<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 08 2026 04:02:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260408T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="08042026-TRY-02" position.sequence="02" ex-ref="08042026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#ff00ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">காங்­கி­ரஸ் தலை­வர் இரா­ஜா­ராம் அளித்த விளக்­கம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup543394_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ருந்­த­லை­வர் காம­ரா­ச­ரின் உடல் அடக்­கம் செய்ய கடற்­க­ரை­யில் இடம் தர மறுத்­தார் கலை­ஞர் என்ற அபாண்­ட­மான பழி­யைச் சொல்லிஇருக்­கி­றார் பச்­சைத் துரோகி பழ­னி­சாமி. தனது வாழ்க்­கை­யில் முதன்­மு­த­லாகஇப்­போ­து­தான் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெயரை உச்­ச­ரிக்­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பழ­னி­சாமி சொல்­வது பச்­சைப் பொய் என்­பதை வர­லாறு அறிந்­த­வர்­கள் நன்கு அறி­வார்­கள். எதை­யும் அறிந்து புரிந்து கொள்­ளும் திற­மற்ற பழ­னி­ சா­மிக்­குச் சொன்­னா­லும் புரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெருந்­த­லை­வர் காம­ரா­சர் அவர்­க­ளுக்கு 1975 அக்­டோ­பர் அன்று தமிழ்­நாடு சட்­ட­மன்ற மேல­வை­யில் இரங்­கல் கூட்­டம் நடை­பெற்­றது. அப்­போது, ஸ்தாபன காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும், சட்­ட­மன்ற மேலவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான கே.இரா­ஜா­ராம் (நாயுடு) அவர்­கள் ஆற்­றிய உரை­யைப் படித்­தால் முழு உண்­மை­யும் அறி­ய­லாம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘பெருந்­த­லை­வர் காம­ரா­சர் அவர்­கள் சாதா­ரண தொண்­ட­ராக இருந்த காலத்­தி­லி­ருந்து எனக்­கும் அவ­ருக்­கும் நட்பு உண்டு. அவ­ரும் நானும் பல கிரா­மங்­க­ளுக்கு கால்­ந­டை­யா­கவே சென்று பேசி­யி­ருக்­கி­றோம்” என்ற    
பீடி­கை­யு­டன் தொடங்­கும் கே.இரா­ஜா­ராம் அவர்­கள், பெருந்­த­லை­வர் மறைந்த அன்று என்ன நடந்­தது என்­ப­தைச் சொல்­கி­றார்....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘அக்­டோ­பர் 2 இர­வில்...பெருந்­த­லை­வர் காம­ரா­சர் மறைந்த அன்று, நமது மாநில அரசை நடத்­தும் முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­க­ளும், கல்வி அமைச்­சர் அவர்­க­ளும், மற்ற அமைச்­சர்­க­ளும் உடனே அவ­ரது வீட்­டுக்­குச் சென்­ற­னர்.  தங்­க­ளின் சகோ­த­ரர்­க­ளில் ஒரு­வர் இறந்­து­விட்­ட­தைப் போல, அந்த இடத்­தில் அவர்­கள் இருந்­தார்­கள். ‘மற்­றொரு கட்­சித் தலை­வர் இறந்­து­ விட்­டார்’ என்று அவர்­கள் நினைத்­த­தா­கத் தெரி­ய­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர் அவர்­கள் எங்­க­ளைக் கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு துக்­கம் தாளாது அழு­தார். என்­னு­டைய உயிர் உள்­ள­வரை இது மறக்க முடி­யாது. அவ்­வ­ளவு பாச உணர்ச்­சியை அவர் காட்­டி­னார். காம­ரா­சர் அவர்­க­ளி­டம் இருந்து எப்­படி இந்த பாச உணர்ச்­சியை அவர் பெற்­றார் என்­பதை என்­னால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. தமி­ழக ஆளு­நர் அவர்­க­ளும் முத­ல­மைச்­சர் பக்­கத்­தில் அமர்ந்­து­கொண்டு தேம்­பித் தேம்பி அழு­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தேனாம்­பேட்டை காங்­கி­ரஸ் மைதா­னத்­தில் காம­ரா­ச­ரு­டைய பிரே­தம் பொது­மக்­கள் பார்­வைக்கு வைக்­கப்­பட்டு, அங்­கேயே எரித்து, நினை­வுச்­சின்­னம் கட்­டு­வதுஎன்­று­தான் முத­லில் முடிவு செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘காம­ரா­ச­ரின் உடலை ராஜாஜி ஹாலுக்­குக் கொண்­டு­போய் வைக்க வேண்­டும். முத­ல­மைச்­ச­ரி­டம் அனு­மதி கேளுங்­கள்’ என்று சிலர் சொன்­னார்­கள். எப்­படிஅனு­மதி கேட்­பது என்று யோசித்த விநா­டியே முத­ல­மைச்­சர் அவர்­கள், காம­ரா­சர்வீட்­டுக்கே வந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘இங்கே கூட்­டத்­தைச் சமா­ளிக்க முடி­யாது. உடனே ஐயாவை ராஜாஜி ஹாலுக்­குக் கொண்­டு­போக வேண்­டும்’ என்­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாங்­கள் கனவு கண்­ட­தைப் போல, நாங்­கள் எதிர்­பார்த்­த­தைப் போல முத­ல­மைச்­சர்  அவர்­கள் சொன்­னார்­கள். எங்­கள் மன­தில் உள்­ளதை எப்­படி அவர் தெரிந்து கொண்­டார் என்று இன்­று­வரை எனக்­குத் தெரி­ய­வில்லை. தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்­கும், எனக்­கும், என்­னு­டைய சகாக்­க­ளுக்­கும் என்ன கைம்­மாறு செய்­வது என்றே புரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">காம­ரா­ச­ரின் உடலை ராஜாஜி ஹாலுக்­குக் கொண்டு வந்து, பொது­மக்­கள்வந்து செல்ல ஏற்­பாடு செய்­து­விட்டு, தலை­வர்­கள் அமர மேடை அமைத்­துக் கொண்­டி­ருந்த நேரத்­தில், ‘மந்­தி­ரி­சபை இங்­கு­தான் கூடு­கி­றதோ?’ என்­கிற வகை­யில் எல்லா அமைச்­சர்­க­ளும் அங்கே வந்­து­விட்­டார்­கள். காம­ரா­சர்உடலை எங்கு வைத்து எரிப்­பது? அடுத்­த­டுத்த காரி­யங்­கள் என்ன? நாங்­கள்எல்­லாம் கூடி ஆலோ­சனை செய்து கொண்­டி­ருந்­தோம். ‘கிண்­டி­யில் உள்ள காந்தி மண்­ட­பத்­திற்­குப் பக்­கத்­தில் எரிக்க வேண்­டும்’ என்று முத­ல­மைச்­சர் அவர்­களே சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அன்று இரவு எட்டு மணிக்கு, கன­மழை பெய்து கொண்­டி­ருந்­தது. அப்­போது முத­ல­மைச்­சர் அவர்­கள் தன்­னு­டைய காரில் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும், தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்சி காரி­ய­த­ரி­சி­யை­யும் என்­னை­யும் அழைத்­துக்­கொண்டு கிண்டி காந்தி மண்­ட­பம் சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வெளிச்­சம் இல்­லாத அந்த இடத்­தில், நாங்­கள் சென்ற கார்­க­ளைத் திருப்பி நிறுத்தி அதன் விளக்கு வெளிச்­சத்­தில் இடத்­தைத் தேர்வு செய்­தார்.இதை அதி­கா­ரி­களே செய்­ய­லாம். ஆனால் முத­ல­மைச்­சர் அவர்­கள் எங்­களைஅழைத்­துக்­கொண்டு தன்­னு­டைய நேர­டிப் பார்­வை­யில் இவற்­றை­யெல்­லாம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அனைத்து அமைச்­சர்­க­ளும் இர­வெல்­லாம் தூக்­க­மில்­லா­மல் அங்கு அடர்ந்­தி­ருந்த மரங்­களை, புதர்­களை அகற்றி, தக­னத்­திற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­தார்­கள். இதற்­கெல்­லாம் என்ன கைமாறு செய்­வது என்று எங்­கள் கட்­சிக்­கா­ரர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் இதை என்­றுமே மறக்க முடி­யாது. அன்­றைய தினம் தமிழ்­நாடு அர­சி­ட­மி­ருந்து அப்­ப­டி­யொரு அரசு மரி­யா­தையை நாங்­கள் எதிர்­பார்க்கவில்லை.” (முர­சொலி, 24.10.1975) என்று பேசி இருக்­கி­றார் கே.இரா­ஜா­ராம் அவர்­கள். இதைப் படித்­தா­வது பழ­னி­சாமி தனது பொய் முகத்தை மாற்­றிக் கொள்ள வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பெருந்­த­லை­வ­ருக்­கும் திரா­விட இயக்­கத்­துக்­கு­மான நட்பு என்­பது கொள்கை நட்பு ஆகும். பெருந்­த­லை­வரை ‘பச்­சைத் தமி­ழர்’ என்று அழைத்­த­வர்  தந்தை  பெரி­யார்.  குடி­யாத்­தம்  இடைத்­தேர்­த­லில்  பெருந்­த­லை­வர் போட்­டி ­யிட்­ட­போது எதிர்த்து வேட்­பா­ளரை நிறுத்­தா­த­வர் பேர­றி­ஞர் அண்ணா. சொந்தமக­னைப் போல இறுதி நிகழ்ச்சி நடத்­தி­ய­வர் தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“எனக்கு என்ன பெருமை என்­றால், உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்ட நிலை­யி­லும்எனது திரு­ம­ணத்­துக்கு வாழ்த்து தெரி­விக்க பெருந்­த­லை­வர் அவர்­கள் வந்­தி­ருந்­தார்­கள். அவ­ரது வரு­கைக்­காக திரு­மண மண்­ட­பத்­தையே கலை­ஞர் அவர்­கள் மாற்­றி­னார்­கள். காம­ரா­சர் அவர்­கள் வரும் வாக­னம் நேர­டி­யாக மேடைக்கு வரும் வகை­யில் மேடையை அமைத்­தார் தலை­வர் கலை­ஞர்” என்று இன்­றைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அரசு இடத்­தில் பெருந்­த­லை­வரை  அடக்­கம் செய்து நினைவு மண்­ட­பம்கட்­டி­ய­வர் முத­ல­மைச்­சர் கலை­ஞர். சென்னை கடற்­க­ரைச் சாலைக்கு காம­ரா­சர்பெயர் சூட்­டி­ய­தும் – கன்­னி­யா­கு­ம­ரி­யில் காம­ரா­சர் மணி­மண்­ட­பம் அமைத்­த­தும் – நெல்­லை­யில் பெருந்­த­லை­வர் காம­ரா­ச­ருக்கு சிலை அமைத்­த­தும் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெருந்­த­லை­வ­ரின் செய­லா­ள­ராக இருந்த வைர­வ­னுக்கு வேலை வழங்கி அரசு வீட்டை ஒதுக்­கித் தந்­த­தும் – பெருந்­த­லை­வ­ரின் சகோ­தரி நாகம்­மா­ளுக்கு முத­ல­மைச்­சர்  பொது­ நி­வா­ரண நிதி­யில் இருந்து நிதி உதவி அளித்­த­தும் –  பிர­த­மர்வி.பி.சிங் அவர்­க­ளி­டம் வலி­யு­றுத்தி சென்னை உள்­நாட்டு விமான நிலை­யத்­துக்­குப் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெயரை சூட்­டக் கார­ண­மாக இருந்­த­தும் – பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பிறந்த ஜூலை 15–ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்­துக்­கல்வி நிறு­வ­னங்­க­ளி­லும் கொண்­டாட சட்­டம் போட்­ட­தும் –  முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள்­தான் என்­ப­தை­யும் தமிழ்­நாடு என்­றும் மறக்­காது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திருச்­சி­யில் ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யால் அமைக்­கப்­பட்டு வரும் மாபெ­ரும் நூல­கத்­துக்­குப் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெய­ரைச் சூட்டி இருக்­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பச்­சைத் துரோகி பழ­னி­சாமி, தனது பொய் நாக்கை சுருட்டி வைத்­துக் கொள்­ள­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>