<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,136,958,1264" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 03:39:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260415T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="15042026-CHN-04" position.sequence="04" ex-ref="15042026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="51">இந்­தி­யா­வுக்கே எடுத்­துக்­காட்­டாக இருக்­கும் நம் முத­ல­மைச்­சரை, மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக்­கக் கூடிய தேர்­தல் என்­பதை மற­வா­தீர்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">பத்­ம­நா­ப­பு­ரம் – கிள்­ளி­யூர் – விள­வங்­கோடு – குளச்­சல் தொகு­தி­க­ளில் </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேக­ரிப்பு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanniyakumari11_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanniyakumari12_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">கன்­னி­யா­கு­மரி,ஏப்.15–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், பத்­ம­நா­ப
­பு­ரத்­தில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வாக, பத்­ம­நா­ப­பு­ரம்–­கிள்­ளி­யூர்–­வி­ள­வங்­கோ­டு–­கு­ளச்­சல் ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளின் வெற்றி வேட்­பா­ளர்­கள் தோழர் செல்­ல­சு­வா­மிக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தி­லும், காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த செ.ராஜேஷ்­கு­மார், டி.டி.பிர­வீன், தாரகை கத்­பர்ட் ஆகி­யோ­ருக்கு கை சின்­னத்­தி­லும் வாக்­க­ளிக்­கும்­படி கேட்டு நேற்று வாக்­கு­கள்  சேக­ரித்­துப் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, உற்­சா­க­மான வர­வேற்பு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு இந்த பத்­ம­நா­ப­பு­ரம் தொகு­திக்கு வருகை தந்து நம் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த வெற்றி வேட்­பா­ளர் செல்­ல­சு­வாமி அவர்­க­ளுக்கு நீங்­க­ளெல்­லாம் அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரச் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பத்­ம­நா­ப­பு­ரம் தொகு­தி­யில் மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­க­ளெல்­லாம் தேடித்­த­ரு­வீர்­கள் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்ள வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">ஒரு பிற­விப் போராளி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இங்கே நம் வேட்­பா­ளர் செல்­ல­சு­வாமி அவர்­க­ளைப் பற்றி, உங்­க­ளுக்கு அதி­கம் சொல்­லத் தேவை­யில்லை. அனை­வ­ருக்­கும் தெரிந்­த­வர்­தான். ஒட்­டு­மொத்த கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தின் வளர்ச்­சிக்­கா­கத் தொடர்ந்து பாடு­பட்டு வரு­ப­வர். அவர் ஒரு பிற­விப் போராளி. மக்­க­ளுக்­கான எல்­லாப் போராட்­டங்­க­ளை­யும் மக்­க­ளோடு மக்­க­ளாக நின்று அந்­தப் போராட்­டங்­களை எல்­லாம் சந்­தித்­த­வர். தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கப் பல போராட்­டங்­களை முன்­னின்று நடத்­தி­ய­வர். உங்­க­ளுக்­கான எந்­தக் கோரிக்­கை­யாக இருந்­தா­லும் நீங்­கள் செல்­ல­சு­வாமி அவர்­க­ளி­டம் சொல்­ல­லாம். அவரை நீங்­கள் தேடிப் போக வேண்­டாம். அவரே உங்­க­ளைத் தேடி உங்­கள் வீடு வந்து உங்­க­ளுக்கு என்ன தேவை என்­ப­தைத் தெரிந்து அதை நிச்­ச­யம் செய்து கொடுப்­பார். ஏனென்­றால் அவர் வீட்­டில் இருப்­ப­தை­விட எப்­பொ­ழு­துமே களத்­தில் உங்­க­ளோடு, மக்­க­ளோடு மக்­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் ஒலிக்க வேண்­டும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">தன் செயல்­பா­டு­க­ளால் அனைத்­துத் தரப்­பி­ன­ரின் நன்­ம­திப்­பை­யும் பெற்­ற­வர். அவ­ரின் குரல் நிச்­ச­யம் இந்த முறை சட்­ட­மன்­றத்­தில் ஒலிக்க வேண்­டும். அதற்கு நீங்­கள் அனை­வ­ரும் வரு­கின்ற தேர்­த­லில் அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரச் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் செல்­ல­சு­வாமி அவர்­களை நீங்­கள் வெற்றி பெறச் செய்­ய­வேண்­டும் என்று  கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">பத்­ம­நா­ப­பு­ரத்­தில்  மீண்­டும் இந்த ஒரு வாய்ப்பு கொடுங்­கள். நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு வாய்ப்பு கொடுங்­கள் என்று எந்த உரி­மை­யில் வந்து கேட்­கி­றேன்? ஏற்­க­னவே இந்­தத் தொகு­திக்கு நம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கக்­கூ­டிய அமைச்­சர் அண்­ணன் மனோ தங்­க­ராஜ் அவர்­கள் பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து சேர்த்­தி­ருக்­கி­றார். உங்­க­ளோடு இருந்­தி­ருக்­கி­றார். அந்த உரி­மை­யில் உங்­க­ளை­யெல்­லாம் சந்­தித்து வாய்ப்­புக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன். உதா­ர­ணத்­துக்­குச் சில திட்­டங்­களை மட்­டும் இங்கே குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பத்­ம­நா­ப­பு­ரம் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">7 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அரு­விக்­க­ரை­யி­லி­ருந்து மாத்­தூர் தொட்­டிப்­பா­லம் வரைக்­கும்உயர்­மட்ட இணைப்­புப் பாலம் அவர் கட்­டிக் கொடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">தக்­க­லை­யி­லி­ருந்து பேச்­சிப்­பாறை வரைக்­கும் செல்­லு­கின்ற வகை­யில் பல்­வேறு இடங்­க­ளில் சாலை மேம்­பாட்­டுப் பணி­கள். திற்­ப­ரப்பு பகு­தி­யிலே சுமார் 20 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக்­கு­டி­நீர்த் திட்­டங்­கள், மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி. 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வேர்­கி­ளம்­பி­யி­லி­ருந்து அழ­கிய மண்­ட­பம் வரைக்­கும் இன்­றைக்­குச் சாலைப் பணி­கள். திற்­ப­ரப்பு நீர்­வீழ்ச்சி செல்­கின்ற சாலை­யில் 3கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பல்­வேறு பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">திரு­வட்­டா­ரில் புதிய பேருந்து நிலை­யம் அமைந்­தி­ருக்­கி­றது என்­றால், அது நம் திரா­விட மாடல் அரசு மற்­றும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கட்டி கொடுத்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ஜீரோ பாயிண்ட் முதல் கோதை­யார் வரை 60 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பல்­வேறு சாலைப் பணி­க­ளும் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. இத்­தனை பணி­க­ளை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். செல்­ல­சு­வாமி அவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­னீர்­கள் என்­றால், இந்­தத் தொகு­திக்கு என்­னென்ன தேவையோ அதை நம் திரா­விட மாடல் அரசு நிச்­ச­யம் உங்­க­ளுக்­குச் செய்து கொடுக்­கும் என்று உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">ட்சி அமைந்த உடனே நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் அனைத்து மக­ளி­ரின் கைக­ளி­லும் 8,000 ரூபாய் மதிப்­புள்ள கூப்­பன் வழங்­கி­வி­டு­வார். அந்த 8,000 ரூபா­யில் வீட்­டுக்­குத் தேவை­யான மின்­சா­த­னப் பொருட்­களை, நீங்­களே (மக­ளிர்) முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம். இந்­தத் திட்­டங்­கள் எல்­லாம் நிறை­வேற்­றப்­பட வேண்­டும் என்­றால், மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்­டும். அதற்கு இந்­தப் பத்­ம­நா­ப­பு­ரம் தொகு­தி­யில் தோழர் செல்­ல­சு­வாமி அவர்­க­ளுக்கு ‘அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம்’ சின்­னத்­தி­லும், கிள்­ளி­யூர்தொகு­தி­யில் சகோ­த­ரர் ராஜேஷ்­கு­மார் அவர்­க­ளுக்கு ‘கை’ சின்­னத்­தி­லும், விள­வங்­கோடு தொகு­தி­யில் சகோ­த­ரர் பிர­வீன் அவர்­க­ளுக்கு ‘கை’ சின்­னத்­தி­லும், குளச்­சல் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் சகோ­தரி தாரகை கத்­பர்ட் அவர்­க­ளுக்கு ‘கை’ சின்­னத்­தி­லும் வாக்­க­ளித்து, நீங்­கள் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும் என்று உங்­கள் அனை­வ­ரை­யும் அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">வர­வி­ருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­தல் குறித்து, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடர்ந்து சொல்­வது போலத்­தான், இது சாதா­ர­ணத் தேர்­தல் அல்ல. இது டெல்லி அணிக்­கும் தமிழ்­நாடு அணிக்­கும் இடை­யி­லான போட்டி. டெல்லி அணி ஜெயிக்­கி­றதா அல்­லது தமிழ்­நாடு அணி ஜெயிக்­கி­றதா என்­பதை இந்­தத் தேர்­த­லில் நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இவ்­வ­ளவு நலத்­திட்­டங்­கள் செய்­தி­ருக்­கி­றோம், இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம்; யோசித்­துப் பாருங்­கள், ஒன்­றிய பா.ஜ.க அரசு தமிழ்­நாட்­டுக்கு என்று ஏதா­வது திட்­டங்­களை ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­களா? நாம் கேட்­கும் நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? எந்த உத­வி­யும் செய்­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நிதி ஒதுக்­கீடு செய்­ய­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இப்­போது தேர்­தல் வரு­கி­றது என்­ற­வு­டன் மோடி அவர்­கள் வாரா­வா­ரம் வரு­கி­றார். நாளை இங்கே கன்­னி­யா­கு­மரி வரு­கி­றார். வரும்­போது கேளுங்­கள், தமிழ்­நாட்­டுக்கு என்ன திட்­டங்­கள் கொடுத்­தீர்­கள் என்று கேளுங்­கள். எந்­தத் திட்­ட­மும் கொடுப்­ப­தில்லை. கல்­விக்­கான நிதி ஒதுக்­கீடு செய்­ய­வில்லை. மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால் தான் தமிழ்­நாட்­டுக்­குத் தர வேண்­டிய நிதி­யைக் கொடுப்­பேன் என்று சொல்­கி­றார்­கள். மும்­மொ­ழிக் கொள்கை என்று கூறி, மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் இந்­தித் திணிப்பை எப்­ப­டி­யா­வது கொண்டு வர வேண்­டும் என்ற முயற்­சி­யில் இன்று ஒன்­றிய அரசு ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. அத­னால்­தான் நம் தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­வது போல, நம் தமிழ்­நாடு என்­றுமே டெல்­லிக்­குக் அவுட் ஆப் கண்ட்­ரோல்­தான் என்­பதை இந்­தத் தேர்­தல் மூலம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. என்ற போர்­வை­யைப் போர்த்­திக்­கொண்டு இன்று பா.ஜ.க தமிழ்­நாட்­டுக்­குள் எப்­ப­டி­யா­வது நுழைய வேண்­டும் என்று முயற்சி செய்­கி­றார்­கள். இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய பல மாநி­லங்­களை பா.ஜ.க. தனது கட்­டுப்­பாட்­டில் கொண்டு வந்­து­விட்­டது, ஆனால், தமிழ்­நாட்­டுக்­குள் மட்­டும் நுழைய விட­மாட்­டோம். ஏனெ­னில் தமிழ்­நாடு என்­றுமே சுய­ம­ரி­யாதை மண். நாம் யாருக்­கும் அடி­மை­யாக இருக்க மாட்­டோம். யாராக இருந்­தா­லும் கேள்வி கேட்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தொகுதி மறு­வ­ரை­யறை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்­குக் கூட நம் தலை­வர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள், 16–ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டி­யி­ருக்­கி­றார்­கள். எதற்கு? தொகுதி மறு­வ­ரை­யறை கொண்டு வரு­கி­றார்­கள். அப்­ப­டிக் கொண்டு வந்­தால், 39 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­கள் தமிழ்­நாட்­டி­லி­ருந்து 32–ஆகக் குறைக்­கப்­ப­டும். எண்­ணிக்­கை­யைக் குறைக்­கி­றார்­கள். இதைப் பற்றி இந்­தி­யா­வி­லேயே முதல் முத­ல­மைச்­ச­ராக, முதல் தலை­வ­ராக ஒரு வரு­டத்­துக்கு முன்பே பேச ஆரம்­பித்­தது நம் தமிழ்­நா­டு­தான். இப்­படி இந்­தி­யா­வுக்கே எடுத்­துக்­காட்­டாக இருக்­கக்­கூ­டிய நம் முத­ல­மைச்­சர் அவர்­களை மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக்­கக் கூடிய தேர்­தல்­தான் வர­வி­ருக்­கும் ஏப்­ரல் 23 சட்­ட­மன்ற தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யாக சொல்ல வேண்­டும் என்­றால் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்­கெல்­லாம் பிரச்­சா­ரம் செய்து மிகப்­பெ­ரிய வெற்­றியை இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நீங்­கள் பெற்­றுத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள்  உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11.5">வெற்றி வேட்­பா­ளர்­கள் தோழர் செல்­ல­சு­வாமி, ராஜேஷ்­கு­மார், பிர­வீன், சகோ­தரி தாரகை கத்­பர்ட், மாவட்ட கழ­கச் செய­லா­ளர் மனோ தங்­க­ராஜ், ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் அரு­ளா­னந்த ஜார்ஜ், ஜான் பிரைட், ஜான்­சன், சுஃபி கான், செல்­வ­கு­மார், சோழ­ரா­ஜன், சுந்­தர்­ராஜ், ஜெபித் ஜோஸ், ஜான், சதீஷ், நசீர், டட்லி, பிரைட் சிங், ஹாஜி, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ஜெக­நா­தன், துணை அமைப்­பா­ளர்­கள் ஜான் ஜெபர்­சன், விஜ­யஸ் ஜீவன், ஜெயச்­சந்­திர பூபதி, இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளான இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கம், விடு­த­லைச் சிறுத்­தை­கள், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய மக்­கள் கட்சி, மக்­கள் நீதி மய்­யம், எஸ்.டி.பி.ஐ உள்­ளிட்ட கட்­சி­க­ளின் நிர்­வா­கி­கள் மற்­றும் பொது­மக்­கள் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>