<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,70,492,1247" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 04:05:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260410T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10042026-VLR-04" position.sequence="04" ex-ref="10042026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">சட்டத் திருத்தத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">சி.ஏ.ஏ. சட்ட மசோதா – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="30">திருச்சி சிவா எம்.பி. விளக்க அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="thiruchisiva_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Sivamp84202_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஏப்.10</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சி.ஏ.ஏ. – நாடா­ளு­மன்­றத்­தில் நடந்­தது என்ன? என்­றும் சட்ட திருத்­தத்­தில் அ.தி.மு.க.வின் நிலைப்­பாடு என்ன? என்­றும் மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி சிவா கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சி.ஏ.ஏ., குடி­யு­ரிமை திருத்த சட்­டம் என்­பது பற்றி கடந்த சில நாட்­க­ளாக ஊட­கங்­க­ளி­லும், பொது­மே­டை­க­ளி­லும் பர­வ­லா­க­வும் பர­ப­ரப்­பா­க­வும் பேசப்­பட்டு வரு­வ­தற்கு முக்­கிய கார­ணம் 2019 ல் நிறை­வேற்­றப்­பட் இந்த சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான விதி­மு­றை­கள்( Rules) அர­சி­த­ழில் இப்­போது தேர்­த­லை­யொட்டி வெளி­யி­டப்­பட்­டதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நில­வு­கின்ற சில குழப்­பங்­களை தவிர்ப்­ப­தற்­கா­க­வும் இது குறித்து மக்­கள் தெளி­வாக தெரிந்து கொள்ள வேண்­டிய அவ­சி­யத்­தி­னா­லும் நாடா­ளு­மன்­றத்­தில் இந்த சட்­டம் நிறை­ வேற்­றப்­பட்­ட­போது நடந்­த­வை­களை விளக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் குடி­யு­ரிமை என்­றால் என்ன? ஒரு குறிப்­பிட்ட நாட்­டின் குடி­யு­ரிமை பெற்­ற­வ­ருக்கு அந்­நாட்­டில் சமூக, பொரு­ளா­தார, அர­சி­யல் மற்­றும் பொது என்று சொல்­லக்­கூ­டிய அனைத்து உரி­மை­க­ளும் கிடைக்­கும். எழுத்­து­ரிமை, பேச்­சு­ரிமை, தேர்­த­லில் வாக்­க­ளிக்­கின்ற , இரா­ணு­வத்­தில் பணி­யாற்­று­கின்ற உரி­மை­க­ளோடு சொத்­து­ரி­மை­யும் உண்டு. சுருக்­க­மாக சொன்­னால் அர­சி­யல் சட்­டம் தரும் அனைத்து உரி­மை­க­ளும் , பாது­காப்­பும் வெளி­நாடு செல்­லும்­போ­தும் கிடைக்­கும். ஆதார் அட்டை, வெறும் இருப்­பிட அடை­யாள அட்டை மட்­டுமே … அது­போல பான்­கார்­டும் குடி­யு­ரி­மைக்­கான சான்று இல்லை என நீதி­மன்­றங்­கள் தீர்ப்பு வழங்­கி­யி­ருக்­கின்­றன. குடி­யு­ரிமை இல்­லா­தோ­ரு­டைய நிலை எத்­தனை துய­ரம் நிறைந்­தது என்­பது விவ­ரிக்க இய­லாத ஒன்று. உரி­மை­கள் இல்­லாத வாழ்க்கை என்­பது கை, கால்­கள் இருந்­தும் செய­லற்ற நிலை­யில் இருப்­பது போன்­றதே! இவர்­கள் வெளி­நாட்­டுக்கு செல்ல நேர்ந்­தால் ஒரு குற்­ற­வா­ளியை விட இரக்­க­மற்ற முறை­யி­லேயே நடத்­தப்­ப­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குடி­யு­ரிமை இல்­லாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">60 ஆயி­ரம் இலங்­கைத் தமி­ழர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி குடி­யு­ரிமை இல்­லாத 60,000 இலங்­கைத் தமி­ழர்­கள் தமிழ்­நாட்­டில் திருச்சி, கன்­னி­யா­கு­மரி, திரு­வண்­ணா­மலை போன்ற ஊர்­க­ளில் முகாம்­க­ளில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். கழக ஆட்சி ஆறா­வது முறை­யாக தள­பதி மு.க.ஸ்டாலி்ன் அவர்­கள் தலை­மை­யில் மலர்ந்­த­தற்­குப் பின் இவர்­க­ளுக்­குப் பல சலு­கை­க­ளும் பாது­காப்­பும் தரப்­பட்­டி­ருப்­ப­தோடு குடி­யு­ரிமை பெற­வும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய நாடு 1950–ல் குடி­ய­ர­ சாக ஆன­தற்­குப் பின்­னால் 1955 ல் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட குடி­ய­ரிமை சட்­டம் அதற்­குப் பின் 1986, 1992, 2003, 2005, 2015, 2019 என ஆறு­முறை திருத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது நாம் அவ­சி­யத்­தின் பொருட்டு பேச வேண்­டி­யது 2019 சட்­டத் திருத்­தத்­தைப் பற்றி மட்­டுமே! இந்த திருத்­தத்­தின் நோக்­கம்– நமக்கு அண்டை நாடு­க­ளாக இருக்­கின்ற பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், ஆஃப்­கா­னிஸ்­தான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து மத­ரீ­தி­யாக துன்­பு­றுத்­தப்­பட்டு ( Religiously persecuted ) 2014–க்கு முன் வரை வந்து குடி­யே­றிய இந்­துக்­கள், கிறித்­து­வர்­கள், சீக்­கி­யர்­கள், பார்­சிக்­கள், புத்த மற்­றும் ஜைன என ஆறு மதங்­களை சார்ந்­த­வர்­க­ளுக்கு இந்­தி­யக் குடி­யு­ரிமை வழங்­கு­வது என்­பதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உள்­நோக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலோட்­ட­மாக பார்க்­கி­ற­போது இது மனி­தா­பி­மான மிக்க ஒரு நட­வ­டிக்­கை­யாக தெரிந்­தா­லும் இதில் இஸ்­லா­மி­யர்­கள் என்ற ஒரு முக்­கி­ய­மான பிரி­வி­னர் விடு­பட்­டி­ருப்­பது தெரி­யும். பார­திய ஜன­தா­வி­னு­டைய உள்­நோக்­கம் வெளிப்­ப­டை­யாக இந்த சட்ட திருத்­தத்­தின் மூலம் வெளிச்­சத்­திற்கு வந்­தது: மத சார்­பற்ற நாடா­கிய இந்­தி­யா­வில் தாங்­கள் திட்­ட­மிட்டு புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக நாடு முழு­வ­தும் முஸ்­லீம்­கள் பெரும் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். டெல்லி ஜும்மா மஸ்­ஜித் பகு­தி­யில் வர­லாறு காணாத அள­வில் இஸ்­லா­மிய பெண்­ம­ணி­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் இந்த போராட்­டத்­தில் வீட்­டிற்கு கூட செல்­லா­மல் இரவு பக­லாக ஈடு­பட்­டது பெரும் பர­ப­ரப்பை உரு­வாக்­கி­யது! (கொரோனா பெருந்­தொற்று தீவி­ர­மான கார­ணத்­தி­னா­லேயே அந்­தப் போராட்­டங்­கள் முடி­வுக்கு வந்­தது தீர்வு எது­வும் எட்­டா­மலே)
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ள­வை­யில் பெரும்­பான்மை பலம் பெற்­றி­ருக்­கும் ஆளுங்­கட்சி எளி­தாக அந்த மசோ­தாவை அங்கு நிறை­வேற்­றி­ய­தற்­குப் பின்­னால் 11–12–2019 மாநி­லங்­க­ள­வை­யில் விவா­தத்­திற்கு எடுத்­துக் கொள்­ளப் பட்­டது. அனைத்து எதிர்க் கட்­சி­க­ளும் இந்த சட்ட திருத்­தம் முஸ்­லீம்­களை புறக்­க­ணிப்­பதை சுட்­டிக்­காட்டி கடு­மை­யாக எதிர்த்து உரை­யாற்­றி­னார்­கள். கழ­கத்­தின் சார்­பில் இந்த விவா­தத்­தில் நான் கலந்து கொண்டு பேசி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“1947 ல் நாடு விடு­தலை அடைந்­த­போது இந்­தியா, பாகிஸ்­தான் என பிரி­வினை ஏற்­பட்ட நேரத்­தில் முக­மது அலி ஜின்னா நான் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கென நாடொன்று கண்­டி­ருக்­கி­றேன் , முஸ்­லீம்­கள் என்­னோடு வாருங்­கள் என்று அழைப்பு விடுத்த நேரத்­தில் இங்­கி­ருந்த முஸ்­லீம்­கள் – நாங்­கள் இஸ்­லா­மி­யர்­கள்­தான். ஆனால் இந்­தி­யா­தான் எங்­கள் நாடு என்று இங்­கேயே தங்கி நம்­மோடு சகோ­த­ரர்­க­ளாய் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­களே! அவர்­க­ளுக்கு நாம் செய்­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கைமாறு இது­தானா?” என்று நான் உணர்ச்சி பொங்க கேட்­ட­தற்கு பாரா­மு­க­மும், கேளா காதும், கேலி சிரிப்­பும்­தான் ஆளும் தரப்­பி­லி­ருந்து கிடைத்­தது. எதிர் கட்­சி­க­ளின் வாதத்­தில் உள்ள நியா­யத்தை உணர்ந்து ஏற்­கிற கட்­சி­யல்­லவே பாஜக! என்­றால் இப்­படி ஒரு பார­பட்­ச­மான அணு­கு­மு­றையை மேற்­கொண்­டி­ருக்க மாட்­டார்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மசோ­தா­வில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திருத்­தங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மசோ­தாவை தோற்­க­டிக்க முயன்­றால் இந்த சட்ட திருத்­தத்­தின் மூலம் பயன் பெறக் கூடிய ஆறு மதத்தை சார்ந்­த­வர்­க­ளின் எதிர்ப்­பைப் பெற வேண்­டி­ய­தி­ருக்­கும். நமக்கு தேவை இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கும் இந்த சலுகை கிட்­டிட வேண்­டு­மென்­பதே ! அத்­தோடு தமிழ்­நாட்டை சார்ந்த நாம் இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி இலங்கை தமி­ழர்­க­ளுக்­கும் குடி­யு­ரிமை பெறு­வ­தற்­கான நல்­ல­தோர் வாய்ப்பு! ஆக தீர்­வுக்கு எங்­க­ளுக்கு இருந்த வழி மசோ­தா­வில் திருத்­தங்­கள் கொண்டு வரு­வ­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் ஒரு பிரச்­சினை என்­ன­வென்­றால் இலங்­கைத் தமி­ழர்­கள் மத­ரீ­தி­யாக துன்­பு­றுத்­தப்பட்டு இந்­தி­யா­விற்கு வர­வில்லை என்ற வாதம் எடுத்து வைக்­கப்­ப­டும். இதை மன­தில் கொண்டு மிகுந்த சிரத்தை மேற்­கொண்டு , ஆழ்ந்த கவ­னத்­தோடு திமுக வின் உறுப்­பி­னர் என்ற வகை­யில் நான் மூன்று திருத்­தங்­களை முன் வைத்­தேன். 1) “மத­ரீ­தீ­யாக “ துன்­பு­றுத்­தப்­பட்டு என்­ப­தோடு “ இன­ரீ­தி­யாக” என்று சேர்க்­க­வும். “ 2) பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், ஆஃப்­கா­னிஸ்­தான் என்­ப­தோடு “ இலங்­கையை” சேர்க்­க­வும் 3) ஆறு மதங்­க­ளோடு முஸ்­லீம்­களை சேர்க்­க­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த திருத்­தங்­கள் குரல் வாக்­கெ­டுப்­பில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாக அவைத் தலை­வர் திரு வெங்­கையா நாயுடு அறி­வித்­த­தும் நான் மின்­னணு வாக்­குப் பதிவு கேட்­டேன் . இந்த கோரிக்­கையை ஏற்று மின்­னணு வாக்­குப் பதிவு நடத்த அவைத் தலை­வர் உத்­த­ர­விட்­டார். அன்­றைக்கு மாநி­லங்­க­ள­வை­யில் கழக உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை ஐந்­து­தான் . 1) நான் (திருச்சி சிவா), 2) ஆலந்­தூர் பாரதி, 3) டி.கே. எஸ்.இளங்­கோ­வன், 4) மு.சண்­மு­கம், 5) பி.வில்­சன் ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க அள­வில் நம்­மு­டைய திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக 99 வாக்­கு­கள் கிடைத்­தன. அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக, இந்த திருத்­தங்­களை எதிர்த்து 124 வாக்­கு­கள் பதி­வா­யின!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆத­ர­வாக அ.தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வித்­தி­யா­சம் 25. அன்­றைய தினம் மாநி­லங்­க­ள­வை­யில் அ.தி.மு.க. உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 13! அது அப்­ப­டியே பா.ஜ.க. அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக விழுந்­தது. அந்த 13ஐ 124 ல் கழித்­தால் அர­சுக்கு ஆத­ரவு 111. அந்த வாக்­கு­கள் திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக அளித்­தி­ருந்­தால் 112 பெற்று மிக எளி­தாக நாட்­டில் பெரிய போராட்­டங்­கள், கொந்­த­ளிப்­பு­கள் இல்­லா­மல் முஸ்­லீம்­க­ளும் , 60,000 இலங்­கைத் தமி­ழர்­க­ளும் குடி­யு­ரிமை பெற்­றி­ருப்­பார்­கள். மசோ­தா­வும் நிறை­வே­றி­ 
யி­ருக்­கும். நம்­மு­டைய நீண்ட கால கோரிக்­கை­யான இலங்கை தமி­ழர்­கள்குடி­யு­ரிமை பிரச்­னை­யும் தீர்ந்­தி­ருக்­கும். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு இந்­திய நாடு தங்­களை அங்­கீ­க­ரிக்­க­வில்­லையே என குமுறி கொந்­த­ளித்து வேத­னை­யில் வெந்து கொண்­டி­ருக்­கும் இஸ்­லா­மி­யர்­க­ளும் ஆறு­த­ல­டைந்து நிம்­மதி பெரு­மூச்சு விட்டு கொண்­டி­ருந்­தி­ருப்­பார்­கள்! மத­வாத பாஜ­க­வின் பார­பட்­ச­மான செய­லுக்கு துணை நின்று கிடைத்­தற்­க­ரிய ஒரு வாய்ப்­பினை கெடுத்து இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கும் மிகப் பெரிய பாத­கத்தை செய்த அதி­முக வின் துரோ­கம் எந்த காலத்­தி­லும் மன்­னிக்க முடி­யா­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக்­கள் விரோத சட்­டங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆத­ர­வ­ளித்த எடப்­பாடி பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்ற தேர்­தல் நேரத்­தில் கூட்­ட­ணியை விட்டு வெளி­யேறி வந்து சத்­தி­ய­வான் வேடம் போடும் அ.தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லா­ளர் என்று கூறிக் கொள்­ளும் எடப்­பாடி பழ­னி­சா­மி­தான் பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த மக்­கள் விரோத, மாநில உரி­மை­க­ளைப் பறிக்­கின்ற எல்லா சட்­டங்­க­ளுக்­கும் நேற்று வரை ஆத­ரவு தந்து தமிழ்­நாட்­டுக்­கும் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் எந்த காலத்­தி­லும் மன்­னிக்க முடி­யாத பாத­கம் செய்­த­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆதா­ரம் !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. ஆத­ரவு வாக்­கு­கள் – 124</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">இதில் அ.தி.மு.க. – 13</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. வாக்­க­ளிக்­க­வில்­லை­யெ­னில் 111</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அர­சுக்கு ஆத­ரவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நான் கொண்டு வந்த சட்ட திருத்­தத்­திற்கு எதிர்க்­கட்­சி­கள் 99 வாக்­கு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. ஆத­ரவு தந்து வாக்­க­ளித்­தி­ருந்­தால் 13</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மொத்­தம் – 113</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு வாக்கு வித்­தி­யா­சத்­தில் குடி­யு­ரிமை சட்­டத்­தில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கும் 60,000 இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கும் குடி­யு­ரி­மை­யும் வாழ்­வும் கிடைத்­தி­ருக்­கும் பல போராட்­டங்­கள் தவிர்க்­கப்­பட்டு இருக்­கும். குழப்­பங்­கள் இன்­றும், இந்­நாட்டு இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கும் இலங்­கைத் தமி­ழர் 60,000 பேருக்­கும் இல்­லா­மல் போயி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு திருச்சி சிவா எம்.பி. அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>