<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1174" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 10 2026 23:47:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260411T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11042026-VLR-09" position.sequence="09" ex-ref="11042026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">11.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">டெல்லி அணியா? - தமிழ்நாடு அணியா? என்று மோதிப் பார்க்கும் தேர்தல்:</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">டெல்லி அணியை ஓட ஓட விரட்டி, தமிழ்நாடு அணி இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும்! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314873_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314519_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup315566_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Mdspeech942_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பொன்­னேரி,ஏப்.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் மாவட்­டம், பொன்­னே­ரி­யில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், பொன்­னேரி சட்­ட­மன்­றத் தொகு­தி­யின், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் இந்­திய தேசிய காங்­கி­ரஸ் கட்சி வேட்­பா­ளர் துரை சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்கு கை சின்­னத்­தில் வாக்­கு­கள் சேக­ரித்து, பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், “இன்­றைக்கு நம் தலை­வர் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார். இந்த சட்­ட­மன்­றத் தேர்­தல், ‘டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா?’ என்று மோதிப் பார்க்­கக்­கூ­டிய தேர்­தல். தமிழ்­நாடு அணி­யான நாம் இந்த முறை வெற்றி பெற்­றாக வேண்­டும். அதற்கு டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்’’  என்று குறிப்­பிட்­டார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­  வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து 11 நாட்­க­ளா­கப் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டுப் பேசிக்­கொண்டு இருப்­ப­த­னால் தொண்டை சரி­யில்லை. இருந்­தா­லும், உங்­க­ளை­யெல்­லாம் சந்­தித்து, இந்த பொன்­னேரி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம் வெற்றி வேட்­பா­ளர், கைச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கின்ற நம் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர், நம் அண்­ணன் துரை சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்கு, நீங்­கள் வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் வேண்டி விரும்பி கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கை சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த 11 நாட்­க­ளாக தமிழ்­நாடு முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 50 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­குச் சென்று வாக்­குச் சேக­ரித்து வந்­தி­ருக்­கி­றேன். நான் செல்­லக்­கூ­டிய அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் நிச்­ச­யம் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­மை­யி­லான கூட்­டணி, நம் தலை­வர் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறப்­போ­வது உறுதி. மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான் பொறுப்­பேற்­கப் போவது உறுதி. அதை இன்­னும் அழுத்­த­மாக உறுதி செய்­கின்ற வகை­யில், இந்த பொன்­னே­ரித் தொகு­தி­யில் அண்­ணன் துரை சந்­தி­ர­  சே­கர் அவர்­க­ளுக்கு, மீண்­டும் கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து, நீங்­கள் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­வதற்­குத்­தான் நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்ற முறை அண்­ணன் சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து கிட்­டத்­தட்ட 10,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெறச் செய்து நீங்­கள் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்பி வைத்­தீர்­கள். இந்த முறை, குறைந்­தது 25,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெறச் செய்து அனுப்ப வேண்­டும். சென்ற முறை அவரை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுத்து அனுப்பி வைத்­தீர்­கள். எத்­த­னையோ திட்­டங்­கள் இந்­தத் தொகு­திக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பொன்­னேரி திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">4,500–க்கும் மேற்­பட்ட மீன­வர்­கள் மற்­றும் பழங்­கு­டி­யி­ன­ருக்­குப் பழ­வேற்­காடு கூட்­டு­றவு வங்கி மூல­மாக 60 கோடி ரூபாய் கட­னு­தவி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கொசஸ்­தலை ஆற்­றின் மேல் 17 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு பாலம். பாது­காப்­புச் சுவர் அமைக்­கின்ற பணி, மீஞ்­சூர் ரயில்வே மேம்­பா­லப் பணி­கள், சிறு­வா­புரி சாலை விரி­வாக்­கப் பணி­கள், பழ­வேற்­காட்­டில் வாய்க்­கால் திட்­டப் பணி­கள், பழ­வேற்­காடு காட்­டுப்­பள்ளி சாலை அமைக்­கின்ற பணி, நான்கு புதிய மீன்­பிடி இறங்­கு­த­ளங்­கள், பழ­வேற்­காடு மீன் சந்தை மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆரணி பேருந்து நிலை­யம் புதுப்­பிக்­கப்­ 
பட்­டி­ருக்­கி­றது. 50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒருங்­கி­ணைந்த நீதி­மன்­றம் அமைக்­கின்ற பணி இப்­போது நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">4 கோடி­யில் புதிய தாலூகா அலு­வ­ல­கம், 25–க்கும் மேற்­பட்ட புதிய ரேஷன் கடை­களைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார் உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர். 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு டிஜிட்­டல் நூல­கம், 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு புதிய மினி ஸ்டேடி­யம், மீஞ்­சூர், பொன்­னேரி, ஆரணி பகு­தி­க­ளில் மின் தகன வசதி, அலை­யாத்­திக் காடு­கள் வளர்ப்பு, பஞ்­சட்டி, பூங்­கு­ளம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் புதிய சமு­தாய நலக்­கூ­டங்­கள் திறந்துவைத்­தி­ருக்­கி­றார் உங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­களை இந்த பொன்­னேரி சட்­ட­மன்­றத் தொகு­திக்கு உங்­க­ளின் வெற்றி வேட்­பா­ளர் அண்­ணன் துரை சந்­தி­ர­சே­கர் அவர்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த உரி­மை­யில் மீண்­டும் அவ­ருக்கு ஒரு வாய்ப்­பைக் கொடுங்­கள். சென்ற முறை  10,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சம். இந்த முறை குறைந்­தது 25,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மீண்­டும் ஒரு வாய்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஒரு சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன். சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நம் தலை­வர் சொன்ன 
திட்­டங்­கள், அவற்­றை­யெல்­லாம் செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம். அந்த உரி­மை­யோடு இன்­றைக்கு மீண்­டும் மக்­க­ளைச் சந்­தித்து எங்­க­ளுக்கு மீண்­டும் ஒரு வாய்ப்பு கொடுங்­கள் என்று கேட்க வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்ற முறை நாம் சொன்ன ஒரு முக்­கி­ய­மான திட்­டம் – மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம். ஆட்சி அமைந்த உடனே நம் தலை­வர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம், கட்­ட­ண­மில்­லாத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றாம் வகுப்­பில் இருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் அத்­தனை பேரும் காலை­யில் வந்த உடனே பசி­யோடு படிக்­கக் கூடாது. அவர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். ஒவ்­வொரு நாளும் 20 லட்­சம் குழந்­தை­கள் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கல்வி ஊக்­கத் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம். அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் 
கல்­லூ­ரி­யில் சென்று படிக்­கப் போனா­லும் அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத் தொகை மாதம் 1,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­யிருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது சமீ­பத்­தில் 10 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்­தை­யும் அறி­வித்து 
ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது நாம் சொன்ன வாக்­கு­றுதி – கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். இன்­றைக்கு ஒவ்­வொரு மாத­மும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த மக­ளிர் உரி­மைத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க–வும் பா.ஜ.க.–வும் முயற்சி செய்­தார்­கள். ஆனால், நம் தலை­வர் என்ன செய்­தார்? பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000 ரூபாய், கோடைக்­கால சிறப்பு நிதி 2,000  என மொத்­தம் 5,000 ரூபாய்  ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு நம் தலை­வர் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபாய் இல்லை, உயர்த்தி 2,000 ரூபாய் தரு­கி­றோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முதி­யோர் உத­வித்­தொகை 1,200 இல்லை 2,000 ஆக உயர்த்­தித் தரு­வோம் என்று வாக்கு கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்வி ஊக்­கத் தொகை 1,000 இல்லை 1,500 ஆக உயர்த்­தித் தரப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து வரு­டத்­தில் 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு 10 லட்­சம் பேருக்கு வீடு தரு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் இல்லை எட்­டாம் வகுப்பு வரைக்­கும் உயர்த்­தித் தரு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து வரு­டத்­தில் கல்­லூரி படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் 
கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்­கும் 35 லட்­சம் மடிக்­க­ணி­னி­கள் வழங்­கப்­ப­டும் என்று வாக்­குறுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவை எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­ய­மான வாக்­கு­றுதி – ஒவ்­வொரு மக­ளி­ருக்­கும் நம் அரசு அமைந்த உடனே முத­ல­மைச்­சர் அவர்­கள் 8,000 ரூபாய்மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வார். அந்த கூப்­பனை வைத்­துக்­கொண்டு அந்த மக­ளிர் அவர்­கள் வீட்­டிற்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவையோ அவர்­களே முடிவு செய்து, அவர்­கள் விருப்­பப்­படி அவர்­களே வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று சொல்­லி­விட்­டார் நம் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதெல்­லாம் நடக்­க­வேண்­டும் என்­றால், வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அண்­ணன் துரை சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்­குக் கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பால்­டா­யில் பழ­னி­சாமி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தி­னர் – போட்டோ, போட்டோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">போட்­டோவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நானே மறந்­தா­லும், நீங்­கள் விட­மாட்­டேங்­க­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்க உசுப்­பேத்­தி­விட்டு, கிள்ளி விட்டு போய்­வி­டு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எடப்­பாடி பழ­னி­சாமி என்னை பயங்­க­ர­மா­கத் திட்­டு­கி­றார். உத­ய­நி­திக்கு என்ன அனு­ப­வம் இருக்­கி­றது என்­கி­றார். ஆமாம் எனக்கு எந்த அனு­ப­வ­மும் கிடை­யாது, யார் காலி­லும் விழுந்து பதவி வாங்­கிய அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. மிக­வும் ஆத்­தி­ரப்­ப­டு­கி­றார். `உத­ய­நிதி இன்­னும் சாகா­மல் என் உயிரை வாங்­கு­கி­றான்’ என்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி. இன்­னும் கெட்­ட­வார்த்­தை­யில் மட்­டும்­தான் திட்­ட­ வில்லை. வெகு­வி­ரை­வில் அதை­யும் செய்­து­வி­டு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது சமீ­பத்­தில் என்ன தெரி­யுமா சொல்­கி­றார்? ‘பால்­டா­யில் குடித்­து­விட்­டுப் போகி­றான், பால்­டா­யில் குடித்­து­விட்­டுப் போகி­றான்’ என்று பேசிக்­கொண்டே இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இனி­மேல் அவர் பெயர் எடப்­பாடி பழ­னி­சாமி இல்லை, பால்­டா­யில் பழ­னி­சாமி. ஏன் அப்­ப­டிச் சொல்­கி­றார் என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. பால்­டா­யி­லேயே பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றார், அவ­ருக்கு குறி பால்­டா­யி­லேயே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களே நீங்­கள் நல்ல உடல் நலத்­தோடு, ஆரோக்­கி­யத்­தோடு பல வரு­டம் அ.தி.மு.க–வின் நிரந்­த­ரப் பொதுச்­செ­ய­லா­ள­ராக நீங்­கள்­தான் இருக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் எங்­க­ளுக்கு வச­தி­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது என்னை விட்­டு­விட்­டார், தலை­வ­ரைப் பிடித்­துக்­கொண்­டார். தலை­வ­ரைப் பற்றி அவ­தூ­றா­கப்பேசிக்­கொண்டு இருக்­கி­றார். தோல்­வி­யைச் பார்ப்­ப­வர்­கள் எப்­படி எல்­லாம் பேசு­வார்­கள், பிதற்­று­வார்­கள் அல்­லவா, அது மாதிரி பேசிக்­கொண்டு இருக்­கி­றார். அத­னால்­தான் இன்­றைக்கு நம் தலை­வர் திருப்­பித் திருப்­பிச் சொல்­கி­றார். இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா? என்று மோதிப் பார்க்­கக்­கூ­டிய தேர்­தல் இந்­தத் தேர்­தல். தமிழ்­நாடு அணி நாம் இந்த முறை வெற்றி பெற்­றாக வேண்­டும். அதற்கு டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மோடி­யை­யும் அவ­ரின் அடி­மைக் கூட்­டத்­தை­யும் விரட்ட வேண்­டும் என்­றால், இங்கே நம் வெற்றி வேட்­பா­ளர், அன்னை சோனியா காந்தி அவர்­க­ளின் அன்­பைப் பெற்ற வேட்­பா­ளர், சகோ­த­ரர் ராகுல் காந்­தி­யின் நன்­ம­திப்­பைப் பெற்ற வேட்­பா­ளர், நம் தலை­வ­ரின் அன்­பைப் பெற்ற வேட்­பா­ளர் அண்­ணன் துரை சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்­குக் கைச் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து அண்­ணன்துரை சந்­தி­ர­சே­கர் அவர்­களை மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து சட்­டப்­பே­ர­வைக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி! என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர் ரமேஷ்­ராஜ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சசி­காந்த் செந்­தில், மாவட்ட அவைத்­த­லை­வர் பக­ல­வன், துணைச் செய­லா­ளர்­கள் ரவி, கதி­ர­வன், உமா மகேஸ்­வரி, பொரு­ளா­ளர் ரமேஷ், ஒன்­றிய நக­ரப் பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் உத­ய­சூ­ரி­யன், முர­ளி­த­ரன், ஜெக­தீ­சன், ராஜா, செல்­வ­சே­க­ரன், ஆனந்த்­கு­மார், ரவிக்­கு­மார், தமிழ் உத­யன், முத்து, இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் லோகேஷ், துணை அமைப்­பா­ளர்­கள் மோகன் பாபு, சங்­கர், யுவ­ராஜ், கதி­ர­வன், பிர­தாப், தில்­லைக்­கு­மார், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மக்­கள் நீதி மய்­யம், எஸ்.டி.பி.ஐ, தமிழ்ப் புலி­கள் கட்சி நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>