<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 08 2026 22:43:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260409T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="09042026-TRY-06" position.sequence="06" ex-ref="09042026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">“மதுரையில் பா.ஜ.க. வென்றால் மெட்ரோ கிடைக்கும்!” என ‘ப்ளாக்மெயில்’    அரசியல் செய்ய மகாராஷ்டிர முதல்வருக்கு வெட்கமாக இல்லையா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">5–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">தமிழ்நாடு வளம்பெற</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">இந்த நல்லாட்சி தொடர</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="50">ஆதரிப்பீர்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309901_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="WhatsAppImage_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="dmklogopng_se_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதிய நூலக கட்­ட­டங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிர­தா­ப­ரா­ம­பு­ரம் நீலக் கடற்­கரை திட்­டம் என்று பல பணி­கள் அடுத்­த­டுத்து நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்­லா­மல்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தஞ்சை – திரு­வா­ரூர் – மயி­லா­டு­துறை – நாகை உள்­ள­டக்­கிய “வேளாண் தொழில் பெருந்­த­டம்” அமைக்க விரி­வான திட்ட அறிக்கை அறி­விப்­பை­யும் வேளாண் பட்­ஜெட்­டில் அறி­வித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நாகை­யில் மீன­வர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நிறை­வேற்­றிய சிறப்­புத் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன­வர்­கள் நிறைந்த மாவட்­டம் இது. நாகை மாவட்­டம் நம்­பி­யார் நக­ரில் மீனவ சொந்­தங்­களை சந்­தித்து நான் பேசி­ய­தை­யும், மீனவ நண்­பர்­க­ளின் நல்­வாழ்­விற்­காக 576.73 கோடி ரூபாய் செல­வில் பல திட்­டங்­களை நான் சட்­டப்­பே­ர­வை­யில் அறி­வித்­த­போது, நாகை­யி­லி­ருந்து நீங்­க­ளெல்­லாம் நன்றி சொன்­ன­தும் – வாழ்த்து சொன்­ன­தும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது. அதை என்­னால் இன்­ன­மும் மறக்க முடி­ய­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, 4 ஆயி­ரம் திருக்­கோ­யில்­க ­ளுக்கு நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் குட­மு­ழுக்கு நடத்­தி­யி­ருக்­கி­றோம். அதில், 2 ஆயி­ர­மா­வது குட­மு­ழுக்கு 
நம்­மு­டைய மயி­லா­டு­துறை, கீழப்­ப­ர­ச­லூர் வீரட்­டேஸ்­வ­ரர் கோயி­லில்­தான் நடத்­தி­னோம். 3 ஆயி­ர­மா­வது குட­மு­ழுக்கு – நாகை மாவட்­டம், திருப்­பு­க­லூர் அக்­னீஸ்­வ­ரர் கோயி­லில்­தான் நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு, இரண்டு மாவட்­டங்­க­ளி­லும், மீன­வர், இளை­ஞர், உழ­வர்­கள், மக­ளிர், பக்­தர்­கள் என்று யாரை­யும் விடா­மல் அனை­வ­ருக்­கா­க­வும் நன்­மை­களை செய்து தந்­து­விட்டு, கம்­பீ­ர­மாக, தெம்­பு­டன், திரா­ணி­யு­டன் உங்­க­ளி­டம் நான் ஆத­ர­வைக் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், இப்­படி பேசு­வ­தற்கு எந்­தக் கண்ட்­டெண்­டும் இல்­லா­மல், கண்­ட­தை­யும் பேசும் ஒரு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பழ­னி­சாமி வலம் வந்து கொண்­டி­ருக்­கி­றார். நாள்­தோ­றும் கருத்­துக்­க­ணிப்பு முடி­வு­கள் எல்­லாம் வந்து கொண்­டி­ருக்­கி­றது அல்­லவா… அதில், தி.மு.க. கூட்­ட­ணி­யின் வெற்றி எண்­ணிக்கை கூட கூட, தோல்வி பயத்­தில் பழ­னி­சா­மி­யின் தரம் கீழே கீழே இறங்­கிக் கொண்டே போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தன்­னை­யும் – கட்­சி­யை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அசிங்­கப்­ப­டுத்­தும் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூவத்­தூ­ரில் MLA–க்களை ஏலம் எடுத்து முத­ல­மைச்­ச­ரான அவர், அந்­தப் பத­வி­யில் இருக்­கும் தகு­தியே இல்லை என்று சொல்லி, நீங்­கள் எல்­லாம் தோற்­க­டித்­தீர்­கள். இப்­போது அவரே, முத­ல­மைச்­ச­ராக மட்­டு­மல்ல, எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­க­வும் தனக்கு தகுதி இல்லை என்­ப­து­போன்று நடந்து கொள்­கி­றார். தன்­னு­டைய தரா­த­ரம் இல்­லாத பேச்­சு­க­ளால், தன்­னை­யும் – தன்­னு­டைய கட்­சி­யை­யும் மக்­க­ளி­டம் அசிங்­கப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026 தேர்­தல் முடி­வு­கள், பழ­னி­சாமி என்ற அசிங்­கத்தை அர­சி­ய­லில் இருந்தே துடைத்­தெ­றிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க. அரசு மும்­மொ­ழிக் கொள்­கை­யைக் கட்­டா­ய­மாக்­கு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிறிஸ்­தவ தொண்டு நிறு­வ­னங்­க­ளை­யும், சர்ச்­சு­க­ளை­யும் குறி­வைத்து FCRA சட்­டத் திருத்­தம் கொண்டு வரப் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல மாநி­லங்­க­ளில் தேர்­தல் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் சம­யத்­தில், நாடா­ளு­மன்­றத்தை அவ­ச­ர­மா­கக் கூட்டி தொகுதி மறு­வ­ரை­யறை செய்­யத் துடிக்­கி­றார்­கள். தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­மா­நி­லங்­கள் அனைத்­தும் கடு­மை­யான பாதிப்பை சந்­திக்­கப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முக்­கி­ய­மான அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தி­ருத்­தங்­களை அவ­சர அவ­ச­ர­மாக செய்­யப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தொகுதி மறு­வ­ரையறை­யால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டுக்கு பாதிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை நாம் கண்­டித்து, பல்­வேறு மாநி­லங்­க­ளுக்கு தேர்­தல் நடக்க இருக்­கும் இந்­தச் சம­யத்­தில், எதற்கு இந்த அவ­ச­ரம்? என்று கேட்­கி­றோம். இந்­தி­யா­வில் இருக்­கும் அனைத்து தலை­வர்­க­ளும் இதையே கேட்­கி­றார்­கள். ஆனால், இதற்கு அவ­ரி­டத்­தில் பதில் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“தொகுதி மறு­வ­ரை­ய­றை­யால், வட மாநி­லங்­க­ளின் தொகுதி எண்­ணிக்கை மிக மிக அதி­க­மா­கும். தமிழ்­நாடு உள்­ளிட்ட தென் மாநி­லங்­க­ளுக்­கும், உத்­தர பிர­தே­சம், பீகார் போன்ற வட மாநி­லங்­க­ளுக்­கும் தொகுதி எண்­ணிக்­கை­யில் பெரிய இடை­வெளி உண்­டா­கும். இது அநி­யா­யம்!” என்று எச்­ச­ரிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கர்­நா­டக முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மையா அவர்­க­ளும், கேரள முத­ல­மைச்­சர் நம்­மு­டைய சகோ­த­ரர் பின­ராயி விஜ­யன் அவர்­க­ளும், தொகுதி மறு­வ­ரை­யறை தொடர்­பாக, நான் நீண்ட கால­மாக வெளிப்­ப­டுத்தி வரும் அச்­சத்தை, அவர்­க­ளும் கேள்­வி­யாக எழுப்பி இருக்­கி­றார்­கள். இது எதைப் பற்­றி­யும் வாய் திறந்து பேச வக்­கில்­லா­மல் இருக்­கி­றார் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு கார­ணம் என்ன? அ.தி.மு.க.வையும் – பழ­னி­சா­மி­யை­யும் குத்­த­கைக்கு எடுத்­தி­ருப்­பது யார்? பா.ஜ.க.! அதா­வது, டெல்லி டீம்! அந்த டீம்–­­இல் இருந்து, இப்­போது அடிக்­கடி ஒன்­றிய அமைச்­சர்­க­ளும், பா.ஜ.க. முத­ல­மைச்­சர்­க­ளும் தமிழ்­நாட்­டுக்கு படை­யெ­டுத்து வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளி­டம் நான் கேட்ட கேள்­விக்­கும், நான் விட்ட சவா­லுக்­கும் பதில் இருக்­கி­றதா? இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன்... தொகுதி மறு­வ­ரை­ய­றை­யில் தமிழ்­நாட்­டுக்­காக குரல் கொடுக்­காத பழ­னி­சாமி, வேறு எதற்­கா­கத்­தான் பேசு­வார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சி­யில் இருப்­ப­தால்­தான், தொகுதி மறு­வ­ரை­ய­றைப் பற்றி, பா.ஜ.க. அரசு அறி­விப்­ப­தற்கு முன்பே விழிப்­பு­ணர்வை நாம் ஏற்­ப­டுத்­தி­னோம். அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை நாம் கூட்­டி­னோமே! இந்­தியா முழு­வ­தும் இருந்து முத­ல­மைச்­சர்­களை சென்­னைக்கு அழைத்து, கூட்டு நட­வ­டிக்­கைக் குழு கூட்­டம் நடத்தி, தீர்­மா­னங்­கள் நிறை­வேற்றி ஒன்­றிய அர­சுக்கு அனுப்பி வைத்­தோமே! ஏன், சட்­ட­மன்­றத்­தி­லும் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு­வேளை பழ­னி­சாமி ஆட்­சி­யாக இருந்­தி­ருந்­தால், தமிழ்­நாட்டை கூறு போட்டு விற்­றி­ருப்­பார். நல்ல வேளை இல்லை! வரும் தேர்­த­லி­லும் பழ­னி­சா­மி­யும் – என்.டி.ஏ கூட்­ட­ணி­யும் ஒரு தொகு­தி­யில் கூட, வெற்றி பெறக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­காக மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டுக்கு ஒன்­றிய அரசு எந்­தச் சிறப்பு திட்­டத்­தை­யும் செய்­வ­தில்லை என சொல்லி வரு­கி­றோம். அதற்கு ஆதா­ர­மாக, சமீ­பத்­தில் ‘லைவ் மிண்ட்’ என்­கிற பொரு­ளா­தா­ரம் சார்ந்த முன்­னணி ஆங்­கில நியூஸ் பேப்­ப­ரில் ஒரு செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தார்­கள். ஆதா­ரம் இருக்­கி­றது. நான் பொத்­தம் பொது­வாக எல்­லாம் பேச­மாட்­டேன். ஆதா­ரத்­தோ­டு­தான் பேசு­கி­றேன். இதில் என்ன வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால், ஒன்­றிய அர­சின் உட்­கட்­ட­மைப்பு திட்­டங்­கள் அதி­க­மாக நடக்­கும் டாப் 10 மாநி­லங்­கள் என்று ஒரு லிஸ்ட் வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டிற்கு ஒன்­றிய அர­சின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சிறப்­புத் திட்­டங்­கள் எது­வும் இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய அள­வில் மிகப் பெரிய பொரு­ளா­தா­ரம் கொண்ட மகா­ராஷ்­டிரா, அதில் முதல் இடத்­தில் இருக்­கி­றது. இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ர­மான தமிழ்­நா­டு­தான், 2–ஆவது இடத்­தில் நியா­ய­மாக இருக்க வேண்­டும். ஆனால், இல்லை. அதி­க­மாக தொழில்­ம­ய­மான மாநி­ல­மும் நாம்­தான்! ஆனால், அதிர்ச்­சிக்­கு­ரிய செய்தி என்­ன­வென்­றால், முதல் பத்து இடத்­தில், தமிழ்­நாடு எங்­குமே இல்லை. ஒன்­றிய அரசு தமிழ்­நாடு என்­கிற இந்­தி­யா­வின் வளர்ச்சி எஞ்­சினை, எந்த அள­வுக்கு வஞ்­சிக்­கி­றது என்­ப­தற்கு இதை­விட வேறு சான்று வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரி கட்­டு­வ­தற்கு மட்­டும், தமிழ்­நாட்டு மக்­கள் பணம் வேண்­டும். ஆனால், எங்­க­ளுக்கு எந்­தத் திட்­ட­மும் கிடை­யாதா? சிறப்­புத் திட்­ட­மும் இல்லை, பட்­ஜெட்­டி­லும் தமிழ்­நாட்­டுக்கு முட்­டை­தான் போடு­கி­றார்­கள். இர­யில்வே திட்­டங்­க­ளி­லும் தமிழ்­நாட்­டுக்­குப் பட்டை நாமம்­தான் போடு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் நேற்று மது­ரைக்கு வந்த மகா­ராஷ்­டிரா பா.ஜ.க. முத­ல­மைச்­சர் பட்­ந­விஸ் என்ன சொன்­னார் என்று பார்த்­தீர்­களா? நான் இன்­றைக்கு டிவிட்­ட­ரில் அதற்கு செய்தி போட்­டி­ருக்­கி­றேன். மகா­ராஷ்­டிரா முத­ல­மைச்­ச­ரி­டம் “மது­ரைக்கு ஏன் மெட்ரோ நிரா­க­ரிக்­கப்­பட்­டது?” என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­கி­றார்­கள். அதற்கு அவர் சொல்­கி­றார். “மது­ரை­யில் பா.ஜ.க. MLA வெற்றி பெற்­றால், மது­ரைக்கு மெட்ரோ கிடைக்­கும்” என்று பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் நான் கேட்­கி­றேன்... அவ­ருக்­கும் – மதுரை மெட்­ரோ­வுக்­கும் என்ன சம்­பந்­தம்? அவர் என்ன பிர­த­மரா? இல்லை, அந்­தத் துறை­சார்ந்த ஒன்­றிய அமைச்­சரா? அர­சி­ய­ல­மைப்­பின் மீது உறு­தி­மொழி ஏற்ற ஒரு மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ராக இருப்­ப­வர் பேசும் பேச்சா இது? பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்­தால்­தான், உங்­க­ளுக்கு மெட்ரோ தரு­வோம் என்று வெளிப்­ப­டை­யாக கட்­டப் பஞ்­சா­யத்து செய்­கி­றார். திரு. பட்­ந­விஸ் அவர்­களே! இப்­படி, பிளாக்­மெ­யில் செய்ய உங்­க­ளுக்கு வெட்­கமே இல்­லையா… எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி அவர்­கள், இதற்கு என்ன பதில் வைத்­தி­ருக்­கி­றார்? இப்­போ­தா­வது மக்­கள் பிரச்­சி­னை­யைப் பேசு­வீர்­களா? இல்லை, வழக்­கம்­போல் உங்­கள் சொந்­தக்­கதை சோக கதை­யைத்­தான் பேசப் போகி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொள்­ளி­டம் ஆற்­றின் குறுக்கே ஒன்­றிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு  கட்­டிய பாலம் உள்­வாங்­கி­யுள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, ஒன்­றிய அரசு செய்­யும் சில வேலை­யும், ஒழுங்­கா­கச் செய்­வது இல்லை! நேற்­று­கூட, இங்கு பக்­கத்­தில் கொள்­ளி­டம் ஆற்­றின் குறுக்கே, 6 ஆயி­ரத்து 500 கோடி ரூபாய் மதிப்­பில் ஒன்­றிய அரசு கட்­டிய மேம்­பா­லம் உள்­வாங்கி சேத­ம­டைந்­தி­ருக்­கி­றது. சீர்­காழி – சிதம்­ப­ரம் இடையே போக்­கு­வ­ரத்து பாதிப்­ப­டைந்­தி­ருக்­கி­றது. இதே போன்­று­தான், இந்­தியா முழு­வ­தும் இவர்­கள் கட்­டு­வ­தெல்­லாம் திறந்த சிறிது நாளில் இடிந்து விழு­கி­றது. நிறைய இடத்­தில் திறப்­ப­தற்கு முன்பே கொலாப்ஸ் ஆகி­றது. பிர­த­மர் மோடி அவர்­க­ளின் குஜ­ராத்­தி­லேயே, மோர்பி பாலம் இடிந்து விழுந்து 140 பேர் பரி­தா­ப­மாக இறந்து போனார்­கள். இப்­படி என்­னால் பெரிய லிஸ்டே போட முடி­யும். இப்­படி ஊழ­லும் பொறுப்­பின்­மை­யும் அலட்­சி­ய­மும் நிறைந்த அர­சு­தான் ஒன்­றிய பா.ஜ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்­கள் அனை­வ­ரும் எந்த முகத்தை வைத்­துக் கொண்டு, தமிழ்­நாட்­டுக்கு வந்து நம்மை விமர்ச்­சிக்­கி­றார்­கள், வாக்கு கேட்­கி­றார்­கள் என்று தெரி­ய­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தி.மு.க.வின் தேர்­தல் அறிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சூப்­பர் ஸ்டாராக விளங்­கு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வின் ஒரே நோக்­கம் தமிழ்­நாடு வள­ரக் கூடாது. ஆனால், அதை­யெல்­லாம் மீறித்­தான், இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் இந்­தி­யா­வி­லேயே அதிக எண்­ணிக்­கை­யி­லான திட்­டங்­களை நிறை­வேற்­றிக் காட்டி இருக்­கி­றேன். முத்­தி­ரைத் திட்­டங்­களே, நிறைய இருக்­கி­றது. அந்­தப் பட்­டி­யலை எல்­லாம் பல கூட்­டங்­க­ளி­லும் தொடர்ந்து சொல்லி வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தத் திட்­டங்­களை, அடுத்து மேலும் விரி­வு­ப­டுத்­து­வது போன்­றும், இன்­னும் பல புதிய திட்­டங்­க­ளை­யும் கொண்ட தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்டு இருக்­கி­றோம். அதா­வது, 2026 தேர்­த­லின் சூப்­பர்ஸ்­டார் இது­தான்! ரஜினி படத்­தில் பாட்டு இருக்­கும். அது­போல, “சூப்­பர் ஸ்டாரு யாருனு கேட்டா, தி.மு.க. தேர்­தல் அறிக்­கை”னு சொல்­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் பிர­சா­ரத்­திற்­குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்பே, நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டார் நமக்­காக பிர­சா­ரத்­தைத் தொடங்­கி­விட்­டார். தேர்­தல் அறிக்கை சூப்­பர் ஸ்டாரை சொல்­கி­றேன். வாக்கு எண்­ணப்­ப­டும் மே 4 கல்­யாண நாள் என்­றால், தேர்­தல் அறிக்கை வெளி­யிட்ட நாள்­தான் நம்­மு­டைய வெற்­றிக்கு நிச்­ச­ய­தார்த்த நாள்! அப்­ப­டிப்­பட்ட தேர்­தல் அறிக்­கை­யின் டாப் அறி­விப்­பு­களை – முக்­கி­ய­மான அறி­விப்­பு­களை மட்­டும் இப்­போது சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தேர்­தல் அறிக்­கை­யில் நமது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘டாப்’ அறி­விப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் இல்­லத்­த­ரசி திட்­டம்! முதல் பந்தே சிக்­சர்­தான்! இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப்­போ­கி­றோம்! எவ்­வ­ளவு? எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை, புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புது பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்–யை வாங்­கிக் கொள்­ள­லாம்! என்­னென்ன பொருள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­­வேவ் அவன், மின் அடுப்பு – இதில் எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்­னைப் பொறுத்­த­வரை, நம்­மு­டைய குடும்­பத் தலை­வி­க­ளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்­டும். அதற்­கா­கத்­தான் இந்­தத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு தாய்­மார்­கள் இருக்­கி­றீர்­கள். ஒரு புடவை வாங்­கு­வ­தற்கு கடைக்­குச் செல்­கி­றீர்­கள். கடைக்­குச் சென்று அந்­தப் புட­வையை வாங்­க­லாமா? வேண்­டாமா? என்று யோசிப்­பீர்­கள். நல்ல கலரா?  இது நமக்கு மேட்ச் ஆகுமா? சாயம் போகுமா? தண்­ணீ­ரில் போட்­டால் சுருங்­குமா? அதைத் தொட்­டுப் பார்த்து, தட­விப் பார்த்து, இது என்ன சில்க்கா? நைலக்சா? காட்­டனா? இவ்­வ­ள­வும் பார்த்­து­தான் வாங்­கு­வீர்­கள். ஒரு புடவை வாங்க, 250 புட­வை­களை எடுத்து கடைக்­கா­ரர் எடுத்­துப் போடு­வார். அதை எடுத்­துக் கொண்டு வெளியே எடுத்­துச் சென்று சூரிய வெளிச்­சத்­தில் பார்ப்­பீர்­கள். எந்த வெளிச்­சத்­தில்? சூரிய வெளிச்­சத்­தில்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­படி தலை­வர் கலை­ஞர் சொன்­ன­ப­டியே கலர் டிவி­யும், கேஸ் அடுப்­பும் கொடுத்­தாரோ! அவ­ரது மக­னான நானும், சொன்­ன­ப­டியே இல்­லத்­த­ரசி திட்­டத்தை நிறை­வேற்­று­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்­சம் சகோ­த­ரி­க­ளுக்கு வங்­கிக் கணக்­கில் வந்து கொண்­டி­ருக்­கி­றது. கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, இனி எவ்­வ­ளவு ஆகப் போகி­றது தெரி­யுமா? திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் மாதம் 2 ஆயி­ரம் ரூபாய் உரி­மைத்­தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அனை­வ­ருக்­கு­மான திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உரி­மைத்­தொகை மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப் புதல்­வன் உத­வித்­தொ­கை­யும் ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, முதி­யோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஆத­ர­வற்ற பெண்­கள் என அனைத்து உத­வித்­தொ­கை­க­ளும் இனி இரண்டு மடங்­காக உயர்த்தி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன்­பி­டித் தடைக்­கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 12 ஆயி­ரம் ரூபா­யா­க­வும், மீன்­பிடி குறை­வுக் கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 9 ஆயி­ரம் ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கப்­ப­டும். மீன­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">20 இலட்­சத்­திற்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், நவீன மின்­சார பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு இருக்­கும் மக­ளிர் அனை­வ­ரும் டவுன் பஸ்­ஸில் கட்­ட­ண­மில்­லா­மல் பய­ணிக்­கி­றீர்­கள் அல்­லவா... காய்­கறி, பூ, பழம், மீன் விற்­பனை செய்­யும் மக­ளிர் அனை­வ­ருக்­கும் விடி­யல் பய­ணம் திட்­டம் உப­யோ­க­மாக இருக்­கி­றதா? இல்­லையா...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பை வலி­மைப்­ப­டுத்தி, அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும். மகிழ்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புய­லால் பாதிக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நாகைக்கு புதிய திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, உயர்­கல்வி முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில், நான் முதல்­வன் 2.0 திட்­டத்­தில் 6 மாதத்­திற்கு ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யு­டன் பயிற்சி வழங்­கப் போகி­றோம். குறிப்­பாக, நாகை பகு­தி­யைச் சேர்ந்த ஒரு இலட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு உண­வுப் பதப்­ப­டுத்­து­தல் பிரி­வில் திறன் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் குடி­சைப் பகு­தி­கள் அதி­கம் இருக்­கும் மாவட்­டம். புய­லால் அடிக்­கடி பாதிக்­கப்­பட்டு வீட்டு கூரையை மாற்ற நீங்­கள் படும் கஷ்­ட­மெல்­லாம் எனக்­கும் தெரி­யும். இந்த நிலை மாற, குடி­சை­களே இல்­லாத தமிழ்­நாடு என்ற தலை­வர் கலை­ஞ­ரின் கனவு நன­வாக, கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக, வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் துறை­மு­கம், உல­கத் தரத்­தில் மேம்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னத்­தில் ஆப­ர­ணத் தயா­ரிப்பு குழு­ம­மும், மயி­லா­டு­து­றை­யில் அட்­டைப்­பெட்டி தயா­ரிப்பு குழு­ம­மும் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை எல்­லாம் போக, நம்­மு­டைய டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கா­கவே ஒரு ஸ்பெஷல் மாஸ்­டர் பிளான் போட்­டி­ருக்­கி­றோம். அது என்ன என்­றால், 2030–ஆம் ஆண்­டுக்­குள், தொழில் முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க விரை­வுச் சாலை­கள், திருச்­சி­யில் ஏற்­று­ம­திக்கு தேவை­யான உலர் துறை­மு­கக் கட்­ட­மைப்பு, தூய்மை காவி­ரித் திட்­டம்–2030 செய­லாக்­கம், ஒருங்­கி­ணைந்த சுற்­றுலா மேலாண்­மைத் திட்­டங்­கள், வேளாண்­மைக்­கான நீரா­தார உட்­கட்­ட­மைப்பு தீவிர மேம்­பாடு, கடல்­சார் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான திட்­டங்­கள் போன்­ற­வற்றை நிறை­வேற்ற டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம் செயல்­ப­டுத்­தப் போகி­றோம். இப்­போது சொல்­லுங்­கள்... இந்த ஆட்சி தொடர வேண்­டுமா? இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளுக்­காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">துணிச்­ச­லு­டன் குரல் கொடுத்­தி­ருக்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்கு என்ன செய்­தி­ருக்­கி­றோம் என்று சொல்லி, இனி செய்­யப் போவதை சொல்லி வாக்கு கேட்­டால், அது நம்­மு­டைய திரா­விட மாடல்! அவ­தூ­று­களை மட்­டுமே பேசி, பொய்யை மட்­டுமே சொன்­னால், அது அடிமை பழ­னி­சாமி மாடல்! சாத­னை­யோடு, தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளுக்­காக துணிச்­ச­லு­டன் குரல் கொடுக்­கும் ஸ்டாலின் ஆட்சி வேண்­டுமா? இல்லை, டெல்­லிக்கு அடிமை சேவ­கம் செய்­யும் பழ­னி­சாமி ஆட்சி வேண்­டுமா? சத்­த­மாக! திரா­விட மாடல் ஆட்சி. டெல்லி வரை கேட்க வேண்­டும்! நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் போரா­டு­வது, ஏதோ, தனிப்­பட்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, இதோ மேடை­யில் இருக்­கி­றார்­களே நம்­மு­டைய கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக! மீண்­டும் சொல்­கி­றேன்… மறந்­து­வி­டா­தீர்­கள். தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, நம்­மு­டைய தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யைத்­தான் நீங்­கள் அனை­வ­ரும் ஆத­ரிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சொன்­னதை செய்­யும் கலை­ஞ­ரின் மக­னாக கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பூம்­பு­கார் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நிவேதா முரு­க­னுக்­கும் – சீர்­காழி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த அண்­ணன் வைகோ­வின் ஆத­ரவு பெற்ற செந்­தில் செல்­வ­னுக்­கும் – வேதா­ரண்­யம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மா.மீ. புக­ழேந்­திக்­கும் – நாகப்­பட்­டி­னம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மனித நேய மக்­கள் கட்­சி­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜவா­ஹி­ருல்லா அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நாடு வளம்­பெற மீண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நல்­லாட்சி மலர வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, மயி­லா­டு­துறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், காங்­கி­ரஸ் கட்சி வேட்­பா­ளர் ஒய்.என். ஜமால் முக­மது யூனுஸ் அவர்­க­ளுக்கு கை சின்­னத்­தி­லும், கீழ்­வே­ளூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த லதா தங்­க­மணி அவர்­க­ளுக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தி­லும் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான சிறப்­பான ஆட்­சியை வழங்­கு­வோம். நாடு வளம் பெற – இந்த நல்­லாட்­சியே தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்றி, வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>