<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 03:35:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10042026-CBE-12" position.sequence="12" ex-ref="10042026-CBE-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">கொடுஞ்சிறைக்கு அஞ்சாதவனா கொரோனாவுக்கு அஞ்சப் போகிறேன்?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">விழுப்புரத்தில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">11–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup312582_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup311919_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="3_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="cmvistt_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­ணன் சேலத்­துச் சிங்­கம் வீர­பாண்­டி­யர் அவர்­கள் மூல­மாக, பெரி­ய­வர் அய்யா மருத்­து­வர் ராம­தாசு அவர்­களை, தன்­னு­டைய வீட்­டிற்கே அழைத்து, விவா­தித்து, ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்த 43–ஆவது நாளி­லேயே மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்­கான, 20 விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்டை உரு­வாக்­கிக் கொடுத்த வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க முடிவை அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் எடுத்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு கல்­வி­யில், வேலை­வாய்ப்­பில், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்­துப் பிள்­ளை­கள் படித்து, வேலைக்­குச் சென்று முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதற்கு, கலை­ஞர் கொடுத்த இட­ஒ­துக்­கீ­டு­தான் மிக­மிக முக்­கி­யக் கார­ண­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்கு 30 விழுக்­காடு – மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்கு 20 விழுக்­காடு – ஆதி திரா­வி­டர்­க­ளுக்கு ஏற்­க­னவே இருந்த 16 விழுக்­காட்டை உயர்த்தி 18 விழுக்­காடு – பழங்­கு­டி­யி­ன­ருக்கு ஒரு விழுக்­காடு என்று சமூ­க­நீதி வர­லாற்­றில், 69 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கலை­ஞர் செய்த பெரு­மை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமூ­க­நீ­தியை நிலை­நி­றுத்­திய இயக்­கம் மட்­டு­மல்ல; சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளைப் போற்­றும் இயக்­க­மும் தி.மு.க.தான்! உயிர்த் தியா­கம் செய்த 21 பேர் குடும்­பத்­திற்கு மூன்று லட்­சம் ரூபாய் கரு­ணைத் தொகை­யும் – மாதம்­தோ­றும் பென்­ஷ­னும் வழங்­கி­ய­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள். இன்­றைக்­கும் அந்­தக் குடும்­பங்­கள் மாதம் 3 ஆயி­ரம் ரூபாய் பெற்று வரு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு சமூ­க­நீ­திப் போரா­ளி­கள் என்ற பட்­ட­மும் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போது சாலை­ம­றி­ய­லில் கைதான 2 லட்­சம் பேர் மீதான வழக்­கு­கள் திரும்­பப் பெறப்­பட்­டது. அது­மட்­டு­மல்ல, குண்­டர் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் கைது செய்­யப்­பட்ட வன்­னி­யர் சங்க நிர்­வா­கி­க­ளான பு.தா. அருள்­மொழி அவர்­கள், பு.தா. இளங்­கோ­வன் அவர்­கள், வாழைச் செல்­வன் அவர்­கள், ஆரணி ராசேந்­தி­ரன் அவர்­கள், தாரா­சிங் அவர்­கள் ஆகிய 5 பேர் மீதான வழக்­கும் திரும்­பப் பெறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு. வாழப்­பாடி ராம­மூர்த்தி அவர்­க­ளும், வன்­னிய அடி­க­ளார், வன்­னி­யர் கூட்­ட­மைப்­பின் நிறு­வ­னத் தலை­வர் சி.என். ராம­மூர்த்தி ஆகி­யோர் முத­ல­மைச்­சர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளைச் சந்­தித்து, மரி­யா­தைக்­கு­ரிய எஸ்.எஸ். ராம­சா­மிப் படை­யாச்­சி­யார் அவர்­க­ளுக்கு சென்­னை­யில் ஒரு மையப் பகு­தி­யில் சிலை வைக்க வேண்­டும் என்று கோரிக்கை வைத்­த­போது, அன்­றைக்கு நான் சென்னை மாந­க­ரத்­தின் மேய­ராக இருந்­தேன். தலை­வர் கலை­ஞர் அவர்­கள், அவர்­க­ளை­யெல்­லாம் என்­னி­டத்­தில் அனுப்பி வைத்­தார்­கள். சென்­னை­யில் மூன்று இடங்­க­ளைக் குறிப்­பிட்டு, அவர்­கள் என்­னி­டம் கொடுத்­தார்­கள். இறு­தி­யாக, சென்னை ஹால்டா சந்­திப்­பில் ராம­சாமி படை­யாச்­சி­யா­ருக்கு சிலை அமைக்­கப்­பட்­டது. முத­ல­மைச்­சர் கலை­ஞ­ரும் – நானும் அந்த விழா­வில் கலந்து கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தியா­கத்­தால் பய­ன­டைந்து துரோ­கி­யாக மாறி­ய­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வன்­னி­யர் பொதுச்­சொத்து வாரி­யம் அமைக்க வேண்­டும் என்று வன்­னி­யர் சமூ­கத்­தின் தலை­வர்­கள், அன்­றைக்கு முத­ல­மைச்­சர் கலை­ஞ­ரி­டம் கோரிக்கை வைத்­தார்­கள். 2009–ஆம் ஆண்டு அதற்­கான ஆணை பிறப்­பித்­த­தும் கழக அர­சு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன் தொடர்ச்­சி­யா­கத்­தான், 21 சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளுக்கு மணி­மண்­ட­பம் கட்டி நான் திறந்து வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு அந்­தத் தியா­கத்­தால் பய­ன­டைந்த சிலர், எப்­ப­டி­யெல்­லாம் துரோ­கி­க­ளாக மாறி­யி­ருக்­கி­றார்­கள் என்று உங்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும்! மருத்­து­வர் அய்யா ராம­தாசு அவர்­க­ளுக்கு, இன்­றைக்கு பலர் நம்­பிக்கை துரோ­கம் செய்­தி­ருக்­க­லாம்; ஆனால், தலை­வர் கலை­ஞ­ரும் – நானும் – திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், அவரை என்­றைக்­கும் சமூ­க­நீதி போரா­ளி­யா­கத்­தான் பார்க்­கி­றோம்; மதிக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று N.D.A. என்ற பெய­ரில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் கூட்­டணி என்­பதே, துரோ­கி­க­ளால் – தமிழ்­நாட்­டிற்கு புதிய துரோ­கங்­கள் செய்ய அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் கூட்­டணி! இவர்­க­ளின் துரோ­கப் பட்­டி­யலை நீங்­கள் பார்த்­தீர்­கள் என்­றால் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘நீட்’ டை அனு­ம­தித்­து துரோ­கம் செய்த 
அ.தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் துரோ­கம் – தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் உயிர்­களை பலி­வாங்­கி­யி­ருக்­கும் நீட் தேர்வை அனு­ம­தித்­தார்­கள். அடுத்து, அந்த நீட் தேர்­விற்கு எதி­ராக சட்­டம் இயற்­று­வ­தாக நாட­க­மா­டி­விட்டு, அந்­தச் சட்­ட­ம­சோ­தாவை ஓன­ராக இருக்­கும் பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்­பி­ய­தையே, சட்­ட­மன்­றத்­தில் சொல்­லா­மல் ஓராண்டு காலம் மறைத்­தார்­கள். மாண­வர்­க­ளுக்கு துரோ­கம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, மின் கட்­டண உயர்­வுக்கு கார­ண­மாக இருக்­கும் உதய் மின் திட்­டத்­தில் கையெ­ழுத்து போட்­டும், அதே­போல், மூன்று வேளாண் சட்­டங்­களை ஆத­ரித்­தும் – போரா­டிய விவ­சா­யி­களை கொச்­சைப்­ப­டுத்­தி­யும், விவ­சா­யி­க­ளுக்கு துரோ­கம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யால், எப்­படி உங்­கள் சுருக்­குப் பையில் இருக்­கும் பணத்தை பறித்­தார்­களோ, அதே­போன்று, நூறு நாள் வேலைத்­திட்­டத்தை நாசப்­ப­டுத்தி, உங்­க­ளின் தின­சரி வாழ்­வா­தா­ரத்­திற்கு துரோ­கம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, இன்­றைக்கு நாமெல்­லாம், “கீழடி தமி­ழர் தாய்­மடி” என்று பெரு­மை­யா­கச் சொல்­கி­றோம். அந்­தக் கீழடி ஆய்­வு­க­ளை­யெல்­லாம் குழி தோண்டி புதைக்­கப் பார்த்து, தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம், வக்பு திருத்­தச் சட்­டம் கொண்டு வந்து, இசு­லா­மிய மக்­க­ளுக்கு துரோ­கம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிறிஸ்­த­வர்­க­ளுக்கு செய்­துள்ள துரோ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது, F.C.R.A. சட்­டம் கொண்­டு­வந்து, சொத்­து­களை அப­க­ரித்து, கிறிஸ்­த­வச் சமு­தாய மக்­க­ளுக்கு, துரோ­கம் செய்­யத் துடிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திக்­கும் – சமஸ்­கி­ரு­தத்­திற்­கும் மட்­டுமே அதிக நிதி ஒதுக்கி அன்­னைத் தமி­ழுக்கு துரோ­கம் செய்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மும்­மொ­ழிக் கொள்­கை­யைத் திணித்­தும் – அதை ஆத­ரித்­தும் – ஐம்­பது ஆண்­டு­க­ளாக, தமிழ்­நாட்­டைப் பாது­காக்­கும் இரு­மொ­ழிக் கொள்­கைக்கு துரோ­கம் செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மெட்ரோ ரயில் திட்­டம் – கல்வி நிதி உள்­ளிட்­ட­வற்றை தடுத்து, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு துரோ­கம் செய்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­தான் – N.D.A. கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துரோ­கங்­க­ளால், தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைக் கெடுக்க நினைக்­கும் N.D.A… N.D.A. என்­றால், உங்­க­ளுக்கு புரி­வ­து­போன்று ஈசி­யாக சொல்­கி­றேன். No Development Alliance–தான்... N – No; D–Development. A – Alliance. அது­தான் தற்­போது N.D.A.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு துரோ­கங்­க­ளை­யும் செய்­து­விட்டு, கூச்­சமே இல்­லா­மல், மக்­க­ளி­டம் வாக்கு கேட்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. பா.ஜ.க.வின் சதித்­திட்­டத்தை முறி­ய­டிப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்­க­ளின் சதித் திட்­டத்தை முறி­ய­டித்து, தமிழ்­நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் அழைத்­துக் கொண்டு செல்ல வேண்­டும் என்­று­தான், நாம் சூப்­பர்ஸ்­டாரை களத்­தில் இறக்­கி­யி­ருக்­கி­றோம்! 2026 தேர்­த­லின் சூப்­பர்ஸ்­டார் யார்? தேர்­தல் அறிக்கை… சூப்­பர்ஸ்­டார் யார்? “சூப்­பர்ஸ்­டார் யாருனு கேட்டா… சின்­னக் குழந்­தை­யும் சொல்­லும்” தேர்­தல் அறிக்கை என்று சொல்­லும், அது­தான்..! நான் பிர­சா­ரத்­திற்­குக் கிளம்­பு­வ­தற்கு முன்பே, நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டார் நமக்­கா­கப் பிர­சா­ரத்தை தொடங்­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்­றாக கவ­னி­யுங்­கள்… வாக்கு எண்­ணப்­ப­டும் மே 4 – அந்த நாளை கல்­யாண நாள் என்று சொல்­கி­றார்­கள். நான் தேர்­தல் அறிக்கை வெளி­யிட்ட நாள்­தான், நம் வெற்­றிக்கு நிச்­ச­ய­தார்த்த நாள்! அப்­ப­டிப்­பட்ட அறி­விப்­பு­கள் இந்­தத் தேர்­தல் அறிக்­கை­யில் நிறைய இருக்­கி­றது. அதில் இருக்­கும் டாப் அறி­விப்­பு­களை மட்­டும் இப்­போது சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது என்ன? இல்­லத்­த­ரசி திட்­டம்! ஃபர்ஸ்ட் பாலே சிக்­சர்­தான்! இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்… இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை, புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம், இல்­லை­யென்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புதிய பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம். உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்–ஐ வாங்­கிக் கொள்­ள­லாம். என்­னென்ன? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­வேவ் அவன், மின் அடுப்பு இதை­யெல்­லாம் வாங்­கு­வ­தற்கு இப்­போதே பெண்­கள் எல்­லாம் திட்­டம் போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். என்ன வாங்­க­லாம் என்று இப்­போதே பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் உங்­க­ளின் கண­வர் உள்­ளிட்ட யாரை­யும் குறுக்­கிட விட்­டு­வி­டா­தீர்­கள்… நீங்­கள் உங்­கள் இஷ்­டத்­திற்கு வாங்­குங்­கள். உங்­கள் சாய்ஸ் அது…  அவர்­கள் எடுக்­கட்­டும் என்று விட்­டு­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெண்­க­ளுக்­கான சிறப்­புத் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் புடவை வாங்­கு­வ­தற்கு கடைக்­குச் செல்­கி­றீர்­கள் அல்­லவா… ஒரு புட­வை­தானே வாங்­கப் போகி­றீர்­கள். ஆனால், அந்­தக் கடை­க­ளில் உள்ள எல்­லாப் புட­வை­க­ளை­யும் ஷோகேஸ்–­இல் இருந்து எடுத்து கீழே போட சொல்லி, ஒவ்­வொன்­றாக பிரித்­துப் பார்த்து, தொட்­டுப் பார்த்து, தட­விப் பார்த்து, ஒரு புட­வையை வாங்க 250 புட­வையை கீழே போடு­வார்­கள் அவர்­கள். ஒவ்­வொன்­றாக கேள்­வி­க­ளைக் கேட்­பீர்­கள். சில்க்கா? நைலக்சா? காட்­டனா? தண்­ணீ­ரில் போட்­டால் சுருங்­குமா?  சாயம் போகுமா?  இவ்­வ­ளவு கேள்வி… ஒரு புடவை வாங்க…  அவர்­கள் கடை­யில் இருக்­கும் லைட்டை எல்­லாம் நம்­ப­மாட்­டீர்­கள் நீங்­கள். என்ன செய்­வீர்­கள்? அந்­தப் புட­வையை எடுத்­துக் கொண்டு வெளியே சென்று வெயி­லில் சூரிய வெளிச்­சத்­தில் பார்ப்­பீர்­கள். இதெல்­லாம் உனக்கு எப்­படி அனு­ப­வம் என்று என்னை கேட்­டு­வி­டா­தீர்­கள். எதார்த்த நிலை­யைச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னைப் பொருத்­த­வரை, நம்­மு­டைய குடும்ப தலை­வி­க­ளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்­டும். அதற்­கா­க­தான் இந்­தத் திட்­டமே…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­படி தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சொன்­ன­ப­டியே கலர் டிவி­யும், கேஸ் அடுப்­பும் கொடுத்­தாரே! அவ­ரு­டைய மக­னான நானும், சொன்­ன­ப­டியே இல்­லத்­த­ரசி திட்­டத்தை நிறை­வேற்­று­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்ல, தேர்­தல் அறிக்­கை­யில் மற்ற வாக்­கு­று­தி­க­ளை­யும் இன்­னும் விரி­வாக சொல்­லி­யி­ருக்­கி­றோம். இது அனைத்­தை­யும் செய்­வோம் என்ற நம்­பிக்கை, எனக்கு மட்­டு­மல்ல; ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் இருக்­கி­றது. ஏனெ­னில், சொன்­ன­தைச் செய்த கலை­ஞ­ரின் மகன் நான்! சொன்­னதை மட்­டு­மல்ல, சொல்­லா­த­தை­யும் அதி­ர­டி­யாக செய்­யும் ஸ்டாலின் நான்! செய்­தேன் அல்­லவா அதி­ர­டி­யாக... இந்­தி­யாவே திரும்­பிப் பார்ப்­பது மாதி­ரி­யான கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­திட்­டத்­தில், காலை­யில் 5 மணிக்கே 5 ஆயி­ரம் ரூபாய் போட்­டு­விட்­டோம். எல்­லோ­ருக்­கும் இன்ப அதிர்ச்சி…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விடி­யல் பய­ணம், நான் முதல்­வன், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இன்­னு­யிர் காப்­போம், நம்­மைக் காக்­கும் 48, புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் என ஏரா­ள­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆய்வு நடத்­தி­யுள்­ளேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில், கோட்­டை­யில் இருந்து மட்­டும்­தான், வேலை செய்ய வேண்­டும்; ஆட்சி செய்ய வேண்­டும் என்று இல்லை. மக்­க­ளு­டன் மக்­க­ளாக – உங்­க­ளில் ஒரு­வ­னாக ஆட்சி செய்­ப­வன். மாவட்ட அள­வில் அரசு நிகழ்ச்­சி­க­ளுக்கு வந்­தால்­கூட, நிகழ்ச்­சிக்கு வந்­தோம், நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னோம், கிளம்­பி­னோம் என்று இருக்க மாட்­டேன். மாவட்ட கலெக்­டர் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் உடன் ரிவியூ மீட்­டிங் போடு­வேன். அந்த மாவட்­டத்­தில் இருக்­கும் இடங்­க­ளுக்கு சர்­பி­ரை­ஸாக ஆய்­வுக்­குச் செல்­வேன். அவர்­க­ளுக்கே தெரி­யாது. திடீர் திடீர் என்று செல்­வேன். உடன் இருக்­கும் எங்­கள் எம்.எல்.ஏ.க்களுக்கே தெரி­யாது. அமைச்­சர்­க­ளுக்கே புரி­யாது. அங்கே ஏதா­வது குறை இருந்­தால் அதைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய விழுப்­பு­ரத்­தில்­கூட, ஒலக்­கூர் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் ஆய்வு மேற்­கொண்­டதை மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள். இப்­படி ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­கும், ஒவ்­வொரு கிரா­மத்­திற்­கும் செல்­வ­தால்­தான், அந்­தந்த ஊர்­க­ளுக்கு தேவை என்ன என்­பதை கவ­னித்து, செய்து கொடுக்க முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, நான் ஒவ்­வொரு மேடை­யி­லும் – ஒவ்­வொரு ஊரி­லும் நம்­மு­டைய சாத­னைத் திட்­டங்­களை பட்­டி­ய­லிட்­டுச் சொல்­கி­றேன் அல்­லவா... இது­போன்று, பழ­னி­சா­மி­யால் லிஸ்ட் போட முடி­யுமா? சொல்­வ­தற்கு உண்­மை­கள் இல்­லாத கார­ணத்­தி­னால், பொய்­களை வாந்தி எடுத்­துக் கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அம்மா பல்­க­லைக்­க­ழ­கம் உள்­ளிட்ட திட்­டங்­களை தடுத்­து­விட்­டோம் என்று பொய்­க­ளைக் கட்­ட­விழ்த்­து­விட்­டுப் போயி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021–ல் தேர்­தல் அறி­வித்த நாள் அன்­று­தான், அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்தை அவ­ச­ரம் அவ­ச­ர­மாக அறி­வித்து, வெறும் பத்­துக்கு நான்கு அள­வில் அறி­விப்பு பலகை வைத்­து­விட்­டுச் சென்­றார்­கள். அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் உரு­வாக நிதி ஒதுக்­கி­னார்­களா? இல்­லையே! நாங்­கள்­தான், மாண­வர்­கள் பாதிக்­கப்­ப­டக் கூடாது என்று அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான மாண­வர்­களை, புகழ்­பெற்ற அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைத்து, படிப்­பைத் தொடர வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திண்­டி­வ­னத்­தில் தொடங்­கிய அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, விழுப்­பு­ரத்தை அடுத்த கா.குப்­பம் மற்­றும் திண்­டி­வ­னத்­தில் அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கீழ் அண்ணா அரசு பொறி­யி­யல் கல்­லூரி தொடங்­கப்­பட்டு, மாண­வர்­கள் இன்­றைக்கு படித்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, ஒவ்­வொரு தொகு­திக்­கும் ஒரு கலைக் கல்­லூரி என, திரு­வெண்­ணெய்­நல்­லூர், திருக்­கோ­வி­லூர், செஞ்சி, விக்­கி­ர­வாண்டி தொகுதி அன்­னி­யூ­ரில் புதி­தா­கக் கலைக் கல்­லூரி தொடங்­கப்­பட்டு, ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­மப்­புற மாண­வர்­கள் படித்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­களே... சாத­னைக்கு மட்­டு­மல்ல; உங்­க­ளு­டைய ஒவ்­வொரு பொய்க்­கும் என்­னால் புள்­ளி­வி­வ­ரங்­க­ளோடு பதி­லடி தர முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தோல்வி பயத்­தில் பழ­னி­சாமி தினம் தரா­த­ரம் இல்­லா­மல் தரங்­கெட்டு பேசு­கி­றார்.  இன்­றைக்கு மாலை சென்­னை­யில் என்­னைப் பற்றி என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார் தெரி­யுமா? தி.மு.க. ஆட்­சி­யில் கொரோனா வந்­தி­ருந்­தால், இவரே போயி­ருப்­பார் என்று என்னை பேசி­யி­ருக்­கி­றார். பழ­னி­சாமி அவர்­களே... என் மர­ணத்தை பற்றி பேசு­கி­றீர்­களே... மர­ணத்­தைப் பார்த்து கலங்­கக் கூடி­ய­வனோ, பயப்­ப­டு­கி­ற­வனோ நான் அல்ல. இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின், 1976–இல் நீங்­கள் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு முன்பே, 23 வய­தில் மிசா­வில்  கைது செய்­யப்­பட்டு சிறைக் கொடு­மைக்கு ஆளா­ன­வன் நான். ஓராண்டு காலம் நெஞ்­சு­ரத்­தோடு சிறை­யில் இருந்­த­வன் நான். பொது­வாழ்க்­கை­யில் எல்­லா­வற்­றை­யும் எதிர்­கொண்­டு­தான் ஆக வேண்­டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்­த­வர் என்­னு­டைய ஆரு­யிர் தலை­வர் என்­னு­டைய தந்தை கலை­ஞர் அவர்­கள். கொடுஞ்­சி­றை­யின் கொடு­மைக்கே பயப்­ப­டா­த­வன் நான், இந்­தக் கொரோ­னா­வுக்கா பயப்­ப­டப் போகி­றேன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">யாரி­ட­மும் சொல்­லா­மல் துணிச்­ச­லாக கொரோனா வார்­டுக்­குள் சென்­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொரோனா மேல் அனை­வ­ரும் பெரும் அச்­சத்­தில் இருந்­த­போதே, அதற்­கான PPE உடை அணிந்து கொண்டு கொரோனா வார்­டுக்­குள் சென்­ற­வன்­தான் இந்த ஸ்டாலின். இது­வரை யாருக்­கும் சொல்­லா­ததை இப்­போது சொல்­கி­றேன்… இவ்­வாறு நான் கொரோனா வார்­டுக்­குள் செல்­லப் போகி­றேன் என்று யாரி­ட­மும் நான் சொல்­ல­வில்லை. கலெக்­டர், அமைச்­சர்­கள், எல்.எல்.ஏ.க்கள், என் உத­வி­யா­ளர்­கள் என்று அனை­வ­ரும் இருந்­தார்­கள். ஆனால் யாரி­ட­மும் நான் சொல்­ல­வில்லை. இப்­படி நான் சொல்­லா­மல் சென்ற கார­ணத்­தி­னால், என் மனைவி துர்­கா­வதி என்­னி­டம் கோபித்­துக் கொண்டு ஒரு வாரம் பேசா­மல் இருந்­தார். இது சத்­தி­யம்... மக்­க­ளைக் காக்க எந்­த­ள­வுக்­கும் துணிச்­ச­லாக செல்­லக்­கூ­டி­ய­வன். அதற்­கெல்­லாம் பயந்து அர­சி­யல் தலை­வ­ராக நான் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மி­யின் கீழ்த்­த­ர­மான பேச்­சைக் கேட்ட பிறகு, என்­னு­டைய வருத்­தம் எல்­லாம் என்ன தெரி­யுமா? தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர், மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்., இன­மா­னப் பேரா­சி­ரி­யர் என்று எத்­த­னையோ பண்­பா­டு­மிக்க பெருந்­த­லை­வர்­க­ளி­டம் நேரில் பழ­கக்­கூ­டிய நீண்ட அர­சி­யல் அனு­ப­வம் கொண்ட நான், இன்று இவ­ருக்­கெல்­லாம் பதில் சொல்­லும் நிலை இருக்­கி­றதே என்று உண்­மை­யி­லேயே வருத்­தப்­ப­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. பொதுச் செய­லா­ள­ரான பின்பு பழ­னி­சாமி வென்­றதே இல்லை. தி.மு.க. தலை­வ­ரான பின் உங்­கள் ஆத­ர­வால் நான் தோற்­றதே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. எனும் பேர­ழிவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. எனும் பேர­ழிவை தமிழ்­நாட்­டிற்­குள் கொண்­டு­வர நினைக்­கும் அடிமை பழ­னி­சா­மிக்கு, தமிழ்­நாட்டு மக்­கள் கடு­மை­யான தண்­ட­னையை இந்­தத் தேர்­த­லில் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யில், நடக்­கும் தேர்­தல் என்­பது, டெல்­லிக்­கும் – தமிழ்­நாட்­டுக்­கும் நடக்­கும் தேர்­தல். தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம் செய்­யும் பத்து தோல்வி பழ­னி­சா­மிக்கு, பதி­னோ­ரா­வது தோல்­வியை கொடுத்து விரட்ட வேண்­டும். டபுள் எஞ்­சின், டப்பா எஞ்­சின் என்று சொல்­லிக் கொண்டு, டெல்­லி­யின் ரிமோட் கண்ட்­ரோ­லுக்கு ஆடும் அடி­மை­கள் தமிழ்­நாட்டை ஆளக் கூடாது! தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்த நினைக்­கும் ஆணவ பா.ஜ.க.வும், அடிமை அ.தி.மு.க.வும் வேரோ­டும் வேரடி மண்­ணோ­டும் வீழ்த்­தப்­பட வேண்­டும். அதற்கு, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரின் மக­னாக கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய, விழுப்­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் டாக்­டர் லட்­சு­ம­ணன் அவர்­க­ளுக்­கும், திருக்­கோ­வி­லூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் டாக்­டர் பொன். கெள­தம சிகா­மணி அவர்­க­ளுக்­கும், செஞ்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் செஞ்சி மஸ்­தான் அவர்­க­ளுக்­கும், விக்­கி­ர­வாண்டி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் அன்­னி­யூர் சிவா அவர்­க­ளுக்­கும், வானூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கெள­தம் திரா­விட மணி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சாத­னை­க­ளால் சிறக்­கும் தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே போன்று, மயி­லம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது தோழ­மைக் கட்­சி­யான தே.மு.தி.க.–வின் வெல்­லும் வேட்­பா­ளர், நினை­வில் வாழும் அருமை நண்­பர் கேப்­டன் அவர்­க­ளின் அன்­பைப் பெற்ற எல். வெங்­க­டே­சன் அவர்­க­ளுக்கு ‘முரசு’ சின்­னத்­தில் நீங்­கள் ஆத­ரித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திண்­டி­வ­னம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது தோழமை இயக்­க­மாம் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த, எழுச்­சித் தமி­ழர், கலை­ஞ­ரால் மேஜர் ஜென­ரல் என்று அழைக்­கப்­பட்ட திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளின் அன்­பைப் பெற்ற வெல்­லும் வேட்­பா­ளர் வன்னி அரசு அவர்­க­ளுக்கு, ‘பானை’ சின்­னத்­தில் நீங்­கள் உங்­க­ளு­டைய பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­க­ளின் ஒட்­டு­மொத்த விருப்­ப­மாக அமை­ய­வுள்ள திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் சாத­னை­க­ளால் சிறக்­கும் தமிழ்­நாடு! தலை­நி­மிர்ந்த தமிழ்­நாடு உரு­வா­கும்! அதற்கு உங்­க­ளு­டைய இந்த ஸ்டாலின் கேரண்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு மென்­மே­லும் வளர்ந்­திட, திரா­விட மாடல் நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>