<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,958,638" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 15 2026 22:19:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260416T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16042026-MDU-04" position.sequence="04" ex-ref="16042026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தமிழ்நாட்டில் குற்றம் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள், விசாரணை நடைபெறுகிறது, நியாயமான தீர்ப்பு கிடைக்கிறது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhispeec_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தூத்­துக்­குடி, ஏப்.15–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தூத்­துக்­குடி மாவட்­டம் விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் மார்­கண்­டே­யனை ஆத­ரித்து, விளாத்­தி­ கு­ளம் பேருந்து நிலை­யம் அரு­கில் தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்டு, பொது­மக்­க­ளி­டம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­கு­கள் சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இங்கு வேட்­பா­ள­ராக நமது முத­ல­மைச்­சர் தேர்ந்­தெ­டுத்து, கைக­ளில் ஒப்­ப­டைத்­துள்ள வெற்றி வேட்­பா­ளர் மார்­கண்­டே­யன். இந்த உச்சி வெயில் நேரத்­தி­லும் உத­ய­சூ­ரி­ய­னுக்­காக வாக்கு கேட்க வந்­தி­ருக்­கும் எங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க இத்­தனை பேர் நின்­றி­ருப்­ப­தைப் பார்க்­கும்­போது, வெற்றி உறுதி என்­ப­தில் எனக்கு எந்­தச் சந்­தே­க­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம்­மு­டைய வேட்­பா­ளர் அழ­கான தமி­ழில் பேசக்­கூ­டி­ய­வர். அதே நேரத்­தில் மக்­க­ளைப் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­ வர். உங்­க­ளு­டைய எல்லா கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தற்­காக பாடு­ப­டக்­கூ­டி­ய­வர்.நீங்­கள் அழைக்­கும் குர­லுக்கு ஓடோடி வந்து, உங்­க­ளோடு நின்று பணி­யாற்­றக்­கூ­டி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தத் தொகு­தி­யின் ஒவ்­வொரு பகு­தி­யி­லும் என்ன பிரச்­சினை உள்­ளது, என்ன தேவை­கள் உள்­ளன, யார் என்ன என்­பது அனைத்­தை­யும் தெரிந்து வைத்­தி­ருக்­கும் ஒரு­வர்­தான் இன்று நம்­மு­டைய வேட்­பா­ள­ராக, நமது முத­ல­மைச்­சர் நமக்­காக அளித்­துள்ள வேட்­பா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்­கும்­போது, உங்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றோம் என்ற உரி­மை­யு­டன் வந்து வாக்கு கேட்­கி­றோம். வேறு யாரும் இதைச் சொல்ல முடி­யாது. ஏனெ­னில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றித் தரும் ஒரே இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதி­முக ஏதா­வது நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்­களா? இல்லை. 2016ஆம் ஆண்­டின் அதி­முக தேர்­தல் அறிக்­கை­யில், 27ஆம் பக்­கத்­தில் எல்லா குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் செல்­போன் வழங்­கு­வோம் என்று கூறி­யி­ருந்­தார் கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அந்த செல்­போனை பெற்­ற­வர்­கள் இந்­தக் கூட்­டத்­தில் யாரா­வது இருக்­கி­றீர்­களா? ஒரு­வ­ரா­வது இருக்­கி­றீர்­களா? வாங்­கி­ய­வர்­களை யாரா­வது அறி­வீர்­களா? தமிழ்­நாடு முழு­வ­தும் கேட்­கி­றேன்—­யா­ருக்­கும் தெரி­ய­வில்லை. இது­தான் அவர்­கள் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும் லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">உதய்மின் திட்டத்தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கையெழுத்திட்ட பழனிசாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் அறிக்­கை­யில் கூறிய எதை­யும் நிறை­வேற்­றா­ மல், எடப்­பாடி பழ­னி­சாமி சுற்றி வந்து “எனக்கு ஓட்டு போடுங்­கள்” என்­றால், எதற்­காக மக்­கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அவர் சொல்­கி­றார்: “நான் ஒன்­றிய அர­சாங்­கத்­து­டன் இணக்­க­மாக இருந்து திட்­டங்­களை கொண்டு வந்­தேன்” என்று. என்ன திட்­டங்­களை கொண்டு வந்­தீர்­கள்? ஒன்­றும் கொண்டு வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீட் தேர்வை கொண்டு வந்து, பல பிள்­ளை­கள் மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு செல்ல முடி­யாத நிலையை உரு­வாக்­கி­னீர்­கள். அதை­யும் தாண்டி, உதய் மின்­திட்­டத்­தில் கையெ­ழுத்­திட்டு, இன்று மின்­கட்­ட­ணம் உயர்ந்து கொண்டே போவ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான சட்­டங்­கள் கொண்டு வரப்­பட்­ட­போது, அதை மௌன­மாக ஏற்­றுக்­கொண்­ட­வர் எடப்­பாடி பழ­னி­சாமி. விவ­சா­யி­க­ளுக்­கும் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் எதி­ரான சட்­டங்­கள் கொண்டு வரப்­பட்­ட­போ­தும், அதற்கு எதிர்த்து பேசா­மல் இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">என்னை காப்­பாற்­றி­னால் போதும், என்­மீது வழக்­கு­கள் பதிவு செய்­யா­மல் இருந்­தால் போதும்; யார் எப்­ப­டிப் போனா­லும் பர­வா­யில்லை” என்று நினைத்­த­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், தமிழ்­நாடு இன்று அனைத்து துறை­க­ளி­லும் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் ஆட்­சி­யில் முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கி­றது. அதிக அள­வில் தொழில்­மு­த­லீ­டு­கள் வரக்­கூ­டிய மாநி­லம் தமிழ்­நாடு. சுகா­தா­ரத் துறை­யில் மற்ற மாநி­லங்­களை விட முன்­னே­றிய மாநி­ல­மும் தமிழ்­நா­டு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேலை­வாய்ப்­பு­களை அதிக அள­வில் வழங்­கிக் கொண்­டி­ருக்­கும் மாநி­லம் தமிழ்­நாடு. அதே­போல், தனி­ந­பர் வரு­மா­னம் மிக அதி­க­மாக உள்ள மாநி­லங்­க­ளில் ஒன்­றும் தமிழ்­நா­டு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உல­கம் முழு­வ­தும் உள்ள தொழில் முத­லீட்­டா­ளர்­கள் ஆர்­வத்­து­டன் வந்து முத­லீடு செய்ய முன்­வ­ரும் மாநி­லம் தமிழ்­நாடு. இவை அனைத்­தும், ஒன்­றிய அரசு நமக்கு எதி­ராக இருக்­கும் நிலை­யி­லும் சாதித்து காட்­டிய முத­ல­மைச்­ச­ரின் சாத­னை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், திரும்­பத் திரும்ப நம்மை எதிர்த்து ஒரே விஷ­யத்­தையே சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், அது ஒரு பொய். ஏனெ­னில், நம்மை எதிர்த்து சொல்­லு­வ­தற்கு அவர்­க­ளி­டம் எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பாஜக பொய்­களை நன்­றா­கச் சொல்ல கற்­றுக் கொடுக்­கி­றது. “வாட்ஸ்­அப் யூனி­வர் சிட்டி” நடத்­து­கி­றது என்­பது உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். அதை கற்­றுக்­கொண்டு, எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் பாஜ­க­வும் தமிழ்­நாட்­டில் அமைதி இல்லை, பெண்­க­ளுக்கு பாது­காப்­பில்லை என்று கூறு­கின்­ற­னர். ஆனால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நடை­பெற்ற இந்த ஆட்சி பெண்­க­ளுக்­கான ஆட்சி என்று நான் பெரு­மை­யு­டன் சொல்­லு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பா.ஜ.க. ஆட்சியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பெண்களுக்கு பாதுகாப்பின்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­க­ளுக்­கான உரி­மைத்­தொ­கையை வழங்­கிய ஆட்சி நம்­மு­டைய ஆட்சி. அடுத்­த­தாக நம்­மு­டைய ஆட்சி மீண்­டும் வந்­த­வு­டன், அந்­தத் தொகை 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். பெண்­க­ளுக்­காக இத்­தனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு வரும் நம்­மைப் பார்த்து, தமிழ்­நாட்­டில் பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என்று கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நான் ஒன்றே ஒன்­றைக் கேட்­கி­றேன். நம்மை எதிர்த்து பேசக்­கூ­டிய பாஜக, அவர்­கள் ஆட்சி செய்து கொண்­டி­ருக்­கும் மாநி­லங்­க­ளில் நிலைமை என்ன? பெண்­க­ளுக்கு எதி­ராக ஒரு குற்­ற­மும் நடை­பெ­றக்­கூ­டாது. ஒரு குற்­றம் நடந்­தால்­கூட அது தவ­று­தான், நடக்­கவே கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், அவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள பாஜக ஆட்சி நடை­பெ­றும் மாநி­லங்­க­ளில், 2023ஆம் ஆண்டு பெண்­க­ளுக்கு எதி­ராக பதிவு செய்­யப்­பட்ட குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 66,381, மகா­ராஷ்­டி­ரா­வில் 47,101, ராஜஸ்­தா­னில் 45,450, மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 32,342, தமிழ்­நாட்­டில் 8,943. இது எங்­கும் இருக்­கக்­கூ­டாத ஒன்­று­தான். ஆனால், இந்­நி­லை­யி­லும் நீங்­கள் இங்கே வந்து எங்­களை குற்­றம் சாட்­டும் அரு­கதை உங்­க­ளுக்கு இருக்­கி­றதா என்­பதை சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அது­மட்­டு­மல்ல, இங்கு ஒரு காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­ப­டும்­போது, அந்த புகாரை பதிவு செய்து குற்­றப்­பத்­தி­ரிகை (Charge Sheet) தாக்­கல் செய்­கி­றார்­கள். 91 சத­வீ­தம் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்ட மாநி­லம் தமிழ்­நாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. யாருக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றதோ, அதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள்­மீது வழக்­கு­கள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. விசா­ரணை நடை­பெ­று­கி­றது. நியா­ய­மான தீர்ப்பு கிடைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், இவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள பாஜக ஆட்சி நடை­பெ­றும் இந்த நாட்­டில், பல மாநி­லங்­க­ளில் 70 சத­வீ­தம் கூட குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­ப­டு­வ­தில்லை. இது­தான் இன்று நில­வும் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவர்­கள் நம்­மைப் பார்த்து தேர்­த­லுக்­காக குற்­றச்­சாட்­டு­ களை முன்­வைக்­கி­றார்­கள். அதை­விட, ஒவ்­வொரு முறை­யும் நம்­மைப் பார்த்து குற்­றம் சாட்­டும் அந்த நேரத்­தில், எடப்­பாடி பழ­னி­சாமி ஒரு விஷ­யத்தை நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பொள்­ளாச்­சி­யில் நடை­பெற்ற குற்­றங்­க­ளில், அங்கு குற்­றம் செய்­த­வர்­களை காப்­பாற்­றத் துடித்­த­வர் எடப்­பாடி பழ­னி­சாமி. ஆனால், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் யார் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ, அவர்­க­ளு­டைய பக்­கம் நின்று ஒவ்­வொரு முறை­யும் நியா­யத்தை வழங்­கி­ய­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">எதிர்க்­கட்­சி­யில் இருக்­கும் பழ­னி­சாமி அவர்­கள், நாம் சில விமர்­ச­னங்­களை முன்­வைத் தால் வருத்­தப்­ப­டு­கி­றார். அவர் யாரு­டைய காலில் விழு­கி­றார் என்­ப­தற்­காக நமக்கு எந்த வருத்­த­மும் இல்லை.யாரு­டைய காலில் வேண்­டு­மா­னா­லும் விழட்­டும்; யாரி­ட­மும் வேண்­டு­மா­னா­லும் ஆசீர்­வா­தம் பெற்­றுக் கொள்­ளட்­டும். அதைப் பற்றி நமக்கு எந்த அக்­க­றை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீங்­கள் யாரு­டைய காலில் விழு­கி­றீர்­களோ, அந்­தக் கால் பாது­காப்­பாக இல்லை, அது­தான் எங்­க­ளின் கவலை. காலில் விழுந்­த­வர்­கள் பத்­தி­ர­மாக இருக்க வேண்­டும்; அதைத்­தான் சொல்ல வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அம்­மை­யார் சசி­க­லா­வின் காலில் விழுந்து ஆசீர்­வா­தம் பெற்று முத­ல­மைச்­ச­ராக ஆனீர்­கள். அவர்­தான் உங்­களை முத­ல­மைச்­ச­ராக ஆக்­கி­னார். இன்று அவர்­கள் எந்­தக் கட்­சி­யில் இருக்­கி­றார்­கள்? அதி­மு­க­வில் இருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதி­முக அலு­வ­ல­கத்­திற்கே வர முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ­ருக்கு முன்­னர், முத­ல­மைச்­ச­ராக அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் நிய­மித்த ஓ.பி.எஸ். அவர்­கள் இன்று எங்கே இருக்­கி­றார்? நம்­மோடு இருக்­கி­றார். தமிழ்­நாட்­டைக் காப்­பாற்­றக்­கூ­டிய ஒரே தலை­வர் நம்­மு­டைய அண்­ணன் தள­பதி அவர்­கள்” என்று கூறி, நம்­மோடு தன்னை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்டு மக்­கள் தெளி­வா­கப் புரிந்­து­கொண்­டுள்­ள ­னர்—­இ­வரை நம்­பி­னால் கைவி­டப்­ப­டு­வோம் என்று. தமிழ்­நாட்­டுக்கு தொடர்ந்து துரோ­கம் செய்து கொண்­டி­ருப்­ப­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தத் தேர்­த­லில் தமிழ்­நாட்டு மக்­கள் அவ­ருக்கு ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்ட வேண்­டும். ஏனெ­னில், இந்­தத் தேர்­த­லுக்­குப் பிறகு, அமித்ஷா அவர்­கள் விரும்­பி­னால், கட்­சியே கிட்­டத்­தட்ட அண்ணா திமு­க­வி­லி­ருந்து “அமித்ஷா திமு­க”­வாக மாறி­வி­டும் நிலை உரு­வா­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அத­னால், அமித்ஷா அவர்­கள் மனது வைத்­தால், அவரை ஏதா­வது ஒரு மாநி­லத்­திற்கு ஆளு­ந­ராக அனுப்­ப­வும் முடி­யும். அவ­ருக்கு பிடித்த மாநி­லத்­தைத் தேர்ந்­தெ­டுத்து வைத்­துக் கொள்­ளட்­டும், அங்கு போக­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் மட்­டும் மக­ளிர் உரி­மைத்­தொகை பெற்­றுக்­கொண்டு இருப்­ப­வர்­கள் 3,24,074 பேர். நம்­மு­டைய ஆட்­சி­யில் விளாத்­திக்­கு­ளத்­தில் பனைப்­பொ­ருட்­கள் குழு­மம் கொண்டு வரப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லா­மல், 363 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு தண்­ணீர் வழங்­கும் கூட்­டுக்­கு­டி­நீர்த் திட்­டம் 430 கோடி ரூபாய் மதிப்­பில் கொண்டு வரப்­பட்டு, மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சுப்­பி­ர­ம­ணிய சுவாமி அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி இங்கு தொடங்­கப்­பட்­டுள்­ளது. விளாத்­திக்­கு­ளம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு ரூ. 5 கோடி மதிப்­பீட்­டில் புதிய கட்­டி­டம் கட்­டித்­த­ரப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சிவ­ஞா­ன­பு­ரத்­தில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. நம்­மு­டைய தொகு­திக்கு மட்­டும் வழங்­கப்­பட்ட வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள் 7,464. என்­னு­டைய எம்.பி. நிதி­யி­லி­ருந்து இந்­தத் தொகு­திக்­காக மட்­டும் 4 கோடி ரூபாய் வழங்­கி­யி­ருக்­கி­றேன். அதை உங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் உங்­க­ளுக்­கா­கப் பெற்­றுத் தந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதை­யெல்­லாம் செய்து தரு­வ­தற்­கும், சகோ­த­ரி­கள் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கக்­கூ­டிய 8,000 ரூபாய் கூப்­பனை வழங்­கு­வ­தற்­கும், எங்­க­ளுக்கு மீண்­டும் ஒரு­முறை நீங்­கள் வாய்ப்பு வழங்க வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் வேண்­டிக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்வாறு அவர் பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>