<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 11 2026 15:33:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260412T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="12042026-TRY-09" position.sequence="09" ex-ref="12042026-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">12.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">அனைத்து சாதி­யி­ன­ரும் அனைத்து மதத்­தி­ன­ரும் ஒற்­று­மை­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்:</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகுதி மத­நல்­லி­ணக்­கத்­துக்கு இன்று இந்­தி­யா­வுக்கே எடுத்­துக்­காட்­டாக இருக்­கும் தொகுதி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314519_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup315980_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Cheppakamudhay_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Cheppakamudhay1_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="bwimages_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="Cheppakamudhay2_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">சென்னை,ஏப்.12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">சென்னை திரு­வல்­லிக்­கே­ணி­யில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­திக்கு உட்­பட்ட கிறிஸ்­தவ மக்­கள், கிறிஸ்­தவ கல்வி நிறு­வ­னங்­கள், தொழில் நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்­டோ­ரைச்  சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">அப்­போது அவர், `` நம் சேப்­பாக்­கம்– திரு­வல்­லிக்­கேணி தொகுதி என்­பது ஒரு சாதா­ரண தொகுதி கிடை­யாது.  அது மத­நல்­லி­ணக்­கத்­துக்கு இன்று இந்­தி­யா­வுக்கே எடுத்­துக்­காட்­டாக இருக்­கக்­கூ­டிய தொகுதி. அனைத்து சாதி­யி­ன­ரும் அனைத்து மதத்­தி­ன­ரும் இன்று ஒன்­றாக ஒற்­று­மை­யாக நம் தொகு­தி­யில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்’’ என்று குறிப்பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ 
வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">நம் சேப்­பாக்­கம் -– திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யைச் சேர்ந்த கிறிஸ்­த­வச் சொந்­தங்­களை எல்­லாம் சந்­திப்­ப­தில், உண்­மை­யி­லேயே மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.  உங்­க­ளுக்கு நானும், எனக்கு நீங்­க­ளும் புதுசு கிடை­யாது, நமக்­குள் அறி­மு­கம் தேவை இல்லை. நாம் பல­முறை தனித்­த­னி­யா­கச் சந்­தித்­துள்­ளோம்.  இன்று அனை­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து, ஒரே இடத்­தில் சந்­திக்­கின்ற வாய்ப்­பைப் பெற்­றி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">நிகழ்ச்­சி­யைச் சிறப்­பாக ஏற்­பாடு செய்த மாவட்­டச் செய­லா­ளர் நே.சிற்­ற­ரசு அவர்­க­ளுக்­கும் கழக நிர்­வா­கி­ க­ளுக்­கும், கலந்­து­கொண்ட அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கலை­ஞர் பேரன்பு கொண்­ட­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">கழ­கத்­துக்­கும் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்­கு­மான உறவு இன்­றைக்கோ நேற்றோ உரு­வான உறவு கிடை­யாது.  கலை­ஞர் அவர்­கள் கிறிஸ்­தவ மக்­கள் மீது மிகுந்த பேரன்பு கொண்­ட­வர். அதே மாதி­ரி­தான் எங்­க­ளின் கழ­கத் தலை­வர் அவர்­க­ளும் உங்­கள் மீது மதிப்­பும் மரி­யா­தை­யும் கொண்­ட­வர், நம் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­கள். அதற்கு ஒரு முக்­கிய கார­ணம், எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­கள் படித்­த­தும் ஒரு கிறிஸ்­த­வக் கல்வி நிறு­வ­னம்­தான், நான் படித்­த­தும் ஒரு கிறிஸ்­த­வக் கல்வி நிறு­வ­னம்­தான்.  அத­னால் எப்­பொ­ழு­துமே ``ஆமாம், நான் கிறிஸ்­த­வன் என்று பெரு­மை­யா­கச் சொல்­லிக்­கொள்­கி­றேன்’’ என்று சொல்­வார்­கள்.  எனவே, அந்த உணர்­வோ­டும் பாசத்­தோ­டும்­தான் உங்­களை எல்­லாம் சந்­திக்க நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முக்­கி­ய­மான கால­கட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இன்­னும் சொல்­லப்­போ­னால், ``நான் உங்­க­ளில் ஒரு­வன்’’ என்­கின்ற உணர்­வோடு இங்கு வந்­தி­ருக்­கி­றேன்.  முக்­கி­ய­மான கால­கட்­டத்­தில் நாம் மீண்­டும் சந்­திக்­கி­றோம்.  இன்­னும் 13 நாட்­க­ளில் சட்­ட­மன்­றத் தேர்­தல், நம் தமிழ்­நாட்டை மீண்­டும் யார் ஆளப் போகி­றார்­கள் என்­கின்ற நிலை­யில் இந்­தத் தேர்­தல் நடை­பெற இருக்­கி­றது. அப்­ப­டிப்­பட்ட சம­யத்­தில் உங்­க­ளைச் சந்­திப்­ப­தைக் கூடு­தல் முக்­கி­ய­மான தரு­ண­மாக நான் கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இந்­தச் சூழ­லில், தமிழ்­நாட்­டைப் பாது­காக்­கக்­கூ­டிய, சிறு­பான்­மை­யின மக்­க­ளா­கிய உங்­க­ளின் உரி­மை­களை எல்­லாம் பாது­காக்­கக்­கூ­டிய நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், மீண்­டும் ஆட்­சிக்கு வர­வேண்­டும் என்­கின்ற அந்த எண்­ணம், இன்று நம் சேப்­பாக்­கம் திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் மட்­டு­மல்ல, தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கக்­கூ­டிய அனைத்து தமிழ் மக்­க­ளின் எண்­ண­மும் அது­வா­கத்­தான் இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது. குறிப்­பாக, சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி மக்­க­ளுக்கு அந்த எண்­ணம் கொஞ்­சம் அதி­க­மா­கவே இருக்­கி­றது.  அதற்­குக் கார­ணம் நம் சேப்­பாக்­கம்– திரு­வல்­லிக்­கேணி தொகுதி என்­பது ஒரு சாதா­ரண தொகுதி கிடை­யாது.  அது மத­நல்­லி­ணக்­கத்­துக்கு இன்று இந்­தி­யா­வுக்கே எடுத்­துக்­காட்­டாக இருக்­கக்­கூ­டிய தொகுதி. அனைத்து சாதி­யி­ன­ரும் அனைத்து மதத்­தி­ன­ரும் இன்று ஒன்­றாக ஒற்­று­மை­யாக நம் தொகு­தி­யில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­களை இந்­தத் தொகு­தி­யில் நீங்­கள் ஏற்­க­னவே வெற்­றி­பெற வைத்­தீர்­கள்.  கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கிட்­டத்­தட்ட 70,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் என்­னை­யும் வெற்­றி­பெற வைத்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பெருமை அடை­கின்­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">கடந்த ஐந்து வரு­ட­மாக இந்­தத் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கச் செயல்­பட்­ட­தில் நான் உண்­மை­யி­லேயே மிகுந்த பெருமை அடை­கின்­றேன். உங்­க­ளுக்­குத் தெரி­யும், வெறும் தேர்­த­லுக்­குத் தேர்­தல் வரு­ப­வன், காலத்­துக்கு வரு­ப­வன் நான் கிடை­யாது.  தினந்­தோ­றும் களத்­தில் மக்­க­ளோடு இருப்­ப­வன் நான்.  கடந்த ஐந்து வரு­ட­மாக உங்­க­ளு­டன் நின்று கொண்­டி­ருக்­கி­றேன், நீங்­க­ளும் என்­னு­டன்­தான் நின்று கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இப்­பொ­ழுது நான் உங்­க­ளி­டம் கேட்­பது, இந்த அரசு, இன்­னும் அதி­க­மாக, உங்­க­ளுக்கு உழைப்­ப­தற்­குத் தயா­ராக இருக்­கி­றது. நானும் தயா­ராக இருக்­கின்­றேன், அதற்கு உங்­க­ளின் ஆத­ரவு தேவை. தி.மு.க.ழகத்­தைப் பொறுத்­த­வ­ரைக்­கும் உங்­க­ளுக்­குப் பாது­காப்பு அர­ணாக மட்­டு­மல்ல, உங்­க­ளின் நல­னுக்­காக அடுக்­க­டுக்­கான திட்­டங்­க­ளை­யும் நிறை­வேற்றி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கிறிஸ்­தவ நலத் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">கிறிஸ்­டி­யன் ப்ரீஸ்ட் அண்ட் சர்ச் எம்­பி­ளா­யீஸ் வெல்­பேர் போர்டு என்­கின்ற நல­வா­ரி­யம் நம் திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான் தொடங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">பழை­மை­யான தேவா­ல­யங்­க­ளைப் புதுப்­பிக்­கின்ற அதற்­குத் தனி­யாக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­துக்கு, சென்­னை­யில் இருக்­கக்­கூ­டிய `செயின்ட் பால்ஸ் சர்ச்’ உள்­ளிட்ட தமிழ்­நாட்­டில் பல மாவட்­டங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய பல்­வேறு தேவா­ல­யங்­கள் இன்று புதுப்­பிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">நம் திரா­விட மாடல் ஆட்­சி­யில், இது­வ­ரைக்­கும் எட்டு தேவா­ல­யங்­கள் புதுப்­பிக்­கின்ற பணி இன்று நடை­பெற்று வரு­கி­றது.  2025–26 நிதி­யாண்­டில் மட்­டும் 10 கோடி ரூபாயை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இதற்­காக ஒதுக்­கிக் கொடுத்­தி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">ஜெரு­ச­லம் யாத்­தி­ரைக்கு நிதி உதவி வழங்­கப்­பட்டு ஒவ்­வொரு ஆண்­டும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் யாத்­தி­ரைக்­குச் சென்று வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இப்­படி ஒரு­பு­றம் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­கள், மறு­பு­றம் மதச்­சார்­பின்­மை­யைப் பாது­காக்­கின்ற அர­சி­யல், இந்த இரண்­டை­யும் நம் கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­கள் மிகச் சிறப்­பாக வெற்­றி­க­ர­மா­கச் செய்து கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இன்று இந்­தி­யா­வின் நிலைமை உங்­க­ளுக்­குத் தெரி­யும். இன்று தமிழ்­நாட்­டைத் தவிர, இந்­தியா முழு­வ­தும் வெறுப்­புப் பிரச்­சா­ரம் நடந்­தா­லும், மத­வா­தம் தலை­தூக்கி ஆடி­னா­லும், தமிழ்­நாடு என்­றைக்­குமே ஒரு அமை­திப் பூங்­கா­வா­கத்­தான் இன்று நாம் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். அதற்­குக் கார­ணம் நீங்­க­ளும் நானும்­தான், அதற்­குக் கார­ணம் நம் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு தான், நம் முத­ல­மைச்­சர்­தான். வட­நாட்­டில் பாசிச சக்­தி­கள் இன்று தலை­வி­ரித்து ஆடிக்­கொண்­டி­ருக்­கின்­றன. பல்­வேறு உதா­ர­ணங்­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பாசி­சக் கூட்­டம் முயற்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்­தில் உள்ளே சென்று தாக்­கு­தல் நடத்­து­கி­றார்­கள், இஸ்­லா­மி­யர்­க­ளைத் தாக்­கு­கி­றார்­கள்.  இப்­ப­டித்­தான் வட­மா­நி­லங்­க­ளில் சிறு­பான்­மை­யின சமூ­கங்­களை அச்­சு­றுத்தி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.  அதே மாதிரி ஒரு நிலை­மையை, தமிழ்­நாட்­டி­லும் ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று பாசி­சக் கூட்­டம் முயற்சி செய்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், இன்று சங்­கி­க­ளின் சூழ்ச்சி எது­வும் தமிழ் மண்­ணில் எடுப்­ப­ட­வில்லை.  அதற்­குக் கார­ணம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான்.  நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சிறு­பான்­மை­யின மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காப்­ப­தில் மிகுந்த உறு­தி­யோடு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­துக்கு, சமீ­பத்­தில் கிறிஸ்­த­வத் தொண்டு நிறு­வ­னங்­கள், தேவா­ல­யங்­களை எல்­லாம் குறி வைத்து ஃபாரின் கான்ட்­ரிப்­யூ­ஷன் ரெகு­லே­ஷன் அமெண்ட்­மென்ட் (FCRA Bill) என்று ஒரு சட்­டத் திருத்­தத்தை ஒன்­றிய பா.ஜ.க அரசு இன்று கொண்­டு­வ­ரப் பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">வெளி­நாட்­டி­லி­ருந்து தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வரும் நிதியை முறைப்­ப­டுத்­தப் போகி­றோம் என்­கின்ற பெய­ரில், நடக்­கப்­போ­கின்ற மிகப்­பெ­ரிய ஒரு சூழ்ச்சி இது.  விதி­மு­றை­களை மீறி­விட்­டார்­கள் என்று பொய்க்­கா­ர­ணத்­தைச் சொல்லி, கிறிஸ்­தவ நிறு­வ­னங்­க­ளின் சொத்­துக்­களை அப­க­ரிக்­கின்ற முயற்­சி­தான் இந்த முயற்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தனித்­து­வ­மான அர­சி­யல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">வக்ஃப் சட்­டத் திருத்­தம் மாதிரி கிறிஸ்­தவ நிறு­வ­னங்­கள் மேல் நடத்­து­கின்ற ஒரு நேர­டித் தாக்­கு­தல் இந்­தத் தாக்­கு­தல்.  இந்­தச் சட்­டத் திருத்­தத்தை முழு­மை­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும் என்று கழ­கத் தலை­வர் அவர்­கள், முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இது ஒரு சின்ன உதா­ர­ணம்­தான். தமிழ்­நாட்டு அர­சி­யல் எப்­போ­துமே தனித்­து­வ­மான அர­சி­யல்.  மத­நல்­லி­ணக்­கத்­தைப் பேசு­கி­ற­வர்­க­ளைத்­தான் தமிழ்­நாட்டு மக்­கள் ஆத­ரிப்­பார்­கள், மத­நல்­லி­ணக்­கத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­வர்­க­ளைத்­தான் தமிழ்­நாட்டு மக்­கள் என்­றைக்­குமே கொண்­டா­டு­வார்­கள். வெறுப்பு அர­சி­யல் பரப்­பு­கின்ற பா.ஜ.க–வைத் தமிழ்­நாட்டு மக்­கள் என்­றைக்­குமே ஏற்­றுக்­கொள்­ளவே மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">நேர­டி­யாக வந்­தால் மக்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்று தெரிந்­து­தான், அடி­மை­க­ளை­யும் துரோகி கூட்­டத்­தை­யும் கூட்­ட­ணி­யில் சேர்த்­துக்­கொண்டு இன்று சங்­கி­கள் கூட்­டம், பாசி­சக் கூட்­டம் உள்ளே நுழை­யப் பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நீங்­கள் பலப்­ப­டுத்த வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய முடி­யா­மல் கஷ்­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்ற சிறு­பான்­மை­யி­னர் விரோத பா.ஜ.க–வை, இன்று அ.தி.மு.க–வு­டைய தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் தன் தோள் மேல் தூக்கி வைத்­துக்­கொண்டு நுழை­யப் பார்க்­கி­றார். பாசிஸ்­டு­க­ளை­யும் அடி­மை­க­ளை­யும் இந்­தத் தேர்­த­லில் நாம் ஓட ஓட விரட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">அதற்கு, சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு, குறிப்­பாக, கிறிஸ்­தவ சமூக மக்­க­ளுக்கு எப்­போ­தும் பாது­காப்­பாக இருக்­கக்­கூ­டிய தி.மு.க–விற்கு நீங்­கள் ஆத­ரவு கொடுக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">பா.ஜ.க–வைத் துணிச்­ச­லோடு எதிர்த்து நிற்­கக்­கூ­டிய நம் தலை­வ­ரின் கரத்தை நீங்­கள் அனை­வ­ரும் சேர்ந்து பலப்­ப­டுத்த வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் அன்­போ­டும் உரி­மை­யோ­டும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">நம் தலை­வர் சொன்ன மாதிரி வரு­கின்ற தேர்­தல், `தமிழ்­நாடு வெர்­சஸ் டெல்லி’ என்­ப­து­தான் இந்­தத் தேர்­தல்.  மத­நல்­லி­ணக்­கத்­துக்­கும் பாசி­சத்­துக்­கும் இடையே நடக்­கக்­கூ­டிய தேர்­தல் இந்த சட்­ட­மன்­றத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இதில் நம் வெற்றி உறு­தி­யான வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.  கழ­கம் ஏழா­வது முறை­யாக ஆட்சி அமைக்க வேண்­டும், நம் முத­ல­மைச்­சர் இரண்­டா­வது முறை­யாக ஆட்­சிப் பொறுப்­பில் அமர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய நீங்­கள் அனை­வ­ரும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு உங்­க­ளின் பேரா­த­ர­வைத் தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">நம் சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் எனக்­கும், அதே மாதிரி நம் அண்ணா நகர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் சகோ­த­ரர் நே.சிற்­ற­ரசு அவர்­க­ளுக்­கும் நீங்­கள் உங்­க­ளின் பேரா­த­ர­வைத் தந்து மிகப்­பெ­ரிய வெற்­றியை உறுதி செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு, நிகழ்ச்­சிக்கு வருகை தந்த அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="12">மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் வில்­சன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதி மாறன், மாவட்­டச் செய­லா­ளர் நே.சிற்­ற­ரசு, பகு­திச் செய­லா­ளர் மதன் மோகன், அகஸ்­டின் பாபு, சி.ஹெச்.சேகர், வழக்­க­றி­ஞர் சர­வ­ணன், இப்­ரா­ஹி­முல்லா, பி.கே.பாபு, நிகழ்ச்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் டான் அசோக், டாக்­டர் டி.எஸ்.எஸ்.சாமு­வேல், பாஸ்­டர் கெவின் கமல்­ராஜ், ரெவ­ரென்ட் டி.ஜோசப் பென்­கு­மார், பாஸ்­டர் சாம் செல்­வ­ராஜ், கிரேட்டா ஸ்வரூப், பாஸ்­டர் டி.ரமேஷ், தமி­ழ­ரசி சந்­தி­ர­சே­கர், ரெவ­ரென்ட் ராஜா ப்ரீமேன் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்டனர்.</lang>
</p>
undefined
    </body.content>
  </body>
</nitf>