<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 13 2026 00:05:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260413T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13042026-CBE-06" position.sequence="06" ex-ref="13042026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை    </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">அர­சி­யல் – நிதி – மொழி என, அனைத்து உரி­மை­க­ளை­யும் பறிக்­கத் துடிக்­கும்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">ஒன்­றிய பா.ஜ.க.வுக்­கும் – பாதம் தாங்­கும் முரட்டு அடி­மை­க­ளுக்­கும் வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பாடம் புகட்­டு­வோம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup316410_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup316766_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Udayasirspeec_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Udayasirspeec1_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">திருச்சி,ஏப்.13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">திருச்சி மாவட்­டம், மண்­ணச்­ச 
­நல்­லூ­ரில், கழக இளை­ஞர் அணிச் 
செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள், மண்­ணச்­ச­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் 
வேட்­பா­ளர் சீ.கதி­ர­வனுக்கு உத­ய­சூ­ரி­யன் 
சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்­துப் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">அப்­போது அவர், ‘‘அர­சி­யல் உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை என அனைத்து உரி­மை­க­ளை­யும் பறிக்­கத் துடிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க.வையும்– அவர்­க­ளுக்கு பாதம் தாங்­கும் முரட்டு அடி­மை­க­ளை­யும் வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், வீழ்த்­து­வோம்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான, எழுச்­சி­யான வர­வேற்பை அளித்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் முத­லில் என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக்­கள் சேவை­யில் ஆர்­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">நான் கிட்­டத்­தட்ட 12 நாட்­க­ளாக, தமிழ்­நாடு முழு­வ­தும் சென்று பிரச்­சா­ரம் செய்­து­கொண்டு இருக்­கி­றேன். ஒவ்­வொரு தொகு­தி­யா­கச் சென்று ஒவ்­வொரு வேட்­பா­ள­ருக்­கும், நம் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்­கும் நம் வெற்­றிச் சின்­ன­மான உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­குக் 
கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">இன்று, தலை­வர், `என்னை மண்­ணச்­ச­நல்­லூர் சென்று உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் கதி­ர­வ­னுக்கு வாக்­குக் கேட்­டு­விட்டு வா’ என்று அனுப்பி இருக்­கி­றார்­கள். நான் அப்­ப­டித்­தான் நினைத்­துக்­கொண்டு வந்­தேன். சரி, கதி­ர­வ­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள் என்று கேட்­க­லாம் என்று வந்­தேன்.  ஆனால், இங்கே வந்து பார்த்த பிற­கு­தான் தெரி­கி­றது, நீங்­கள் எல்­லாம் ஏற்­க­னவே ஒரு முடி­வெ­டுத்­து­விட்­டீர்­கள் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் கடந்த முறையே நீங்­கள் கிட்­டத்­தட்ட 60,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் கதி­ர­வனை வெற்றி பெறச் செய்­தீர்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் இந்த முறை ஒரு லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்ய வேண்­டும். நிச்­ச­யம் செய்­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">கதி­ர­வ­னைப் பற்றி உங்­க­ளி­டம் நான் அதி­க­மா­கப் பேச விரும்­ப­வில்லை. அவரை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை. உங்­கள் அனை­வ­ருக்­கும் இந்­தத் தொகுதி முழு­வ­தும் அறி­மு­க­மா­ன­வர்­தான்  கதி­ர­வன் அவர்­கள். இரண்­டா­வது முறை­யா­கப் போட்­டி­யி­டு­கி­றார். மக்­க­ளுக்­குச் சேவை செய்ய வேண்­டும் என்ற ஒரு உன்­னத நோக்­கத்­தில் ஆர்­வ­மிக்க ஒரு இளை­ஞர். தேர்­தல் நேரத்­தில் மட்­டும் அல்ல, எந்த நேரத்­தி­லும் உங்­க­ளால் எளி­தாக அவ­ரைச் சென்று அணுக முடி­யும், பார்க்க முடி­யும், உங்­கள் கோரிக்­கை­
க­ளைக் கூற முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வேலை­வாய்ப்பு முகாம்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">எந்த நேரத்­தி­லும் மக்­கள் பணிக்­குத் தயா­ராக இருக்­கக்­கூ­டி­ய­வர்­தான் சகோ­த­ரர் கதி­ர­வன் அவர்­கள். குறிப்­பாக இந்­தத் தொகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய இளை­ஞர்­க­ளுக்கு, மாண­வர்­க­ளுக்கு ஒரு சிறப்­பான எதிர்­கா­லத்தை உரு­வாக்­கித் தர வேண்­டும் என்று ஒரு லட்­சி­யத்­து­டன் உழைத்­துக்­கொண்டு இருக்­கி­றார். இந்­தத் தொகுதி இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு முகாம்­கள், அனைத்து வேலை­வாய்ப்­புத் திட்­டங்­க­ளை­யும், வேலை­வாய்ப்பு முகாம்­க­ளைத் தொடர்ந்து நடத்தி ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை, சகோ­த­ரர் கதி­ர­வன் அவர்­கள் உறுதி செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">நீங்­கள் கோரிக்கை வைத்­தீர்­கள் என்­றால், அதை நிறை­வேற்­று­வ­தற்கு எல்லா முயற்­சி­க­ளி­லும் இறங்­கு­வார். எப்­போ­துமே உங்­க­ளின் குர­லாக இருக்­கக்­கூ­டி­ய­வர், எல்­லா­வற்­றை­யும்­விட மிக மிக முக்­கி­யம் மிக­வும் வச­தி­யான வேட்­பா­ளர். அது உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும். அதை நான் சொல்ல வேண்­டி­ய­தில்லை. அத­னால் அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள். நான் இன்று அவரை அழைத்து வந்­தி­ருக்­கி­றேன். எந்த உரி­மை­யில் உங்­க­ளைப் பார்க்க வந்­தேன்? எந்த உரி­மை­யில் மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு, மீண்­டும் கதி­ர­வ­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று எந்த உரி­மை­யில் கேட்க வந்­தேன்? கடந்த ஐந்து ஆண்­டு­கள் அவர் செய்­தி­ருக்­கக்­கூ­டிய பணி­கள், அவர் இந்­தத் தொகு­திக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­கள்.  ஒரு சில திட்­டங்­களை மட்­டும் நான் இங்கே ஞாப­கப்­
படுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மண்­ணச்­ச­நல்­லூர்க்கான திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">அரசு உயர்­நி­லைப் பள்ளி மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­க­ளில் கிட்­டத்­தட்ட 55 கோடி ரூபாய் செல­வில் 140 புதிய வகுப்­ப­றை­க­ளைக் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">ஊராட்­சி­க­ளில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தார்ச்­சாலை மற்­றும் பாலங்­களை,  கதி­ர­வன் அவர்­கள் உங்­க­ளுக்­கா­கச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">311 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில் அனைத்து ஊராட்­சி­க­ளி­லும் குடி­நீர் வச­தி­கள், வடி­கால் வச­தி­கள் உள்­ளிட்ட பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">535 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மரம் நடு­தல், மரத்­தோட்­டம் அமைத்­தல், நாற்­றுப்­பண்ணை அமைத்­தல் போன்ற பணி­கள், 6 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்து கிளி­ய­நல்­லூர், திரு­வாசி, சம­ய­பு­ரம், மண்­ணச்­ச­நல்­லூர் பகு­தி­க­ளில் அனைத்து வாய்க்­கால்­க­ளும் தூர்­வா­ரப்­பட்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">பெரு­வளை வாய்க்­கால், பங்­குனி வாய்க்­கால், வடக்கு தெற்கு அய்­யன் வாய்க்­கால், காவேரி ஆறு ஆகி­ய­வற்­றில் 22 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அணைக்­கட்­டு­கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">அனைத்து ஊராட்­சி­க­ளி­லும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு மட்­டும் 19 கோடி ரூபாய் அள­வுக்கு, நலத்­திட்ட உத­வி­களை உங்­க­ளின் வேட்­பா­ளர்  கதி­ர­வன் அவர்­கள் செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">அரசு உதவி பெறு­கின்ற அனைத்து மாணவ மாண­வி­க­ளுக்­கும் 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மிதி­வண்­டி­களை வழங்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">மண்­ணச்­ச­நல்­லூர் தொகு­திக்­குட்­பட்ட சுமார் 3,000 குடும்­பங்­க­ளுக்கு நம் திரா­விட மாடல் அரசு பட்­டாக்­களை வழங்­கி­யுள்­ளது. இவற்­றை­யெல்­லாம் செய்து கொடுத்­து­விட்டு, அந்த உரி­மை­யோ­டு­தான் மீண்­டும் அவ­ருக்கு ஒரு வாய்ப்­புத் தாருங்­கள் என்று உங்­க­ளி­டம் கேட்க 
வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">நம் தலை­வர் கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி இருக்­கி­றோம். கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை கொடுத்­தோம். மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம், கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம் கொடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இல­வச மடிக்­க­ணி­னி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">மூன்று மாதங்­க­ளுக்கு முன்­னால் 10 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணி­னி­யை­யும் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">கல்வி ஊக்­கத்­தொகை, அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சென்று சேர்ந்­தா­லும் ஆயி­ரம் ரூபாய் மாதம் தோறும் கல்வி ஊக்­கத்­தொகை நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது. இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">இந்த தேர்­த­லுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம் மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே மாதம் 1,000 ரூபாய் இல்லை, அதை உயர்த்தி 2,000 ரூபாய் வழங்­கு­வ­தா­கத் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">முதி­யோர் உத­வித் தொகை இப்­போது 1,200 ரூபாய் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம், அதை உயர்த்தி 2,000 ரூபாய் வழங்­கு­வேன் என்று தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">கல்வி ஊக்­கத்­தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 1,500 ரூபாய் கொடுப்­போம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">10 லட்­சம் வீடு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டத்­தில் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் வீடு­கள் கட்­டப்­பட்டு யார் யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அவர்­க­ளுக்­கெல்­லாம் வீடு ஒதுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் கல்­லூ­ரி­க­ளில் பயி­லும் 35 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">இன்­னொரு முக்­கி­ய­மான திட்­டம் உங்­க­ளுக்­குத் தெரி­யும், ஆட்சி அமைந்த உடனே நம் முத­ல­மைச்­சர், நம் அரசு அனைத்து மக­ளி­ரி­ட­மும் 8,000 ரூபாய் கொடுத்­து­வி­டு­வார். அதை வைத்து உங்­கள் வீடு­க­ளுக்கு என்ன மின் சாதன பொருட்­கள் தேவையோ அவற்றை நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நிச்­ச­யம் சொன்­னால் அதைச் செய்து காட்­டு­வார், அதைச் செய்ய வேண்­டும் என்­றால், வரும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இந்த மண்­ணச்­ச­நல்­லூர் தொகு­தி­யில் ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் கதி­ர­வனை வெற்­றி­பெ­றச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நிதிகொடுத்­தி­ருக்­கி­றார்­களா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">ஒன்றை மட்­டும் யோசித்­துப் பாருங்­கள், நாம் இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். ஐந்து ஆண்­டு­ க­ளில் இவ்­வ­ளவு திட்­டங்­க ­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். மீண்­டும் ஐந்து ஆண்­டு­கள் ஆட்­சிக்கு வந்­தால், என்ன செய்­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். ஒன்­றிய பா.ஜ.க. அரசு கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டைத் திரும்­பிப் பார்த்­தி­ருக்­கி­றார்­களா? இப்­போது தேர்­தல் என்ற உடனே மோடி­யும் அமித்­ஷா­வும் மாறி மாறி தமிழ்­நாட்­டுக்கு வரு­கி­றார்­களே, தமிழ்­நாட்­டிற்கு நிதி கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">கடந்த ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு என்று ஒரு திட்­டம்­கூ­டக் கிடை­யாது. தமிழ்­நாடு என்­கிற பெயரே அதில் இல்லை. இப்­படி தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கின்ற ஒன்­றிய பா.ஜ.க. அரசை, தமிழ்­நாட்­டி­லி­ருந்து நாம் ஓரங்­கட்ட வேண்­டும். பா.ஜ.க. நேர­டி­யாக வந்­தால் நுழைய விட­மாட்­டோம் என்று தெரிந்து இன்று அ.தி.மு.க. என்­கிற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு உள்ளே வரப் பார்க்­கி­றார்­கள். அத­னால் தான் நம் தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­கி­றார், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் தமிழ்­நாடு அணி vs டெல்லி அணி என்று. தமிழ்­நாட்டு அணி நாம் வெற்­றி­பெற்று காட்ட வேண்­டும. டெல்லி அணிக்கு மோடி­தான் கேப்­டன். அவ­ரின் அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">முரட்­டுப் பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுத்தொண்­டர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். எங்­கா­வது முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? இதைத்­தான் சொன்­னேன், அவர் கோபித்­துக்­கொண்­டார். என்ன தெரி­யுமா சொன்­னார்? ``உத­ய­நி­திக்கு எந்த அனு­ப­வ­முமே கிடை­யாது, உத­ய­நி­திக்கு என்ன அனு­ப­வம் இருக்­கி­றது?’’ என்று சொல்­லி­விட்­டார். ஆம், அவர் என்­னை­விட வய­தில் மூத்­த­வர்­தான். அவர் ரொம்ப அனு­ப­வ­சா­லி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">எனக்­குக் கிடை­யாது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">2016–ஆம் ஆண்டு மக்­கள் வாக்­க­ளித்­தது, மக்­கள் முத­ல­மைச்­ச­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தது மறைந்த முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா அம்­மை­யாரை. அவர்­கள் மறைந்த பிறகு சசி­கலா அம்மா கால்­க­ளைப் பிடித்­துத்­தான் அவர் முத­ல­மைச்­சர் ஆனார். இந்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">இதைத்­தான் நான் சொன்­னேன். என்ன தெரி­யுமா சொல்­லி­விட்­டார் இப்­போது? ``இதில் என்ன தவறு இருக்­கி­றது? வய­தில் பெரி­ய­வர்­கள், எனக்­குப் பொறுப்பு கொடுத்­தார்­கள், பதவி கொடுத்­தார்­கள், அத­னால் காலில் விழுந்­தேன்” என்­றார். நான் மீண்­டும் சொல்­கி­றேன், நீங்­கள் அவர்­கள் கால்­க­ளைப் பிடித்­தது தவறு கிடை­யாது. ஆனால் பிடித்த காலை வாரி­விட்­டீர்­கள் பார்த்­தீர்­களா? அது­தான் தவறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">முத­லில் ஜெய­ல­லிதா அம்மா கால், அடுத்து சசி­கலா அம்மா கால், சசி­கலா அம்மா சிறைக்­குச் சென்ற உடனே டி.டி.வி தின­க­ரன் கால், கொஞ்ச நாள் கழித்து அண்­ணன் ஓ.பி.எஸ் கால். இப்­போது ஓ.பி.எஸ் நம் அணிக்கு வந்­து­விட்­டார். இப்­போது யார் காலும் எனக்கு வேண்­டாம், நான் மோடி காலை மட்­டும்­தான் பிடித்­துக்­கொண்டு தொங்­கு­வேன் என்று தொங்­கிக்­கொண்டு இருக்­கி­றார்  எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முக்­கி­ய­மான தேர்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">அவ­ருக்கு இந்­தத் தேர்­த­லில் சரி­யான பாடத்­தைப் புகட்­ட­வேண்­டும். ஏற்­க­னவே 10 தோல்­வி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இந்­தத் தேர்­த­லோடு மொத்­தத் தோல்­வி­யை­யும் கொடுத்­துப் பழ­னி­சா­மியை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும். நீங்­கள் இப்­போது தொலைக்­காட்­சி­யெல்­லாம் பார்ப்­பீர்­கள், செய்­தித்­தாள்­க­ளை­யெல்­லாம் பார்த்­துக்­கொண்டு இருப்­பீர்­கள். அவர் இரண்டு விரல்­க­ளைக் காட்டி வாக்­குச் சேக­ரிக்­கி­றார் என்று நினைத்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­களா? அவர் இரண்டு விரல்­க­ளைக் காட்­டு­வது சின்­னத்­தைக் கிடை­யாது. ``நான் ஏற்­க­னவே 10 முறை தோற்­று­விட்­டேன், இப்­போது நான் 11–வது முறை தோற்­கப்­போ­கி­றேன்’’ என்­பதை அடை­யா­ள­மா­கச் சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">எனவே இந்­தத் தேர்­தல் முக்­கி­ய­மான தேர்­தல், டெல்லி vs தமிழ்­நாடு தேர்­தல். இதில் தமிழ்­நாடு நாம் வெற்­றி­பெற்று காட்ட வேண்­டும். தமிழ்­நாடு என்­றைக்­கும் டெல்­லிக்கு அவுட் ஆப் கண்ட்­ரோல்­தான் என்­பதை இந்­தத் தேர்­த­லில் நிரூ­பித்­துக் காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து  கதி­ர­வன் அவர்­க­ளுக்­குக் குறைந்­தது ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்குஅனுப்­புங்­கள். உங்­கள் தொகு­திக்கு என்­னென்ன தேவையோ அவற்றை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்து கொடுப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">உங்­க­ளின் அன்­புக்­கும் ஆத­ர­வுக்­கும் நன்றி, நன்றி, நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.2">அமைச்­சர் கே.என்.நேரு, வேட்­பா­ளர் கதி­ர­வன், வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் தியா­க­ரா­ஜன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அருண் நேரு, மாவட்ட அவைத் தலை­வர் அம்­பி­கா­பதி, மாவட்­டத் துணைச் செய­லா­ளர் பானு­மதி கண்­ணன், பொதுக்­குழு உறுப்­பி­னர் ஸ்ரீதர், என்.எஸ்.கரு­ணை­ராஜா, ராம­ரா­ஜன், ஒன்­றிய பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் ராமச்­சந்­தி­ரன், கணே­சன், செந்­தில்­கு­மார், சீனி­வா­சப்­பெ­ரு­மாள், கே.பி.ஏ.செந்­தில், துரை ராஜ­சே­க­ரன், மனோ­க­ரன், பேரூ­ராட்சி மன்­றத் தலை­வர்­கள் சிவ­சண்­மு­க­கு­மார், சர­வ­ணன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் கார்த்­திக், துணை அமைப்­பா­ளர்­கள் கலை­ய­ர­சன், மரு­து­சே­கர், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து அணி­க­ளைச் சார்ந்த நிர்­வா­கி­கள், கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி, தமி­ழர் தேசம் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்­கு­லத்­தோர் புலிப்­படை உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>