<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 13 2026 04:11:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260413T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="13042026-VLR-08" position.sequence="08" ex-ref="13042026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை உணர்வும் கிடையாது!   மாநில உரிமைகளும் புரியாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">புதுக்கோட்டையில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">7 ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup548935_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ThalaivarPhoto_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிரிக்­கெட்­டில் பல பிளே­யர்ஸ், பல ரெக்­கார்­டு­களை வைத்­தி­ருப்­பார்­கள். ஆனால், சச்­சின் டெண்­டுல்­க­ரைப் பார்த்­தீர்­கள் என்­றால், அவ­ரி­டம் அனைத்து ரெக்­கார்­டுமே இருக்­கும்! அர­சி­ய­லில் அப்­ப­டிப்­பட்ட முறி­ய­டிக்க முடி­யாத அனைத்து ரெக்­கார்­டும் தி.மு.க.தான் செய்­தி­ருக்­கி­றது என்­பதை பெரு­மை­யோடு சொல்­கி­றேன். இனி­யும் தொடர்ந்து நாம்­தான் ‘ரெக்­கார்டு பிரேக்’ செய்­ய­வும் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய திட்­டங்­க­ளைப் பார்த்­து­தான், இன்­றைக்கு பல்­வேறு மாநி­லங்­கள் காப்பி அடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஏன், ஒன்­றிய அரசே காப்பி அடித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. மக்­க­ளுக்­கான முன்­னோ­டித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தில், தி.மு.க.தான், முன்­னோடி இந்த ஸ்டாலி­னின் அப்­ப­டிப்­பட்ட திட்­டங்­க­ளைச் சொல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘எங்­கள் அண்­ணன் ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தரும் சீர்’ என மக­ளிர் பெருமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு ஏரா­ள­மான மக­ளிர் வந்­தி­ருக்­கி­றீர்­கள். இங்கு இருக்­கும் என் சகோ­த­ரி­க­ளி­டம் கேட்­கி­றேன். மாதந்­தோ­றும் 15–ஆம் தேதி, உங்­கள் அக்­க­வுண்ட்­டுக்கு இந்த அண்­ணன் கொடுக்­கும் ஆயி­ரம் ரூபாய் உரி­மைத்­தொகை வரு­கி­றதா? (‘வரு­கி­றது என மக­ளிர் குரல்!) திரா­விட மாடல் 2.0–வில் உரி­மைத்­தொ­கையை எவ்­வ­ள­வாக உயர்த்­தப் போகி­றோம்? ‘டபுள்’ ஆக்­கப் போகி­றோம். இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உயர்த்­தப் போகி­றோம்! இல்­லத்­த­ர­சி­க­ளாக இருக்­கும் பெண்­கள், தங்­க­ளின் அன்­றா­டச் செல­வு­க­ளுக்­குக்­கூட, மற்­ற­வர்­க­ளைச் சார்ந்­தி­ருக்க வேண்­டிய நிலை இருந்­தது. அதை உரி­மைத்­தொ­கை­யால் உடைத்­தி­ருக்­கி­றோம். ‘எங்­கள் அண்­ணன் ஸ்டாலின் தரும் சீர்’ என்று மக­ளிர் அனை­வ­ரும் உரி­மை­யு­டன் பேசு­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ‘விடி­யல் பய­ணம்’! பெண்­க­ளின் பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ரத்­திற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருக்­கும் புரட்­சித் திட்­டம்! சம்­பா­திக்­கும் பணத்­தில் குறிப்­பிட்ட தொகை போக்­கு­வ­ரத்­திற்கே செல­வா­கி­வி­டும் என்று, வீட்­டுக்­குள்­ளேயே பலர் முடங்­கி­யி­ருந்த நிலையை உடைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">காலை உண­வுத் திட்­டத்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கற்­றல் திறன் அதி­க­ரிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, காலை உண­வுத் திட்­டம்! சென்­னை­யில் அசோக் நக­ரில் ஒரு பள்­ளிக்கு ஆய்­வுக்­குச் சென்­றி­ருந்­தேன்… ஒரு குழந்­தை­யி­டம் அன்­பாக பேசிக் கொண்­டி­ருக்­கும்­போது, “சாப்­பிட்­டி­யாமா” என்று கேட்­டேன். அந்­தக் குழந்தை, “இல்லை… சாப்­பி­ட­வில்லை” என்று சொல்­லி­யது. விசா­ரித்­த­போது, அப்­பா–­அம்மா இரண்டு பேரும் வேலைக்­குப் போவது உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் சில குழந்­தை­கள், காலை­யில் சாப்­பி­டா­மல் வரு­கி­றார்­கள் என்று தெரிந்­தது… குழந்­தை­களை பசி­யு­டன் தவிக்­க­வி­ட­லாமா? அவர்­கள் பசி­யைப் போக்க வேண்­டும் என்­று­தான், காலை உண­வுத் திட்­டத்­தைத் தொடங்­கி­னேன். அந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­ய­தால்­தான் மாண­வர்­கள் பள்­ளிக்கு வருகை தரு­வ­தும் அதி­க­மா­யி­ருக்­கி­றது. அவர்­க­ளின் கற்­றல் திற­னும் அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது! இப்­ப­டிப்­பட்ட காலை உண­வுத் திட்­டத்தை, ஐந்­தாம் வகுப்­பி­லி­ருந்து, இனி எட்­டாம் வகுப்பு வரை­யில் விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மாண­வி­க­ளின் படிப்­புக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெருந்­து­ணை­யாக  ‘புது­மைப் பெண்’ திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, நம்­மு­டைய வீட்­டுப் பிள்­ளை­கள் அனை­வ­ரும் டிகிரி படித்­த­வர்­க­ளாக உயர வேண்­டும் என்­ப­து­தான் நம்­மு­டைய கனவு. ஆனால், காலே­ஜுக்கு வரும் மாண­வி­க­ளில் சிலர், பாதி­யி­லேயே ‘டிராப்–­அ­வுட்’ ஆகி­வி­டு­கி­றார்­கள் என்று தக­வல் வந்­தது. இதை உடனே சரி செய்ய வேண்­டும் என்று கொண்டு வந்­த­து­தான், ‘புது­மைப்­பெண்’ திட்­டம்! இந்­தத் திட்­டத்­தின் மூல­மாக ஆறு இலட்­சத்து 95 ஆயி­ரம் மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் கொடுத்து இன்­றைக்கு படிக்க வைத்­துக் கொண்­டி­ருப்­ப­வன்­தான் உங்­கள் முன்பு நிற்­கும் இந்த ஸ்டாலின். இது அந்த மாண­வி­க­ளின் படிப்பை தொடர்­வ­தற்கு, பெரிய துணை­யாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதைப் பார்த்­த­தும், மாண­வர்­க­ளும், “இப்­ப­டி­யொரு திட்­டம் எங்­க­ளுக்­குக் கிடை­யாதா?” என்று உரி­மை­யா­கக் கேட்­டார்­கள். அப்­படி, மாண­வர்­க­ளுக்கு உரு­வாக்­கப்­பட்ட திட்­டம்­தான், ‘தமிழ்ப்­பு­தல்­வன்’. ‘திரா­விட மாடல் 2.0’–வில் இதை­யும் ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">“நான் முதல்­வன்” திட்­டத்­தால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நமது பிள்­ளை­கள் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். ஆகி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ‘நான் முதல்­வன்’ திட்­டம். நம்­மு­டைய மாண­வர்­கள் படித்து முடித்த பிற­கும் வேலை­யில்­லா­மல் இருப்­ப­தற்­கான சூழ்­நி­லையை அடை­கி­றார்­கள். அதற்­கான கார­ணத்தை ஆரா­யச் சொன்­னேன். நம்­மு­டைய மாண­வர்­க­ளுக்கு படிப்­பு­டன் சேர்த்து, ‘ஸ்கில் டெவ­லப்­மெண்ட்’ பயிற்­சி­க­ளை­யும் வழங்க வேண்­டும் என்று சொன்­னார்­கள். அதற்­கா­கச் சிந்­தித்து, உரு­வாக்­கப்­பட்ட திட்­டம்­தான் ‘நான் முதல்­வன்’ திட்­டம். ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்த பிறகு என்­னு­டைய முதல் பிறந்­த­நாள் அன்­றைக்கு இந்­தத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தேன். அதன்­மூ­ல­மாக நம்­மு­டைய வீட்­டுப் பிள்­ளை­கள் நல்ல வேலை­க­ளில் அமர வேண்­டும் என்று உரு­வாக்­கி­ய­து­தான், நான் முதல்­வன் திட்­டம்! அதன் ரிசல்ட் என்ன? இது­வ­ரைக்­கும் இல்­லாத அள­வில், நம்­மு­டைய வீட்­டுப் பிள்­ளை­கள் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். ஆகிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நமது ‘தோழி’ திட்­டத்தை –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இன்று ஒன்­றிய அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘காப்பி’ அடிக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ‘தோழி’ விடுதி! இங்கு இருக்­கும் பல­ரும் உங்­க­ளு­டைய மகள்­களை, பெண் பிள்­ளை­களை வேலைக்­காக, வெளி­யூ­ருக்கு அனுப்­பு­வீர்­கள். அங்கு அவர்­கள் பாது­காப்­பா­கத் தங்­கி­யி­ருக்­கி­றார்­களா என்று எப்­போ­தும் நினைத்­துக் கொண்டே இருப்­பீர்­கள். அதைப் புரிந்து கொண்­டு­தான், ‘தோழி’ விடு­தி­க­ளைத் தொடங்­கி­னோம். அந்த விடு­தி­க­ளில் ஏரா­ள­மான பெண்­கள் பாது­காப்­பா­கத் தங்­கி­யி­ருந்து பணி­க­ளைச் செய்­கி­றார்­கள். இன்­றைக்கு ஒன்­றிய அரசே இந்­தத் திட்­டத்தை காப்பி அடிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ‘தாயு­மா­ன­வர்’ திட்­டம். ஒரு முறை கள ஆய்­வில் ஈடு­பட்­டி­ருந்­த­போது வய­தான பெண்­மணி ஒரு­வர், “முது­மை­யால் ரேஷன் கடை­க­ளுக்­குச் சென்று பொருட்­களை வாங்க முடி­வ­தில்லை” என்று கவ­லைப்­பட்­டார்­கள். இதைப்­பற்றி நான் ஆய்வு செய்­தேன். 70 வய­துக்கு மேற்­பட்ட பல­ரும் கடை­க­ளுக்­குச் சென்று ரேஷன் பொருட்­களை வாங்­கு­வ­தில் இருக்­கக்­கூ­டிய சிர­மங்­களை அனு­ப­விக்­கி­றார்­கள் என்று எனக்­குத் தெரிய வந்­தது. அவர்­கள்­தான் வாங்­கு­வ­தில்­லையே என்று நான் சும்மா இருந்­து­வி­ட­வில்லை. வய­தான அவர்­க­ளுக்கு நாம்­தான் துணை­யாக இருக்க வேண்­டும் என்று நினைத்­தேன். அப்­படி தொடங்­கி­ய­து­தான், ‘தாயு­மா­ன­வர்’ திட்­டம். இந்­தத் திட்­டத்­தில் குடும்ப அட்டை வைத்­தி­ருக்­கும் சுமார் 15 இலட்­சம் பேரின் வீடு­க­ளுக்­குத் தேடிச் சென்று, அரிசி – பருப்பு உள்­ளிட்ட பொருட்­க­ளைக் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்! அவர்­க­ளும் மன­தார வாழ்த்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், இத்­த­னை­யும் செய்து கொண்­டி­ருக்­கும் இந்த ஸ்டாலின், கொரோ­னா­வில் போயி­ருக்க வேண்­டும் என்று பழ­னி­சாமி வன்­மத்­து­டன் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இந்த ஸ்டாலின் – மக்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் செய்­வேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­களே… இந்த ஸ்டாலின் இருந்து, என்­னு­டைய மக்­க­ளுக்கு இன்­னும் ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் செய்­யத்­தான் போகி­றேன்; அதை­யும் நீங்­கள் பார்க்­கத்­தான் போகி­றீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை இன்­றைக்கு இந்­தி­யா­வி­லேயே ‘டபுள் டிஜிட்’ வளர்ச்சி பெற்ற மாநி­ல­மாக, நம்­மு­டைய திரா­விட மாடல் உயர்த்­தி­யி­ருக்­கி­றது. இந்த அடித்­த­ளத்­தில் இருந்து, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் புதிய உய­ரங்­க­ளுக்­கான பய­ணத்தை தொடங்­கப் போகி­றோம். அதற்­கான திட்­ட­மா­கத்­தான் ‘சூப்­பர்ஸ்­டார்’ வந்­தி­ருக்­கி­றார். “சூப்­பர் ஸ்டாரு யாருனு கேட்டா… சின்­னக் குழந்­தை­கள்­கூட சொல்­லும்”. அது­தான் நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அதில் என்ன ஹைலைட்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு இருக்­கும் மக­ளி­ரைக் கேட்­கி­றேன்… உங்­கள் அண்­ணன் இந்த ஸ்டாலின் கொடுக்­கப் போகும் கூப்­பன் எவ்­வ­ளவு? (“எட்­டா­யி­ரம் ரூபாய்”  என, மக்­கள் குரல்!) மக­ளிர் எல்­லாம் இப்­போதே வீட்­டுக்கு என்ன பொருள் வாங்­க­லாம் என்று ‘டிஸ்­கஸ்’ பண்ண ஆரம்­பித்­து­விட்­டார்­கள்! இந்­தத் திட்­டத்­தில் எவ்­வ­ளவு தொகை­யோடு கூப்­பன் தரப் போகி­றோம்! எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை, புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை ‘எக்ஸ்­சேஞ்ச்’ செய்து புது பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் உங்­க­ளுக்­குப் பிடித்த ‘பிராண்ட்’–ஐ வாங்­கிக் கொள்­ள­லாம்! வீட்­டுக்­கா­ர­ரி­ட­மெல்­லாம் கேட்­கா­தீர்­கள்.  ஏதா­வது கேட்டு முறைத்­தார்­கள் என்­றால், அண்­ண­னி­டம் சொல்­லி­விட்­டேன் என்று நீங்­கள் சொல்­லி­வி­டுங்­கள். (கை தட்­டல்) உங்­கள் இஷ்­டம். உங்­கள் சாய்ஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, 20 இலட்­சத்­துக்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி முடித்­தி­ருக்­கும் 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில், ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யு­டன் 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை ஆயி­ரத்து 500 ரூபா­யில் இருந்து 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘கலை­ஞர் கனவு இல்­லம்’ உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக, வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுக்­கோட்­டை­யில் இயந்­தி­ரத் தயா­ரிப்­புக் குழு­மம் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சொன்­னதை மறக்­க­வும் மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மறுக்­க­வும் மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஸ்டாலின் சொன்­னால், சொன்­ன­தைச் செய்­வான்! நான் கலை­ஞ­ரின் மகன்! சொன்­னதை மறக்­க­வும் மாட்­டேன்; மறுக்­க­வும் மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், பா.ஜ.க.வின் கிளைக் கழ­கச் செய­லா­ள­ராக இருக்­கும் பழ­னி­சாமி அவர்­க­ளால், இப்­படி ஏதா­வது சாத­னை­களை சொல்லி, வாக்கு கேட்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கே­யா­வது, அவர் சாத­னை­க­ளைச் சொல்லி, பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எங்­கே­யா­வது, கொள்­கை­க­ளைப் பற்­றிப் பேசி பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எங்­கே­யா­வது, மாநில உரி­மை­க­ளுக்கு பழ­னி­சாமி குரல் கொடுத்­துப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? நிச்­ச­யம் பார்த்­தி­ருக்க மாட்­டீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சாக்­க­டைக்­குச் சம­மான சொற்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பேசும் தர­மற்­ற­வர், எடப்­பாடி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் என்­றால், பாதம்­தாங்கி பழ­னி­சா­மி­யி­டம் கொள்­கை­க­ளும் இல்லை; சாத­னை­க­ளும் இல்லை! அத­னால்­தான், சாக்­க­டைக்­குச் சம­மான சொற்­க­ளை­யும், அவ­தூ­று­க­ளை­யும் பேசி, அவர் ஒரு தர­மற்­ற­வர் என்று நிரூ­பித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">N.D.A. எனும் பேரி­டரை, தமிழ்­நாட்­டுக்­குள் பின்­வா­சல் வழி­யாக கொண்டு வரு­வ­தற்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கும் முதன்மை அடி­மை­தான், பழ­னி­சாமி! அவர் பழ­னி­சாமி இல்லை. ஆமாம்­சாமி! அடி­மை­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. எந்­தக் கூட்­ட­ணி­யில் அடி­மைச் சாச­னம் எழு­திக் கொடுத்து சேர்ந்­தி­ருக்­கி­றது? அன்­னைத் தமி­ழுக்­கும் – தமி­ழி­னத்­துக்­கும் – தமிழ்­நாட்­டுக்­கும் துரோ­கம் செய்­யும் N.D.A. கூட்­ட­ணி­யில் சேர்ந்­தி­ருக்­கி­றது! அந்­தக் கூட்­டணி டெல்­லி­யில் வைத்து முடிவு செய்­யப்­பட்ட கூட்­டணி! அனை­வ­ருக்­கும் தெரி­யும். ஊழல்­வா­தி­க­ளும் – தேர்ந்த துரோ­கி­க­ளும், காவிக் கும்­பலை தோளில் சுமந்து கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்­று­கூட, பா.ஜ.க.வில் இருக்­கும் ஒன்­றிய இணை அமைச்­சர் ராம்­தாஸ் அத்­வாலே அவர்­கள் என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார்? “தமிழ்­நாட்­டில் N.D.A. கூட்­டணி ஆட்­சியை அமைப்­போம்” என்று பேசி­யி­ருக்­கி­றார். அடி­மைச்­சா­மி­யான பழ­னி­சாமி இதற்கு ஏதா­வது பதில் சொன்­னாரா? என்ன சொல்­வார்? ஒன்­றும் சொல்­ல­வில்லை…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டுக்கு வரும் பா.ஜ.க. அமைச்­சர்­கள் எல்­லாம் என்­ன­வெல்­லாம் பேசி­விட்­டுப் போகி­றார்­கள் என்று பத்­தி­ரி­கை­க­ளில், டி.வி.யில், செய்­தி­க­ளில் வரு­கி­றது. அனைத்­தை­யும் பார்க்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மும்­மொ­ழிக் கொள்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பேசு­வோ­ருக்கு எதி­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அடி­மைச்­சாமி குரல் கொடுத்­தாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய பியுஷ் கோயல் – அமைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய தர்­மேந்­திர பிர­தான் என்று இங்கு வரு­ப­வர்­கள் எல்­லாம், இந்­தித் திணிப்­புக்கு ஆத­ர­வாக, “மும்­மொ­ழிக் கொள்­கை­யைச் செயல்­ப­டுத்­து­வோம்”, என்று பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதை எதிர்த்து அடி­மைச்­சாமி ஏதா­வது குரல் கொடுத்­தி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய கல்வி அமைச்­ச­ராக இருக்­கும் தர்­மேந்­திர பிர­தான் அவர்­க­ளின் வேலை என்ன? கல்­வியை வளர்ப்­ப­தில்லை; கல்­வியை காவி­ம­ய­மாக்­கி­னார்! இந்­தி­யைத் திணிக்க மும்­மொ­ழிக் கொள்­கைக்கு ஆத­ர­வா­கப் பேசி­விட்­டுச் செல்­கி­றார். இந்­தித் திணிப்பை ஏற்­றுக் கொள்­ள­வில்லை என்று நம்­மு­டைய குழந்­தை­க­ளின் படிப்­புக்­குக் கொடுக்க வேண்­டிய, இரண்­டா­யி­ரம் கோடி ரூபாய் கல்வி நிதி­யைக் கொடுக்­கா­மல் தடுப்­பது! இதெல்­லாம்­தான், அவ­ரது வேலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“மும்­மொ­ழித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­துங்­கள், இரண்­டா­யி­ரம் கோடி­யைத் தரு­கி­றோம்” என்று அமைச்­சர் பிர­தான் சொன்­னார். “இரண்­டா­யி­ரம் கோடி இல்லை; பத்­தா­யி­ரம் கோடியே கொடுத்­தா­லும், இந்­தி­யைத் திணிக்க அனு­ம­திக்க மாட்­டேன்… எங்­கள் குழந்­தை­க­ளின் படிப்­புச் செல­வை­யும், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளத்­தை­யும் நானே கொடுத்­துக் கொள்­கி­றேன்” என்று உறு­தி­யா­கச் சொன்­ன­வன்­தான், இங்கே உங்­கள் முன்­னால் நிற்­கின்ற ஸ்டாலின்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதுவே அடி­மைச்­சா­மி­யாக இருந்­தி­ருந்­தால், எதிர்த்­துக் குரல் கொடுத்­தி­ருப்­பாரா? இதெல்­லாம் R.S.S. அமைப்­பின் நீண்ட காலச் செயல்­திட்­டங்­க­ளின் ஒரு பகுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அடுத்­த­டுத்த துரோ­கங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வைத்த பெயர்­தான், NDA கூட்­டணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதற்­காக இதை­யெல்­லாம் செய்­கி­றார்­கள் என்­றால், நம்­மு­டைய குழந்­தை­கள் கல்வி நிலை­யங்­க­ளை­விட்டு வெளி­யேற வேண்­டும்; அறி­வி­யல்­பூர்­வ­மா­கச் சிந்­திப்­பதை நிறுத்த வேண்­டும்; ‘வாட்ஸ்­அப்’ வதந்­தி­க­ளை­யும், பிற்­போக்­குத் தனங்­க­ளை­யும் நம்ப வேண்­டும்; அப்­போ­து­தான் அந்­தக் காலம் போன்றே நாம் முன்­னே­றா­மல் முடங்­கிக் கிடப்­போம்; ஒரு சிலர் மட்­டும் வாய்ப்­பு­களை தட்­டிப் பறித்து, முன்­னே­று­வார்­கள். இது­தான், அவர்­க­ளின் திட்­டம்; அவர்­க­ளின் எண்­ணம். இதற்­கான செயல்­திட்­டங்­க­ளுக்கு எல்­லாம் ‘ஆமாம் சாமி’ போடும் முரட்டு அடி­மை­யாக வாய்த்­தி­ருப்­ப­வர்­தான், இந்த அடி­மைச்­சாமி! அடுத்­த­டுத்த துரோ­கங்­க­ளுக்கு அவர்­கள் வைத்­தி­ருக்­கும் பெயர்­தான், N.D.A. கூட்­டணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மிக்கு உண்­மை­யி­லேயே தமிழ்­நாட்டு மேல் அக்­கறை இருந்­தால், தர்­மேந்­திர பிர­தான் தொடங்கி, அமித் ஷா – மோடி வரைக்­கும் மேடை­யில் உட்­கார வைத்து, “இது தமிழ்­நாடு! இங்கு பேர­றி­ஞர் அண்ணா வகுத்­துக் கொடுத்த இரு­மொ­ழிக் கொள்கை மட்­டும்­தான் இருக்­கும்” என்று ஆணித்­த­ர­மா­கப் பேச முடி­யுமா அவ­ரால்? ஒரு அடி­மை­யால் ஓனரை எதிர்த்­துப் பேச முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிர­த­மர் மோடி அவர்­க­ளைப் பார்த்து, “தமிழ்­நாட்­டுக்கு வரும்­போ­தெல்­லாம் – ‘வணக்­கம்’, ‘நன்றி’ என்று மட்­டும் சொல்லி, தமி­ழில் பேச முடி­ய­வில்லை என்று வருத்­தப்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றீர்­களே, பிறகு ஏன், தமி­ழை­விட சமஸ்­கி­ரு­தத்­திற்கு 17 மடங்கு அதி­க­மாக நிதி வழங்­கு­கி­றீர்­கள்?” என்று கேள்வி கேட்­பாரா, இந்த   அடிமை பழ­னி­சாமி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமித்ஷா அவர்­க­ளைப் பார்த்து, “சமஸ்­கி­ரு­தம்­தான், அனைத்­துக்­கும் மூல­மொழி” என்று நீங்­கள் சொல்­வது தவறு என்று பழ­னி­சா­மி­யால் வாதிட முடி­யுமா? அதற்­கான முது­கெ­லும்பு பழ­னி­சா­மிக்கு இருக்­கி­றதா? அவரை சும்மா ஒன்­றும் ‘ஆமாம்­சாமி’, ‘அடி­மைச்­சாமி’ என்று சொல்­ல­வில்லை. எதற்­கெல்­லாம் ‘ஆமாம்­சாமி’ போடு­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எடப்­பாடி செய்த துரோ­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம்! அவர் நினைத்­தி­ருந்­தால் அவர்­கள் எம்.பி.க்கள் ஆத­ரிக்­கா­மல், அதைத் தடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால், ‘ஆமாம்­சாமி’ போட்டு இசு­லா­மி­யர்­க­ளுக்கு துரோ­கம் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, ‘வக்பு’ திருத்­தச் சட்­டத்­தை­யும் ஆத­ரித்து, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு துரோ­கம் செய்­தார் அடி­மைச்­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘இந்­தியா’ கூட்­டணி அரசு அமைந்­தி­ருந்­தால், ‘நீட்’ தேர்வு இருந்­தி­ருக்­காது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக F.C.R.A. சட்­டம் கொண்­டு­வ­ரப் போகி­றார்­கள். கூட்­ட­ணி­யில் இருக்­கும் பழ­னி­சாமி, தேர்­த­லுக்­கா­க­வா­வது அதை எதிர்த்­துப் பேசி­யி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ‘நீட்’ தேர்­வைப் பற்­றிப் பேசு­கி­றார்… நீட் தீர்­மா­னத்தை ஒன்­றிய அர­சு­தான் நிறுத்தி வைத்­தி­ருக்­கி­றது என்று அனை­வ­ரும் நினைத்­துக் கொண்­டி­ருந்­தோம். ஆனால், அதை ஒன்­றிய அரசு திருப்பி அனுப்­பி­ய­தையே கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­கா­ல­மாக மறைத்து வைத்­த­வர்­தான் பழ­னி­சாமி. அந்த மாதிரி துரோ­கம் எல்­லாம் யாரும் பண்­ண­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உடனே, நாங்­கள் என்ன பண்­ணோம் என்று கேட்­பார்… நான் ஏற்­கெ­னவே பல முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன்… நீட் தேர்வு ஒழிக்­கப்­பட வேண்­டும் என்­ப­து­தான் எங்­க­ளின் நிலைப்­பாடு. ஒன்­றி­யத்­தில் ‘இந்­தியா’ கூட்­டணி ஆட்சி அமைத்­தி­ருந்­தால், நீட் தேர்வு தமிழ்­நாட்­டில் இருந்­தி­ருக்­காது. அதற்­கான உறு­தியை பிர­த­மர் வேட்­பா­ள­ராக இருந்த அரு­மைச் சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­களே பல கூட்­டங்­க­ளில் பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘‘தமிழ்­நாட்­டுக்கு ‘நீட்’ விலக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தாருங்­கள்’’ – என</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அடி­மைச்­சாமி கேட்­பாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தய­வு­டன் ஆட்சி அமைத்­தி­ருக்­கும் பிர­த­மர் மோடி அவர்­க­ளைப் பார்த்து, “தமிழ்­நாட்­டுக்கு நீட் விலக்கு தாருங்­கள்” என்று அடி­மைச்­சா­மி­யால் கேட்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்­வில் இருந்து விலக்­குப் பெற சட்­டப்­பூர்­வ­மாக நாங்­கள் போரா­டிக் கொண்­டு­தான் இருக்­கி­றோம். கொள்­கையை விற்­றுப் பிழைக்­கும் அடி­மைச்­சாமி கூட்­டத்­துக்கு சுய­ம­ரி­யாதை உணர்­வும் இருக்­காது; மாநில உரி­மை­க­ளும் புரி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போ­து­கூட, நாடு முழு­வ­தும் மக்­கள், “மோடி ஜி, Where is L.P.G.” என்று கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். பல ஹோட்­டல்­களை இழுத்து மூடி­விட்­டார்­கள். பல ஹோட்­டல்­க­ளில் மெனு­வைக் குறைத்­து­விட்­டார்­கள். பல ஹோட்­டல்­க­ளில் விலையை ஏற்­றி­விட்­டார்­கள். இத­னால், உண­வுக்­காக ஹோட்­டல்­களை நம்­பி­யி­ருப்­ப­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் முழு­வீச்­சில் சரி­செய்ய முயற்­சிக்­கா­மல், சிலிண்­டர் விலையை 200 ரூபாய் உயர்த்­தி­யி­ருக்­கி­றார்­கள். அது­வும் சரி­யாக வழங்­கப்­ப­டு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் எதிர்த்து பழ­னி­சாமி குரல் கொடுத்­தி­ருக்­கி­றாரா? அத­னால்­தான், அவரை ‘அடி­மைச்­சாமி’ என்று சொல்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­களே… துரோ­கத்­தில் ‘டாக்­ட­ரேட்’ வாங்­கும் அள­வுக்கு அனை­வ­ருக்­கும் இவ்­வ­ளவு துரோ­கம் செய்­து­விட்டு, வாய் கூசா­மல் பொய்­யாய் பேசிக் கொண்­டி­ருக்­கி­றீர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பல துரோ­கங்­க­ளைக் கடந்­து­தான் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­கள் ஒன்றை நன்­றா­கப் புரிந்து கொள்ள வேண்­டும். தமி­ழுக்­கும் – தமி­ழி­னத்­துக்­கும் – தமிழ்­நாட்­டுக்­கும் துரோ­கம் செய்­வது பா.ஜ.க.வின் வழக்­கம்! அதற்­குத் துணை போவ­து­தான் அ.தி.மு.க.வின் பழக்­கம்! இவர்­க­ளின் அத்­தனை துரோ­கங்­க­ளை­யும் கடந்­து­தான், நாம் அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உரி­மைத்­தொகை தடை­யில்­லா­மல் கிடைக்க வேண்­டும் என்­றால் – ‘விடி­யல் பய­ணம்’ தொடர வேண்­டும் என்­றால் – ‘காலை உண­வுத் திட்­டம்’, ‘புது­மைப்­பெண்’, ‘தமிழ்ப்­பு­தல்­வன்’, ‘நான் முதல்­வன்’, ‘மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்’ உள்­ளிட்ட திட்­டங்­கள் நிறுத்­தப்­ப­டா­மல் தொடர வேண்­டும் என்­றால் – திரா­விட மாடல் ஆட்­சி­தான் மீண்­டும் அமைய வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு, திரு­ம­யம் தொகு­தி­யில் ரகு­பதி அவர்­க­ளுக்­கும் – ஆலங்­குடி தொகு­தி­யில் மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்­கும் – விரா­லி­மலை தொகு­தி­யில் செல்­லப்­பாண்­டி­யன் அவர்­க­ளுக்­கும் – புதுக்­கோட்டை தொகு­தி­யில் முத்­து­ராஜா அவர்­க­ளுக்­கும், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, கந்­தர்­வக்­கோட்டை தொகு­தி­யில் சின்­ன­துரை அவர்­க­ளுக்கு அரி­வாள் –சுத்­தி­யல் – நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அறந்­தாங்கி தொகு­தி­யில் டி.ராமச்­சந்­தி­ரன் அவர்­க­ளுக்கு ‘கை’ சின்­னத்­தில் வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்­றா­கப் புரிந்து கொள்­ளுங்­கள். “டபுள் எஞ்­சின், டப்பா எஞ்­சின்’ என்று சொல்­லிக் கொண்டு வரும் N.D.A. கூட்­டணி தமிழ்­நாட்­டுக்­குள் வந்­து­விட்­டது என்­றால், தமிழ்­நாட்டை மீண்­டும் இருண்ட காலத்­துக்­குள் தள்­ளி­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நாம் போரா­டு­வது – ஒட்டு மொத்­தத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் போரா­டு­வது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல; கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல; ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது சொல்­லுங்­கள்... வெற்றி பெறப் போவது தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? சொல்­லுங்­கள்… தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? (‘தமிழ்­நாடு அணி’ என மக்­கள் பலத்த குரல்!)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­நி­மிர்ந்த தமிழ்­நாடு வளம் பெற – நல்­லாட்சி தொடர்ந்­திட ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! உரக்­கச் சொல்­லுங்­கள்… வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு வெல்­லட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>