<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,290,958,1298" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 18 2026 03:57:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260418T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18042026-MDU-10" position.sequence="10" ex-ref="18042026-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளர்  அமைச்சர் மூர்த்தியை ஆதரித்து </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Mdspeech164_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Mdspeech1641_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மதுரை, ஏப். 18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மது­ரை­யில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், மதுரை கிழக்கு தொகுதி வேட்­பா­ளர்  அமைச்­சர் மூர்த்­தியை ஆத­ரித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­பான வர­வேற்பு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் முத­லில் என் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை கிழக்­குத் தொகு­தி­யில் நம் வெற்றி வேட்­பா­ளர் அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளுக்கு நீங்­க­ளெல்­லாம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில், அதா­வது 50,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து கடந்த முறை சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­வைத்­தீர்­கள். நம் தலை­வர் அவரை அமைச்­ச­ராக்கி, அழகு பார்த்­தார்­கள். இந்த முறை, குறைந்­தது ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் மூர்த்தி அவர்­களை வெற்றி பெறச் செய்து அனுப்ப வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மது­ரைக்கு வந்­தால், தனி ஆற்­றல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்று விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் பிரச்­சா­ரத்தை முடித்­து­விட்டு நேற்­றி­ர­வு­தான் மது­ரைக்­குள் நுழைந்­தேன். எப்­பொ­ழுது மது­ரைக்­குள் வந்­தா­லுமே அது ஒரு தனிச் சிறப்பு, தனி ஆற்­றல் வந்­து­வி­டும். அந்த அள­வுக்­குப் பாசக்­கார மக்­கள்­தான் இந்த மதுரை மக்­கள். உங்­க­ளி­டம் பாச­மும் அதி­க­மாக இருக்­கும், அதே நேரத்­தில் கோப­மும் அதி­க­மாக இருக்­கும். ஆனால், பாச­மாக இருந்­தா­லும் கோப­மாக இருந்­தா­லும் அதில் ஒரு நியா­யம் இருக்­கும். அத­னால், வரு­கின்ற தேர்­த­லில் உங்­க­ளின் பாசத்தை நம் தி.மு.க கூட்­டணி, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி, நம் வெற்றி வேட்­பா­ளர் அண்­ணன் மூர்த்தி அவர்­கள் மேல் வைத்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த மதுரை மண்­தான் சங்­கம் வைத்­துத் தமிழ் வளர்த்த மண். இன்று பாசிச பா.ஜ.க-வால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்­தி­ருக்­கி­றது, நம் தமிழ்­நாட்­டுக்கு ஆபத்து வந்­தி­ருக்­கி­றது, தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளுக்கு ஆபத்து வந்­தி­ருக்­கி­றது. நம் உயி­ருக்கு நிக­ரான தமிழ் மொழி­யை­யும் தமிழ்­நாட்­டை­யும் பாது­காப்­பது எவ்­வ­ளவு முக்­கி­யம் என்று மதுரை மக்­க­ளுக்கு நான் சொல்­லித் தர வேண்­டிய அவ­சி­யம் இல்லை. தமிழ்­நாட்­டைப் பாது­காப்­ப­தற்­கான தேர்­தல்­தான் வரப்­போ­கின்ற இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல். மதுரை மக்­கள் நீங்­கள் எப்­போ­துமே விழிப்­பு­ணர்­வோடு இருப்­பீர்­கள். அத­னால்­தான் மது­ரையை எப்­பொ­ழு­துமே தூங்கா நக­ரம் என்று சொல்­வார்­கள். அர­சி­யல் விழிப்­பு­ணர்ச்­சி­யி­லும் இந்த மது­ரை­தான் என்­றைக்­குமே தூங்கா நக­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சங்­கி­கள் என்­ன­தான் கல­வ­ரம் செய்ய, என்­ன­தான் திட்­டம் போட்டு வந்­தா­லும், நீங்­கள் அனை­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து அவற்­றை­யெல்­லாம் ஒவ்­வொரு முறை­யும் நீங்­கள் முறி­ய­டித்­துக் காட்­டு­கி­றீர்­கள். அதற்கு இந்த மது­ரையே சாட்சி. சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது இதே மது­ரை­யில் இருந்­து­தான் `எய்ம்ஸ்’ செங்­கலை எடுத்­துக்­கொண்டு சென்று தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரம் செய்­தேன். எப்­படி ஒன்­றிய பா.ஜ.க அரசு தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­டத்­தை­யும் கொடுப்­பது இல்லை. எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அடிக்­கல் நாட்டி, 11 வரு­டம் ஆகி­றது என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். இப்­போது வரை திறப்­ப­தற்­கான வழி கிடை­யாது. பார்த்­துப் பார்த்­துச் செதுக்­கிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே மாதி­ரி­தான் தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­டத்­தை­யும் ஒன்­றிய அரசு கொடுப்­பது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நம்­பிக்­கைக்­கு­ரிய வெற்றி வீரர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளைப் பற்றி உங்­க­ளி­டம் நான் அதி­கம் சொல்ல விரும்­ப­வில்லை. உங்­க­ளுக்­கான அறி­மு­கம் தேவை­யில்லை. உங்­கள் அனை­வ­ருக்­கும் நன்கு அறி­மு­க­மா­ன­வர்­தான் அண்­ணன் மூர்த்திஅவர்­கள். நம் கழ­கத் தலை­வ­ரின் நம்­பிக்­கைக்­கு­ரிய ஒரு வெற்றி வீரர், செயல் வீரர். எனக்கு என்ன பெருமை என்­றால், நான் இளை­ஞர் அணி­யின்செய­லா­ளர், அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளும் இளை­ஞர் அணி­யி­லி­ருந்து, உழைத்து படிப்­ப­டி­யாக கழ­கப் பணி­யாற்றி முன்­னுக்கு வந்­த­வர். இளை­ஞர் அணி­யில் பணி­யாற்றி ஒன்­றி­யச் செய­லா­ளர், மாவட்­டச் செய­லா­ளர், இப்­போது சட்­ட­மன்ற உறுப்­பி­னர், அமைச்­சர் என்று ஒவ்­வொரு படி­யி­லும் தன் உழைப்­பின் மூலம் நிரூ­பித்து, தலை­வ­ரின் 
அன்­பைப் பெற்­ற­வர், பாசத்­தைப் பெற்­ற­வர், குறிப்­பாக, இந்­தப் பகுதி மக்­க­ளான உங்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்­ற­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­ணன் மூர்த்தி அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வையுங்­கள் என்று, அன்று கேட்­டோம். இன்று மீண்­டும் உங்­க­ளி­டம் உரி­மை­யாக வந்து கேட்­கி­றோம், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளி­யுங்­கள். அண்­ணன் மூர்த்தி அண்­ணனை வெற்றி பெற வையுங்­கள் என்று. எந்த உரி­மை­யில் கேட்­கி­றோம்? பல சாத­னை­களை, பல திட்­டங்­களை இந்­தத் தொகு­திக்கு அண்­ணன் மூர்த்தி அவர்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார். ஒரு சில திட்­டங்­களை மட்­டும் இங்கே நான் எடுத்­துக்­காட்­டா­கக் கூற விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மதுரை  திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சத்­தி­ரப்­பட்டி, காவ­னூர், குல­மங்­க­லம் மற்­றும் வீர­பாண்டி உள்­ளிட்ட 900 ஊராட்­சி­க­ளுக்கு 1,600 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில் பிரம்­மாண்ட கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளு­டைய முயற்­சி­யால் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் வண்­டி­யூர் ஏரியை அழ­குப்­ப­டுத்­து­கின்ற பணி நடை­பெ­று­கி­றது என்­றால், அதற்­குக் கார­ணம் உங்­க­ளின் அமைச்­சர் அண்­ணன் மூர்த்தி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை கொச்சி சாலை­யில் போக்­கு­வ­ரத்து வச­திக்­காக 53 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுப் புதிய மேம்­பா­லம் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. அது­வும் அண்­ணன் மூர்த்தி அண்­ண­னின் முயற்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சக்­கி­மங்­க­லத்­தில் 98 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், ஒரு அடுக்­கு­மாடி தொழில் பேட்டை (Multi Storey Industrial Estate) அமைக்­கும் பணி வந்­தி­ருக்­கி­றது என்­றால், உங்­க­ளின் அமைச்­சர் அண்­ணன் மூர்த்தி அவர்­கள், அவ­ரு­டைய உழைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">117 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திண்­டுக்­கல் சாலை முதல், தெப்­பக்­கு­ளம் வரை வைகை தென்­க­ரைச் சாலை இன்று போடப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">84 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மதுரை கிழக்கு ஒன்­றி­யத்­தில் 158 கிலோ மீட்­டர் நீளத்­துக்கு கிரா­மச் சாலை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாலைப்­பட்டி ஊராட்­சி­யில் புதிய நியா­ய­ வி­லைக் கடை, நீர்த்­தேக்­கத் தொட்டி மற்­றும் குடி­நீர்க் குழாய் இணைப்­பு­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிழக்கு ஒன்­றி­யப் பகு­தி­யில் 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு மருத்­து­வக் கட்­ட­மைப்­புப் பணி நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சத்­தி­ரப்­பட்டி ஊராட்­சி­யில், புதிய மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி மற்­றும் 161 குடி­நீர்க் குழாய் இணைப்­பு­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­மோ­கூர் ஊராட்­சி­யில் புதிய கிராம மக­ளிர் குழுத் தொழிற்­கூ­டம், வரிச்­சி­யூர் ஊராட்­சி­யில் புதிய உணவு தானி­யச் சேமிப்­புக் கிடங்கு, சக்­குடிமற்­றும் கருப்­பா­யூ­ரணி ஊராட்­சி­யில் புதிய அங்­கன்­வாடி மையக் கட்­ட­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளை­யும் செய்து கொடுத்­து­விட்­டுத்­தான் இன்று மீண்­டும் அவ­ருக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள், இந்த மதுரை கிழக்­கில் அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப் பெரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­ப­தற்கு நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கருப்­புச்­சட்டை அணிந்­தது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் அவர்­கள் தொடர்ந்து சொல்­வது மாதிரி, இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணியா, தமிழ்­நாடு அணியா? தமிழ்­நாடு அணி நாம் வென்று காட்ட வேண்­டும், டெல்லி அணியை வீழ்த்­தி­யாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று ஒரு முக்­கி­ய­மான நாள். உங்­க­ளுக்­குத் தெரி­யும், இன்று காலை­யில் நம் தலை­வர் அவர்­கள் நாமக்­கல்­லில் பெரிய எதிர்ப்­பைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். ஒன்­றிய பா.ஜ.க. அரசு இன்று நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்டி, `தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தா’வை இன்று நிறை­வேற்­றப் பார்க்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டுக்கு, பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்ற வகை­யில் இந்­தத் தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தாவை, நாம் எதிர்ப்பு தெரி­விப்­ப­தால்­தான் இன்று நான் கருப்­புச்­சட்டை அணிந்­து­கொண்டு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுக்கு 59 வர வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம் தலை­வ­ரின் வேண்­டு­கோள்­படி இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் வீடு­க­ளில், கடை­க­ளில், தெருக்­க­ளில் எல்­லாம் நாம் கருப்­புக் கொடி­க­ளைப் பறக்க விட்­டுள்­ளோம். தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தாவை ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்டு மக்­க­ளா­கிய நாம் அனை­வ­ரும் சேர்ந்து அதை எதிர்க்க வேண்­டும். ஏனென்­றால், மக்­கள் தொகையை அடிப்­ப­டை­யாக வைத்து ஒவ்­வொரு மாநி­லத்­தின் எம்.பி.க்கள் எண்­ணிக்­கையை நிர்­ண­யிக்­கப் போகி­றார்­கள். அப்­ப­டிச் செய்­யும்­போது நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­நாட்­டின் பிர­தி­நி­தித்­து­வத்­தைக் குறைக்க முயற்சி செய்­கி­றார்­கள். இப்­போது தமிழ்­நாட்­டுக்கு 39 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­கள். அதை அவர்­கள் சரி­யா­கப் பிரித்­துக் கொடுத்­தார்­கள் என்­றால், 59 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தமிழ்­நாட்­டுக்கு வர வேண்­டும். ஆனால், இன்று ஒன்­றிய அரசு, என்ன திட்­டம் போடு­கி­றார்­கள் தெரி­யுமா? தமிழ்­நாட்­டுக்கு வெறும் 47 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மட்­டும் ஒதுக்­கீடு செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டுக்கு 12 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்  குறை­யப் போகி­றார்­கள். ஏன் குறை­கி­றார்­கள்?  அன்று, ஒன்­றிய அரசு குடும்­பக் கட்­டுப்­பாடு செய்து, மக்­கள் தொகை­யைக் குறைக்க வேண்­டும் என்று ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­கும் சொன்­னார்­கள். மற்ற மாநி­லங்­கள், வட மாநி­லங்­கள் எல்­லாம் அதைச் சரி­யா­கச் பின்­பற்­ற­வில்லை.  ஆனால், நம் தமிழ்­நாடு, தமிழ்­நாட்டு மக்­கள் மட்­டும் அதைச் சரி­யா­கச் செய்து இன்று மக்­கள் தொகையை நாம் கட்­டுப்­ப­டுத்தி இருக்­கி­றோம். நாம் ஒன்­றிய அரசு ஒரு விஷ­யத்­தைச் சொன்­ன­த­னால், அதைச் சரி­யா­கச் செய்­த­த­னால் இன்று நம் உரி­மை­களை ஒன்­றிய அரசு பறிக்­கப்­பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்ப்­புத் தெரி­வித்­தோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதைத்­தான் சென்ற வரு­டமே நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சென்­னை­யில் அனைத்­துக்­கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்டி எல்லா முத­ல­மைச்­சர்­கள், எல்லா தலை­வர்­க­ளை­யும் வைத்து நாம் எதிர்ப்பு தெரி­வித்­தோம். ஆனா­லும், ஒன்­றிய பா.ஜ.க. அரசு இந்த மசோ­தாவை இன்று அவ­சர அவ­ச­ர­மா­கக் கொண்டு வரு­கி­றது. தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு குடும்­ப­மும் இந்த மசோ­தாவை நாம் எதிர்க்க வேண்­டும் என்று தலை­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் நாம் இருப்­ப­தால், நம்­மை­யெல்­லாம் திசை­தி­ருப்பி, இந்த நேரத்­தைப் பயன்­ப­டுத்­தித் தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தா­வைக் கொண்டு வரு­வ­தற்கு ஒன்­றிய பா.ஜ.க அரசு இன்று முயற்சி செய்­கி­றது. பா.ஜ.க-வின் சூழ்ச்சி தமிழ்­நாட்­டில் என்­றைக்­குமே எடு­ப­டாது. அதை இந்த வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் அதை நிரூ­பித்­துக் காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் பறி­போ­வதை இனி­மேல் நம்­மால் வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்க முடி­யாது. தமிழ்­நாட்­டின் உரி­மை­யைப் பறிக்­கின்ற இந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றைக்கு எதி­ரா­கத் தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு குடும்­ப­மும் வீதிக்கு வந்து நாம் போராட வேண்­டும். இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் சட்ட நகலை எரிக்­கி­றோம். நம் தலை­வர் அவர்­கள் நாமக்­கல்­லில் எரித்­தார்­கள். நாம் அனை­வ­ரும் சேர்ந்து அந்­தச் சட்ட நகலை இன்று இங்கே எரிக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உத­ய­சூ­ரி­யன்சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட பாசிஸ்­டு­க­ளுக்­கும் அடி­மை­க­ளுக்­கும் சரி­யான பாடத்­தைக் கற்­றுக் கொடுக்க வேண்­டிய தேதி ஏப்­ரல் 23 சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­றப் போகி­றது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்­ணிக்கை. வாக்கு எண்­ணிக்­கை­யின் பொழுது மீண்­டும் நம் தலை­வர்­தான் முத­ல­மைச்­ச­ராக வரப்­போ­வதுஉறுதி. அதற்கு மேலும் வலு­சேர்க்­கும் வித­மாக இந்த மதுரை கிழக்­குத் தொகு­தி­யில் அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளுக்கு, அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்­துப் மிகப் பெரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் பல வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றார், அந்த வாக்­கு­று­தி­க­ளை­யும் உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். மீண்­டும் ஆட்சி அமைத்­தோம் என்­றால், மக­ளிர் உரி­மைத்­தொகை 1,000-லிருந்து 2,000-ஆக உயர்த்­தித் தரு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காலை உண­வுத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை உண­வுத் திட்­டம்: அர­சுப் பள்­ளி­யில் படிக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் காலை­யில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தார்­கள் என்­றால், பசி­யோடு படிக்­கக் கூடாது என்று முத­ல­மைச்­சர் காலை 
உண­வுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ஐந்­தாம் வகுப்பு வரை கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம், இப்­போது அதை எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப் போகி­றோம் என்று சொல்லி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்து படித்­தா­லும் அவர்­க­ளுக்­குக் கல்வி உத­வித்­தொகை 1,000 ரூபாய் வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம். 14 லட்­சம் மாணவ, மாண­வி­கள் ஆண்­டு­தோ­றும் பயன்­பெ­று­கி­றார்­கள். அந்­தக் கல்வி உத­வித்­தொ­கையை இப்­போது 1,500-ஆக உயர்த்­து­வேன் என்று நம் முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை மாதம் 1,200 ரூபாய் வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது நம் அரசு. அதை உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்­போம் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">35 இலட்­சம் மடிக்­க­ணி­னி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 50 இலட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புத் திட்­டத்தை உரு­வாக்­கு­வோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து வரு­டத்­தில் 35 இலட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 10 இலட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அவர்­கள் அனை­வ­ருக்­கும் கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டத்­தின் கீழ் வீடு வழங்­கு­வோம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மின்­சா­த­னப் பொருட்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை எல்­லா­வற்­றை­யும்­விட முக்­கி­ய­மான வாக்­கு­றுதி உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஆட்சி அமைத்த உடனே நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒவ்­வொரு மக­ளிர் கைக­ளி­லும் 8,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­து­வி­டு­வார்­கள். அந்த 8,000 ரூபா­யைப் பயன்­ப­டுத்தி நீங்­கள் உங்­கள் வீட்­டிற்­குத் தேவை­யான மின்­சா­த­னப் பொருட்­கள் எது­வாக இருந்­தா­லும் அதை நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்­றிக் கொடுக்க வேண்­டும் என்­றால், வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இந்த மதுரை கிழக்­கில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யி­டும் அண்­ணன் மூர்த்தி அவர்­களை நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து, அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வையுங்­கள். அவரை மீண்­டும் நம் தலை­வர் அவர்­கள் அமைச்­ச­ராக்கி, இந்­தத் தொகு­திக்கு என்­னென்ன தேவையோ அத்­தனை திட்­டங்­க­ளை­யும் அவர் செய்து கொடுப்­பார் என்ற வாக்­கு­று­தி­யைக் கொடுத்து, இந்த அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­சர் பி.மூர்த்தி, மாவட்ட அவைத் தலை­வர் எம்.ஆர்.எம்.பால­சுப்­ர­ம­ணி­யம், சோம­சுந்­த­ர­பாண்­டி­யன், ஆசைக்­கண்­ணன், ரோகிணி பொம்­ம­தே­வன், வெங்­க­டே­சன், வடி­வேல் முரு­கன், கே.பி.பூமி­நா­தன், ஜெயக்­கு­மார், இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர் ஜி.பி.ராஜா, ஒன்­றிய பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள் சிறைச்­செல்­வன், ஏ.பி.ரகு­பதி, மதி­வா­ணன், முக­மது காதர், ஹக்­கீம், சசி­கு­மார், கௌரி சங்­கர், பாண்­டி­ய­ரா­ஜன், மரு­து­பாண்­டி­யன், துரை­பாண்­டி­யன், சார்பு அணி­க­ளைச் சேர்ந்த மாநில நிர்­வா­கி­கள் நேரு பாண்­டி­யன், கலை கார்த்­தி­கே­யன், கலா­நிதி, மாவட்ட இளை­ஞர்அணி அமைப்­பா­ளர் இளங்கோ, துணை அமைப்­பா­ளர்­கள் மரு­து­ராஜா, முத்­துப்­பாண்டி, கும­ரே­சன், வெற்­றிச்­செல்­வன், ஐயப்­பன், அன்­புச்­செல்­வன், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்து சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>