<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,141,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 17 2026 01:25:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260417T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="17042026-MDU-09" position.sequence="09" ex-ref="17042026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="51">தூத்­துக்­குடி மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்த எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு வரு­கின்ற தேர்­த­லில் சரி­யான பாடம் புகட்­டுங்­கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27"> ஒட்­டப்­பி­டா­ரம் தொகு­தி­ வேட்பாளர் ராம­ஜெ­யத்தை ஆத­ரித்து</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  தேர்­தல் பிரச்­சா­ரம் ! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dcmspeech154_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தூத்­துக்­குடி,ஏப்.17–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தூத்­துக்­குடி மாவட்­டம், ஓட்­டப்­பி­டா­ரத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­ மான உத­ய­நிதி ஸ்டாலின், ஓட்­டப்­பி­டா­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் திரா­விட முன்­னேற்­றக் கழக வேட்­பா­ளர் ராம­ஜெ­யம் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­கு­கள் சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``தூத்­துக்­கு­டிக்கு துரோ­கம் செய்த எடப்­பாடி பழ­னி­சா­மி­யைத் தய­வு­செய்து இந்த மாவட்­டத்­துக்­குள் நுழைய விடா­தீர்­கள். அவர்­க­ளுக்கு மீண்­டும் மீண்­டும் சொல்­லுங்­கள், தூத்­துக்­குடி மாவட்­டம் என்­றைக்­குமே கழ­கத்­தின் கோட்டை என்­பதை நிரூ­பித்­துக் காட்­டுங்­கள். இங்கே நம் வெற்றி வேட்­பா­ளர் இளை­ஞர் அணி மாவட்ட அமைப்­பா­ளர் ராம­ஜெ­யம் அவர்­களை வெற்­றி­பெ­றச் செய்­யுங்­கள்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­லில் உங்­கள் அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான வர­வேற்பு அளித்­தி­ருக்­கி­றீர்­கள், முத­லில் அதற்கு என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், இந்த ஓட்­டப்­பி­டா­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம் வெற்றி வேட்­பா­ளர்  ராம­ஜெ­யம் அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்­ய­வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் நேரில் சந்­தித்து கேட்­க­வேண்­டும் என்று நினைத்­தேன். `உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்’ என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­க­வேண்­டும் என்று நான் நினைத்­துக்­கொண்­டு­தான் வந்­தேன். ஆனால், இங்கே உங்­க­ளின் எழுச்சி, உங்­க­ளின் ஆத­ரவு, உங்­கள் அன்­பை­யெல்­லாம் பார்க்­கும்­போது ஏற்­க­னவே நீங்­க­ளெல்­லாம் முடிவு செய்­து­விட்­டீர்­கள் என்று தெரி­கி­றது. உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில்  ராம­ஜெ­யத்தை வெற்­றி­பெ­றச் செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எந்த மாவட்­டத்­துக்­குப் போனா­லும் தூத்­துக்­கு­டிக்கு வரும்­போ­து­மட்­டும், ஒரு தனிப்­பெ­ரு­மை­தான், கெத்­து­தான்.  நேற்று முழு­வ­தும் திரு­நெல்­வேலி முடித்­து­விட்டு இன்று காலை தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் உங்­க­ளைப் பார்க்க நுழை­கி­றேன். உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது நிச்­ச­யம் இங்கே ஓட்­டப்­பி­டா­ரம் தொகு­தி­யில் நம் ராம­ஜெ­யத்­தின் உத­ய­சூ­ரி­யன் வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. தமிழ்­நாட்­டுக்கே ஓர் எடுத்­துக்­காட்டு மாவட்­ட­மாக இருக்­கக்­கூ­டிய மாவட்­டம்­தான் தூத்­துக்­குடி மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பழ­னி­சாமி செய்த அநி­யா­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தொழில் வளர்ச்சி, விவ­சா­யம், மீன்­பி­டித் தொழில், துறை­மு­கம், வர்த்­த­கம் என்று எல்­லாமே கலந்­தி­ருக்­கக்­கூ­டிய, எல்­லா­வற்­றி­லுமே சிறப்­பா­கச் செயல்­ப­டக்­கூ­டிய மாவட்­டம்­தான் இந்­தத் தூத்­துக்­குடி மாவட்­டம். அதே­போல மதச்­சார்­பின்­மைக்கு எடுத்­துக்­காட்­டாக தமிழ்­நாட்­டுக்கே இருக்­கக்­கூ­டிய மாவட்­டம் இந்­தத் தூத்­துக்­குடி மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் தூத்­துக்­கு­டி­யில்  எடப்­பாடி பழ­னி­சாமி செய்த அநி­யா­யத்தை, அக்­கி­ர­மத்தை யாரா­லும் மறக்­கவே முடி­யாது, மறந்­து­வி­டா­தீர்­கள். ஸ்டெர்­லைட் போராட்­டத்­தில் காக்கா குரு­வி­யைச் சுடு­வது போன்று 13 பேரைச் சுட்­டுக் கொன்­ற­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி. போதாக்­கு­றைக்கு அதை,  தொலைக்­காட்­சி­யில்­தான் பார்த்­துத்­தான் தெரிந்­து­கொண்­டேன் என்று சொன்­ன­வர்­தான்  எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள், என்­பதை மறந்­து­வி­டா­தீர்­கள். அதே போன்று பழ­னி­சா­மி­யின் ஆட்­சி­யில் சாத்­தான்­கு­ளத்­தில் எவ்­வ­ளவு பெரிய கொடுமை நடந்­தது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். காவல் நிலை­யத்­தி­லேயே அப்­பா­வை­யும் மக­னை­யும் வைத்து அறை­யில் அடித்­துக் கொன்­று­விட்­டார்­கள். அவர்­க­ளின் மர­ணத்­துக்கு நீதி வாங்­கித் தரக்­கூ­டிய ஆட்சி, நம் திரா­விட மாடல் ஆட்சி, நம் முத­ல­மைச்­சர்­தான் இன்று அந்த லாக்­கப் மர­ணத்­துக்கு ஒரு நீதியை வாங்­கித் தந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நம் வெற்றி வேட்­பா­ளர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தூத்­துக்­கு­டிக்­குத் துரோ­கம் செய்த எடப்­பாடி பழ­னி­சா­மி­யைத் தய­வு­செய்து இந்த மாவட்­டத்­துக்­குள் நுழைய விடா­தீர்­கள். அவர்­க­ளுக்கு மீண்­டும் மீண்­டும் சொல்­லுங்­கள், தூத்­துக்­குடி மாவட்­டம் என்­றைக்­குமே கழ­கத்­தின் கோட்டை என்­பதை நிரூ­பித்­துக் காட்­டுங்­கள். இங்கே நம் வெற்றி வேட்­பா­ளர், நல்ல வேட்­பா­ள­ரைத் தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். எனக்கு என்ன பெருமை என்­றால், நான் இளை­ஞர் அணி­யின் செய­லா­ளர், என்­னு­டன் இளை­ஞர் அணி­யில் மாவட்ட அமைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றக்­கூ­டி­ய­வர்­தான் சகோ­த­ரர் ராம­ஜெ­யம் அவர்­கள். நல்ல சுறு­சு­றுப்­பாக, ஆற்­ற­லு­டன் எப்­பொ­ழு­துமே மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்­ப­வர். வெறும் தேர்­த­லுக்­குத் தேர்­தல் மட்­டும் மக்­களை வந்து சந்­திக்­கி­ற­வர் கிடை­யாது. வரு­டம் முழு­வ­தும் எந்த நேரத்­தி­லும் சுக­துக்­கங்­க­ளில் எப்­பொ­ழு­தும் மக்­க­ளு­டன் இருந்து மக்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றக்­கூ­டி­ய­வர்­தான்  ராம­ஜெ­யம் அவர்­கள். இவ­ரின் நல்ல செயல்­பா­டு­க­ளைப் பார்த்­து­தான் இன்று தலை­வர் அவர்­கள், இவ­ருக்கு இப்­படி ஒரு வாய்ப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார். ஆகவே மக்­க­ளுக்­குப் பணி­யாற்ற ராம­ஜெ­யத்­துக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுங்­கள், ஓட்­டப்­பி­டா­ரத்­தில் ராம­ஜெ­யத்­துக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொகு­திப் பிரச்­சினை பற்றி பேசு­வார்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ராம­ஜெ­யம் அவர்­கள் வாரத்­துக்கு ஒரு முறை என்னை வந்து சென்­னை­யில் பார்ப்­பார். ஒவ்­வொரு முறை­யும் என்­னைப் பார்க்­கும்­போது அவ­ருக்­குத் தனக்கு இது வேண்­டும், தனக்கு இந்த வேலை வேண்­டும் என்று எது­வுமே கேட்­டது கிடை­யாது. என் தொகு­திக்கு இதைச் செய்து கொடுங்­கள், என் தொகு­தி­யில் இந்­தப் பிரச்­சினை இருக்­கி­றது இதைச் சரி செய்து கொடுங்­கள், என் மக்­க­ளு­டைய பிரச்­ச­னை­கள் இவை, என்­னு­டைய கோரிக்­கை­கள் இவை, இவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்­றிக் கொடுங்­கள் என்­று­தான் ஒவ்­வொரு முறை­யும் என்­னைப் பார்க்­கும்­போது வந்து கேட்­பார். அப்­ப­டிப்­பட்ட ஒரு நல்ல வேட்­பா­ளரை இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து, சட்­ட­பே­ர­வைக்கு நீங்­கள் அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ராம­ஜெ­யத்­தின் வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் ஒரு வேட்­பா­ளர் தெரி­யுமா? நான் இந்­தத் தேர்­த­லில் போட்டி போடு­கி­றேன் தெரி­யுமா? எனக்கு அவ்­வப்­பொ­ழுது நினை­வூட்­டுங்­கள், நான் மறந்­து­வி­டு­கி­றேன். நான் என் தொகு­திக்கே இது­வ­ரைக்­கும் ஒரு நாள்­தான் சென்று வாக்கு கேட்­டி­ருக்­கி­றேன். வெற்றி பெறச் செய்­து­வி­டு­வார்­கள் என்று நம்­பிக்கை இருக்­கி­றது, தலை­வர் எனக்கு இரண்­டா­வது முறை வாய்ப்பு கொடுத்­தி­ருக்­கி­றார். என் தொகு­திக்­குப் போகா­மல் நான் இங்கே ஓட்­டப்­பி­டா­ரம் வந்து உங்­க­ளை­யெல்­லாம் பார்த்து நீங்­கள் அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு ராம­ஜெ­யத்­துக்கு வாக்கு கேட்க வந்­தி­ருக்­கி­றேன் என்­றால் ஏன், தெரி­யுமா? எனக்கு என் வெற்­றியை விட மிக மிக முக்­கி­யம்  ராம­ஜெ­யத்­தின் வெற்றி, இந்த ஓட்­டப்­பி­டா­ரம் தொகுதி வெற்றி. சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தியை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் இந்த ஓட்­டப்­பி­டா­ரத்­தில் நீங்­கள் சகோ­த­ரர் ராம­ஜெ­யத்தை வெற்றி பெறச் செய்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">திரா­விட மாடல் அரசு திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ராம­ஜெ­யத்­தைக் அழைத்­துக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றேன், `உத­ய­சூ­ரி­ய­னுக்கு இன்­னொரு வாய்ப்­புக் கொடுங்­கள்’ என்று கேட்க வந்­தி­ருக்­கி­றேன். எந்த உரி­மை­யில் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்? நம் திரா­விட மாடல் அரசு, நம் முத­ல­மைச்­சர் இந்­தத் தொகு­திக்கு பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றார், அந்த உரி­மை­யில் உங்­க­ளி­டம் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வ.உ.சிதம்­ப­ர­னார் பிறந்த ஊரான ஓட்­டப்­பி­டா­ரத்­தில் அரசு கலைக் கல்­லூரி அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தொழில் வளர்ச்சி மற்­றும் வேலை­வாய்ப்­புக்­காக கழக அரசு எடுத்த முயற்­சி­யால் 16,000 கோடி ரூபாய் முத­லீட்­டில் வின்ஃ­பாஸ்ட் (VinFast) மின்­சா­ரக்  கார் தொழிற்­சா­லையை நம் முத­ல­மைச்­சர், நம் திரா­விட மாடல் அரசு இங்கே கொண்டு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மாப்­பிள்­ளை­யூ­ரணி ஊராட்­சி­யில், 2,500 பேருக்கு பட்டா வழங்­கி­யது திரா­விட மாடல் ஆட்சி, நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2023–இல் பெய்த பெரு­ம­ழை­யின் போது இங்கே இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய குடும்ப அட்­டைக்­கும் 6,000 ரூபாய் நிவா­ர­ணத் தொகை கொடுத்­தது நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், மறந்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அய்­ய­ன­டைப்­புப் பகு­தி­யில் நகர்ப்­புற மேம்­பாட்டு வாரி­யம் சார்­பாக, 220 குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­பட்­டுள்­ளன. தரு­வைக்­கு­ளம் கடற்­க­ரைக் கிரா­மத்­தில் 150 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தூண்­டில் வளைவு அமைக்­கும் பணி நடை­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பனிக்­கட்டி நிலை­யம் அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம். 12 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கோரம்­பள்­ளம் குளம் தூர்­வா­ரப்­பட்டு உப்­பாறு ஓடை­யி­லும் பரா­ம­ரிப்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மீனாட்­சிப்­பட்டி பரம்­பி­லி­ருந்து முடி­வைத்­தா­னேந்­தல் கிரா­மத்­துக்கு ஆற்­றுக்­கு­டி­நீர் இணைப்பு வழங்­கிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தன்­னூத்து, பாஞ்­சா­லங்­கு­றிச்சி, நாணல்­காடு, கலப்­பப்­பட்டி உள்­ளிட்ட பல்­வேறு ஊர்­க­ளுக்கு இன்று புதி­தாக நியா­ய­வி­லைக் கடை­கள் அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வீர­பாண்­டி­ய­பு­ரம், அக்­கா­நா­யக்­கன்­பட்டி, சில்­லா­னத்­தம் உள்­ளிட்ட பல்­வேறு ஊர்­க­ளில் பள்­ளி­க­ளுக்­குக் கூடு­தல் வகுப்­ப­றை­கள் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">செக்­கா­ரக்­குடி, பொட்­ட­லூ­ரணி சாலை­யில் பெரிய மேம்­பா­லங்­கள் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம். 1 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வல்­ல­நாடு ஊராட்­சி­யில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஓட்­டப்­பி­டா­ரம் ஊராட்சி ஒன்­றிய கிரா­மங்­க­ளுக்­குத் தடை­யின்றி குடி­நீர் வழங்­கு­வ­தற்கு 515 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம் செயல்­ப­டுத்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளை­யும் செய்து கொடுத்­து­விட்டு உத­ய­சூ­ரி­ய­னுக்கு இன்­னொரு வாய்ப்­புக் கொடுங்­கள், ராம­ஜெ­யத்­துக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள் என்று அந்த உரி­மை­யோடு கேட்க வந்­தி­ருக்­கி­றேன். நீங்­கள் ராம­ஜெ­யத்தை வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­னீர்­கள் என்­றால் நிச்­ச­யம் உங்­க­ளின் தொகு­திக்கு, ஒவ்­வொரு பகு­திக்­கும், ஒவ்­வொரு தெரு­வுக்­கும் என்­னென்ன தேவையோ அதைப் பார்த்­துப் பார்த்து உங்­க­ளி­டம் வந்து கேட்டு அதை நிச்­ச­யம் செய்து கொடுப்­பார் என்­கிற வாக்­கு­று­தியை நான் கொடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் தொகு­திக்கு இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோம்.  நம் ஆட்சி அமைந்து இந்த ஐந்து வரு­டத்­தில் நம் முத­ல­மைச்­சர் பல்­வேறு திட்­டங்­களை தமிழ்­நாடு முழு­வ­தும் செயல்­ப­டுத்­தி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் என்­னென்ன சொன்­னோமோ அத்­தனை வாக்­கு­று­தி­க­ளை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். உதா­ர­ண­மாக நம் முத­ல­மைச்­சர் 2021–இல் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துத் திட்­டம். இன்று ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரைக்­கும் சேமிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அர­சுப் பள்­ளி­யில் படிக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் காலை­யில் பசி­யோடு இருக்­கக்­கூ­டாது என்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். காலை­யில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தார்­கள் என்­றால் தர­மான காலை உணவு கொடுக்­கி­றார், அதற்­குப் பிறகு தர­மான கல்­வி­யைக் கொடுக்­கி­றோம். அர­சுப் பள்­ளி­யில் படித்­து­விட்டு எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்­தா­லும் அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத்­தொகை மாதம் 1,000 ரூபாய் கொடுக்­கி­றோம். தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சமீ­பத்­தில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்­னால் முத­ல­மைச்­சர் முடி­வெ­டுத்­துக் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு 10 லட்­சம் மடிக்­க­ணி­னி­களை  நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம். இன்று மாதந்­தோ­றும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு உரி­மைத் தொகை திட்­டத்தை நம் முத­ல­மைச்­சர் கொடுத்து வரு­கி­றார். அதை நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் திட்­டம் போட்­டார்­கள். தேர்­த­லைக் கார­ணம் காட்டி மூன்று மாத உரி­மைத் தொகையை நிறுத்­து­வ­தற்கு நீதி­மன்­றத்­துக்­குப் சென்­றி­ருக்­கி­றார்­கள். ஆனால், நம் முத­ல­மைச்­சர் என்ன செய்­தார்? நான் 1,000 ரூபாய் கொடுப்­பதை நிறுத்த முயற்சி செய்­கி­றீர்­களா? 5,000 ரூபாய் கொடுப்­பேன் எப்­படி நிறுத்­து­கி­றீர்­கள் பார்ப்­போம் என்று சொல்லி கொடுத்­தாரா இல்­லையா? பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் என மூன்று மாதங்­க­ளுக்­குச் சேர்த்து 3,000, கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று 5000 ரூபாயை, ஒரு கோடியே 31 லட்­சம் குடும்­பங்­க­ளுக்கு, ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் காலை 06:30 மணிக்­குக் கொடுத்­தார், வங்­கி­யில் பணத்தை அனுப்­பி­னார்.  மக­ளிர் 09:00 மணிக்­கெல்­லாம் வங்­கிக்­குச் சென்று பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள். ஏன்? ஏனென்­றால் மோடி அரசு வங்­கி­யில் குறைந்­த­பட்ச இருப்பு இல்லை என்று சொல்லி அந்­தப் பணத்தை எடுத்­து­வி­டு­வார்­கள் என்­கிற அந்த எண்­ணத்­தில் எடுத்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நீங்­கள் அளிக்­கும் வாக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதே­போல 23 ஆம் தேதி காலை­யில் வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று வாக்­குப்­பெட்­டி­யில் இரண்­டா­வது இடத்­தில்  ராம­ஜெ­யத்­தின் பெயர் இருக்­கும். அதற்­குப் பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். அதில் நீங்­கள் அளிக்­கும் வாக்கு உங்­க­ளின் வெற்­றியை உறுதி செய்­யும். கடந்த முறை கிட்­டத்­தட்ட 10,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்­தீர்­கள். இந்த முறை குறைந்­தது 25,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில்  ராம­ஜெ­யம் அவர்­களை வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சில வாக்­கு­று­தி­கள் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார். மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம் இப்­பொ­ழுது 1,000 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம், ஆட்சி அமைந்த உடனே அதை 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கு­வோம் என்று முத­ல­மைச்­சர் சொல்­லி­யி­ருக்­கி­றார். காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்பு வரை உள்­ளதை எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம். கல்வி உத­வித் தொகை 1,000 ரூபாய் அல்ல 1,500 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம். முதி­யோர் உத­வித் தொகை இப்­பொ­ழுது 1,200 ரூபாய் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம், ஆட்­சிக்கு வந்த உடனே அதை 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கு­வோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து வரு­டத்­தில் 35 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து வரு­டத்­தில் 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு யார் யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அத்­தனை பேருக்­கும் வீடு கட்­டித் தரப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக­ளிர் கைக­ளி­லும் 8,000 ரூபாய்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்த உடனே அனைத்து மக­ளிர் கைக­ளி­லும் 8,000 ரூபாயை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­து­வி­டு­வார். அதை வைத்­துக்­கொண்டு நீங்­கள் உங்­க­ளின் வீட்­டுக்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவையோ அதை நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம். இவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றால், வரு­கின்ற 23 ஆம் தேதி நம் ராம­ஜெ­யம் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உத­ய­நிதி வந்­தார், பேசி­னார், திட்­டங்­கள் எல்­லாம் சொன்­னார், வாக்­கு­றுதி கொடுத்­தார், கலைந்து போய்­விட்­டோம் என்று போய்­வி­டக் கூடாது. இன்று தேதி 15, தேர்­தல் நாள் 23, இன்­னும் ஏழு நாட்­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் நீங்­கள் அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று முடிவு செய்­து­விட்­டீர்­கள். அது போதாது. நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் அடுத்த ஒரு வாரம் இந்த பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும். ஏன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்? ஏன் ராம­ஜெ­யத்தை வெற்றி பெற வைக்க வேண்­டும்? இந்த ஐந்து வரு­டம் என்­னென்ன திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம்? மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால், என்­னென்ன செய்­வோம்?  முக்­கி­ய­மாக அடி­மைக் கூட்­டத்­தை­யும் சங்­கிக் கூட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் விடக்­கூ­டாது என்­கிற அந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும். சேர்த்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம்  ராம­ஜெ­யம் அவர்­கள் குறைந்­தது 25,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் இங்கே வெற்றி பெற்­றாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">காலை வாரி விட்­டார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இது­தான் அந்­தப் புகைப்­ப­டம். கீழே ஒரு­வர் படுத்­தி­ருக்­கி­றார், தெரி­கி­றதா, யார் என்று? எடப்­பாடி பழ­னி­சாமி. இதைத்­தான் நான் சொன்­னேன் `இப்­படி அடி­மை­யாக இருக்­கா­தீர்­கள் கொஞ்­சம் எழுந்து மேலே வாருங்­கள்’ என்று. இப்­பொ­ழுது என்ன சொல்­லி­விட்­டார் தெரி­யுமா ‘ஆமாம் நான் காலைப் பிடித்­து­தான் முத­ல­மைச்­சர் ஆனேன், என்று கூறி­விட்­டார். `அந்த அம்மா என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னார் அதற்­கா­கக் காலில் விழுந்­தேன்’ என்­றார். நான், `காலில் விழுந்­தது தவறு என்று சொல்­லவே இல்லை, காலில் விழுந்து முத­ல­மைச்­சர் ஆன உடனே அந்த அம்மா சிறைக்கு சென்­ற­வு­டன் ‘நீயா என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னாய்’ என்று கேட்டு அந்த அம்­மா­வுக்கு துரோ­கம் செய்­தார். அதைத்­தான் நான் குறை­யா­கச் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­பொ­ழுது சசி­கலா அம்­மாவே கேட்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள் ‘அந்­தத் தம்பி சொல்­வது சரி­தானே. நீ வந்து என் காலில் விழுந்­தாய். பிறகு நான் முத­ல­மைச்­சர் ஆக்­கி­னேன் நீ என் காலை வாரி விட்­டுப் போனாய்’ என்று இப்­பொ­ழுது அவர்­கள் கேட்­டு­விட்­டார்­கள். அத­னால், இப்­பொ­ழுது நாம் வெளியே வந்து வேடிக்­கைப் பார்ப்­போம், அவர்­கள் இரண்டு பேரும் பேசித் தீர்த்­துக்­கொள்­ளட்­டும். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் நம் தலை­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­வது போன்று இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் ‘டெல்லி (வெர்­சஸ்) தமிழ்­நாடு’. டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா? தமிழ்­நாடு அணி நாம் வெற்­றி­பெற்­றுக் காட்ட வேண்­டும், டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இது சுய­ம­ரி­யாதை மண்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் இவ்­வ­ளவு திட்­டங்­கள் சொன்­னே­னல்­லவா இதற்கு ஒன்­றிய பா.ஜ.க அரசு நம் தமிழ்­நாடு அர­சுக்கு ஏதா­வது துணை­யாக நின்­றி­ருக்­கி­றதா? தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­ட­மும் தரு­வ­தில்லை. நமக்கு வர­வேண்­டிய நிதி வரு­வ­தில்லை, கல்வி நிதி கொடுக்­க­மாட்­டேன் என்­கி­றார்­கள், மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான், கொடுப்­போம் என்று சொல்­கி­றார்­கள். மும்­மொ­ழிக் கொள்­கை­யில் என்ன இருக்­கி­றது? மீண்­டும் இந்­தித் திணிப்பை, தமிழ்­நாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­தான் மும்­மொ­ழிக் கொள்கை. அத­னால்­தான் நம் முத­ல­மைச்­சர், `முடி­யாது’ என்று கூறி­விட்­டார். இப்­படி ஒன்­றிய அரசு நம்­மீது திணிப்­ப­வற்­றை­யெல்­லாம் எதிர்த்து நின்று கேள்வி கேட்டு, அதைத் துணிந்து எதிர்க்­கக்­கூ­டிய ஒரே தலை­வர் இந்­தி­யா­வி­லேயே நம் தலை­வர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எனவே, அந்­தத் தலை­வ­ருக்கு மீண்­டும் ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள். பி.ஜே.பி. மற்ற மாநி­லங்­க­ளுக்­குள் எல்­லாம் உள்ளே வந்­து­வி­டு­கி­றது ஆனால், தமிழ்­நாட்­டுக்­குள் மட்­டும் வர முடி­ய­வில்லை. ஏன்? ஏனென்­றால், இது சுய­ம­ரி­யாதை மண். நாம் யாருக்­கும் அடி­மை­யாக இருக்க மாட்­டோம் என்று மீண்­டும் மீண்­டும் சொல்­கின்ற மண். அத­னால் ஏற்­க­னவே பத்து தோல்வி கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். பத்து தோல்வி பழ­னி­சா­மியை இந்­தத் தேர்­த­லோடு மொத்­தத் தோல்வி பழ­னி­சா­மி­யாக்கி வீட்­டில் உட்­கார வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து  கேட்­கி­றேன் ராம­ஜெ­யத்­துக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள். உங்­க­ளின் குர­லாக, உங்­கள் பகு­தி­யின் குர­லாக, உங்­கள் தொகு­தி­யின் குர­லாக நிச்­ச­யம் சகோ­த­ரர் ராம­ஜெ­யம் அவர்­கள் சிறப்­பான ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­பார் என்­கிற வாக்­கு­று­தியை நான் உங்­க­ளுக்­குக் கொடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி. ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஓட்­டப்­பி­டா­ரம் வேட்­பா­ளர்  ராம­ஜெ­யம், திருச்­செந்­தூர் வேட்­பா­ளர் அமைச்­சர் அனிதா ராதா­கி­ருஷ்­ணன், தொகு­திப் பார்­வை­யா­ளர் அப்­துல் மாலிக், மாந­கர மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் மாட­சாமி, செந்­தூர்­மணி, பொதுக்­குழு உறுப்­பி­னர் ராஜ­லட்­சுமி, ஒன்­றி­ய–­­ப­கு­தி–­­க­ழ­கச் செய­லா­ளர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எம்.சி.சண்­மு­கையா, இளை­ய­ராஜா, ஜெயக்­கொடி, சர­வ­ணக்­கு­மார், சுப்­பி­ர­ம­ணி­யன், ராம­சாமி, சுரேஷ்­காந்தி, சிவக்­கு­மார், காந்தி, மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் பால்­துரை, ஸ்டாலின், சுதா­கர், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளைச் சேர்ந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ், திரா­வி­டர் கழ­கம், தேசிய முற்­போக்கு திரா­வி­டக் கழ­கம், விடு­த­லைச் சிறுத்­தை­கள், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி, மக்­கள் நீதி மய்­யம், எஸ்.டி.பி.ஐ, மனி­த­நே­யக் கட்சி ஆகி­ய­வற்­றின் நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>