<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1214" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 11 2026 15:34:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260412T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="12042026-TRY-11" position.sequence="11" ex-ref="12042026-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">12.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="32">பத்து தோல்வி பழனிசாமி!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="32"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="54">வரக்கூடிய தேர்தலுக்குப் பிறகு 11 ஆகிவிடுவார்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">நாமக்கல் தொகுதி தேர்தல் பரப்புரையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup316623_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Namakkal9420_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நாமக்­கல், ஏப்.12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நாமக்­கல் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யி­டும் தி.மு.க. மாநில மக­ளிர் தொண்­டர் அணி செய­லா­ள­ரும், வேட்­பா­ள­ரு­மான நாமக்­கல் ப.ராணியை ஆத­ரித்து, நாமக்­கல் – புதுச்­சத்­தி­ரம் ஊராட்­சி­யில் தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி 
கரு­ணா­நிதி தேர்­தல் பிரச்­சா­ரம் 
மேற்­கொண்டு, பொது­மக்­க­ளி­டம் 
உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்கு 
சேக­ரித்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசிய கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.; நாமக்­கல் தொகு­திக்கு நமது முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்­தெ­டுத்து உங்­கள் கைக­ளிலே ஒப்­ப­டைத்­தி­ருக்­கக்­கூ­டிய வேட்­பா­ளர் நம்­மு­டைய வேட்­பா­ளர், உங்­க­ளோடு உழைத்­தி­ருக்­கக்­கூ­டிய வேட்­பா­ளர், மக­ளிர் தொண்­ட­ரணி செய­லா­ள­ராக பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கும் நாமக்­கல் ராணி அவர்­க­ளுக்கு உங்­க­ளு­டைய பொன்­னான வாக்­கு­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அளித்து, அவரை வெற்­றி­பெ­றச் செய்ய வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் வேண்­டிக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் பெய­ரைச் சொல்லி, மக்­க­ளைச் சந்­தித்து வாக்­குக் கேட்­கும்­போது, எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர், எங்­க­ளு­டைய திரா­விட மாடல் ஆட்சி மக்­க­ளுக்­குத் தந்­தி­ருக்­கக்­கூ­டிய வாக்­கு­று­தி­களை எல்­லாம் நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றோம் என்று சொல்லி, உரி­மை­யோடு உங்­க­ளி­டம் வாக்­குக் கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஐந்­தாண்டு ஆட்சி என்­பது மக்­க­ளுக்­கான ஆட்சி. அது­வும் முக்­கி­ய­மாக பெண்­க­ளுக்­கான ஆட்சி. மக்­க­ளின் முன்­னேற்­றத்­திற்­கான ஆட்சி. நம்ம வீட்டு பிள்­ளை­க­ளுக்­கான ஆட்சி என்­பதை சொல்லி, தலை­நி­மிர்ந்து வாக்கு கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், நம் எதி­ர­ணி­யில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள், தோல்வி பயத்­தால், எதை­எ­தையோ பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். எடப்­பாடி பழ­னி­சாமி எதை சொல்­வது என்றே இல்­லாத அள­விற்கு, இன்­றைக்கு தரம் தாழ்ந்து பேசக்­கூ­டிய நிலைக்கு இறங்­கி­விட்­டார். அவ­ருக்கு தோல்வி பயம் மட்­டு­மில்லை. தோல்வி ஜுரம் வந்­து­விட்­டது. எது­வுமே தேறா­துன்னு தெரிந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தரம் தாழ்ந்து விட்டார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சரை கீழ்த்­த­ர­மாக விமர்­சிக்­கக்­கூ­டிய ஒரு­வ­ராக அவர் மாறி­விட்­டார். தான்­கூட ஒரு முத­ல­மைச்­ச­ராக இருந்­தோம். எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கி­றோம் என்­பதை மறந்­து­விட்டு, இன்று தரம்­தாழ்ந்­து­விட்­டார். முத­ல­மைச்­ச­ரைப் பற்றி அவ்­வ­ளவு கொச்­சை­யா­கப் பேசக்­கூ­டிய அள­விற்கு அவ­ரின் தரம் தாழ்ந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால், இந்­தத் தேர்­த­லில் நாம் சரி­யான பாடத்­தைச் சொல்­லித்­தர வேண்­டும். அவர் தொடர்ந்து, தமிழ்­நாட்­டிற்கு துரோ­கம் செய்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஒரு­வர். இன்­றைக்கு தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசும்­போது சொல்­கி­றார், டெல்­லி­யில் இருக்­கக்­கூ­டிய பிஜே­பி­யு­டன் ஒற்­று­மை­யாக இணக்­க­மாக செயல்­பட்­டால்­தான் தமிழ்­நாட்­டிற்கு நல்­ல­தைச் செய்ய முடி­யும் என்று சொல்­கி­றார். அத­னால்­தான் அவர் இணக்­க­மாக செயல்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் கேட்­கி­றேன்..பிஜேபி தமிழ்­நாட்­டிற்கு ஏதா­வது ஒரு நன்­மை­யைச் செய்­தி­ருக்­கி­றார்­களா? இந்­தியை கொண்­டு­வந்து திணிக்­கி­றார்­கள். நம்ம பிள்­ளை­க­ளுக்கு கொடுக்க வேண்­டிய கல்­விக்­கான நிதியை பிடித்­து­வைத்­துக்­கொண்டு, ரூ.3,600 கோடிக்கு மேல நிதியை நிறுத்­தி­வைத்­தி­ 
ருக்­கி­றார்­கள். இந்தி படித்­தால்­தான் கொடுப்­பேன் என்று நிறுத்­தி­வைத்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கீழடி ஆய்­வ­றிக்கை, தமி­ழர்­க­ளின் தொன்­மையை, பெரு­மையை உல­கத்­திற்­குச் சொல்­லக்­கூ­டிய அந்த ஆய்­வ­றிக்­கையை மாற்­றிக்­கொடு, தமி­ழர்­க­ளின் பெரு­மையை, தொன்­மையை நீங்­கள் சொன்­னால் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம், மாற்­றிக்­கொடு என்று சொல்­லக்­கூ­டிய ஒன்­றிய அர­சாங்­கம். தமிழ்­நாட்­டிற்கு எதி­ரான திட்­டங்­களை, மக்­க­ளுக்கு எதி­ரான திட்­டங்­களை தொடர்ந்து கொண்­டு­வந்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய, நம்­மு­டைய வரிப்­ப­ணத்தை வாங்­கி­கொண்டு, எதை­யுமே திருப்­பிக் கொடுக்­காத பிஜேபி ஆட்சி. அவர்­க­ளோடு இணக்­க­மாக இருக்க வேண்­டும் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி. அவர் இணக்­க­மாக இருந்து தமிழ்­நாட்­டிற்கு என்ன திட்­டத்­தைக் கொண்­டு­வந்­தார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நீட் தேர்வை திணித்த கொடுமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய மாண­வர்­கள், மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் போய் படிக்க முடி­யாத நீட் தேர்­வைக் கொண்­டு­வந்து திணிப்­ப­தற்கு இவர் பயன்­பட்­டி­ருக்­கி­றார். வேற ஒன்­று­மில்லை. அந்­தத் திட்­டத்­தைத்­தான் இவர் தீட்டி, சிறப்­பாக செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கேன்னு சொன்­னா­ரல்­லவா, நீட்­டைத் தான் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளு­டைய குடி­யு­ரி­மை­யைப் பாதிக்­கக்­கூ­டிய அள­விற்கு, பறிக்­கக்­கூ­டிய அள­விற்கு சிஏ­ஏ–வை செயல்­ப­டுத்த பிஜே­பி­யு­டன் நின்­றி­ருக்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மின்­சா­ரக் கட்­ட­ணத்தை உயர்த்­திக்­கொண்டே போகக்­கூ­டிய ஒரு சூழ்­நிலை. அது உதய் மின்­திட்­டதை, ஜெய­ல­லிதா அவர்­கள்­கூட கையெ­ழுத்­துப்­போ­டாத அந்­தத் திட்­டத்­தில் இவர் கையெ­ழுத்­துப்­போட்­ட­தால்­தான்,இன்று தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய மக்­க­ளும், நாடு முழு­வ­தும் இருக்­கக்­கூ­டிய மக்­க­ளும் இந்த அள­வுக்கு கஷ்­டப்­ப­ட­ராங்­கன்ன இவ­ரைப் போன்­ற­வர்­கள் போட்ட கையெ­ழுத்­தால்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சா­யி­க­ளின் வாழ்க்­கை­யைப் பறிக்­கக்­கூ­டிய, எதி­ரான சட்­டத்தை ஆத­ரித்து திட்­டத்­தைப் போட்­ட­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி. நாடு முழு­வ­தும் உள்ள கிரா­மங்­க­ளில் வசிக்­கும் மக்­க­ளுக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­ட­து­தான் 100 நாள் வேலைத் திட்­டம். மோடி ஆட்­சிக்கு வந்­த­பி­றகு, யாருக்­கா­வது சம்­ப­ளம் சரி­யாக ஏறு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இல்ல...100 நாள் வேலை கிடைக்­கி­றதா? அதற்கு முன்பு கிடைத்­தது. மோடி ஆட்­சிக்கு வந்­த­பி­றகு, அந்த 100 நாள் வேலைத் திட்­டத்­திற்­குக் கொடுக்க வேண்­டிய நிதியை குறைத்­துக்­கொண்டே வரு­கி­றார்­கள். அந்த நிதி ஒதுக்­கீடு செய்­வ­தில்லை. இப்போ அதற்கு சட்­டம் வேறு போட்­டு­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்க நாமக்­கல் பக்­கத்­தில இருக்­கக்­கூ­டிய கிரா­மத்­தில், 100 நாள் வேலை யாருக்­குக் கொடுக்­க­ணும், எத்­தனை பேருக்­குக் கொடுக்­க­ணும், எவ்­வ­ளவு சம்­ப­ளம் கொடுக்­க­ணும் என்­பதை நாங்­கள் டெல்­லி­யில் இருந்து முடிவு செய்­வோம். தமிழ்­நாடு அரசு முடி­வு­செய்­யக்­கூ­டாது என்று ஒரு சட்­டத்தை கொண்­டு­வந்­தி­ருக்­கி­றது பிஜேபி ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த பிஜே­பியை ஆத­ரித்து, அவர்­க­ளோடு கைகோர்த்­துக்­கொண்டு நிற்­கக்­கூ­டி­ய­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி. இப்­படி, மக்­க­ளுக்கு எதி­ரான அத்­தனை திட்­டத்­திற்­கும் கைகோர்த்து, கைதட்டி வர­வேற்­ற­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டி–லி­மிட்­டே­சன், தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்ற ஒன்றை, பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்­டைத் தரு­கி­றேன் என்று சொல்லி, ஒன்­றிய அர­சாங்­கம் இப்­போது கொண்­டு­வ­ரு­கி­றார்­கள். இப்­போது இருக்­கும் எண்­ணிக்­கை ­யி­லேயே கொடுக்­க­லாம். 33சத­வீ­தம் பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்டை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்நாட்டை முடக்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தொகுதி மறுசீரமைப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், தொகு­தி­யெல்­லாம் மறு­சீ­ர­மைப்பு செய்­து­விட்­டுத்­தான் கொடுப்­பேன் என்று சொல்­கி­றார்­கள். இப்­போது தேர்­த­லுக்கு இடையே, எல்லா எதிர்க்­கட்­சி­க­ளும், இப்­போது வேண்­டாம், பத்து நாட்­கள் கழித்து பார்­லி­மென்டை வைத்­துக்­கொள்­ளுங்­கள் என்று சொல்­லக்­கூ­டிய நேரத்­தில், 3 நாள் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டி­யி­ருக்­கி­றது பிஜேபி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏன்? எந்­த­வி­த­மான கருத்­தை­யும் மக்­க­ளி­ட­மும்கேட்­க­வில்லை. எதிர்க்­கட்­சி­க­ளி­ட­மும் கேட்­க­வில்லை. தமிழ்­நாட்­டிற்கு எத்­தனை தொகு­தி­கள் நாம் இழந்­து­வி­டு­வோம். தமிழ்­நாட்­டில் மக்­கள் தொகையை கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம். தமிழ்­நாடு வளர்ச்­சி­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய ஒரு மாநி­ல­மாக இருக்­கி­றது. அந்­த­நி­லை­யிலே.. நமக்கு எத்­தனை தொகு­தி­கள் குறை­யும் என்று தெரி­ய­வில்லை. ஒரு­வேளை நமக்கு குறை­ய­வில்லை என்­றா­லும், மற்­ற­வர்­க­ளுக்கு எவ்­வ­ளவு அதி­க­ரிக்­கப்­ப­டும் என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்ப, நாம நாடா­ளு­மன்­றத்­தில் பேசும்­போது, நம்­மு­டைய கருத்­திற்கு மரி­யாதை இருக்­காது. அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை வந்­து­வி­டுமோ என்று எல்லா எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளும் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் எப்­படி அந்த மசோ­தா­வைக் கொண்­டு­வ­ரப்­போ­கி­றீர்­கள் என்று கேள்வி கேட்­டுக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நேரத்­தில், இந்­தத் தேர்­தல் நேரத்­தில், எதுக்­காக இதைப் பற்றி பேசு­கி­றீர்­கள்? அமித்­ஷாவே சொல்­லிட்­டாரு. எந்­தப் பிரச்­ச­னை­யும் இருக்­கா­துன்னு. அமித்ஷா சொல்­லி­யது உங்­க­ளுக்கு வேண்­டு­மா­னால் தெய்வ வாக்­காக இருக்­க­லாம். எங்­க­ளுக்கு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக நாங்­கள் தொடர்ந்து குரல் கொடுப்­போம். தமிழ்­நாட்டு மக்­க­ளின் பாது­காப்­பிற்­காக தொடர்ந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், முத­ல­மைச்­சர் தொடர்ந்து குரல் கொடுப்­பார்­கள், கேள்­வி­கள் கேட்­பார்­கள். அது தேர்­த­லுக்கு இடை­யே­வாக இருக்­கட்­டும், மற்ற நேர­மாக இருக்­கட்­டும். நம்­மு­டைய உரி­மை­கள் பாதிக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக தொடர்ந்து குரல் எழுப்­பிக்­கொண்­டி­ருப்­போம். போரா­டிக்­கொண்­டி­ருப்­போம். எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களே, உங்­க­ளைப் போல தமிழ்­நாட்டை நாங்­கள் எந்­தக் காலத்­தி­லும் விட்­டுக்­கொ­டுக்க மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மக்கள் பாடம் புகட்டுவார்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி விட்­டுக்­கொ­டுக்­கக்­கூ­டிய உங்­களை, தேர்­த­லுக்­குத் தேர்­தல், போன தேர்­த­லில் பிஜே­பிக்­கும் எனக்­கும் ஒட்­டில்லை, உற­வில்லை, கூடப்­போக மாட்­டேன் என்­றீர்­கள். இந்­தத் தேர்­த­லில் அமித்ஷா அவர்­களே சொல்­லிட்­டார். பிர­த­மரே சொல்­லிட்­டாரு. நீங்­கள் ஏன் கேள்வி கேட்­கி­றீர்­கள் என்று எங்­க­ளைப் பார்த்து கேள்­வி­கேட்­கி­றீர்­கள். தமிழ்­நாட்­டிற்­காக ஏன் பேசு­கி­றீர்­கள் என்று கேள்வி கேட்­கி­றீர்­கள். அத­னால, உங்­க­ளைப் போன்­ற­வர்­களை தமிழ்­நாட்டு மக்­கள் அடை­யா­ளம் கண்­டி­ருக்­கி­றார்­கள். இந்­தத் தேர்­த­லில் நிச்­ச­ய­மாக உங்­க­ளுக்கு மக்­கள் சரி­யான பாடத்­தைப் புகட்­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளு­டைய தர­மற்ற பேச்­சு­க­ளுக்கு.. தமிழ்­நாட்­டிற்கு நீங்­கள் செய்­யக்­கூ­டிய துரோ­கங்­க­ளுக்கு சரி­யான பாடத்தை மக்­கள் சொல்­லித் தரு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ரு­டைய மக்­க­ளுக்­கான பணி­களை பட்­டி­ய­லிட்­டுக்­கொண்டே போக­லாம். ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகை தரு­கி­றேன் என்று சொல்லி, இன்று ஒரு கோடியே 31 லட்­சம் சகோ­த­ரி­க­ளுக்கு அந்­தத் தொகை வழங்­கப்­பட்­டு­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறு­ப­டி­யும் தமிழ்­நாட்­டில் நம்­மு­டைய ஆட்­சி­தான். அதில் எந்த சந்­தே­க­மும் இல்லை. இன்­னும் ஒரு மாசம். நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சி, நம்­மு­டைய அண்­ணன் தள­பதி அவர்­க­ளு­டைய ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளைப் பார்த்து முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கடி சொல்­லு­வார், பத்து தோல்வி பழ­னி­சாமி என்று. வரக்­கூ­டிய தேர்­த­லுக்­குப் பிறகு 11 ஆகி­வி­டும். அதை­யும் சேர்ந்து உங்­க­ளது கணக்­கில் வைத்­துக்­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்சி மாற்­றத்­திற்­குப் பிறகு, நம்­மு­டைய தொட­ரக்­கூ­டிய நேரத்­தில், மக்­க­ளுக்­குத் தந்­தி­ருக்­க­கூ­டிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றிக் காட்­டி­னோம். உங்­கள் ஆட்­சி­யில் நீங்­கள் செல்­போன் கொடுப்­ப­தா­கக் கூறி­னீர்­கள். யாருக்­கும் கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனா.. நம்­மு­டைய ஆட்சி வந்­த­வு­டன் மக்­க­ளுக்­குத் தந்தை வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றிக் காட்­டி­னோம். ஆயி­ரம் ரூபாய் கொடுத்­தோம். இந்த ஆட்சி தொட­ர­வி­ருக்­கி­றது. அந்த ஆட்­சி­யிலே ஆயி­ரம் ரூபாய், 2 ஆயி­ர­மாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­க­ளுக்கு, சுய­உ­த­விக்­கு­ழுக்­க­ளில் இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­க­ளுக்கு சொந்­த­மாக தொழில் தொடங்க, ரூ.5 லட்­சம் மானி­யத்­தோடு கூடிய கடன் வழங்­கப்­ப­டும். நிலத்தை, நகையை அட­மா­னம் கேட்­கா­மல் இந்­தக் கடன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கல்­லூ­ரி­யில் படிக்­கும் நம்ம வீட்­டுப் 
பிள்­ளை­க­ளுக்கு இப்­போது மாதம் ரூ.1000 கொடுக்­கப்­ப­டு­கி­றது. அடுத்து நம்­மு­டைய ஆட்சி.. தொட­ரக்­கூ­டிய நமது ஆட்­சி­யிலே அந்­தத் தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லேப்­டாப்பை நிறுத்­தி­யது எடப்­பாடி பழ­னி­சாமி. மறு­ப­டி­யும் கொண்­டு­வந்­தது நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள். அடுத்து வரக்­கூ­டிய நமது ஆட்­சி­யில், 5 ஆண்­டு­க­ளுக்­குள் 35 லட்­சம் மாண­வ–­மா­ண­வி­க­ளுக்கு லேப்–­டாப்­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரத் திட்­டத்தை கொண்­டு­வந்­த­வர் நமது தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அந்த வழி­யிலே, நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள், வரக்­கூ­டி­ய­தேர்­த­லுக்­குப் பிறகு, எந்­த­வித மின்­மீட்­டர்­க­ளும் பொறுத்­தப்­ப­டாத மின்­மோட்­டார்­கள், 20 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்­கு­மேல் பயன்­பெ­றக்­கூ­டிய வகை­யிலே வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தொடரும் வளர்ச்சித் திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாமக்­கல் தொகு­தி­யில் தி.மு.க அரசு செய்த வளர்ச்­சிப் பணி­கள்: புதுச்­சத்­தி­ரம் ஊராட்சி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட 300க்கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு ரூ. 854.37 கோடி மதிப்­பீட்­டில் ராசி­பு­ரம் கூட்டு குடி­நீர் திட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டத்­தின் மூலம் குடிசை இல்லா மாவட்­ட­மாக நாமக்­கல் மாவட்­டம் மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நைனா­மலை வர­த­ராஜ பெரு­மாள் கோவி­லுக்கு சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. புதுச்­சத்­தி­ரம் ஒன்­றி­யம் முழு­வ­தும் சாலை வசதி மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. புதுச்­சத்­தி­ரத்­தில் சென்னை மாகா­ணத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர் டாக்­டர் ப. சுப்­ப­ரா­யன் அவர்­க­ளுக்கு மார்­ப­ளவு சிலை­யு­டன் அரங்­கம் திறக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாமக்­கல் தொகு­திக்­கான தேர்­தல் வாக்­கு­று­தி­கள்: நாமக்­கல்­லில் ஐவு­ளிக் குழு­மம் உரு­வாக்­கப்­ப­டும். காவேரி ஆற்­றில் மேலப்­பேட்­டைப்­பா­ளை­யம் பகு­தி­யில் குளிப்­ப­தற்­கான படித்­துறை அமைத்­துத் தரப்­ப­டும். திரு­ம­ணி­முத்­தாற்­றின் குறுக்கே ஒரு மேம்­பா­லம் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோழி வளர்ப்­புத் தொழி­லில் ஆலோ­ச­னை­களை வழங்­கிட ஒருங்­கி­ணைந்த கோழி வளர்ப்பு மையம் உரு­வாக்­கப்­ப­டும். மோக­னூர் பாசன வாய்க்­கால் கரை­யில் உள்ள மண்­பா­தையை, கான்­கி­ரீட் பாதை­யாக மாற்­றித் தரப்­ப­டும். சுய உதவி குழு பெண்­க­ளுக்கு முத­லீட்­டு­டன் தொழில் தொடங்க ரூ.5 லட்­சம் வரை பிணை எது­வு­மின்றி மானி­யத்­து­டன் வங்­கிக் கட­னு­தவி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­போன்ற திட்­டங்­க­ளை­யெல்­லாம் நிறை­வேற்­றித் தர எங்­க­ளுக்­கொரு வாய்ப்பை வழங்­கு­வீர்­கள் என்று நிச்­ச­ய­மாக நான் நம்­பு­கி­றேன். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய ஆட்சி தொடர வேண்­டும், தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்­காக, திரா­விட முன்­னேற்­றக்­க­ழக ஆட்சி இந்த மண்­ணிலே தொடர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழர்­க­ளின் சுய­ம­ரி­யா­தை­யைப் பாது­காக்க, மொழி­யைப் பாது­காக்க, நமது பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­தைப் பாது­காக்க, நாம் இந்­தத் தேர்­த­லிலே, திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்­திற்­கும், நம்­மு­டைய கூட்­டணி இயக்­கங்­க­ளுக்­கும் வாக்­க­ளிக்க வேண்­டும் என்ற உறு­தியை நாம் அத்­தனை பேரும் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்றை மறு­ப­டி­யும் குறிப்­பிட்­டுச் சொல்ல விரும்­பு­கி­றேன். என்­னு­டைய பிரச்­சா­ரத்தை நான் கீழ­டி­யிலே இந்த முறை தொடங்­கி­யி­ருக்­கி­றேன். ஏனென்­றால், இந்­தத் தேர்­தல் கீழ­டிக்­கும், நாக்­பூ­ருக்­கு­மான தேர்­தல் என்­பதை சொல்ல விரும்­பு­கி­றேன். நம்­மு­டைய சித்­தாந்­தத்­திற்­கும், அங்கு இருக்­கக்­கூ­டிய ஆர்.எஸ்.எஸ். சித்­தாந்­தத்­திற்­கும் எதி­ரான தேர்­தல் இந்­தத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழத்தை அவர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்க வேண்­டிய தேர்­தல். இந்த நாட்டை மீட்­டெ­டுக்க வேண்­டிய தேர்­தல் என்ற உணர்­வோடு நாம் இந்­தத் தேர்­த­லில் வாக்­க­ளிக்க வேண்­டும். மிகப்­பெ­ரிய வெற்­றியை இந்­தத் தொகு­தி­யிலே நமது நாமக்­கல் ராணி அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, நீங்­கள் உரு­வாக்­கித் தந்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு – கழக துணைப் பொதுச் செய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>