்று எந்­தத் திட்­ட­மும் கிடை­யாது. ‘தமிழ்­நாடு’ என்­கிற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கிற பா.ஜ.க–வை­யும்  அவர்­க­ளுக்­குத் துணை போகும் அடிமை அ.தி.மு.கவை­யும் தமிழ்­நாடு புறக்­க­ணிக்க வேண்­டும்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும், துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­  வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த 2021–ஆம் ஆண்டு, சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது, இதே தெரு­வில், இதே இடத்­தில் வந்து அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்கு நான் வாக்கு கேட்­டேன். அப்­போது, ``அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­களை நீங்­கள் 25,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து அனுப்ப வேண்­டும்’’ என்று நான் சொன்­னேன். நீங்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தீர்­கள், கொடுத்த வாக்­கு­று­தி­யைச் செய்து காட்­டி­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது மீண்­டும் 2026–ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற இருக்­கி­றது. நம் தலை­வர் அவர்­கள் பல ஊர்­க­ளுக்­குச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள்; எல்லா மாவட்­டத்­துக்­கும் சென்று மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நானும் கடந்த ஒரு வார­மா­கத் தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரம் செய்து கொண்­டி­ருக்­கி­றேன். ஒவ்­வொரு நாளும் ஒரு 5 தொகுதி, 6 தொகுதி என்று மக்­க­ளைச் சந்­தித்து, நம் கூட்­ட­ணிக் கட்சி சகோ­த­ரர்­க­ளைச் சந்­தித்து, மக­ளி­ரைச் சந்­தித்து, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று என் பிரச்­சா­ரத்­தைச் செய்து கொண்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­ப­டித்­தான் இன்று இங்கே வந்­தேன். உங்­க­ளை­யெல்­லாம் பார்த்து, ``எல்­லா­ரும் தய­வு­செய்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­து­வி­டுங்­கள்’’ என்று கேட்க வந்­தேன். ஆனால், ``நீங்­க­ளெல்­லாம் இதை ஏற்­க­னவே ஒரு முடிவு பண்ணி வைத்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பது இங்கே வந்த பிற­கு­தான் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மிக­வும் கூர்­மை­யா­ன­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் கடந்த முறை 25,000 வாக்­கு­கள், இந்த முறை 50,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­களை நீங்­கள் வெற்றி பெறச் செய்ய வேண்­டும். ஆலங்­குடி தொகுதி மக்­கள் மிக­வும் கூர்­மை­யா­ன­வர்­கள், சொன்­னால் செய்து காட்­டி­வி­டு­வீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் மெய்­ய­நா­தன் பற்றி நான் உங்­க­ளி­டம் அதி­கம் சொல்ல விரும்­ப­வில்லை. உங்­க­ளுக்கு அவரை நான் அறி­மு­கம் செய்ய வேண்­டிய அவ­சி­யமே கிடை­யாது. உங்­கள் அத்­தனை பேருக்­கும் பரிச்­ச­ய­மா­ன­வர். உங்­க­ளில் ஒரு­வர் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள். இந்­தத் தொகு­தி­யின் வெற்றி வேட்­பா­ளர், நிச்­ச­யம் வெற்றி உறுதி. இந்த முறை­யும் சொல்­கி­றேன், இந்த முறை நீங்­கள் அவரை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று தேர்ந்­தெ­டுக்­கப் போவ­தில்லை, ஓர் அமைச்­ச­ரைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பப்­போ­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மூன்­றா­வது முறை­யாக இந்­தத் தொகு­தி­யில் போட்­டி­யி­டு­கி­றார். இரண்டு முறை போட்டி போட்டு இரண்டு முறை­யும் வெற்றி பெற்­றி­ருக்­கி­றார். இந்த முறை ஹாட்­ரிக் அடிக்க வேண்­டும். ஓர் அமைச்­ச­ராக இந்­தத் தொகு­திக்­குப் பல்­வேறு திட்­டங்­க­ளைத் தந்­த­வர் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள். அவ­ரைப் பார்க்­கும்­போது மிக­வும் மென்­மை­யா­ன­வ­ராக இருப்­பார், சிரித்த முகத்­தோடு இருப்­பார், யாரி­ட­மும் கோப­மா­கப் பேச­மாட்­டார், அதட்­டிப் பேச­மாட்­டார், திட்­ட­மாட்­டார். ஆனால், வேலை என்று வந்­து­விட்­டால் மிக­வும் கூர்­மை­யா­ன­வர். அமைச்­ச­ரா­க­வும், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இந்த ஆலங்­கு­டி­யின் வளர்ச்­சியை அடுத்த கட்­டத்­துக்கு எடுத்­துச் சென்­ற­வர்­தான் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மிகப்­பெ­ரிய சாத­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எனக்கு என்ன தனிப்­பட்ட முறை­யில் பெருமை என்­றால், எனக்கு இப்­போது ஒரு இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னால்­தான் துணை முத­ல­மைச்­சர் பொறுப்­புக் கொடுத்­தார்­கள். அதற்கு முன்பு ஒரு ஆண்­டுக்கு முன்­னால் விளை­யாட்­டுத் துறை­யின் அமைச்­சர் என்று தலை­வர் எனக்கு பொறுப்­பைக் கொடுத்­தார். அந்த விளை­யாட்­டுத் துறை­யில் மிகப்­பெ­ரிய சாத­னை­க­ளைச் செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம். அந்த விளை­யாட்­டுத் துறை­யில் எனக்கு முன்­னால் என் சீனி­யர் அமைச்­ச­ராக இருந்­த­வர் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள். அத­னால் சொல்­கி­றேன், என் சீனி­யர் அமைச்­ச­ருக்கு, ஜூனி­யர் நான் வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நானும் ஒரு வேட்­பா­ளர். நானும் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றேன். சென்­னை­யில் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் நான் போட்­டி­யி­டு­கி­றேன். இரண்­டா­வது முறை­யாக நிற்­கி­றேன். என் தொகு­திக்கு இது­வரை ஒரே ஒரு நாள்­தான் சென்று வாக்கு கேட்­டி­ருக்­கி­றேன். ஏன் தெரி­யுமா, என் தொகு­திக்­குச் செல்­லா­மல் இங்கே வந்­தி­ருக்­கி­றேன்? என் வெற்­றியை விட அண்­ணன் மெய்­ய­நா­த­னின் வெற்றி மிக மிக முக்­கி­ய­மான வெற்றி. அந்த வெற்­றியை நீங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் பணி, கழ­கப் பணி, அர­சுப் பணி எது­வாக இருந்­தா­லும் தன்னை நிரூ­பித்­துக் காட்­டி­யி­ருக்­கக்­கூ­டி­ய­வர் அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள். அந்த உரி­மை­யு­டன் உங்­க­ளை­யெல்­லாம் சந்­தித்து வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றேன். இந்­தத் தொகு­தி­யில் இந்த ஐந்து ஆண்­டு­க­ளில் பல திட்­டங்­களை அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">5 ஆண்­டு­க­ளில் பல திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">13 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அரசு கலைக்­கல்­லூரி இங்கே கொண்டு வந்­தது அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திரு­வ­ரங்­கம் பகு­தி­யில் சிறு விளை­யாட்டு அரங்­கம் (Indoor Stadium) கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­க­ளின் முயற்­சி­யில், கீர­மங்­க­லம் பேரூ­ராட்­சி­யில் 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய தார்ச்­சா­லைப் பணி­கள் நடை­பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அழி­யா­னி­லை­யில் 40,000 மெட்­ரிக் டன் நெல் சேமிப்­புக் கிடங்கு கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் மெய்­ய­நா­த­னு­டைய முயற்­சி­யில் 4 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வெண்­ண­வால்­கு­டி­யி­லி­ருந்து குழா­யன்­காடு வரை புதிய தார்ச்­சாலை அமைக்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கீர­மங்­க­லத்­தில் துணை வேளாண் விரி­வாக்க மையம், புதுக்­கோட்டை விடு­தி­யில் கால்­நடை மருந்­த­கக் கட்­ட­டம் இன்று இந்­தத் தொகுதி முழுக்க இருக்­கக்­கூ­டிய பல்­வேறு ஊர்­க­ளில் புதிய பள்­ளிக் கட்­ட­டங்­கள், அங்­கன்­வா­டி­கள், துணை சுகா­தார நிலை­யக் கட்­ட­டங்­கள், மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்­டி­கள்  இப்­ப­டிப் பல்­வேறு பணி­கள், ஆலங்­குடி பேரூ­ராட்­சி­யில் கலை­ஞர் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இவை அத்­த­னை­யும் ஒரு சிறிய உதா­ர­ணம்­தான். இந்­தத் தொகு­திக்கு அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­கள் ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, அமைச்­ச­ராக என்­னென்ன கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­தற்கு ஒரு சிறிய உதா­ர­ணம்­தான் இப்­போது நான் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வெற்­றி­பெ­றச் செய்­ய­வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தப் பணி­கள் எல்­லாம் இன்­னும் தொடர வேண்­டும், இன்­னும் பல்­வேறு திட்­டங்­கள் உங்­கள் தொகு­திக்கு வர வேண்­டும் என்­றால், வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நீங்­கள் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெறச் செய்து விட வேண்­டும். வெற்­றி­பெ­றச் செய்து அனுப்­பி­னீர்­கள் என்­றால், அடுத்த நிமி­டம் அவர் அமைச்­ச­ரா­கி­வி­டு­வார். அப்­போது உங்­கள் தொகு­திக்கு இன்­னும் அதி­க­மான திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வரும்­போது என்­னி­டம் சொன்­னார், ‘மீண்­டும் நம் தலை­வர்­தான் ஆட்­சி­ய­மைக்­கப் போகி­றார், திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப்­போ­கி­றது. மீண்­டும் நம் தலை­வர் ஆட்­சிக்கு வரும்­போது என் தொகு­திக்­குச் சில கோரிக்­கை­கள் வைத்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கோரிக்­கை­கள் எல்­லாம் நீங்­கள் மீண்­டும் நம் ஆட்சி வரும்­போது நிறை­வேற்­றிக் கொடுக்க வேண்­டும்’ என்று கேட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">புதிய கோரிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரு­வ­ரங்­கு­ளம் ஊராட்சி ஒன்­றி­யத்தை இரண்­டா­கப் பிரித்து, கொத்­த­மங்­க­லத்­தைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்­றி­யம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கீர­மங்­க­லத்­தைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய தாலூகா உரு­வாக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அர­சர்­கு­ளம் பகு­தி­யில் துணை மின் நிலை­யம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கீர­மங்­க­லம் பகு­தி­யில் கழி­வு­நீர் கால்­வாய் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கொத்­தக்­கோட்டை, எல்.என்.புரம், கல்­லாங்­குடி, மாங்­காடு உள்­ளிட்ட ஊர்­க­ளில் தார்ச்­சாலை போட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆவ­ணத்­தான்­கோட்­டை­யில் ஐ.டி.ஐ கொண்டு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆலங்­குடி பேரூ­ராட்­சியை நக­ராட்­சி­யா­கத் தரம் உயர்த்­திக் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை – ஆலங்­குடி – ஆவ­ணம் சாலையை நான்கு வழிச்­சா­லை­யாக தரம் உயர்த்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வல்­லத்­தி­ராக்­கோட்­டை­யில் அரசு முன்­மா­திரி மேல்­நி­லைப் பள்ளி வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வெண்­ண­வால்­குடி ஊராட்­சி­யில் மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பணங்­கு­ளம் மற்­றும் செங்­க­மாறி ஊராட்­சி­க­ளில் கால்­நடை மருத்­து­வ­மனை வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளும் வேண்­டும் என்று கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றார். இன்­னொரு முக்­கி­ய­மான கோரிக்கை, இந்த மாவட்ட மக்­க­ளின் நீண்­ட­நாள் கோரிக்கை: பெரும்­பி­டுகு முத்­த­ரை­யர், மாமன்­னர் மரு­து­பாண்­டி­யர், வீரன் அழ­கு­முத்­துக்­கோன், வ.உ.சிதம்­ப­ர­னார் ஆகி­யோ­ருக்கு அவர்­க­ளின் நினை­வைப் போற்­று­கின்ற வகை­யில் இங்கே ஒரு மணி­மண்­ட­பம் கட்ட வேண்­டும் என்று  கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் வெற்றி பெறச் செய்து அனுப்­பி­னீர்­கள் என்­றால் நிச்­ச­யம் முத­ல­மைச்­ச­ரி­டம் கொண்டு சென்று, இந்த அத்­தனை கோரிக்­கை­க­ளை­யும் நான் உங்­க­ளுக்­குச் செய்து கொடுப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் கடந்த ஒரு வார­மாக பிரச்­ச­ரத்­தில் இருக்­கி­றேன். மக்­க­ளைச் சந்­திக்­கி­றேன். நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். மீண்­டும் உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள். நம் முத­ல­மைச்­சர் மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக அமர வேண்­டும் என்­பதை எந்த ஒரு அடிப்­ப­டை­யில் சென்று கேட்­கி­றோம்? கடந்த ஐந்து வரு­ட­மா­கச் செய்­தி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­கள் மக்­க­ளைச் சென்று சேர்ந்­தி­ருக்­கின்­றன என்­கிற அந்த நம்­பிக்­கை­யில் சென்று கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பல்­வேறு திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு நேரம் உங்­க­ளின் ஆலங்­குடி சட்­ட­மன்­றத் தொகு­திக்கு உங்­கள் அமைச்­சர் என்­னென்ன கொடுத்­தி­ருக்­கி­றார் என்று சொன்­னேன். இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் அனைத்து மக்­க­ளுக்­கும் பர­வ­லா­கச் செல்­வது மாதிரி பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது நம் தலை­வர் சொன்ன வாக்­கு­றுதி, தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­னோம், ``ஆட்சி அமைந்த உடனே மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்’’ என்று சொன்­னோம். நம் கழக ஆட்சி அமைந்த உடனே முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம். அந்­தத் திட்­டத்­தின் மூல­மாக இன்று ஒவ்­வொரு மாத­மும் மக­ளிர் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வர வேண்­டும், பசி­யில்­லா­மல் கல்வி கற்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்தை அர­சுப் பள்­ளி­க­ளில் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் காலை உணவு வழங்­கு­கி­றார் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்­லூரி செல்­லும் மாணவ, மாண­வி­க­ளுக்கு புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம் மூலம் அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சென்று சேர்ந்­தா­லும் அவர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் கல்வி ஊக்­கத்­தொ­கை­யாக ஆயி­ரம் ரூபாய் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார். 13 லட்­சம் மாணவ, மாண­வி­கள் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அ.தி.மு.க பொய்ப் பிரச்­சா­ரம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரண்டு மாதத்­துக்கு முன்­னால் கல்­லூரி மாணவ, மாண­வி­கள் பத்து லட்­சம் பேருக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்­தைச் சொல்லி ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றோம். இன்று அ.தி.மு.க ஒரு பொய்ப் பிரச்­சா­ரத்தை நடத்தி வரு­கி­றார்­கள். இந்த மடிக்­க­ணினி திட்­டம் அவர்­கள் கொண்டு வந்த திட்­டம், அதை நாம் முடக்­கி­விட்­டோம் என்று சொல்­கி­றார்­கள், தேர்­த­லுக்­கா­கக் கொடுக்­கி­றோம் என்று சொல்­கி­றார்­கள். உண்­மை­தான், அ.தி.மு.க–தான் இந்த திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். அவர்­கள் பள்­ளிக்­கூ­டம் படிக்­கிற குழந்­தை­க­ளுக்­குக் கொடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். 2019–ஆம் ஆண்டு அந்­தத் திட்­டத்தை அ.தி.மு.க அரசு கைவிட்­டு­விட்­டது.  ஆனால் நம் முத­ல­மைச்­சர் பார்த்­தார், இந்த மடிக்­க­ணினி கல்­லூரி படிக்­கிற மாண­வர்­க­ளுக்கு இன்­னும் பய­னுள்­ள­தாக இருக்­கும்; மேற்­ப­டிப்பு படிக்க, ஒரு இடத்­தில் வேலை­யில் சேர, திட்­டப்­ப­ணி­களை தயார் செய்ய என்று கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு கொடுத்­தால் அதி­க­மா­கப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று 10 லட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு இன்று மடிக்­க­ணி­னியை நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்­குக் கடந்த மூன்று வரு­ட­மாக மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் நம் தலை­வர் வங்கி கணக்­கில் செலுத்தி வரு­கி­றார். அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க, பா.ஜ.க கூட்­டணி முயற்சி செய்­தது. தேர்­த­லைக் கார­ணங்­காட்டி நிறுத்­தி­வி­ட­லாம், மூன்று மாதத்­துக்கு நிறுத்­து­வோம் என்று முயற்சி எடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் என்ன செய்­தார், அந்­தச் சூழ்ச்­சி­யை­யெல்­லாம் முறி­ய­டிக்­கிற மாதிரி பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் என மூன்று மாதத்­துக்­கும் சேர்த்து 3,000 ரூபா­யு­டன், கோடை கால சிறப்பு நிதி 2,000 என மொத்­தம் 5,000 ரூபாயை ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு ஒரே தவ­ணை­யில் நம் தலை­வர் கொடுத்­தார். தலை­வர் காலை 6.30 மணிக்கே கணக்­கில் அனுப்­பி­விட்­டார். மக­ளிர் எல்­லா­ருக்­கும் ஆச்­ச­ரி­யம், அனை­வ­ரும் அதிர்ச்சி, யார் கொடுத்­தார்­கள் என்றே தெரி­ய­வில்லை. அதற்­குப் பிற­கு­தான் அவர்­க­ளுக்­குத் தெரிந்­தது முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார் என்று. ஆறரை மணிக்­குக் கொடுத்­தார், ஒன்­பது மணிக்­கெல்­லாம் மக­ளிர் வங்­கிக்­குச் சென்று பணத்தை எடுத்­து­விட்­டார்­கள். ஏன்? அந்­தப் பணத்தை மோடி எடுத்­து­வி­டு­வார், குறைந்­த­பட்ச இருப்பு  என்று சொல்லி மோடி அந்­தப் பணத்­தைப் பறித்­து­வி­டு­வார் என்று அவ்­வ­ளவு நம்­பிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார், மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன் மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு எட்­டாம் வகுப்பு வரை காலை உண­வுத் திட்­டம் வழங்­கப்­ப­டும். முதி­யோர் உத­வித்­தொகை 1,200–லிருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வோம் என்று உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்வி ஊக்­கத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,500–ஆக உயர்த்­தப்­ப­டும். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் அனைத்­துக் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்­கும் 35 லட்­சம் இல­வச மடிக்­க­ணி­னி­கள் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">10 லட்­சம் வீடு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு எந்­த­வி­தப் பிணை­யும் இல்­லா­மல் 5 லட்­சம் ரூபாய் வரை கடன் தரப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த 5 ஆண்­டு­க­ளில் கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டம் மூலம் 10 லட்­சம் வீடு­கள் கட்­டப்­பட்டு, வீடு இல்­லாத அனை­வ­ருக்­கும் வீடு கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி அமைந்த உடனே நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் எல்லா மக­ளிர் கையி­லும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வார். அந்­தக் கூப்­பனை வைத்­துக்­கொண்டு, உங்­கள் வீட்­டிற்கு என்ன பொருள் வாங்க வேண்­டும், என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் வாங்க வேண்­டும் என்­பதை நீங்­களே முடிவு செய்து கொள்­ள­லாம். பிரிட்ஜ், டிவி, குக்­கர், மைக்­ரோ­வேவ் ஓவன் எது­வாக இருந்­தா­லும் இனி­மேல் மக­ளிரே முடி­வெ­டுக்­கட்­டும் என்று முத­ல­மைச்­சர் அந்­தக் கூப்­பன் தரு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதெல்­லாம் நடக்க வேண்­டும் என்­றால், நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி நிச்­ச­யம் அமைய வேண்­டும் என்­றால், நாம் அடுத்த 18 நாட்­கள் மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேளுங்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், ``உத­ய­நிதி வந்­தார், பேசி­னார், திட்­டங்­க­ளைப் பற்­றிச் சொன்­னார், வாக்­கு­று­தி­கள் சொன்­னார், போய்­விட்­டார்’’ என்று கலைந்து சென்­று­வி­டக் கூடாது. அடுத்த 18  நாள் இந்­தப் பிரச்­சா­ரத்தை உங்­கள் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய மக்­க­ளி­டம் கொண்டு சென்று நீங்­கள் சேர்க்க வேண்­டும். ஒவ்­வொரு தெரு­வா­கச் செல்­லுங்­கள், ஒவ்­வொரு வீடா­கச் செல்­லுங்­கள், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரா­கச் சந்­தி­யுங்­கள். ஏன் மீண்­டும் தி.மு.க–வுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்ற பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டு சென்று சேர்த்­து­வி­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்­னென்ன வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம் என்­ப­தை­யும் சொல்­லுங்­கள். தி.மு.க இல்­லா­மல் மீண்­டும் அடி­மைக் கூட்­டம் இங்கே ஆட்சி அமைத்­தால் தமிழ்­நாட்டை எவ்­வ­ளவு பின்­னோக்கி கொண்டு சென்­று­வி­டு­வார்­கள் என்­கிற அந்த விஷ­யத்­தை­யும் நீங்­கள் ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தித்து அந்­தப் பிரச்­சா­ரத்தை செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஐந்து வரு­டம் என்ன செய்­தி­ருக்­கி­றோம் என்று சொன்­னேன். ஆட்­சிக்கு வந்­தால் என்­னென்ன செய்­யப் போகி­றோம் என்­ப­தை­யும் தெளி­வா­கச் சொல்­லி­விட்­டேன். இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­த­த­னால்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே நம்  தமிழ்­நாடு முதன்­மை­யான மாநி­ல­மாக வந்­துள்­ளது. வளர்­கின்ற மாநி­லங்­க­ளில் முதன்­மை­யான மாநி­லம் தமிழ்­நாடு. 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யைத் தமிழ்­நாடு கடந்த ஆண்டு அடைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் இவ்­வ­ளவு சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோம், இவ்­வ­ளவு மக்­கள் நல திட்­டங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கோமே, யோசித்­துப் பாருங்­கள் – ஒன்­றிய பா.ஜ.க அரசு நமக்­குத் துணை­யாக நிற்­கி­றதா? நாம் கேட்­கிற நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? தமிழ்­நாட்­டுக்கு என்று ஏதா­வது திட்­டங்­கள் கொடுக்­கி­றார்­களா? கிடை­யாது. கடந்த பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டிற்கு என்று எந்­தத் திட்­ட­மும் கிடை­யாது. ‘தமிழ்­நாடு’ என்­கிற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கிற பா.ஜ.க–வைத் தமிழ்­நாடு புறக்­க­ணிக்க வேண்­டும். ஏற்­க­னவே பல தேர்­தல்­க­ளில் புறக்­க­ணித்­தி­ருக்­கி­றோம். பத்து தோல்வி பழ­னிச்­சா­மியை இந்த முறை மொத்த தோல்வி பழ­னிச்­சா­மி­யாக்கி வீட்­டில் உட்­கார வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று எடப்­பாடி பழ­னி­சாமி பிரச்­சா­ரத்­துக்­குச் செல்­லும்­போது இரண்டு விரல்­க­ளைக் காட்­டு­கி­றார். நீங்­கள் என்ன நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்? அவர் சின்­னத்­தைக் காட்டி வாக்கு கேட்­கி­றார் என்று நினைக்­கி­றீர்­களா? கிடை­யாது, ``நான் ஏற்­க­னவே பத்து முறை தோற்­று­விட்­டேன், இந்த முறை பதி­னோ­ரா­வது முறை தோற்­கப் போகி­றேன்’’ என்­பதை அடை­யா­ள­மா­கக்  காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார். அது­மட்­டு­மல்ல, என்­னைப் பற்­றித் தொடர்ந்து பேசிக் கொண்­டி­ருக்­கி­றார், எனக்கு எந்த அனு­ப­வ­முமே இல்லை என்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். ஆமாம், அந்த அனு­ப­வ­மெல்­லாம் எனக்கு இல்­லை­தான். யார் காலி­லும் விழுந்து பதவி வாங்­கும் அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. சங்­கிக் கூட்­டத்­துக்­குப் பயப்­ப­டும் அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. என் அனு­ப­வம், என்­னென்­றைக்­கும் மக்­க­ளோடு மக்­க­ளாக நிற்­பேன், சுய­ம­ரி­யா­தைக்­காக நிற்­பேன். இந்­தக் கலை­ஞர் பேரன் உத­ய­நிதி என்­றைக்­கும் மக்­க­ளோடு மக்­க­ளா­கத்­தான் நிற்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஜாடிக்கு ஏற்ற மூடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஊரில் ஒரு பழ­மொழி சொல்­லு­வார்­கள், `ஜாடிக்கு ஏற்ற மூடி’ என்று, அது மாதிரி இன்று மோடிக்கு ஏற்ற ஓர் அடி­மை­யா­கத் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் இருக்­கி­றார். பா.ஜ.க–வை நாம் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விட­மாட்­டோம் என்று தெரிந்து, அ.தி.மு.க என்­கிற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு இன்று பா.ஜ.க தமிழ்­நாட்­டுக்­குள் நுழை­யப் பார்க்­கி­றது. டெல்­லி­யி­லி­ருந்து எடப்­பாடி பழ­னி­சாமி என்­கிற ரிமோட் கண்ட்­ரோல் மூல­மா­கத் தமிழ்­நாட்டை எப்­ப­டி­யா­வது கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள். நாம் மீண்­டும் மீண்­டும் அவர்­க­ளுக்­குச் சொல்­வோம், தமிழ்­நாடு என்­றைக்­கும் டெல்­லிக்கு அவுட் ஆப் கண்ட்­ரோல்­தான் என்­பதை நாம் இந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நிரூ­பித்­துக் காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன். பாசத்­தோடு கேட்­கி­றேன். உரி­மை­யோடு கேட்­கி­றேன்.  உங்­கள் வீட்டு பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன்.  இன்­னும் பெரு­மை­யாக பூரிப்­பாக சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.  அண்­ணன் மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து 50 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்­றி­பெ­றச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அமைச்­சர்­கள் ரகு­பதி, மெய்­ய­நா­தன், விரா­லி­மலை தொகுதி வேட்­பா­ளர் செல்­லப்­பாண்­டி­யன், புதுக்­கோட்டை தொகுதி வேட்­பா­ளர் மருத்­து­வர் முத்­து­ராஜா, மாவட்­டக் கழ­கச் துணைச் செய­லா­ளர்­கள் ஞான இளங்­கோ­வன், ஸ்ரீதேவி, அய­லக அணி மாநி­லச் செய­லா­ளர் அப்­துல்லா, கீரை தமிழ்­ராஜா, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் ஆர்.வி.செல்­வம், கே.எம்.சுப்­பி­ர­ம­ணி­யன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் மணி­ரா­ஜன், ஒன்­றிய – நகர – பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் கே.பி.கே.டி.தங்­க­மணி, வடி­வேல், கே.எஸ்.ரவி, குமார், பழனி குமார், சிவக்­கு­மார், பேரூ­ராட்சி தலை­வர் இராசி முரு­கா­னந்­தம், இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் முக­மது ரபீக், கவிக்­கு­மார், தமிழ்­ராசு, நசு­ரூ­தீன், கோட்­டூர் அருண் சேகர், இளை­ய­ராஜா, இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யைச் சேர்ந்த திரா­வி­டர் கழ­கம், இந்­திய தேசிய காங்­கி­ரஸ், இந்­திய கம்­யூ­னிஸ்ட், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட், தேசிய முற்­போக்கு திரா­வி­டர் கழ­கம், மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி, இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, கொங்­கு­நாடு மக்­கள் தேசிய கட்சி, மக்­கள் நீதி மய்­யம், மனி­த­நேய ஜன­நா­யக கட்சி, எஸ்.டி.பி.ஐ, ஆதி தமி­ழர் பேரவை உள்­ளிட்ட அனைத்து தோழமை கட்­சி­யைச் சேர்ந்த பெரி­யோர்­கள், தாய்­மார்­கள், இளை­ஞர்­கள், நெச­வா­ளர்­கள், விவ­சா­யப் பெரு­மக்­கள், வர்த்­த­கப் பெரு­மக்­கள்உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>