<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,341,958,937" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 23:37:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260411T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11042026-MDU-12" position.sequence="12" ex-ref="11042026-MDU-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர்: தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">கற்றுக்கொள்ள மனம் இருந்தால் கற்றுக் கொள்ளலாம்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">ஜோலார்பேட்டை தொகுதி பரப்புரையில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhispeec_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜோலார்­பேட்டை,ஏப்.11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திருப்­பத்­தூர் மாவட்­டம், ஜோலார்­பேட்டை சட்­ட­மன்ற தொகு­தி­யில் திமுக தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யி­டும் தி.மு.க. வேட்­பா­ளர் கவிதா தண்­ட­பா­ணியை ஆத­ரித்து, ஜோலார்­பேட்டை - புதுப்­பேட்டை பகு­தி­யில் திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்டு, பொது­மக்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்கு சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் அவர் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது தி.மு.க. வேட்­பா­ளர் கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­ யா­சத்­தில் வெற்றி பெறச் செய்ய வேண்­டும். உத­ய­சூ­ரி­ய­னுக்­காக, உச்சி வெயி­லி­லும் இவ்­வ­ளவு பேர் கூடி­வ­ரு­வது, கவிதா தண்­ட­பா­ணி­யின் வெற்­றிக்­கான கூட்­டமா ­கவே நான் பார்க்­கி­றேன்,” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தேர்­த­லில் வெற்றி என்­பது உறு­தி­யான ஒன்று. தமிழ்­நாட்டு மக்­கள் மறு­ப­டி­யும் திரா­விட மாடல் ஆட்சி வர வேண்­டும் என்­ப­தில் தெளி­வாக இருக்­கி­றார்­கள். தேர்­தல் வாக்­கு­று­தி­கள் அனைத்­தை­யும் நிறை­வேற்­றிய பிறகே உங்­க­ளி­டம் வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், நமக்கு எதி­ரில் இருக்­கும் அதி­மு­க­வி­னர் வாக்கு கேட்டு தமி­ழ­கம் முழு­வ­தும் சுற்றி வரு­கின்­ற­னர். ஆட்­சி­யில் இல்­லா­த­போது எடப்­பாடி பழ­னி­சாமி, ஐந்து ஆண்­டு­கள் காணா­மல் போய்­வி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடப்­பா­டி­யி­லி­ருந்து சென்­னைக்கு வரு­கி­றார்; அதன் பிறகு டெல்­லிக்கு சென்று அமித்­ஷாவை சந்­திக்­கி­றார். இதையே கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக செய்து வரு­கி­றார். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் கூறு­வது போல், இது தமிழ்­நாட்­டிற்கு டெல்­லிக்­கு­மான தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மூன்று மொழிக் கொள்­கையை பின்­பற்­ற­வில்லை என்­றால், பள்ளி மாண­வர்­க­ளின் கல்­விக்­கான நிதியை ஒதுக்­க­மாட்­டோம் என்று அவர்­கள் பிடி­வா­தம் பிடிக்­கி­றார்­கள். இத­னால், நமது பள்ளி மாண­வர்­க­ளுக்­கான ரூ. 3,458 கோடி நிதி வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு முறை­யும் பிர­த­மர் தமிழ்­நாட்­டிற்கு வரும்­போது, தமிழ் தெரி­ய­வில்லை என்று வருத்­தப்­ப­டு­கி­றார்.  நீங்­கள் தமிழ் கற்­றுக்­கொள்ள வேண்­டாம் என்று யாரும் சொல்­ல­வில்லை. கற்­றுக்­கொள்­ளும் எண்­ணம் இருந்­தால் கற்­றுக்­கொள்­ள­லாம்; கற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்­றால் அதற்கு எங்­க­ளால் ஒன்­றும் செய்ய முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு திட்­டத்­தின் பெய­ரைப் படிக்க வேண்­டி­யி­ருந்­தா­லும் திணற வேண்­டிய நிலை உள்­ளது. “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு­தித் திட்­டம்” என்று இருந்­ததை, இன்று “Mahatma Gandhi National Rural Employment Guarantee Act” என்று இருந்­ததை, இப்­போது மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். விக்­சித் பாரத்—­­ரோஸ்­கர் மற்­றும் அஜீ­விகா மிஷன். இது யாருக்­கா­வது புரி­யுதா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘யோஜனா’ என்­றால் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரு­வாய் வரம்­புக்­குக் கீழ் உள்ள குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் இல­வச உத­வித் திட்­டத்­திற்­குப் “பிர­தான் மந்­திரி உஜ்­வாலா யோஜனா” என்று பெயர் வைத்­துள்­ள­னர். “உஜ்­வாலா” என்­றால் என்ன, “யோஜனா” என்­றால் என்ன என்­பது பல­ருக்­கும் புரி­யாது; “பிர­தான் மந்­திரி” என்­ப­து­தான் புரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருத்­தப்­பட்ட தேசிய வேளாண் சாப்­பீட்­டுத் திட்­டம். பிர­தான் மந்­திரி ஃபசல் பீமா யோஜனா. தேசிய கிரா­மப்­புற வாழ்­வா­தார இயக்­கம். தீன்­த­யாள் உத்­பாத்­தியா கிரா­மின் யோஜன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருத்­தப்­பட்ட தேசிய வேளாண் காப்­பீட்­டுத் திட்­டம், பிர­தான் மந்­திரி பசல் பீமா யோஜனா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேசிய கிரா­மப்­புற வாழ்­வா­தார இயக்­கம், தீன்­த­யாள் உபாத்­யாய கிரா­மீன் யோஜனா. இது என்னஎன்று கிரா­ மத்­தில் இருக்­கும் யாருக்­கா­வது புரிந்து, அந்த திட்­டத்தை பயன்­ப­டுத்த முடி­யுமா? இல்லை. ரயில்வே ஸ்டேஷன்­க­ளில் ஒரு ஊரின் பெயரை எழு­திக் காட்­டு­வ­தாக இருக்­கட்­டும். எல்­லா­வற்­றி­லும் ஹிந்­தியை திரும்­பத் திரும்ப திணித்து கொண்­டி­ருக்­கி­ற­வர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வட இந்­தி­யா­வில் தேர்­தல் நடை­பெ­றும் போது, பிர­த­மர் அங்கு சென்று, அங்­குள்ள மக்­க­ளி­டம் தமிழ்­நாட்­டில் வட இந்­தி­யா­வில் இருந்து வேலைக்­காக வரும் மக்­களை மோச­மாக நடத்­து­கி­றார்­கள், தாக்­கு­கி­றார்­கள் என்று கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒடி­சா­வில் தேர்­தல் நடந்­த­போது, “தமி­ழன் ஏன் இங்கே வர வேண்­டும்?” என்று பேசு­கி­றார்­கள். ஆனால் இன்று தமிழ்­நாட்­டுக்கு வந்து, “நான் தமிழ் கற்க வேண்­டும், நான் தமி­ழ­னாக இருக்க வேண்­டும்” என்று கூறு­கி­றார்­கள். தேர்­த­லுக்கு தேர்­தல் தங்­க­ளு­டைய நிலைப்­பாட்­டை­யும், சாய­லை­யும் மாற்­றிக் கொண்­டி­ருக்­கி­ற­வர்­கள்­தான் எதி­ர­ணி­யில் இருக்­கி­ற­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போன நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் எடப்­பாடி பழ­னி­சாமி என்ன சொன்­னார்? இனி­மேல் நான் பாஜ­க­வு­டன் கூட்­டணி வைக்க மாட்­டேன் என்­றார். ஆனால் இந்­தத் தேர்­த­லில் அதையே மறந்­து­விட்­டார். அவர் எதைச் சொன்­னா­லும் மறந்­து­வி­டு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2016 தேர்­த­லில் செல்­போன் கொடுக்­கி­றோம் என்று ஒரு வாக்­கு­றுதி கொடுத்­தார்­கள். 27வது வாக்­கு­று­தி­யாக இல­வ­ச­மாக கைப்­பேசி வழங்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டது. ஆனால் யாருக்­கும் இல­வச கைப்­பேசி கொடுக்­க­வில்லை. எடப்­பாடி பழ­னி­சாமி வாக்­கு­றுதி கொடுத்­தால் நிறை­வேற்ற ­மாட்­டார். அதி­மு­க­விற்­கும், எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு சரி­யான படத்தை புகட்ட­ வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அ.தி.­மு.­க.­ தலை­வ­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எடப்­பாடி நீடிப்­பாரா ?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தேர்­த­லுக்கு பிறகு அதி­மு­க­வின் தலை­வ­ராக நீடிப்­பாரா? இல்லை எதா­வது மாநி­லத்­திற்கு ஆளு­ந­ராக போவாரா? பாஜ­க­வு­டன் கூட்­டணி வைத்­தால், அந்த கட்­சி­யையே அவர்­கள் எடுத்­துக்­கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை காப்­பாற்ற வேண்­டும் என்­றால் அது தமி­ழக முத­ல­மைச்­ச­ரால் தான் முடி­யும் எனத் தெரிந்தே ஓபி­எஸ் அவர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் தன்னை இணைத்­தி­ருக்­கி­றார் அதே­போல பல்­வேறு கட்­சி­க­ளில் இருந்­தும் ஏரா­ள­மான கட்சி நிர்­வா­கி­கள் திமு­க­வில் சேர்ந்த வண்­ணம் இருக்­கி­றார்­கள். பத்து தோல்வி பழ­னிச்­சா­மிக்கு இது 11 வது தோல்­வி­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தொகு­தி­யின்  எதிர்க்­கட்­சி­யில் போட்­டி­யி­டும் அதி­முக வேட்­பா­ளர் கே சி வீர­ம­ணிக்கு எதி­ராக தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் அளித்­த­வர் மீது தாக்­கு­தல் நடத்தி இருக்­கி­றார்­கள். தேர்­தல் அலு­வ­ல­கத்­தை­யும் தாக்­கி­யி­ருக்­கக்­கூ­டிய ஒரு குற்­றச்­செ­யல் நடந்­தி­ருக்­கி­றது. வேட்­பு­மனு தாக்­கல் செய்­யும் நிலை­யி­லேயே இவ்­வ­ளவு அரா­ஜ­கம் நடந்­தால், இவர்­கள் கையில் அதி­கா­ரம் சென்­றால் என்ன ஆகும்? தமிழ்­நாட்­டிற்கு துரோ­கம் செய்ய நினைப்­ப­வர்­க­ளுக்கு ஒரு பிடி மண்­ணுக்­கூட கிடைக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தொகு­தி­யில், ஒரு பெண் வேட்­பா­ள­ராக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பிலே நிறுத்­தப்­பட்டி­ ருக்­கி­றார். திமுக, இந்த ஐந்து ஆண்­டு­கள் ஆட்­சியே பெண்­க­ளுக்­கான ஆட்­சி­தான், சகோ­த­ரி­க­ளுக்­கான ஆட்­சி­யா­கத்­தான் பெரிய அள­விலே நடை­பெற்­றி­ருக்கு. பெண்­க­ளுக்கு நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் மக­ளிர் உரி­மைத் தொகை தரு­கி­றேன் என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தொகு­தி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் ஒரு பெண் வேட்­பா­ளர் நிறுத்­தப்­பட்டு ள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திமுக கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நடத்­திய ஆட்சி, பெண்­க­ளுக்­கான ஆட்­சி­யாக பெரிய அள­வில் செயல்­பட்­டுள்­ளது. பெண்­க­ளுக்­காக நமது முத­ல­மைச்­சர் மக­ளிர் உரி­மைத் தொகையை வழங்­கு­வோம் என்று அறி­வித்­தார். ஆட்­சிக்கு வந்­த­வு­டன் ஆயி­ரம் ரூபாய் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் உரி­மைத்­தொகை அது ஆட்­சிக்கு வந்­த­வு­டன் இரண்­டா­யி­ர­மாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.  உங்­க­ளுக்கு தேவை­யா­னதை வாங்­கிக் கொள்­ளும் உரிமை உங்­கள் கைக­ளில்­தான் உள்­ளது’ என்று ரூ.8000 மதிப்­பி­லான கூப்­பனை வழங்­கு­வ­தாக முத­ல­மைச்­சர் அறி­வித்­துள்­ளார்.  தாயு­மா­ன­வர் திட்­டம், வயது முதிந்­த­வர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் இவங்­க­ளுக்­கெல்­லாம் வீடு தேடி கொண்டுவந்து ரேஷன் பொருட்­களை தரக்­கூ­டிய திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜோலார்­பேட்டை தொகு­தி­யில் தி.மு.க அரசு செய்த வளர்ச்­சிப் பணி­கள்: ரூ.29.65 கோடி மதிப்­பில் இர­யில்வே கடவு எண். 91 (குடி­யான்­குப்­பம்) சாலை மேம்­பா­லம் கட்­டப்­பட்­டுள் ளது. ரூ.20.82 கோடி மதிப்­பில் கடவு எண்.95 (பச்­சூர்) சாலை மேம்­பால கட்­டு­மா­னப் பணி நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பச்­சூ­ரில் உள்ள புதிய அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­யில் ரூ.15 கோடி மதிப்­பீட்­டில் புதிய கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்­டுள்­ளது. 43 கி.மீ. நீளத்­திற் கான 13 சாலைப் பணி­கள் ரூ.23 கோடி மதிப்­பில் அக­லப்­ப­டுத்தி மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­த­னா­வூர் கால்­நடை மருந்­த­கம் கட்­ட­டம் ரூ.54 லட்­சம் மதிப்­பில் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் கால்­நடை மருத்­து­வ­ம­னை­கள் 24 மணி நேர­மும் செயல்­பட இருக்­கி­றது, நீர் நிலை­கள் தூர்­வா­ரப்­ப­டும் உள்­ளிட்ட பணிகள் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளு­டைய கோரிக்­கை­களை அவர்­கள் கேட்­ப­தற்கு முன்பே நிறை­வேற்­று­வ­தற்கே தேர்­தல்  வாக்­கு­று­தி­கள் தயார் செய்­யப்­பட்­டது என்ற அவர், முத­ல­மைச்­சர் அவர்­கள் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­தும் அனைத்து திட்­டங்­க­ளும் செயல்­ப­டுத்­தப்­ப­டும் என்று பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>