<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 14 2026 03:57:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260414T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="14042026-TRY-05" position.sequence="05" ex-ref="14042026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="47">தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர்கள்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="47"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">டெல்லி ஆட்டுவித்தபடி ஆடும் அடிமை அ.தி.மு.க.! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="37">பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு – கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PTICMIntervie_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="PTILogo_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை, ஏப்.14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘தமிழ்­நாட்­டின் உரி­மை­களை எல்­லாம் அடகு வைத்­த­வர்­களை  – டெல்லி ஆட்­டு­வித்­த­படி ஆடு­ப­வர்­களை அடிமை என்று சொல்­லா­மல் வேறு எப்­ப­டிச் சொல்­வது’ என்று அ.தி.மு.க. பற்றி பி.டி.ஐ. செய்தி நிறு­வ­னத்­துக்கு கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அளித்த பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பி.டி.ஐ. செய்தி நிறு­வ­னத்­துக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. தேர்­தல் அட்­ட­வ­ணையை தேர்­தல் ஆணை­யம் அறி­விப்­ப­தற்கு முன்பே மாநா­டு­கள் / கூட்­டங்­களை நடத்­தத் தொடங்­கி­யது. உங்­கள் தீவி­ர­மான தொடர்ச்­சி­யான பிரச்­சா­ரத்­தின் ஒரு பகு­தி­யாக நீங்­கள் மக்­களை பெரு­ம­ள­வில் சந்­தித்து வரு­கி­றீர்­கள். உங்­க­ளுக்கு என்ன உணர்வு? தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முன்­னேற்­றக் கூட்­டணி எத்­தனை இடங்­களை வெல்­லும் என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் என்று வந்­தாலே எப்­போ­தும் தி.மு.க.தான் களத்­தில் முந்தி நிற்­கும். அதே­போ­ல­தான் இந்த தேர்­த­லி­லும் ஓராண்­டுக்­கும் முன்பே தேர்­தல் பணி­க­ளைத் தொடங்­கி­விட்­டோம். ஐந்­தாண்டு கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் கலை­ஞர் மக­ளிர் உரிமை தொகை, விடி­யல் பய­ணம், புது­மை­பெண், தமிழ்ப் புதல்­வன், காலை உண­வுத் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம், 2 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு உள்­ளிட்ட எண்­ணற்ற நலத்­திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி உள்­ளோம். அந்த உரி­மை­யில் மக்­களை சந்­தித்து ஆத­ரவு கேட்­கி­றோம் . மக்­கள் எங்­கள் மீது அளவு கடந்த அன்­பும், நம்­பிக்­கை­யும் வைத்­துள்­ள­னர்.  மக்­க­ளின் ஆத­ர­வோடு 200 தொகு­தி­க­ளுக்கு மேல் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வெற்றி பெற்று திரா­விட மாடல் 2.O ஆட்சி அமைப்­போம். அதில் எந்த சந்­தே­க­மு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">மன­திற்கு  நெருக்­க­மான திட்­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">உங்­கள் அர­சாங்­கம் செயல்­ப­டுத்தி வரும் பல நலத்­திட்­டங்­க­ளில், உங்­க­ளுக்கு மிகுந்த திருப்தி அளித்த ஒரு திட்­டத்­தின் பெய­ரைச் சொல்ல முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் நாங்­கள் நிறை­வேற்­றிய அத்­தனை திட்­டங்­க­ளும் மிக முக்­கி­ய­மான திட்­டங்­கள் தான். இருந்த போதும் நீங்­கள் கேட்­ப­தால் சொல்­கி­றேன்...  பல்­வேறு திட்­டங்­களை செயல்­ப­டுத்தி இருந்­தா­லும் இரண்டு திட்­டங்­கள் என் மன­திற்கு நெருக்­க­மான திட்­டங்­கள். ஒன்று குடும்­பத் தலை­வி­க­ளுக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்­கும் மக­ளிர் உரி­மைத் திட்­டம். இந்த திட்­டத்தை நாங்­கள் முதன்­மு­த­லில் வாக்­கு­று­தி­யாக அறி­வித்த போது ‘இதை செயல்­ப­டுத்­தவே முடி­யாது, தேர்­த­லுக்­காக அறி­வித்­தது’ என எதிர்க்­கட்­சி­கள் விமர்­ச­னம் செய்­தன. ஆனால் இன்று இந்­தி­யா­வி­லேயே சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­திக் காட்­டப்­பட்ட திட்­ட­மாக மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டம் இருந்து வரு­கி­றது. யாரெல்­லாம் அன்று விமர்­சித்­தார்­களோ, அவர்­களே இன்று எங்­க­ளின் திட்­டத்தை அவர்­கள் கட்சி ஆளும் மாநி­லங்­க­ளில் செயல்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். அடுத்து அமை­ய­வுள்ள எங்­க­ளின் ஆட்­சி­யில் இந்த உரி­மைத் தொகையை 2000 ரூபா­யாக உயர்த்தி வழங்க உள்­ளோம். இந்­தத் திட்­டம் வர­லாற்­றில் மிக முக்­கிய திட்­ட­மாக இடம்­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல என் இத­யத்­திற்கு நெருக்­க­மான மற்­றொரு திட்­டம் பள்­ளிக் குழந்­தை­க­ளுக்­கான காலை உண­வுத் திட்­டம். இந்­தத் திட்­டத்­திற்­கான செலவு மற்ற திட்­டங்­க­ளை­விட குறைவு தான். ஆனால் அதன் பலன் அள­விட முடி­யா­தது. ஒரு குழந்­தை­கூட பசித்த வயி­றோடு பள்­ளி­யில் இருக்­கக் கூடாது என உட­ன­டி­யாக பள்­ளி­க­ளில் காலை உண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தோம். அடுத்து அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­க­ளுக்­கும் விரி­வாக்­கம் செய்­தோம். இப்ப அடுத்து வர­வுள்ள எங்­க­ளது ஆட்­சி­யில் 8–ஆம் வகுப்­பு­வரை விரி­வு­ப­டுத்த உள்­ளோம்.  இப்­போது பசித்த வயி­று­டன் ஒரு குழந்­தை­கூட பள்­ளிக்கு 
வரு­வ­தில்லை என்ற நிலையை உரு­வாக்கி உள்­ளோம். குழந்­தை­க­ளின் வயிறு நிறைந்து, நன்­றா­கப் படிக்­கி­றார்­கள். இந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­ய­தில் உண்­மை­யி­லேயே என் மனம் நிறை­வாகி 
இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">காங்­கி­ர­ஸு­டன் இட­ஒ­துக்­கீடு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளில் தி.மு.க. எதிர்­கொண்ட சவால்­கள், பல தசாப்­தங்­க­ளில் மிகக் கடி­ன­மா­ன­வை­யா­கக் கரு­தப்­ப­டுமா? குறிப்­பாக, காங்­கி­ர­ஸின் ‘அதி­கா­ரத்­தில் பங்கு’ கோரிக்­கையை உள்­ள­டக்­கிய ஆரம்ப கட்­டம்? அது மற்ற கட்­சி­க­ளு­ட­னான இட­ஒ­துக்­கீடு பேச்­சு­வார்த்­தை­க­ளி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது போல­வும், அதை­விட முக்­கி­ய­மாக அண்டை மாநி­ல­மான புதுச்­சே­ரி­யில் இந்­தியா கூட்­டணி முற்­றி­லும் சிதை­வ­டைந்த நிலைக்கு சென்­றது போல­வும் தோன்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வழக்­க­மாக தொகுதி பங்­கீடு பேச்­சு­வார்த்­தை­யின் போது நடக்­கும் நிகழ்­வு­கள் தான். சுமு­க­மா­கப் பேச்­சு­வார்த்­தை­கள் முடிந்து, கூட்­ட­ணிக் கட்­சி­யின் தலை­வர்­க­ளும் – தொண்­டர்­க­ளும், கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­க­ளின் வெற்­றிக்­காக களத்­திற்கு வந்­து­விட்­டோம். 2019 முதல் இருந்து வரும் எங்­க­ளின் வலு­வான கூட்­ட­ணி­யில் புதிய கட்­சி­க­ளும் சேர்ந்­துள்­ளன. மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு மேலும் வலு சேர்த்­துள்­ளது. தமிழ்­நாடு மட்­டு­மல்ல; புதுச்­சே­ரி­யி­லும் எங்­கள் கூட்­டணி மகத்­தான வெற்றி பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. வலு­வா­க­வும், சீரா­க­வும் முன்­னேறி வரு­கி­றது என்று பார்க்­கப்­ப­டும் நிலை­யில், தி.மு.க. கூட்­ட­ணி­யில் தி.மு.க. – தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கத்தை (DMDK) இணைத்­துக் கொண்டு, 10 இடங்­களை – மேலும் ஒரு ராஜ்­ய­சபா இடத்­தை­யும் – வழங்­கி­ய­தன் மூலம் தி.மு.க. எந்த செய்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது? உங்­கள் கருத்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளாட்­சி­யின் மாண்­பைக் காத்­தும் – கூட்­ட­ணிக் கட்­சி­யி­னரை மதித்து அர­வ­ணைத்­தும் நடப்­ப­து­தான் எங்­க­ளது பாணி. இதைப் பார்த்து, மக்­கள் நல­னி­லும் மாநில உரி­மை­க­ளி­லும் அக்­கறை கொண்­டுள்ள தே.மு.தி.க. போன்ற இயக்­கங்­கள் எங்­க­ளோடு கூட்­டணி அமைக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">அம­லாக்­கத்­துறை அரங்­கேற்­றிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">திரு­வி­ளை­யா­டல்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">TASMAC–இல் ரூ.1,000 கோடி ஊழல், சுமார் ரூ.4,730 கோடி மதிப்­பி­லான சட்­ட­வி­ரோத மணல் சுரங்­கம், அமைச்­சர்­க­ளைச் சார்ந்த குற்­றச்­சாட்­டு­கள் போன்­றவை — அனைத்­தை­யும் அம­லாக்க இயக்­கு­ந­ர­கம் (ED) எடுத்­துக்­கொண்­டுள்­ளது — இவற்­றுக்கு சட்ட அடிப்­படை உள்­ளதா இல்­லையா? குற்­றச்­சாட்­டு­களை மத்­திய அமைப்பு விசா­ரிப்­ப­தில் தவறு ஏதா­வது உள்­ளதா? திமுக தனது ஆட்சி பாஜ­க­வால் ED–ஐ தவ­றாக பயன்­ப­டுத்தி குறி­வைக்­கப்­ப­டு­கி­றது என்று உண­ரு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அம­லாக்­கத்­து­றையை தங்­க­ளின் ஏவல் துறை­யாக மாற்றி எதிர்க்­கட்­சி­க­ளின் மீது பொய்­யான வழக்­கு­க­ளைப் புனைந்து ஒன்­றிய பா.ஜ.க. அரசு ஒடுக்க முயல்­வதை தான் இந்த நாடே பார்த்து வரு­கி­றதே! ஏன், உயர்­நீ­தி­மன்­றங்­க­ளும் உச்­ச­நீ­தி­மன்­ற­மும் பல வேளை­க­ளில் அம­லாக்­கத் துறையை கடு­மை­யாக கண்­டித்­த­தைப் பார்த்­தோமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீங்­கள்குறிப்­பிட்­ட­தெல்­லாம், ஒன்­றிய பா.ஜ.க.வின் தயா­ரிப்­பில் அம­லாக்­கத்­துறை அரங்­கேற்­றிய திரு­வி­ளை­யா­டல்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">எடப்­பா­டி­யின் கற்­ப­னைக்கதை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி கே. பழ­னி­சாமி கூறிய ‘தமிழ்­நாட்டை ஆளு­வ­தில் முத­ல­மைச்­ச­ரின் குடும்­பம் அதி­கார மையங்­க­ளாக செயல்­ப­டு­கி­றது’ என்ற குற்­றச்­சாட்­டுக்கு உங்­கள் பதில் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அர­சின் நல்­லாட்­சியை – ஐந்­தாண்டு சாத­னை­களை, திசை­தி­ருப்­பச் சொல்­லப்­ப­டும் குற்­றச்­சாட்­டு­கள் அவை. அவ­ரது கற்­ப­னைக் கதை­க­ளுக்கு எல்­லாம் பதில் கூற வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வீட்டு உப­யோ­கப் பொருட்­</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ளை வாங்க தி.மு.க. வாக்­கு­றுதி அளித்த ரூ.8,000 கூப்­பன், அதி­முக 
அறி­வித்த ‘இல­வச குளிர்­சா­த­னப் பெட்டி மற்­றும் ரூ.10,000 உதவி’ திட்­டங்­களை சம­நி­லைப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் கொண்­டு­வ­ரப்­பட்­டதா? ரூ.8,000 கூப்­பன் போன்ற திட்­டங்­கள் மாநி­லத்­தின் பொரு­ளா­தார செயல்­தி­றனை குறைக்­கும் வகை­யில் செயல்­ப­டக்­கூ­டும் என்று நீங்­கள் நினைக்­க­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">8000 ரூபாய்க்­கான இல்­லத்­த­ரசி கூப்­பன் திட்­டம் தான், இன்­றைக்கு தேர்­தல் களத்­தின் சூப்­பர் ஸ்டார். பெண்­கள் தங்­கள் வீடு­க­ளுக்­குத் தேவை­யான – தாங்­கள் விரும்­பிய பொருளை விரும்­பிய கடை­யில் வாங்­கிக் கொள்­ளும் இல்­லத்­த­ரசி கூப்­பன் என்­பது, ஒவ்­வொரு இல்­லத்­தின் வாழ்க்­கைத்­த­ரத்தை உயர்த்தி, உள்­ளூர் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டத்தை நாங்­கள் அறி­வித்து செயல்­ப­டுத்­திய போதும் இதே கருத்­தைத் தான் முன்­வைத்­த­னர். ஆனால் இன்று இந்­தி­யா­வில் பல மாநி­லங்­கள் அந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. புதி­தா­கத் தேர்­த­லைச் சந்­திக்­கும் மாநி­லங்­க­ளும், தேர்­தல் வாக்­கு­று­தி­யாக வழங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது இந்த ரூ.8000 இல்­லத்­த­ரசி கூப்­பன் திட்­டத்­தை­யும் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­து­வோம். எழுதி வைத்­துக் கொள்­ளுங்­கள் மக­ளிர் உரிமை தொகை திட்­டம் போல இந்­தத் திட்­ட­மும் இந்­தியா முழு­மைக்­கும் வலம் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கொள்கை கோட்­பாடு 
இல்­லாத அ.தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மூன்று முறை அ.தி.மு.க. முத­ல­மைச்­ச­ராக இருந்த ஓ. பன்­னீர்­செல்­வத்தை தி.மு.க.வில் சேர்த்­துக் கொண்­டது பல­ருக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது, மேலும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் அவர் அமைச்­சர் அல்­லது சபா­நா­ய­கர் ஆகப்­போ­வார் என்று கூறி வரு­கின்­ற­னர். தி.மு.க.க்கு எதி­ராக இருந்த பல தலை­வர்­கள் இறு­தி­யில் தி.மு.க.வில் இணைந்­துள்­ள­னர். இது குறித்து உங்­கள் கருத்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைய அ.தி.மு.க.வின் நிலை என்­ன­வாக இருக்­கி­றது என்­பதை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான நீங்­கள் மட்­டு­மல்ல, நாட்டு மக்­க­ளும் நன்கு அறி­வார்­கள். அந்­தக் கட்­சிக்கு கொள்­கை­யும் இல்லை; கோட்­பா­டும் இல்ல. அந்­தக் கட்­சி­யின் தலை­மைக் கழ­க­மாக டெல்லி பா.ஜ.க.தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் தான், அந்­தக் கட்­சி­யில் திரா­விட இயக்க உணர்­வோடு வளர்ந்­த­வர்­கள், திரா­விட இயக்­கத்­தின் தலை­ம­க­னாக விளங்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை நோக்கி வரு­கி­றார்­கள். அதே பாதை­யைத்­தான் சகோ­த­ரர் ஓ.பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளும் தேர்ந்­தெ­டுத்து தி.மு.க.வில் இணைந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்சி முத­லீ­டு­ க­ளைப் பெற்­றது, கையெ­ழுத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தங்­க­ளின் (MoUs) மாற்று விகி­தம், சட்­டம் மற்­றும் ஒழுங்கு பரா­ம­ரிப்பு ஆகி­ய­வற்­றில், எடப்­பாடி பழ­னி­சாமி தொடர்ந்து அர­சாங்­கத்­தின் கூற்­று­களை எதிர்த்து வரு­கி­றார். எதிர்க்­கட்­சித் தலை­வர் 6,999 POCSO வழக்­கு­கள்; ரூ.5 இலட்­சம் கோடி கடன் சுமை என்று குற்­றம் சாட்­டி­யுள்­ளார். இது­கு­றித்து உங்­கள் கருத்து?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> “பொல்­லாத ஆட்­சிக்கு பொள்­ளாச்­சியே சாட்சி”. இது ஒன்றே அ.தி.மு.க. ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்கு எடுத்­துக்­காட்டு. பெண் ஐ.பி.எஸ். அதி­கா­ரி­கள் கூட பாலி­யல் தொல்­லைக்கு உள்­ளான ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. தமிழ்­நாட்டை எப்­படி குட்கா கிடங்­காக மாற்றி நாசப்­ப­டுத்­தி­னார்­களோ – அதே­போல் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் மீது நட­வ­டிக்­கையே இல்லை என்ற நிலை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­விட்­டுப் போனார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், தி.மு.க. ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் குட்கா உள்­ளிட்ட போதை 
பொருட்­க­ளைக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் மூலம் ஒழித்­தி­ருக்­கி­றோம். பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் பற்றி மிகப்­பெ­ரிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் காவல் நிலை­யத்­திற்கு  வந்து புகார் கொடுக்­கும் துணிச்­சலை பெண்­க­ளுக்கு உரு­வாக்­கி­னோம். பணி­பு­ரி­யும் பெண்­க­ளின் பாது­காப்­புக்கு தோழி விடு­தி­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­ற­வ­ழக்­கு­ க­ளில் மிக குறு­கிய காலத்­தில் தண்­ட­னை­களை வாங்­கிக் கொடுத்த ஆட்­சி­தான், தி.மு.க. ஆட்சி. அது­மட்­டு­மில்ல, பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­களை உரிய சட்­டத் திருத்­தங்­க­ளின் மூலம் கடு­மை­யாக்­கி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி, பெண்­க­ளின் பாது­காப்பை இந்த அரசு உறுதி செய்­துள்­ள­தால்­தான் பணிக்­குச் செல்­லும் பெண்­கள் அதி­கம் உள்ள மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­கி­றது. இந்­தி­யா­வி­லேயே பெண்­க­ளுக்கு பாது­காப்­பான முதன்மை மாநி­ல­மாக தமிழ்­நாடு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மணிப்­பூரை கல­வர பூமி­யாக மாற்­றி­ய­வர்­க­ளைக் கூட்­ட­ணி­யில் வைத்­துக்­கொண்டு, சட்­டம் ஒழுங்கு பற்­றியோ – பெண்­கள் பாது­காப்பு பற்­றியோ பேசு­வ­தற்கு பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு கிஞ்­சித்­தும் தகு­தி­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">பழ­னி­சா­மி­யின் திற­னற்ற நிர்­வா­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டைக் கட­னாளி மாநி­ல­மாக விட்­டுச் சென்­றதே, பழ­னி­சாமி என்­பதை நாங்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் வெளி­யிட்ட வெள்ளை அறிக்­கையே சான்று. திற­னற்ற நிர்­வா­கத்­தால் மாநி­லத்­தின் நிதி நிலைமை, மூச்­சுத்­தி­ணறி தவித்த நேரத்­தில், அதனை சரி­செய்ய, ரிசர்வ் வங்­கி­யின் ஆளு­ந­ராக இருந்த ரகு­ராம் ராஜன் உள்­ளிட்ட பொரு­ளா­தார அறி­ஞர்­கள் அடங்­கிய ஆலோ­ச­னைக் குழுவை நிய­மித்து, அதன் பரிந்­து­ரை­க­ளைச் செயல்­ப­டுத்தி, நிதி­நி­லை­யைச் சீராக்­கி­ய­தோடு, தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை 30 லட்­சம் கோடி­யாக உயர்த்தி உள்­ளோம். தமிழ்­நாட்­டின் வளர்ச்சி விகி­தத்தை 11.19% ஆக அதி­க­ரித்து,  No.1 மாநி­ல­மாக தமிழ்­நாட்டை வளர்த்­தெ­டுத்­துள்­ளோம். ஆகவே, பழ­னி­சாமி அவர்­கள் நாள்­தோ­றும் அள்­ளித்­தெ­ளிக்­கும் அவ­தூ­று­கள் எல்­லாம் தமிழ்­நாட்டு மக்­க­ளி­டம் எடு­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மேற்கு வங்­கா­ளம் மற்­றும் கேரளா போன்ற சூழ்­நி­லை­க­ளை­யும் கருத்­தில் கொண்­டால், இந்­தியா கூட்­ட­ணிக்கு எதிர்­கா­லம் இருக்­கி­றது என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­களா? மேலும், தேசிய அள­வில் நீங்­கள் மற்­றும் உங்­கள் கட்சி பெரிய பங்கு வகிக்­கும் வாய்ப்பு இருக்­கி­றதா என்று நினைக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் சொன்­னது போல என் உய­ரம் எனக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திட்­ட­மி­டப்­பட்ட தொகுதி மறு­வ­ரை­யறை (delimitation) நட­வ­டிக்­கை­யில் உங்­க­ளுக்கு ஏன் அச்­சங்­கள் உள்­ளன? அந்த பிரச்­சி­னையை சமா­ளிக்க, உங்­கள் ஆந்­தி­ரப் பிர­தேச இணை நாய­கன் என். சந்­தி­ர­பாபு நாயுடு போல, தமி­ழர்­களை அதிக குழந்­தை­கள் பெறு­மாறு பரிந்­து­ரைப்­பீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்­றிய அரசு திட்­ட­மி­டும் தொகுதி மறு­சீ­ர­மைப்­பால், தமிழ்­நாடு பாதிக்­கப்­ப­டும் என்று உணர்ந்­த­வு­டன், தி.மு.க.தான் முத­லில் உரி­மைக்­கு­ரல் எழுப்­பி­யது. சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னோம்; அனைத்­துக்­கட்­சித் தலை­வர்­க­ளைக் கூட்­டித் தீர்­மா­னம் போட்­டோம்; தென் மாநி­லங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு மாநில முத­ல­மைச்­சர்­க­ளு­டன் விரி­வான ஆலோ­சனை மேற்­கொண்டு கூட்­டுக்­குழு அமைத்து, அதன் முதல் கூட்­டத்­தில், 1971–ஆம் ஆண்டு மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின்­படி செய்­யப்­பட்டதொகுதி மறு­சீ­ர­மைப்பு, மேலும் 25 ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட வேண்­டும்; மக்­கள்­தொகை கட்­டுப்­பாட்­டுத் திட்­டத்தை வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்­திய மாநி­லங்­கள் தண்­டிக்­கப்­ப­டக் கூடாது என்று ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­தி­னோம். மேலும், 1971–ஆம் ஆண்டு மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில்தற்­பொ­ழுது நாடா­ளு­மன்­றத்­தின் 
இரு அவை­க­ளி­லும் மாநி­லங்­க­ளுக்­­கிடையே எந்த விகி­தத்­தில் தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை உள்­ள­னவோ, அதே விகி­தத்­தில் தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­மா­நி­லங்­க­ளின் தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கையை உயர்த்­து­வ­தற்­குத் தேவை­யான அர­சி­யல் சட்­டத் திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்­டும் என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்து, “தமிழ்­நாடு போரா­டும்! தமிழ்­நாடு வெல்­லும்!” எனும் முழக்­கத்தை முன்­னெ­டுத்­தோம். இது­தான் எங்­க­ளின் நிலைப்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், பா.ஜ.க. பின்­வா­சல் வழி­யாக நுழைந்­திட வாக்­குக் கேட்­கும் பழ­னி­சாமி அவர்­கள் இது­நாள்­வரை, தொகுதி மறு­சீ­ர­மைப்பு குறித்து வாய்­மூடி மௌனம் காப்­பது தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குச் செய்­யும் துரோ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாட்­டில் சிறு­பான்­மை­யி­ ன­ரின் நிலைமை தற்­போது எவ்­வாறு உள்­ளது? அவர்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காக்­க­வும், தங்­க­ளின் மதச்­சார்­பற்ற தன்­மையை நிலை­நி­றுத்­த­வும் திமுக போன்ற கட்­சி­கள் எவ்­வாறு செயல்­ப­டும் என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிறு­பான்­மை­யி­னரை அச்­சத்­தில் வைப்­ப­து­தான் பா.ஜ.க.வின் முக்­கிய அஜெண்டா. பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் என்ன நடக்­கி­றது என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். இசு­லா­மிய மக்­கள் தொடர்ந்து தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­றார்­கள். இப்­போது, கிறிஸ்­து­மஸ் பண்­டி­கை­யைக் கூட நிம்­ம­தி­யாக கொண்­டாட முடி­யாத சூழல் உண்­டா­கி­யி­ருக்­கி­றது; கிறஸ்­துவ மக்­க­ளும் குறி­வைக்­கப்­பட்டி ருக்­கி­றார்­கள். மணிப்­பூ­ரில் என்ன நடக்­கி­றது என்­பதை இந்த நாடே பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. சிறு­பான்­மை­யி­ன­ருக்­குப் பாது­காப்­பற்ற நிலை காட்­டுத்­தீ­யென நாடு முழுக்க பரவ வேண்­டும் என்­ப­து­தான் பா.ஜ.க.வின் செயல்­திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">ஆபத்­து­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்­கும் முதல் இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான், முத­லில் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம் கொண்­டு­வந்­தார்­கள். அடுத்து, வக்பு திருத்­தச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இப்­போது FCRA சட்­டம் கொண்­டு­வர துடிக்­கி­றார்­கள். இந்த மூன்­றுக்­குமே ஆத­ரவு கொடுத்து பா.ஜ.க.வுடன் கூட்­டணி அமைத்­தி­ருக்­கும் பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு சிறு­பான்­மை­யி­னர் நலன் மீது துளி­யும் அக்­கறை இல்லை. ஆனால், தி.மு.க.வோ, இந்­தியா எப்­போ­தும் மதச்­சார்­பற்ற நாடா­கத் திகழ வேண்­டும்; அனைத்து மதங்­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளும் சரி­ச­ம­மாக மதிக்­கப்­பட வேண்­டும்; சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு அர­சி­யல்­சட்­டம் தந்­துள்ள பாது­காப்­பு­கள் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்­ப­தில் என்­றைக்­கும் உறு­தி­யாக இருக்­கி­றோம். இவற்­றுக்­கான ஆபத்து எந்த வகை­யில் வந்­த­லும் – எங்­கி­ருந்து வந்­தா­லும் அதை தடுத்து நிறுத்­தும், அதற்கு எதி­ராக குரல் கொடுக்­கும் முதல் இயக்­க­மா­கத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பெண்­கள் இட­ஒ­துக்­கீட்டு மசோ­தாவை மத்­திய அரசு அவ­ச­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கி­றது என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­களா? ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர்­க­ளுக்கு உண்­மை­யில் மக­ளிர் இட ஒதுக்­கீட்டை நிறை­வேற்­று­வ­தில் அக்­கறை இல்லை. அப்­படி இருந்­தால் தற்­போதே நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்­க­லாம் ஆனால் அதை விட்டு மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் தொகுதி மறு­வ­ரை­யறை மேற்­கொள்­வ­தற்கு வரும் எதிர்ப்பை மடை­மாற்ற மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டை ஒரு ஆயு­த­மாக பயன்­ப­டுத்த நினைக்­கி­றார்­கள். தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைக் கார­ணம் காட்­டா­மல் உடனே மக­ளிர் இட ஒதுக்­கீட்டை செயல்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">டெல்லி ஆட்­டு­வித்­த­படி 
ஆடும் அடிமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பொது­வாக ஆட்­சி­யில் இருக்­கும் கட்சி எதிர்க்­கட்­சி­யி­ட­மி­ருந்து விமர்­ச­னங்­களை எதிர்­கொள்­கி­றது.ஆனால், திமுக அதி­முக என்ற முக்­கிய எதிர்க்­கட்­சியை ‘அடிமை’ போன்ற கடு­மை­யான சொற்­க­ளைப் பயன்­ப­டுத்தி மிகுந்த கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளதுபோல தெரி­கி­றது. இது­கு­றித்து உங்­கள் கருத்து?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் உரி­மை­களை எல்­லாம் அடகு வைத்­த­வர்­களை, டெல்லி ஆட்­டு­வித்­த­படி ஆடு­ப­வர்­களை அடிமை என்று சொல்­லா­மல் வேறு எப்­ப­டிச் சொல்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பி.டி.ஐ. செய்தி நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>