<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 16 2026 03:39:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260416T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="16042026-CHN-06" position.sequence="06" ex-ref="16042026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">ஓனர் பா.ஜ.க.வை காப்பாற்ற- – தொடர்ந்து</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் பழனிசாமி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">தருமபுரியில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">5–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. செய்வது ‘அரசியல் பிசினஸ்’! எல்லோரும் வளர வேண்டும் என்பதுதான் ‘திராவிட மாடலின் சக்சஸ்’!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="4_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பிற்­போக்­குத்­த­னம் எடு­ப­டாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், நம்­மு­டைய திரா­விட மாட­லில் வளர்ச்சி என்­பது, எல்­லோ­ருக்­கு­மா­னது! யாரோ ஒரு சிலர் மட்­டும் வளர்ந்­தால், அது பிசி­னஸ்! எல்­லோ­ரும் வளர வேண்­டும், எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்க வேண்­டும் என்று உழைப்­ப­து­தான், திரா­விட மாட­லின் சக்­சஸ்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான், தமிழ்­நாடு முழு­வ­தும் பர­வ­லான வளர்ச்­சி­யைக் கொண்டு போகி­றோம். எல்லா மாவட்­டங்­க­ளி­லும் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­கி­றோம்! நம்­மு­டைய தரு­ம­பு­ரி­யில்­கூட சிப்­காட் தொழிற்­பூங்­கா­வின் முதல் கட்­டம் தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் தரு­ம­புரி மாவட்­டத்­தில் மட்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­ய­மான் கோட்­டம் புதுப்­பிப்பு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒகே­னக்­கல் சுற்­றுலா மேம்­பாடு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தரு­ம­புரி மாவட்­டத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிறை­வேற்­றப்­பட்ட திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தரு­ம­புரி அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் ஒருங்­கி­ணைந்த பேறு­கால அவ­சர சிகிச்சை மற்­றும் சிசு தீவிர சிகிச்சை பரா­ம­ரிப்பு மையம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேருந்து வச­தியே இல்­லாத 8 கிராம மக்­கள் போக்­கு­வ­ரத்து வசதி பெற, வத்­தல்­ம­லைக்கு முதன்­மு­த­லா­கப் பேருந்து வசதி செய்து தரப்­பட்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆயி­ரத்து 297 கோடியே 40 இலட்­சம் ரூபாய்க்­குச் சாலைப்­ப­ணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆயி­ரத்து 714 கோடியே 4 லட்­சம் ரூபா­யில் வளர்ச்­சித் திட்­டப்­ப­ணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொதுப்­ப­ணித்­துறை சார்­பாக 30 கோடியே 8 இலட்­சம் ரூபாய் மதிப்­பி­லான பணி­கள் நடந்­தி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுற்­று­லாத்­துறை சார்­பாக 19 கோடியே 81 இலட்­சம் ரூபாய் மதிப்­பி­லான பணி­கள் நடந்­தி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நார்த்­தம்­பட்டி ஊராட்­சி­யில் மர­க­தப் பூஞ்­சோலை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழங்­குடி மக்­கள் வாழும் பகு­தி­க­ளில் தண்­ணீர் தொட்­டி­கள் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் சொல்­லிக்­கொண்டே போக­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வ­ள­வை­யும் செய்­து­கொ­டுத்­தி­ருப்­ப­தால்­தான் உங்­க­ளி­டம் உரி­மை­யோடு வாக்­குக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021–இல் உங்­கள் ஆத­ர­வோடு தமிழ்­நாட்டை மீட்­டெ­டுத்து, இன்­றைக்கு இந்­தி­யா­வில் நம்­பர் ஒன் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை உயர்த்­தி­யி­ருக்­கி­றோம். ஏன், இந்­தி­யா­வுக்கே வழி­காட்­டும் மாடல் திரா­விட மாடல்­தான் என்று சொல்­லும் அள­வுக்கு, மாநி­லத்­தையே தலை­நி­மிர வைத்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முதல்­வர் பொறுப்­பேற்று முதல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கையெ­ழுத்தே பெண்­க­ளுக்­கா­கத்­தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல் நாள் முதல் கையெ­ழுத்­தி­லேயே மக­ளிர் எல்­லோ­ரும் கட்­ட­ண­மில்­லா­மல் விடி­யல் பய­ணம் செய்­ய­லாம் என்று உத்­த­ர­விட்­டேன். அதைத் தொடர்ந்து, திரா­விட மாடல் ஆட்­சி­யில் செய்­யப்­பட்­டி­ருக்­கும் திட்­டங்­க­ளைத் தலைப்­புச் செய்­தி­க­ளாக நான் சொல்­கி­றேன்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு ஒவ்­வொரு மாத­மும் ஆயி­ரம் ரூபாயை வழங்­கிக்­கொண்­டி­ருக்­கும், “கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்”. திரா­விட மாடல் 2.0 ஆட்சி வந்­த­தற்­குப் பிறகு, உங்­க­ளு­டைய உரி­மைத்­தொகை, இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சுப் பள்­ளி­யில் படித்து, கல்­லூரி செல்­லும் மாண­வ–­மா­ண­வி­க­ளுக்கு, மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும், புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம்! இனி இந்­தத் தொகை, ஆயி­ரத்து 500 ரூபா­யாக உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">19 இலட்­சம் பள்ளி மாண­வர்­கள் சூடாக – சுவை­யா­கச் சத்­தான உணவை வழங்­கும் “காலை உண­வுத் திட்­டம்”! இந்­தத் திட்­டத்தை இப்­போது ஐந்­தாம் வகுப்பு வரை வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம். 2.0 ஆட்சி வந்­த­தற்கு பிறகு எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னு­யிர் காப்­போம் – நம்­மைக் காக்­கும் 48,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாதம் பாது­காப்­போம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­யம் காப்­போம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிறு­நீ­ர­கப் பாது­காப்­புத் திட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தோழி விடுதி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் கனவு இல்­லம் என்று பெரிய பட்­டி­யலே இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின் உரி­மை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">விட்­டுக்­கொ­டுத்­த­து­தான் 
பழ­னி­சாமி சாதனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இப்­ப­டிச் சொல்­லிக் கொள்­ளும் அள­விற்கு பழ­னி­சா­மி­யி­டம் சாத­னை­கள் என்று ஏதா­வது இருக்­கி­றதா? ஏதா­வது ஒன்று சொல்ல முடி­யுமா? சூடு சுரணை இல்­லா­மல், தமிழ்­நாட்­டின் உரி­மை­களை விட்­டுக் கொடுத்து, அடி­மை­யாக இருப்­ப­து­தான் தன்­னு­டைய வாழ்­நாள் பெரு­மை­யாக அவர் நினைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது, இந்­தச் சூழ்­நி­லை­யில் தமிழ்­நாட்­டுக்கு எவ்­வ­ளவு பெரிய ஆபத்து வந்­தி­ருக்­கி­றது என்று உங்­கள் எல்­லோ­ருக்­கும் தெரி­யும்… தொகுதி மறு­சீ­ர­மைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதா­வது, இந்­திய விடு­த­லைக்­குப் பிறகு, இந்த நாட்­டில் பசி­யும் – வறு­மை­யும் அதி­க­மாக இருக்­கி­றது. இதைச் சரி செய்ய வேண்­டும் என்­றால், மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று சொன்­னார்­கள். அதில் இருக்­கும் நியா­யத்தை உணர்ந்து, நம்­மு­டைய தமிழ்­நாட்­டி­லும் – இன்­னும் பல மாநி­லங்­க­ளி­லும் குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டத்தை முறை­யா­கச் செயல்­ப­டுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது என்­ன­வென்­றால், உங்­கள் மாநி­லத்­தின் மக்­கள்­தொ­கைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறு­சீ­ர­மைப்­புச் செய்­யப் போகி­றோம், உங்­க­ளுக்­குக் கூடு­த­லாக எம்.பி. சீட் கிடைக்­கும் என்று சொல்­கி­றார்­கள்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்மை என்­ன­வென்­றால், இதே கால­கட்­டத்­தில், மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­தா­மல் இருக்­கும் சில மாநி­லங்­க­ளுக்­குத்­தான், விகி­தாச்­சா­ரப்­படி அதிக இடம் கிடைக்­கப் போகி­றது! இத­னால், நாடா­ளு­மன்­றத்­தில் நம்­மு­டைய குரல் வலு­வி­ழந்து போய்­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொகுதி மறு­சீ­ர­மைப்­பால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நமக்­குத்­தான் பெரும் ஆபத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய எம்.பி.க்களுக்­குப் பவர் இல்லை என்­றால், டெல்லி அதி­கார வர்க்­கம் தமிழ்­நாட்­டைப் பற்­றிச் சிந்­திக்­குமா? நமக்கு எந்­தத் திட்­ட­மா­வது கிடைக்­குமா? தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து பிர­த­மர் உரு­வாக வேண்­டும் என்று நாம் எதிர்­பார்க்­கவே முடி­யாது. சொந்த நாட்­டுக்­குள்­ளேயே இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக மாற்­றப்­ப­டும் ஒரு கொடு­மையை அனு­ம­திக்­க­லாமா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆபத்­து­தான், தொகுதி மறு­சீ­ர­மைப்பு! இதற்கு எதிர்ப்பு தெரி­விக்க வேண்­டும் என்­று­தான் நாளைக்­குத் தமிழ்­நாடு முழு­வ­தும் கருப்­புக் கொடி ஏற்­றப் போகி­றோம். எல்­லோ­ரும் வீடு­க­ளில் கருப்­புக் கொடி ஏற்றி, டெல்­லி­யின் ஆண­வத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்­கத் தயா­ரா­கி­விட்­டீர்­களா? உங்­கள் வீட்டு வாச­லில், தொகுதி மறு­சீ­ர­மைப்­புக்கு எதி­ராக முழக்­க­மி­டத் தயாரா? தமிழ்­நாட்­டில் நாம் இந்­தப் போராட்­டத்தை நாளை நடத்­தும்­போது டெல்­லி­யில் நம்­மு­டைய எம்.பி.க்கள் நாடா­ளு­மன்­றத்­தில் போரா­டிக் கொண்­டி­ருப்­பார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் வேலை நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. அனைத்து எம்.பி.க்களும் தொகு­தி­யில் ஆங்­காங்கே இருந்­தார்­கள். அனை­வ­ரும் சென்­று­விட்­டார்­கள். மணி மட்­டும்­தான் இருக்­கி­றார். அவ­ரும் நாளை காலை சென்­று­வி­டு­வார். ஒரு­வர்­கூட இருக்­கக் கூடாது என்று சொல்­லி­விட்­டேன். தேர்­தல் எல்­லாம் அதற்­குப்­பி­ற­கு­தான், இது­தான் நமக்கு முக்­கி­யம். இது­தான் நமக்கு சுய­ம­ரி­யாதை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நாடா­ளு­மன்­றத்­தில் நமது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உரி­மைக்­கு­ரல் அடங்­கக் கூடாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாளைக்கு நாம் குரல் எழுப்­பத் தவ­றி­விட்­டால், நம்­மு­டைய குர­லுக்கு எப்­பொ­ழு­துமே மதிப்பு இருக்­காது! இந்­தப் போராட்­டத்­தில் வெல்­லும் வரை நம்­மு­டைய உரி­மைக்­கு­ரல் அடங்­கக் கூடாது! டெல்லி அடங்­கும்­வரை நாம் அடிக்க வேண்­டும்! நாம் அடிக்­கும் அடி­யில் திமி­ரெ­டுத்த பா.ஜ.க. அடங்­கியே ஆக வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சாமி அவர்­களே… இது தமிழ்­நாட்­டுக்­கான போர்! இதி­லா­வது கொஞ்­சம் சுய­ம­ரி­யா­தை­யோடு நடந்து கொள்­ளுங்­கள்! அடி­மை­யா­க­வும், துரோ­கி­யா­க­வும் இருப்­பது பழ­னி­சா­மிக்கு மட்­டும் பழக்­க­மில்லை; அவ­ரோடு வரு­கி­ற­வர்­க­ளின் இலட்­ச­ணத்­தை­யும் பாருங்­கள்… துரோ­கி­க­ளின் மொத்­தக் கூடா­ர­மாக உரு­வா­கி­யி­ருப்­பது N.D.A.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒவ்­வொ­ரு­வ­ரின் இலட்­ச­ணத்­தை­யும் புட்டு புட்டு வைக்­கட்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­வர் – ஒவ்­வொரு முது­கா­கக் குத்­தி­விட்டு, இப்­போது தமிழ்­நாட்­டின் முது­கில் குத்த தன்­னு­டைய முது­கைப் பா.ஜ.க.வுக்கு வாட­கைக்கு விட்­டி­ருக்­கும் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொ­ரு­வர், உங்­க­ளுக்­கெல்­லாம் அவரை நன்­றா­கத் தெரி­யும். சமூ­க­நீ­திப் போராளி என நான் பெரி­தும் மதிக்­கும் மருத்­து­வர் அய்யா ராம­தாசை வேத­னை­யில் தவிக்­க­விட்­டு­விட்டு, ஊழல் வழக்­குக்­குப் பயந்து, கூட்­டணி அமைத்­து­விட்டு, உலக மகா உத்­த­மர் போன்று உங்­களை ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றாரே… அவ­ரைப் பற்றி ஒரு வார்த்­தை­கூட நான் பேச விரும்­ப­வில்லை.. அவ­ரைப் பற்றி பேசி­னால் என்­னு­டைய தகுதி குறைந்­து­வி­டும். ஏனென்­றால்… மருத்­து­வர் அய்­யாவே இவ­ரைப் பற்றி என்ன பேசு­கி­றார்? அ…சி…ங்…­க…ம்… என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அய்யா ராம­தாசு நடத்­திய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சமூக நீதிப் போராட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூ­க­நீ­திக்­காக இந்த மண்­ணில் நடந்த மிக முக்­கி­ய­மான போராட்­டம் 1987 போராட்­டம்! அய்யா ராம­தாசு அவர்­கள் தலை­மை­யில் நடந்த போராட்­டம். அ.தி.மு.க. அர­சின் துப்­பாக்கி குண்­டு­க­ளுக்கு 21 தியா­கி­கள் பலி­யா­னார்­கள். ஆனால், 1989–இல் நம்­மு­டைய தி.மு.க. ஆட்­சிக்கு வந்­த­வு­டனே, தலை­வர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக ஆன  உடனே, சேலத்­துச் சிங்­கம் வீர­பாண்­டி­யார் அவர்­கள் மூல­மாக, அய்யா ராம­தாசுஅவர்­க­ளைத் தன்­னு­டைய வீட்­டுக்கே அழைத்து, விவா­தித்து, ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்த 43–ஆவது நாளி­லேயே மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்­கான, 20 விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்டை உரு­வாக்­கிக் கொடுத்த வர­லாற்­றுச்சிறப்­பு­மிக்க முடிவை அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் எடுத்­தார் நம்­மு­டைய கலை­ஞர்,நம்­மு­டைய தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குக் கல்வி, வேலை­வாய்ப்­பில், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்­துப் பிள்­ளை­கள் படித்து, வேலைக்­குச் சென்று முன்­னேற, கலை­ஞர் கொடுத்த இட­ஒ­துக்­கீ­டு­தான் மிக முக்­கி­யக் கார­ண­மாகஅமைந்­துள்­ளது. அந்­தப் போராட்­டத்­தில் உயி­ரி­ழந்த 21 சமூ­க­நீ­திப் போரா­ளி­க­ளுக்கு மணி­மண்­ட­பம் கட்­டி­யி­ருப்­பது யார் தெரி­யுமா? இந்த ஸ்டாலின்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சமூக நீதிக்கு துரோ­கம் செய்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அ.தி.மு.க.வோடு கூட்­டணி துரோ­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், சமூ­க­நீ­திக்­கா­கப் போரா­டிய மக்­கள் மீது துப்­பாக்­கிச் சூட்டை நடத்­தி­யது அ.தி.மு.க. எந்த அ.தி.மு.க.? இதே தரு­ம­பு­ரி­யில் கோகி­ல­வாணி, காயத்ரி, ஹேம­லதா என்று மூன்று அப்­பாவி மாண­வி­களை உயி­ரோடு எரித்­துக் கொன்­றார்­களே, அந்த அ.தி.மு.க. மூன்று மாண­வி­களை எரித்த அ.தி.மு.க. குற்­ற­வா­ளி­களை, விடு­தலை செய்த பழ­னி­சா­மி­யின் கையை ஒரு­பக்­கம் பிடித்­துக் கொண்டு, மறு­பக்­கம் நாடு முழு­வ­தும் இட­ஒ­துக்­கீட்­டுக்கு எதி­ரா­கச் செயல்­ப­டும் பா.ஜ.க. கையை­யும் பிடித்­துக் கொண்டு வரு­கி­றார். அ.தி.மு.க. – பா.ஜ.க.–வுக்­குக் கூஜா தூக்கி, சமூ­க­நீ­திக்கே துரோ­கம் செய்­கி­ற­வர்­தான், அய்யா ராம­தா­சுக்­கும் இன்­றைக்கு துரோ­கம் செய்­த­வர். அத­னால்­தான் N.D.A. கூட்­ட­ணி­யைத் துரோ­கக் கூட்­டணி என்று தரு­ம­பு­ரி­யும் சொல்­கி­றது; ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் சொல்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி, கொள்­கைக் கூட்­டணி! சமூ­க­நீ­தி­யைப் பாது­காக்­கும் கூட்­டணி! மாநில உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்­கும் கூட்­டணி! வஞ்­ச­னை­களை வென்று ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டுக்­கும் வளர்ச்­சி­யைக் கொடுக்­கும் கூட்­டணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சூப்­பர் ஸ்டாரான நமது தேர்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அறிக்­கையை மக்­க­ளி­டம் கூறுங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­கா­கக் கள­மி­றங்­கி­யி­ருப்­பது யார்? சூப்­பர்ஸ்­டார்! சூப்­பர்ஸ்­டார் யார்? “சூப்­பர் ஸ்டாரு… யாருனு கேட்டா… சின்ன குழந்­தை­கள்­கூ­டச் சொல்­லும்.” நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை என்று சொல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதில் என்­னென்ன ஹைலைட்? இங்கே இருக்­கும் மக­ளி­ரைக் கேட்­கி­றேன்.. உங்­கள் அண்­ணன் இந்த ஸ்டாலின் கொடுக்­கப் போகும் கூப்­பன் எவ்­வ­ளவு? எட்­டா­யி­ரம் ரூபாய்! மக­ளிர் எல்­லாம் இப்­போதே வீட்­டுக்கு என்ன புதுப் பொருள் வாங்­க­லாம் என்று டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள்! எங்­குப் பார்த்­தா­லும் இப்­போது இது­தான். இந்­தத் திட்­டத்­தில் எவ்­வ­ள­வுக்­குக் கூப்­பன் தரப் போகி­றோம்! எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொருளை, புதி­ய­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம்; இல்லை என்­றால், பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புதுப் பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் – உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்ட்–ஐ இஷ்­டப்­படி நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம்! யாரி­ட­மும் கேட்க வேண்­டாம். உங்­கள் வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் கேட்­கா­தீர்­கள். கேட்­டால் கன்­பி­யூஸ் பண்­ணி­வி­டு­வார்­கள். ஏதா­வது குழப்­பம் இருந்­தால் அண்­ண­னி­டம் சொல்­லி­வி­டு­வேன் என்று சொல்­லுங்­கள். என்­னி­டம்… நான் பார்த்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, 20 இலட்­சத்­திற்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில், நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உயர்­கல்வி முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்­புப் பெறும் வகை­யில், “நான் முதல்­வன்” திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித்­தொ­கை­யோடு 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தரு­ம­பு­ரி­யில் உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தரு­ம­புரி கிழக்­குத் தொடர்ச்சி மலைப்­ப­ரப்­பில் வரை­ய­றுக்­கப்­பட்ட வன­வி­லங்கு வழித்­த­டங்­க­ளில், தெர்­மல் சென்­சார்­கள் மற்­றும் கேமரா பொறி­க­ளைக் கொண்ட ஏ.ஐ. அடிப்­ப­டை­யி­லான முன்­னெச்­ச­ரிக்கை அமைப்­பு­கள் நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தெற்கு தேய வேண்­டும் என்­ப­து­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பா.ஜ.க.வின் செயல் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டித் தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து முன்­னேற்­றப் பாதை­யில் அழைத்­துக் கொண்டு போக வேண்­டும் என்று நாம் பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், ஒன்­றிய பா.ஜ.க.வின் திட்­டம் என்­ன­வாக இருக்­கி­றது? தெற்கு மறு­ப­டி­யும் தேய வேண்­டும்! இது­தான் அவர்­கள் பிளான்! தொகுதி மறு­சீ­ர­மைப்பு நடத்­தப் போகி­றோம் என்று சொல்லி, ஒருபோரை தொடங்கி இருக்­கி­றார்­கள்! இந்­தப் போரில் நம்­மு­டைய தமிழ்­நாட்­டின் குரலை நெரிக்க நினைக்­கும் பா.ஜ.க.வின் கொட்­டத்தை அடக்க வேண்­டும்! ஒட்­டு­மொத்­தத் தென்­மா­நி­லங்­களை இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்து தூக்கி எறிய நினைக்­கும் பா.ஜ.க.வுக்கு தமிழ்­நாடு கொடுக்­கப் போகும் பதி­ல­டியை அவர்­கள் வர­லாற்­றி­லேயே மறக்­கக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சண்டை செய்ய நான் ரெடி? எனக்­குப் பக்­க­ப­ல­மாக இருக்க நீங்­கள் ரெடியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு, பாப்­பி­ரெட்­டி­பட்டி தொகு­தி­யில் பழ­னி­யப்­பன் அவர்­க­ளுக்­கும், பாலக்­கோடு தொகு­தி­யில் டாக்­டர் செந்­தில்­கு­மார் அவர்­க­ளுக்­கும், அரூர் தொகு­தி­யில் சண்­மு­கம் அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போன்று, தரு­ம­புரி தொகு­தி­யில் டாக்­டர் வி. இளங்­கோ­வன் அவர்­க­ளுக்கு ‘முரசு’ சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும். பென்­னா­க­ரம் தொகு­தி­யில் ஜி.கே.எம். தமிழ்க்­கு­ம­ரன் அவர்­க­ளுக்கு ‘கை’ சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு நீங்­கள் போடும் ஒவ்­வொரு வாக்­கும் தமிழ்­நாட்­டைத் தலை­நி­மிர்ந்து நடை­போட வைக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உங்­கள் வாக்கு தமிழ்­நாட்டை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­நி­மி­ரச் செய்­யும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், தமிழ்­நாடு தலை­நி­மிர்­வது, குனிந்தே பழக்­கப்­பட்ட பழ­னி­சா­மிக்­குப் பிடிக்­க­வில்லை! அத­னால்­தான், அட்­டார்னி ஜென­ரல் மாதிரி, லா பாயிண்ட் பேச வந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் மக­ளிர் இட­ஒ­துக்­கீட்­டுக்கு எதி­ரா­கப் பேசு­கி­றேன் என்று நாக்­கில் நரம்பு இல்­லா­மல் பேசு­கி­றார் பழ­னி­சாமி. எந்த ஸ்டாலி­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­கள்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்­குச் சொத்­து­ரிமை கொடுத்த தலை­வர் கலை­ஞ­ரின் மக­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா! பெண்­கள் சொந்­தக் காலில் நிற்க வேண்­டும் என்று சுய உத­விக்­கு­ழுக்­களை ஆரம்­பித்த தலை­வர் கலை­ஞ­ரின் மக­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா! மாதந்­தோ­றும் மக­ளிர் உரி­மைத்­தொகை வழங்­கும் இந்த ஸ்டாலி­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா! விடி­யல் பய­ணம் கொடுத்த இந்த ஸ்டாலி­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா! புது­மைப்­பெண் திட்­டத்­தில் மாண­வி­க­ளைக் கல்­லூ­ரி­க­ளுக்கு அனுப்­பும் இந்த ஸ்டாலி­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா! பணி­செய்­யும் பெண்­க­ளுக்­கா­கத் தோழி விடு­தி­கள் உரு­வாக்கி அழகு பார்க்­கும் இந்த ஸ்டாலி­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா! காலை உண­வுத் திட்­டம் கொடுத்து, பெண்­க­ளின் சுமை­யைக் குறைத்­தி­ருக்­கும், இந்த ஸ்டாலி­னைப் பார்த்­துப் பேசு­கி­றீர்­களா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சாமி அவர்­களே... உங்­கள் உள்­நோக்­கம் இந்த ஸ்டாலினை வசை­பா­டு­வது கிடை­யாது; உங்­கள் முது­கில் சவாரி செய்து கொண்­டி­ருக்­கும் ஓனர் பா.ஜ.க.வைக் காப்­பாற்­று­வது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் மும்­மொ­ழிக் கொள்­கையை எதிர்க்­க­வில்லை! F.C.R.A.–வை எதிர்க்­க­வில்லை! பொது சிவில் சட்­டத்தை எதிர்க்­க­வில்லை! இப்­போது தமிழ்­நாடே கொந்­த­ளிக்­கும்­போது, தொகுதி மறு­சீ­ர­மைப்­பால் ஏற்­பட்­டி­ருக்­கும் பேரா­பத்­தை­யும் நீங்­கள் எதிர்க்­க­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தேர்­தல் வந்­து­விட்­டால் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­ட­னுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி வந்­து­வி­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி எந்­தப் பிரச்­சி­னை­யி­லும் தமிழ்­நாட்­டுக்­கா­கக் குரல் கொடுக்­காத நீங்­கள், எதற்­கா­கக் கட்சி நடத்­து­கி­றீர்­கள்? எதற்­கா­கக் கூச்­சமே இல்­லா­மல் மக்­க­ளி­டம் வாக்கு கேட்டு வரு­கி­றீர்­கள்? பேசா­மல் பா.ஜ.க. செய்­வ­தற்கு முன்பு, நீங்­களே கட்­சி­யைச் கலைத்­து­விட்டு நேர­டி­யா­கப் பா.ஜ.க.வில் ஐக்­கி­ய­மா­கி­வி­டுங்­கள்! கூச்­சப்­ப­டா­தீர்­கள்! பா.ஜ.க.வின் பீகார் மாடல் உங்­க­ளுக்கு யூஸ்ஃ­புல்­லாக இருக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­குப்­ப­தி­வுக்கு இன்­னும் 7 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. திரா­விட மாடல் 2.0 தொடங்­கு­வ­தற்­கான ‘ஃபைனல் கவுண்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆகி­விட்­டது. தேர்­தல் என்று வந்­து­விட்­டாலே நம்­மு­டைய தி.மு.க–கா­ரர்­க­ளுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி தானாக வந்­து­வி­டும். அது எங்­கி­ருந்து வரு­கி­றது, எப்­படி வரு­கி­றது என்றே தெரி­யாது. ஆனால், பிர­சா­ரத்­திற்­கா­கச் சுற்­றிச் சுழல்­வ­தில் தி.மு.க–கா­ரன் முன்­னால் பம்­ப­ரமே தோற்­று­வி­டும். உடன்­பி­றப்­பு­கள் எல்­லோ­ரும் எலக்‌ஷன் வந்­து­விட்­டால் ‘சக்­தி­மான்’ ஆகி­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த முறை­யும் அப்­ப­டித்­தான் தமிழ்­நாடு முழு­வ­தும் அடிக்­கும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், வீடு வீடாக அலைந்து திரிந்து நம்­மு­டைய உடன்­பி­றப்­பு­கள் உழைக்­கி­றார்­கள். அந்த ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும் இருக்­கும் திசை­நோக்கி நான் வணங்­கு­கி­றேன். தான் MLA ஆக வேண்­டும், அமைச்­சர் ஆக வேண்­டும் என்று இவர்­கள் உழைக்­க­வில்லை. தலை­வர் அறி­வித்­தி­ருக்­கும் வேட்­பா­ளரை வெற்றி பெற வைக்க வேண்­டும், அடிமை ஆட்சி அமை­யா­மல் தடுக்க வேண்­டும், தமிழ்­நாட்­டைப் பா.ஜ.க. அடி­மைப்­ப­டுத்­தா­மல் காப்­பாற்ற வேண்­டும், தமிழ்­நாட்­டுக் குழந்­தை­க­ளின் எதிர்­கா­லம் சிறப்­பாக அமைய வேண்­டும் என்று பாடு­ப­டு­கி­றார்­கள். இப்­ப­டிப்­பட்ட தன்­ன­ல­மற்ற தொண்­டர்­கள் யாருக்­குக் கிடைப்­பார்­கள்! அவர்­கள் அனை­வ­ருக்­குமே என்­னு­டைய சல்­யூட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">200  தொகு­தி­க­ளை­யும் தாண்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நம் வெற்­றியைஉறுதி செய்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இனி ஒவ்­வொரு நாளும் களம் பர­ப­ரப்­பாக இருக்­கும். டி–20 மேட்­சில் முதல் 15 ஓவர் என்­ன­தான் சிறப்­பாக ஆடி­னா­லும், கடைசி 5 ஓவர் நன்­றாக அடித்து ஆடி­னால்­தான் 200 ரன்னை கிராஸ் பண்­ண­மு­டி­யும். இப்­போது எல்­லாம் 230 கிராஸ் பண்­ணும் அள­வுக்கு அதி­ர­டி­யாக ஆட வேண்­டும்! அது­போல், நீங்­கள் எல்­லோ­ரும் அடுத்த 7 நாளும் உழைக்­கக்­கூ­டிய உழைப்­பு­தான், 200 தொகு­தி­க­ளை­யும் தாண்டி வெற்றி பெற்று, ஏழா­வது முறை­யா­கக் கழக ஆட்சி அமை­வதை உறுதி செய்­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய திட்­டங்­க­ளைச் சொல்­லுங்­கள், தேர்­தல் அறிக்கை வாக்­கு­று­தி­க­ளைச் சொல்­லுங்­கள். பெண்­க­ளி­டம் இருக்­கும் பேரா­த­ரவை இன்­னும் பெரு­கச் செய்­யுங்­கள்! மக்­கள் நம் பக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நன்றி! வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>