<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,356,493,963" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 17 2026 03:47:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260417T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="17042026-CHN-20" position.sequence="20" ex-ref="17042026-CHN-20.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அதி­முக பிர­மு­கர் வீட்­டில் கல் எறிந்த விவ­கா­ரத்­தி­லும்,  மருத்­து­வக் கல்­லூரி மாண­வர் தற்­கொலை  விவ­கா­ரத்­தி­லும்  பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்­திய</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30"> அ.தி.­மு.க. வேட்­பா­ளர் மீது ரூ. 10 கோடி  மான நஷ்ட வழக்கு: தேர்­தல் ஆணை­யத்­தி­ட­மும் புகார்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திரு­வள்­ளூர் கழக வேட்­பா­ளர் வி.ஜி.ராஜேந்­தி­ரன் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Untitled1_20_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் ஏப்.17:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் மாவட்ட அதி­முக தொழில்­நுட்ப பிரிவு துணை செய­லா­ளர் ஹரிஷ் பாலாஜி திரு­வள்­ளூர் நக­ராட்சி வி.எம்.நக­ரில் வசித்து வரு­கி­றார்.  அவ­ரது வீட்­டில் கடந்த 2 நாட்­க­ளுக்கு முன்பு நள்­ளி­ர­வில் மர்ம நபர்­கள்  முக­மூடி அணிந்­துக் கொண்டு மோட்­டார் சைக்­கி­ளில் சென்று அவ­ரது வீட்­டின் மீது சர­மா­ரி­யாக கல்­வீசி தாக்­கி­னர்.  இத­னால் வீட்­டின் கண்­ணா­டி­கள் உடைந்­தது.   இது­கு­றித்து தக­வல் அறிந்து அங்கு வந்த அதி­முக வேட்­பா­ளர் பி.வி.ரமணா ஹரிஷ் பாலா­ஜி­யி­டம் விவ­ரங்­களை கேட்­டார். பிறகு சிசி­டிவி யில் பதி­வான காட்­சி­க­ளை­யும் பார்­வை­யிட்­டார். அப்­போது திமுக வேட்­பா­ளர் வி. ஜி.ராஜேந்­தி­ரன் தோல்வி பயம்  கார­ண­மாக அவ­ரது தூண்­டு­த­லின் பேரில் கல் வீசி தாக்­கி­ய­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அதி­முக வேட்­பா­ளர் பி.வி.ரமணா பேட்டி அளித்­தார். இந்த சம்­ப­வம் குறித்து நகர போலீஸ் இன்ஸ்­பெக்­டர் தாமோ­த­ரன் வழக்­குப் பதிவு செய்து சிசி­டி­வி­யில் பதி­வான காட்­சி­க­ளைக் கொண்டு விசா­ரணை மேற்­கொண்­ட­னர். விசா­ர­ணை­யில் கல் வீசி தாக்­கி­யது கடம்­பத்­தூர் ஒன்­றி­யம், காரணி கிரா­மத்தை சேர்ந்த வெங்­க­டே­சன் மகன் விக்­னேஷ் (25) என்­ப­தும் அவர் அதி­முக பிர­மு­கர் என்­ப­தும் தெரி­ய­வந்­தது . இத­னை­ய­டுத்து அந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞரை கைது செய்து  மேற்­கொண்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">விசா­ர­ணை­யில் திரு­வள்­ளூரை சேர்ந்த சக்­தி­வேல் என்­ப­வர் நடத்தி வரும் ஷைன் ஸ்போர்ட்ஸ் அகா­டெ­மி­யில் தட­கள பயிற்­சி­யா­ள­ராக இருப்­ப­தாக வும், அதி­முக தக­வல் தொழில்­நுட்ப பிரிவு துணைச் செய­லா­ள­ராக இருக்­கும் ஹரிஷ் பாலாஜி கட்­சி­யில் தன்னை வள­ர­வி­டா­மல் தடுப்­ப­தா­க­வும், அனைத்து நிகழ்ச்­சி­க­ளி­லும் தன்னை மட்­டம் தட்டி வந்­த­தால் விரக்­தி­யி­லி­ருந்த நான் அன்று இரவு சரக்கு அடித்து விட்டு போதை­யில் இருந்­த­தால் ஹரிஷ் பாலா­ஜி­யின் வீட்­டின் மீது கல் வீசி தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக ஒப்­புக்­கொண்­டார். அதன் பேரில் இன்ஸ்­பெக்­டர் தாமோ­த­ரன் விக்­னேஷை திரு­வள்­ளூர் நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில் இன்று திரு­வள்­ளூர் சட்­ட­மன்ற தொகுதி திமுக வேட்­பா­ளர் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்து பேசி­னார். அப்­போது, அதி­முக பிர­மு­கர் வீட்­டில் கல் வீசி தாக்­கி­ய­தாக என் மீது பொய்­யான குற்­றச்­சாட்டை சுமத்­தி­னார். ஆனால் அதி­முக பிர­மு­கரே கல் வீசி­ய­தாக  காவல்­து­றை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக நாளி­தழ்­கள் மற்­றும் ஊட­கங்­க­ளில் வந்த செய்­தி­களை காண்­பித்து விவ­ரித்­தார். மேலும் மருத்­து­வக் கல்­லூரி மாண­வர் தற்­கொலை விவ­கா­ரத்­தில் கல்­லூரி மாண­வனை பிரச்­சா­ரத்­திற்கு அழைத்­த­தால்  மன­மு­டைந்து தற்­கொலை செய்து கொண்­ட­தாக மாண­வ­னின் பெற்­றோ­ரி­டம் தவ­றான தக­வலை சொல்லி திசை திருப்ப அதி­முக வேட்­பா­ளர் பி.வி. ரமணா முயன்­றார். ஆனால் மாண­வன் தற்­கொலை செய்து கொண்ட கார­ணத்தை காவல்­துறை விளக்­க­மாக தெரி­வித்­த­தால் பெற்­றோர்­கள் அமை­தி­யாக உட­லைப் பெற்று சென்­ற­னர். ஏற்­க­னவே 20 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்று வெற்றி பெற்ற திமுக வேட்­பா­ளர் என்ற ஒரே கார­ணத்­திற்­காக தன் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரும் அதி­முக வேட்­பா­ளர் பி.வி ரமணா மீது தேர்­தல் ஆணை­யத்­தி­டம் புகார் அளித்­தி­ருக்­கி­றோம். அதே­போல் நீதி­மன்­றத்­தி­லும் 10 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர போவ­தா­க­வும் எச்­ச­ரித்­தார். பழைய வில்­லன் நடி­கர் நம்­பி­யார் பாணி­யில் வில்­லங்­கத்­த­ன­ மான பாணி­யில்  செயல்­ப­டா­மல் புதிய பாணி­யில் செயல்­ப­டு­மா­றும் கிண்­டல் அடித்­தார்.  மேலும்,  தான் எம்­எல்­ஏ­வாக இருந்­த­போது செய்த சாத­னை­களை சொல்லி வாக்கு சேக­ரிப்­ப­தா­க­வும், அதி­முக வேட்­பா­ளர் பி. வி.ரமணா 5 ஆண்­டு­கள் அமைச்­ச­ராக இருந்­த­போது செய்த சாத­னை­களை சொல்லி ஓட்டு கேட்­கா­மல் அவ­ருக்கு உள்ள தோல்வி பயத்­தா­லேயே என் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்­து­வ­தா­க­வும் குற்­றம் சாட்­டி­னார்.கடந்த முறை 20 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­ற­தா­க­வும் இந்த முறை குறைந்­தது 50 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறு­வேன்.  தோல்­வியை பரி­சாக பி.வி. ரம­ணா­வுக்கு வழங்­கு­வேன் என்­றும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.இதில் திரு­வள்­ளூர் நகர திமுக செய­லா­ளர் சி. சு.ரவிச்­சந்­தி­ரன், முன்­னாள் நகர்­மன்ற தலை­வர் பொன் பாண்­டி­யன் மற்­றும் கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் அப்­போது உடன் இருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>