<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,498,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 14 2026 03:33:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260414T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="14042026-CBE-08" position.sequence="08" ex-ref="14042026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="91">வெற்றி பெற முடியாத வீண் சவால்களை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தொடர்ச்சி 9 –ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="3_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்துக்குடி,ஏப்.14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ரும்,  தமிழ்­நாடு
முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் 
அவர்­கள் நேற்று முன்தினம் (12–04–2026) மாலை, தூத்­துக்­குடி தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­ கூட்டத்­தில் உரையாற்று கையில், கழக ஆட்சியில் தூத்துக்குடிக்கு முக்கியத்து வம் தரும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அளிக்கப்பட்டன என்றும், வெற்றி பெற முடியாத வீண் சவால்களை பழனிசாமி நிறுத்திக் கொள்ள  வேண்டும்  என்றும்  குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி தேர்­தல் பரப்­பு­ரைப் பொதுக்­கூட்­டத்­தில் கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ஆற்றிய உரை வருமாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்­து­ந­க­ருக்கு, முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் வந்­தி­ருக்­கி­றேன். மீன்­வ­ள­மும் – துறை­மு­க­மும் – வணி­க­மும் செழிக்­கும், தூத்­துக்­கு­டிக்கு வந்­தி­ருக்­கி­றேன். உங்­கள் மாவட்­டத்­தில் என்ன ஸ்பெஷல்? தூத்­துக்­குடி மக்­ரூன், கோவில்­பட்டி கடலை மிட்­டாய் போன்றே, இந்த மாவட்ட மக்­க­ளும் இனி­மை­யா­ன­வர்­கள்! ஸ்வீட் மட்­டுமா, தமிழ்­நாட்­டுக்கே உப்பு சப்ளை செய்­வ­தும் நீங்­கள்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தனது ஆஸ்தி மொத்­தத்­தை­யும் விற்று ஆங்­கி­லே­யர்­களை எதிர்த்து கப்­ப­லோட்­டிய தமி­ழர் வ.உ. சிதம்­ப­ர­னா­ரின் மண், இந்த மண்! அவர் மட்­டுமா, வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன், மகா­கவி பார­தி­யார், அண்­மை­யில் மறைந்த தகை­சால் தமி­ழர் ஐயா நல்­ல­கண்ணு உள்­ளிட்ட பல விடு­த­லைப் போராட்ட வீரர்­களை, தியா­கி­களை தமிழ்­நாட்­டுக்கு தந்த மண், இந்த தூத்­துக்­குடி மண்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு – கே.வி.கே. சாமி, தலை­வர் கலை­ஞ­ரால் ‘முரட்டு பக்­தன்’ என அழைக்­கப்­பட்ட அண்­ணன் என். பெரி­ய­சாமி உள்­ளிட்ட பல கழ­கத் தீரர்­க­ளைத் தந்த மண்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம் – பர­மக்­கு­டி­யில் பரப்­பு­ரையை முடித்­து­விட்டு, தூத்­துக்­குடி வரு­வ­தற்கு இரண்டு மணி நேரம் ஆனது. தூத்­துக்­கு­டி­யில் பரப்­புரை என்­ற­துமே, வரும் வழி­யில் கடந்த 5 ஆண்­டில் இங்கு எத்­தனை முறை வந்­தி­ருக்­கி­றோம் என்று நான் யோசித்­துக் கொண்டே வந்­தேன். எனக்கே மலைப்­பாக இருந்­தது. எத்­தனை அரசு நலத்­திட்ட விழாக்­கள், எத்­தனை ஆய்­வு­கள், எத்­தனை தொழிற்­சா­லை­கள் தொடக்க விழா, புது­மைப் பெண் திட்ட விரி­வாக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எல்­லா­வற்­றிற்­கும் மேல் தொடர்ச்­சி­யாக 3 ஆண்­டு­கள், தூத்­துக்­குடி, இயற்­கை­யின் சீற்­றத்­திற்கு ஆளாகி வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­போது, தூத்­துக்­கு­டிக்கு ஓடோடி வந்து பார்த்­தேன். பத்­துக்­கும் மேற்­பட்ட அமைச்­சர்­க­ளை­ யும், கூடு­தல் அதி­கா­ரி­கள் உட்­பட ஒட்­டு­மொத்த அரசு இயந்­தி­ரத்­தை­யும் உங்­கள் மாவட்­டத்­திற்கு அனுப்பி வைத்து, மீட்­புப் பணி­களை முடுக்கி விட்­டேன். அப்­போது, ஒன்­றிய அரசு ஒரு ரூபாய்­கூட தராத நிலை­யி­லும், நம்­மு­டைய அரசு சார்­பில் நிவா­ரண உத­வி­களை அறி­வித்து, 666 கோடி ரூபாய் மதிப்­பி­லான நிவா­ரண உத­வி­களை நேரில் வந்து வழங்­கி­னேன். அது­மட்­டுமா, வெள்­ளப் பாதிப்­பில் அதி­கம் பாதிப்­ப­டைந்த குடும்­பங்­க­ளுக்கு தலா 6 ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தூத்­துக்­கு­டி­யில் அதி­க திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு, தூத்­துக்­குடி எப்­போ­தும் பார்க்­காத அளவு அதிக திட்­டங்­களை கடந்த 5 ஆண்­டு­க­ளில் செயல்­ப­டுத்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு முக்­கி­யக் கார­ணம், இங்கு வர­வேற்­புரை ஆற்­றிய கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர் என்­னு­டைய அரு­மைத் தங்கை கனி­மொழி. கனி­மொழி அவர்­கள், உங்­கள் மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கும் கார­ணத்­தி­னால், என்­னி­டம் பேசி, எப்­ப­டி­யா­வது பல்­வேறு திட்­டங்­களை வாங்­கி­வி­டு­வார்­கள். அதே­போன்று, அதி­கா­ரி­க­ளி­ட­மும், பொறு­மை­யாக – பெய­ருக்கு ஏற்­ற­வாறு கனி­வோடு பேசி – அனைத்து வேலை­க­ளை­யும் வாங்­கி­வி­டு­வார்­கள். அது­மட்­டு­மல்ல, நாடா­ளு­மன்­றத்­தி­லும் – கழ­கப் பணி­யி­லும் சிறிது இடை­வெளி கிடைத்­தா­லும், உடனே தூத்­துக்­கு­டிக்­குத்­தான் புறப்­ப­டு­வார்­கள். நான் போன் பண்­ணும்­போது, “என்­னம்மா, தூத்­துக்­கு­டி­யில்­தான் இருக்­கி­றாயா” என்று நானே கேட்­பேன். கனி­யும் சிரித்­துக் கொண்டு, “ஆமாண்ணே, தூத்­துக்­கு­டி­தான்” என்று சொல்­வார்­கள். இப்­படி பணி செய்த கார­ணத்­தி­னால்­தான், பின்­தங்­கிய மாவட்­டங்­க­ளில் இருந்த இந்த தூத்­துக்­குடி, இப்­போது வேக­மாக வளர்ந்து முன்­னேறி, தெற்­கில் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­ப­டும் மாவட்­ட­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது உண்­மை­தான் என்று நிரூ­பிக்­கும் வகை­யில், இரண்டு நாள் முன்பு ‘தி இந்து’ நாளேட்­டில் ஒரு கட்­டுரை வெளி­யாகி இருக்­கி­றது. “ஒரு காலத்­தில் பின் தங்­கிய மாவட்­டங்­கள் என அறி­யப்­பட்ட தூத்­துக்­குடி உள்­ளிட்ட தென் மாவட்­டங்­கள், திரா­விட மாடல் ஆட்­சி­யில் அந்த இமேஜை உடைத்து வெளியே வரத் தொடங்­கி­விட்­டது” என்று எழு­தி­யி­ருந்­தார்­கள். இந்­த­ள­வுக்கு சாத­னை­க­ளைச் செய்து காட்­டிய உரி­மை­யோடு, உற­வோடு, பாசத்­தோடு உங்­க­ளைப் பார்த்து, நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு கேட்க வந்­தி­ருக்­கி­றேன். இப்­போது, உங்­கள் அனு­ம­தி­யோடு நமது வெற்றி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­த­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வேட்­பா­ளர்­கள் அறி­மு­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில், தூத்­துக்­குடி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அமைச்­சர் கீதா­ஜீ­வன் அவர்­கள். நம்­மு­டைய கழ­கத் தீரர் என்­னு­டைய ஆரு­யிர் அண்­ணன் என். பெரி­ய­சா­மி­யின் அருமை மகள். “என்­னால் பெண் சிங்­கம்” என்று பாராட்­டப்­பட்­ட­வர். திரா­விட மாடல் ஆட்­சி­யில் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத்­திட்­டம் உள்­ளிட்ட முத்­தி­ரைத் திட்­டங்­க­ளுக்கு பொறுப்­பான சமூக நலம் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­து­றை­யின் அமைச்­சர்! உங்­கள் மண்­ணின் மகள் கீதா ஜீவ­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் மீண்­டும் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, திருச்­செந்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் அமைச்­சர் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் அவர்­கள். மீன் வளம், மீன­வர் நலன் மற்­றும் கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை அமைச்­ச­ராக இருந்து, மீன­வர் நல­னுக்­காக பல்­வேறு திட்­டங்­க­ளைத் தீட்­டி­ய­வர். தூத்­துக்­குடி தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர். இது­வரை திருச்­செந்­தூர் தொகு­தி­யில் ஆறு­முறை போட்­டி­யிட்டு, அனைத்து முறை­யும் வெற்றி பெற்­ற­வர். இதி­லி­ருந்தே அவர் எப்­ப­டிப்­பட்ட செல்­வாக்­கோடு தொகு­தி­யில் இருக்­கி­றார் என்­பது தெரி­கி­றது. இந்த முறை­யும் அனிதா, அதி­கப்­ப­டி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் ஜி.வி. மார்க்­கண்­டே­யன் அவர்­கள். ஏற்­க­னவே விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து, பல்­வேறு திட்­டங்­களை இந்­தப் பகு­தி­க­ளுக்கு கொண்டு வந்­த­வர். பார்க்க, பழக அடக்­க­மா­ன­வர். அவ­ருக்கு, மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் எல்­லாம் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, திரு­வை­குண்­டம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த ஊர்­வசி எஸ். அமிர்­த­ராஜ் அவர்­கள். கடந்த முறை போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர். அது­மட்­டு­மல்ல, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஊர்­வசி செல்­வ­ரா­ஜின் அருமை மகன். தூத்­துக்­குடி தெற்கு மாவட்ட காங்­கி­ரஸ் தலை­வர். அவ­ருக்கு நீங்­கள் மீண்­டும் கை சின்­னத்­தில் வாக்­க­ளித்து மீண்­டும் அவரை வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, கோவில்­பட்டி சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் கா. கரு­ணா­நிதி அவர்­கள். கோவில்­பட்டி நக­ராட்­சித் தலை­வர். இவ­ரது அப்பா கயத்­தாறு காளிப்­பாண்­டி­யன் கேட்­டுக் கொண்­ட­தால், தன்­னு­டைய பெய­ரையே தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இவ­ருக்கு வைத்­தார். அந்­தக் காலத்­தில் குடி­நீர் தட்­டுப்­பாடு நில­விய கோவில்­பட்­டிக்கு, சீவ­லப்­பேரி நீரைக் கொண்டு வந்து தாகம் தீர்த்­த­வர், முத­ல­மைச்­ச­ராக இருந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அவ­ரின் பெய­ரைக் கொண்ட கரு­ணா­நிதி அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, ஒட்­டப்­பி­டா­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி. நமது வெல்­லும் வேட்­பா­ளர் பை.மு. ராம­ஜெ­யம் அவர்­கள். தென் திருப்­பேரை வட்­டா­ரத்­தில் பல்­வேறு பொறுப்­பு­க­ளில் இருந்­த­வர். தூத்­துக்­குடி தெற்கு மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ள­ராக சிறப்­பாக செயல்­பட்டு வரு­கி­றார். மக்­கள் பணி­யாற்ற இந்த இளை­ஞ­ருக்கு, நீங்­கள் எல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­கள் அனை­வ­ரின் வெற்­றி­யும் உறு­தியா? உறுதி (மக்­கள்). நன்றி! வேட்­பா­ளர்­கள் அனை­வ­ரும் இப்­போது உட்­கா­ர­லாம். சீட் கன்ஃ­பார்ம் ஆகி­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் ஒன்­றும் சும்மா ஆத­ரவு கேட்டு வர­வில்லை. ஏற்­க­னவே எத்­தனை முறை நேரில் வந்து திட்­டங்­களை தந்­தேன் என்று சொன்­னேன். இப்­போது 5 ஆண்­டு­க­ளில் உங்­கள் மாவட்­டத்­திற்­காக என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்று பெரிய லிஸ்ட்டே நான் வைத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டு அமைச்­சர்­கள் இருக்­கி­றார்­கள். அதை­யும் தாண்டி, என்­னு­டைய தங்கை கனி­மொ­ழியை, இந்த தூத்­துக்­குடி மாவட்ட மக­ளாக உங்­க­ளி­டம் நான் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றேன். அத­னால் என்­னி­டத்­தில் பட்­டி­யல் பெரி­தாக இருக்­கி­றது. அதில் முக்­கி­ய­மான சில­வற்றை மட்­டும் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி மாவட்­டத்­தில்
செயல்­ப­டுத்­திய திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தென் தமிழ்­நாட்­டின் முதல் டைடல் பூங்­காவை தூத்­துக்­குடி மீள­விட்­டா­னில் திறந்து வைத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிலா­நத்­தம் சிப்­காட்­டில் வின்ஃ­பாஸ்ட் மின் வாகன தொழிற்­சாலை. புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் போட்ட 18 மாதத்­தில் உற்­பத்­தியே தொடங்­கி­விட்­டது. அப்­படி ஒரு ஸ்பீடு! இத­னால் தமிழ்­நாட்­டின் மின்­வா­க­னத் தலை­ந­க­ராக தூத்­துக்­குடி மாறி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி அரசு மருத்­து­வக் கல்­லூரி வளா­கத்­தில் உயர்­தர பல்­நோக்கு சிறப்பு மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டம். சென்ற மாதம்­தான் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி வந்து திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருச்­செந்­தூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் மகப்­பேறு மற்­றும் குழந்­தை­கள் நலப்­பி­ரிவு, விபத்து மற்­றும் அவ­சர சிகிச்சை பிரிவு கட்­ட­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி மாவட்­டத் தந்தை குரூஸ் பர்­னாந்து திரு­வு­ரு­வச் சிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரி­சல் இலக்­கிய பிதா­ம­கர் கி.ரா. அவர்­க­ளுக்கு மணி­மண்­ட­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வீர­மா­மு­னி­வர் மணி­மண்­ட­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருச்­செந்­தூர் சுப்­பி­ர­ம­ணி­ய­சாமி திருக்­கோ­யி­லில் 300 கோடி ரூபாய் மதிப்­பில் பெருந்­திட்ட வளா­கப் பணி­கள் நடை­பெற்று, குட­மு­ழுக்­கும் நடத்­தி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது அர­சும், நம்­மு­டைய தூத்­துக்­குடி எம்.பி. தங்கை கனி­மொ­ழி­யும் தொடர் முயற்சி செய்து, தூத்­துக்­குடி வாகை­கு­ளத்­தில் விமான நிலை­யம் விரி­வாக்­கம் செய்­யப்­பட்டு, இரவு நேர விமான சேவை­யும் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அத­னால்­தான், இப்­போது நிகழ்ச்சி முடித்து, இப்­போது அதில்­தான் செல்­லப் போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வாக, முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு என்­றால், சென்­னை­யில் நடத்­து­வார்­கள். இல்லை என்­றால், கோவை­யில் நடத்­து­வார்­கள். ஆனால், நம்­மு­டைய அர­சில், முதன்­மு­தல் T.N. ரைசிங் மாநாட்டை தூத்­துக்­கு­டி­யில்­தான் நடத்­தி­னோம். அந்த நிகழ்ச்­சில் 50 ஆயி­ரம் பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாகி இருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>