<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1376" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 18 2026 03:54:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260418T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18042026-MDU-07" position.sequence="07" ex-ref="18042026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">18.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">தொகுதி  மறுசீரமைப்பு  தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க சதி: பா.ஜ.க.வை எதிர்க்க முதுகெலும்பற்ற கூட்டம் அ.தி.மு.க.!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">நாமக்கல்லில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">6–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">மக்கள் தொகை அடிப்படையில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">தொகுதி மறுசீரமைப்பு -– ஒரு  அநீதி!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர் தான்! மெயின் பிக்சரைப் பார்க்க டெல்லி ஆசைப்படக் கூடாது!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup574195_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup572023_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="2_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வள்­ளு­வ­ருக்கு காவி பூசி­னா­லும் கப்­சிப், எம்.ஜி.ஆருக்கு காவி பூசி­னா­லும் கப்­சிப்! இது­தான் பழ­னி­சாமி ஆட்­சி­யின் நிலைமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. ஆட்­சியே இவ்­வ­ளவு கேவ­ல­மாக இருந்­தது என்­றால், என்.டி.ஏ. ஆட்சி என்று பா.ஜ.க. தமிழ்­நாட்­டில் மொத்­த­மாக ஆட்­டம் போடத் தொடங்­கி­னால் என்ன ஆகும்? மத­வா­தம் தலை­தூக்­கும்! கல­வ­ரங்­கள் உண்­டா­கும்! மக்­கள் பிள­வு­ப­டு­வார்­கள்! மாநில உரி­மை­கள் பறிக்­கப்­ப­டும்! குலக்­கல்­வி­யைக் கொண்டு வரு­வார்­கள்! பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோர் உரு­வாக்­கிய நவீ­னத் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை நாசப்­ப­டுத்­து­வார்­கள்! இளை­ஞர்­க­ளின் வேலை­வாய்ப்­பைப் பறிப்­பார்­கள்! பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், ஆதி­தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­ன­ரின் இட­ஒ­துக்­கீட்­டைப் பறிப்­பார்­கள்! சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான இட­ஒ­துக்­கீட்டை மகா­ராஷ்­டிரா பாணி­யில் ரத்து செய்­வார்­கள்! தமி­ழைச் சிதைக்க இந்­தி­யைத் திணிப்­பார்­கள்! ஏன், தமிழ்­நாடு என்ற அடை­யா­ளத்­தையே அழித்து தட்­சி­ணப் பிர­தே­சம் என்று பெய­ரையே மாற்­றி­வி­டு­வார்­கள்! அதற்­கா­கத்­தான் பா.ஜ.க.வுக்கு பழ­னி­சாமி வாக்கு கேட்டு வரு­கி­றார்! அத­னால்­தான் இந்­தத் தேர்­தலை தமிழ்­நாடு வெர்­சஸ் டெல்லி என்று சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தவ­று­க­ளி­லி­ருந்து தப்­பிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி சரண்­ட­ரான இடம் பா.ஜ.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம் செய்­யும் பத்து தோல்வி பழ­னி­சா­மிக்கு பதி­னோ­ரா­வது தோல்­வியை நீங்­கள் கொடுக்க வேண்­டும்! தவ­றுக்கு மேல் தவ­று­கள் செய்த பழ­னி­சாமி, தன்­னு­டைய தவ­று­க­ளில் இருந்து தப்­பிக்­கச் சரண்­ட­ரான இடம்­தான் பா.ஜ.க. வாஷிங் மெஷின்! தன்­னு­டைய தவ­று­க­ளில் இருந்து தப்­பிக்க அவர் கொடுத்த விலை­தான், தமிழ்­நாட்­டின் உரி­மை­கள்! அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்­வொரு வாக்­கும் பா.ஜ.க.வுக்கு விழும் வாக்­கு­கள் – தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு விழும் தடைக்­கற்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, தமிழ்­நாட்டை வட்­ட­மி­டும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்­டி­ய­டிக்க வேண்­டும்! டபுள் எஞ்­சின், டப்பா எஞ்­சின் என்று சொல்­லிக் கொண்டு டெல்­லி­யி­னு­டைய ரிமோட் கண்ட்­ரோ­லுக்கு ஆடும் அடி­மை­கள் தமிழ்­நாட்டை ஆளக் கூடாது! தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்த நினைக்­கும் ஆண­வப் பா.ஜ.க.வும் – அடிமை அ.தி.மு.க.வும் வேரோ­டும், வேரடி மண்­ணோ­டும் வீழ்த்­தப்­பட வேண்­டும்! அதற்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நினைத்­துப் பாருங்­கள், 2021–இல் உங்­கள் ஆத­ர­வு­டன் தமிழ்­நாட்டை மீட்­டெ­டுத்­தோம்! இன்­றைக்கு இந்­தி­யா­வில் நம்­பர் ஒன் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்­டைத் தலை­நி­மிர வைத்­தி­ருக்­கி­றோம். ஏன்? இந்­தி­யா­வுக்கே வழி­காட்­டும் மாடல் திரா­விட மாடல்­தான் என்று சொல்­ல­லும் அள­வுக்கு அனைத்­துத் துறை­க­ளி­லும் தமிழ்­நாட்டை உயர்த்­தி­யி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நமது அர­சின் திட்­டங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மற்ற மாநி­லங்­கள் பின்­பற்­று­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்த அள­வுக்கு என்­றால், மக்­கள் மனதை வெல்ல வேண்­டும் என்­றால், தமிழ்­நாட்­டில் தி.மு.க. என்ன செய்­கி­றது என்று பார்க்க வேண்­டும், அங்கு முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் ஸ்டாலின் என்ன மாதி­ரி­யான மக்­கள் நலத்­திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­கி­றார் என்று பார்க்க வேண்­டும், அதை அப்­ப­டியே நம்­மு­டைய மாநி­லத்­தில் செயல்­ப­டுத்­தி­னால் போதும் என்று நினைக்­கி­றார்­கள். இந்த மாதிரி நல்­லாட்­சி­யைக் கொடுக்­கும் கார­ணத்­தால்­தான் திரா­விட மாடல் ஹீரோ ஆஃப் இந்­தியா என்று பெயர் எடுத்­தி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டிப்­பட்ட நம்­மு­டைய திட்­டங்­களை நான் கொஞ்­சம் ரீவைண்ட் பண்ணி சொல்­லட்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மே 7, 2021 அன்று “முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நான்” என்று தலை நிமிர்த்தி சொன்­னேன்! இனி தமிழ்­நா­டும் தலை­நி­மிர்ந்­து­வி­டும் என்று அனை­வ­ருக்­கும் நம்­பிக்கை பிறந்­தது. அந்த நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­றி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் நாள் – முதல் கையெ­ழுத்­தி­லேயே மக­ளிர் அனை­வ­ரும் கட்­ட­ண­மில்­லா­மல் விடி­யல் பய­ணம் செய்­ய­லாம் என்று உத்­த­ர­விட்­டேன். அதைத் தொடர்ந்து, திரா­விட மாடல் ஆட்­சி­யில் செய்­யப்­பட்­டி­ருக்­கும் திட்­டங்­க­ளைத் தலைப்­புச் செய்­தி­க­ளாக நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு ஒவ்­வொரு மாத­மும் ஆயி­ரம் ரூபாயை வழங்­கிக் கொண்­டி­ருக்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம், இனி உங்­கள் உரி­மைத்­தொகை நாம் ஆட்­சிக்கு வந்­த­தற்­குப் பிறகு, ஆயி­ரம் அல்ல… இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சுப் பள்­ளி­யில் படித்து கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாணவ – மாண­வி­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், இனி இந்­தத் தொகை ஆயி­ரத்து 500 ரூபா­யாக உய­ரப் போகி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">19 இலட்­சம் பள்ளி மாண­வர்­க­ளுக்கு சூடா­க­வும் – சுவை­யா­க­வும் சத்­தான உணவை வழங்­கும் காலை உண­வுத் திட்­டம்! இந்­தத் திட்­டம் இப்­போது ஐந்­தாம் வகுப்பு வரை… 2.0 ஆட்சி வந்­த­தற்கு பிறகு எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கம் செய்­யப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல இலட்­சம் உயிர்­க­ளைக் காக்­கும் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வழி­காட்­டும் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விபத்­தில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிய பல்­லா­யி­ரம் பேரு­டைய உயிர்­க­ளை­யும் குடும்­பங்­க­ளை­யும் காப்­பாற்­றிய இன்­னு­யிர் காப்­போம் நம்­மைக் காக்­கும் 48 திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாதம் பாது­காப்­போம் திட்­டம், இத­யம் காப்­போம் திட்­டம், சிறு­நீ­ர­கப் பாது­காப்­புத் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அரசே பின்­பற்­றப் போவ­தா­கச் சொல்­லி­யி­ருக்­கும் தோழி விடு­தித் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டார்ட்–­அப் தமிழ்­நாடு மற்­றும் அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி நாள் முழு­வ­தும் என்­னால் பட்­டி­ய­லிட முடி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021–இல் திரா­விட மாடல் ஆட்­சிக்­காக உங்­க­ளு­டைய ஆத­ர­வைக் கேட்டு வரும்­போது, அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்­கான தொலை­நோக்­குப் பார்­வையை உறு­தி­மொ­ழி­க­ளா­கக் கொடுத்­து­விட்­டுத்­தான் நான் வாக்­குக் கேட்­டேன். அந்த அடிப்­ப­டை­யில், எதிர்­கா­லத் தமிழ்­நாட்டை கட்­ட­மைக்­கப் போகும் செயல்­திட்­டத்தை சூப்­பர்ஸ்­டா­ராக கள­மி­றக்­கி­யி­ருக்­கி­றோம்! சூப்­பர்ஸ்­டார் யாரு? சூப்­பர் ஸ்டாரு யாருனு கேட்டா… சின்­னக் குழந்­தை­கள்­கூ­டச் சொல்­லும். அது­தான் நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ரூ.8 ஆயி­ரம் கூப்­பனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நன்கு பயன்­ப­டுத்­துங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதில், என்­னென்ன ஹைலைட்? இங்­கி­ருக்­கும் மக­ளிரை நான் கேட்­கி­றேன்... உங்­கள் அண்­ணன் இந்த ஸ்டாலின் கொடுக்­கப் போகும் கூப்­பன் எவ்­வ­ளவு? எட்­டா­யி­ரம் ரூபாய்! மக­ளிர் எல்­லாம் இப்­போதே வீட்­டுக்கு என்ன புதிய பொருள் வாங்­க­லாம் என்று டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள்! இந்­தக் கூப்­பனை வைத்து உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொரு­ளைப் புதி­ய­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம், இல்­லை­யென்­றால் பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்து புதிய பொரு­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் – உங்­க­ளுக்­குப் பிடித்த பிராண்டை வாங்­கிக்­கொள்­ள­லாம்! தய­வு­செய்து வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் கேட்­டு­வி­டா­தீர்­கள். உங்­களை குழப்­பி­வி­டு­வார்­கள். ஏதா­வது பிரச்­சினை பண்­ணி­வி­டு­வார்­கள். ஏதா­வது பிரச்­சினை என்­றால், இந்த அண்­ண­னி­டம் சொல்­லுங்­கள். நான் பார்த்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, 20 இலட்­சத்­துக்­கும் அதி­க­மான உழ­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில் நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­களை வழங்­கப் போகி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி படித்து முடித்த 5 இலட்­சம் இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில் நான் முதல்­வன் திட்­டத்­தில் ஆயி­ரத்து 500 ரூபாய் உத­வித் தொகை­யோடு 6 மாதம் பயிற்சி வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை ஆயி­ரத்து 200 ரூபா­யி­லி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக வீடற்ற ஏழை­க­ளுக்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 லட்­சம் வீடு­கள் கட்­டித் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேற்கு மாவட்­டங்­க­ளில் தொழில் மற்­றும் வேளாண் வளர்ச்­சியை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்ல, 2 ஆயி­ரம் கோடி ரூபா­யில் சிறப்­புத் தொழில் வளர்ச்­சித் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொலை­நோக்­குப் பார்­வை­யோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">செயல்­ப­டுத்­தப்­ப­டும் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாமக்­கல்­லில் ஜவு­ளிக் குழு­மம் என ஏரா­ள­மான திட்­டங்­களை அறி­வித்­தி­ருக்­கி­றோம். நாங்­கள் சொன்­னால் சொன்­ன­தைச் செய்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி நாட்டு மக்­க­ளுக்கு நல்­ல­தைச் செய்ய வேண்­டும் என்று தொலை­நோக்­குப் பார்­வை­யோடு நாம் செயல்­பட்­டுக் கொண்­டி­ருந்­தால், எப்­ப­டி­யெல்­லாம் பின்­னோக்கி இழுக்­க­லாம் என்று பா.ஜ.க. சதித் திட்­டம் போடு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தெற்கு மறு­ப­டி­யும் தேய வேண்­டும் என்று பா.ஜ.க. உரு­வாக்­கி­யி­ருக்­கும் லேட்­டஸ்ட் பிளான்­தான், இந்த தொகுதி மறு­சீ­ர­மைப்பு! தொகுதி மறு­சீ­ர­மைப்பு அநீ­திக்கு எதி­ராக நாம் நடத்­திக் கொண்­டி­ருப்­பது போராட்­டம் இல்லை, போர்! போர்­கள் ஒன்­றும் தமிழ்­நாட்­டுக்கு புதி­யது இல்லை! முத­லில் சமூ­க­நீ­திப் போர்! இட­ஒ­துக்­கீட்­டுக்கு ஆபத்து வந்­த­போது, இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தையே முத­லில் திருத்த வைத்­தது தமிழ்­நா­டு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, மொழிப்­போர்! தாய் கொடுத்த உயி­ரைத் தாய் மொழிக்­குத் தந்து கட்­டாய இந்­தியை விரட்­டிய வீரம் செறிந்த வர­லாற்­றுக்­குச் சொந்த மண், நம்­மு­டைய தமிழ்­நாடு! இந்­தப் போரில்­தான் நேரு­வின் உறு­தி­மொ­ழி­யும் வந்­தது, பேர­றி­ஞர் அண்­ணா­வும் இரு­மொ­ழிக் கொள்­கையை உரு­வாக்­கி­னார்! இப்­போது நடப்­பது தமிழ்­நாட்­டின் அர­சி­யல் உரி­மைக்­கான போர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் இந்­தப் போர் என்­றால், இந்­திய விடு­த­லைக்­குப் பிறகு இந்­திய நாட்­டில் பசி­யும் வறு­மை­யும் அதி­க­மாகி இருக்­கி­றது, இதைச் சரி செய்ய வேண்­டும் என்­றால் மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று சொன்­னார்­கள். அதில் இருக்­கும் நியா­யத்தை உணர்ந்து நாட்­டின் முன்­னேற்­றத்­தை­யும் – தேச நல­னை­யும் மன­தில் வைத்­துக் கொண்டு, நம்­மு­டைய தமிழ்­நா­டும் – இன்­னும் பல மாநி­லங்­க­ளும் குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டத்தை முறை­யாக செயல்­ப­டுத்­தி­னோம். இப்­போது என்­ன­வென்­றால், உங்­கள் மாநில மக்­கள்­தொ­கைக்கு ஏற்­றாற்­போல் தொகுதி மறு­சீ­ர­மைப்பு செய்­யப் போகி­றோம் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பின்­பற்­றி­ய­தால் நமக்கு அநீதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்மை என்­ன­வென்­றால், இதே கால­கட்­டத்­தில் மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­தா­மல் இருக்­கும் சில மாநி­லங்­க­ளுக்­குத்­தான் விகி­தாச்­சா­ரப்­படி அதிக இடம் கிடைக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புரி­யும்­ப­டிச் சொல்ல வேண்­டும் என்­றால், 1971 சென்­சஸ்­படி, தமிழ்­நாட்­டின் மக்­கள் தொகை 4 கோடி. உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் மக்­கள் தொகை எட்டு கோடி. இன்­றைக்கு, தமிழ்­நாட்­டின் மக்­கள் தொகை எட்டு கோடி. ஆனால், உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் மக்­கள் தொகை 20 கோடிக்­கும் மேல் இருக்­கும் என்று சொல்­கி­றார்­கள்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமக்­கும் அவர்­க­ளுக்­கும் மூன்று மடங்கு வித்­தி­யா­சம்.. இப்­படி இருக்­கும்­போது, மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் தொகு­தி­க­ளைப் பிரித்­தால் அது நியா­ய­மாக இருக்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனை உணர்ந்­து­தான், இந்­திரா காந்தி அவர்­க­ளும் – வாஜ்­பாய் அவர்­க­ளும் தொகுதி மறு­சீ­ர­மைப்பு முடி­வைத் தள்­ளிப் போட்­டார்­கள்... இப்­போது இந்­தத் திட்­டத்தை இவ்­வ­ளவு அவ­சர அவ­ச­ர­மாக மோடி செய்ய வேண்­டிய ரக­சி­யம் என்ன? இப்­ப­டி­யொரு அநீதி நடந்­தால் நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­நாட்­டின் குரல் வலு­வி­ழந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொகுதி மறு­சீ­ர­மைப்­பால் ஆபத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய எம்.பி.க்களுக்கு பவர் இல்லை என்­றால் டெல்லி அதி­கார வர்க்­கம் தமிழ்­நாட்­டைப் பற்­றிச் சிந்­திக்­குமா? நமக்கு எந்­தத் திட்­ட­மா­வது கிடைக்­குமா? தென்­னிந்­தி­யா­வில் இருந்து பிர­த­மர் உரு­வாக வேண்­டும் என்­பது நடக்­கவே நடக்­காது. இனி அதை நாம் எதிர்­பார்க்­கவே முடி­யாது. சொந்த நாட்­டுக்­குள்­ளேயே தமிழ்­நாடு மக்­கள் இரண்­டாம்­த­ரக் குடி­மக்­க­ளாக மாற்­றப்­ப­டு­வதை அனு­ம­திக்­க­லாமா? இந்த ஆபத்­து­தான் தொகுதி மறு­சீ­ர­மைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் என்ன கேட்­கி­றோம், கூட்­டாட்­சித் தத்­து­வத்­தையே ஒழிக்க நினைக்­கா­தீர்­கள். வரிப்­ப­ணத்­திற்கு மட்­டும்­தான் தமிழ்­நாடு உங்­க­ளுக்­குத் தேவையா? பா.ஜ.க.வின் அதி­கார திமிரை அடக்­கும் காலம் வந்­து­விட்­டது. தலை­வர் கலை­ஞர் பரா­சக்­தி­யில் வச­னம் எழு­தி­யி­ருப்­பார், இந்த நீதி­மன்­றம் பல விசித்­தி­ர­மான வழக்­கு­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றது என்றுஎழு­தி­யி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, நம்­மு­டைய நாடும் எத்­த­னையோ பிர­த­மர்­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றது! ஆனால் பிர­த­மர் மோடி அவர்­கள் மாதிரி மாநி­லங்­களை நசுக்­கி­ய­வர்­கள் யாரும் கிடை­யாது. இத்­த­னைக்­கும் குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, மாநில உரி­மை­கள் பற்றி வக்­க­ணை­யா­கப் வாய்­கி­ழி­யப் பேசிக் கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மோடி குஜ­ராத் முதல்­வ­ராக இருந்­த­போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அர­சின் அதி­கா­ரக் குவிப்பை எதிர்த்­த­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னென்ன பேசி­னார்? ஒன்­றிய அரசு வரி வரு­வா­யி­லி­ருந்து மாநி­லங்­க­ளுக்கு 50 விழுக்­காட்­டைத் தர வேண்­டும் என்று சொன்­னார். மாநி­லங்­க­ளுக்கு அதிக அதி­கா­ரம் வேண்­டும் என்று சொன்­னார். ஒன்­றிய அர­சு­க­ளு­டைய அதி­கா­ரக் குவிப்­பைக் கடு­மை­யாக எதிர்த்­தார். இதெல்­லாம் குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருந்த மோடி அவர்­கள் சொன்­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இப்­போது, மாநில அதி­கா­ரங்­க­ளைப் பறித்து ஒன்­றி­யத்­தில் குவிக்­கி­றார். மாநி­லங்­கள் உரி­மை­யைக் கேட்­பது வேப்­பங்­கா­யா­கக் இப்­போது கசக்­கி­றது. மொத்­தத்­தில் கூட்­டாட்­சிக் கருத்­தி­ய­லையே குழி­தோண்­டிப் புதைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல்­மு­றை­யா­கப் மோடி அவர்­கள் பிர­த­ம­ரா­ன­போது நாடா­ளு­மன்­றத்­துக்கு முன்­னால் பவ்­ய­மாக விழுந்து கும்­பிடு போட்­டார் நம்­மு­டைய பிர­த­மர், இப்­போது நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­திற்கே ஒரே அடி­யா­கக் கும்­பிடு போட வேண்­டும் என்று நினைக்­கி­றார். அது­தான் தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­மா­நி­லங்­க­ளின் உரி­மை­க­ளைப் பறிக்­கும் தொகுதி மறு­சீ­ர­மைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆர்.எஸ்.எஸ். விரும்­பும் ஒரே நாடு – ஒரே அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கொள்­கையை நிலை­நாட்­டப் பார்க்­கி­றார்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் இட­ஒ­துக்­கீடு என்று அவர்­கள் சொல்­வது பம்­மாத்து வேலை. உண்­மை­யி­லேயே அது­தான் நோக்­கம் என்­றால், 2023–இல் மக­ளிர் இட­ஒ­துக்­கீடு மசோ­தாவை நிறை­வேற்­றி­ய­போது, 2029–க்குப் பிறகு என்று சொன்­னார்­கள்? ஏனென்­றால் மக­ளிர் முன்­னேற்­றம் இவர்­க­ளின் நோக்­கம் இல்லை; இவர்­க­ளின் நோக்­கம் ஆர்.எஸ்.எஸ். விரும்­பும் ஒரே நாடு, ஒரே அரசு! அதற்­கா­கத்­தான் அர­சி­யல் சட்­டத்­தைக் காலால் மிதித்து இவ்­வ­ளவு அட்­டூ­ழி­யங்­க­ளை­யும் செய்­கி­றார்­கள். இதை எப்­ப­டித் தமிழ்­நாடு ஒத்­துக் கொள்ள முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் இருக்­கும் கடைக்­கோடி மனி­தர்­க­ளும் இன்­றைக்கு எதிர்த்­துப் பேசிக் கொண்டு இருக்­கி­றோம். ஆனால், இந்த அநீ­திக்­கும் ஆத­ர­வா­கப் பேசும் ஒரு மனி­தர் இருக்­கி­றார் என்­றால், அவர்­தான், அர­சி­யல் அவ­மா­ன­மா­கப் பார்க்­கப்­ப­டும் அடி­மை­சாமி! புரி­கி­றதா, அடி­மை­சாமி என்று யாரை சொல்­கி­றேன் என்று...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு நாட்­டில் இவ்­வ­ளவு பிரச்­சினை நடந்து கொண்டு இருக்­கி­றது. பழ­னி­சாமி என்ன பேசி­யி­ருக்­கி­றார் என்­றால்... டீ–லி­மிட்­டே­ஷ­னால் தமிழ்­நாட்­டிற்கு ஆபத்து வராது என்று அமித் ஷா சொல்­லி­யி­ருக்­கி­றார் என்று பேசி­யி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டிற்­குப் பாதிப்பு இருக்­காது என அமித் ஷாவே சொல்­லிட்­டார் என்று பழ­னி­சாமி பேசு­கி­றார். ஒன்­றிய அரசு சிறப்­பா­கச் செய்­வார்­கள் என்று பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமித் ஷா எங்கே சொன்­னார்? தேர்­தல் பிர­சா­ரத்­தில்! நாங்­கள் என்ன கேட்­டோம்? நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துப் பிர­த­மர் வாக்­கு­றுதி தர வேண்­டும் என்று கேட்­கி­றோம். எங்­க­ளுக்­குப் பேப்­ப­ரில், சட்­ட­பூர்­வ­மாக நாடா­ளு­மன்­றத்­தில், உறு­தி­மொழி வேண்­டும்! 1971 மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில்­தான் அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்­குத் தொகுதி அளவு இருக்­கும் என்­கிற உறு­தி­மொழி வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அமித்ஷா சொல்­வதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அடிமை பழ­னி­சாமி நம்­பு­கி­றார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் கூட்­டத்­தில் அமித்ஷா சொன்­ன­தை­யெல்­லாம் தண்­ணீ­ரில்­தான் எழுதி வைக்க வேண்­டும். கூட்­ட­ணி­யில் இருக்­கும் பாவத்­திற்கு அடிமை பழ­னி­சாமி வேண்­டு­மா­னால், அதை­யெல்­லாம் நம்­ப­லாம்! தி.மு.க.வோ – தி.மு.க. ஆளும் தமிழ்­நாடோ – வேல்யூ இல்­லாத உங்­க­ளு­டைய வெற்று வார்த்­தை­களை நம்­பாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி இப்­போது தொகுதி மறு­சீ­ர­மைப்பு பற்­றிப் பேசு­கி­றார்… “ஆபத்து வரும் பின்னே… பழ­னி­சா­மி­யின் லா பாயிண்ட் வரும் முன்னே” என்று, இதனை நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத்­தான் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தனி­ம­னி­தர்­க­ளை­விட நமக்கு தமிழ்­நா­டு­தான் பெரிது! எனவே, தமிழ்­நாட்டை வட்­ட­மி­டும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்­டி­ய­டிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டபுள் எஞ்­சின், டப்பா எஞ்­சின் என்று சொல்­லிக் கொண்டு டெல்­லி­யி­னு­டைய ரிமோட் கண்ட்­ரோ­லுக்கு அடி­மை­கள்தமிழ்­நாட்­டில் ஆடக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு, ராசி­பு­ரத்­தில் மதி­வேந்­தன் அவர்­க­ளுக்­கும், திருச்­செங்­கோட்­டில் ஈஸ்­வ­ரன் அவர்­க­ளுக்­கும், நாமக்­கல்­லில் ராணி அவர்­க­ளுக்­கும், சேந்­த­மங்­க­லத்­தில் பூம­லர் அவர்­க­ளுக்­கும், குமா­ர­பா­ளை­யத்­தில் எஸ். பாலு அவர்­க­ளுக்­கும், பர­மத்தி வேலூ­ரில் மூர்த்தி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முழு­வ­தும் முட்டை சப்ளை செய்­வது நாமக்­கல்­தான்! அப்­ப­டிப்­பட்ட நீங்­கள் என்.டி.ஏ. எனும் தமிழ்­நாட்­டுக்கு விரோ­த­மான கூட்­ட­ணிக்­கும் நாமக்­கல்­லில் பெரிய முட்­டை­யைப் போட்டு அனுப்ப வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை காத்­திட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தி.மு.கழக கூட்­ட­ணியை ஆத­ரிப்­பீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீண்­டும் சொல்­கி­றேன்... தமிழ்­நாடு அணியா அல்­லது டெல்லி அணியா என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு நம்­மு­டைய தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, அனை­வ­ரும் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும் என்று கலை­ஞ­ரின் மக­னா­கக் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து அமை­ய­வுள்ள நம்­மு­டைய திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் எங்­க­ளு­டைய சாத­னை­களை நாங்­களேமுறி­ய­டிப்­போம்! இது உங்­க­ளுக்கு இந்த ஸ்டாலின் தரக்­கூ­டிய கேரண்டி! நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>