<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1218" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 08 2026 03:43:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260408T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="08042026-CHN-09" position.sequence="09" ex-ref="08042026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">08.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக வாக்கு சேக­ரிப்பு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">ஆளு­நரை வைத்தே புதுச்­சே­ரியை, பா.ஜ.க. ஆள நினைக்­கி­றது: புதுச்­சேரி மக்­கள் தி.மு.கழ­கக் கூட்­ட­ணிக்கே வாக்­க­ளிக்க வேண்­டும்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">புது­வை­யில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பரப்­புரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup313979_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Puthuchery74_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Puthuchery741_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி,ஏப்.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி மாநி­லம், வில்­லி­ய­னூர், முத­லி­யார்­பேட்டை, உப்­ப­ளம், பாகூர், மங்­க­லம், திரு­பு­வனை ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­ச­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின், புதுச்­சேரி முத­லி­யார்­பேட்­டை­யில் மரப்­பா­லம் அருகே, வாக்­கு­கள் சேக­ரித்­துப் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அப்­போது அவர், ``புதுச்­சே­ரி­யில், இப்­போது ஆளு­நர் கையில்­தான் எல்லா அதி­கா­ரங்­க­ளும் குவிந்து கிடக்­கின்­றன. மாநில அந்­தஸ்து கிடைத்­தால், ஆளு­ந­ருக்கு அந்த அதி­கா­ரம் இல்­லா­மல் போய்­வி­டும். ஆளு­நரை வைத்தே புதுச்­சே­ரியை ஆண்­டு­வி­ட­லாம் என்று ஒன்­றிய பா.ஜ.க. நினைக்­கி­றது. ஆகவே, புதுச்­சேரி மக்­கள் தி.மு.கழ­கக் கூட்­ட­ணிக்கே வாக்­க­ளிக்க வேண்­டும்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­சருமான  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய உரை­  வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­லில் அனை­வ­ருக்­கும் என் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். தொடர்ந்து ஆறு நாட்­க­ளாக தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கூட்­டணி வெற்றி உறுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது, எப்­படி தமிழ்­நாட்­டில் தி.மு.க தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யின் வெற்றி உறு­தியோ, அதே மாதிரி பாண்­டிச்­சே­ரி­யி­லும் நம் கூட்­டணி வெற்றி உறுதி என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்­தப் புதுச்­சேரி மக்­கள் அனை­வ­ரும், `நம் புதுச்­சேரி எப்­போ­துமே வெறுப்பு அர­சி­ய­லுக்கு இடம் கொடுக்­காது’ என்று அறி­வார்­கள். நம் புதுச்­சேரி மண் அன்­பான மண். அப்­ப­டிப்­பட்ட புதுச்­சே­ரி­யில் இன்று பாசிச பா.ஜ.க. சக்­தி­க­ளின் ஊடு­ரு­வல் அதி­க­மா­கி­விட்­டது. பா.ஜ.க.–வின் மக்­கள் விரோ­தத் திட்­டங்­க­ளை­யெல்­லாம் சோதித்­துப் பார்க்­கும் இட­மாக, இன்று புதுச்­சே­ரி­யைப் பா.ஜ.க. மாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய கல்­விக் கொள்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.–வின் கொள்­கை­யான புதிய கல்­விக் கொள்­கையை இன்று புதுச்­சே­ரி­யில் அமல்­ப­டுத்­தி­விட்­டார்­கள். புதிய கல்­விக் கொள்கை மூல­மாக குலக்­கல்­வித் திட்­டத்தை மீண்­டும் பா.ஜ.க. புதுச்­சே­ரிக்­குள் அமல்­ப­டுத்­தி­விட்­டது. நம் வருங்­கால இளம் தலை­மு­றை­யின் எதிர்­கா­லத்­தைக் கெடுக்­கின்ற திட்­டங்­க­ளை­யெல்­லாம் ஒவ்­வொன்­றா­கப் புதுச்­சே­ரி­யில் நிறை­வேற்றி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஆனால், பா.ஜ.க.–வின் எந்­தச் சதித்­திட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விடா­மல் தடுப்­ப­வர், நம் முத­ல­மைச்­சர், நம் கழ­கத் தலை­வர் அவர்­கள். இந்த முறை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி மண் சுய­ம­ரி­யா­தை­யோடு இருக்­கக்­கூ­டிய மண் என்­பதை இந்­தத் தேர்­த­லிலே நீங்­கள் நிரூ­பித்­துக் காட்­டுங்­கள். மாநில அர­சும், ஒன்­றிய அர­சும் ஒன்­றாக இருந்­தால், ஒரே கூட்­ட­ணி­யாக இருந்­தால் வளர்ச்சி அதி­க­மாக இருக்­கும் என்று மோடி சொல்­கி­றார். இன்­னொன்று `இரட்டை இயந்­திர அரசு’ என்று சொல்­கி­றார். இந்த இரட்டை இயந்­திர அர­சி­னால் இன்று புதுச்­சே­ரி­யில் ஏதே­னும் வளர்ச்­சித் திட்­டம் வந்­தி­ருக்­கி­றதா? புதுச்­சே­ரிக்­கான ஏதே­னும் உரி­மை­கள் கிடைத்­தி­ருக்­கின்­ற­னவா? ஆனால் `திரா­விட மாடல்’ என்­கிற அந்த ஒற்­றை­இ­யந்­தி­ரம் மூலம் இன்று நம் முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்­டில் முதல்­மு­றை­யாக இரட்டை இலக்க வளர்ச்­சியை, 11.19 சத­வி­கித வளர்ச்­சியை நாம் தமிழ்­நாட்­டில் கொடுத்­துள்­ளோம். தமிழ்­நாட்­டில் எப்­படி அ.தி.மு.க. தோளில் ஏறி நின்று பா.ஜ.க சவாரி செய்­து­கொண்­டி­ருக்­கி­றதோ, அதே மாதிரி இங்கே புதுச்­சே­ரி­யில் என்.ஆர்.காங்­கி­ர­ஸின் தோளில் ஏறி இங்கே பா.ஜ.க. சவாரி செய்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">16 முறை தீர்­மா­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உண்­மை­யி­லேயே புதுச்­சேரி மக்­கள் மீது ஒன்­றிய அர­சுக்கு அக்­கறை இருந்­தால், புதுச்­சேரி மக்­க­ளுக்­கான இந்த மாநில மக்­க­ளு­டைய நீண்ட காலக் கோரிக்­கை­யான `மாநில அந்­தஸ்து’ வழங்­கி­யி­ருக்க வேண்­டாமா? கிட்­டத்­தட்ட 16 முறை தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யும் இதை அவர்­கள் செய்­ய­வில்லை. மோடி­யால் செய்ய முடி­யாது என்­ப­தல்ல, மோடிக்­குச் செய்­வ­தற்கு மனம் இல்லை. ஏனென்­றால், புதுச்­சே­ரியை, தமிழ்­நாடு மாதிரி அவர்­க­ளும் கட்­டுப்­பாட்­டில் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். தமிழ்­நாட்­டில் எப்­படி எடப்­பாடி பழ­னி­சாமி மூலம் முயற்சி செய்­கி­றார்­களோ, அதே மாதிரி புதுச்­சே­ரி­யை­யும் தங்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்று பா.ஜ.க. நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரி­யில், இப்­போது ஆளு­நர் கையில்­தான் எல்லா அதி­கா­ரங்­க­ளும் குவிந்து கிடக்­கின்­றன. மாநில அந்­தஸ்து கிடைத்­தால், ஆளு­ந­ருக்கு அந்த அதி­கா­ரம் இல்­லா­மல் போய்­வி­டும். ஆளு­நரை வைத்தே புதுச்­சே­ரியை ஆண்­டு­வி­ட­லாம் என்று ஒன்­றிய பா.ஜ.க. நினைக்­கி­றது. ஆகவே, புதுச்­சேரி மக்­கள் தி.மு.கழ­கக் கூட்­ட­ணிக்கே வாக்­க­ளிக்க வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஆளு­ந­ரின் தலை­யீடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தி­லி­ருந்து எதிர்க்­கட்சி வெளி­ந­டப்பு செய்து பார்த்­தி­ருப்­பீர்­கள், ஆனால், முதல் முறை­யாக தமிழ்­நாட்­டில்­தான் சட்­ட­ச­பை­யி­லி­ருந்து ஆளு­நரே வெளி­ந­டப்பு செய்­து­விட்டு சென்­றார். புதுச்­சே­ரி­யில் இன்று எல்லா விஷ­யங்­க­ளி­லும் ஆளு­ந­ரின் தலை­யீடு இருக்­கி­றது. மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்கு இங்கே மதிப்­பில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அரசு நிய­மித்த ஆளு­நர்­தான் இங்கே எல்­லா­வற்­றை­யும் தீர்­மா­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். சுருக்­க­மா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால் புதுச்­சே­ரி­யைத் டெல்­லி­யி­லி­ருந்து ஆள வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றார்­கள். இந்த நிலையை மாற்ற வேண்­டு­மென்­றால் நீங்­கள் அனை­வ­ரும் ஆத­ரிக்க வேண்­டிய கூட்­டணி தி.மு.க, காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அதே மாதிரி, இங்கே இருக்­கக்­கூ­டிய புதுச்­சே­ரிப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இந்த மாநில மாண­வர்­க­ளுக்கு 25 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றோம், அதை­யும் தரு­வ­தற்கு ஒன்­றிய அரசு மறுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஊழல் குற்­றச்­சாட்­டு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரி­யில் என்.டி.ஏ. கூட்­டணி அரசு மீது எவ்­வ­ளவு ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன என்­பது உங்­க­ளுக்கே தெரி­யும். பொதுப்­ப­ணித்­துறை ஒப்­பந்­தங்­க­ளில் ஊழல், மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி வழங்­கி­ய­தில் ஊழல், பொலி­வுறு நக­ரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்­டத்­தில் ஊழல் என எல்­லாத் துறை­க­ளி­லும் இன்று புதுச்­சே­ரி­யில் ஊழல் நிறைந்­தி­ருக்­கி­றது. வரும் தேர்­த­லில், தமிழ்­நாடு எப்­படி என்.டி.ஏ. கூட்­ட­ணியை விரட்­டி­ய­டிக்­கத் தயா­ராக இருக்­கி­றதோ, அதே­மா­திரி புதுச்­சே­ரி­யி­லும் நீங்­கள் என்.டி.ஏ கூட்­ட­ணியை விரட்­டி­ய­டிக்க வேண்­டிய நேரம் இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நாளை மறு­நாள் தேர்­தல், பா.ஜ.க–வின் ஆண­வத்­துக்கு முடிவு கட்­டும் தேர்­தல்; அதை மறந்­து­வி­டா­தீர்­கள். எனவே, நமது தி.மு.க, காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், நம் கூட்­ட­ணிக் கட்­சிச் சின்­னங்­க­ளி­லும் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற வைக்க வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரி­யில் இருக்­கக்­கூ­டிய 30 தொகு­தி­க­ளி­லும் நம் கூட்­டணி வேட்­பா­ளர்­களை வெற்றி பெறச் செய்­யுங்­கள். உங்­கள் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய கோரிக்­கை­க­ளை­யெல்­லாம் நிச்­ச­யம் நிறை­வேற்ற, உங்­க­ளின் வேட்­பா­ளர்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராகி உங்­க­ளுக்­கா­கக் குரல் கொடுப்­பார்­கள், உங்­க­ளுக்­கான திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வாக்­கு­று­தி­கள் பல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இங்கே பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளை­யும் நாம் கொடுத்­தி­ருக்­கி­றோம், அதை­யும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் உரு­வாக்­கப்­பட்டு, ஆட்சி அமைந்த ஒரே ஆண்­டில் 10,000 அர­சுப் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­ப­டும் என்று வாக்­கு­றுதி அளித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் 2,000 ரூபாய் ஊக்­கத்­தொகை மற்­றும் உத­வித்­தொகை வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 20 லட்­சம் ரூபாய் மதிப்­பி­லான மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தாயு­மா­ன­வர் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் இருப்­பது போன்றே ‘தாயு­மா­ன­வர்’ திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும். அதா­வது, புதுச்­சே­ரி­யி­லும் மூத்த குடி­மக்­கள் இனி, வெயி­லில் ரேஷன் கடைக்கு வரத் தேவை­யில்லை; அவர்­க­ளின் ரேஷன் பொருட்­கள் வீட்­டிற்கே வந்து சேரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய தொழிற்­சா­லை­கள் தொடக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதுச்­சே­ரி­யில் புதிய தொழிற்­சா­லை­கள் தொடங்­கப்­ப­டும். ஏ.எஃப்.டி, சுதேசி, பாரதி பஞ்­சா­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்டு, அவை நவீ­னப்­ப­டுத்­தப்­பட்டு ஜவு­ளிப் பூங்கா தொடங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">என்.ஆர் காங்­கி­ரஸ் – பா.ஜ.க– கூட்­டணி அர­சால் மூடப்­பட்­டுள்ள கூட்­டு­றவு ஆலை, நூற்­பாலை, பாப்ஸ்கோ, பாண்­டெக்ஸ், அமு­த­சு­ரபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்­குப் புத்­து­யிர் அளித்து, அவை திறக்­கப்­பட்டு நவீ­ன­ம­ய­மாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம் (விடி­யல் பய­ணம்) அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கப் புதிய மேம்­பா­லங்­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைப் போலவே புதுச்­சே­ரி­யி­லும் மும்­மொ­ழிக் கொள்கை கிடை­யாது, இரு­மொ­ழிக் கொள்­கை­தான் (தமிழ் மற்­றும் ஆங்­கி­லம்) அமல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மாண­வர்­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யோடு திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி  வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் இருப்­ப­தைப் போன்றே புதுச்­சே­ரி­யி­லும் விளை­யாட்­டுத் துறை மேம்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நிறுத்­தப்­பட்­டுள்ள வீட்டு மனைப் பட்டா வழங்­கும் திட்­டம் மீண்­டும் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தொடக்க வேளாண் கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள் புன­ர­மைக்­கப்­பட்டு மானி­யத்­து­டன் கடன் உதவி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப் பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இந்த வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் நிறை­வேற்ற வேண்­டு­மென்­றால், வரும் 9–ஆம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நம் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் தேடி தாருங்­கள் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றியை இந்த முறை தமிழ்­நாடு மட்­டு­மன்­றிப் புதுச்­சே­ரி­யும் சேர்த்து தி.மு.க. கூட்­டணி வென்­றது என்­கிற சாத­னை­யைப் படைப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நன்றி, வணக்­கம்! என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மாநி­லத் தேர்­தல் பொறுப்­பா­ளர் ஜெகத்­ரட்­ச­கன், வேட்­பா­ளர்­கள் இரா.சிவா (வில்­லி­ய­னூர்), எஸ்.எஸ்.ரங்­கன் (மங்­க­லம்), பி.அங்­கா­ளன் (திரு­பு­வனை), லீ.சம்­பத் (முத­லி­யார்­பேட்டை), வி.அனி­பால் கென்­னடி (உப்­ப­ளம்), ஆர்.ஆர்.செந்­தில்­கு­மார் (பாகூர்), அவைத் தலை­வர் சிவக்­கு­மார், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளான விடு­த­லைச் சிறுத்­தை­கள், மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், காங்­கி­ரஸ் பேரி­யக்­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, திரா­வி­டர் கழ­கம், எஸ்.டி.பி.ஐ, மக்­கள் நீதி மய்­யம் கட்சி நிர்­வா­கி­கள், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மூர்த்தி, நந்தா சர­வ­ணன், கழ­கச் செயற்­குழு மற்­றும் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், தொகு­திச் செய­லா­ளர்­கள், இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் டாக்­டர் நிதீஷ், அகி­லன், தமிழ் முகி­லன், இளை­ஞர் அணி உள்­ளிட்ட சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இதைத் தொடர்ந்து கழக இளை­ஞர அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் புதுச்­சேரி அண்ணா சிலை அருகே  நெல்­லித்­தோப்பு, உரு­ளை­யான்­பேட்டை, காலாப்­பட்டு, கதிர்­கா­மம், ராஜ்­ப­வன் ஆகிய தொகு­தி­க­ளைச் சேர்ந்த மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­க­ளுக்குவாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>