<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,565,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 04:00:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="10042026-TRY-11" position.sequence="11" ex-ref="10042026-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="112">தரங்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">விழுப்புரம் பிரச்சாரக் கூட்டத்தில்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37"> தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தொடர்ச்சி 12–ஆம் பக்கம்</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="4_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="qbox_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விழுப்­பு­ரம், ஏப். 10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொடுஞ்­சி­றைக்கு அஞ்­சா­த­வனா கொரோ­னா­வுக்கு அஞ்­சப்­போ­கி­றேன்? தரம்­கெட்­டுப் பேசும் பழ­னி­சா­மிக்கு மக்­களே தக்க பதி­லடி கொடுப்­பார்­கள்! தி.மு.க.வின் தலை­வ­ரான பிறகு நான் தோற்­கவே இல்லை; அ.தி.­மு.க. பொதுச்­செ­ய­லா­ள­ரான பின்­னர் பழ­னி­சாமி வென்­றதே இல்லை; பதி­னோ­ரா­வது தோல்­வி­யும் காத்­தி­ருக்­கி­றது என விழுப்­பு­ரம் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ரும், தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (08–04–2026) விழுப்­பு­ரத்­தில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­கூட்­டத்­தில் ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடை­யேழு வள்­ளல்­க­ளில் ஒரு­வ­ரான காரி ஆண்ட மலை­ய­மான் நாடும் – வீரத்­தின் விளை­நி­ல­மாம் ராஜா தேசிங்கு கோட்டை கட்டி ஆண்ட பகு­தி­யும் உள்ள விழுப்­பு­ரத்­திற்கு நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விழுப்­பு­ரத்­தின் பெரு­மை­க­ளைச் சொல்ல வேண்­டும் என்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கல்­வெட்­டு­க­ளுக்கு தொண்­டூர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குட­வ­ரைக் கோயில்­க­ளுக்கு மண்­ட­கப்­பட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­மை­யான கோயில்­க­ளுக்கு பனை­மலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாறை ஓவி­யங்­க­ளுக்கு கீழ்­வாலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வர­லாற்­றுப் பெரு­மைக்கு திரு­வக்­கரை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இலக்­கி­யத்­திற்கு தண்­ட­பாணி சுவா­மி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நல்­லாட்­சி­யின் இலக்­க­ணத்­திற்கு ஓமந்­தூ­ரார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட அர­சி­ய­லுக்கு ஏ.ஜி. எனப்­ப­டும் அய்யா ஏ. கோவிந்­த­சாமி அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி இன்­னும் நிறைய சொல்­லிக் கொண்டே போக­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிப்­பட்ட வர­லாற்­றுப் பெரு­மை­மிக்க இந்த விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் நின்று, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைக் காக்க – தனித்­தன்­மை­யைப் பாது­காக்க, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு, உங்­க­ளின் ஆத­ர­வைக் கேட்டு – வாக்­கு­க­ளைக் கேட்டு, வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தி.மு.க. கூட்­டணி வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வேட்­பா­ளர்­கள் தொகு­தி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில், விழுப்­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் மாவட்­டப் பொறுப்­பா­ளர் டாக்­டர் லட்­சு­ம­ணன் அவர்­கள். விழுப்­பு­ரம் தொகு­தி­யில் ஏற்­க­னவே மக்­கள் பணி­யாற்றி வரும் இவ­ருக்கு, மீண்­டும் தொகுதி மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, திருக்­கோ­யி­லூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் டாக்­டர் பொன். கெள­தம சிகா­மணி அவர்­கள். “ஆழ்­க­ட­லில் கண்­டெ­டுத்த நன்­முத்து பொன்­முடி”, “அறி­வு­மு­டி­தான் பொன்­முடி” – இவ்­வாறு தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் பாராட்­டப்­பட்ட கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர் முனை­வர் பொன்­மு­டி­யின் அருமை மகன். விழுப்­பு­ரம் தெற்கு மாவட்­டச் செய­லா­ள­ரா­க­வும் கழ­கப் பணி­யாற்றி வரு­கி­றார். கள்­ளக்­கு­றிச்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து, மக்­கள் பணி­யாற்­றி­ய­வர். அப்­பா­வுக்கு தப்­பாத பிள்­ளை­யாக இந்­தப் பகுதி மக்­க­ளுக்­காக உழைத்­துக் கொண்­டி­ருக்­கும் கெளத சிகா­மணி அவர்­க­ளுக்கு, திருக்­கோ­யி­லூர் தொகுதி மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, செஞ்சி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் செஞ்சி மஸ்­தான் அவர்­கள். திரா­விட மாடல் ஆட்­சி­யில் சிறு­பான்மை மற்­றும் வெளி­நா­டு­வாழ் நலத்­துறை அமைச்­ச­ராக இருந்­த­வர். விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டச் செய­லா­ள­ராக சிறப்­பாக கழ­கப் பணி­யாற்றி வரு­ப­வர். என்­னு­டைய பேரன்­புக்­கு­ரிய அன்பு உடன்­பி­றப்பு பெயரே செஞ்சி மஸ்­தான்­தான். மூன்­றா­வது முறை­யாக செஞ்சி மக்­கள் உங்­கள் செஞ்சி மஸ்­தானை, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் எல்­லாம் வாக்­க­ளித்து வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, விக்­கி­ர­வாண்டி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அன்­னி­யூர் சிவா அவர்­கள். விக்­கி­ர­வாண்டி இடைத்­தேர்­த­லில் வெற்றி பெற்று, இந்த இரு­பது மாத காலத்­தில் கொடுத்த வாக்­கு­று­தி­கள் அனைத்­தை­யும் இந்­தத் தொகு­திக்கு கொண்டு வந்து சாதித்­துக் காட்­டிய ஆற்­ற­லா­ளர் அன்­னி­யூர் சிவா. மாநில விவ­சா­யத் தொழி­லா­ளர் அணிச் செய­லா­ள­ராக இருந்து, அந்­தப் பகுதி மக்­கள் அனை­வ­ரின் செல்­வாக்­கை­யும் பெற்­றி­ருக்­கி­றார். அன்­னி­யூர் சிவா அவர்­க­ளுக்கு விக்­கி­ர­வாண்டி தொகுதி மக்­கள் அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஆத­ரவு தர வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, மயி­லம் சட்­ட­மன்­றத் தொகுதி. மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றி­ருக்­கும் தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கத்­தைச் சேர்ந்த நமது வெல்­லும் வேட்­பா­ளர் எல். வெங்­க­டே­சன் அவர்­கள். எனது ஆரு­யிர் நண்­பர் நினை­வில் வாழும் கேப்­டன் விஜ­ய­காந்த் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லில் வளர்ந்­த­வர். 2011 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திருக்­கோ­யி­லூர் தொகு­தி­யில் வெற்றி பெற்று மக்­கள் பணி செய்­த­வர். அரு­மைச் சகோ­தரி பிரே­ம­லதா விஜ­ய­காந்த் அவர்­க­ளால் மயி­லம் தொகுதி வேட்­பா­ள­ராக அறி­மு­கம் செய்­யப்­பட்­டி­ருக்­கும் எல். வெங்­க­டே­சன் அவர்­க­ளுக்கு, மயி­லம் தொகுதி மக்­கள் ‘முரசு’ சின்­னத்­தில் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, வானூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் கெள­தம் திரா­விட மணி அவர்­கள். தன்­னு­டைய தாத்தா சுப்­ப­ரா­யன், அப்பா திரா­விட மணி ஆகி­யோ­ரின் வழித்­த­டத்­தில் கழ­கப் பணி­யாற்றி வரு­கி­றார், கெள­தம் திரா­விட மணி அவர்­கள். மூன்­றா­வது தலை­மு­றை­யாக கழ­கப் பணி­யாற்­றும் இவர், மாவட்­டக் கவுன்­சி­ல­ரா­க­வும் மக்­கள் பணி­யாற்றி வரு­கி­றார். இளம் வேட்­பா­ளர் கெள­தம் திரா­விட மணி அவர்­க­ளுக்கு, வானூர் தொகுதி மக்­கள் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் உங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிறை­வாக, திண்­டி­வ­னம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது தோழ­மைக் கட்­சி­யான விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த வெல்­லும் வேட்­பா­ளர் வன்னி அரசு அவர்­கள். விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் எழுச்­சித் தலை­வர் தொல். திரு­மா­வ­ள­வன் அவர்­கள் மற்­றும் பொதுச் செய­லா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அரு­மைச் சகோ­த­ரர் ரவிக்­கு­மார் அவர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்ற வேட்­பா­ளர். விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் மாநில துணை பொதுச் செய­லா­ளர். பல்­வேறு மக்­கள் போராட்­டங்­களை முன்­னின்று நடத்தி சிறை சென்­ற­வர். இன்­னும் பெரு­மை­யோடு சொல்ல வேண்­டும் என்­றால், தொலைக்­காட்சி விவா­தங்­க­ளில் தீர்க்­க­மான விவா­தங்­க­ளைச் செய்­ப­வர். நம்­மில் ஒரு­வ­ராக இருக்­கும் வன்னி அரசு அவர்­கள் வெற்­றிக்கு, கழக நிர்­வா­கி­கள் கடு­மை­யாக உழைக்க வேண்­டும். திண்­டி­வ­னம் தொகுதி மக்­கள் வன்னி அரசு அவர்­க­ளுக்கு ‘பானை’ சின்­னத்­தில் நீங்­கள் உங்­கள் பொன்­னான வாக்­கு­களை அளிக்க வேண்­டும் என்று அன்­போ­டும் உரி­மை­யோ­டும் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அறி­மு­கப்­ப­டுத்­திய வேட்­பா­ளர்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அமோக வெற்றி பெறச் செய்­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது நான் அறி­மு­கப்­ப­டுத்­திய, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் இந்த ஏழு வேட்­பா­ளர்­க­ளை­யும் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும். அதற்கு நீங்­கள் எல்­லாம் தயாரா? தயார் (மக்­கள்). வெற்றி உறு­தியா? உறுதி (மக்­கள்). வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. வேட்­பா­ளர்­கள் இப்­போது உட்­கா­ர­லாம். சீட் கிடைத்­து­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல முறை நான் இந்த விழுப்­பு­ரத்­திற்கு வந்­தி­ருந்­தா­லும், கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் வந்­ததை என்­னால் மறக்­கவே முடி­யாது! என்­னால் மட்­டு­மல்ல. உங்­க­ளா­லும் மறக்க முடி­யாத அள­வுக்கு, வர­லாற்­றில் முத்­திரை பதித்த நாள், அந்த நாள்! நம்­மு­டைய நெஞ்­சங்­க­ளில் இன்­றும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் திரா­விட இயக்­கத் தீரர், ஏ.ஜி. என்று அன்­போடு அழைக்­கப்­ப­டும் அய்யா ஏ. கோவிந்­த­சாமி அவர்­க­ளின் நினை­வ­ரங்­கத்­தை­யும்; அது­மட்­டு­மல்ல, இட­ஒ­துக்­கீட்­டிற்­கான போராட்­டத்­தில் உயி­ரி­ழந்த 21 சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளுக்­கான மணி­மண்­ட­பத்­தை­யும் நான் திறந்து வைத்­தேன். இதை வாழ்­நா­ளில் எனக்கு கிடைத்த பெரு­மை­யாக நான் கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2019–ஆம் ஆண்டு விக்­கி­ர­வாண்டி தொகுதி இடைத்­தேர்­த­லுக்கு நான் இங்கு வந்­த­போது, நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் முனை­வர் பொன்­முடி அவர்­க­ளும் – நம்­மு­டைய திரா­விட ஆழ்­வார் ஜெகத்­ரட்­ச­கன் அவர்­க­ளும், நம்­மு­டைய சகோ­த­ரர் அன்­னி­யூர் சிவா அவர்­க­ளும், இதை கோரிக்­கை­யாக வைத்­தார்­கள். உடனே, தி.மு.க. ஆட்சி அமைந்­த­வு­டன், சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளுக்கு மணி­மண்­ட­பம் அமைக்­கப்­ப­டும் என்று அன்­றைக்கு நான் உறு­தி­ய­ளித்­தேன். இந்த ஸ்டாலின் சொன்­னால்… இந்த ஸ்டாலின் சொன்­னால்… சொன்­ன­தைச் செய்­வான்! 21 சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளுக்­கான மணி­மண்­ட­பத்­தைக் கட்டி, திறந்து வைத்­து­விட்­டு­தான், இன்­றைக்கு உங்­க­ளி­டம் உரி­மை­யோடு வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இந்­தியா முழு­தும் சமூ­க­நீ­தியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிலை­நாட்ட போரா­டிய தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல... இந்­தியா முழு­வ­தும், சமூ­க­நீதி என்­றால், தி.மு.க.! தி.மு.க. என்­றால், சமூ­க­நீதி! சமூ­க­நீ­திக்­காக இந்த மண்­ணில் நடந்த மிக முக்­கி­ய­மான – 1987 போராட்­டம்! மறக்க முடி­யுமா? பெரு­ம­திப்­பிற்­கு­ரிய அய்யா ராம­தாசு அவர்­கள் தலை­மை­யில் நடந்த போராட்­டம். போரா­டிய பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­களை, அன்­றைய அ.தி.மு.க. ஆட்­சிக் காலத்­தில் காக்கை, குரு­வி­களை போல், சுட்­டுக் கொன்­றார்­கள். ஆனால், 1989–இல் தி.மு.க. ஆட்­சிக்கு வந்­த­வு­டனே, தலை­வர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­ற­வு­டனே, நம்­மு­டைய ஆரு­யிர்</lang>
</p>
undefined
    </body.content>
  </body>
</nitf>