<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,133,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 05:51:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260415T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="15042026-VLR-09" position.sequence="09" ex-ref="15042026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="51">தப்­பித்­த­வறி சங்­கி­க­ளி­ட­மோ, அடி­மை­க­ளி­ட­மோ சிக்­கி­னால், நம் மாநி­லத்­தின் உரி­மை­கள் எல்­லாம் பறி­போய்­வி­டும்! </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup317976_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Mannarkudidcm1_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மன்­னார்­குடி, ஏப்.15 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் திரு­வா­ரூர் மாவட்­டம், 
மன்­னார்­குடி சட்­ட­மன்றத் தொகு­தி­யின் திரா­விட 
முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் முனை­வர் 
டி.ஆர்.பி.ராஜாவுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் 
வாக்­கு­கள் சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``மீண்­டும் அடி­மைக் கூட்­டத்­தி­ட­மும், சங்­கி­கள் கூட்­டத்­தி­ட­மும் தமிழ்­நாடு போய்­விட்­டது என்­றால், தமிழ்­நாட்­டைப் பின்­னோக்கி எடுத்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்­கள். எல்லா உரி­மை­க­ளை­யும் விட்­டுக்­கொ­டுத்து விடு­வார்­கள். மாநில உரி­மை­கள் எல்­லாம் போய்­வி­டும்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை 
முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இங்கு வருகை தந்­தி­ருக்­கும் உங்­கள் அனை­வ­ருக்­கும் முத­லில் என்­னு­டைய நன்­றியை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நேற்று முழு­வ­தும் திருச்சி மாவட்­டத்­தில் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்டு, நம்­மு­டைய கழக வேட்­பா­ளர்­க­ளுக்கு நம்­மு­டைய வெற்­றிச் சின்­னம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­குக் கேட்டு இன்று காலை­யில் முதன்­மு­த­லாக திரு­வா­ரூர் மாவட்­டத்­திற்கு உங்­க­ளு­டைய வெற்றி வேட்­பா­ளர் சகோ­த­ரர் டி.ஆர்.பி. ராஜா அவர்­க­ளுக்கு வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். நான் இன்று மன்­னார்­கு­டிக்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உங்­க­ளில் ஒரு­வன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மன்­னார்­கு­டிக்கு நான் ஒரு வெளி­யாள் கிடை­யாது, உங்­க­ளில் ஒரு­வ­னாக இன்று வந்­தி­ருக்­கி­றேன். கலை­ஞ­ரு­டைய திரு­வா­ரூர் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வ­னாக வந்­தி­ருக்­கி­றேன். கலை­ஞர் எப்­போ­துமே டெல்­டா­கா­ரன் என்று சொல்­லு­வார். நம்­மு­டைய தலை­வ­ரும் சொல்­லு­வார் நான் ஒரு டெல்­டா­கா­ரன் என்று. இப்­போது நானும் சொல்­கி­றேன், பெரு­மை­யா­கச் சொல்­கி­றேன், நானும் ஒரு டெல்­டா­கா­ரன் என்­கிற அந்­தப் பெரு­மை­யோடு, உரி­மை­யோடு உங்­க­ளை­யெல்­லாம் சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன். இன்று நான் டெல்­டா­கா­ரன் என்று நான் சொல்­வ­தும், நம்­மு­டைய தலை­வர் சொல்­வ­தும் சில­ருக்­குப் பிடிக்­க­வில்லை. என்ன தெரி­யுமா சொல்­கி­றார்­கள்? அவர்­க­ளெல்­லாம் ஒரி­ஜி­னல் டெல்­டா­கா­ரர்­கள் இல்லை என்­கி­றார்­கள். நாங்­க­ளெல்­லாம் ஒரி­ஜி­னல் டெல்­டா­கா­ரர்­கள்­தாம். நீங்­கள்­தான் ஒரி­ஜி­னல் அடி­மை­கள், நீங்­கள் ஒரி­ஜி­னல் டெல்­டா­கா­ரர்­கள் கிடை­யாது. அவர்­க­ளுக்கு இந்த நேரத்­தில் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சகோ­த­ரர் டி.ஆர்.பி. ராஜா அவர்­க­ளுக்கு வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். ஒரு அரு­மை­யான வேட்­பா­ளரை உங்­க­ளி­டத்­திலே தலை­வர் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். போன முறை கிட்­டத்­தட்ட 37,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் அவரை ஜெயிக்க வைத்து சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்­பி­னீர்­கள், தலை­வர் அவரை அமைச்­ச­ராக்­கி­னார். இந்த முறை குறைந்­தது எவ்­வ­ளவு வாக்கு வித்­தி­யா­சம்? ஒரு லட்­சமா? சரி பண்­ணிக்­காட்­டி­வி­டுங்­கள் பார்ப்­போம். செய்து காட்­டு­வீர்­களா? குறைந்­தது ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் ஜெயிக்க வைத்து மிகப்­பெ­ரிய வெற்­றியை கொடுத்து அவரை அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நான்­கா­வது முறை­யாக வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மூன்று முறை தொடர்ந்து ஹாட்­ரிக் அடித்­தி­ருக்­கி­றார். இந்த முறை நான்­கா­வது முறை­யாக அந்த வெற்­றி­யைத் தேடிக்­கொ­டுக்க வேண்­டும். மன்­னை­யின் செல்­லப்­பிள்ளை என்று கலை­ஞ­ரால் அழைக்­கப்­பட்­ட­வர்­தான் சகோ­த­ரர் டி.ஆர்.பி.ராஜா அவர்­கள். அது­மட்­டு­மல்ல எந்த நேரத்­தி­லும் உங்­க­ளோடு களத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர், மக்­க­ளோடு இருக்­கக்­கூ­டி­ய­வர். கஜா புய­லாக இருந்­தா­லும் சரி, அது கொரோனா கால­மாக இருந்­தா­லும் சரி, எப்­போ­தும் உங்­க­ளோடு இருக்­கக்­கூ­டி­ய­வர், உங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக இருக்­கக்­கூ­டி­ய­வர்­தான் சகோ­த­ரர் டி.ஆர்.பி. ராஜா அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று தமிழ்­நாடு தொழில் வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வி­லேயே நம்­பர் ஒன் மாநி­ல­மாக மாறி­யி­ருக்­கி­றது என்­றால், அது முழுக்க முழுக்க அவ­ரு­டைய முயற்சி. இது­வரை இல்­லாத அள­வுக்கு, இன்று அந்­நிய முத­லீ­டு­கள் தமிழ்­நாட்டை நோக்கி வரு­கி­றது என்­றால், அது முழு­வ­தும் அவ­ரு­டைய முயற்­சி­தான். இன்று தமிழ்­நாடு முழுக்க தொழில் முத­லீ­டு­கள் வந்து நிறைய வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கி கொடுத்­தி­ருக்­கி­றார். இதற்­கெல்­லாம் முக்­கிய கார­ண­மான உங்­க­ளு­டைய வெற்றி வேட்­பா­ளர் ராஜா அவர்­களை அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் ஜெயிக்க வைக்க வேண்­டும். நீங்­கள் ராஜா­வுக்­குப் போடு­கின்ற ஒவ்­வொரு ஓட்­டும் உங்­க­ளு­டைய அடுத்த தலை­மு­றைப் பிள்­ளை­க­ளு­டைய வளர்ச்­சிக்­கான ஓட்டு என்­பதை மன­திலே வைத்­துக்­கொண்டு ஓட்­டுப் போடுங்­கள். அத­னால் உங்­க­ளை­யெல்­லாம் உரி­மை­யோடு கேட்­கி­றேன், டி.ஆர்.பி. ராஜா அவர்­க­ளைக் குறைந்­தது ஒரு லட்­சம் ஓட்டு வாக்கு வித்­தி­யா­சத்­தில் ஜெயிக்க வைத்து இந்த முறை சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">துரோ­கக் கூட்­டத்­துக்கு சரி­யான பாடம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல, இவரை எதிர்த்து நிற்­கின்ற வேட்­பா­ளர் யார் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். மன்­னார்­கு­டி­யில் யாரை எதிர்த்து நிற்­கி­றார்? திரு. காம­ராஜ் அவர்­கள் நிற்­கி­றார்­கள். மொத்­தத் துரோ­கக் கூட்­ட­மும் இன்று ஒன்­றா­கச் சேர்ந்து ஒரு­வரை வேட்­பா­ள­ராக்கி இருக்­கி­றார்­கள். அவர்­கள் ஆட்­சி­யைப் பிடிக்க வேண்­டும் என்று வேட்­பா­ளர் நிறுத்­த­வில்லை, அ.தி.மு.க. என்­கிற கட்­சி­யைப் பிடிக்க வேண்­டும் என்று வேட்­பா­ளரை நிறுத்தி இருக்­கி­றார்­கள். அதை மன­திலே வைத்­துக்­கொண்டு ஓட்­டுப் போடுங்­கள். அம்­மை­யார் ஜெய­ல­லி­தா­வுக்­குத் துரோ­கம், அவர்­களை அர­சி­ய­லுக்­குக் கொண்டு வந்த அம்­மை­யார் சசி­கலா அம்­மா­வுக்­குத் துரோ­கம், இப்­படி அனை­வ­ருக்­குமே துரோ­கம் செய்­யக்­கூ­டிய ஒரு துரோ­கக் கூட்­டத்­திற்கு இந்த முறை தேர்­த­லில், ஒரு சரி­யான பாடத்­தைக் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மன்­னார்­குடி திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மன்­னார்­கு­டி­யில் எத்­த­னையோ திட்­டங்­க­ளைச் சகோ­த­ரர் ராஜா அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார். அந்த உரி­மை­யோடு உங்­க­ளுக்கு மீண்­டும் ஒரு வாய்ப்பு கொடுங்­கள் என்று கேட்க வந்­தி­ருக்­கி­றேன். இந்த ஐந்து வரு­டம் எவ்­வ­ளவு திட்­டங்­கள் செய்­தி­ருக்­கி­றார், எவ்­வ­ளவு சாத­னை­களை இந்­தத் தொகு­திக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார், ஒரு சில சாத­னை­களை மட்­டும் உங்­க­ளி­டம் ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">47 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு மன்­னார்­கு­டி­யில் ஒரு புதிய பேருந்து நிலை­யம் கொண்டு வந்­தது யார்? உங்­க­ளு­டைய வேட்­பா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">260 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பாதாள சாக்­க­டைத் திட்­டம் கொண்டு வந்­தது யார்? நம்ம ராஜா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">75 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் முதல்­வ­ரின் கிரா­மச் சாலை­கள் மேம்­பாட்­டுத் திட்­டம் மூலம் இன்று 200 சாலை­கள் இந்­தத் தொகுதி முழுக்­கச் சீர­மைப்பு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மன்­னார்­குடி தலைமை மருத்­து­வ­ம­னை­யில் இன்று 20 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு புதிய ஐந்து மாடிக் கட்­டி­டம் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது அவ­ரு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிதி­யில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">124 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ரிங் ரோடு முதற்­கட்­டப் பணி­கள் தொடங்­கப்­பட்­டு­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆலங்­கோட்­டை­யில் 2,000 மக­ளி­ருக்கு வேலை­வாய்ப்பு வழங்­கு­கின்ற வகை­யில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு ஜவு­ளிப் பூங்­காவை இந்­தத் தொகு­திக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சுமார் 12 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு டிஜிட்­டல் பார்க் இந்­தத் தொகு­திக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">170 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், நீடா­மங்­க­லம் ரயில்வே மேம்­பா­லம், ரயில்வே ஓவர் பிரிட்ஜ் கொண்டு வந்­துள்­ளார். புதிய மக­ளிர் கல்­லூரி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மூன்று கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு மினி ஸ்டேடி­யம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டத்­தின் மூலம் 40 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு 1,350 வீடு­கள் இந்­தத் தொகுதி முழுக்­கக் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மூவா­நல்­லூ­ரில் 22 கோடி­யி­லும், ஆத்­திக்­கோட்­டை­யில் 9 கோடி­யி­லும் இன்று நெல் சேமிப்­புக் கிடங்­கு­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மன்­னார்­குடி மதுக்­கூர் சாலை இன்று 24 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு விரி­வு­
ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மன்­னார்­குடி ராஜ­கோ­பா­ல­சாமி திருக்­கோ­வி­லுக்கு இன்று 16 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு திருக்­கோ­வில் பணி­கள் நடந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் சில கோரிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வரும்­போதே சொல்­லி­விட்­டார். அண்ணே மீண்­டும் நாம்­தான் ஆட்சி அமைக்­கப்­போ­கின்­றோம். மீண்­டும் நம் தலை­வர்­தான் முத­ல­மைச்­ச­ராக போகின்­றார். என் தொகு­திக்கு இன்­னும் சில கோரிக்­கை­கள் எல்­லாம் இருக்­கின்­றது. இந்த கோரிக்­கை­க­ளை­யெல்­லாம் நிறை­வேற்றி தர­வேண்­டும் என்று பேப்­பர் கொடுத்து விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நியோ டைடல் பார்க், சிறப்பு உணவு பூங்கா அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">புதி­தாக கட்­டப்­பட்டு வரும் மன்­னார்­குடி டிஜிட்­டல் நூல­கத்­தில் அரசு தேர்­வா­ணைய தேர்­வு­க­ளுக்கு பயி­லும் மாணவ, மாண­வி­க­ளுக்­கான பயிற்சி மையம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாவட்ட அரசு தலைமை மருத்­து­வ­ம­னை­யில் கிரிட்­டி­கல் கேர் பிரிவு அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அலு­வ­ல­கத்­தில் தனி­யார் வேலை­வாய்ப்பு சிறப்பு தக­வல் மையம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பள்ளி மாண­வர்­க­ளுக்கு அறி­வி­யல் பூங்கா அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மின்­னும் மன்னை ஸ்மார்ட் டவுன் திட்­டத்­தின் கீழ் நக­ரப்­ப­கு­தி­களை கண்­கா­ணிக்­கும் வகை­யில் ஏஐ தொழில்­நுட்­பத்­து­டன் கண்­கா­ணிப்பு கேமரா அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நிலத்­தடி நீரில் உப்­புத் தன்மை அதி­க­மாக இருக்­கக் கூடிய கிரா­மங்­க­ளில் சுத்­த­மான தண்­ணீர் வழங்க சிறப்­புத் திட்­டம்.       இந்தகோரிக்­கை­க­ளை­யெல்­லாம் வைத்­தி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவற்­றை­யெல்­லாம் செய்து கொடுக்க வேண்­டும் என்­றால், வாக்­கு­று­தி­கள் எல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றால் நீங்­கள் எனக்கு ஒரு வாக்­கு­றுதி கொடுக்க வேண்­டும். ஜெயிக்க வைத்­து­வி­டு­வீர்­களா? ராஜாவை ஜெயிக்க வைத்­து­வி­டு­வீர்­களா? அந்த வாக்­கு­று­தியை நீங்­கள் காப்­பாற்­றி­னீர்­கள் என்­றால், நான் உங்­க­ளுக்­குக் கொடுக்­கக்­கூ­டிய வாக்­கு­றுதி இவர் வைத்­தி­ருக்­கும் அனைத்­துக் கோரிக்­கை­க­ளை­யும் நிச்­ச­யம் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ரு­டைய பார்­வைக்கு எடுத்­துக்­கொண்டு போய் நிச்­ச­யம் செய்து கொடுப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். கடந்த ஐந்து வரு­டத்­தில் நம்­மு­டைய தலை­வர் சொன்ன வாக்­கு­றுதி எல்­லாம் செய்து காட்­டி­யி­ருக்­கி­றார். உதா­ர­ணத்­திற்கு இரண்டு மூன்று மட்­டும் சொல்ல விரும்­பு­கி­றேன். ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் நம்­மு­டைய தலை­வர் போட்ட முதல் கையெ­ழுத்து என்ன? மக­ளிர் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்று சொன்­னோம். செய்து காட்­டி­னோமா? இன்று ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் மாதம் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரைக்­கும் இந்த கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்­கள், சேமிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே மாதிரி குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­திற்கு வர வேண்­டும், படிக்க வேண்­டும், பசி­யோடு படிக்­கக்­கூ­டாது என்று இன்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். 20 லட்­சம் குழந்­தை­கள் ஒவ்­வொரு நாளும் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சரி பள்­ளிக்­கூ­டத்­திற்கு வர வைத்­து­விட்­டோம், கல்­லூ­ரிக்கு வர வைப்­போம் என்று கல்வி உத­வித் தொகை­யாக மாதம் 1,000 ரூபாய் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் வழங்­கு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சமீ­பத்­தில் மூன்று மாதத்­திற்கு முன்­னால், 10 லட்­சம் கல்­லூரி மாண­வ-­மா­ண­வி­க­ளுக்கு இல­வச லேப்­டாப் திட்­டத்தை அறி­வித்து, ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தி­ருக்­கி­றது நம்­மு­டைய அரசு. இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து முடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம். கடந்த மூன்று வரு­ட­மாக ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அதி­மு­க­வும், பாஜ­க­வும் முயற்சி செய்­தார்­கள். தேர்­தல் கார­ணங்­காட்டி மூன்று மாதம் நிறுத்­து­வோம் என்று நீதி­மன்­றத்­திற்­குப் போனார்­கள். ஆனால் நம்ம தலை­வர் என்ன செய்­தார்? “நான் 1000 ரூபாய் கொடுக்­கி­றதை நிறுத்­து­கி­றாயா? இப்­போது நிறுத்து பார்ப்­போம்” என்று சொல்லி 5000 ரூபாய் கொடுத்­தாரா இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள்... பிப்­ர­வரி மாதம், மார்ச் மாதம், ஏப்­ரல் மாதம் மூன்று மாதத்­திற்­குச் சேர்த்து 3000, கோடைக்­கா­லச் சிறப்பு நிதி 2000 என்று 5000 ரூபாய் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் கொடுத்­தார். முத­ல­மைச்­சர் காலை­யில் ஆறரை மணிக்கு வங்­கி­யில் பணம் போட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது அதே மாதிரி வரு­கின்ற 23-ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்கு போய், வாக்­குப்­பெட்­டி­யிலே மூன்­றா­வது பெயர் டி.ஆர்.பி. ராஜா என்று இருக்­கும். அவர் பெய­ருக்கு நேராக உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். அதிலே வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­திலே ஜெயிக்க வைத்து, வாக்­குப்­பெட்­டி­யிலே மூன்­றா­வது பெயர், ஆனால் வாக்கு எண்­ணிக்கை அன்று முதல் இடத்­திற்கு டி.ஆர்.பி.ராஜா­வி­னு­டைய பெயர் வரும். நிச்­ச­யம் செய்து கொடுப்­பீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சில வாக்­கு­று­தி­க­ளை­யும் கொடுத்­தி­ருக்­கி­றோம், அதை­யும் ஞாப­கப்­ப­டுத்­து­கி­றேன். கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை இப்­போது 1000 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­து­விட்­டார், மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­யப்­போ­வது உறுதி. ஆட்சி அமைந்­த­வு­ட­னேயே மக­ளிர் உரி­மைத் தொகை 1000 இல்லை, 2000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கல்வி ஊக்­கத்­தொகை 1000 இல்லை, 1500-ஆக உயர்த்­தித் தரு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் இல்லை, எட்­டாம் வகுப்பு வரைக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே மாதிரி முதி­யோர் உத­வித் தொகை 1200 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம், அதை உயர்த்தி 2000 ரூபாய் தரு­வேன் என்று தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">35 லட்­சம் இல­வச லேப்­டாப் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து வரு­டத்­தில் 35 லட்­சம் கல்­லூரி மாண­வ-­மா­ண­வி­க­ளுக்கு இல­வச லேப்­டாப் திட்­டம் கொடுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு, வீடு இல்­லா­த­வர்­க­ளுக்கு எல்­லாம் வீடு ஒதுக்­கித் தரப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­ய­மான வாக்­கு­றுதி மக­ளி­ருக்­குத் தெரிந்­தி­ருக்­கும். தலை­வர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ரான உடனே அனைத்து மக­ளிர் கையி­லும் 8000 ரூபாய் தலை­வர் அவர்­கள் கொடுத்­து­வி­டு­வார்­கள். அந்த 8000 ரூபாயை நீங்­கள் உங்­கள் வீட்­டுக்கு என்ன தேவையோ, என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவையோ அதை நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம் என்­கிற அந்­தத் திட்­டத்­தை­யும் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இதெல்­லாம் நடை­பெற வேண்­டும் என்­றால் வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­திலே உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்­துச் சகோ­த­ரர் டி.ஆர்.பி. ராஜா அவர்­களை ஜெயிக்க வைத்து, நீங்­கள் சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்பி வையுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொன்று ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள், நீங்­கள் ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை, நீங்­கள் ஒரு எம்.எல்.ஏ.-வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை... நிச்­ச­யம் நீங்­கள் ஜெயிக்க வைக்­கப்­போ­வது உறுதி. ராஜா அவர்­கள் அமைச்­ச­ரா­கப் போவது உறுதி. அப்­போது அவர் அமைச்­ச­ராக இருக்­கும்­போது என்­னை­யும் கொஞ்­சம் கண்­டுக்­கச் சொல்லி சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உரி­மை­க­ளுக்­குக் குரல் கொடுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்ம தலை­வர் என்ன சொல்­கி­றார் ஆரம்­பத்­தி­லி­ருந்தே? இந்­தத் தேர்­தல் டெல்லி அணி Vs தமிழ்­நாடு அணி. தமிழ்­நாடு அணி நாம்­தான். டெல்லி அணி யார்? மோடி தலை­மை­யிலே இருக்­கக்­கூ­டிய ஒரு அடி­மைக் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் மீண்­டும், மீண்­டும் சொல்­கின்­றேன். எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களே, நீங்­கள் ஒரு எதிர்க்­கட்­சித் தலை­வர், தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர், தய­வு­செய்து மோடி­யி­னு­டைய அடி­மை­யாக இருக்­கா­தீர்­கள். தமிழ்­நாட்டு உரி­மை­க­ளுக்­குக் குரல் கொடுங்­கள். நீங்­கள் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போ­து­தான் தமிழ்­நாட்­டுக்­குள்ளே நீட் தேர்வு வந்­தது. நீங்­கள் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போ­து­தான் தமிழ்­நாட்­டுக்­குள்ளே உதய் மின் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். அம்­மை­யார் ஜெய­ல­லிதா உயி­ரோடு இருக்­கும்­போது தமிழ்­நாட்­டுக்­குள்ளே வர­வில்லை. ஏன் வர­வில்லை? அந்த அம்­மா­வா­வது கொஞ்­ச­மா­வது குரல் கொடுப்­பார்­கள், உரி­மைக்­கா­கக் குரல் கொடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் 2.0 ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவர் ஒரு முதல்­தர அடிமை. நாம் முரட்டு பக்­தர்­கள் பார்த்­தி­ருக்­கி­றோம், முரட்­டுத் தொண்­டர்­கள் பார்த்­தி­ருக்­கி­றோம், எங்­கே­யா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா அம்மா. ஒரு முரட்டு அடி­மையை? இவர்­தான் மோடி­யி­னு­டைய நம்­பர் ஒன் முரட்டு அடிமை என்று சொன்­னேன், அதிலே கோபம் வந்­து­விட்­டது அவ­ருக்கு. கண்­ட­படி திட்­டு­கி­றார். செத்­துப் போ என்று சொல்­லி­விட்­டார். என் உயிரை வாங்­கு­கின்­றான் அவன் இருந்து என்று. நான் அதைப் பற்றி எல்­லாம் கவ­லைப்­ப­ட­வில்லை. அவர் நீண்ட ஆயு­ளோடு இருக்க வேண்­டும், அவர்­தான் அ.தி.மு.க.-வினு­டைய நிரந்­த­ரப் பொதுச்­செ­ய­லா­ள­ரா­க­வும் இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் நமக்கு வச­தி­யாக இருக்­கும். அவர் இருந்து நம்­மு­டைய தலை­வ­ரு­டைய திரா­விட மாடல் 2.0 ஆட்சி செய்­கின்ற சாத­னை­களை அவர் பார்க்க வேண்­டும். ஆனால் எனக்கு என்ன தெரி­யுமா சொன்­னார்? “உத­ய­நி­திக்கு என்ன அனு­ப­வம் இருக்­கி­றது? எந்த அனு­ப­வ­முமே கிடை­யாது அவ­ருக்கு” என்று சொல்­லி­விட்­டார். ஆமாம், எனக்கு இந்த அனு­ப­வம் எல்­லாம் கிடை­யா­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பத­விக்­காக, பொறுப்­புக்­காக யார் காலை­யும் போய் பிடிக்­கின்ற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. சங்கி கூட்­டத்­தி­டம் பயப்­ப­டு­கின்ற அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. எப்­பொ­ழு­தும் மக்­க­ளோடு மக்­க­ளாக நின்று மக்­க­ளு­டைய உரி­மைக்­கா­கக் குரல் கொடுப்­ப­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது என்ன சொல்­கின்­றார். ஆமாம் நான் விழுந்­தேன் இப்போ என்ன? அந்த அம்மா எனக்கு பதவி கொடுத்­தாங்க. பொறுப்பு கொடுத்­தாங்க. நான் விழுந்­தேன். நான் என்ன சொல்­கின்­றேன். நீங்­கள் விழுந்­தது தவ­றில்லை. விழுந்த பிறகு, நீயா என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னாய்? என்று அந்த அம்­மா­வைப் பார்த்­துக்  கேட்டு காலை வாரி­விட்­டீர்­களே. இதைத்­தான் நான் சொன்­னேன். இப்­போது நாம் அமை­தி­யாகி விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது சசி­கலா அம்மா உள்ளே போட்­டிக்கு வந்­து­விட்­டார்­கள். இப்­போது அவர்­கள் கேட்­கி­றார்­கள், “அந்­தத் தம்பி சொல்­கி­ற­தெல்­லாம் சரி­தானே? நீ காலில் விழுந்­தது உண்­மை­தானே?” வீட்­டில் ஒரு நாய்க்­குட்­டிக்கு நான்கு பிஸ்­கட் போட்­டால் கூட காலைச் சுற்றி நான்கு நாள் நன்­றி­யாக இருக்­கும். இதெல்­லாம் நான் சொல்­ல­வில்லை, அந்த அம்மா சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­பொ­ழுது அந்த அம்­மா­வைக் கட்­சி­யிலே சேர்த்­துக்­கொள்­ளுங்­கள் பார்ப்­போம்? சேர்த்­துக்­கொள்ள மாட்­டார். ஏன் தெரி­யுமா? அவர் முதல்­தர துரோகி. ஜெய­ல­லிதா அம்மா இருக்­கின்ற வரைக்­கும் அந்த அம்மா கால். அந்த அம்மா இறந்த பிறகு சசி­கலா அம்மா கால். அந்த அம்மா சிறைக்­குப் போன­தற்கு அப்­பு­றம் டி.டி.வி. தின­க­ரன் கால். அதற்­கப்­பு­றம் என்ன ஆனது? இப்­போது டெல்­லிக்­குப் போய் நான் மோடி காலை­தான் பிடித்­துக்­கொண்டு தொங்­கு­வேன் என்று தொங்­கு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த அடி­மைக் கூட்­டத்தை இந்­தத் தேர்­த­லோடு விரட்டி அனுப்ப வேண்­டும். எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் எல்லா இடத்­தி­லும் இரண்டு விர­லைக் காட்டி ஓட்­டுக் கேட்­கி­றா­ரல்­லவா? நீங்­கள் அவ­ரு­டைய சின்­னத்­திற்கு ஓட்­டுக் கேட்­கி­றார் என்று நினைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றீர்­களா?  கிடை­யாது... அடுத்த முறை கூர்ந்து கவ­னி­யுங்­கள், “நான் ஏற்­க­னவே 10 முறை தோற்­று­விட்­டேன், இந்த முறை 11-வது முறை­யாக என்­னைத் தோற்­க­டித்து விடுங்­கள்” என்­று­தான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எப்­படி அவர் கூட்­டணி வைத்­தி­ருக்­கின்­றார். யார், யாரை­யெல்­லாம் கூட்டி வந்­தி­ருக்­கின்­றார்? நான்கு மாதத்­திற்கு முன்­னர் யார், யார் என்ன சொன்­னாங்க? ஞாப­கம் இருக்கா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எடப்­பாடி பழ­னிச்­சா­மி­யோட கூட்­டணி வைக்­க­ற­துக்கு பதி­லாக என் வீட்­டில் நாலு முழம் கயிற்­றில் தூக்­கில் தொங்கி விடு­வேன்னு ஒருத்­தர் சொன்­னார். அவ­ரைத்­தான் கூட்­ட­ணிக்கு கூட்­டி­கிட்டு வந்­தி­ருக்­கின்­றார்.       இந்த கூட்­ட­ணியை இந்த தேர்­த­லோடு அனுப்பி விடுங்­கள்.   நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில், ராஜா­வுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்­று­ மு­டிவு செய்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சங்­கி­கள் கூட்­டம் -அடி­மைக் கூட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய ஒரே வேலை, ஒரே குறிக்­கோள், ஒவ்­வொரு வீடாக ஏறி இறங்கி ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள். ஏன் திமு­க-­வுக்கு ஓட்­டுப் போட வேண்­டும்? ஏன் ராஜாவை ஜெயிக்க வைக்க வேண்­டும்? என்­னென்ன திட்­டங்­கள் வரும்? மீண்­டும் அடி­மைக் கூட்­டத்­தி­ட­மும், சங்­கி­கள் கூட்­டத்­தி­ட­மும் தமிழ்­நாடு போய்­விட்­டது என்­றால், தமிழ்­நாட்­டைப் பின்­னோக்கி எடுத்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்­கள். எல்லா உரி­மை­க­ளை­யும் விட்­டுக்­கொ­டுத்து விடு­வார்­கள். மாநில உரி­மை­கள் எல்­லாம் போய்­வி­டும் என்­கிற பிரச்­சா­ரத்­தைச் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் ராஜா அவர்­கள் ஜெயிப்­பது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நானும் ஒரு வேட்­பா­ளர். நான் அவ்­வப்­போது மறந்­து­வி­டு­கி­றேன், நீங்­கள்­தான் ஞாப­கப்­ப­டுத்­து­கி­றீர்­கள் எனக்கு. நானும் சேப்­பாக்­கம் - திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யிலே நிற்­கி­றேன். இதை ஒருத்­தன் சொல்­கி­றான். நான் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கே­ணின்னு ரெண்டு தொகு­தி­யில் நிற்­கி­றேன்னு சொல்­கி­றான். அவர் மட்­டும் இரண்டு தொகு­தி­யில நிற்­க­லா­மான்னு கேட்­கி­றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவ­னி­டம் எல்­லாம் பேசவே முடி­யாது. நான் என் தொகு­திக்கு ஒரே ஒரு நாள்­தான் வாக்கு கேட்­டுப் போயி­ருக்­கி­றேன். அங்கே எப்­ப­டி­யும் ஜெயிப்­போம் என்று நம்­பிக்கை இருக்­கி­றது. என் தொகு­தியை விட்­டு­விட்டு, நான் மன்­னார்­கு­டிக்கு வந்து டி.ஆர்.பி. ராஜா­வுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஏன் வாக்கு கேட்­கி­றேன் என்­றால், எனக்கு என் வெற்­றியை விட டி.ஆர்.பி. ராஜா­வி­னு­டைய வெற்றி எனக்கு மிக மிக முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப்பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தலை­வ­ரு­டைய மக­னாக இருந்து கேட்­கி­றேன், டாக்­டர் கலை­ஞ­ரு­டைய பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து டி.ஆர்.பி.ராஜா அவர்­களை அதி­க­மான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் ஜெயிக்க வைத்து சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்­புங்­கள். நிச்­ச­யம் உங்­கள் தொகு­திக்கு என்­னென்ன தேவையோ, என்­னென்ன திட்­டங்­கள் தேவையோ, உங்­கள் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் என்­னென்ன தேவையோ அதை ஒவ்­வொன்­றை­யும் அவர் கண்­டிப்­பா­கச் செய்து கொடுப்­பார் என்­கிற வாக்­கு­று­தியை நான் கொடுக்­கி­றேன். உங்­கள் அன்­புக்கு வர­வேற்­புக்கு நன்றி, நன்றி. வாக்­க­ளிப்­பீர் உத­ய­சூ­ரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழகஇளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>