<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,376,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 03:48:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10042026-MDU-02" position.sequence="02" ex-ref="10042026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">சிறுபான்மையினரை அச்சுறுத்தும் சட்டம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup543394_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17.5">ஏ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ற்­க­னவே வக்ஃப் சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வந்து இசு­லா­மி­யர் 
சொத்­து­களை அடித்­துப் பறிப்­பது  போல் இப்­போது கிறிஸ்­த­வர்­க­ளின் 
சொத்­து­க­ளைப் பறிக்க, “வெளி­நாட்டு நிதிப் பங்­க­ளிப்பு ஒழுங்­கு­முறை சட்­டத் திருத்­தச் சட்­டம் ( FCRA )”  என்ற சட்­டத்தை ஒன்­றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காஷ்­மீர் சிறப்­புத் தகு­தி­யைப் பறிப்­பது, குடி­யு­ரி­மைச் சட்­டம் கொண்டு வரு­வது, பொது சிவில் சட்­டம் கொண்டு வரு­வது, வக்ஃப் சொத்­து­க­ளைப் பறிப்­பது போன்­ற­வை­தான் பா.ஜ.க.வுக்கு விருப்­ப­மா­னவை ஆகும். மற்ற எதைப் பற்­றி­யும் இவ்­வ­ளவு ஆர்­வ­மா­கச் செய்­வது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வெளி­நாடு  ஒழுங்­கு­முறை நிதி உதவி திருத்­தச் சட்­ட­மா­னது தொண்டு நிறு­வ­னங்­க­ளைக் குறி­வைத்து  கொண்டு வரப்­பட்­டுள்­ளது.  ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­தி­ன­ரைக் குறி­வைத்து இந்த மசோதா உள்­ளது. இத­னால் தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வரும் நிதி குறை­யும். இனி இது போன்ற நிறு­வ­னம் தொடங்­கு­வ­தும் சிக்­க­லா­னது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வெளி­நாட்டு நிதி உதவி பெறும் தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும், முறை­கே­டு­க­ளைத் தடுக்­க­வும் இத­னைக் கொண்டு வரு­வ­தா­கச் சொல்­கி­றார்­கள். ஆனால் அவர்­க­ளது உண்­மை­யான நோக்­கம், தொண்டு நிறு­வ­னங்­க­ளையே முடக்­கு­வது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அனு­மதி பெறா­மல் நடத்­தி­னாலோ, அனு­ம­தி­யைப் புதுப்­பிக்­க­வில்லை என்­றாலோ வெளி­நாட்டு நிதி உதவி பெறும் கட்­ட­டங்­கள் இனி அர­சுக்­குச் சேரும் என்று இந்­தச் சட்­டத்­தில் சொல்லி இருக்­கி­றார்­கள். தொண்டு நிறு­வ­னங்­க­ளின் உரி­மம் எந்த நேரத்­தி­லும் ஒன்­றிய அர­சால் திரும்ப எடுத்­துக் கொள்­ளப்­பட முடி­யும். இதன் மூலம், தொண்டு நிறு­வ­னங்­கள் நடத்­தி­வ­ரும் பள்ளி, கல்­லூரி, மருத்­து­வ­மனை என எது­வாக இருந்­தா­லும் “உரி­மம் இல்லை” எனக் கூறி அதனை அரசே எடுத்து கொள்ள முடி­யும். இது போன்ற  தொண்டு நிறு­வ­னங்­களை சிறு­பான்மை  கிறிஸ்­த­வர்­கள் நடத்தி வரு­கி­றார்­கள். அத­னால் எப்­போது வேண்­டு­மா­லும் அவர்­கள் வைத்­துள்ள உரி­மத்தை ரத்து செய்ய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மதச்­சி­று­பான்மை அமைப்­பு­கள், கிறிஸ்­த­வத் தொண்டு நிறு­வ­னங்­கள், தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றைக் குறி­வைத்து மட்­டுமே இச்­சட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. பா.ஜ.க.வின் உண்­மை­யான நோக்­கம், இவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘’இந்த நிதியை வைத்து கட்­டாய மத­மாற்­றம் செய்­கி­றார்­கள்” என்ற குற்­றச்­சாட்டை ஒன்­றிய உள்­துறை இணை அமைச்­சர் நித்­யா­னந்த் ராய் சொல்லி இருக்­கி­றார். உள்­துறை அமைச்­சர் பொத்­தாம் பொது­வா­கப் பேசக் கூடாது. அப்­படி நடந்­தி­ருந்­தால், அவ­ரது உள்­து­றையை வைத்து கண்­கா­ணித்­தாரா? அப்­படி எங்கு நடந்­துள்­ளது, எவ்­வ­ளவு நடந்­துள்­ளது என்று பட்­டி­ய­லிட்­டுச் சொல்லி இருக்­கி­றாரா என்­றால் இல்லை. வாய்க்கு வந்­த­படி பா.ஜ.க. பாணி பொய்யை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளார் ஒன்­றிய அமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது ஏதோ கிறிஸ்­தவ சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரா­னது  மட்­டு­மல்ல. இது போன்ற வாய்ப்­பு­க­ளின் கார­ண­மாக உத­வி­க­ளைப் பெறும் மக்­கள் அனை­வ­ருக்­கும் இது எதி­ரா­னது ஆகும். அனைத்து மக்­க­ளுக்­கும்­தான் இந்த உத­வி­கள் போய்ச் சேர்­கின்­றன. எனவே இது அனைத்து மக்­க­ளுக்­கும் எதி­ரான சட்­டம் ஆகும். “தானும் உதவி செய்ய மாட்­டேன், உதவி செய்ய முன்­வ­ரு­ப­வர்­க­ளை­யும் செய்ய விட­மாட்­டேன்” என்­பது தான் ஒன்­றிய அர­சின் போக்கு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“வெளி­நாடு ஒழுங்­கு­முறை நிதி உதவி திருத்­தச் சட்­டம் ( FCRA)” என்ற மசோ­தாவை ஒன்­றிய அரசு முழு­மை­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும் என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், பிர­த­மர் மோடிக்­குக் கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“ஒன்­றிய அரசு தனது விருப்­பப்­படி, எந்­த­வொரு முறை­யான சட்ட நடை­மு­றை­யும் இன்றி, ஒரு தேவா­ல­யம், பள்ளி அல்­லது மருத்­து­வ­மனை போன்ற அமைப்­பின் FCRA பதிவை ரத்து செய்­ய­வும் அதன் சொத்­துக்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­த­வும் அதி­கா­ரம் அளிப்­ப­தன் மூலம், இது இந்­தி­யா­வின் தொண்டு நிறு­வ­னங்­க­ளைச் சிதைக்க முயல்­கி­றது. இலாப நோக்­கற்ற அமைப்­பு­க­ளால் வழங்­கப்­ப­டும் கல்வி, மருத்­து­வம் மற்­றும் தொண்டு சேவை­க­ளுக்கு மாற்­றாக புதிய சேவை­களை வழங்­கும் திறன் ஒன்­றிய அர­சி­டமோ அல்­லது மாநி­லங்­க­ளி­டமோ இல்லை. இது ஒரு ‘கொடுங்­கோல் மசோதா’ ஆகும்” என்று குறிப்­பிட்­டுள்­ளார் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எந்­தச் சட்­டத்­தைக் கொண்டு வந்து அதற்கு சரி­யான விளக்­கம் அளிக்க முடி­யா­விட்­டால், ‘தேசப் பாது­காப்­புக்கு இது அவ­சி­யம்’ என்று சொல்லி திசை திருப்­பு­வார்­கள். அதையே தான் இந்­தச் சட்­டத்­திற்­கும் சொல்­கி­றார்­கள். பா.ஜ.க. ஆட்­சி­யில் தேசம் எந்த வகை­யில் பாது­காக்­கப்­ப­டு­கி­றது என்­பதை இந்­திய நாட்டு மக்­கள் அறி­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­திய எல்­லைக்­குள் சீனா வந்து குடி­யே­று­கி­றது. முன்­னாள் ராணு­வத் தள­பதி ஜென­ரல் எம்.எம். நர­வனே எழு­திய (இன்­னும் முழு­மை­யாக வெளி­யி­டப்­ப­டாத) புத்­த­கத்­தின் விவ­ரங்­கள் பெரும் விவா­தப் பொரு­ளாக உள்­ளன. அந்­தப் புத்­த­கத்­தில், 2020–ஆம் ஆண்டு கைலாஷ் மலைப் பகு­தி­யில் சீன ராணு­வம் இந்­திய எல்­லைக்­குள்  ஊடு­ரு­வி­ய­போது நில­விய அசா­தா­ரண சூழல் விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  காஷ்­மீ­ருக்­குள் வந்து பாகிஸ்­தான் ஆத­ரவு தீவி­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­து­கி­றார்­கள். இந்­திய மீன­வர்­கள், சிங்­க­ளப் படை­க­ளால் தாக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்க எந்த முயற்­சி­யும் இல்லை.  இந்­தியா மீது இலங்­கைக்கு எந்த பய­மும் இல்லை. இந்­தி­யா­வைச் சுற்­றி­லும் இது­தான் நிலைமை. தேசப் பாது­காப்­பைப் பற்றி யார் பேசு­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எதிர்க்­கட்­சி­க­ளின் தொடர் எதிர்ப்பு கார­ண­மாக  வெளி­நாட்­டுப் பங்­க­ளிப்பு திருத்த மசோதா ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தாக  அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. ஐந்து மாநி­லத் தேர்­தல் நேரம் என்­ப­தா­லும் இதனை ஒத்தி வைத்­துள்­ளார்­கள். இக் கொடூ­ர­மான சட்­டத்தை  முழு­மை­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>