<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,682,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 11 2026 15:26:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260412T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12042026-CBE-07" position.sequence="07" ex-ref="12042026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">அ.தி.மு.க.வை – டெல்லிக்கு அடமானம் வைத்தவர்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">இந்தத் தேர்தலோடு  –  எடப்பாடியை  – மக்கள்  அடியோடு  மறந்து விடுவர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சேலம் தெற்கில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. தேர்தல் பரப்புரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhiadph_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="A.Rajaphoto10_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சேலம்,ஏப்.12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி  தி.மு.க.  தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து, சேலம் காந்தி மைதானம் அருகே  தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இதில் அவர் பேசியதாவது;</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நமது முதலமைச்சர்தேர்ந்தெடுத்து உங்களது கைகளிலே ஒப்படைத்திருக்ககூடிய வேட்பாளர் லோகநாதன் அவர் களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும் என உங்களை எல்லாம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த தேர்தல் நேரத்தில் மக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தலைநிமிர்ந்து கேட்கிறோம். மக்க ளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறோம் என்ற பெரு மிதத்தோடு, மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கொடுத்த வாக்குறுதிகளோடு, அதற்கு மேலும் திட்டங்களை செய்து தந்திருக்கிறோம் என்ற உரிமையோடு மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், எதிரணியிலே இருக்கக்கூடிய வர்கள், ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி. ஒன்றி யத்திலே, டெல்லியிலே இருக்கக்கூடியவர்கள், தமிழ்நாட்டிற்காக நிதியை என்றைக்குமே தருவது கிடையாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நமது பிள்ளைகள் படிக்கிறது வரவேண்டிய, இந்தி படித்தால்தான் கொடுப்பேன் என்று கூறி, நிறுத்தி வைத்திருக்கிருக்கக்கூடிய பிஜேபியோடு தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எதிரான சட்டங்கள், சிஏஏ,முத்தலாக் என்று எத்தனையோ அவர்களுக்கு எதிரான சட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள், தொழிலா ளர்களுக்கு எதிரான சட்டங்கள், ஏன்.. 100நாள் வேலையை நிறுத்துவதற்கான சட்டங்கள் என இத்தனை சட்டங்களை, இந்திய மக்களுக்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு எதிராக, மாநிலங்க ளுக்கு எதிராக உருவாக்கியிருக்கக்கூடிய பிஜேபியோடுதான், இன்று எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்த லில் கூட்டணி உடைந்துவிட்டது. அப்போ.. நான் பண்ணினதெல்லாம் தப்பு.. இனிமே கூட்டணி கிடையாதுஎன்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், இப்பொழுது மறுபடியும் அவங்களோடு கைகோர்த்துக்கொண்டு, அங்கே மேடையிலே நிற்கிறார்.  எத்தனை பேரைச் சேர்த்து கூட்டணி வைத்தாலும்,  டேக்-ஆப் ஆகலை. மக்கள் திரும்பிப் பார்க்கக்கூட தயாராக இல்லை. அவர்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.அதனால, எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டு, இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எடப்பாடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து நான்கேட்கிறேன். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறீர்கள்.மக்கள் தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறீர்கள். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜன் அவர்கள், நம்முடைய தலைவர் அவர்கள், உங்களுடைய தலைவர்கள் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா   இருந்த பதவியிலே, இருந்த நீங்கள், இன்றைக்கு தேர்தலில், தேர்தல் பயத்தில் எந்த அளவுக்கு அநாகரீகமாக இறங்கிப் பேச தயாராகிவிட்டீர்கள் என்பதை நினைத்தால், அவமானமாக இருக்  கிறது. உங்களுக்காக நான் அவமானப்படு கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.நகரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவிட்டி-ல் முதலமைச்சர் இல்லாமல் போயி ருப்பார் என்று பேசியிருக்கிறார். பழனிசாமி... இது ஒரு தேர்தல்தானே?  இவ்வளவு கீழ்த்தரமாகவா இறங்கிப் பேச முடியுமா?. ஒரு தேர்தலுக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சரை, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரை, எப்படி இன்னொரு மனிதனைப் பார்த்து, நீ கொரோனோவில் இல்லா மல் போயிருப்பாய்னு என்று சொல்லக்கூடிய அளவுக்கு கேவலமாக நீங்கள் இறங்கி விட்டீர்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டு மக்கள் உங்க ளைத் தூக்கி எறியக்கூடிய நாள் நெருங்கி விட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் ஒன்றுமட்டும் சொல்கிறேன். உங்கள் தரத்திற்கு இறங்கி எங்களுக்கு பேசத் தெரியாது. ஆனால், எங்கள் பரம்பரைக்கு ஒரு கதை இருக்கிறது. சரித்திரம் இருக்கிறது. எங்களை எதிர்த்தவர்களுக்கு மலர் வளையம் வைத்த வர்கள் நாங்கள். அதனால, முதலமைச்சர் தளபதி கிட்ட, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின பத்தி என்ன பேசுறீங்கன்னு தெரிந்து பேசுங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு தேர்தலுக்காக எந்தவித நாகரீகத்தையும் காற்றில் பறக்கவிடக்கூடிய ஒருத்தருக்கு, இந்த மண்ணிலே இடமில்லை என்பதை இங்கு இருக்கக்கூடிய மக்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த மண்ணிலே, துரோகம் என்பது அவரது உடம்பிலே ஊறிப்போன ஒன்று. தமிழ்நாட்டிற்கு துரோகம், தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம், தன்னோடு இருக்கக்கூடிய வர்களுக்கு துரோகம், அதனாலதான், இன்று ஓ.பி.எஸ் அவர்கள் உங்களோடு இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு, எங்களோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எடப்பாடியின் அமித்ஷா தி.மு.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">யார் கால்ல விழுந்து, யாரோட ஆசிர்வா தத்தோட நீங்கள் முதலமைச்சர் ஆனிங்களோ, அந்த அம்மையாருக்கு இன்னிக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை. அண்ணா தி.மு.க. இன்று அமித்ஷா தி.மு.க. ஆகிவிட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க.வை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, இங்கு வந்து தேர்தலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக பேசிக்கொண்டிரு க்கிறீர்கள். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அந்தத் தேர்தல் வெற்றிக்காக இவ்வளவு கீழ்த்தரமாக, இவ்வளவு கீழே இறங்கி ஒரு மனிதன் பேச முடியுமா என்று எனக்குப் புரிய வில்லை. இப்படிப்பட்ட ஒருவருக்கு இனிமேல் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூட யோக்கியதை இல்லை என்ற அந்த நிலையை நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய வாக்குறுதி களை எல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கக்கூடிய முதலமைச்சர். நம்முடைய ஆட்சியில் பயன் பெறாத ஒரு வீடு கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி நலத்திட்டங்களை அங்க இருக்கக்கூடிய மக்க ளுக்கான திட்டங்களை செய்து தந்திருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘கோவிட்’ காலத்தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.தான் மக்களைக் காப்பாற்றியது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கோவிட் காலத்தில், அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, நீங்கள் மக்களைக் காப்பாற்றவில்லை. தி.மு.க. மக்களைக் காப்பாற்றியது. அ.தி.மு.க. வீட்டுக்கதவைக்கூட தட்டி எங்களது திராவிட முன்னேற்றக்கழகத்தின் உடன்பிறப்புகள், இங்க இருக்கக்கூடிய அத்தனைபேரிடமும் தலைநிமிர்ந்து சொல்கிறேன், எங்களுடைய கிளைக்கழகச் செய லாளர்,ஒன்றியக்கழகச் செயலாளர், கழக நிர்வாகிகள், எங்களின் உடன்பிறப்புகள், அதிமுகவினரின் வீட்டுக் கதவுகளைத் தட்டி, உங்களுக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா? என்று கேட்டு பொருட்களை வழங்கிய பெரும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு சேரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்களை நம்பி மக்கள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. நீங்கள் மக்களை எந்தக் காலத்திலும்காப்பாற்றியதில்லை. எடப்பாடி பழனிசாமி அவர்களே.. இந்தத் தேர்தலோடு, உங்களை மக்கள் மறந்துவிடுவார்கள். உங்களுக்கு தமிழ்நாட்டிலே இடம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய வாக்குறுதி களை நிறைவேற்றித் தந்திருக்கக் கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மறுபடியும் முதலமைச்சராக வருவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வரக்கூடிய தேர்தலிலே, இந்த சேலம் தெற்குத் தொகுதியில் வளர்ச்சிப் பணியாக ரூ.42 கோடி மதிப்பீட்டில்  அம்மாபேட்டை அரசு புறநகர் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அம்மாபேட்டை மேம்பாலம் சுமார் 146 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத அடிப்படை ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு மூலமாக 15ஆயிரம் நெசவாளர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருமணிமுத்தாறு தூய்மைத் திட்டத்தின் வழியாக ஆற்றின் குறுக்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தடுப்பு சுவர்கள் மற்றும் பாதாள சாக்கடை கட்டும் பணிகளுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத்தனை வசதிகளையும் செய்து தந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய பெயரால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெயரால், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர் லோகநாதன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை யெல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்வாறு அவர் கூறினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்தி ரன், இதில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., சேலம் மேற்கு மாவட்டதி.மு.க.செயலாளர் செல்வ கணபதி,தி.மு.க.நிர்வாகிகள் மற்றும்தி.மு.க.கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதச்சார்பற்ற முற்போக்கு வெற்றிக் கூட்டணியின் அவிநாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணியை ஆதரித்து கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. அன்னூர் வடக்கு ஒன்றியம் பசூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். உடன் தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கோகுல், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>