<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,758,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 13 2026 00:02:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260413T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13042026-CBE-02" position.sequence="02" ex-ref="13042026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="41">நேர்மையான   அதிகாரியான   தலைமைச்செயலாளர்   முருகானந்தத்தை   மாற்றியது   ஏன்?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="69">ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்க! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">தேர்தல் ஆணையத்திற்கு கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="T.R.Balu2.9.20_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப். 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">எவ்­வி­தப் புகார்­க­ளும் இல்­லாத நிலை­யில் தலை­மைச் செய­லா­ளரை மாற்­றி­யது ஏன் என்றும், பா.ஜ.க.– ஆர்.எஸ்.எஸ். ஆத­ர­வா­ள­ரான லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.யை அப்­ப­தவியிலிருந்து நீக்க வேண்­டும் என்­றும் தலை­மைத் தேர்­தல் ஆைண­யத்­திற்கு கழ­கப் பொரு­ளா­ள­ரும் நாடா­ளு­மன்ற மக்களவை கழ­கக் குழுத் தலை­வ­ரு­மான 
டி.ஆர்.பாலு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு அர­சின் தலை­மைச் செய­லா­ள­ராக எம். சாய்­கு­மார் இ.ஆ.ப அவர்­க­ளை­யும், ஊழல் தடுப்பு மற்­றும் கண்­கா­ணிப்­புத் துறை தலைமை இயக்­கு­ந­ராக சந்­தீப் மிட்­டல் IPS அவர்­க­ளை­யும் நிய­மித்து தலை­மைத் தேர்­தல் ஆணை­யம் பிறப்­பித்த உத்­த­ர­வு­களைத் திரும்­பப் பெற வலி­யு­றுத்தி தி.மு.கழ­கத்­தின் சார்­பில், கழ­கப் பொரு­ளா­ள­ரும் - நாடா­ளு­மன்ற மக்­க­ள­ வைக் குழுத் தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு அவர்­கள், தேர்­தல் ஆணை­யத்­திற்கு 10.04.2026 அன்று  
எழு­தி­யுள்ள கடி­தத்­தின் விவ­ரம்  வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பொதுத் தேர்­தல்­கள், இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யத்­தால் அறி­விக்­கப்­பட்டு, அதன் நடை­மு­றை­கள் தொடங்­கி­யுள்ள நிலை­யில், 8.4.2026 தேதி­யிட்ட உத்­த­ர­வின் வாயி­லாக, தமிழ்­நாட்­டின் தலை­மைச் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்த N. முரு­கா­னந்­தம் இ.ஆ.ப அவர்­க­ளுக்­குப் பதி­லாக, M. சாய் குமார் இ.ஆ. ப அவர்­க­ளைத் தமிழ்­நாட்­டின் தலை­மைச் செய­லா­ள­ராக ஆணை­யம் நிய­மித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தத் தன்­னிச்­சை­யான மற்­றும் நியா­ய­மற்ற பணி­மா­று­த­லுக்கு, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனது கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது. தேர்­தல் ஆணை­யத்­தின் உத்­த­ர­வில் இதற்­கான எவ்­வி­தக் கார­ணங்­க­ளும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை; மேலும், முரு­கா­னந்­தம் அவர்­கள் குறித்து எந்­த­வொரு முக்­கிய அர­சி­யல் கட்­சி­யும் எவ்­வி­தப் புகா­ரும் அளிக்­க­வில்லை. அவர் அப்­ப­த­வி­யி­லி­ருந்து இட­மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எவ்­வி­த­மான தர்க்­க­ரீ­தி­யான அல்­லது நியா­ய­மான கார­ணங்­க­ளும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தலை­மைச் செய­லா­ளர் முரு­கா­னந்­தத்தை
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மாற்­றி­யது நியா­ய­மல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் தேர்­தல் நடை­மு­றை­கள் தொடங்கி நடை­பெற்று வந்­தா­லும், அத­னால், அர­சாங்­கத்­தின் செயல்­பா­டு­கள் முடங்­கி­விடக் கூடாது. அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­கும் வரை­யில், நிர்­வா­கத்­தில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். குறிப்­பாக, அர­சி­யல்­கட்­சித் தலை­மைத் தேர்­தல் பணி­க­ளில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கும் இக்­கா­ல­கட்­டத்­தில், அர­சாங்­கத்­தின் அன்­றா­டச் செயல்­பா­டு­க­ளைக் கண்­கா­ணித்து நெறிப்­ப­டுத்­து­ப­வர் தலை­மைச் செய­லா­ளரே ஆவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முந்­தைய இந்த மாதத்­தில், நிர்­வா­கம் சார்ந்த பல்­வேறு வழக்­க­மான கோப்­பு­கள், நீதி­மன்ற வழக்­கு­கள் தொடர்­பான ஆவ­ணங்­கள் உள்­ளிட்ட பல முக்­கி­யப் பணி­கள் கையா­ளப்­பட வேண்­டி­யுள்­ளன. முரு­கா­னந்­தம் கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளா­கத் தலை­மைச் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்றி வரு­வ­தால், தேர்­தல் காலத்­தில் அர­சாங்­கத்­தின் செயல்­பா­டு­கள் எவ்­வி­தத் தடை­யு­மின்­றிச் சீராக நடை­பெ­று­வதை உறுதி செய்­வ­தற்கு மிக­வும் பொருத்­த­மா­ன­வர் அவரே ஆவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத்­த­கைய சூழ­லில், 8.4.2026 தேதி­யிட்ட தங்­கள் உத்­த­ரவை உட­ன­டி­யா­கத் திரும்­பப் பெற்­றுக்­கொண்டு, N. முரு­கா­னந்­தம் இ.ஆ.ப அவர்­களை மீண்­டும் தமிழ்­நாட்­டின் தலை­மைச் செய­லா­ள­ரா­கப் பணி­ய­மர்த்­து­மாறு தங்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கடும் ஆட்­சே­ப­னை­யைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தெரி­விக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, 2026-ஆம் ஆண்டு ஏப்­ரல் 8 ஆம் தேதி­யிட்ட உத்­த­ர­வின் வாயி­லாக, டாக்­டர் சந்­தீப் மிட்­டல் IPS அவர்­களை, காவல்­துறை தலைமை இயக்­கு­ந­ராக (ஆயு­தப்­படை மற்­றும் ஊழல் தடுப்பு &amp; கண்­கா­ணிப்­புப் பிரிவு) தேர்­தல் ஆணை­யம் நிய­மித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் தற்­போ­தைய ஆளுங்­கட்­சி­யா­க­வும், மிகப்­பெ­ரிய அர­சி­யல் கட்­சி­யா­க­வும் திக­ழும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில், டாக்­டர் சந்­தீப் மிட்­டல் அவர்­களை DVAC-இன் தலைமை இயக்­கு­நராக (DGP) நிய­மித்­தி­ருப்­ப­தற்கு எங்­க­ளின் கடும் ஆட்­சே­ப­னை­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம். முத­லா­வ­தாக, DVAC-இன் தலைமை இயக்­கு­நர் (DGP) பத­ விக்­கும், தேர்­தல் நடத்­தும் பணிக்­கும் எவ்­வி­தத் தொடர்­பும் இல்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றோம். இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் 324-வது பிரி­வின் கீழ் தேர்­தல் ஆணை­யத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரம் என்­பது, வாக்­கா­ளர் பட்­டி­ய­லைத் தயா­ரித்­தல் மற்­றும் தேர்­தல்­களை நடத்­து­தல் ஆகிய பணி­களை மேற்­பார்­வை­யி­டு­தல், வழி­ந­டத்­து­தல் மற்­றும் கட்­டுப்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்­றுக்கு மட்­டுமே உரி­ய­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு தேர்­தலை நோக்­கிச் செல்­கி­றது என்­ப­தற்­காக மட்­டும், அர­சின் அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் செயல்­ப­டுத்­தும் வகை­யில், தேர்­தல் ஆணை­யத்­திற்கு வழங்­கப்­பட்ட ஒரு வரம்­பற்ற அதி­கா­ர­மாக (Carte Blanche) இது அமை­யாது. அர­சி­ய­ல­மைப்­பும், மக்­கள் பிர­தி­நி­தித்­து­வச் சட்­டங்­கள் 1950 மற்­றும் 1951-உம், தேர்­தல் தொடர்­பான பணி­க­ளைச் செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை மட்­டுமே தேர்­தல் ஆணை­யத்­திற்கு வழங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அதி­கா­ர­மில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாண்­பமை உச்­ச­நீ­தி­மன்­றம் தனது பல்­வேறு தீர்ப்­பு­க­ளில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தைப் போலவே, அர­சி­ய­ல­மைப்­பின் 324-வது பிரி­வின்­கீழ் உள்ள அதி­கா­ரம் என்­பது தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்­பான பணி­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும். தேர்­தல் காலத்­தில், தேர்­தல் ஆணை­ய­மா­னது அர­சுக்கு மாற்­றா­கச் செயல்­ப­டு­வ­தில்லை. DVAC என்­பது, அரசு அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்­கும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்ட ஒரு அமைப்­பா­கும். தேர்­தல்­களை நடத்­து­வ­தில் DVAC-க்கு எவ்­வி­தப் பங்­கும் இல்லை. எனவே, தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்­பான பணி­க­ளு­டன் தொடர்­பில்­லாத அர­சுப் பத­வி­களுக்கு அதி­கா­ரி­களை நிய­மிக்­கவோ அல்­லது இட­மாற்­றம் செய்­யவோ தேர்­தல் ஆணை­யத்­திற்கு அதி­கா­ரம் இல்லை என்­பதே எங்­க­ளின் முதன்­மை­யான ஆட்­சே­ப­னை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஆர்.எஸ்.எஸ்.அமைப்­பின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஆத­ர­வா­ளர் சந்­தீப் மிட்­டல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரண்­டா­வ­தாக, DVAC-–ன் செயல்­பா­டு­க­ளின் தன்­மை­யைக் கருத்­தில் கொண்டு பார்க்­கை­யில், களங்­க­மற்ற நேர்மை, நடு­நி­லைமை மற்­றும் எவ்­வி­தக் குறை­பா­டு­க­ளு­மற்ற பணிப்­ப­திவு ஆகி­ய­வற்­றைக் கொண்ட ஓர் அதி­கா­ரியை மட்­டுமே DVAC-இன் தலை­வ­ராக நிய­மித்­தி­ருக்க வேண்­டும். டாக்­டர் சந்­தீப் மிட்­டல் அவர்­கள் பா.ஜ.க மற்­றும் RSS அமைப்­பு­க­ளின் ஆத­ர­வா­ளர் என்­பது அனை­வ­ரும் அறிந்த ஒரு உண்­மை­யா­கும். இது வெறும் யூகத்­தின் அடிப்­ப­டை­யில் எழுப்­பப்­ப­டும் ஐயம் அல்ல; மாறாக, டாக்­டர் சந்­தீப் மிட்­டல் அவர்­கள் தனது சமூக ஊட­கப் பக்­கங்­க­ளில் பதி­விட்­டுள்ள கருத்­துக்­க­ளின் அடிப்­ப­டை­யில், அவரே ஒப்­புக்­கொண்ட ஒரு உண்­மை­யா­கும். அவர் பதி­விட்­டுள்ள பின்­வ­ரும் எக்ஸ் தளப் பதி­வைத் தய­வு­செய்து காண­வும்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சந்­தீப் மிட்­டல் மீது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஊழல் குற்­றச்­சாட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், இஸ்­லாம் மற்­றும் “இட­து­சாரி சித்­தாந்­தம்” குறித்து சமூக ஊட­கங்­க­ளில் அவர் பதி­விட்­டுள்ள கருத்­து­கள், அந்த அதி­காரி ஒரு­த­லைப்­பட்­ச­மா­கச் செயல்­ப­டு­ப­வரே தவிர நடு­நி­லை­யா­ளர் அல்ல என்­ப­தில், நேர்­மை­யா­கச் சிந்­திக்­கும் குடி­மக்­க­ளுக்கு எவ்­வித ஐய­மும்இல்லை. பின்­வ­ரும் ட்வீட்­டை தய­வு­செய்து காண­வும்:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பா.ஜ.க. தலை­மை­யி­லா­ன­தும், இத்­தேர்­தல் களத்­தில் பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கப் போட்­டி­யி­டும் அ.தி­.மு.க.வை உள்­ள­டக்­கி­ய­து­மான ‘தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணிக்கு’ (NDA) ஆத­ர­வா­கவே அவர் செயல்­ப­டு­வார் என்­ப­தில், எங்­கள் மன­தி­லும் தமிழ்­நாட்டு மக்­க­ளின் மன­தி­லும் எவ்­வித ஐய­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தனது சித்­தாந்­தச் சார்­பு­க­ளைத் தவிர, டாக்­டர் மிட்­டல் மீது கடு­மை­யான ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளும் சுமத்­தப்­பட்­டுள்­ளன. டாக்­டர் மிட்­டல் நிர்­வா­கப் பிரிவு DIG-யாகப் (காவல்­துறை துணைத் தலை­வர்) பணி­யாற்­றிய ‘தேசிய குற்­ற­வி­யல் மற்­றும் தட­ய­வி­யல் அறி­வி­யல் நிறு­வ­னத்­தில்’ (NICFS) பணி­பு­ரிந்த சங்­கல்ப் ஆனந்த் என்­ப­வர், 2014-ஆம் ஆண்டு உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் மது­ரா­வில், தனது மனை­வி­யு­டன் இணைந்து ரயில் முன் பாய்ந்து தற்­கொலைசெய்­து­கொண்­டார். தனது தற்­கொ­லைக் குறிப்­பில், NICFS-இல் நடை­பெற்ற 250 கோடி ரூபாய் மதிப்­பி­லான கட்­டு­மான ஊழ­லுக்கு டாக்­டர் மிட்­டல், மற்­றொரு IPS அதி­கா­ரி­யான கம­லேந்­திர பிர­சாத் (UP பிரிவு) மற்­றும் வேறு சிலரே கார­ணம் என்று அவர் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார். டாக்­டர் மிட்­டல் மீது உத்­த­ரப்­பி­ர­தேச அரசு முதல் தக­வல் அறிக்­கை­யை­யும் பதிவு செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளின் தீவி­ரத்­தன்மை கார­ண­மா­கவே, நீண்ட கால­மாக மத்­தி­யப் பணிக்கு (Central Deputation) அனுப்­பப்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், ஒன்­றிய அரசு அவரை ADGP (கூடு­தல் காவல்­து­றைத் தலை­வர்) பத­விக்­குத் தேர்வு செய்து அங்­கீ­க­ரிக்­க­வில்லை; அதே­வே­ளை­யில், 1998-ஆம் ஆண்டு பிரி­வைச் சேர்ந்த பிற அதி­கா­ரி­கள் ADGP-யாகப் பதவி உயர்வு பெற்று அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவ­ரை­வி­டப் பணி­யில் மிக­வும் இளை­ய­வர்­க­ளான (2007-ஆம் ஆண்டு பிரி­வைச் சேர்ந்த) அதி­கா­ரி­க­ளுக்­குக்­கூட ‘சிறந்த சேவைக்­கான காவல்­து­றைப் பதக்­கம்’ வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில், கடந்த 13 ஆண்­டு­க­ளாக டாக்­டர் மிட்­ட­லுக்கு அப்­ப­தக்­கம் வழங்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மார்க்­சிஸ்ட் கட்­சியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">விமர்­சித்த சந்­தீப் மிட்­டல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">டாக்­டர் மிட்­டல் பொது­வெ­ளி­யில் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­கள், அவர் RSS மற்­றும் பாஜ­க­வின் தீவிர ஆத­ர­ வா­ளர் என்­ப­தை­யும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இட­து­சா­ரிச் சித்­தாந்­தத்­திற்­கும் எதி­ராக வெறுப்­புப் பேச்­சு­க­ளைப் பேசிய நீண்­ட­கா­லப் பின்­ன­ணி­யைக் கொண்­ட­வர் என்­ப­தை­யும் எங்­கள் மன­தில் எவ்­விதஐய­மு­மின்றி உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. அவர் மீது கடு­மை­யான ஊழல் மற்­றும் முறை­கே­டான நடத்தை தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளும் நிலு­வை­யில் உள்­ளன. இத்­த­கைய பின்­ன­ணி­யைக் கொண்ட ஒரு அதி­கா­ரியை DVAC-இன் (ஊழல் தடுப்பு மற்­றும் கண்­கா­ணிப்­புத் துறை) தலை­வ­ராக நிய­மிப்­பது, பொது­மக்­க­ளின் நல­னுக்கு உகந்­த­தாக இருக்­காது. 2020-ஆம் ஆண்­டில், டாக்­டர் மிட்­டல் சமூக ஊட­கங்­க­ளில் வெளி­யிட்ட பதி­வு­கள், ‘அகில இந்­தி­யப் பணி­கள் (நடத்தை) விதி­கள், 1968’-க்கு முர­ணாக அமைந்­தி­ருந்­தன எனக் குறிப்­பிட்டு; அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி, அப்­போ­தைய தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ருக்கு மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி (CPI(M)) கடி­தம் எழு­தி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக, டாக்­டர் மிட்­டல் மார்க்­சிஸ்ட் கட்­சியை “நகர்ப்­புற நக்­சல்­கள்” (Urban Naxals) என்று வர்­ணித்­தார். அர­சி­யல் சார்ந்த விவ­கா­ரங்­கள் குறித்து அவர் வெளி­யிட்­டி­ருந்த சில ட்வீட்­கள், RSS-இன் வல­து­சாரி சித்­தாந்­தத்­தின் மீதான அவ­ரது விசு­வா­சத்­தை­யும் ஆத­ர­வை­யும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக ‘The News Minute’ இணை­ய­த­ளம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. (காண்க: https://www.thenewsminute.com/tamil-nadu/cpim-asks-tn-govt-sack-addl-dgp-sandeep-mittal-pro-rss-posts-twitter-133191).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பா.ஜ.க.வின் தேர்­தல் முக­வ­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">செயல்­ப­டும் தேர்­தல் ஆணை­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு நடு­நி­லை­யான மற்­றும் பார­பட்­ச­மற்ற அர­சி­ய­ல­மைப்பு அமைப்­பா­கச் செயல்­பட வேண்­டிய தேர்­தல் ஆணை­யம் எனும் நிறு­வ­னம், பார­திய ஜனதா கட்­சி­யின் (BJP) தேர்­தல் முக­வ­ரா­கச் செயல்­ப­டு­வது மிக­வும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. தேர்­தல் ஆணை­யம் அர­சி­ய­ல­மைப்­புக்­கும் இந்­நாட்­டின் சட்­டங்­க­ளுக்­கும் மேலா­னது என்று, ஆணை­யத்­தில் உள்ள எவ­ரு­டைய மன­தி­லும் எவ்­வி­தத் தவ­றான எண்­ண­மும் இருக்­காது என்று நாங்­கள் நம்­பு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அசா­மில் அதி­கா­ரி­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மாற்­றா­தது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு, மேற்கு வங்­கம் மற்­றும் கேரள மாநி­லங்­க­ளில் தேர்­தல் ஆணை­யம் எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­களை இந்­திய மக்­கள் உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­கின்­ற­னர். அவை அசா­மில் (அங்கு எந்­த­வொரு உயர் அதி­கா­ரி­யும் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை) தேர்­தல் ஆணை­யத்­தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றி­லும் மாறாக இருக்­கின்­றன. சொல்­லப்­போ­னால், தேர்­தல் நடத்தை விதி­கள் அம­லில் இருக்­கும்­போதே, பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் முத­ல­மைச்­ச­ரின் அர­சி­யல் எதி­ரி­க­ளுக்கு எதி­ராக அசாம் காவல்­துறை ஒரு­தலைப்­பட்­ச­மான மற்­றும் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­களைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனவே, 08.04.2026 தேதி­யிட்ட தேர்­தல் ஆணை­யத்­தின் உத்­த­ர­வைத் திரும்­பப் பெறு­மா­றும்; தமிழ்­நாட்­டில் ஆயு­தப்­ப­டை­கள், கண்­கா­ணிப்பு மற்­றும் ஊழல் தடுப்­புப் பிரி­வு­க­ளின் தலைமை இயக்­கு­ந­ரா­கப் (DG) பணி­யாற்­றும் டாக்­டர் சந்­தீப் மிட்­டலை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கு­மா­றும், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர், மற்­றும் தேர்­தல் ஆணை­யர்­கள் இரு­வர் ஆகிய மூவ­ரை­யும் நாங்­கள் கேட்­டுக்­கொள்­கி­றோம். இதற்கு நீங்­கள் இணங்­கத் தவ­றும்­பட்­சத்­தில், சட்­டத்­திற்கு உட்­பட்­டுத் தகுந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள நாங்­கள் நிர்ப்பந்­திக்­கப்­ப­டு­வோம் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு டி.ஆர்.பாலு எம்.பி. அவர்­கள் தமது 
கடி­தத்­தில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>