<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 11 2026 15:29:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260412T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12042026-CBE-12" position.sequence="12" ex-ref="12042026-CBE-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை     </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">12.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கின்ற ஒன்­றிய பா.ஜ.க. அரசை, தமிழ்­நாடு புறக்­க­ணிக்க வேண்­டும்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">அ.தி.மு.க.வின் ஒவ்­வொரு ஓட்­டும், பா.ஜ.க.வுக்கு விழும் ஓட்டு என்­ப­தில், நீங்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருந்து, உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup547634_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup547210_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup546225_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup547721_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="mdspeech104_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="mdspeech1041_12_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்னை,ஏப்.12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்னை தியா­க­ரா­யர் நக­ரில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், தியா­க­ரா­யர் நகர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் ராஜா அன்­ப­ழ­கன் அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், `` `தமிழ்­நாடு’ என்­கிற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. இப்­படி, தமிழ்­நாடு தொடர்ந்து ஒன்­றிய பா.ஜ.க அர­சால் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கிற ஒன்­றிய பா.ஜ.க. அர­சைத் தமிழ்­நாடு புறக்­க­ணித்து விரட்டி அடிக்க வேண்­டும்.  அ.தி.மு.க.விற்கு விழு­கின்ற ஒவ்­வொரு ஓட்­டும் பா.ஜ.க. சங்­கி­கள் கூட்­டத்­திற்கு விழு­கின்ற ஓட்டு என்­ப­தில் நீங்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள். நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றேன்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­  வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த 11 நாட்­க­ளாக, நான் நேர­டி­யா­கச் சென்று நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், நம் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு நம் வெற்­றிக் கூட்­ட­ணிக் சின்­னத்­தி­லும் வாக்­க­ளிக்­கக் கோரிப் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்டு இருக்­கி­றேன். தொடர்ந்து பேசிக்­கொண்டே இருந்­த­த­னால் தொண்டை பாதிக்­கப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தலை­வர் எனக்கு ஒரு பொறுப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். ``நீ சென்று தியா­க­ராய நக­ரில் பிரச்­சா­ரம் செய், ராஜா அன்­ப­ழ­கனை வெற்­றி­பெற வைக்க வேண்­டும், அங்கு சென்று உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­குக் கேள்’’ என்று தலை­வர் அனுப்பி வைத்து, நான் இங்கு வந்­தி­ருக்­கி­றேன். ஆனால், இங்கு வந்து பார்த்த பின்­பு­தான் தெரி­கி­றது, உங்­கள் எழுச்­சி­யை­யெல்­லாம் பார்க்­கும்­போது ஏற்­க­னவே வெற்றி உறுதி செய்­யப்­பட்ட ஒன்று. உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, கடந்த முறை கிடைத்த வெற்றி போன்று இருக்­கக்­கூ­டாது. குறைந்­த­பட்­சம் 50,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் சகோ­த­ரர் ராஜா அன்­ப­ழ­கனை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான், சகோ­த­ரர் ராஜா­வைப் பற்றி உங்­க­ளி­டம் அதி­கம் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. அறி­மு­கம் தேவை­யில்லை. அவர் பாரம்­ப­ரி­ய­மான தி.மு.கழ­கக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். இந்­தத் தியா­க­ராய நக­ரில் தொடக்க காலத்­தி­லி­ருந்தே கழ­கப் பணி என்­றால் அவ­ரின் குடும்­பம்­தான் நம்­பர் ஒன் குடும்­பம். இந்­தப் பகு­தி­யில் எல்­லா­ரா­லும் மதிக்­கப்­ப­டு­கின்ற, நம்­பப்­ப­டு­கின்ற ஒரு குடும்­பம் நம் ராஜா­வின் குடும்­பம். அவ­ரின் தந்தை, என் அண்­ணன், மதிப்­புக்­கு­ரிய ஜெ.அன்­ப­ழ­கன் அவர்­கள், தன் கடை­சி­மூச்சு வரைக்­கும் மக்­க­ளுக்­கா­கவே வாழ்ந்­தார். மக்­கள் பணி­யாற்­றித்­தான் அவர் மக்­கள் பணிக்­கா­கவே தன்­னு­டைய உயி­ரைத் துறந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சிறப்­பா­கச் செயல்­ப­டு­ப­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவர் இந்­தத் தியா­க­ராய நக­ரி­லும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருக்­கி­றார். சேப்­பாக்­கம்-­தி­ரு­வல்­லிக்­கேணி சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும் அவர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தார். அவர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பணி­யாற்­றிய சேப்­பாக்­கம்-­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இப்­போது நான் இருக்­கி­றேன். அதே போன்று, இந்­தத் தியா­க­ராய நகர் தொகு­தி­யில் ஜெ.அன்­ப­ழ­க­னின் மகன், என் சகோ­த­ரர் ராஜா அன்­ப­ழ­கனை நம் தலை­வர் உங்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார். இதில் எனக்­குக் கூடு­தல் பெருமை என்­ன­வென்­றால், இளை­ஞர் அணிச் செய­லா­ளர் என்ற முறை­யில், என் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ள­ரா­கச் சிறப்­பா­கச் செயல்­ப­டு­ப­வர்­தான் நம் வேட்­பா­ளர் ராஜா அன்­ப­ழ­கன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நானும் இந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றேன். அரு­கில் இருக்­கக்­கூ­டிய சேப்­பாக்­கம்-­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் நானும் போட்­டி­யி­டு­கி­றேன். தலை­வர் அவர்­கள் எனக்கு இரண்­டா­வது முறை­யாக வாய்ப்­புக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். நான் என் தொகு­தி­யில் சென்று ஒரே ஒரு நாள்­தான் சென்று வாக்கு கேட்­டேன். என் தொகு­தியை விட்­டு­விட்டு நான் ராஜா­வுக்­காக இந்­தத் தியா­க­ராய நக­ருக்கு வந்­தி­ருக்­கி­றேன் என்­றால் என்ன அர்த்­தம்? என் வெற்­றியை விட, எனக்கு மிக முக்­கி­ய­மா­னது, பெருமை தரு­வது சகோ­த­ரர் ராஜா­வின் வெற்றி. சேப்­பாக்­கம்-­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி வெற்­றியை விட மிக, மிக முக்­கி­ய­மா­னது இந்­தத் தியா­க­ராய நகர் தொகு­தி­யின் வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் தியா­க­ராய நகர் என்­றைக்­குமே ஜெ.அன்­ப­ழ­க­னின் கோட்டை, தி.மு.க-வின் கோட்டை என்­பதை இந்த முறை நீங்­கள் நிரூ­பித்­துக் காட்­டுங்­கள். பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில், நான் சொன்­னது குறைந்­த­பட்­சம் 50,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் ராஜா அன்­ப­ழ­கன் அவர்­களை நீங்­கள் வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">5 ஆண்­டு­க­ளில் பல்­வேறு பணி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்­குத் தலை­வர் அவர்­கள் ஒவ்­வொரு தொகு­தி­யா­கச் சென்று வாக்­குக் கேட்­கி­றார். நானும் ஒவ்­வொரு தொகு­தி­யாக சட்­ட­மன்ற வேட்­பா­ளரை அழைத்­துச் சென்று வாக்­குக் கேட்­கி­றேன். நான் மக்­க­ளைச் சந்­திக்­கி­றேன்; என்ன தைரி­யத்­தில் சென்று சந்­திக்­கி­றோம் என்­றால், இந்த ஐந்து ஆண்­டு­க­ளில் பல்­வேறு பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். குறிப்­பாக, தியா­க­ராய நக­ரில் உஸ்­மான் சாலை மற்­றும் சி.ஐ.டி. நகர் சாலையை இணைக்­கும் வகை­யில், மேம்­பா­லம் கட்­டப்­பட்டு, இன்­றைக்­குப் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைத்­தி­ருக்­கி­றோம் என்­றால், அது நம் தலை­வர், திரா­விட மாடல் அரசு கொண்டு வந்த திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தியா­க­ராயர் நகர் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சி.ஐ.டி. நக­ரில் புதிய நூல­கம் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஒரு கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சி.ஐ.டி. நகர் மாந­க­ராட்­சிப் பள்­ளிக்கு இன்­றைக்­குக் கூடு­தல் வகுப்­ப­றை­களை நாம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">4 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, கண்­ணம்­மா­பேட்­டைப் பகு­தி­யின் கழி­வு­நீர்ப் பிரச்­சி­னை­யைச் சரி­செய்ய இன்­றைக்­குப் புதிய கழி­வு­நீர் இறைப்பு நிலை­யம் (பம்­பிங் ஸ்டேசன்) அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கார்ப்­ப­ரே­ஷன் குடி­யி­ருப்பு, தண்­ட­பா­ணித் தெரு­வில் இருக்­கக்­கூ­டிய பகு­தி­க­ளில் குடி­நீர்க் குழாய்­கள் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஐந்து கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வட­ப­ழனி நூற­டிச் சாலை­யில் புதிய செயற்கை நீரூற்­று­டன் கூடிய ஒரு பூங்கா அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மாம்­ப­லம் இர­யில் நிலை­யம் முதல் தியா­க­ராய நகர் பேருந்து நிலை­யம் வரை நடை­மேம்­பால வசதி அமைத்­துக் கொடுத்­தது நம் திரா­விட மாடல் அரசு. கோடம்­பாக்­கம் புலி­யூர் கால்­வாய் சீர­மைக்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மேற்கு மாம்­ப­லம், வட­ம­துரை கண்­ணன் கோயில், வட­ப­ழனி ஆதி­மூ­லப் பெரு­மாள் கோவி­லின் குட­மு­ழுக்­குப் பணி­கள் நம் தலை­வர் ஆட்­சி­யில் நடை­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வட­ப­ழ­னி­யில் பன்­ன­டுக்­குப் பேருந்து நிலை­யக் கட்­டு­மா­னப் பணி­கள், தியா­க­ராய நகர் பேருந்து நிலை­யத்­தில் பன்­ன­டுக்கு வணிக வளா­கம் அமைக்­கும் பணி, கோடம்­பாக்­கத்­தில் மேம்­ப­டுத்­தப்­பட்ட மகப்­பேறு மருத்­து­வ­மனை, தியா­க­ராய நகர் தீய­ணைப்பு நிலை­யத்­துக்­குப் புதிய கட்­ட­டங்­கள், வட­ப­ழ­னி­யில் விளை­யாட்­டுத் திடல் மற்­றும் சிறு­வர் பூங்கா என இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­திட, ராஜா­வுக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள், மீண்­டும் தி.மு.க-வுக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள் என்று உறு­தி­யோ­டும் உரி­மை­யோ­டும் உங்­க­ளை­யெல்­லாம் கேட்க வந்­தி­ருக்­கி­றேன். இது­மட்­டு­மல்ல, பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தலை­வ­ரின் முதல் வாக்­கு­றுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த முறை ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு நம் தலை­வர் சொன்ன முதல் வாக்­கு­றுதி. பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம். நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ரான உட­னேயே போட்ட முதல் கையெ­ழுத்­துப் பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம், ‘மக­ளிர் விடி­யல் பய­ணம்’ திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">`கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம்’. இன்று ஒவ்­வொரு மாத­மும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு நம் தலை­வர் உரி­மைத் தொகை திட்­டத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த உரி­மைத் தொகை திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் திட்­டம் போட்­டார்­கள். தேர்­த­லைக் கார­ணங்­காட்டி மூன்று மாதம் நிறுத்த வேண்­டும் என்று நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றார்­கள். ஆனால், நம் தலை­வர் என்ன செய்­தார்.  ``நான் 1,000 ரூபாய் கொடுப்­பதை நிறுத்­து­கி­றாயா? நான் 5,000 ரூபாய் கொடுக்­கி­றேன்’’  என்று பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் - மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000, கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாயை நம் தலை­வர் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு ஒரே தவ­ணை­யில் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காலை­யில் ஆறரை மணிக்கு மக­ளி­ரின் வங்­கிக் கணக்­கில் பணத்தை அனுப்­பி­னார். ஒன்­பது மணிக்கு நீங்­கள் வங்­கிக்­குச் சென்று பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள். ஏன்? மோடி இந்­தப் பணத்­தை­யும் எடுத்­து­வி­டு­வார், வங்­கி­யில் குறைந்­த­பட்ச இருப்பு இல்லை என்று சொல்லி எடுத்­து­வி­டு­வாரோ என்ற அந்­தப் பயத்­தில் பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள். அவ்­வ­ளவு விழிப்­பு­ணர்­வு­டன் நம் மக­ளிர் இருக்­கி­றார்­கள். இதே விழிப்­பு­ணர்­வு­டன் வரு­கின்ற 23 -ஆம் தேதி நாம் செய்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன் மக­ளிர் உரி­மைத் தொகை, 1,000 இல்லை, ஆட்சி அமைந்த உடனே 2000-ஆக உயர்த்­தித் தரு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டம், ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் இல்லை, எட்­டாம் வகுப்பு வரைக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்வி உத­வித் தொகை: 1,000 இல்லை, 1,500-ஆக உயர்த்­தித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முதி­யோர் உத­வித்­தொகை: 1,200 இல்லை, 2,000-ஆக உயர்த்­தித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மக­ளிர் சுய உத­விக்­கு­ழுக்­க­ளுக்கு 5 லட்­சம் வரைக்­கும் எந்­த­வி­தப் பிணை­யும்  இல்­லா­மல் கடன் கொடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ரூ.8,000 மதிப்­புள்ள கூப்­பன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முக்­கி­ய­மான வாக்­கு­று­தி­க­ளைச் சொல்­லி 
­யி­ருக்­கி­றோம். ஆட்சி அமைந்த உடனே எல்லா மக­ளி­ருக்­கும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் 8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன் தரு­வார்­கள். அந்த கூப்­பனை வைத்து மக­ளிர் அவர்­கள் வீட்­டிற்கு என்ன தேவை என்­பதை அவர்­களே முடிவு செய்து பிரிட்ஜ், மிக்ஸி, குக்­கர், டிவி, ஏசி என எது­வாக இருந்­தா­லும் மக­ளி­ரின் விருப்­பம். அதை நீங்­களே முடிவு செய்து நீங்­களே வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப் போவது உறுதி. நான் உங்­க­ளி­டம் கேட்­டுக் கொள்­வது ராஜா அன்­ப­ழன் அவர்­களை அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முரட்டு அடிமை பழ­னி­சாமி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களே, தமிழ்­நாட்டு மக்­கள் இது­வ­ரைக்­கும் முரட்­டுத் தொண்­டர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பார்­கள். முரட்டு பக்­தர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பார்­கள். ஆனால்,  உங்­களை மாதிரி ஒரு முரட்டு அடி­மையை பார்த்­ததே இல்லை. நீங்­கள் மோடி அவர்­க­ளுக்கு ரொம்ப முரட்டு அடி­மை­யாக இருக்­கி­றீர்­கள். அவர் என்ன சொன்­னா­லும் கேட்­கின்­றீர்­கள். தமிழ்­நாட்டு மக்­கள் குறித்து சிந்­தித்­துப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய மாநி­லத்­திற்கு உரிய நிதி­க­ளைப் பெற்­றுக் கொடுங்­கள். மாநில உரி­மை­க­ளுக்­கெல்­லாம் குரல் கொடுங்­கள். இவ்­வ­ளவு பெரிய அடி­மை­யாக இருக்­கா­தீர்­கள். இவ்­வ­ள­வு­தான் சென்­னேன். உடனே என்ன சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உத­ய­நி­திக்கு எந்த அனு­ப­வ­மும் கிடை­யாது. அவ­ருக்கு என்ன அனு­ப­வம் இருக்­கின்­றது. என்­னு­டைய அர­சி­யல் வயது, அவர் வயது என்று சொன்­னர். உண்­மை­தான். அவ­ருக்கு இருக்­கக் கூடிய அனு­ப­வம் எனக்கு நிச்­ச­யம் கிடை­யவே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காலைத்­தானே வாரி­விட்­டீர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">போட்­டோவை காண்­பித்து, இந்த அனு­ப­வம் எனக்கு கிடை­யாது. நிச்­ச­யம் கிடை­யாது. கீழே ஒரு­வர் படுத்து இருக்­கின்­றார். நீங்­கள் கார்­பெட் என்று நினைச்­சு­கா­தீர்­கள்.       இப்­படி காலைப்­பி­டித்­துத்­தான் முத­ல­மைச்­சர் ஆனார். இந்த அனு­ப­வம் எனக்கு கிடை­யாது. சங்­கிக் கூட்­டத்­தின் காலைப் பிடிக்­கும் அனு­ப­வம் எனக்கு கிடை­யாது. நான் என்­றைக்­கும் மக்­க­ளு­டன் மக்­க­ளாக நின்று மாநில உரி­மைக்கு குரல் கொடுப்­ப­வன்­தான் இந்த உத­ய­நிதி. இதைத்­தான் சொன்­னேன்.        இதற்கு என்ன சொன்­னார் தெரி­யுமா? `ஒரு­வர் காலில் விழு­வது தப்பா…? அந்­தப் பண்­பாடு கூட உனக்­குக் கிடை­யாதா? தெரி­யாதா’ என்­கின்­றார்.   நான் கேட்­கின்­றேன். அந்­தம்மா காலில் விழுந்­தீர்­களே. அந்த அம்மா காலைத்­தானே வாரி­விட்­டீர்­கள். `நீயா என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னாய்’ என்று அந்­தம்­மா­வைப் பார்த்து கேட்­டார்.  அந்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. இதைத்­தான் நான் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்ப என்ன தெரி­யுமா சொல்­லி­விட்­டார். `உத­ய­நிதி பால்­டா­யில் குடித்து என்­றைக்கோ செத்­துப் போயி­ருக்க வேண்­டும். இங்க இருந்து என்­னோட உயிரை வாங்­கு­கி­றான்’ என்று சொல்­லி­விட்­டார். என்னை ரொம்ப திட்­டு­கின்­றார். விட்­டால், ஆள் வைத்தே அடிப்­பார் போல இருக்­கின்­றது. இன்­னும் கெட்­ட­வார்த்தை மட்­டும்­தான் பயன்­ப­டுத்­த­வில்லை. அதற்­கும் துணிந்து விடு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பால்­டா­யில் பழ­னி­சாமி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் ஒன்றே ஒன்­று­தான் கேட்­கின்­றேன். பால்­டா­யில், பால்­டா­யில்ன்னு கூப்­பி­டு­கின்­றார். தேர்­தல் முடிவு இப்­பவே அவ­ரது கண்­ணிற்­குத் தெரிந்து விட்­டது போல இருக்­கி­றது.     இது­வ­ரைக்­கும் அவரை என்­ன­வென்று கூப்­பிட்­டுக் கொண்­டி­ருந்­தோம். பாதம் தாங்கி பழ­னி­சா­மின்னு. இனி­மேல் அவர் பாதம் தாங்கி பழ­னிச்­சாமி இல்லை. அவர் பால்­டா­யில் பழ­னி­சாமி. இனி­மேல் அவரை அப்­ப­டித்­தான் கூப்­பிட வேண்­டும். எல்லா கூட்­டத்­தி­லும் பால்­டா­யில் சாப்­பிட்டு செத்­துப்­போ­யி­ருப்­பான் என்று பேசு­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அர­சி­ய­லில் வெற்றி, தோல்வி சக­ஜம். பால்­டா­யில் பழ­னி­சாமி அவர்­களே, உங்­க­ளுக்கு ரொம்ப, ரொம்ப சக­ஜம்.  ஆகவே நீங்­கள் எந்த தப்­பான முடி­வை­யும் எடுத்து விடக் கூடாது.      நீங்­கள் எப்­ப­வுமே நல்ல உடல் நலத்­தோடு, ஆரோக்­கி­யத்­து­டன் இருக்­க­வேண்­டும். எங்­கள் தலை­வர் 2.0 ஆட்­சி­யில் செய்­யும் சாத­னை­களை நீங்­கள் பார்க்க வேண்­டும். அ.தி.மு.க-வின் நிரந்­தர பொதுச்­செ­ய­லா­ள­ராக நீங்­கள்­தான் இருக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் எங்­க­ளுக்கு வச­தி­யாகஇருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">செய்து காட்­டு­வோமா? நம்­மு­டைய தலை­வர் மீண்­டும், மீண்­டும் சொல்­கின்­றார். இந்த சட்­ட­மன்ற தேர்­தல் டெல்லி அணியா, தமிழ்­நாடு அணியா என்று பார்த்து விடு­வோம் என்று கேட்­கின்­றார். தமிழ்­நாடு அணி நாம் ஜெயித்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">டெல்லி அணி என்று சொல்­கின்­றோமே ஏன்? மோடி, மோடிக்­குப் பின்­னால் ஒளிந்­தி­ருப்­பது நம்­பர் ஒன் முரட்டு அடிமை பால்­டா­யில் பழ­னிச்­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாம் இவ்­வ­ளவு திட்­டங்­கள் செய்­தி­ருக்­கி­றோமே, இவ்­வ­ளவு சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோமே, ஒன்­றிய அரசு, ஒன்­றிய பா.ஜ.க அரசு நமக்­குத் துணை­யாக நிற்­கி­றதா? நமக்­கான திட்­டங்­க­ளைக் கொடுக்­கி­றார்­களா? நமக்கு ஒன்­றிய அரசு பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டிற்கு என்று எந்­தத் திட்­ட­மும் கிடை­யாது. `தமிழ்­நாடு’ என்­கிற பெயரே பட்­ஜெட்­டில் இல்லை. இப்­ப­டித் தமிழ்­நாடு தொடர்ந்து ஒன்­றிய பா.ஜ.க அர­சால் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கிற ஒன்­றிய பா.ஜ.க. அர­சைத் தமிழ்­நாடு புறக்­க­ணித்து விரட்டி அடிக்க வேண்­டும்.  அ.தி.மு.க.விற்கு விழு­கின்ற ஒவ்­வொரு ஓட்­டும் பா.ஜ.க. சங்­கி­கள் கூட்­டத்­திற்கு விழு­கின்ற ஓட்டு என்­ப­தில் நீங்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள். நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கின்­றேன். நீங்­கள் முடிவு செய்­து­விட்­டது மட்­டும் போதாது. அடுத்த 14 நாட்­கள் களத்­தில் நீங்­கள் இறங்­கிப் பிரச்­சா­ரத்தை செய்­ய­வேண்­டும். 5 ஆண்­டு­க­ளில் என்­னென்ன திட்­டங்­களை கொண்டு வந்­தோம். அடுத்து ஆட்­சிக்கு வந்­தால் என்­னென்ன திட்­டங்­களை செய்­வோம் என்­பதை மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் 2.0 ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மீண்­டும் அ.தி.மு.க – பா.ஜ.க அடி­மைக் கூட்­டணி தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­விட்­டது என்­றால் தமிழ்­நாட்டை எவ்­வ­ளவு பின்­னோக்கி இழுத்து சென்­று­வி­டு­வர்­கள் என்று நீங்­கள் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும். ராஜா அன்­ப­ழ­கன் அவர்­களை மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் ஜெயிக்க வைத்­தீர்­கள் என்­றால், மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப்­போ­வது உறுதி.  அதை தியா­க­ராய நக­ரில் நீங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்­துச் சகோ­த­ரர் ராஜா அன்­ப­ழ­கன் அவர்­களை அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>