<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1396" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 05:19:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260415T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="15042026-CHN-08" position.sequence="08" ex-ref="15042026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, இது மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">திருப்பத்தூரில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">7 ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup318773_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="2_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எந்த மாநி­ல­மும் எட்­டிப் பிடிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முடி­யாத உய­ரத்­தில் தமிழ்­நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி தமிழ்­நாட்­டிற்கு வஞ்­சனை செய்­யும் பிர­த­மர் அவர்­கள், “தி.மு.க. மிக மோச­மான நிர்­வா­கம் செய்­கி­றது” என்று, நேற்று சமூக வலை­த­ளத்­தில் பதி­விட்­டி­ருக்­கி­றார். இவர்­க­ளுக்கு இதே வேலை­யா­கிப் போய்­விட்­டது. தமிழ்­நாட்­டிற்கு வரும் ஒன்­றிய அமைச்­சர்­கள் அனை­வ­ரும் இப்­ப­டித்­தான் எதை­யா­வது பேசி, சொந்­தக் காசில் சூனி­யம் வைத்­துக் கொள்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில நாட்­க­ளுக்கு முன்­பு­தான், ஒன்­றிய அமைச்­சர் பியூஷ் கோயல் இதே போன்று பேசி­ய­தற்கு, ஒன்­றிய அர­சின் தர­வு­கள், ஆய்­வ­றிக்­கை­கள், தர­வ­ரி­சைப் பட்­டி­யல்­களை வைத்தே நான் பதி­லடி கொடுத்­தேன். தமிழ்­நாடு எத்­தனை துறை­க­ளில் முத­லி­டத்­தில் இருக்­கி­றது, எத்­தனை பிரி­வு­க­ளில் எந்த மாநி­ல­மும் எட்­டிப் பிடிக்க முடி­யாத உய­ரத்­தில் இருக்­கி­றது எனப் பேசி­யி­ருந்­தேன். பிர­த­மர் மோடி அவர்­கள், அதை­யெல்­லாம் பார்த்­து­விட்டு அதன் பிறகு பேசட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உரிய ஆதா­ர­மின்­றிப் பேசு­வது – பிர­த­மர் பத­விக்கு அழ­கல்ல!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறைந்­த­பட்­சம் பட்­ஜெட்­டிற்கு முன்­னால் ஒன்­றிய அரசு வெளி­யிட்ட பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கை­யை­யா­வது எடுத்­துப் புரட்­டிப் பாருங்­கள் பிர­த­மர் அவர்­களே! உங்­கள் அறிக்­கை­யை­யும் பார்க்­கா­மல், ஐ.நா. போன்ற உலக அமைப்­பு­கள் தமிழ்­நாட்­டிற்­குத் தரும் விரு­து­க­ளை­யும் பார்க்­கா­மல், சும்மா தேர்­த­லுக்­காக ஒரு மாநி­லத்­திற்கு எதி­ராக எதை­யா­வது பேசிக் கொண்­டி­ருக்­கக் கூடாது! பா.ஜ.க. வைச் சேர்ந்த மோடி அப்­ப­டிப் பேசி­னால் நாங்­கள் கண்­டு­கொள்ள மாட்­டோம்! ஆனால், நாட்­டின் உயர் பொறுப்­பில் இருக்­கும், அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் பொது­வாக இருக்க வேண்­டிய பிர­த­மர் இப்­ப­டிப் பேசக்­கூ­டாது. அது நீங்­கள் வகிக்­கும் பத­விக்கு அழ­கல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வி­லேயே அதிக அள­வி­லான மக்­கள் நலத் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி, இது மக்­கள் மன­தில் இடம்­பி­டித்­தி­ருக்­கும் ‘திரா­விட மாடல்’ தமிழ்­நாடு! அதற்கு எடுத்­துக்­காட்­டிற்­காக வேறு எங்­கும் நான் அலைய வேண்­டி­ய­தில்லை. இந்­தத் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தி­லேயே நான் கண்­கூ­டா­கப் பார்த்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தாம­லே­ரி­முத்­தூர் பெண்­மணி ஒரு­வர் – 
கழக அரசு பற்றி நெகிழ்ந்து கூறி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிப்­ர­வரி மாதம் 5 ஆயி­ரம் ரூபாய் உரி­மைத்­தொகை முன்­ப­ண­மாக வழங்­கி­னோம் அல்­லவா... அடுத்த நாள் ஜோலார்­பேட்­டை­யி­லி­ருந்து திருப்­பத்­தூர் செல்­லும் வழி­யில், தாம­லே­ரி­
முத்­தூர் என்ற ஊரில் மேகலா என்ற சகோ­த­ரி­யின் வீட்­டிற்­குத் திடீர் சந்­திப்­பாக நான் சென்­றேன். “என்­னம்மா, அர­சின் திட்­டங்­கள் எல்­லாம் கிடைக்­கி­றதா? நேற்று 5 ஆயி­ரம் வந்­ததா?” என்று கேட்­டேன். அதற்கு அவர் என்ன சொன்­னார் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“மாதம் ஆயி­ரம் வரு­கி­றது. நேற்று 5 ஆயி­ர­மும் வந்­தது. எங்­கள் பிள்­ளை­க­ளின் படிப்­புச் செல­விற்கு இது உத­வி­யாக இருக்­கி­றது. என் மகன் கல்­லூ­ரி­யில் படிக்­கி­றான். ‘தமிழ்ப்­பு­தல்­வன்’ திட்­டத்­தில் அவ­னும் மாதம் ஆயி­ரம் ரூபாய் பெறு­கி­றான். இப்­போது மடிக்­க­ணி­னி­யும் கொடுத்­து­விட்­டார்­கள். ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தில் பயிற்­சி­யும் கிடைக்­கி­றது. நானும் மக­ளும் விடி­யல் பேருந்­தில் கட்­ட­ண­மில்­லா­மல் பய­ணம் செய்­கி­றோம்” என்று, இந்த வடார்க்­காடு மண்­ணிற்கே உரிய வட்­டார வழக்­கில் மிக அழ­காக, இயல்­பா­கச் சொன்­னார்­கள். அதன் வீடி­யோ­கூட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போது நான் யோசித்­துப் பார்த்­தேன். அந்த ஒரு குடும்­பத்­திற்கு மட்­டுமே நமது திரா­விட மாடல் ஆட்­சி­யில், உரி­மைத்­தொகை, மடிக்­க­ணினி, நான் முதல்­வ­னில் கட்­ட­ண­மில்­லாத் திறன் பயிற்சி, கட்­ட­ண­மில்­லாப் பேருந்து பய­ணம் என்று ஏறத்­தாழ ஒரு இலட்­சம் ரூபாய் அள­விற்கு நலத்­திட்ட உத­வி­கள் நேர­டி­யா­கச் சென்று சேர்ந்­தி­ருக்­கி­றது. இடை­யில் எந்த இடைத்­த­ர­க­ரும் இல்லை. ஊழல், முறை­கேடு என்­று­கூட எதிர்க்­கட்­சி­கள் யாரும் பேச முடி­யாது! ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ பேருந்து மாதிரி, அனைத்­தும் கிளீனா, நீட்–­­ஆக அர­சின் கணக்­கி­லி­ருந்து மக்­க­ளின் கணக்­கிற்­குச் சென்று சேரு­கி­றது! என்று எண்ணி, நான் என்­னுள் பெரி­தும் பெரு­மி­தம் கொண்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் எப்­போ­தும் காலை­யில் ‘வாக்­கிங்’ செல்­வது உண்டு. தேர்­த­லுக்­கா­கச் செல்­வ­தில்லை.  சென்­னை­யில் இருந்­தால், வெளி­யூர் நிகழ்ச்­சிக்­குச் சென்­றால் ஒரு மணி நேர­மா­வது ‘வாக்­கிங்’ சென்­று­விட்­டு­தான் வரு­வேன். அத­னால்­தான் இப்­படி இருக்­கி­றேன்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த நிலை­யில், நான் இன்று காலை­யில், கே.வி. குப்­பத்­தில் வாக்­கிங் சென்­றேன். அந்த கே.வி. குப்­பத்­தில் ‘கலை­ஞர் கனவு இல்­லம்’ திட்­டத்­தில் வீடு பெற்ற ஒரு சகோ­த­ரி­யின் வீட்­டிற்­குச் சென்­றேன். என்­னைப் பார்த்­த­தும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு அழ ஆரம்­பித்­து­விட்­டார். இன்­றைக்கு தொலைக்­காட்­சி­யில் வந்­தது அது. நெகிழ்ச்­சி­யில் அதைப்­பார்த்­த­தும் எனக்கு என்ன சொல்­வ­தென்றே தெரி­ய­வில்லை. இப்­படி, களத்­தில் நின்று தின­மும் மக்­க­ளைச் சந்­திக்­கும் அனு­ப­வத்­தில் ஒன்று சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளுக்கு –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நன்றி அறி­விப்பு விழா இது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தேர்­த­லையே மக்­கள் எப்­படி அணு­கு­கி­றார்­கள் தெரி­யுமா? திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளுக்­கான நன்றி அறி­விப்பு விழா­வா­கத்­தான் 2026 தேர்­தலை மக்­கள் பார்க்­கி­றார்­கள். அது­தான் உண்மை. அவர்­க­ளு­டைய மகிழ்ச்­சியை, நன்­றியை வெளிப்­ப­டுத்­தும் நாளா­கத்­தான் ஏப்­ரல் 23–ஐ பார்க்­கி­றார்­கள். அந்த அள­விற்கு ஆட்­சிக்கு ஆத­ர­வான அலை­யோடு இந்­தத் தேர்­தலை நாம் எதிர்­கொள்­கி­றோம்! அதற்கு முழு­மை­யான கார­ணம், நமது அர­சின் சாத­னைத் திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆட்­சி­யில் எல்­லாமே மக்­க­ளைத் தேடிச் செல்­கி­றது. கிரா­மத்­தில் இருக்­கும் ஒரு­வ­ருக்கு ‘மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்’ திட்­டத்­தில் மருந்­து­கள், இரத்த அழுத்­தம் – சர்க்­க­ரைப் பரி­சோ­தனை, பிசி­யோ­தெ­ரபி சிகிச்சை எல்­லாம் வீடு தேடி கிடைக்­கி­றது. ‘இல்­லம் தேடி கல்வி’ வந்­து­விட்­டது. ‘உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ முகாம்­கள், உங்­க­ளைத் தேடி – உங்­கள் ஊரில், மக்­க­ளு­டன் முதல்­வர் – இதி­லெல்­லாம் பல ஆண்­டு­க­ளா­கத் தீர்வு கிடைக்­காத பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சின் அடிப்­படை சேவை­க­ளைப் பெற அரசு அதி­கா­ரி­களை மக்­கள் தேடி அலை­யா­மல், எல்­லாத் துறை அதி­கா­ரி­க­ளை­யும் ஒரே இடத்­தில் வர­வ­ழைக்­கி­றோம். நலம் காக்­கும் ஸ்டாலின் முகாம்­க­ளில் மக்­கள் வசிக்­கும் பகு­திக்கே மருத்­து­வர்­களை அனுப்பி முழு உடல் பரி­சோ­த­னை­கள் செய்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘தாயு­மா­ன­வர்’ திட்­டத்­தில் வய­தா­ன­வர்­க­ளைத் தேடிச் சென்று அவர்­கள் வீட்­டி­லேயே ரேஷன் பொருட்­கள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு முன்­னால் எந்த ஆட்­சி­யி­லா­வது – இவ்­வ­ளவு திட்­டங்­கள் உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘உங்க கனவ சொல்­லுங்க’ திட்­டத்­தில் மக்­க­ளின் வீட்­டிற்கே சென்று, அவர்­க­ளுக்கு இன்­னும் என்ன தேவை என்று கேட்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிள்­ளை­க­ளுக்­குப் பள்­ளிக்­கூ­டத்­தி­லேயே காய்­க­றி­க­ளு­டன் சுவை­யான காலை உணவு கிடைக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது சொல்­லுங்­கள்... இந்த ஆட்­சி­தானே எந்­நா­ளும் தொடர வேண்­டும்! இதற்கு முன்­னால் எந்­தக் காலத்­தி­லா­வது இவ்­வ­ளவு திட்­டங்­கள் மக்­க­ளைத் தேடிச் செல்­வ­தைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நமது எதி­ரி­களே இன்று – 
நம்­மைப் பின்­பற்­றும் நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்க்­கட்­சி­யான அ.தி.மு.க.வே அவர்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில், முழுக்க முழுக்க நாம் இப்­போது செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­க­ளைத்­தான் பெயர் மட்­டும் மாற்றி வைத்து அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இந்த ‘டூப்­ளி­கேட்’ பொருட்­கள் எல்­லாம் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? ‘பாட்டா’ ஷூ என்று இருந்­தால், அதில் ஒரு எழுத்தை மாற்றி ‘டாட்டா’ ஷூ என்று போட்டு விற்­று­வி­டு­வார்­கள். அப்­ப­டித்­தான் திரா­விட மாட­லின் மக­ளிர் உரி­மைத்­தொ­கை­யைக் ‘குல­வி­ளக்­குத் திட்­டம்’ என்று வேறொரு ஸ்டிக்­கர் ஒட்டி அ.தி.மு.க. அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தி­யா­வின் மற்ற மாநி­லங்­கள் மட்­டு­மல்­லா­மல், நமது எதி­ரி­களே நம்­மைத்­தான் இன்­றைக்­குப் பின்­பற்ற வேண்­டிய நிலை­யில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் அத­னால்­தான், முழு நம்­பிக்­கை­யோடு சொல்­கி­றேன். 200 வெல்­வோம். அதை­யும் தாண்­டு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு முக்­கி­ய­மான ஆபத்தை பற்றி உங்­க­ளி­டம் நான் பகிர்ந்து கொள்ள விரும்­பு­கி­றேன். பல­ரும் ஏற்­க­னவே படித்­தி­ருப்­பீர்­கள். தொகுதி மறு­வ­ரை­யறை செய்­வ­தற்­கான நாடா­ளு­மன்ற சிறப்பு கூட்­டத்­தொ­டர் நாளை மறு­நாள் கூட்­டப்­பட இருக்­கி­றது. நம்­மு­டைய எம்.பி.க்கள்­கூட, “தேர்­தல் வேலை இருக்­கி­றதே! போக வேண்­டுமா? போக வேண்­டுமா?” என்று கதிர் ஆனந்த் அவர்­க­ளும் கேட்­டார். திரு­வண்­ணா­மலை எம்.பி., அண்­ணா­து­ரை­யும் கேட்­டார். எல்லா எம்.பி.யும் கேட்­டார்­கள். “அதெல்­லாம் முடி­யாது. போய்த்­தான் ஆக வேண்­டும். நமக்கு அது­தான் முக்­கி­யம். போய்­விட்டு வாருங்­கள்! என்று உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றேன். நாளை காலை செல்ல இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்று இரா­ணிப்­பேட்டை கூட்­டத்­தி­லும் இது­பற்றி விளக்­க­மா­கப் பேசி­யி­ருந்­தேன். இன்­றைக்கு மதி­யம் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்கு தமிழ்­நாடு விடுக்­கும் எச்­ச­ரிக்கை என்று இன்­னொரு வீடி­யோ­வைப் பதிவு செய்து போட்­டி­ருக்­கி­றேன். அதை­யும் பார்த்­தி­ருப்­பீர்­கள். நான் அந்த வீடி­யோவை வெளி­யிட்ட அடுத்த சில மணி நேரத்­தில், அவர்­கள் நிறை­வேற்­றப்­போ­கும் சட்ட மசோ­தாவை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­வி­டப் பாசி­சம், வேறு இருக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் சொன்­னது மாதி­ரியே, தமிழ்­நாட்­டுக்­கும் – வட மாநி­லங்­க­ளுக்­கு­மான இடை­வெ­ளியை அதி­க­ரிக்­கும் சதித் திட்­ட­மாக இது இருக்­கி­றது. இந்­தி­யா­வின் அர­சி­ய­லையே அடுத்த 50 ஆண்­டு­க­ளுக்கு ஒட்­டு­மொத்­த­மாக புரட்­டிப் போடும் ஒரு சட்­டத் திருத்­தத்தை, இப்­படி அவ­ச­ர­க­தி­யில் கொண்டு வரு­கி­றார்­கள் என்­றால், அது­வும் சட்­ட­மன்­றத் தேர்­தல் நேரத்­தில் கொண்டு வரு­கி­றார்­கள் என்­றால், இதை­விட ஜன­நா­யக விரோ­தம், இதை­விட பாசி­சம் வேறு இருக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தி.மு.க.வின் இன்­னொரு முகத்­தைப் 
பார்க்க வேண்­டி­வ­ரும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் கொண்டு வாருங்­கள்! தமிழ்­நாட்டு எம்.பி.க்கள் அனை­வ­ரும் கடு­மை­யாக இதை எதிர்ப்­போம். எங்­கள் எதிர்ப்பை மீறி பார்­லி­மென்ட்­டில் நீங்­கள் இதை நிறை­வேற்­றி­னா­லும், உறு­தி­யா­கச் சொல்­கி­றேன்… மக்­கள் மன்­றத்­தில் நாங்­கள் சும்மா விட­மாட்­டோம். நான் உறு­தி­யா­கச் சொல்­கி­றேன்! பேர­றி­ஞர் அண்ணா மேல் ஆணை­யா­கச் சொல்­கி­றேன். தலை­வர் கலை­ஞர் மேல் ஆணை­யா­கச் சொல்­கி­றேன். விட­மாட்­டோம். தி.மு.க.வின் இன்­னொரு முகத்தை நீங்­கள் பார்க்க வேண்டி இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பதவி, ஆட்சி, அதி­கா­ரம், தேர்­தல் இது அனைத்­துமே எங்­க­ளுக்கு தோளில் போடும் துண்டு மாதி­ரி­தான். ஆனால், மாநில உரிமை, கொள்கை என்­பது நாங்­கள் இடுப்­பில் கட்­டும் வேட்டி போன்று. அது எங்­க­ளின் உயிர்க்­கொள்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டீ–லி­மிட்­டே­ஷ­னைப் பொறுத்­த­வரை, ஓராண்­டுக்கு முன்பே நாங்­கள் தயா­ரா­கி­விட்­டோம். தமிழ்­நாடு மொத்­தத்­தை­யும் ஓர­ணி­யில் நான் திரட்­டிக் காட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஓனர்­க­ளுக்கு நூதன முறை­யில் – 
முட்­டுக் கொடுக்­கும் பழ­னிச்­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி ஒரு பேரா­பத்து தமிழ்­நாட்­டைச் சூழ்ந்­தி­ருக்­கி­றது. இதை எதிர்க்க வக்­கில்­லாத பழ­னி­சாமி, என்ன சொல்­கி­றார்? “பெண்­க­ளுக்­கான 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்டை நிறை­வேற்­று­வது தி.மு.க.வுக்­குப் பிடிக்­க­வில்லை, அவர்­க­ளுக்கு தோல்வி பயம்” என்று நூதன முறை­யில் ஓனர்­க­ளுக்­காக முட்­டுக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன்… உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் மேயர், நகர்­மன்­றத் தலை­வர், கவுன்­சி­லர் என்று அனைத்து நிலை­க­ளி­லும் 1996–ஆம் ஆண்டே பெண்­க­ளுக்கு 33 விழுக்­காடு இட ஒதுக்­கீடு வழங்­கி­ய­வர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் – நமது ஆட்­சி­யில் – 
பெண் மேயர்­களே அதி­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது, நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளில் பெண்­க­ளுக்கு 50 விழுக்­காடு இட ஒதுக்­கீடு வழங்கி, தமிழ்­நாட்­டில் ஆண்­க­ளை­விட பெண் மேயர்­களே அதி­கம் என்ற நிலையை உரு­வாக்­கி­ய­தும், முத்­து­வேல் கரு­ணா­நிதி தலை­மை­யில் நடை­பெ­றும் திரா­விட மாடல் அர­சு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வின் பாதம் தாங்­கி­யான பழ­னி­சாமி, பீகார் முத­ல­மைச்­சர் போன்று தமிழ்­நாட்டை பா.ஜ.க.விடம் ஒப்­ப­டைக்க, படாத பாடு படு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­களே... இது தமிழ்­நாடு! தி.மு.க. ஆளும் தமிழ்­நாடு! நாங்­கள் தொடர்ந்து ஆளப் போகும் தமிழ்­நாடு! மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்ற இந்த ஸ்டாலின் ஆட்சி செய்­யும் தமிழ்­நாடு! நீங்­கள் என்­ன­தான் அடி­மைச் சேவ­கம் செய்­தா­லும், தமிழ்­நாட்டை மீண்­டும் டெல்­லி­யி­டம் அடகு வைக்க, நாங்­கள் விட­மாட்­டோம். நாங்­கள் சாத­னைக்கு மேல் சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோம். திட்­டங்­க­ளுக்கு மேல் திட்­டங்­களை வாரி வழங்கி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னு­டைய அடுத்த கட்­ட­மா­கத்­தான் 2026 தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். அது சாதா­ரண அறிக்கை இல்லை, ‘சூப்­பர்ஸ்­டார்’ அறிக்கை! இப்­போது நமது சூப்­பர்ஸ்­டா­ரின் சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­க­ளைச் சொல்­லவா...?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2006–இல் கேஸ் அடுப்­பு­டன் சேர்த்து கலை­ஞர் வண்­ணத் தொலைக்­காட்சி கொடுத்­தார். 2021–இல் மக­ளிர் உரி­மைத்­தொகை மாதிரி, 2026–இல் ‘இல்­லத்­த­ரசி’ திட்­டம்! இந்த ஒரு அறி­விப்­பி­லேயே நமது எதி­ரி­கள் எல்­லாம் ’close’ ஆகி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘இல்­லத்­த­ரசி’ திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப்­போ­கி­றோம்? (‘எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு’ என, கூட்­டத்­தி­னர் குரல்.) எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொரு­ளைப் புதி­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்­லை­யென்­றால், பழைய பொருளை ‘எக்ஸ்­சேஞ்ச்’ செய்­தும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் – உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்­டில் வாங்­கிக் கொள்­ள­லாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­­வேவ் அவன், இண்­டக்‌ஷன் ஸ்டவ் என இவற்­றில் எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். உங்­கள் வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் கேட்­கா­தீர்­கள். இது முழுக்க முழுக்க உங்­க­ளுக்­காக நான் கொண்டு வரும் திட்­டம்! பெண்­கள்­தான் முடிவு செய்ய வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை – திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இனி மாதம் 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டுப் பெண்­க­ளுக்­கும், ஸ்டாலின் அண்ணா கொடுத்­தார்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போதே பெண்­கள் எல்­லோ­ரும் கணக்­குப் போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு? பொங்­க­லுக்கு முன்பு, சொல்­லி­விட்டு 3 ஆயி­ரம்! பிப்­ர­வ­ரி­யில், சொல்­லா­ம­லேயே 5 ஆயி­ரம்! ஆக மொத்­தம் 8 ஆயி­ரம்! அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­ப­னி­லும் ஸ்டாலின்அண்­ணன் 8 ஆயி­ரம் கொடுக்­கி­றார். எம்.ஜி.ஆரின் பட­கோட்டி படத்­தில், ‘கொடுத்­த­தெல்­லாம் கொடுத்­தார்’ என்று ஒரு பாட்டு இருக்­கி­றது.அது­போன்று, “கொடுத்­த­தெல்­லாம் கொடுத்­தார், ஸ்டாலின் அண்ணா யாருக்­கா­கக் கொடுத்­தார்? ஒருத்­த­ருக்கா கொடுத்­தார்? ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டுப் பெண்­க­ளுக்­கும் கொடுத்­தார்!” என என் சகோ­த­ரி­கள் அனை­வ­ருமே இப்­போது மகிழ்ச்­சி­யில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் உத­வித்­தொ­கை­யும் இனி ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், முதி­யோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஆத­ர­வற்ற பெண்­கள் என எல்லா உத­வித்­தொ­கை­க­ளும் இனி இரண்டு மடங்­காக வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் தமிழ்­நாடு முழு­வ­தும் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘காலை உண­வுத் திட்­டம்’ எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனைத்து வகுப்­ப­றை­க­ளும் ‘ஸ்மார்ட்’ வகுப்­ப­றை­க­ளாக ஆக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் கல்­லூரி மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் மடிக்­க­ணினி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘கலை­ஞர் கனவு இல்­லம்’ உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக 10 இலட்­சம் ஏழை­க­ளுக்கு வீடு­கள் கட்­டிக் தரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில், பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்க, ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­களை உரு­வாக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழுப் பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்­கிக் கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிசி­னஸ்–­­மேன் மாதிரி, ‘பிசி­னஸ்–­­வு­மன்’–­­களை உரு­வாக்­கு­வ­தற்­காக, சுய உத­விக்­கு­ழுப் பெண்­கள் தொழில் தொடங்க, எந்த சூரிட்­டி­யும் இல்­லா­மல் 5 லட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் கூடிய கடன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">BC, MBC, சீர்­ம­ர­பி­னர், சிறு­பான்­மை­யி­னர், ஆகி­யோ­ருக்­கும், தொழில் தொடங்க கடன் பெறும் உச்­ச­வ­ரம்பு, 30 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வடக்கு மண்­ட­லத்­தில் – தொழில் வாய்ப்­பு­க­ளுக்கு – பொதுச் சேவை மையங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, வேலூர் போன்ற மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய இந்த வடக்கு மண்­ட­லத்­தில் தொழில் வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றிந்து, பொதுச் சேவை மையங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது தவிர, வட மாவட்­டங்­க­ளுக்­கா­கவே ஒரு சிறப்பு வளர்ச்­சித் திட்­டம் இருக்­கி­றது. அதில் மின்­னணு மற்­றும் வாகன உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிப்பு, தோல் அல்­லாத காலணி உற்­பத்தி, காய்­கறி, கனி­வ­கை­கள் மற்­றும் உணவு பதப்­ப­டுத்­து­தல் தொழில்­க­ளுக்­கான உட்­கட்­ட­மைப்பு, இளை­ஞர்­க­ளுக்­கான திறன் பயிற்சி, I.T. பூங்­காக்­கள் மற்­றும் முழு­மை­யான குடி­நீர்த் திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்­டவை செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் நிறை­வேறி, வட மாவட்­டங்­கள் வளம் பெற, திருப்­பத்­தூர் மக்­கள் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களைஆத­ரிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மே 4 தேர்­தல் முடி­வு­க­ளில், “திருப்­பத்­தூ­ரின் நான்கு தொகு­தி­க­ளி­லும் நமது கூட்­டணி வெற்றி” என எனக்­குச் செய்தி வர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜன­நா­ய­கப் போரில் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அணியே வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சொன்­ன­தைச் செய்­யும் தலை­வர் கலை­ஞ­ரின் மக­னா­கக் கேட்­கி­றேன். தமிழ்­நாடா? டெல்­லியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், நம்­மு­டைய தமிழ்­நாடு அணி­தான் வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏதோ நான் முத­ல­மைச்­சர் ஆகவோ, 30 பேர் அமைச்­சர்­க­ளாக, நமது கூட்­ட­ணி­யில் 200 பேர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக மட்­டு­மல்ல; அழுத்­தம் திருத்­த­மாக – உறு­தி­யோடு சொல்­கி­றேன்... நம்­மு­டைய தமிழ்­நாட்­டைக் காக்க கழ­கம்­தான் மீண்­டும் ஆட்­சிக்கு வர வேண்­டும். ஏழா­வது முறை­யும் நாம்­தான்! இனி எப்­போ­தும் நாம்­தான் என்ற நிலையை உரு­வாக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு, திருப்­பத்­தூர் தொகு­தி­யில் நல்­ல­தம்பி அவர்­க­ளுக்­கும், ஆம்­பூர் தொகு­தி­யில் வில்­வ­நா­தன் அவர்­க­ளுக்­கும், ஜோலார்­பேட்டை தொகு­தி­யில் கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாணி­யம்­பாடி தொகு­தி­யில் தோழமை நம்­மு­டைய இயக்­க­மான இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் வேட்­பா­ளர் சையத் பாரூக் அவர்­க­ளுக்கு ‘ஏணி’ சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரக்­கூ­டிய ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் சாத­னை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­களே முறி­ய­டிப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை நாங்­கள் வழங்­கு­வோம். நாடு வளம் பெற – நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக!  வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்றி, வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர், முதல்­வர்மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>