<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title"></title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,394,493,1264" />
         <classifier id="numcol" value="4"/>
      <classifier id="ArticleStyle" value=""/>
      <classifier id="Layer" value="Layer 1"/>
         <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 09 2026 03:37:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260409T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09042026-CBE-14" position.sequence="14" ex-ref="09042026-CBE-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
			</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை. ஏப். -9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை மாவட்­டம் திரு­ம­யம் சட்­ட­மன்ற தொகு­தி­யில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ள­ரும்,’ அமைச்­ச­ரு­மான எஸ்.ரகு­பதி எந்த ஒரு ஆர­வா­ர­மும் இன்றி அமை­தி­யான முறை­யில் திரு­ம­யம் வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­திற்கு வேட்­பா­ளர் உட்­பட ஐந்து பேரு­டன் சென்று திரு­ம­யம் தொகுதி தேர்­தல் நடத்­தும் அலு­வ­ல­ரி­டம் தனது வேட்பு மனுவை தாக்­கல் செய்­தார்..அப்­போது வேட்பு மனு தாக்­கல் செய்து வெளியே வந்த பின்­னர் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த அமைச்­சர் எஸ்.ரகு­பதி கூறு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் களம் எங்­க­ளுக்­குப் பிர­கா­ச­மாக இருக்­கி­றது. ஐந்து ஆண்­டு­கா­லத்­திலே  தமிழ்­நாடு முத­ல­ மைச்­சர் மு.க.ஸ்டாலி­ன் அவர்களின் திரா­விட மாடல் ஆட்­சி­யிலே தமிழ்­நாடு பெற்­றி­ருக்­கிற நன்­மை­களை பொது­மக்­கள் நன்­றாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பது நாங்­கள் சென்­றி­ருக்­கிற இட­மெல்­லாம் கிடைக்­கின்ற வர­வேற்­பைப் பொறுத்து நன்­றாக எங்­க­ளுக்­குத் தெரி ­கி­றது. இந்த ஆட்­சி­யின் மீது எந்­த­வி­த­மான ஆன்­டி-­இன்­கம்­பன்சி கிடை­யாது. வெறுப்பு கிடை­யாத ஒரு ஆட்சி. எனவே வெறுப்­பில்­லாத ஆட்சி வெற்றி பெறு­வது உறுதி என்­பது நாட­றிந்த உண்மை. எனவே அந்த வகை­யி­லே­யும் எங்­க­ளு­டைய தலை­வர் சாத­னை­க­ளும் நிச்­ச­ய­மான வெற்­றியை எங்­க­ளுக்­குத் தரும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சி­க­ளு­டைய விமர்­ச­னங்­கள் எல்­லாம் புஸ்­வா­ணங்­கள். அது எல்லா மக்­க­ளுக்­கும் தெரி­யும். தேர்­த­லுக்­காக வந்து மக்­க­ளி­டத்­திலே இன்­றைக்கு அவர்­கள் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். சிறந்த நடி­கர்­கள். அந்த நடி­கர்­க­ளு­டைய நடிப்­புத் திற­மைக்கு வாழ்த்­து­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் முத­ல­மைச் சர் கலை­ஞர் அ.தி.­மு.க.  ஆட்­சி­யி­ல­தானே இறந்­தார்? அப்ப யாரு முத­ல­மைச்­சர்? எடப்­பாடி பழ­னி­சாமி முத­ல­மைச்­சர். அப்ப அவ­ருக்கு ஆளத் தெரி­யல. ஆளத் தெரிஞ்­சி­ருந்தா அன்­னைக்கே அதெல்­லாம் சொல்­லி­ருக்­க­லாம்ல? இன்­றைக்கு வந்து ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு புத்­த­ருக்கு ஞானோ­த­யம் வந்­தது போல இன்­றைக்கு எடப்­பா­டிக்கு ஒரு ஞானோ­த­யம் வந்­தி­ருக்­கி­றது. தலை­வர் கலை­ஞரை வீட்­டுச் சிறை­யிலே வைக்­கக்­கூ­டிய தைரி­யம் எந்த தமி­ழ­னுக்­கும் கிடை­யாது,  எந்த எதிர்க்­கட்­சிக்­கா­ர­னுக்­கும் கிடை­யாது. சிறை­க­ளைக் கண்டு அஞ்­சாத சிங்­கம் தலை­வர் கலை­ஞர் என்­பதை பாளை­யங்­கோட்டை தனிச்­சி­றை­யிலே இருந்து இன்­றைக்கு வெளியே வந்­த­வர் என்­பது நாட­றிந்த உண்மை. எனவே அவரை வந்து சிறை­யில வச்­சாங்­கன்னு சொல்­றது போல எடப்­பாடி பழ­னி­சா­மி­யைப் போல ஆளத் தெரி­யாத ஒரு முட்­டாள் இந்த உல­கத்­தில் இருந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. ஆட்­சித்­தி­றமை அற்­ற­வர் என்­பதை அவர் நிரூ­பித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே அவர் கையி­ல­தானே அன்­னைக்கு போலீஸ் இலாக்கா எல்­லாம் இருந்­துச்சு? அப்­படி இருந்தா உடனே அன்­னைக்கே பப்­ளி­சிட்டி பண்­ணி­ருக்­க­லாம்ல? அத்­தனை பேரும் போய் கலை­ஞ­ரைப் பார்த்து வரு­கி­றார்­கள், எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் பார்த்து வரு­ கி­றார்­கள், டெல்­லி­யி­லி­ருந்து வரு­கி­ற­வர்­கள் பார்க்­கி­றார்­கள். எல்­லோ­ரும் பார்க்­கக்­கூ­டிய தலை­வ­ராக கலை­ஞர் இருக்­கிற பொழுது அவரை யார் வீட்­டுச் சிறை­யிலே வைக்க முடி­யும்? வைக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன இருக்­கி­றது? இதெல்­லாம் எடப்­பாடி பழ­னி­சாமி இன்­றைக்கு தேர்­த­லுக்­கா­கப் புளு­குற புளுகு. இதை­யெல்­லாம் மக்­கள் நம்ப மாட்­டார்­கள். ஆனால் அவ­ரைப் பற்றி ஒன்று புரிந்து கொள்­வார்­கள், அவர் சொல்­லு­கிற பொய்­யி­லி­ருந்தே அவர் ஆளு­கிற தன்­மையை இழந்­து­விட்­டார். ஆட்சி அதி­கா­ரம் அவர்­க­ளி­டத்­திலே போனால் டிவி­யில பார்த்­துத் தெரிந்து கொண்­டேன் என்று சொன்ன செய்­தி­க­ளைப் போல இன்­றைக்­குச் செய்­தி­களை எல்­லாம் அவர் பரப்­பு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பா.ஜ.­க.­வி­ன­ரின் பிரச்­சா­ரங்­களை எல்­லாம் எங்­க­ளாலே சுல­ப­மாக எதிர்­கொள்ள முடி­யும். அவங்க வந்து டெல்­லி­யில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு என்ன செஞ்­சி­ருக்­காங்க? தமிழ்­நாடு எவ்­வ­ளவு ரூபாய் பணம் வரிக் கட்­டி­யி­ருக்கு? அதுக்கு எவ்­வ­ளவு திருப்­பிக் கொடுத்­தாங்­கன்னு யாரா­வது சொல்ல முடி­யுமா? ஒரு ரூபாய் கொடுத்தா 29 பைசா திருப்­பிக் கொடுத்து தமிழ்­நாட்­டுக்கு வர்­றாங்க. உத்­த­ரப் பிர­தே­சத்­துக்கு ஒரு ரூபாய் கொடுத்தா ரெண்டே முக்­கால் ரூபாய் கொடுக்­கி­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மத்­தி­யப் பிர­தே­சத்­துக்கு ஒரு ரூபாய் கொடுத்தா ஒன்றே முக்­கால் ரூபாய் கொடுக்­கி­றாங்க. இப்­படி பல மாநி­லங்­க­ளுக்­குக் கொடுப்­பதை விட அதி­கப்­ப­டுத்தி விட்டு நம்­மி­ட­மி­ருந்து ஒரு ரூபாயை வாங்­கிக் கொண்டு 29 பைசா தந்து விட்டு இங்கே எந்த முகத்­தோடு வரு­கி­றார்­கள் அவர்­கள்? 50 பைசா தாங்­கன்னு கேட்டா அதையே தர வக்­கில்­லா­த­வர்­கள், அவர்­கள் வந்து என்ன இங்கே கிழிக்­கப் போறாங்க தமிழ்­நாட்­டுக்­காக? நிச்­ச­ய­மாக அவர்­க­ளாலே தமிழ்­நாட்­டுக்கு எது­வும் செய்ய முடி­யாது என்­பது தமிழ்­நாடு அறிந்த உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த தேர்­த­லில் 200 தொகு­திக்கு மேல் வெற்­றி­ய­டை­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் மத்­தி­யில் மிகப் பிர­மா­த­மான வர­வேற்பு இருக்­கி­றது. அதைச் செல்­லு­கிற இடங்­க­ளி­லெல்­லாம் நாங்­க­ளும் பார்க்­கி­றோம், நீங்­க­ளும் பார்க்­கி­றீர்­கள். மக்­கள் இன்­றைக்­குப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், திமுக அர­சின் மீது எங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான வெறுப்­பும் கிடை­யாது, அந்த அரசு எங்­க­ளுக்­குப் பல்­வேறு வகை­யி­லும் உத­வி­யாக இருந்­தி­ருக்­கி­றது. இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரம் உயர்ந்­தி­ருக்­கி­றது என்று சொன்­னால், இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டிலே பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது, அத­னாலே பொரு­ளா­தா­ரம் உயர்ந்­தி­ருக்­கி­றது. அந்த உண்­மையை மட்­டும் ஏன் எதிர்க்­கட்­சி­கள் எல்­லாம் சொல்ல மறுக்­கின்­றன என்­ப­து­தான் எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. தமிழ்­நாட்­டி­னு­டைய பொரு­ளா­தார வளர்ச்­சியை இன்­றைக்கு உயர்த்­திக் காண்­பித்­தி­ருக்­கிற அர­சு­தான் எங்­க­ளு­டைய  முத­ல­மைச்­சர் மு க ஸ்டாலின் அரசு. எங்­க­ளுக்கு எல்­லா­ருமே களத்­துல ஒன்­னு­தான். ஆனா நாங்க நம்­பர் ஒன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் வந்து என்­னு­டைய இதுல வந்து அர­சின் சார்­பிலே என்­னென்ன செய்ய முடி­யுமோ அதை­யெல்­லாம் செய்­வேன் என்று ஏற்­க­னவே சொல்­லி­யி­ருக்­கி­றேன். எங்­க­ளு­டைய சொந்த நிதி­யி­லி­ருந்து மாணவ மாண­வி­க­ளு­டைய கல்­விக்­காக ஆண்­டுக்கு 25 ஆயி­ரத்­தி­லி­ருந்து ஒரு லட்­சம் ரூபாய் வரைக்­கும் ஒரு மாண­வ­னுக்கு நாங்­கள் கொடுப்­போம், ஒரு கோடி ரூபாய் எங்­க­ளு­டைய கல்வி அறக்­கட்­ட­ளை­யி­லி­ருந்து கொடுப்­போம்னு சொல்­லி­ருக் ­கேன். அதே­போல கழ­கத் தோழர்­கள், அதே­போல கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவர்­க­ளு­டைய திரு­மண உத­வி­யாக 25 ஆயி­ரம் ரூபாய் குறைந்­த­பட்­சம் ஒரு 100-லிருந்து 200 குடும்­பங்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் கொடுப்­போம் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றேன். அதே­போல முதி­யோர் இல்­லம் கட்­டித் தரு­வோம், மாண­வி­யர் விடுதி கட்­டித் தரு­வோம் போன்ற வாக்­கு­று­தி­கள் எல்­லாம் தந்­தி­ருக்­கின்­றேன். எங்­க­ளு­டைய மருத்­துவ... எங்­க­ளு­டைய மருத்­துவ ஆம்­பு­ லன்ஸ், அதா­வது மருத்­து­வச் சேவை இப்­போது தொடர்ந்து நடை­பெற்­றது. இப்ப தேர்­த­லுக்­காக நடத்­தல. அதுல ஒரு டாக்­டர், ரெண்டு நர்ஸ் போட்டு கிரா­மம் தோறும் வரு­ஷத்­துல 365 நாளும் அவங்க போய் ஏழை எளிய மக்­க­ளுக்­குத் தேவை­யான வைத்­திய உத­வி­க­ளைச் செய்து தரு­வார்­கள். தேவைப்­ப­டு­கிற வைத்­திய உத­வி­களை இல­வ­ச­மாக எங்­க­ளு­டைய மருத்­து­வ­ம­னை­யில் யார் வந்­தா­லும் திரு­ம­யம் தொகுதி மக்­க­ளுக்­குச் செய்து கொடுப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்க 200 சீட்ல ஜெயிக்­கப் போறோம். எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக்­குக் கொடுத்­தி­ருக்­கிற சீட்டு உங்­க­ளுக்­குத் தெரி­யும். நாங்க 175 இடத்­துல உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துல போட்­டி­யி­டு­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொகு­திக்­குக் கலை அறி­வி­யல் கல்­லூரி கொண்டு வந்­தி­ருக்­கேன், அது­தான் முக்­கி­யம். ஏழை எளிய மாண­வர்­கள் படித்து அவர்­கள் உயர்­கல்வி படிப்­ப­தற்கு வச­தி­யா­னது கலை அறி­வி­யல் கல்­லூரி, அதை திரு­ம­யத்­துக்கு முதல்ல கொண்டு வந்­தி­ருக்­கோம். அது­தான் முக்­கி­யம். அதைக் கொண்டு வந்­தி­ருக்­கி­ற­தைப் பாராட்­டுங்க. ஏன்னா மற்ற விரா­லி­ ம­லைத் தொகு­தில 10 வரு­ஷம் அமைச்­சரா இருந்­த­வர் அங்கே ஒரு கலை அறி­வி­யல் கல்­லூரி கொண்டு வர­வில்லை. நாங்­கள் உட­ன­டி­யாக கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­யைக் கொண்டு வந்­தி­ருக்­கோம். தொடர்ந்து மற்ற கல்­லூ­ரி­க­ளைக் கொண்டு வர முயற்­சிப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வதந்­தி­க­ளுக்கோ, கற்­ப­னை­க­ளுக்கோ பதில் சொல்ல முடி­யாது. திரு­மா­வ­ள­வன் வந்து எங்­க­ளைப் பொறுத்­த­வரை எங்­க­ளு­டைய நேர்­மை­யான நண்­பர். அவர் நிச்­ச­ய­மாக மன­சுல என்ன இருக்கோ அதைச் சொல்­லக்­கூ­டி­ய­வரே தவிர வதந்­தி­க­ளுக்­கெல்­லாம் அவர் இடம் கொடுக்க மாட்­டார் என்று தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>