<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1396" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 05:30:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260415T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="15042026-MDU-08" position.sequence="08" ex-ref="15042026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை     </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">15.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் டெல்லியின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தும் ஒரே அணி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">இராணிப்பேட்டையில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">7 ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup318773_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup318872_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="1_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் உள்ள ஒவ்­வொரு தொகு­திக்­கும் இது­போன்று நிறை­வேற்­றப்­பட்ட திட்­டங்­க­ளைச் சொல்­லித்­தான் இன்­றைக்கு வாக்­கு­க­ளைக் கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம். இப்­படி, ஒவ்­வொரு மாவட்­டத்­தை­யும் வளர்த்த கார­ணத்­தால்­தான், ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நா­டும் இன்­றைக்கு வளர்ந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நமது வளர்ச்­சி­மீது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பொறாமை  கொண்ட பா.ஜ.க.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­வும் எப்­படி? ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் தயவு இல்­லா­ம­லேயே இந்­த­ள­வுக்கு வளர்ந்­தி­ருக்­கி­றோம். பா.ஜ.க. அரசு பல ஆயி­ரம் கோடி­களை வாரி வழங்­கி­யும், அவர்­கள் ஆட்சி செய்­யும் மாநி­லங்­க­ளால் இந்த வளர்ச்­சி­யைக் காண்­பிக்க முடி­ய­வில்லை. நம்­மு­டைய வீடு­க­ளில் ஒரு பழ­மொழி சொல்­லு­வார்­கள், “படிக்­கிற புள்ள எங்க இருந்­தா­லும் படிக்­கும்” என்று சொல்­லு­வார்­கள். அது­போன்று, திற­மை­யி­ருந்­தால் தடை­களை மீறி­யும் சாதிக்­க­லாம் என்­ப­தற்கு திரா­விட மாடல்­தான் சிறந்த எடுத்­துக்­காட்­டாக இன்­றைக்கு விளங்­கு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘மும்­மொ­ழித்­திட்­டம்’ என அரா­ஜ­கம் செய்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தமிழ்­நாடு வளர்ந்­தால், அது இந்­தி­யா­வுக்­கான வளர்ச்­சி­தானே” என்று பா.ஜ.க. நினைக்­க­வில்லை. அந்த அள­வுக்கு நம்­மு­டைய வளர்ச்சி மீது பொறாமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமி­ழர்­க­ளின் அடை­யா­ளமே மொழி­தான்! தமி­ழர், தமிழ்­நாடு, இப்­படி நம்­மு­டைய இனம், நாம் வாழும் மாநி­லம் என எல்­லாமே மொழியை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­து­தான்! அப்­ப­டி­பட்ட மொழி­யையே அழித்­து­விட்­டால், தமி­ழர்­களை எளி­தாக அடி­மைப்­ப­டுத்­தி­ட­லாம்; தமி­ழர் பண்­பாட்­டையே அழித்­து­வி­ட­லாம் என்று அவர்­கள் நினைக்­கி­றார்­கள். அத­னால்­தான், செம்­மொ­ழித் தமிழை அழிக்க, ‘மும்­மொ­ழித் திட்­டம்’ கொண்டு வந்தே தீரு­வோம் என்று அடம் பிடிக்­கி­றார்­கள். அரா­ஜ­கம் செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்­றிய அர­சின் 2 ஆயி­ரம் கோடி ரூபாய் கல்வி நிதி வேண்­டும் என்­றால், இந்­தி­யைப் படித்­தாக வேண்­டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றார்­கள். 2 ஆயி­ரம் கோடிக்­காக தமி­ழர்­க­ளின் சுய­ம­ரி­யா­தையை அட­மா­னம் வைக்க, நான் ஒன்­றும் காலில் விழுந்து பதவி வாங்­கிய பழ­னி­சாமி இல்லை; மிசா­வுக்கே அச­ரா­மல் எதிர்த்து நின்ற முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்! மிசா­வுக்கே பயப்­ப­டா­த­வன், அமித்­ஷா­வுக்கா பயப்­ப­டு­வேன்! நான் மக்­க­ளைச் சந்­தித்து மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­சர். அத­னால், என்­னு­டைய விசு­வா­சம் என்­றைக்­குமே தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கலை­ஞ­ரின் கொள்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வாரிசு நாங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாநில உரி­மையை அடகு வைத்து பத­வி­யில் நீடிக்க வேண்­டும் என்­றால், அப்­படி ஒரு பத­வியே வேண்­டாம் என்று சொல்லி, நெருக்­கடி காலத்­தில் ஆட்­சி­யையே இழந்த கலை­ஞ­ரின் கொள்கை வாரி­சு­கள் நாங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம்­மு­டைய உரிமை முழக்­கம், தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல; டெல்லி நாடா­ளு­மன்­றத்­தி­லும் இன்­றைக்கு ஓங்கி ஒலிக்­கி­றது. இந்­தி­யா­வில் இருக்­கும் மற்ற மாநி­லங்­க­ளைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளும், நம்­மைப் பார்த்து மாநில உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்­கத் தொடங்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத­னால்­தான், இவர்­களை இப்­ப­டியே விட்டு வைக்­கக் கூடாது என்று, தொகுதி மறு­வ­ரை­ய­றையை கையில் எடுத்­தி­ருக்­கி­றது பி.ஜே.பி. நாட்­டில் எவ்­வ­ளவோ பிரச்­சி­னை­கள் இருக்­கி­றது. சமைக்க சிலிண்­டர் இல்­லா­மல், குடும்­பங்­க­ளும் – ஹோட்­டல்­க­ளும் திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்! ஆட்டோ ஓட்­டு­நர்­கள், வண்டி ஓட்­டு­வ­தற்கு கேஸ் கிடைக்­கா­மல் தவிக்­கி­றார்­கள், புலம்­பு­கி­றார்­கள். டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, வர­லாற்­றில் இல்­லாத அள­வுக்கு சரிந்து, டேபி­ளுக்கு அடி­யில் தவழ்ந்த பழ­னி­சாமி போன்று இப்­போது மொத்­த­மா­கப் படுத்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதை­யெல்­லாம் கவ­னிக்­கா­மல், தேர்­த­லுக்கு நடு­வில் மக்­களை திசை திருப்­பு­வ­தற்­காக, தொகுதி மறு­வ­ரை­ய­றையை இப்­போதே நடத்­தி­யாக வேண்­டும் என்று, பா.ஜ.க. அரசு திட்­ட­மிட்டு துடி துடிக்­கி­றது. இந்­திய அர­சி­ய­லையே மாற்­றி­ய­மைக்­கப் போகும் மிகப் பெரிய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத் திருத்­தம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தொகுதி மறு­வ­ரை­ய­றை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெரிய சதித்­திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், இதை எப்­படி பண்­ணப் போகி­றார்­கள்? என்ன திருத்­தம் பண்­ணப் போகி­றார்­கள்? இப்­ப­டி­யான நம்­மு­டைய எந்­தக் கேள்­விக்­கும் விளக்­கம் அளிக்க மறுக்­கி­றார்­கள். இவர்­கள் இப்­படி ரக­சி­ய­மாக மறைத்து பண்­ணு­கி­றார்­கள் என்­றால், அதில் கண்­டிப்­பாக பெரிய சதித் திட்­டம் இருக்­கி­றது என்­று­தான் அர்த்­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னால், “தமிழ்­நாட்­டுக்கு தொகு­தி­கள் உய­ரும்” என்று, அடுத்த ஏமாற்று வேலை­யைச் செய்ய ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். அதில்­தான், பெரிய ஆபத்தே ஒளிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆற்­காட்­டில் இருந்து எத்­தனை பேர் வந்­தி­ருக்­கி­றீர்­கள்? உங்­க­ளு­டைய ஊரில் மக்­கன் பேடா வாங்­கி­னால், அதற்­குள் பாதாம், முந்­திரி, திராட்சை எல்­லாம் ஒளித்து வைத்­தி­ருப்­பார்­கள். சரி­தானே? அது­போன்று, இந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றைக்­குள், நமக்­கான ஆபத்தை ஒளித்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எப்­படி என்று சொல்­கி­றேன்… நன்­றா­கக் கவ­னி­யுங்­கள். தமிழ்­நாட்­டை­விட – உத்­த­ரப்­பி­ர­தே­சத்­துக்கு இப்­போது 41 தொகு­தி­கள் அதி­க­மாக இருக்­கி­றது. இதுவே, பா.ஜ.க. அரசு தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைக் கொண்­டு­வந்­து­விட்­டால், இந்த வித்­தி­யா­சம் 61–ஆக உயர்ந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நமது குரலை நசுக்­கக் பார்க்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி ஒட்­டு­மொத்­த­மாக, தென் மாநி­லங்­க­ளுக்­கும் – வட மாநி­லங்­க­ளுக்­கு­மான இடை­வெ­ளியை அதி­க­ரித்து, இதன்­மூ­ல­மாக நாடா­ளு­மன்­றத்­தில் நம்­மு­டைய குரலை நசுக்­கப் பார்க்­கி­றார்­கள். இந்­தியா மொத்­தத்­தை­யும் பாதிக்­கும் முடிவு இது. ஆனால், மாநில அர­சு­கள் மற்­றும் எதிர்க்­கட்­சி­க­ளு­டன் எந்த ஆலோ­ச­னை­யும் நடத்­தா­மல் அவ­சர அவ­ச­ர­மாக இதை அரங்­கேற்­றப் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­வும் இது தேர்­தல் காலம். சாதா­ரண மக்­க­ளுக்கே எத்­தனை கட்­டுப்­பா­டு­களை தேர்­தல் ஆணை­யம் விதிக்­கி­றார்­கள்? ஆனால், ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு ஏன் எந்­தக் கட்­டுப்­பா­டும் இல்லை? எப்­படி, 5 மாநி­லத் தேர்­த­லுக்கு இடையே நாடா­ளு­மன்ற சிறப்­புக் கூட்­டத் தொடரை அவர்­கள் கூட்­டு­கி­றார்­கள்? ஏன், தேர்­தல் முடிந்து 29–ஆம் தேதிக்­குப் பிறகு கூட்­டி­னால் என்ன? எதுக்கு இந்­தப் பதற்­றம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெண்­கள் இட­ஒ­துக்­கீடு! சோனியா காந்­தி­யின் கேள்வி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க.வின் இந்த ஜன­நா­யக விரோ­தச் செய­லுக்கு எதி­ராக, காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் மரி­யா­தைக்­கு­ரிய சோனியா காந்தி அம்­மை­யார் அவர்­கள், ‘தி ஹிந்து’ பேப்­ப­ரில், இன்­றைக்கு ஒரு கட்­டுரை எழு­தி­யி­ருக்­கி­றார். அதில் அவர்­கள் சொல்­லி­யி­ருப்­பதை சுருக்­க­மாக உங்­க­ளுக்­கா­கச் சுட்­டிக் காட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“முத­லில், பெண்­கள் இட­ஒ­துக்­கீட்டை எதற்­காக எந்­தத் தேவை­யும் இல்­லா­மல் தொகுதி மறு­சீ­ர­மைப்­போடு முடிச்­சுப் போடு­கி­றீர்­கள்? பா.ஜ.க. நினைத்­தி­ருந்­தால் 2024 தேர்­த­லி­லேயே பெண்­கள் இட­ஒ­துக்­கீட்டை அமல்­ப­டுத்தி இருக்­க­லாம்… எதிர்க்­கட்­சி­க­ளான நாங்­க­ளும் அதைத்­தானே கேட்­டோம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது தமிழ்­நாடு, மேற்கு வங்­கத் தேர்­த­லுக்கு இடை­யில், எதற்கு இதை பண்ண வேண்­டும்? “ஜூலை மாதம் மழைக்­கால கூட்­டத்­தொ­டர் தொடங்க இருக்­கி­றது. அதற்கு முன் அனைத்­துக் கட்சி கூட்­டத்­தைக் கூட்டி விவா­தித்த பிறகு, பொறு­மை­யாக இதை செய்­ய­லாமே... இப்­போது என்ன அவ­ச­ரம்? உங்­க­ளு­டைய தலை மேல் வானம் இடிந்து விழுந்­தி­டுமா என்ன?” என்­றும் சோனியா காந்தி அவர்­கள் கேட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவர்­கள் கேட்­டி­ருப்­பது 100 சத­வீ­தம் சரி­யான கேள்­வி­தான். நாட்டு மக்­கள் அனை­வ­ரும் கேட்­கும் கேள்­வி­தான். இதை­யெல்­லாம் விட முக்­கி­ய­மாக ஒரு கருத்தை அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">குடும்­பக் கட்­டுப்­பாடு – சிறப்­பாகச்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">செயல்­ப­டுத்­தி­ய­தற்குத் தண்­டனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்­றிய அரசு சொன்­னதை மதித்து, குடும்­பக் கட்­டுப்­பாட்டை சிறப்­பா­கச் செயல்­ப­டுத்தி, குறை­வாக குழந்தை பெற்­றுக் கொண்ட தமிழ்­நாடு போன்ற தென் மாநி­லங்­கள், இந்­தி­யா­வின் வளர்ச்­சிக்கு உத­வி­யி­ருக்­கி­றார்­கள். நாட்­டிற்கு நல்­லது செய்த அவர்­க­ளுக்­குத் தண்­டனை கொடுப்­பது போன்­றது இது. தொகுதி மறு­வ­ரை­யறை எனும் பெய­ரில் அவர்­க­ளின் நாடா­ளு­மன்ற வலி­மையை – அர­சி­யல் வலி­மையை குறைக்­கக் கூடாது என்று அழுத்­த­மாக அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடு பாதிக்­கக் கூடாது என்று தி.மு.க. சொல்­வதை, அன்னை சோனியா காந்தி அவர்­கள் பா.ஜ.க.வை எதிர்த்­துப் பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இங்­கே­யும் ஒரு­வர் இருக்­கி­றாரே? மாண்­பு­மிகு எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி அவர்­கள்! “அவர் வாயில் என்ன கொழுக்­கட்­டையா வைத்­தி­ருக்­கி­றார்?” என்று மக்­கள் கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­க­ளு­டன் நமக்கு ஆயி­ரம் அர­சி­யல் விமர்­ச­னங்­கள், கருத்து வேறு­பா­டு­கள் இருக்­க­லாம். ஆனால், அந்த அம்­மை­யார் உயி­ரு­டன் இருந்­தி­ருந்­தால், தொகுதி மறு­வ­ரை­யறை போன்று, மாநில உரி­மை­க­ளைப் பறிக்­கும், தமிழ்­நாட்டை பாதிக்­கும் விஷ­யத்­தில் தி.மு.க.வைப் போன்றே நிச்­ச­ய­மாக உறு­தி­யான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருப்­பார். அதற்கு உதா­ர­ணம் சொல்ல வேண்­டும் என்­றால், ஜி.எஸ்.டி., நீட் போன்­ற­வற்றை அவர் கடு­மை­யாக எதிர்த்­தார். ஏன், அவர் ஒரு வார்த்தை சொன்­னாரே, “குஜ­ராத் மோடியா, இந்த லேடியா?” எனக் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­யில் குரல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கொடுக்­காத அ.தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு அவ­ரு­டைய அ.தி.மு.க.வின் நிலை­மை­யைப் பாருங்­கள். தமிழ்­நாட்­டின் பிர­தான எதிர்க்­கட்சி, தமிழ்­நாட்­டின் வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­யில்­கூட பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுக்க முடி­யா­மல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­களை, ‘அம்மா... அம்மா’ என்று சொல்­லி­விட்டு, தமிழ்­நாட்­டிற்கு ஆபத்து வரும்­போது இப்­படி சும்மா இருக்­கி­றீர்­களே? இது நியா­யமா பழ­னி­சாமி அவர்­களே... இது அவர்­க­ளுக்­குச் செய்­யும் துரோ­கம் இல்­லையா... ‘மம்மி’ மறைந்த பிறகு, பழ­னி­சாமி அந்­தக் அ.தி.மு.க.வை ‘டம்மி’ ஆக்­கிட்­டார். இது­தான் உண்மை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­தான் டெல்­லி­யின் படை­யெ­டுப்பை தடுத்து நிறுத்­தும் ஒரே அணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">டெல்லி அணி­யின் அஜெண்டா என்ன? மாநில அர­சு­களை ஒழிப்­பது, தமிழை அழிப்­பது, சிறு­பான்­மை­யி­னரை முடக்­கு­வது, இந்­தி­யைத் திணிப்­பது, சமஸ்­கி­ரு­தத்தை புகுத்­து­வது, ஆட்­சிக்கு வந்த 12 ஆண்­டு­க­ளில் இதைத் தாண்டி வேறு ஒன்­றும் அவர்­கள் செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘சூப்­பர் ஹிட்’ அறி­விப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், நம்­மு­டைய ‘திரா­விட மாடல்’ அரசு வெறும் ஐந்தே ஆண்­டு­க­ளில் இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கும், எல்லா மாநி­லங்­க­ளும் பின்­பற்­றும் முத்­தி­ரைத் திட்­டங்­களை நிறை­வேற்­றிக் காட்டி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னு­டைய அடுத்­த­கட்­ட­மா­கத்­தான், 2026 தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். சாதா­ரண அறிக்கை அல்ல அது, சூப்­பர்ஸ்­டார் அறிக்கை! “சூப்­பர்ஸ்­டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்­தை­கள்­கூட சொல்­லும்”. இப்­பொ­ழுது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டா­ரில் அடங்­கி­யி­ருக்­கும், சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­களை நான் இங்கே சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­லில் ‘இல்­லத்­த­ரசி’ திட்­டம்! ஃபர்ஸ்ட் பாலே சிக்­சர்! ‘இல்­லத்­த­ரசி’ திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப் போகி­றோம்! (‘8 ஆயி­ரம்’ என மக­ளிர் குரல்) இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை புதி­தா­த­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்­லை­யெ­னில், பழைய பொருளை ‘எக்ஸ்­சேஞ்ச்’ செய்­தும் வாங்­கிக் கொள்­ள­லாம். உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெ­னி­யில் நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம். என்­னென்ன பொருட்­கள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­வேவ் அவன், இண்­டக்‌ஷன் ஸ்டவ் என்று இவற்­றில் எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். இதில் எதை வாங்­க­லாம் என்று வீட்­டுக்­கா­ர­ரி­டம் கேட்­கா­தீர்­கள். எதா­வது சொல்லி, உங்­களை குழப்­பி­வி­டு­வார்­கள். எதா­வது பிரச்­சினை செய்­தார்­கள் என்­றால், “அண்­ண­னி­டம் சொல்­லி­வி­டு­வேன்” என்று சொல்­லி­வி­டுங்­கள். இது முழுக்க முழுக்க உங்­க­ளுக்­காக நான் கொண்டு வந்­தி­ருக்­கும் திட்­டம். பெண்­கள்­தான் ‘டிசைட்’ செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எப்­படி தலை­வர் கலை­ஞர் சொன்­ன­ப­டியே கலர் டி.வி.யும், கேஸ் அடுப்­பும் கொடுத்­தாரோ, அவ­ரு­டைய மக­னான நானும், சொன்­ன­ப­டியே ‘இல்­லத்­த­ரசி’ திட்­டத்தை நிறை­வேற்­று­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 லட்­சம் சகோ­த­ரி­கள் பெற்று வரும், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இனி மாதம் 2 ஆயி­ரம் ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உத­ய­சூ­ரி­ய­னுக்கு தான் எங்­கள் ஓட்டு என பெண்­கள் முடிவு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போதே பெண்­கள் எல்­லோ­ரும் கணக்­குப் போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு? பொங்­க­லுக்கு முன்பு, சொல்­லி­விட்டு 3 ஆயி­ரம், பிப்­ர­வ­ரி­யில் சொல்­லா­ம­லேயே 5 ஆயி­ரம், ஆக­மொத்­தம் 8 ஆயி­ரம். அடுத்து, ‘இல்­லத்­த­ரசி’ கூப்­ப­னில் 8 ஆயி­ரம். “எட்டு + எட்டு! உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் எங்­கள் ஓட்டு!” என பெண்­கள் அனை­வ­ரும் முடிவு செய்­து­விட்­டார்­கள். அத­னால், நம்­மு­டைய வெற்­றி­யும் இந்த முறை யாரும் எட்­டாத உய­ரத்­துக்­குப் போகப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குப் போகும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் – தமிழ்ப் புதல்­வன், உத­வித்­தொ­கை­யும் ஆயி­ரத்தி 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும், முதி­யோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஆத­ர­வற்ற பெண்­கள் என எல்லா உத­வித்­தொ­கை­க­ளும் இனி இரண்டு மடங்­காக வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1000 வெற்­றிப் பள்­ளி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காலை உண­வுத்­திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆயி­ரம் ‘வெற்­றிப் பள்­ளி­கள்’ அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனைத்து வகுப்­ப­றை­க­ளும் ‘ஸ்மார்ட்’ வகுப்­ப­றை­கள் ஆக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப் வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘கலை­ஞர் கனவு இல்­லம்’ உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக 10 லட்­சம் ஏழை­க­ளுக்கு வீடு­கள் கட்­டித் தரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">1000 குழந்­தை­கள் காப்­ப­கங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில், பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்க, ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­களை உரு­வாக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக­ளிர் சுய உத­விக் குழு பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்­கிக் கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிசி­னஸ்–­மேன் மாதிரி, ‘பிசி­னஸ்–­வு­மன்’–­களை உரு­வாக்­கு­வ­தற்­காக, சுய உத­விக்­கு­ழுப் பெண்­கள் தொழில் தொடங்க, எந்த சூரிட்­டி­யும் இல்­லா­மல் 5 லட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் கூடிய கடன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">BC, MBC, சீர்­ம­ர­பி­னர், சிறு­பான்­மை­யி­னர், ஆகி­யோ­ருக்­கும், தொழில் தொடங்க கடன் பெறும் உச்­ச­வ­ரம்பு, 30 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நெச­வா­ளர்­கள் நிறைய இருக்­கும் மாவட்­டம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நெச­வா­ளர்­க­ளின் நல­னுக்­காக தமிழ்­நாட்­டில் 10 கைத்­த­றிப் பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">50 கைத்­த­றிக் குழு­மங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">10 ஆயி­ரம் கைத்­த­றி­களை 90 விழுக்­காடு மானி­யத்­து­டன் நவீ­னப்­ப­டுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரா­ணிப்­பேட்டை, திருப்­பத்­தூர் போன்ற மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய இந்த வடக்கு மண்­ட­லத்­தில், தொழில் வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றிந்து, பொது சேவை மையங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரா­ணிப்­பேட்டை மாவட்­டம் – அரக்­கோ­ணம் பகு­தி­யில் ஒருங்­கி­ணைந்த பெருங்­கு­ழு­மம் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பணி­யா­ளர்­கள் தங்­கு­வ­தற்­கான ஹாஸ்­டல் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வட­மா­வட்­டங்­கள் வளர்ச்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெற வாக்­க­ளிப்­பீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­கள், உங்­க­ளுக்கு மகிழ்ச்­சியா? எம்.பி.–ஆக இருக்­கும் ஜெகத்­ரட்­ச­க­னுக்கு மகிழ்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது நான் சொன்ன வாக்­கு­று­தி­கள் எல்­லாம் நிறை­வேறி, வட மாவட்­டங்­கள் தற்­போது கண்­டு­வ­ரும் முன்­னேற்­றம் தொடர, தமிழ்­நாடு மென்­மே­லும் வளர, அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­கள் அனைத்­திற்­கும் அப்­பாற்­பட்டு, நீங்­கள் எல்­லா­ரும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்­குத்­தான் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தமிழ்­நாடா? டெல்­லியா?” என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், தமிழ்­நாடு அணி­தான் வெல்ல வேண்­டும். ஏதோ, நான் முத­ல­மைச்­சர் ஆகவோ – 30 பேர் அமைச்­சர் ஆகவோ – நம்­மு­டைய கூட்­ட­ணி­யில் 200 பேர் MLA ஆகவோ – இதை நான் சொல்­ல­வில்லை. தமிழ்­நாட்­டைக் காக்க கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும். ஏழா­வது முறை­யும் நாம்­தான். ஏன், இனி எப்­போ­தும் நாம்­தான் என்ற நிலையை உரு­வாக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு, ராணிப்­பேட்டை தொகு­தி­யில் காந்தி அவர்­க­ளுக்­கும், ஆற்­காடு தொகு­தி­யில் ஈஸ்­வ­ரப்­பன் அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, சோளிங்­கர் தொகு­தி­யில் அன்­புக்­கு­ரிய என்­னு­டைய அரு­மைச் சகோ­த­ரர் ராகுல் காந்­தி­யின் அன்­பைப் பெற்ற காங்­கி­ரஸ் கட்­சி­யின் வேட்­பா­ளர் முனி­ரத்­தி­னம் அவர்­க­ளுக்கு கை சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அரக்­கோ­ணம் தொகு­தி­யில் அரு­மைச் சகோ­த­ரர் தொல். திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளின் ஆத­ரவு பெற்ற விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி வேட்­பா­ளர் எழில் கரோ­லின் அவர்­க­ளுக்கு பானை சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அமை­ய­வி­ருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில், எங்­கள் சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை நாங்­கள் வழங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாடு வளம் பெற, நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வெல்­வோம் ஒன்­றாக!  வெல்­வோம் ஒன்­றாக!  வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>