<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 07 2026 17:31:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260408T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08042026-VLR-09" position.sequence="09" ex-ref="08042026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">அனை­வ­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­லும்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="82">‘திரா­விட மாடல்’ அரசு தொடர வேண்­டும் என்­ப­தில்  மக்­கள் தெளி­வாக இருக்­கி­றார்­கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">‘நியூஸ் 18’ தொலைக்­காட்­சிக்கு –</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேட்டி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">‘8 ஆயி­ரம் ரூபாய்</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கூப்­பன்’ திட்­டம் </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">எப்­படி வந்­தது? </lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="kanimozhi_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="kanimozhinew_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப்.8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அனை­வ­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­லும் திரா­விட மாடல் ஆட்சி தொட­ர­வேண்­டும் என்­ப­தில் மக்­கள் தெளி­வாக இருக்­கி­றார்­கள் என்று கழக துணைப் பொதுச் செய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. ‘நியூஸ் 18’ தொலைக்­காட்­சிக்கு அளித்த சிறப்­புப் பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. துணைப்­பொ­துச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க, குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. ‘நியூஸ் 18’ தமிழ்­நாடு தொலைக்­காட்­சி­யின் நெறி­யா­ளர்  தியா­கச் செம்­ம­லுக்கு அளித்த நேர்­கா­ணல் வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சூறா­வளி பரப்­புரை  செய்து வரு­கி­றீர்­கள். ஐந்­தாண்டு கால திமுக ஆட்சி முடிந்த நிலை­யில், உங்­க­ளது பரப்­பு­ரை­யின் போது மக்­க­ளின், ‘ரெஸ்­பான்ஸ்’ எவ்­வாறு உள்­ளது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பரப்­பு­ரை­யில் நமது ஐந்­தாண்டு கால ஆட்­சி­யின்  சாத­னை­களை பேசும்­போது எல்லா இடங்­க­ளி­லும் மக்­கள் ஆர்­வத்­தோடு  ரசிக்­கி­றார்­கள், வர­வேற்­கி­றார்­கள்.  மீண்­டும்  திமு­க­தான் ஆட்சி அமைக்­கும் என்று மக்­களே என்­னி­டம் பேசு­கை­யில் அது மிகப்­பெ­ரிய நம்­பிக்­கை­யாக இருக்­கி­றது.  இந்த தேர்­த­லுக்­காக முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கும் வாக்­கு­று­தி­களை மக்­கள் ரொம்ப ஆர்­வ­மாக எதிர்­பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக்­க­ளின் ‘ரெஸ்­பான்ஸ்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திமு­க­வுக்கு இது மிக முக்­கி­ய­மான தேர்­தல். ஏனென்­றால்  மீண்­டும் திமுக ஆட்சி அமைய வேண்­டு­மென்ற இலக்­கோடு நீங்­கள் களத்­தில் இருக்­கி­றீர்­கள்.   இதை திமு­க­வி­னர் ஓர் அழுத்­த­மாக பார்க்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. நிர்­வா­கி­கள் மீண்­டும் திமு­க­தான் ஆட்சி அமைக்­கும் என்ற நம்­பிக்­கை­யோடு உற்­சா­க­மாக பணி­யாற்றி வரு­கி­றோம். நம்­பிக்­கை­யோடு ஒரு­செ­யலை செய்­யும்­போது அது அழுத்­தத்தை தரு­வ­தில்லை.  கிட்­டத்­தட்ட எஸ்.ஐ.ஆர்.  நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிப்­ப­தற்கு முன்பே திமு­க­வி­னர் தமிழ்­நாடு முழு­தும் தேர்­தல் பணி­களை தொடங்­கி­விட்­டோம். எஸ்.ஐ.ஆர். செயல்­பா­டு­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்று திமுக நிர்­வா­கி­கள் அனை­வ­ருக்­கும் பயிற்சி கொடுத்­தோம்.  நம்­மு­டைய வாக்­கா­ளர்­கள்  மட்­டு­மல்ல, எந்த வாக்­கா­ள­ரும் வாக்­கு­ரி­மையை இழந்­து­வி­டக் கூடாது என்று  நிர்­வா­கி­க­ளுக்கு பயிற்சி அளித்­தோம். அத­னால் தமிழ்­நாட்­டில் எஸ்.ஐ.ஆர். பெரிய குழப்­பம் எது­வும் இல்­லா­மல் நடப்­ப­தற்கு திமு­க­வின்  பணி மிகப்­பெ­ரிய உறு­து­ணை­யாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதைத் தாண்­டிம் திமுக நிர்­வா­கி­கள் மக்­களை தொடர்ந்து சந்­தித்து வந்­தி­ருக்­கி­றோம். அப்­போது மக்­கள் தரும் வர­வேற்பு, மக்­கள் எங்­க­ளுக்கு  தரும் உற்­சா­க­மான நம்­பிக்கை  எல்­லாம் சேர்ந்து திமு­க­வுக்கு கூடு­தல் நம்­பிக்­கையை தரு­கி­றதே தவிர, எங்­க­ளுக்கு எந்த அழுத்­த­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சிஸ்­ட­மே­டிக் அப்­ரோச்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பாக முக­வர்­கள் பயிற்சி மாநாடு, இளை­ஞ­ரணி, மக­ளி­ரணி மண்­டல மாநா­டு­கள் என திமு­க­வி­டம்  இம்­முறை  சிஸ்­ட­மே­டிக் அப்­ரோச் பார்க்க முடிந்­தது. மக­ளி­ரணி மண்­டல மாநா­டு­க­ளில் உங்­க­ளு­டைய அனு­ப­வம் என்ன? அதன் விளை­வு­களை பரப்­பு­ரை­யில் உணர்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வெல்­லும் தமிழ் பெண்­கள்  மாநாடு மட்­டு­மல்ல... ஒவ்­வொரு பகு­தி­யி­லும் இருக்­கக் கூடிய  மக­ளி­ர­ணி­யி­னர் தேர்­வு­செய்­யப்­பட்டு அவர்­கள் வீடு வீடாக சென்று ஒவ்­வொரு குடும்­பத்­தி­ன­ரை­யும் சந்­தித்­தார்­கள். கடந்த ஐந்­தாண்டு கால நம் ஆட்­சி­யில் அவர்­கள் பெற்ற நலத்­திட்­டங்­கள் என்ன? இன்­னும் என்ன வேண்­டு­மென்று எதிர்­பார்க்­கி­றீர்­கள் என்­றெல்­லாம் தெரிந்­து­கொண்டு அதை கட்­சித் தலை­மைக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னார்­கள். மேலும் நமது கொள்­கை­கள் , திட்­டங்­கள் ஆகி­ய­வற்றை வீடு வீடாக சென்று எடுத்­துச் சொல்­லும் வாய்ப்­பை­யும்  மக­ளி­ர­ணி­யி­னர் பெற்­றார்­கள். இதன் மூலம் திமுக மக­ளி­ர­ணி­யி­னர் மிகப்­பெ­ரிய அள­வில் தங்­களை பரப்­பு­ரை­யில் ஈடு­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அது கட்­சிக்கு மிகப்­பெ­ரிய பல­மாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக்­க­ளின் கருத்­துப்­படி தேர்­தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திமு­க­வின் தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­புக் குழு­வின் தலை­வ­ராக நீங்­கள் பணி­யாற்­றி­னீர்­கள். அதில் இந்த எட்­டா­யி­ரம் ரூபாய்  கூப்­பன் இப்­போது பெரும் பர­ப­ரப்­பாக பேசப்­ப­டு­கி­றது. இந்த  யோசனை எப்­படி  உரு­வா­னது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் அறிக்கை குழு என்­பது பல துறை நிபு­ணர்­களை உள்­ள­டக்­கி­தான் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. முக்­கி­ய­மாக மக்­க­ளின் கருத்­து­களை உள் வாங்­கி­னோம். பல ஊர்­க­ளுக்கு சென்று அங்கே இருக்­கக்  கூடிய மக்­களை சந்­தித்­தோம். பல அசோ­சி­யே­ஷன்­களை சந்­தித்து அவர்­க­ளின் யோச­னை­க­ளைப் பெற்­றுக் கொண்­டோம். மேலும்   இ மெயில் வழி­யாக, வாட்ஸ் அப் வழி­யாக  மக்­க­ளின் கருத்­து­க­ளைப் பெற்­றோம். கிட்­டத்­தட்ட  80 ஆயி­ரம்  கருத்­து­கள்  திமு­க­வின்  தேர்­தல் அறிக்­கைக்­காக  பெறப்­பட்­டது. நேர­டி­யாக எங்­க­ளி­டம் அளிக்­கப்­பட்ட மனுக்­கள்,  மின்­னஞ்­சல்­கள், வாட்ஸ் அப், ஏஐ பிளாட்ஃ­பார்ம் வழி­யாக வந்த கருத்­து­கள் என கிட்­டத்­தட்ட 80 ஆயி­ரம் ஆலோ­ச­னை­களை நாங்­கள் பெற்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதில்  எவை நடை­மு­றைக்கு சாத்­தி­யம் என்­பதை ஆராய்ந்­தோம்.  ஏனென்­றால்ஒன்­றிய அர­சின் சட்­டங்­கள், ரிசர்வ் வங்­கி­யின் நெறி­மு­றை­கள் எல்­லாம்  எல்­லாம் இருக்­கின்­றன. இவை­யெல்­லாம் இல்­லா­த­து­போ­லவே சிலர் தேர்­தல் வாக்­கு­று­தி­கள்  கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக்­க­ளுக்கு நாம் கொடுக்­கும்  வாக்­கு­று­தி­கள் எவ்­வித பொய்­யும் இல்­லா­மல் நேர்­மை­யான வாக்­கு­று­தி­யாக இருக்க வேண்­டும், எதை செய்ய முடி­யுமோ அதை மட்­டுமே வாக்­கு­று­தி­யாக அளிக்க வேண்­டும்  என முத­ல­மைச்­சர் எங்­க­ளுக்கு அறி­வு­ரை­யாக சொல்­லி­யி­ருந்­தார்.  அதன் அடிப்­ப­டை­யில் எது சாத்­தி­யமோ அதையே மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­யாக இருக்க வேண்­டும் என்­ப­தில் கவ­ன­மாக இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இது வேண்­டும், அது வேண்­டும், இதைக் கொடுக்­க­லாம், அதை கொடுக்­க­லாம் என  மக்­க­ளி­டம் இருந்து பல எதிர்­பார்ப்­பு­கள் வந்­தி­ருந்­தன. அவற்­றைப் பரி­சீ­லித்­து­தான்  இந்த கூப்­பன் என்­கிற பெஸ்ட் பாசி­பிள் சொல்­யூ­ஷன் க்கு வந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏனென்­றால் சில­ரின் வீட்­டில் ஃபிரிட்ஜ் இருக்­க­லாம், சிலர் வீட்­டில் வாஷிங் மெஷின் இருக்­க­லாம். அவர்­கள் கையில் சாய்ஸை கொடுக்­கும்­போது இன்­னும் பய­னுள்­ள­தாக இருக்­கி­றது. அவர்­க­ளின் பக்­கத்­திலே இருக்­கும் கடை­க­ளில் போய்­தான் மக்­கள் இதை வாங்­கப் போகி­றார்­கள். அப்­போது தமிழ்­நாடு முழு­தும் பொரு­ளா­தா­ரத்­துக்­கான பூஸ்­டா­க­வும் இது மாறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2006 இல் கலை­ஞர் இல­வச தொலைக்­காட்சி திட்­டத்­தைக் கொண்­டு­வந்­தது  மிகப்­பெ­ரிய பேசு­பொ­ரு­ளா­னது. உங்­கள் பரப்­பு­ரை­யி­லும் இதைப் பற்றி நீங்­கள் பேசு­கி­றீர்­கள். இப்­போது முத­ல­மைச்­சர் இந்த கூப்­பன் திட்­டத்தை அறி­வித்­த­போது இல­வச டிவி திட்­டத்­தோடு இதை நீங்­கள் தொடர்­பு­ப­டுத்தி பார்த்­தீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­ய­மாக. 2006 களில் தமிழ்­நாட்­டின் கிரா­மப்­பு­றங்­க­ளில் டிவி என்­பது மிகப்­பெ­ரிய கன­வாக இருந்­தது.  டிவி பார்க்க பக்­கத்து வீடு­க­ளுக்கு செல்­வது, அவர்­கள் இல்­லை­யென்று சொல்­லி­விட்­டால் அவ­மா­னங்­களை சந்­திக்க வேண்­டிய சூழ­லா­க­வும் இருந்­தது. அப்­போது தன் வீட்­டுக்கே டிவி வரு­கி­றது என்­பது நிறைய பேருக்கு  அந்த அவ­மா­னங்­க­ளில் இருந்து தங்­களை விடு­வித்­துக் கொள்­ளும் சுய­ம­ரி­யாதை சின்­ன­மா­க­வும் தலை­வர் கலை­ஞ­ரின் டிவி இருந்­தது. செய்தி உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­களை அறிந்­து­கொள்­ளும் கரு­வி­யாக அன்­றைக்கு தலை­வர் கலை­ஞர் அளித்த டிவி பயன்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு எப்­போ­துமே  சாய்ஸ் என்­பது அதா­வது சுதந்­தி­ரம் என்­பதோ உரிமை என்­பதோ  முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கி­றது.  நமக்கு எது தேவையோ, நம் வேலை பளுவை எதை குறைக்­கி­றதோ அந்த சாய்ஸ் பெண்­க­ளாக இருந்­தா­லும் யாராக இருந்­தா­லும் இருக்க வேண்­டும். அது­தான் இந்த எட்­டா­யி­ரம் ரூபாய் கூப்­ப­னுக்­கான அடிப்­படை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பெண்­க­ளுக்­கான அதி­கா­ரப்­ப­டுத்­தும் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பெண்­க­ளுக்­கான அதி­கா­ரப்­ப­டுத்­தும் திட்­ட­மாக நீங்­கள் சொன்­னா­லும், இதை இல­வ­சத் திட்­டம்  என்ற பொதுப் பார்­வை­தானே இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஃப்ரிட்ஜ்,  வாஷிங் மெஷின்,  மிக்சி, கிரைண்­டர் போன்ற வீட்டு உப­யோ­கப் பொருட்­கள் சாதா­ரண பொருட்­க­ளாக இருக்­கும்­போது அதை இல­வ­சம் என்று பார்க்­க­லாம். ஆனால்  அது என்­னு­டைய வாழ்க்­கையை மாற்­றும் என்று இருக்­கக் கூடிய சூழ­லில்  அது எனக்கு பெரிய விஷ­ய­மாக மாறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ துணி துவைத்து  அலசி பிழிந்து  காய வைக்க நான் கொடுக்­கக் கூடிய நேரத்தை  எனக்கு பிடித்த ஒரு விஷ­யத்தை செய்­வ­தற்கோ, அல்­லது நான் புதிய விஷ­யத்தை கற்­றுக் கொள்­வ­தற்கோ, என்னை பொரு­ளா­தார ரீதி­யாக உயர்த்­திக் கொள்­வ­தற்கோ நான் செய்ய முடி­யுமே?  அப்­ப­டி­யென்­றால் அது  இல­வ­சம் அல்ல... சமூக மாற்­றத்­துக்­கான விஷ­யம் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">யார், எங்­கி­ருந்து  இதை இல­வ­ச­மாக பார்க்­கி­றார்­கள்... யார் இதை சமூக நலத் திட்­ட­மாக, சமுக  மாற்­றத்­துக்­கான முத­லீ­டாக பார்க்­கி­றார்­கள் என்­ப­தில் இது வேறு­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதை பெண் சமு­தா­யத்­தி­னர்  ஏற்­றுக் கொண்­டி­ருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­ய­மாக.  உதா­ர­ண­மாக தூத்­துக்­கு­டி­யில் நடந்த புது­மைப் பெண் திட்ட நிகழ்­வில் முத­ல­மைச்­ச­ரி­டமே ஒரு பெண்  கூறி­னார்.   ‘எனக்கு கல்­லூரி படிக்க வேண்­டும் என்ற கனவு இருந்­தது. ஆனால் திரு­ம­ண­மாகி குழந்­தை­கள் பிறந்­த­தால் கல்­லூ­ரிக்கு போக முடி­ய­வில்லை. ஆனால் அந்த  ஏக்­கம் இருந்­தது.  புது­மைப் பெண் திட்­டத்­தில்  மாதம் ஆயி­ரம் ரூபாய், விடி­யல் பேருந்து பய­ணம் ஆகி­ய­வற்­றால் என்­னால் கல்­லூ­ரிக்கு சென்று நர்­சிங் படிக்க முடிந்­தது.  இன்று நான் நர்­சிங் கோர்ஸ் முடித்து வேலைக்கு போகி­றேன். இது என் வாழ்க்­கையை மாற்­றி­யி­ருக்­கி­ற­து’­என்று அந்த பெண் சொல்­கி­றார். அப்­ப­டி­யென்­றால் இந்­தத் திட்­டங்­களை பெண்­கள் மிகச் சரி­யாக உள்­வாங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திமுக அறி­வித்த திட்­டங்­க­ளைப் போலவே மற்ற கட்­சி­யி­ன­ரும் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இத­னால் திமுக அறி­வித்த திட்­டங்­க­ளின் மீதான கவ­னம் குறை­கி­றது என்று கரு­து­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அ.தி.மு.க.வின் நிறை­வேற்­றப்­ப­டாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தேர்­தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எது அறி­விப்­போடு நின்று போகும்... எது நடை­மு­றைக்­கும் கொண்­டு­வ­ரப்­பட்டு   நிறை­வேற்­றப்­ப­டும் என்­ப­தில் மக்­கள் மிகத் தெளி­வாக இருக்­கி­றார்­கள். ஏனென்­றால் அதி­மு­க­வின் முந்­தைய தேர்­தல் அறிக்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­டா­த­தை­யும், நிறை­வேற்­றப்­பட்ட  திட்­டங்­கள் கூட சில மாதங்­கள்­தான் என்­ப­தை­யும் நாம் பார்த்­தி­ருக்­கி­றோம். லேப்­டாப் திட்­டமே கூட  எடப்­பாடி பழ­னி­சாமி காலத்­தில் 
நிறுத்­தப்­பட்­டது. அதை நாம் மறு­ப­டி­யும்  கொண்­டு­வந்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப்  அளிக்­கப்­ப­டும் என முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருக்­கி­றார். இது நிறை­வேற்­றப்­ப­டும் என்று மக்­கள் நம்­பிக்­கை­யாக இருக்­கி­றார்­கள்.     மக்­கள் தெளி­வாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் நினை­விட விவ­கா­ரம் குறித்து தேர்­தல் பரப்­பு­ரை­யில் விவா­தங்­கள் நடக்­கின்­றன.  முதல்­வ­ரும் அது­கு­றித்து கடும் கோபத்­தோடு எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு  பதில் அளித்­தார். அன்­றைக்கு திரு ஸ்டாலின் அவர்­க­ளோடு நீங்­க­ளும் சென்­றி­ருந்­தீர்­கள். என்ன நடந்­தது என உங்­க­ளால் சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தலை­வர் கலை­ஞர் மறைந்த பிறகு அண்­ணா­வின் நினை­வி­டத்­தின் அருகே தனக்கு ஒரு இடம் வேண்­டும் என்­ப­து­தான் அவ­ரு­டைய பெரிய கனவு.  கலை­ஞ­ரின் மறை­வுக்­குப் பிறகு அதை கேட்­ட­போது ஆயி­ரம் கார­ணங்­களை சொல்லி அதை முடி­யாது என்­று­தான் அன்­றைய முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி தெரி­வித்­துக் கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் தள­பதி அவர்­கள் இது­தான் எங்­க­ளு­டைய ஒரே ஒரு கோரிக்கை என அன்­றைய முத­ல­மைச்­ச­ரி­டம் உணர்­வு­பூர்­வ­மாக எடுத்து சொன்ன போது கூட... கொஞ்­சம் கூட இரக்­கம் இல்­லா­மல்  அர­சி­யல் ரீதி­யாக மட்­டுமே அதை அவர் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார்.  வேறு இடம் தரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் எத்­தனை ஏக்­கர் இடம் கொடுத்­தா­லும் அதற்கு ஈடா­காது என நானே கோபப்­ப­டு­கிற சூழல் இருந்­தது.  அப்­போ­தும் அண்­ணன் தள­பதி அவர்­கள் பொறு­மை­யாக தான் பேசிக் கொண்­டி­ருந்­தார். அதன் பிறகு தான் நீதி­மன்­றத்தை நாடி தீர்வு பெறக்­கூ­டிய சூழல் உரு­வா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதில் மிகப்­பெ­ரிய மகிழ்ச்சி என்­ன­வென்­றால் தலை­வர் கலை­ஞர் வாழ்­நாள் முழு­வ­தும் ஒரு போரா­ளி­யா­கவே இருந்­தார்.   மறை­வுக்­குப் பிற­கும் தனக்­கான நியா­யத்தை போராடி பெற்­றார். அதை யாரும் அவ­ருக்கு தர­வேண்­டி­யது இல்­லா­மல் நீதி­மன்­றத்தை நாடி  பெற்­றோம். அந்த வகை­யில் தலை­வர் கலை­ஞர் இறுதி வரை ஒரு போரா­ளி­யா­கவே வெற்றி கண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கலை­ஞர் – மிகச் சிறந்த தந்தை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் எப்­பொ­ழு­துமே கலை­ஞரை தலை­வர் என்று தான் இப்­போது வரை சொல்­கி­றீர்­கள். முத­ல­மைச்­ச­ரும் அவ்­வாறே சொல்­கி­றார். ஒரு தந்­தை­யாக கலை­ஞர் எப்­ப­டிப்­பட்­ட­வர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவர் ஒரு மிகச்­சி­றந்த தந்தை. அவ­ரி­டம் இருந்து நிறைய விஷ­யங்­களை கற்­றுக் கொள்ள முடி­யும். என்னை எடுத்­துக் கொண்­டீர்­கள் என்­றால்  படிக்­கிற பழக்­கம் அவ­ரி­ட­மி­ருந்து நான் கற்­றுக் கொண்­ட­து­தான்.  என்ன படித்­தா­லும் என்­னி­டம் பகிர்ந்து கொள்­ளக்­கூ­டிய ஒரு தந்தை.  பல விஷ­யங்­களை அவ­ரோடு ஆரோக்­கி­ய­மாக வாதாட முடி­யும்.  கருத்து வேறு­பா­டு­கள் இருந்­தா­லும் அதை ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டிய நல்ல தந்தை.  எந்த சூழ்­நி­லை­யி­லும் தான் இருக்­கக்­கூ­டிய இடத்தை கல­க­லப்­பாக, மகிழ்ச்சி ததும்ப வைத்­தி­ருக்­கக்­கூ­டிய  நகைச்­சுவை உணர்வு நிரம்­பி­ய­வர்.  அவ­ரோடு இருப்­பதே அவ­ரோடு நேரம் செல­வ­ழிப்­பதே ஒரு  எக்ஸ்ட்­ரா­டி­னரி எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதை­யெல்­லாம் தாண்டி ஒரு மக­ளாக அப்­பா­வி­டம் போடக்­கூ­டிய நிறைய சண்­டை­களை நான் போட்­டி­ருக்­கி­றேன்.  அதற்­கும் அவ­ரி­டம் இடம்  இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அண்­ணன் ஸ்டாலி­னுக்கு அவ­ரோடு அர­சி­யல் ரீதி­யாக இன்­னும் அதி­க­மான  பய­ணம் இருந்­தி­ருக்­கி­றது. இன்­னும் அதி­க­மான ஆழ­மான விஷ­யங்­களை அவ­ரி­டம் இருந்து கற்­றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்பு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு இருந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­பா­வோடு எனக்கு இலக்­கிய ரீதி­யான உரை­யா­டக்­கூ­டிய வாய்ப்­பு­கள் இருந்­தது. அவ­ரு­டைய அனு­ப­வங்­களை என்­னி­டம் பகிர்ந்து கொள்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­படி எங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வெவ்­வேறு வகை­யான அனு­ப­வங்­கள் அப்­பா­வோடு உண்டு. இதை­யெல்­லாம் தாண்டி குடும்­பத்­தில் இருக்­கும் அனை­வ­ரோ­டும், குடும்­ப­மாக நினைத்த  கட்­சி­யி­ன­ரோ­டும் அன்பை பொழிந்­த­வர். யாருக்கு உடல்­நிலை சரி­யில்லை என்­றா­லும் அதற்­காக கவ­லைப்­பட்டு எப்­படி இருக்­காங்க என்று திரும்­பத் திரும்ப விசா­ரித்­துக் கொண்­டி­ருக்க கூடிய ஒரு மனி­த­ரா­கத்­தான் எப்­போ­துமே அவர் இருந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வலி­மை­யான இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் இது தமிழ்­நாட்­டுக்­கும் என்­டி­ஏ­வுக்­கு­மான தேர்­தல் என்று சொல்­கி­றீர்­கள். பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் உள்­ளிட்­டோர் திமுக ஆட்­சியை அகற்­றியே தீரு­வோம் என்­கி­றார்­கள். களத்­தில் வலு­வான  மோதல் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">டெல்­லி­யில் இருந்து இங்கே இருக்­கும் கட்­சி­கள் வரை அனை­வ­ரும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தான் எங்­கள் டார்­கெட் என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு நாங்­கள் வலி­மை­யான இயக்­க­மாக அவர்­களை அச்­சு­றுத்­தக் கூடிய இயக்­க­மாக இருக்­கி­றோம். எந்த இடத்­தி­லும் எங்­கள் கொள்­கையை நாங்­கள் விட்­டுக் கொடுக்­க­வில்லை என்­ப­தைத்­தான் இது காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதைத் தாண்டி களம் என்­பது திமுக கூட்­ட­ணிக்­கும் அதி­முக கூட்­ட­ணிக்­கும் இடை­யி­லான ஒன்­று­தான்.  அதி­முக கூட்­டணி ஒரு பலம் வாய்ந்த கூட்­டணி போல தோன்­றி­னா­லும்,  மக்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தோ­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக கூட்­ட­ணி­யோ­டும் இருக்­கி­றார்­கள் என்­ப­தில் எந்த சந்­தே­க­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டுக்­கான கூட்­டணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சி­களோ, திமுக வலி­மை­யாக இல்­லா­த­தால் தான் இத்­தனை கூட்­டணி கட்­சி­களை சேர்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது என்று ஒரு குற்­றச்­சாட்­டு­கி­றார்­கள். அதை எப்­படி பார்க்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளோடு பய­ணித்த பலர் இன்று எங்­க­ளோடு பய­ணிக்­கி­றார்­கள்.  அதற்கு என்ன கார­ணம்? நீங்­கள் வேண்­டாம், உங்­க­ளோடு இருந்­தால் எதிர்­கா­லம் இல்லை, நீங்­கள் முன்­னெ­டுத்து இருக்­கிற கூட்­டணி தமிழ்­நாட்­டுக்கு நன்மை செய்ய முடி­யாத கூட்­டணி என்­பதை புரிந்து கொண்டு தான்... உங்­க­ளோடு இருந்த கூட்­டணி கட்­சி­கள் மட்­டு­மல்ல உங்­கள் கட்­சி­யில் இருந்த தலை­வர்­கள் கூட அங்­கி­ருந்து விலகி எங்­க­ளோடு தங்­களை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதற்­கெல்­லாம் கார­ணம் உங்­கள் மேல் இருந்த நம்­பிக்கை போன­த­னால் தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­படி வரு­கி­ற­வர்­கள் முத­ல­மைச்­சர் தள­ப­தியை நம்பி வரும்­போது அவர்­க­ளை­யும் இணைத்­துக்­கொண்டு கூட்­டணி உரு­வாக்கி இருக்­கி­றோம். ஏனென்­றால்  இது தமிழ்­நாட்­டுக்­கான கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஸ்டாலின் தொட­ரட்­டும் தமிழ்­நாடு வெல்­லட்­டும் என்ற முழக்­கத்­தோடு நீங்­கள் பரப்­புரை செய்து வரு­கி­றீர்­கள்.  திமுக ஆட்சி தொட­ரும் என்ற நம்­பிக்கை ஏற்­ப­டு­வ­தற்கு எது முக்­கி­ய­மான கார­ணி­யாக இருக்­கி­றது என   கரு­து­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் தொழில் முத­லீ­டு­கள் அதி­க­ரித்­துள்­ளன, வளர்ச்­சியை நோக்­கிய பொரு­ளா­தா­ர­மாக தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரம் கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வி­லேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநி­லங்­க­ளில் முக்­கி­ய­மா­ன­தாக தமிழ்­நாட்டை கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி மேம்­பட்­ட­தால் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­மாக கிடைத்­தி­ருக்­கின்­றன.  குறிப்­பாக 42 சத­வி­கி­தம் பெண்­கள் வேலைக்கு செல்­லக்­கூ­டிய மாநி­ல­மாக தமிழ்­நாடு இன்­றைக்கு திமுக ஆட்­சி­யிலே வளர்ந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்­த­தாக கல்வி. இது­வரை யார் யாருக்­கெல்­லாம் கல்வி விடு­பட்­டதோ ஒரு வழி­காட்­டி­யாக இருந்து அவர்­க­ளை­யெல்­லாம் அர­வ­ணைத்த திட்­டங்­கள் தான் நான் முதல்­வன் போன்ற திட்­டங்­கள். இத­னால் தமிழ்­நாட்­டில் இருந்து யுபி­எஸ்சி தேர்­வு­க­ளில்  இவ்­வ­ளவு மாண­வர்­கள் தேர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள் என்ற சூழலை உரு­வாக்கி காட்­டி­யி­ருக்­கி­றோம். உல­கம் முழுக்க நமது மாண­வர்­கள் கல்வி கற்­கச் செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­படி கல்வி, வேலை வாய்ப்பு , அடிப்­படை உள்­கட்­ட­மைப்பு என ஒரு முழு­மை­யான வளர்ச்­சியை தந்­தி­ருக்­கக் கூடிய ஆட்­சி­யாக கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்­சியை நடத்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தாயு­மா­ன­வர் திட்­டத்தை எடுத்­துக் கொள்­ளுங்­கள்... ரேஷன் பொருட்­களை யார் யார் கடைக்கு சென்று வாங்க முடி­ய­வில்லை அவர்­க­ளுக்கு வீட்­டுக்கே சென்று வழங்­கக்­கூ­டிய திட்­டம்.    மக்­களை தேடி மருத்­து­வம் என்ற வகை­யில் வீடு தேடிச் சென்று மருத்­து­வத்­தை­யும் மருந்­து­க­ளை­யும் சேர்க்­கும் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு எல்­லா­ரை­யுமே அக்­க­றை­யோடு அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டிய ஆட்­சியை முத­ல­மைச்­சர் அவர்­கள் நடத்­திக் காட்டி இருக்­கி­றார். அத­னால் எல்­லா­ருக்­குமே பய­னுள்ள ஆட்­சி­யாக, எல்­லா­ருக்­கும் நல்ல எதிர்­கா­லத்தை உரு­வாக்­கித் தரக்­கூ­டிய ஆட்­சி­யாக இந்த ஆட்சி இருந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த ஆட்சி அடுத்த முறை­யும் வர­வேண்­டும், அப்­போ­து­தான் வளர்ச்­சிப் பாதை தொட­ரும் என்­ப­தில் மக்­கள் தெளி­வாக இருக்­கி­றார்­கள்” .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு – கழக துணைப் பொதுச் செய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நி­நிதி எம்.பி. குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>