<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 13 2026 04:04:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260413T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="13042026-TRY-11" position.sequence="11" ex-ref="13042026-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது அவரவர் விருப்பம்! எடப்பாடி எந்தக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாரோ, அதே </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">காலை வாரி விட்டு துரோகம் செய்ததுதான் தவறு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup314519_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup316765_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Thiruchispeech1_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திருச்சி,ஏப்.13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டம், இலால்­கு­டி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் இலால்­குடி சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் த.பாரி­வள்­ளலுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­கள் சேக­ரித்து 
பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அப்­போது அவர், ‘‘பெரி­ய­வர்­கள் காலில் விழுந்து ஆசீர்­வா­தம் வாங்­கு­வது தவறா’ என்று எடப்­பாடி பழ­னி­சாமி கேட்­கி­றார். காலில் விழுந்து ஆசீர்­வா­தம் வாங்­கு­வது அவ­ர­வர் விருப்­பம். ஆனால் எந்­தக் காலில் விழுந்து ஆசீர்­வா­தம் வாங்­கி­னாரோ, அதே காலை வாரி விட்டு விட்டு துரோ­கம் செய்­த­து­தான் தவறு என்று சொல்­கி­றேன்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­லில் இந்­தச் சிறப்­பான, எழுச்­சி­யான, அன்­பான வர­வேற்பை அளித்­தி­ருக்­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், இந்த இலால்­குடி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நம் அரு­மைச் சகோ­த­ரர் வெற்றி வேட்­பா­ளர் பாரி­வள்­ளல் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள் என்று உங்­க­ளி­டம் கேட்­ப­தற்­காக நான் வந்­தேன். ஆனால், உங்­க­ளின் எழுச்­சி­யை­யும் ஆர­வா­ரத்­தை­யும் பார்க்­கும்­போது ஏற்­க­னவே நீங்­க­ளெல்­லாம் ஒரு முடிவு செய்­து­விட்­டீர்­கள் என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து கிட்­டத்­தட்ட 17,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை வெற்றி பெறச் செய்­தீர்­கள். இந்த முறை நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் குறைந்­தது 50,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் சகோ­த­ரர் பாரி­வள்­ளலை வெற்றி பெறச் செய்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்த இலால்­கு­டி­யில் நம் வெற்றி வேட்­பா­ளர் பாரி­வள்­ளல் அவர்­கள் நிற்­கி­றார்­கள். எதிர் வேட்­பா­ளர் யார்? உங்­க­ளுக்­குத் தெரி­யும். அ.தி.மு.க. சார்­பில் லாட்­டரி சீட்டு விற்­ப­வர் நிற்­கி­றார். எத்­த­கைய வேட்­பா­ளர் என்று உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும். ஒரே ஒரு சிறு எடுத்­துக்­காட்டு மட்­டும் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அந்த அம்­மை­யா­ரின் சொத்து மதிப்பு 6,000 கோடி. அவர் மீதும் அவர் குடும்­பத்­தின் மீதும் இது­வரை 200-க்கும் அதி­க­மான வழக்­கு­கள் உள்­ளன. 1,000 கோடி ரூபாய் அள­வுக்கு சொத்­து­கள் இப்­போது வரை அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ., நீதி­மன்­றங்­கள் முடக்கி வைத்­துள்­ளன. 1,000 கோடி சொத்தை மட்­டும் முடக்கி வைத்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக்­க­ளைச் சீர­ழிப்­ப­து­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று அவர்­கள் குடும்­பத்­தில் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு கட்­சி­யில் இடம் பிடித்து வைத்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் குடும்­பத்­தின் ஒட்­டு­மொத்த நோக்­கம் மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் எப்­ப­டி­யா­வது லாட்­டரி சீட்டு, லாட்­ட­ரித் தொழி­லைக் கொண்டு வந்து தமிழ்­நாட்டு மக்­க­ளைச் சீர­ழிப்­ப­து­தான் அவர்­க­ளின் ஒரே நோக்­கம். இலால்­குடி மக்­க­ளைப் பணத்­தால் வெற்றி பெற்­று­வி­ட­லாம் என்று தவ­றா­கக் கணக்­கிட்டு வந்­தி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் அவர்­க­ளுக்­குச் சொல்­லுங்­கள். இலால்­குடி மண் சாதா­ரண மண் அல்ல, சுய­ம­ரி­யாதை மண். ஒவ்­வொன்­றை­யும் யோசித்து முடி­வெ­டுக்­கக்­கூ­டிய மண். என்­றுமே நீங்­கள் பணத்­துக்­குக் கட்­டுப்­பட்­ட­வர்­கள் கிடை­யாது, அன்­புக்­குத்­தான் கட்­டுப்­பட்­ட­வர்­கள். தி.மு.க-விற்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்­குத்­தான் கட்­டுப்­பட்­ட­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அத­னால்­தான் நான் மீண்­டும் கேட்­டுக்­கொள்­வது, நீங்­கள் சகோ­த­ரர் பாரி­வள்­ளலை வெற்றி பெற வைப்­பது உறுதி. நான் உங்­க­ளி­டம் கேட்­டுக் கொள்­வ­தெல்­லாம் எதிர்த்­துப் போட்­டி­யி­டக்­கூ­டிய வேட்­பா­ளர்  டெபா­சிட் இழக்­கும் அள­வுக்கு நம் வெற்றி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பல்­வேறு திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கடந்த 12 நாட்­க­ளாக, தமிழ்­நாடு முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 60 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­குச் சென்று அங்கே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளைச் சந்­தித்து நம் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்கு கேட்­டு­விட்டு இன்று இந்த இலால்­குடி தொகு­திக்கு வந்­தி­ருக்­கி­றேன். 60 தொகு­தி­க­ளுக்­கும் நம் சட்­ட­மன்ற வேட்­பா­ளர்­களை அழைத்­துச் சென்று வாக்­கு­றுதி கொடுத்து வாக்­கு­கள் கேட்­கி­றேன், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று, எந்­தத் தைரி­யத்­தில் கேட்­கி­றேன்? ஏனென்­றால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் அத்­தனை திட்­டங்­களை ஒவ்­வொரு தொகு­திக்­கும் நம் முத­ல­மைச்­சர் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார் என்­கிற அந்த மன உறு­தி­யோ­டும் தைரி­யத்­தோ­டும் சென்று கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இலால்­குடிக்கான திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்த இலால்­குடி தொகு­தி­யில் என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்று ஒரு சிறு எடுத்­துக்­காட்டு சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">32 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய பேருந்து நிலை­யத்தை, நம் திரா­விட மாடல் அரசு கட்டி கொடுத்­துள்­ளது. நான்­தான் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னால் திறந்து வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">109 கிரா­மங்­க­ளில் 240 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக்­கு­டி­நீர்த் திட்­டத்தை நம் அரசு சார்­பில் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தார். 20 இடங்­க­ளில் 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் குளங்­கள் தூர்­வா­ரும் பணி இன்று நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அரசு மருத்­து­வ­ம­னை­யில் 7 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுப் புதிய தாய் சேய் நலப்­பி­ரிவு கட்­ட­டம் கட்­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புதூர்உத்­த­ம­னூர் ஊராட்­சி­யில் ஆரம்­பச் சுகா­தார நிலை­யம் கட்­டிக் கொடுத்­தது நம் முத­ல­மைச்­சர், நம் திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திரு­மங்­க­லம் ஊராட்­சி­யில் 14 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு தடுப்­பணை கட்­டி­யி­ருக்­கி­றோம். இலால்­குடி நக­ராட்சி அலு­வ­ல­கத்­துக்கு இன்று புதிய கட்­ட­டம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திடக்­க­ழிவு மேலாண்­மைப் பணி இன்று நடை­பெற்­றி­ருக்­கி­றது. புள்­ளம்­பாடி ஊராட்சி ஒன்­றி­யத்­துக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, இன்று புதி­தாக அலு­வ­ல­கக் கட்­ட­டம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">குமு­ளூர் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­யில் புதி­தாக வகுப்­ப­றைக் கட்­ட­டங்­கள் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம். கல்­லக்­குடி, பூவா­ளூர், புள்­ளம்­பாடி பேரூ­ராட்­சி­யில் 62 கோடி ரூபாய் நம் முத­ல­மைச்­சர் ஒதுக்­கீடு செய்­யச் செய்து இன்று பல்­வேறு பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">சுமார் 250 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இன்று கூட்­டுக்­கு­டி­நீர்த் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத்­த­னை­யும்நம் திரா­விட மாடல் அரசு, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த இலால்­குடி தொகு­திக்­குச் செய்து கொடுத்­து­விட்டு இன்று மீண்­டும், `எங்­க­ளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்­கள்’ என்று கேட்டு உங்­க­ளி­டம் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இது மட்­டும் அல்ல, பல்­வேறு திட்­டங்­க­ளைக் கடந்த முறை சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது நாம் சொன்ன வாக்­கு­று­தி­கள், சொன்ன திட்­டங்­கள் அத்­த­னை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மிக முக்­கி­ய­மான தேர்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">சரி நம் தலை­வர் தொடர்ந்து சொல்­கி­றார், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­தல் மிக மிக முக்­கி­ய­மான தேர்­தல். ஏன், முக்­கி­ய­மான தேர்­தல்? இந்­தத் தேர்­தல் டெல்லி அணி (Vs) தமிழ்­நாடு அணி. தமிழ்­நாடு அணி­யின் தலை­வர், நம் தலை­வர்­தான் தலை­வர். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு தமிழ்­நாட்­டுக்கு நமக்கு ஏதா­வது செய்­தி­ருக்­கி­றார்­களா? நாம் கேட்­கிற நிதி உத­வி­யைக் கொடுக்­கி­றார்­களா? தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? இது எது­வுமே இல்­லா­மல், நம் முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்­டுக்கு இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றார், இவ்­வ­ளவு சாத­னை­கள் புரிந்­தி­ருக்­கி­றோம், இவ்­வ­ளவு திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டுக்­குள் பா.ஜ.க-வை நேர­டி­யாக மக்­கள் நுழை­ய­விட மாட்­டார்­கள் என்­ப­தால், இன்று அ.தி.மு.க என்­கிற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு, பா.ஜ.க தமிழ்­நாட்­டுக்­குள் நுழை­யப் பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நீங்­கள் முரட்­டுப் பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள். முரட்­டுத் தொண்­டர்­கள் பற்­றிக் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள். எங்­கா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா ஒரு முரட்டு அடி­மையை? மோடி­யின் நம்­பர் ஒன் முரட்டு அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி. இது ஏதா­வது கெட்ட வார்த்­தையா? அவ­ருக்­குப் பயங்­க­ர­மா­கக் கோபம் வந்­து­விட்­டது. என்ன செய்­தார் தெரி­யுமா? என்னை அதி­க­மா­கத் திட்ட ஆரம்­பித்­து­விட்­டார். “உத­ய­நி­திக்கு எந்த அனு­ப­வ­முமே கிடை­யாது, எந்த அனு­ப­வத்தை வைத்து இப்­ப­டிப் பேசு­கி­றீர்­கள்” என்று கேட்­டார். நான் சொன்­னேன், “உங்­க­ளுக்கு இருக்­கிற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யா­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மற்­ற­வர் காலில் விழுந்­து­தான் அவர் முத­ல­மைச்­சர் ஆனார். 2016-இல் மக்­கள் வாக்­க­ளித்­தது மறைந்த முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா அம்­மை­யா­ருக்கு. அந்த அம்மா இறந்த பிறகு உள்ளே புகுந்து சென்று முத­ல­மைச்­சர் ஆனார். “இந்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது” என்­றேன். பத­விக்­காக யார் காலை­யும் பிடித்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. சங்கி கூட்­டத்­துக்­குப் பயப்­ப­டும் அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. இதைத்­தான் நான் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இப்­போது என்ன சொல்­கி­றார் தெரி­யுமா, பேச்சை மாற்­றி­விட்­டார். ``ஆமாம், நான்­தான் சென்று விழுந்­தேன், அந்த அம்மா எனக்­குப் பொறுப்பு கொடுத்­தார்­கள், பதவி கொடுத்­தார்­கள், அத­னால் சென்று விழுந்­தேன். உனக்­குப் பண்பே இல்லை. `பெரி­ய­வர்­கள் காலில் விழுந்து ஆசீர்­வா­தம் வாங்­கு­வது தவறா’ என்று எடப்­பாடி பழ­னி­சாமி கேட்­கி­றார். காலில் விழுந்து ஆசீர்­வா­தம் வாங்­கு­வது அவ­ர­வர் விருப்­பம். ஆனால், எந்­தக் காலில் விழுந்து ஆசீர்­வா­தம் வாங்­கி­னாரோ, அதே காலை வாரி விட்டு விட்டு துரோ­கம் செய்­த­து­தான் தவறு என்று சொல்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">போதா­கு­றைக்கு, அந்த அம்மா காலில் விழுந்து முத­ல­மைச்­சர் பதவி வாங்­கி­னீர்­கள், அதற்­குப் பிறகு அந்த அம்மா காலையே வாறி­விட்டு விட்டு, ``நீயா என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னாய்’’ என்று கேட்­டீர்­கள். அதைத்­தான் நான் தவறு என்று சொன்­னேன். இவர் யார் காலி­லெல்­லாம் விழு­கி­றாரோ எல்­லார் காலை­யும் வாரி­விட்­டு­வி­டு­வார். இன்று சசி­கலா அம்மா நம் அணிக்கு வந்­து­விட்­டார்­கள். அவர்­கள் களத்­தில் இறங்­கி­விட்­டார்­கள். எடப்­பாடி பழ­னி­சாமி என்­னைத் தவ­றா­கத் திட்­டு­கி­றார்.``இவன் செத்­துப் போயி­ருக்க வேண்­டும்’’ என்று கூறி­விட்­டார். ``இவன் இருந்து என் உயிரை வாங்­கு­கி­றான்’’ என்று கூறி­விட்­டார். மிகுந்த மன அழுத்­தத்­தில் சுற்­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">சசி­கலா அம்மா என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் தெரி­யுமா? ``ஆமாம், அந்­தப் பையன் காட்­டு­வது சரி­யா­ன­து­தானே, நீதான் என் கால்­களை வாரி­னாயே” என்று சசி­கலா அம்மா சொல்­லி­விட்­டார். நாய்க்­குப் பிஸ்­கட் போட்­டால் கூட அது நன்­றி­யோடு நான்கு நாட்­கள் சுற்­றிக்­கொண்­டி­ருக்­கும். அந்த நன்றி கூட இல்லை என்று நான் இப்­போது சொல்­ல­வில்லை.  சசி­கலா அம்மா சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">புதிய வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தலை­வர் அவர்­கள் சில வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள், அதை மட்­டும் இங்கே ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன். கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபாய் அல்ல, ஆட்­சிக்கு வந்­தோம் என்­றால் 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­போம் என்று தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம், 5-ஆம் வகுப்பு வரை இப்­போது கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். அதை 8-ஆம் வகுப்பு வரை உயர்த்­தித் தரு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கல்வி ஊக்­கத்­தொகை 1,000 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். அதை 1,500 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­போம் என்று தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை இப்­போது 1,200 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். ஆட்சி வந்­த­வு­டனே 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டத்­தில் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் வீடு­கள் கட்­டப்­பட்டு யார் யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அவர்­க­ளுக்­கெல்­லாம் வீடு கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஆட்­சிக்கு வந்­த­வு­டன் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒவ்­வொரு வீட்டு மக­ளி­ருக்­கும் 8,000 ரூபாய் கொடுத்­து­வி­டு­வார். அந்த 8,000 ரூபாயை வைத்­துக்­கொண்டு உங்­கள் வீட்­டிற்கு என்ன மின்­சா­தன பொருள் தேவையோ - குளிர்­சா­த­னப் பெட்­டியோ, தொலைக்­காட்­சியோ, மிக்­ஸியோ, கிரைண்­டரோ எது­வாக இருந்­தா­லும் அதை நீங்­களே முடிவு செய்து நீங்­களே சென்று வாங்­கிக்­கொள்­ள­லாம். இதை­யெல்­லாம் நம் முத­ல­மைச்­சர் வாக்­கு­று­தி­யா­கக் கொடுத்­தி­ருக்­கி­றார். நம் முத­ல­மைச்­சர் சொன்­னால் நிச்­ச­யம் செய்­வார்.  அதைச் செய்து காட்ட வேண்­டிய நேரம் வரு­கிற தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பிரச்­சா­ரம் செய்­ய­வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று தேதி ஏப்­ரல் 11. 23-ஆம் தேதி தேர்­தல். இன்­னும் இன்­னும் 12  நாட்­கள் உள்­ளன. அடுத்த 12 நாட்­கள் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் சென்று ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்து, ஒவ்­வொரு வீடாக ஏறி இறங்கி, நம் திட்­டங்­க­ளைச் சொல்லி, ஏன் தி.மு.க.வுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும், ஏன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்­டும், ஏன் சகோ­த­ரர் பாரி­வள்­ளலை வெற்றி பெற வைக்க வேண்­டும் என்­கிற பிரச்­சா­ரத்­தைச் செய்­ய­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நீங்­கள் 23-ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குக் காலை­யில் சென்­றால் வாக்­குப்­பெட்டி இருக்­கும். வாக்­குப்­பெட்­டி­யில் முதல் பெயர் பாரி­வள்­ளல் பெயர். முதல் சின்­னம் உத­ய­சூ­ரி­யன் சின்­னம். வாக்­குப்­ப­தி­வின் போது, முதல் இடத்­தில் இருப்­போம். வாக்கு எண்­ணிக்கை நாள், மே மாதம் நான்­காம் தேதி, எப்­படி வாக்­குப்­பெட்­டி­யில் முதல் இடத்­தில் இருக்­கி­றோமோ அதே மாதிரி வாக்கு எண்­ணிக்­கை­யின்­போது இலால்­கு­டி­யில் நம் உத­ய­சூ­ரி­யன் மீண்­டும் உதித்­து­விட்­டது என்­கிற செய்­தி­யு­டன், அந்த வெற்­றியை இங்கே உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள். சகோ­த­ரர் பாரி­வள்­ளலை மிக அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள். நிச்­ச­யம் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப் போவது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அமைச்­சர் கே.என்.நேரு, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் வைர­மணி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அருண் நேரு, ஆடு­துறை உத்­தி­ரா­பதி, விம­ல­நா­தன், கரு­ணா­நிதி, மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் புரு­ஷோத்­த­மன், துரை கந்­த­சாமி, தங்­க­வேல், ஈஞ்­சூர் சதீஷ், குமு­ளூர் குமார், மார்ட்­டின், வினோத்­கு­மார், ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் துரை­மா­ணிக்­கம், சக்­தி­வேல், பெரி­யய்யா, சண்­மு­க­நா­தன், இளங்­கோ­வன், செல்­வ­ராசா, பால்­துரை, முத்­துக்­கு­மார், பன்­னீர்­செல்­வம், இளை­ஞர் அணித் துணை அமைப்­பா­ளர்­கள் ஸ்டான்லி, சூர்யா, இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, மக்­கள் நீதி மய்­யம், முக்­கு­லத்­தோர் புலிப்­படை, தமி­ழர் தேசம், தமிழ்ப்­பு­லி­கள் கட்சி உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>