<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,354,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 05:32:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260415T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="15042026-MDU-12" position.sequence="12" ex-ref="15042026-MDU-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">எல்லாவற்றிலும் இணக்கம் என்றால் எப்படி? </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">தமிழ்நாட்டுக்குத் தொடர் துரோகம் இழைக்கும் எடப்பாடி பழனிசாமி – பா.ஜ.க. கூட்டணி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">திருநெல்வேலி – நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhi2_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Anithaphotoco_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Kalaiphotocol_12_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரு­நெல்­வேலி, ஏப்.15 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற  தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி 
கரு­ணா­நிதி,  திரு­நெல்­வேலி தி.மு.க. வேட்­பா­ளர் சுப்­பி­ர­ம­ணி­யன், நாங்­கு­நேரி காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ரூபி மனோ­க­ரன் ஆகி­யோ­ருக்­காக ஏப்­ரல் 13–ஆம் தேதி­யன்று தேர்­தல் பரப்­பு­ரை­யில்  ஈடு­பட்­டார். அப்­போது அவர் ‘தமிழ்­நாட்­டுக்கு தொடர் துரோ­கம் இழைக்­கும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் பா.ஜ.க. கூட்­டணி’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.  அவர்கள் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நாம்  நம்­மு­டைய முத­ல­மைச்­சர், அவர்­க­ளு­டைய பெய­ரால் வாக்கு கேட்­கும் பொழுது மக்­க­ளுக்கு தந்­தி­ருக்க கூடிய வாக்­கு­று­தி­களை எல்­லாம் நிறை­வேற்றி தந்­தி­ருக்­கி­றோம் என்ற அந்த பெரு­மை­யோடு, அந்த மகிழ்ச்­சி­யோடு அந்த உரி­மை­யோடு உங்­க­ளி­டம் ஓட்டு கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக­ளிர் உரி­மைத்­தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­கள் எல்­லாம் இந்த நிகழ்­வு­க­ளில் மகிழ்ச்­சி­யோடு கலந்து கொண்டு இருக்­கி­றார்­கள் என்­றால், அவர்­கள் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் தந்த வாக்­கு­றுதி மக­ளிர் உரி­மைத்­தொகை ஆயி­ரம் ரூபாய் என்ற அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றார்­கள் என்ற அந்த மகிழ்­வோடு இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வரக்­கூ­டிய திரா­விட மாடல் இரண்­டா­வது கட்ட ஆட்­சி­யிலே அந்த ஆயி­ரம் ரூபாய் என்­பது இரண்­டா­யி­ர­மாக உயர்த்தி வழங்­கப்­ப­டும் என்ற அந்த நம்­பிக்கை உங்­க­ளுக்கு இருக்­கி­றது. அந்த உறுதி உறு­தி­யோடு இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக­ளிர்க்கு 8 ஆயி­ரம் ரூபாய்க்­கான கூப்­பன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து எட்­டா­யி­ரம் ரூபாய்க்­கான கூப்­பன். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் எட்­டா­யி­ரம் ரூபாய்க்­கான கூப்­பனை வழங்­கு­கி­றேன் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.  கடைக்கு போய் உங்­க­ளுக்கு என்ன வேணுமோ நீங்க வாங்­கிக்­கோங்க. நாங்க இதை வாங்கி தர்­றோம். அதை வாங்­கித் தறோம்னு சொல்­லல. உங்க வீட்­டுக்கு பக்­கத்­துல இருக்­கக்­கூ­டிய கடை­யில போய் உங்­க­ளுக்கு எது தேவையோ அதை நீங்­கள் வாங்கி பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள் என்று சொல்லி நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் எட்­டா­யி­ரம் ரூபாய்க்­கான கூப்­பனை கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் ஒரு மாதத்­தில் ஆட்­சிக்கு வந்­த­வு­டனே அதை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் நிறை­வேற்­றித் தரு­வார்­கள். இப்­படி மக்­க­ளுக்கு தந்­தி­ருக்­கக்­கூ­டிய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் எப்­படி மக்­க­ளுக்கு தந்த அத்­தனை வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை­வேற்றி தந்­தார்­கள்? வண்­ணத் தொலைக்­காட்சிபெட்டி தரேன்னு சொன்­னாங்க. தந்­தாங்க. விவ­சா­யி­ க­ளுக்கு கட்­ட­ண­மில்­லாத மின்­சா­ரம். இல­வச மின்­சா­ரத்தை தந்து விவ­சா­யத்தை காப்­பாற்றி விவ­சா­யி­களை காப்­பாற்­றிய தலை­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவ­ரு­டைய வழி­யில், இது இரு­பது லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு மேல் பயன்­ப­டக்­கூ­டிய வகை­யில் மின்­மோட்­டார் கள், புதிய மின்­மோட்­டார்­கள் விவ­சா­யி­க­ளுக்கு கட்­ட­ணம் இல்­லா­மல் வழங்­கப்­ப­டும். இப்­படி விவ­சா­யி 
­க­ளுக்கு, தொழி­லா­ளர்­க­ளுக்கு என்று தொடர்ந்து பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கக் கூடிய ஆட்சி திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் நமக்கு எதி­ராக நிற்­கக்­கூ­டிய அ.தி.மு.க. யாரோடு கைகோர்த்­துக்­கொண்டு நிக்­குது? பி.ஜே.பி.யோடு! 100 நாள் வேலைத் திட்­டத்­தில் யாருக்­கும் சம்­ப­ள­மும் ஏறு­ற­தில்ல. நூறு நாள் வேலை­யும் இல்லை இல்­லையா?  மோடி ஆட்­சிக்கு வந்­த­பி­றகு அதுக்கு கொடுக்­குற நிதியை குறைச்­சிக்­கிட்டே வராங்க. நிதிய கொடுக்­க­றது இல்ல. அந்த திட்­டத்­தை­யும் நிறுத்­தி­ட­ணும் அப்­ப­டின்­னு­தான் நினைக்­கக்­கூ­டி­ய­வர்­கள் தான் பிஜே­பி­யில் இருக்­காங்க. அவங்க கூட தான் இன்­னைக்கு கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றார் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இந்தி படிச்­சுட்டு என்ன பண்­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு சாதா­ரண சாமா­னிய மக்­க­ளுக்கு எதி­ரா­கவே செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஒரு ஆட்சி ஒன்­றி­யத்­தில் இருக்­கக்­கூ­டிய பி.ஜே.பி. அவுங்­க­ளோட தான் இணக்­கமா இருக்­க­ணும். இணக்­கமா இருந்தா தான் திட்­டங்­களை கொண்­டு­வர முடி­யும் அப்­ப­டீன்னு எடப்­பாடி சொல்­றாரு.  எல்­லாத்­துக்­கும் இணக்­கமா இருந்தா எப்­படி? நமக்­குன்னு உரிமை இல்­லையா? அவங்க ஹிந்தி படி ஹிந்தி படிக்­க­லைனா புள்­ளைங்க படிக்க காசு கொடுக்க மாட்­டேங்­கு­றாங்க. ஹிந்தி படிச்­சிட்டு என்ன பண்­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அங்க இருந்து தான் இங்க வேலைக்கு வராங்க. அவங்க தமிழ் படிச்­சுட்டு வர்­றது இல்ல. நம்ம வேலைக்கு போகும் பொழுது நம்ம புள்­ளைங்க வேலைக்கு போகும் போது பல நாடு­க­ளுக்கு வேலைக்கு செல்­கி­றார்­கள். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் எல்­லா­ரும் படிக்­க­ணும். நம்ம வீட்­டுல இருக்­கக்­கூ­டிய பிள்­ளை­கள் படிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான். கல்­லூ­ரி­யில படிக்­கக்­கூ­டிய பிள்­ளைங்­க­ளுக்­காக மாசம் ஆயி­ரம் ரூபாய் குடுக்­கு­றாங்க இல்­லையா? அடுத்த ஆட்­சிக்கு வந்­த­வு­டன் அதை ஆயி­ரத்தி ஐநூறு ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக்­க­ளுக்கு கல்வி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மிக­வும் அவ­சி­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">படிச்­சிட்டு வேலை தேடக் கூட பிள்­ளைங்­க­ளுக்கு. அடுத்து ஆட்­சிக்கு வந்த உடனே வேலை தேடு­ற­துக்கு ஒரு நாலைஞ்சு மாசம் ஆகும். அவங்­க­ளுக்கு வேலை தேடு­வ­தற்­கான பயிற்­சி­களை வழங்கி, அந்த பயிற்சி கொடுக்­கக் கூடிய அந்த ஆறு மாசத்­துல அவங்­க­ளுக்கு மாதம் ஆயி­ரத்தி ஐநூறு ரூபாய் தரு­கி­றேன் என்று சொல்­லக்­கூ­டிய முதல்­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த பகு­தி­யில இருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்கு கல்­விங்­க­றது ரொம்ப முக்­கி­ய­மான விஷ­யம். இதுல மிகப்­பெ­ரிய அள­வுல நம்­மு­டைய முத­ல­மைச்­சர் கொண்­டு­வந்த நான் முதல்­வன் திட்­டம். அந்த திட்­டத்­தின் வழி­யாக இங்க விக்­ர­ம­சிங்­க­பு­ரத்­துல இருக்­கக்­கூ­டிய ஒரு மாண­வன் சுப்­பி­ர­ம­ணிய பாரதி. அவங்க அம்மா அவ­ருக்கு ரொம்ப அழ­கான ஒரு பெயரை வைத்­தி­ருக்­கி­றார். அந்த இளை­ஞன். அவங்க அப்பா செங்­கல் சூளை­யில வேலை செய்­யக்­கூ­டி­ய­வர். ரொம்ப கஷ்­டப்­ப­டக் கூடிய குடும்­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சுப் பள்­ளி­யி­ல­தான் அந்த பையன் படிச்­சாரு. நம்ம முதல்­வர் கொண்டு வந்த நான் முதல்­வன் திட்­டத்­துல  ஐ.ஏ.எஸ்,ஐபி­எஸ் தேர்வு எழு­து­வ­தற்கு நம் அர­சாங்­கம் கொடுத்த பயிற்­சி­களை  எடுத்து, அடுத்த கட்ட பயிற்­சிக்­காக சென்­னை­யில போய் இருந்து  அங்க ஒவ்­வொரு மாத­மும் 7500 ரூபாய் தந்த முத­ல­மைச்­சர்  நமது முத­ல­மைச்­சர். அந்த  பையன் ஒரு பேட்­டி­யில சொல்­றாரு... ‘எங்க அப்­பா­வுக்கு சம்­ப­ளமே 7500 ரூபாய் கெடை­யாது.ஆனால் எனக்கு பயிற்­சிக்கே 7500 ரூபாய்  தந்த முதல்­வர்’ என்று சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த பகு­தி­யிலே செங்­கல் சூளை­யில வேலை செய்­யக் கூடிய ஒரு­வ­ரின் மகன் சுப்­பி­ர­ம­ணிய பாரதி இன்று ஐ.ஏ.எஸ்,. அதி­கா­ரி­யாக வந்து... இந்த மாவட்­டத்­துக்கே கூட கலெக்­ட­ரா­கும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது நம்ம ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">துரோ­கக் கூட்­டணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">எடப்­பாடி கூட்­டணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனா நம் பிள்­ளை­கள் படிக்­கக் கூடாது... நீட் கொண்­டு­வந்து டாக்­டர்  ஆகக் கூடாது... புதிய கல்­விக் கொள்­கையை கொண்டு வந்து படிப்­ப­தற்கு தடை போடும் ஆட்­சி­தான் ஒன்­றிய ஆட்சி. அதோடு கூட்­டணி வைத்­தி­ருப்­ப­வர்­தான் எடப்­பாடி.  அது  தமிழ்­நாட்­டுக்கு தொடர் துரோ­கம் இழைக்­கும்  கூட்­டணி,  டெல்­லி­யில் தமிழ்­நாட்டை அடகு வைத்த கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் தூத்­துக்­குடி எம்­பி­யா­ன­போது பிர­தான் மந்­திரி கிராம சடக்  யோஜனா என்ற திட்­டத்­தைப் பார்த்­தேன். எனக்கு புரி­யல. என்­னனு கேட்­ட­போது பிர­த­மர் கிராம சாலை­கள் திட்­டம்னு சொன்­னாங்க. இது எப்­படி கிரா­மத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு  புரி­யும்?   நாம எல்­லா­ரும் இந்தி படிக்­க­ணும் குறதை விட அவங்­க­ளுக்கு வேறு எந்த நோக்­க­மு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­களை மத ரீதி­யாக பிரிப்­ப­து­தான் பிஜே­பி­யின் வேலை. தொடர்ந்து இஸ்­லா­மிய மக்­க­ளுக்கு எதி­ரான  சட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்த பாஜ­க­வுக்கு எடப்­பாடி ஆத­ரவு அளித்­தாரு. இப்ப வெளி­நாட்டு நிதி பங்­க­ளிப்பு ஒழுங்­கு­முறை சட்­டம்னு ஒரு சட்­டத்தை கொண்டு வந்­தி­ருக்­காங்க. இந்த நாடு முழு­தும் பல பள்­ளிக் கூடங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், ஆத­ர­வற்­றோர்  காப்­ப­கங்­களை  சிறு­பான்மை நிறு­வ­னங்­கள் வெளி­நாட்டு பணத்தை வாங்கி நடத்தி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்­லா­மல் மக்­க­ளுக்­காக போரா­டும் எத்­த­னையோ என்.ஜி.ஓ.க்கள் வெளி­நாட்­டில் இருந்து பணம் பெற்று மக்­க­ளுக்­கான பணி­களை செய்­து­கொண்­டி­ருக்­கின்­றன.  ஆனா பிஜேபி என்ன நினைக்­குது? அந்த பணம் தன்­னு­டைய கட்­சிக்­கு­தான் வர­ணும் என்று நினைத்து இந்த சட்­டத்­தைக் கொண்­டு­வ­ருது. சிறு­பான்மை மக்­களை மிரட்­டும் வித­மாக,  இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்­கும் நிறு­வ­னங்­களை மிரட்­டும் வித­மாக  ஒடுக்­கும் வித­மாக ஒரு சட்­டத்தை கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த சட்­டத்தை  எதிர்ப்­பது நம் முத­ல­மைச்­சர், காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கட்­சி­கள். ஆனால் இப்­போது வரை அதை பற்றி எது­வும் சொல்­லா­மல் மௌனம் காப்­பது அமித் ஷா திமு­கவை நடத்­திக்­கொண்­டி­ருக்­கும் எடப்­பாடி.  சொன்னா வேற வருத்­தப்­ப­டு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் காலத்­தில் இருந்தே திமு­க­வி­னர் ஒரு வாக்­கு­றுதி அளித்­தால் அதை நிறை­ வேற்­றியே தீரு­வோம்.  விவ­சா­யி­ க­ளுக்கு இல­வச மின்­சா­ ரத்தை  தந்து விவ­சா­யத்தை  விவ­சா­யி­களை காப்­பாற்­றிய முத­ல­மைச்­சர் நம் தலை­வர் கலை­ஞர். அவர் கொடுத்த கலர்­டிவிஇன்­னைக்­கும் நிறைய பேர் வீட்­டில் பயன்­பாட்­டில் இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் எப்­படி இன்­னும் தமிழ்­நாட்­டில் மக்­கள் மனத்­தில்  வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றாரோ, அவர் கொடுத்த தொலைக்­காட்­சிப் பெட்டி  இன்­னைக்­கும் வீடு­க­ளில் பயன்­பாட்­டில் இருக்கு.  கலை­ஞர் கொடுத்த காஸ் ஸ்டவ்,   இரண்டு பர்­னர் இருக்­கக் கூடிய காஸ் ஸ்டவ் சீக்­கி­ரம் சமை­யலை முடித்­துட்டு   பெண்­கள் வெளியே வர­வேண்­டும்னு கொடுத்­தாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி மக்­க­ளுக்கு கொடுத்­தி­ருக்­குக் கூடிய  வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி தந்­தி­ருக்­குக் கூடிய  ஆட்சி நமது ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆயி­ரம் ரூபாய்  மக­ளிர் உரி­மைத்­தொகை தரு­கி­றேன் என்று நம்ம முத­ல­மைச்­சர் சொன்­னார்...  அதை செய்­த­தார். விடி­யல் பய­ணம் என்றுசொன்­னார் . அதை செய்து தந்­தார். இது­தான் மக்­க­ளுக்­கான ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பண்­பாட்டை பாது­காக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஆட்சி நமது ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளுக்கு எதி­ரான அந்த கூட்­ட­ணிக்கு சரி­யான பாடத்தை நாம் சொல்­லித் தர வேண்­டும்.  மீண்­டும் தமிழ்­நாட்­டில் இந்த மண்­ணைப் பாது­காக்­கும்  இந்த மக்­க­ளைப் பாது­காக்­கும் நம்­மு­டைய மொழியை நம்­மு­டைய பண்­பாட்­டைப் பாது­காக்­கும்  ஆட்சி தொடர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய தமிழ் பெரு­மை­களை எல்­லாம் சொல்­லக்­கூ­டிய  பொருநை அருங்­காட்­சி­ய­கத்தை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் நமக்­காக உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கி­றார்­கள். இன்று நாடு முழு­வ­தும் இருக்­கக் கூடி­ய­வர்­கள் வந்து  தமிழ் பெரு­மை­க­ளைப் பற்­றித் தெரிந்து கொண்டு போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த பெரு­மை­க­ளுக்­குக் கூட எதி­ராக இருக்­குக்­கூ­டிய  ஆட்சி ஒன்­றி­யத்­தில் இருக்­குக்­கூ­டிய ஆட்சி என்­பதை நாம் புரிந்­து­கொண்டு  இந்த தேர்­த­லிலே அவர்­க­ளுக்கு சரி­யான பாடத்தை சொல்­லித்­தர வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் டெல்­லி­யில் இருக்­கும் பாஜக ஆட்சி, அதி­முக வழி­யாக தமிழ்­நாட்­டுக்கு வந்­து­வி­டக் கூடாது என்­ப­தில் இந்­தத் தேர்­த­லில் நாம் உறு­தி­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கங்­கை­கொண்­டான் சிப்­காட் வளா­கத்­தில் 77கோடிரூபாய் மதிப்­பீட்­டில் மெகா உண­வுப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் 4 ஆயி­ரம் நபர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழி­வக செய்து தரப்­பட்­டுள்­ளது. திரு­நெல்­வே­லி­யில் அடுக்கு மாடி கட்­டி­டம், நவீன பார்க்­கிங் வச­தி­யு­டன்  78 கோடி ரூபாய்  மதிப்­பீட்­டில் ஜங்­ஷன் பேருந்து நிலை­யம் கட்டி முடிக்­கப் 
பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">திரு­நெல்­வே­லி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">செம்­மொ­ழிப் பூங்கா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து நமது  ஆட்சி வந்­த­வு­டன் திரு­நெல்­வே­லி­யில் செம்­மொ­ழிப் பூங்கா அமைக்­கப்­ப­டும். திரு­நெல் வேலி மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் புற்­று­நோய்க்­கான நவீன மருத்­து­வ­சி­கிச்சை ஏற்­பாடு செய்து தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் மின் பேருந்து  இயக்­கப்­ப­டும், மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­தும் 10 ஆயி­ரம்  பேருந்­து­கள் வாங்­கப்­ப­டும்.  எல்லா பகு­தி­க­ளுக்­கும் பேருந்து வசதி செய்து தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி அமைந்து தமிழ் நிலத்­தின் உரி­மை­களை பாது­காக்க உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.  நாங்­கு­நேரி காங்­கி­ரஸ் வேட்­பா­ள­ருக்கு கை சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி  வேட்பாளர் தெற்கு மாவட்ட கழகச்  செயலாளர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்தில் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார் மக்கள் அமோகமாக வரவேற்றனர். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஏ.பி.சதீஷ்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜனகர், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மற்றும் கூட்டணி கட்சி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர்.கலை கதிரவன் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெருத் தெருவாகச் சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் தென்காசி மரு.ராணி ஸ்ரீகுமார் எம்.பி.பேரூர் செயலாளர் சுடலை பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன்,துணைத் தலைவர் ஜீவானந்தம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>